சென்ற வார உலகம் : மகளிர் தினம் – சிரியா – ஆப்ரிக்கா – ஆசீட்

0
51

செம்பிறைச் சங்கத்தின் உதவி எப்போது வரும்? சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் டோமா நகரில் காத்திருக்கும் சிறார்கள். அமெரிக்காவின் மேலாதிக்க யுத்தம் தோற்றுவித்த முடிவே இல்லாத காத்திருப்பு!

காலியான சமையல் எரிவாயு உருளைகளுக்கு அருகில் உறங்கும் ஒரு மனிதர். சவுதி அரேபியாவால் சூறையாடப்பட்ட ஏமனில் சமையல் எரிவாயுக்கு பெரும் தட்டுப்பாடு. சிரியாவுக்காக ஆர்ப்பாட்டம் செய்யும் வகாபிய முஸ்லீம்கள் சவுதியை எதிர்த்து வாய் பேச மாட்டார்கள்! மனிதத்தை மறைக்கும் மதம்!

கொழும்புவில் மாலத்தீவு தூதரகத்தின் முன்பு முன்னாள் மாலத்தீவு அதிபரான முகமத் நஷீத்தின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. சின்ன தீவாக இருந்தாலும் அங்கே ஜனநாயகத்திற்கு பெரும் தட்டுப்பாடு!

ஆப்ரிக்காவின் சியோரா லியானில் பொதுத்தேர்தலில் வாக்களிக்கும் ஒரு பெண். மேற்குலகால் சூறையாடப்பட்ட ஆப்பிரிக்காவில் தேர்தல்களால் என்ன மாற்றம் வரும்?

புதுதில்லி : சீனத்தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யும் திபத் அகதிகளை போலீசார் தள்ளுகின்றனர். தாலாய் லாமாவின் இருப்பிற்காகவும், இந்தியாவின் கௌரவத்திற்காகவும் இப்படி சில நிகழ்வுகள்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மும்பையில் ஒரு ஆடை அணிவகுப்பிற்கு தயாராகிறார் ஆசிட் வீச்சால் உருக்குலைந்த ஒரு பெண். இந்தியாவில் பார்ப்பனியத்தால் உருக்குலைந்த பெண்ணினம் மீள்வது எப்போது?

சீனாவின் பெய்ஜிங்கில் தேசிய மக்கள் மாநாட்டின் கூட்டத்தின் துவக்கத்தை ஏணியில் நின்று பேசுகிறார், ஒரு பத்திரிகையாளர். முதலாளித்துவத்தைப் போற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டை மேற்குலக ஊடகங்கள் விமர்சிப்பது ஏன்?

ஈராக்கின் மோசூல் நகரத்தில் ஐ.எஸ் வீரர்களின் உடல் பகுதிகளைச் சேகரிக்கிறார் அப்தல் கரீம் எனும் செவிலியர் மற்றும் களச் செயற்பாட்டாளர். அல்லாவின் பெயரால் ஈராக்கை உருக்குலைக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளையும் அவர்களை உருவாக்கிய அமெரிக்காவும் இருக்கும் வரை இந்த செவிலியருக்கு ஓய்வில்லை!

மெக்சிகோ நகரத்தில் வருடாந்திர கொண்டாட்டம் ஒன்றில் மரபார்ந்த காளை வடிவிலான வாணவேடிக்கைகள் – பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. பரவாயில்லை, அங்கே பா.ஜ.க இல்லை!

நன்றி: அல்ஜசீரா

சந்தா