privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஅதிர்ச்சி செய்தி : இவ்வாண்டு தமிழக நெல் கொள்முதல் 85% சரிவு

அதிர்ச்சி செய்தி : இவ்வாண்டு தமிழக நெல் கொள்முதல் 85% சரிவு

-

மிழ்நாட்டின் விவசாயமும் விவசாயிகளின் பொருளாதாரமும் சீரழிக்கப்பட்டதன் முடிவுகள் அன்றாடம் நாளிதழ்களில் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த வருடம் தமிழ்நாட்டின் நெல்கொள்முதல் 85% சரிந்திருக்கிறது என்பது பேரதிர்ச்சியான செய்தியாகும்.

2015 – 2016 ஆம் ஆண்டில் தமிநாட்டின் நெல்கொள்முதல் 8.83 இலட்சம் டன்களாக இருந்தது 2016 – 2017 -இல் 1.37 இலட்சம் டன்களாக குறைந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் சட்டீஸ்கர், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் மொத்த நெல் கொள்முதல் 304.15 இலட்சம் டன் களில் இருந்து 324.81 இலட்சம் டன்களாக உயர்ந்திருக்கிறது.

85% நெல்கொள்முதல் சரிவு; நேரிடையாக தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிகள் எப்படி கருவறுக்கப்பட்டன என்பதைக் காட்டுகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் தனியார்மயத் திட்டங்களும் வறட்சி என்று பழிபோட்டுவிட்டு நீர்மேலாண்மையில் மத்திய மாநில அமைப்புகள் முழுக்கவும் தோற்றுப்போனதோடு வஞ்சகத்துடன் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு எதிராக இருந்ததுமே இதற்கு முழுமுதற் காரணம்.

மாநிலத்தில் அதிமுக கும்பலையும் மத்தியில் பா.ஜ.க கும்பலையும் விரட்டாவிட்டால் தமிழ்நாட்டிற்கு விடிவே கிடையாது என்ற நிலைக்கு வந்தாயிற்று. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் துரோகம், மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், மாட்டு வணிகத்திற்கு தடை, பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்று பாஜக ஒருபுறமும் ஆற்று மணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளை, டாஸ்மாக் கடை திறப்பு, கூவத்தூர் பணபேரம் என வந்தவரை வாரிச்சுருட்டு என்று அதிமுக கும்பலும் தமிழ்நாட்டை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த நான்குமாதங்களில் தமிழ்நாட்டு விவசாயிகள் 300-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்திருக்கின்றனர். டெலிகாம் கம்பெனிகளின் 4 இலட்சம் கோடி வாரக்கடனை இரத்து செய்துவதில் பாஜக கும்பல் முனைப்பாக இருக்கும் பொழுது தமிழ்நாட்டு விவசாயிகள் தனியார் நுண்கடன் நிறுவனங்களின் கோரப்பிடியில் சிக்கி 125% வரை வட்டி அதிகரித்திருப்பதை பி.யு.சி.எல் ஆய்வறிக்கை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

இந்நெருக்கடிக்களுக்கு மத்தியில் தற்பொழுது தொடங்கியிருக்க வேண்டிய குறுவை சாகுபடியில் அரசை நம்பி விவசாயிகள் இறங்க வேண்டாம் என்று எச்சரித்திருக்கிறார்கள் விவசாய வல்லுநர்கள்.

ஆற்று நீர் வளமும் இல்லை; நிலத்தடி நீரும் அதல பாதாளத்தில் இருப்பதால் போர்கால அடிப்படையில் அரசு முடுக்கிவிடப்பட்டால் ஒழிய குறுவை சாகுபடி கனவிலும் சாத்தியமில்லை.

இது சாத்தியமா என்பது ஒருபுறம் இருக்க, குறுவை சாகுபடி நடக்காவிட்டால் விவசாயிகள் கையில் மருந்துக்கும் எதுவும் இருக்காது. பிறகு தமிழ்நாட்டு மக்களாகிய நாம் வெளிப்படையாக உளச்சுத்தியோடு ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும். சோற்றுக்கு எதை தின்பது? என்பதுதான் அது.

செய்தி ஆதாரம் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க