privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதயாராகும் தஞ்சை : அதுக்காக நாம சும்மா உக்கார முடியுமா?

தயாராகும் தஞ்சை : அதுக்காக நாம சும்மா உக்கார முடியுமா?

-

ஞ்சையில் ஆகஸ்ட் – 5, 2017 அன்று நடைபெறவுள்ள விவசாயியை வாழவிடு ! மாநாட்டையொட்டி, தஞ்சை மக்களின் வாழ்நிலை குறித்து வினவு செய்தியாளர்கள் திரட்டிய செய்திக் குறிப்புகள் மற்றும் படங்கள்….

ஆறுமுகம் ( மினி பஸ் ஓட்டுனர்)

ங்க ராஹத் கம்பெனியில வேலை பாத்துட்டு இருக்கேன்.  இதுக்கு முன்ன நாலு வருசம் சவுதியில வேலை பாத்துட்டு இருந்தேன். அங்க வேலைப்பளு தாங்க முடியல. அதனால கெளம்பி வந்துட்டேன்.

வறட்சியினால பஸ்ல வர்ற ஆளுங்களும் குறைஞ்சு போயிடுச்சு சார். எங்களுக்கு வர்ற படிக்காசும் ரொம்பக் குறைஞ்சிடுச்சி.  வறட்சியை சமாளிக்க முடியாம மக்கள்லாம் அல்லாடிக்கிட்டு இருக்காங்க ..

கவர்மெண்ட்டு வறட்சி நிவாரண நிதியும் கொடுக்க மாட்டேங்கிது. அப்படியே கொடுத்தாலுங்கூட அது முதலாளிங்களுக்குத் தான் போய்ச் சேருமே ஒழிஞ்சு கூலித் தொழிலாளிகளுக்கு ஒரு பைசா கூட கெடைக்காது. எங்கப்பாவும் அய்யாக்கண்ணு கூட சேர்ந்து போராட்டத்துல கலந்துக்கிட்டாரு.

பாலா (பஞ்சர் கடை வைத்திருக்கிறார் – மாற்றுத் திறனாளி)

எனக்கு ரெண்டு பிள்ளைங்க சார் .. கவெர்மெண்ட் ஸ்கூல்ல படிக்கிறாங்க . .

குடி தண்ணிக்கே இங்க பெரும் பிரச்சினையாயிருக்கு .. அஞ்சு நாளைக்கு ஒரு தடவ தான் தண்ணி வரும்.. அதுவும் ஒரு மணிநேரம் தான் விடுவாங்க . அதுக்குள்ளயும்  பிடிச்சிக்கணும்.

விவசாயத்தக் கூண்டோட ஒழிச்சுக் கட்டத் தான் இந்த நெடுவாசல், மீத்தேன் திட்டமெல்லாம் கொண்டு வர்றாங்க. இதுல எல்லா கட்சிக்காரனும் கூட்டுக்களவாணியாத்தான் இருக்கானுங்க. அதுக்காக நாம சும்மா உக்கார முடியுமா? நாளைக்கு மாநாட்டுக்குக் கண்டிப்பா குடும்பத்தோட வந்து கலந்துக்குவேன்.

தஞ்சை வல்லம் செல்லும் வழியில் ஒட்டப்பட்டுள்ள மக்கள் அதிகாரத்தின் மாநாட்டு சுவரொட்டி !

தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள் !

தஞ்சையில் மாநாடு நடைபெறவுள்ள திருவள்ளுவர் திடல் (திலகர் திடல்) அருகில்!

தஞ்சை பெரிய கோவில் அருகில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள் !

செய்தி, படங்கள் – வினவு செய்தியாளர் குழு.

விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க