அல்ட்ரா சவுண்டு அர்னாப்பின் அரிய கண்டுபிடிப்பு

12
24

டகங்களை காவிமயப்படுத்தும் முயற்சியில் இரண்டு விசயங்களை கவனியுங்கள். ஒன்று என்டிடிவியின் மீதான சிபிஐ ரெய்டு. இரண்டு அல்ட்ரா சவுண்டு ஆர்னாப்பின் ரிபப்ளிக் டீவி வாங்கிய காசுக்கு மேலேயே மோடி அரசுக்கு கூவுவது. எங்களை எதிர்ப்போருக்கு என்டிடிவியும், ஆதரிப்போருக்கு ஆர்னாப்பும் நினைவுக்கு வரவேண்டும் என்று பாஜக முடிவு செய்திருக்கிறது.

மத்தியப்பிரதேச விவசாயிகளை பாஜக அரசு சுட்டுக் கொன்றது நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அலைகள் உருவாக்கிய கோபத்தை திசைதிருப்பும் வண்ணம் அல்ட்ரா சவுண்டு ஜென்மம் ரிபப்ளிக் டிவியில் கூவியிருக்கும் உளறலைக் கேளுங்கள்!

செய்தி: மத்தியப் பிரதேசத்தில் 6 விவசாயிகள் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதை என்.டி.டி.வியும், இந்தியா டுடேயில் ராஜிப் சர்தேசாயும் அப்படியே சொல்கின்றனர்.

ஆனால ரிபப்ளிக் டிவியில் அர்னாப் கூவுவது என்ன?

மத்தியப்பிரதேசத்திற்கு ராகுல் காந்தி சென்றார் அல்லவா? அது பாஜகவிற்கு பிரச்சினை என்பதால் அர்னாப் கோஸ்வாமி விவசாயிகள் கொலையை ராகுல் காந்தி ஹெல்மெட் போடாமல் சென்ற பிரச்சினையாக மாற்றுகிறார். உடலெங்கும் வியாபித்திருக்கும் இந்த மேதகு பார்ப்பனியக் கொழுப்பை கொத்தி எடுக்காமல் இந்தியாவில் செய்திகள் என்பது ஜெயஜெய மோடி சேதியாக மாறுவது உறுதி.

ஆகவே 1948-ல் அல்ட்ரா சவுண்டு அர்னாப் இருந்திருந்தால் காந்தி கொலையை எப்படி அறிவித்திருப்பார்? குறிப்பு  – காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ் தொடர்புடையது – கோட்சே கொன்றார் என்பதை நினைவில் வையுங்கள்.

ரிபப்ளிக் டிவியின் சூப்பர் எக்ஸ்கூளுசிவ்

போராட்டக்காரர் கோட்சே கடுமையாக நடத்தப்பட்டார். பிரபல காங்கிரசு தலைவர் காந்தி ஒரு பிரார்த்தனை கூட்டத்திற்கு செல்லும் போது இறந்து போனார். காரில் வந்த காந்தி சீட் பெல்ட் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின் குறிப்பு: இந்த ரிபப்ளிக் டிவியில்தான் தந்தி டிவி பாண்டேயிடம் பயிற்சி பெற்ற ஹரிகரன் சேர்ந்து அல்ட்ரா சவுண்டின் மினியேச்சராக கூவுகிறார்!

செய்தி: மத்தியப் பிரதேசத்தில் 6 விவசாயிகள் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதை என்.டி.டி.வியும், இந்தியா டுடேயில் ராஜிப் சர்தேசாயும் அப்படியே சொல்கின்றனர். ரிபப்ளிக் டிவியில் அர்னாப் கோஸ்வாமி: ஹெல்மெட் போடாமல் ராகுல் காந்தி பைக்கில் பயணித்தது ஏன்?  தேஷஷஷஷம் அறிந்து கொள்ள துடி…..க்க்க்கிறது….!

ரிபப்ளிக் டிவியின் சூப்பர் எக்ஸ்கூளுசிவ்
பிரபல காங்கிரசு தலைவர் காந்தி ஒரு பிரார்த்தனை கூட்டத்திற்கு செல்லும் போது இறந்து போனார். காரில் வந்த காந்தி சீட் பெல்ட் போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.போராட்டக்காரர் கோட்சே கடுமையாக நடத்தப்பட்டார்.

நன்றி: Irony of India

சந்தா