Tuesday, September 22, 2020
முகப்பு வாழ்க்கை காதல் – பாலியல் விகாஷ் பார்லா : ஹரியாணா பாஜக தலைவரின் மைனர் வாரிசு !

விகாஷ் பார்லா : ஹரியாணா பாஜக தலைவரின் மைனர் வாரிசு !

-

வார்னிகா குந்து, ஹரியாணாவைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகள். கடந்த நான்காம் தேதி நள்ளிரவு வார்னிகா தனது காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது எஸ்.யூ.வி ரக கார் ஒன்றில் இரண்டு நபர்கள் பின் தொடர்ந்து வருவதைக் கவனித்திருக்கிறார். குடிபோதையில் இருந்த அந்த இரண்டு பேரும், வார்னிகாவின் காரைப் பின் தொடர்ந்து வந்ததுடன், ஒரு கட்டத்தில் மறிக்கவும் முயற்சித்துள்ளனர். தனது காரை வளைத்து நெளித்து அவர்களிடமிருந்து தப்பிக்க வார்னிகா முயற்சி செய்துள்ளார்; ஒரு இடத்தில் வார்னிகாவின் காரின் பாதையில் தங்களது எஸ்.யூ.வி காரை நிறுத்திய அந்த இரண்டு இளைஞர்களும், வார்னிகாவை அவரது காரில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி கடத்தவும் முற்பட்டுள்ளனர்.

இதற்கிடையே வார்னிகா போலீசாருக்கும், தனது தந்தைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட ஒரு இடத்தில் கிட்டத்தட்ட தப்பிக்க முடியாத ஒரு கோணத்தில் வார்னிகாவின் கார் மாட்டிக் கொண்டிருந்த போது பின் தொடர்ந்து வந்த ரவுடிகளில் ஒருவன் வார்னிகாவின் கார் கதவைத் திறக்க முயற்சித்துள்ளான் – சரியாக அந்த நேரத்தில் ரோந்து வாகனத்தில் வந்து சேர்ந்த போலீசார் வார்னிகாவைக் காப்பாற்றியதோடு குடிபோதையில் இருந்த பணக்கார ரவுடிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட விகாஷ் பார்லா

கைது செய்யப்பட்டவர்களில் விகாஷ் பார்லா என்பவன் ஹரியாணா மாநில பாரதிய ஜனதா தலைவர் சுபாஷ் பார்லாவின் சீமந்த புத்திரன். உடன் வந்த ஆஷிஷ் குமார் என்பவன் விகாஷின் நண்பன்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணும் ஓரளவு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவரது தந்தை மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதாலும் இந்த வழக்கிற்கு ஓரளவு ஊடக வெளிச்சம் கிடைத்ததோடு, குற்றவாளிகள் உடனடியாக கைதும் செய்யப்பட்டனர். எனினும், விகாஷ் கைது செய்யப்பட்டவுடன் காட்சிகள் உடனடியாக மாறத் துவங்கின.

தமது தலைவரின் மகன் கைது செய்யப்பட்டதை அறிந்த ஹரியாணா மாநில பாரதிய ஜனதா தலைகள் காவல் நிலையத்திலேயே முகாமிட்டனர். வார்னிகா அளித்த புகாரின் படி சட்டவிரோதமாக தடுத்து வைக்க முயற்சிப்பது (இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 341) மற்றும் கடத்தல் (பிரிவு 341) உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பிரிவுகளின் பதியப்படும் வழக்கின் கீழ் கைது செய்யப்படுகிறவர்களுக்கு உடனடியாக பிணை கிடைக்காது.

ஆனால், எளிதில் பிணை கிடைக்கும் பிரிவுகளான மோட்டார் வாகனச் சட்டம் 185 மற்றும் பெண்களைப் பின் தொடர்வதற்கு எதிரான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 354D ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளி இரவு கைது செய்யப்ப்ட்ட விகாஷ் பார்லா, பல்வேறு ஓட்டைகளுடன் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் காரணமாக சனிக்கிழமையே பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டார். அது வரை பாரதிய ஜனதா தலைகள் காவல் நிலையத்திலேயே இருந்துள்ளனர்.

ஹரியாணா மாநில பாரதிய ஜனதா தலைவர் சுபாஷ் பார்லாவி

இதையடுத்து பாரதிய ஜனதா தரப்பில் இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணை “நடத்தை கெட்டவராக” சித்தரிக்கும் முயற்சிகள் துவங்கின. பாரதிய ஜனதாவைச் சேர்ந்த ராம்வீர் பட்டி என்பவர் “அந்தப் பெண் ஏன் இரவு 12 மணிக்கு வெளியே வந்தார்?” எனக் கேட்டுள்ளார். பார்லா குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ வார்னிகா முன்பு வேறு ஒரு சந்தர்பத்தில் மதுக் கோப்பைகளோடு நிற்கும் போது எடுத்த புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டு அவர் ஒழுங்கீனமானவர் எனக் கொளுத்திப் போட்டனர்.

உச்சகட்டமாக களத்தில் இறங்கிய பாரதிய ஜனதாவின் சமூக வலைத்தளப் பிரிவினர், வார்னிகா வேறு ஆண்களுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு அந்தப் படத்தில் இருக்கும் ஆண் தான் விகாஷ் பார்லா என பொய்யான செய்திகளைப் பரப்பத் துவங்கினர். ஹாரியாணாவை ஆளும் பாரதிய ஜனதா முதல்வர் எம்.எல் கட்டர் முன்பு ஒரு சமயத்தில் “பெண்களுக்கு சுதந்திரம் வேண்டுமானால், அவர்கள் ஆடைகளை அவிழ்த்துப் போட்டு தெருவில் நடமாட வேண்டியது தானே?” என்று கேட்டவர் தான் என்பதால், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் பொறுக்கி விகாஷுக்கு ஆதரவாக களமாடியதில் எந்த வியப்புமில்லை.

பெண்களைப் பின் தொடர்ந்தவரையே தேசிய தலைவராக கொண்டுள்ள ஒரு கட்சியிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

ஆபாசக் குப்பைகளையே புராணங்களாக கொண்டிருக்கும் ஒரு மதத்தின் அரசியல் வடிவமே இந்துத்துவம். பல்வேறு ஆதீன பீடங்களையும், குரு பீடங்களையும் ஆசாராம், நித்தியானந்தா, ஜெயேந்திரன், பிரேமானந்தா போன்ற பாலியல் மிருகங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நிலையில். ஆர்.எஸ்.எஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட இந்துத்துவ கும்பலின் பல தலைவர்கள் மைணர் குஞ்சுகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அதிகாரம் கையில் இருக்கும் திமிரில் படுபாதக குற்றங்களைச் செய்தாலும் சட்டங்களின் சந்து பொந்துகளில் புகுந்து வெளியேறி விடலாம் என்கிற மிதப்பில் திரிந்து கொண்டிருக்கின்றனர்.

இந்துத்துவ அரசியல் தலித்துகளுக்கும், சிறுபான்மையினருக்கும், ஜனநாயக சக்திகளுக்கும், உழைக்கும் மக்களுக்கும் மட்டுமல்ல – பெண்களுக்கே எதிரானவர்கள் என்பதை உணர்த்த துவங்கி விட்டனர்.

செய்தி ஆதாரம் :

_____________

இந்தப் பதிவு பிடித்திருக்கிறதா?

வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. விகாஷ்,ஆஷிஷ்…பேருங்களை பாரு சரியாக அந்த ஹிந்தி நாடகங்களில் வரும் ஹீரோக்கள் பெயர்கள். இந்த ‘ஷ்’ ஐ கேட்டாலே சும்மா பற்றிக்கொண்டு வருகிறது. அதோடு வினவு அந்த பொண்ணு கூட சரியாக அப்படித்தான் இருக்க வாய்ப்புண்டு. நம்மை ஹிந்தி பேச சொல்லிவிட்டு வெளிநாடுகளில் தமக்குள் கூட அந்த எரிச்சலூட்டும் இந்திய உச்சரிப்பில் ஆங்கிலம் பேசிதிரியுமே ஒரு கூட்டம். அதனால் இதை அந்த காலிகள் நாறடிப்பதை நாம் வேடிக்கை மட்டும் பார்த்தல் போதும் என்பதே என் கருத்து. இப்போது கூட அந்த பொண்ணிடம் போய் உனக்கு இந்த நிலைவர இந்துத்துவமும் ஆணாதிக்கமும் தன காரணம் என்று சொல்லி பாருங்கள்…

 2. “ஆபாசக் குப்பைகளையே புராணங்களாக கொண்டிருக்கும் ஒரு மதத்தின் அரசியல் வடிவமே இந்துத்துவம்.” ஆமாம்டா … மணமான பெண்களின் கணவரை கொன்று அந்த பெண்களை ஒரு பொருள் போல கவர்வது என்னவாம்??

 3. இந்து மதத்தை பற்றியும், இந்த்துத்வாவை பற்றியும் வினவு போன்ற கீழ் மக்களுக்கு தெரியாது… பல பேர் இந்து மதத்தின் பெயரால் அயோக்கியதனம் செய்தால் அதற்கு மதம் பொருப்பாகாது… உலக மதத்தின் முன்னோடியும், அறிவியல் சார்ந்த பல உண்மைகளை உலகத்திற்க்கும், பல மதத்திற்க்கும் கடன் கொடுத்தது இந்து மதம்…. *********** உலக மக்கள் இந்து மதத்தை நோக்கி திரும்ப தொடங்கியுள்ளனர…… தனி மனித ஒழுக்கத்திற்கும், அந்த மனிதன் சார்ந்த மதம் எப்படி பொறுப்பாகும்??? இது சரியானால், ஒசாமா பின்லேடன் தீவீரவாதி, அதனால் உலக முஸ்லீம்கள் எல்லாரும் தீவீரவாதிகள் என சொல்லவது போல் தான்….. வினவின் மற்றும் ஒரு முட்டாள்தனமான கட்டுரை….

 4. இதுல உச்சகட்ட ட்விஸ்ட்டு என்னன்னா நம்ம சூ** சாமி இவனுக்கேதிரா சிபிஐ விசாரண பண்ணனும்னு அறிக்கை கொடுத்திருக்கான்.உள்ளுக்குள்ள ஏதோ கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருக்கும்போல.ஆனா சூ** சாமிக்கும் தெரியும்.என்னதான் இவன் மேல கேசு போட்டு அம்பது வருசம் நடத்துனாலும் கடைசில வழக்கு தள்ளுபடிதான் ஆகும்னு!

 5. இந்தியன் அவா்களே ம றுப்பு தருகிறேன் என்று யாரேனும் வாக்குமூலம் த ருவார்களா?கீழ்மக்கள் மேல்மக்கள் என்று மக்களய் கூறுபோட்டு குருதிமேல் அதிகார்ம் செலுத்தும் கும்பல் காவிகளின்றி வேறு யார்?நீ ஏன் தீருடினாய் என்றால் அவன் ஏன் கொள்ளய் அடித்தான் என்று கேட்பதுதானே பதீலாய் வ ருகிறது உங்களிடமிருந்து எப்போதும்!

 6. சின்னா நண்பா அந்தப்பெண்ணின் மீது ஒ ழுக்கத்தய் கட்டமய்க்கும் காலிகள் அரியலூர் நந்தினியய் மட்டும் விட்டா வய்த்தார்கள்? நந்தீனி செய்த குற்றம் என்ன? மக்கள் முண்ணனிக்கு வ ரும்போது இந்து முண்ணனீகள் இருக்காது.

 7. //வினவு போன்ற கீழ் மக்களுக்கு தெரியாது//
  அடடா இண்டியன் ஐயா, அவசரப்பட்டு submit comment அழுத்தி விட்டீர்களோ. மறுமொழியை ஒருதரம் படிக்க வேண்டாமோ அனுப்பு முன்? கொண்டை இப்போது தெரிந்து விட்டதே? ஆனால் யோசிக்க வேண்டாம், உங்கள் கொண்டை எங்களுக்கு எப்போதோ தெரிந்து விட்டது. இதற்கெல்லாம் நாங்கள் கோவிச்சுக்க மாட்டோம்.

  மற்றும் ஐயா சரவு,
  உங்களுக்கெல்லாம் அலுக்கவே இல்லையா? எதை சொன்னாலும் முஸ்லிமை சொன்னியா? முஸ்லிமை சொன்னியா? பரஞ்சோதி கதைகள் போல் உங்கள் உயிர் ஏதோ முஸ்லிமை சொல்லாவிட்டால் போய்விடபோவது போல்? எத்தனை கட்டுரைகள் இஸ்லாமிய பிற்போக்கு தனங்களை பற்றி வந்துள்ளது? இதே பதிலை எத்தனை தோழர்கள் சொல்லியிருப்பார்கள். நீங்க எல்லாம் லூசா இல்ல லூசு மாரி நடிக்கிறிங்களா?

  நெப்போலியன் நண்பர்,
  ஆம் உண்மைதான், ஆனால் இந்த பிரச்சனை இந்தளவுக்கு வெளிவர அவர் வசதியானவர் என்பதாலேயே. அதனால் அவர் நுகர்வுமோக-இந்துத்துவ-சந்தர்பவாத விளைபொருளாக இருக்கவே வாய்ப்புள்ளது. இது நடுத்தரவர்க்க நழுவல் போக்குக்கு ஒரு நல்ல பாடம் என்பதே என் கருத்து நண்பா.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க