privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்சிறு தொழில்கள்ஆம்பூர் - திருவண்ணாமலை - சென்னை : களச்செய்திகள்

ஆம்பூர் – திருவண்ணாமலை – சென்னை : களச்செய்திகள்

-

1. காண்டிராக்ட் சுரண்டலை எதிர்த்து ஆம்பூரில் பு.ஜ.தொ.மு தெருமுனைக் கூட்டம்

விவசாயம் – நெசவு – சிறுவணிகம் சிறுதொழில்களை அழித்து
காண்டிராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற
கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவுகட்டுவோம்!

என்ற தலைப்பின் கீழ் வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதி மற்றும் அதன் அருகாமை பகுதிகளில் இரண்டு மாதம் பிரச்சாரம் செய்து அதன் இறுதிக்க ட்டமாக 22-07-2016 வெள்ளிக் கிழமை மாலை 5 மணியளவில் கிருஷ்ணா திரையரங்கம் எதிரில் தெருமுனைக்கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய வேலூர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாவட்டச் செயலாளர் தோழர் சுந்தர் பேசிய போது, பிற சங்கங்களில் இருந்து இச்சங்கம் எவ்வாறு வேறுபட்டது. இச்சங்கம் தொழிலாளி வர்க்கத்தின் பொருளாதார கோரிக்கைகளுக்காக மட்டுமல்லாமல் அதன் விடுதலைக்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் போராடக் கூடியது என்பதை விளக்கி, அந்த வகையில் இப்பகுதி தொழிலாளர்களின் நிலை குறித்து விளக்கி புரட்சிகர அமைப்பான பு.ஜ.தொ.மு-வில் இணைந்து போராடுவதே தீர்வு எனக் கூறி தன் உரையை நிறைவு செய்தார்.

ndlf-ambur-meeting-against-contract-labour-exploitation-2
பு.ஜ.தொ.மு காஞ்சிபுர மாவட்டச் செயலாளர் தோழர் ஆ.கா.சிவா

சிறப்புரையாற்றிய பு.ஜ.தொ.மு காஞ்சிபுர மாவட்டச் செயலாளர் தோழர் ஆ.கா.சிவா, “இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர்களின் இநலை குறித்தும் தொழிலாளர்கள் அதற்கு எதிராக போராடி பெற்ற தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் முதலாளிகள் குப்பைத் தொட்டி காகிதமாக பயன்படுத்தி வரும் நிலையில் மோடியோ கார்ப்பரேட் நிறுனவங்களின், தரகு முதலாளிகளின் நலன்களுக்கு, கொள்ளை இலாபத்திற்காக தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவதும், விவசாயம் – நெசவு – சிறுவணிகம் மற்றும் சிறுதொழில்களுக்கான மானியங்களை வெட்டியும் இத்தொழில்களுக்கான அடிப்படை உற்பத்தி பொருள்களின் விலையை பன்மடங்கு உயர்த்தியும் இத்தொழில்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வங்கிக் கடன்களை பெறமுடியாதவாறு பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கி கந்து வட்டிக்காரர்களிடம் தள்ளுவதும், இவைகளைக் கடந்து உருவாக்கும் உற்பத்திப் பொருள்களுக்கான விலையை குறைத்து மதிப்பிடுவதன் மூலம் இலட்சக்கணக்கானோரை தற்கொலைக்கு தள்ளி வருகிறது மத்திய மாநில அரசுகள். அதே நேரம் தரகு முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருவதோடு மட்டும் இல்லாமல் மக்கள் பணத்தை எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இலட்சம் கோடிகள் என்ற வாரி வழங்குகிறது. எனவே, கார்ப்பரேட்மயத்திற்கு சேவை செய்யக் கூடிய ஓட்டுக் கட்சிகள், ஆளும் வர்க்கங்கள் மற்றும் அதிகார வர்க்கத்திடம் முறையிடுவதின் மூலம் நம் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள முடியாது. இவற்றை அடித்து நொறுக்கி அதிகாரத்தை ந்த் கைகளில் எடுத்துக் கொள்வதின் மூலமே இப்பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியும். இதை இலட்சியமாகக் கொண்டு செயல்படும் பு.ஜ.தொ.மு-வில் தங்களை இணைத்துக் கொள்ளுங்கள்” என்ற அறைகூவல் விடுத்தார்.

இவ்வுரை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மற்றும் சுற்றி நின்று கவனித்த மக்களை ஈர்க்கும் வகையில் அமைந்தது. இறுதியாக, பு.ஜ.தொ.மு.வின் மாவட்ட துணைத்தலைவர் தோழர் சரவணன் நன்றியுரையாற்றினார்.

இக்கூட்டத்திற்கு அனுதி வழங்கிய காவல்துறை மாலை 4 மணியிலிருந்து 5 மணிக்குள் நடத்திக் கொள்ளும்படி நெருக்கடி தந்தது. ஆனால், ஆலைத் தொழிலாளர்கள் 6 மணிக்குத்தான் ஆலையிலிருந்து வருவார்கள், அவர்களுக்குத்தான் இக்கூட்டம் என்ற போராடி 6.45 மணி வரை கூட்டம் நடந்தது. முதலாளிகளுக்கு ஆதரவாக காவல்துறை தன் ‘ஜனநாயகக் கடமை’யை ஆற்றியது.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஆம்பூர்.

2. திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு பு.மா.இ.மு வரவேற்பு

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் கடந்த 29-06-2016 அன்று கல்லூரி மாணவர்களையும், பேராசிரியர்களையும், கல்லூரி முதல்வரையும், அலுவலக ஊழியர்களையும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (RSYF) அமைப்பின் சார்பாக இனிப்பு வழங்கி வரவேற்கப்பட்டது. அப்போது புதிய கல்விக்கொள்கையின் அபாயங்களை விளக்கி இக்கொள்கையை முறியடிக்க மாணவர் வர்க்கமாய் அணிதிரண்டு போராடவேண்டும் என பேசப்பட்டது. மாணவர்கள் ஆர்வமாக கவனித்ததோடு மட்டுமின்றி இவ்வமைப்பில் உறுப்பினராக சேர்வதாக கூறினார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
திருவண்ணாமலை.
தொடர்புக்கு : 9965097801

3.பார்ப்பன பாசிசத்துக்கு எதிராக பு.மா.இ.மு

மாணவர்களே…! இளைஞர்களே…!

குஜராத்தில் செத்த மாட்டுத்தோலை உரித்ததற்காக தலித்துகள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினர் சிவசேனா பாசிஸ்டுகள்!

தன்னுரிமைக்காக போராடும் காஷ்மீர் மக்களின் உயிரைப் பறிக்கிறது பாசிச மோடி அரசு. பிற மாநிலங்களில் கல்வி பயிலும் காஷ்மீர் மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துகிறது ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி கும்பல்!

தலித் பெண் என்பதால் பி.எஸ்.பி தலைவர் மாயாவதியை ‘விபச்சாரி’ என இழிவுபடுத்தியுள்ளான் பி.ஜே.பி ஆணாதிக்க பொறுக்கி தயாசங்கர்சிங்!

தமிழர் பண்பாட்டின் அடையாளமான திருவள்ளுவர் சிலையை குப்பைத் தொட்டியில் வீசி அவமதிக்கிறது, ஆர்.எஸ்.எஸ் கூட்டம்!

பற்றிப் படர்ந்து வரும் பார்ப்பன பாசிசத்தை ஒழித்துக் கட்டுவோம்!
புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள்வோம்!
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலை அடித்து விரட்டுவோம்!

rsyf-virudhai-poster-condemining-violence-on-gujarat-dalits-1தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தொடர்புக்கு – 88703 81056

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க