privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபாதிக் கூலி போதும் - இது நம்ம மாநாடு

பாதிக் கூலி போதும் – இது நம்ம மாநாடு

-

விவசாயியை வாழவிடு ! – ஆக -5 மாநாட்டிற்காக தொழிலாளிகளும், தோழர்களும் திருவள்ளுவர் (திலகர்) திடலில் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

பொதுவாக ஓட்டுக்கட்சிகள் தங்கள் மாநாடு, கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை பணத்தின் வலிமையைக் கொண்டு செய்வார்கள். இது மக்கள் அதிகாரத்தின் மாநாடு! தோழர்கள் தமது உழைப்பைக் கொடுக்கிறார்கள். மக்களோ நன்கொடைகளை எல்லா இடங்களிலும் தருகிறார்கள். தொழிலாளிகளோ பாதி கூலி போதும் இது நமது மாநாடு என்கிறார்கள்.

நீங்களும் தஞ்சைக்கு வாருங்கள்!

“எங்களையும் போட்டோ புடிக்கிறீங்க” என்று கொளுத்தும் வெயிலில் மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணியில் உற்சாகத்துடன் தொழிலாளிகள்!

மாநாட்டு திடலில் மக்களுக்குத் தேவையான குடிநீர் ஏற்பாட்டில்….

“மாநாட்டிற்கு பந்தல் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் என்ன சொல்கிறார்கள்? “மற்ற கட்சி மாநாட்டிற்கு பந்தல் அமைக்கும் பொழுது எங்களை திட்டுவார்கள். இவர்கள் அன்பாக நடந்து கொள்கிறார்கள். அனைத்து உதவிகளையும் செய்து தருகிறார்கள். மக்களுக்காக இந்த மாநாட்டில் வேலை செய்வது எங்களுக்கு மகிழ்ச்சி”.

“நாங்க விவசாய வேலை தான் செய்யுறோம். வேலை இல்லாத நேரத்துல தோட்ட வேலை, குழி வெட்ட போவோம். நாங்க மூணு நாளா இங்க இருக்கோம். சிறுநீர், கழிப்பிடத்துக்கான குழி வெட்டிகிட்டு இருக்கோம். எல்லா நிகழ்ச்சியிலும் நாங்க செஞ்ச வேலைக்கான முழு கூலிய  வாங்கிப்போம். இங்க பாதி கூலி தான் கேட்டிருக்கோம். நாங்களும் விவசாயிங்க தான். இந்த பிரச்சனைக்காக குரல் கொடுக்கிற இவங்களுக்கு எங்க  உழைப்பை கொடுக்கிறது முழு சந்தோசம்தான்.”

பாலமுருகன், அம்மா மாலை நேர மார்க்கெட்.
மக்கள் பிரச்சனைக்காக உண்மையா போராடுறவங்க. இந்த அரசுக்கு எதிரா பேசுனாலும் உண்மையா தான் சொல்வாங்க. டாஸ்மாக் எதிரா போராடுனவங்க மேல எல்லாம் கேசு போட்டாங்க. அப்படி என்ன தப்பு பண்ணிடாங்க இவங்க. மக்கள்  பிரச்சனைக்கு மத்த கட்சிகாரங்க பேசத் தயங்கும் போது இவங்க தான் முதல்ல பேசுவாங்க. “திருட்டு  பூனைக்கு மணி கட்டி விடுறது தான்.”  கலை, பண்பாட்டோட இருக்க கூடிய அமைப்பு. அதனால் இந்த மாநாட்டுக்கு கண்டிப்பா வருவேன்.

செய்தி, படங்கள்  – வினவு செய்தியாளர் குழு.
_______________

விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

  1. மாநாட்டில் கலந்து கொள்ள இயலாவிட்டாலும் மாநாடு பெரும் வெற்றி பெற வாழ்த்துகள்! மாநாடு பிரம்மாண்டமான வெற்றி பெறும்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க