ம.பி விவசாயிகளுக்கு ஆதரவாக காஞ்சி – விருதையில் ஆர்ப்பாட்டம்

0

விருத்தாசலம் பாலக்கரையில் 10.6.2017  அன்று காலை 10.30 மணியளவில் ம.பி விவசாயிகளைச் சுட்டு கொன்றதை கண்டித்து  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பத்திரிக்கைகளில் வெளியான மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டச் செய்தி

தலைமை : தோழர் கு.முருகானந்தம், மக்கள் அதிகாரம்

கண்டன உரை :

திரு தெய்வக்கண்ணு உழவர் மன்ற தலைவர்.
திரு அன்பழகன் விவசாய சங்கம்.
தோழர் அருள்தாஸ் மக்கள் அதிகாரம் கம்மாபுரம்.
தோழர் S.மணிவாசகம் பு.மா.இ.மு.
திரு நந்தகுமார் விவசாயி சங்கம்.
தோழர் சீ.ராஜூ மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்.

***

ம.பி விவசாயிகளைக் சுட்டுக் கொன்ற பா.ஜ.க – காஞ்சிபுரத்தில் பு.ஜ.தொ.மு. பிரச்சாரம்!

பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க கோரியும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யக்கோரியும் அமைதியான முறையில் கடந்த 01.06.2017 முதல் போராடி வந்தனர். இரவு பகல்  பராமல் உழைத்துக், கொண்டு வரும் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் போவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காய்கறிகள் பால் உள்ளிட்ட உணவு பொருட்களை சாலையில் கொட்டி போராடி வந்தனர்.

போராடும் விவசாயிகள் கோரிக்கை குறித்து பேச்சு வார்த்தை நடத்த முன் வராமல் அலட்சியம் செய்தது  கார்ப்ரேட் கைக்கூலி கட்சியான  பா.ஜ.க. தலைமையிலான மாநில அரசு.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன், வாழ்வாதாரத்தை உயர்த்துவேன் என்றெல்லாம் பேசிய மோடியின் பேச்சு பித்தலாட்டம் என்பதை உணர்ந்த விவசாயிகள் விடாப்பிடியாக தொடர்ந்து போராடி வந்தார்கள்.  இனி வாழ முடியாது என்ற நிலையில்தான் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள் முன் வைத்தார்கள் இதற்கு எவ்வித பதிலும் சொல்லாமல் கடந்த 06.06.2017 அன்று அமைதியாக போராடிக் கொண்டிருந்தோர் மீது கண்ணீர் புகை குண்டு வீசியதுடன் பா.ஜ.க. – வின் வெறிநாய் படைகளான  போலீசு  காக்கை குருவிகளைப் போல 8 விவசாயிகளை சுட்டுக் கொன்றுள்ளது.

உரிமைகளை கேட்டு போராடினால் உயிரையும் பறிக்கப்படுவது காலனிய ஆட்சியின் அடக்குமுறை, அத்தகைய கொடூரத்தை நினைவுப்படுத்துவதாக உள்ளது, இந்த துப்பாக்கி சூடு சம்பவம். எனவே இதற்கெதிராக போராடுவதும் மக்களை திரட்டுவதும் அவசிய அவசர  தேவையாக உள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்த போவதாக சொல்லி மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் உண்ணாவிரதம்  இருப்பது பிரச்சனையை திசை திருப்பும் சதித்தனம் என்பதுடன் போலீசின் கொலை வெறியாட்டத்தையும் அதன் கொலை முகத்தையும் மூடி மறைக்கும்  முயற்சியாகும்.

இச்செயலை வன்மையாக கண்டிப்பதோடு மத்திய பிரதேச மாநில விவசாயிகளின்  போராட்டத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஆதரவளிப்பது தார்மீகக் கடைமையாகும். அதேநேரம் பாசிச பா.ஜ.க அரசை உடனடியாக கண்டிக்கின்ற வகையில் 10.06.2017 அன்று பு.ஜ.தொ.மு காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக  மாவட்ட தலைநகரில் மக்கள் கூடும் இடங்களான வட்டாச்சியர் அலுவலகம் எதிரிலும் சுமைதூக்கும் தொழிலாளர் நிறைந்துள்ள மண்டித் தெரு முனையிலும் அடுத்து  காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு உள்ளேயும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதற்கு  தோழர் சரவணன் தலைமை தாங்கினார்.

கார்ப்பரேட் கைக்கூலி காவி பயங்கரவாதிகளான பா.ஜ.க கும்பலை நாட்டை விரட்டியடிக்க மக்கள் போராட முன் வர வேண்டும்! மக்கள் எதிரிகளை புரட்சியின் மூலம்தான் தண்டிக்க முடியும்!! என்பதனை உணர்த்தும் விதமாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம் மாவட்டக் குழு – 8807532859.

சந்தா செலுத்துங்கள்

உங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா? வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க