தேசிய கல்விக் கொள்கை -2019-ஐ நிராகரிப்போம் ! கருத்தரங்கம் | Live Streaming

தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படும் நவீன குலக்கல்வி திட்டத்தை எதிர்க்க வேண்டியது நம் அனைவரின் கடமை. அனைவரும் வாரீர் !!

2019 தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் !

கல்வியாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்கும் ஒருநாள் தேசிய கருத்தரங்கம்

நாள் : ஜூலை 20, 2019, சனிக்கிழமை
நேரம் : காலை 10.00 முதல் 6.00 மணிவரை
இடம் : வினோபா அரங்கம், தக்கர் பாபா வித்யாலயா, தி.நகர், சென்னை (நந்தனம் சிக்னல் அருகில்)

முன்னாள் நீதியரசர் அரிபரந்தாமன் உரை : (நேரலை)

பேராசிரியர்கள் வீ.அரசு, கதிரவன், மருத்துவர் எழிலன் உரைகள் :

பேராசிரியர் கருணானந்தம் உரை :

பேராசிரியர் ஹரகோபால் உரை – முதல் பாகம் :

பேராசிரியர் ஹரகோபால் உரை – இரண்டாம் பாகம் :

முகநூலில் விரிவுரையாளர் முருகானந்தம், முன்னாள் நீதியரசர் அரிபரந்தாமன் உரை : (நேரலை)

முகநூலில் பேராசிரியர்கள் அமலநாதன், வீ. அரசு, கதிரவன், மருத்துவர் எழிலன் உரைகள் :

முகநூலில் பேராசிரியர் கருணானந்தம் உரை :

முகநூலில் ஹரகோபால் உரை :

சிறப்புரை :

பேராசிரியர் வீ.அரசு
மேனாள் தமிழ்த்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்,
ஒருங்கிணைப்பாளர், பொதுக்கல்விக்காக ஒருங்கிணைப்புக் குழு-சென்னை

பேராசிரியர் ஜி.ஹரகோபால்
National Law School of India University, Bangalore,
தலைமைக் குழு உறுப்பினர், கல்வி உரிமைக்கான அகில இந்திய மன்றம் (AIRTE)

கருத்துரையாளர்கள் :

பேராசிரியர் கதிரவன்
உயிரி தொழில்நுட்பத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்,
பொதுக்கல்விக்காக ஒருங்கிணைப்புக் குழு-சென்னை

ஆசிரியர் சு.மூர்த்தி
ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு

மருத்துவர் எழிலன்
இளைஞர் கழகம்

முனைவர் க.ரமேஷ்
பொதுக்கல்விக்காக ஒருங்கிணைப்புக் குழு – சென்னை

பேராசிரியர் அமலநாதன்
பொருளியல் துறை, தூய சவேரியார் கல்லூரி, பாளை. பொதுக்கல்விக்காக ஓருங்கிணைப்புக் குழு – நெல்லை

நிறைவுரை :

மேனாள் நீதிபதி திரு. அரிபரந்தாமன்
சென்னை உயர்நீதிமன்றம்

தகவல் :
பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு,
(Co-ordination Committee for Common Education)
சென்னை. தொடர்புக்கு : 94443 80211, 72993 61319

9 மறுமொழிகள்

 1. நீங்கள் எதை தான் எதிர்க்கவில்லை, ஸ்வாட்ச் பாரத் போன்ற திட்டங்களை கூட எதிர்த்தவர்கள் தானே நீங்கள்… ஆனால் ஒன்று உங்களை போன்ற தேசவிரோதிகள் கல்வியில் தலையிட்டு கருத்து சொல்வது தவறு.

  மக்கள் மீது உண்மையான அக்கறை உங்களுக்கு இருந்திருந்தால் மக்களிடம் சுத்தம் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை கொண்டு வர முயற்சியாவுது செய்து இருப்பீர்கள் ஆனால் உங்களின் நோக்கம் எப்படி ஸ்வாட்ச் பாரத் போன்ற திட்டங்களை பற்றிய அவதூறுகளை பரப்பி அதை நிறைவேற்ற விடாமல் தடுத்து மக்களிடம் பொய்களை கொண்டு சேர்ப்பதில் தானே குறியாக இருந்திர்கள்.

  • இந்த உரைகளைப் பார்க்காமல், அதைவிட்டு வேறு எதையோபற்றி அயோக்கியத்தனமா கருத்து சொல்லனும்?

   உங்களைப்போன்ற பார்ப்பனர்களுக்கோ, பார்ப்பன அடிவருடிகளுக்கோ சூத்திரர்களை கல்வி கற்றோர்களாக்குவது வரலாரறிந்த காலம் தொட்டு கொள்கையல்ல. மாறாக சூத்திரர்களுக்கு கல்வியை மறுப்பதையே ஒரு கல்விக்கொள்கையாகக்கொண்டுள்ள மனுநீதிதான் பார்ப்பனர்களுக்கும், பார்ப்பன அடிவருடிகளுக்கும் தலையாய வேதவாக்கு.

   உங்களுக்கு கல்விக்கொள்கையைப்பற்றிப் பேச என்ன அருகதை?

   • இந்த நாட்டு மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் என்னை போன்றவர்கள் கல்வி கொள்கைகளை பற்றி பேசாமல் பாக்கிஸ்தான் சீனாவிற்காக இந்தியாவை பலவீனபடுத்த வேண்டும் என்று நினைக்கும் கம்யூனிஸ்ட்களா பேச முடியும் ?

    நக்சல் மாவோ மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் என்று சொல்லி கொண்டு தேசவிரோத மக்கள் விரோத செயல்களில் ஈடுபடும் கம்யூனிஸ்ட்கள் எப்படி இந்திய மக்களின் நலனை பற்றி சிந்திப்பார்கள் ? சீனாவின் நலனுக்கு எதிராக இந்தியா செயல்பட கூடாது என்று மிரட்டுபவர்கள் எப்படி இந்திய மக்களின் வாழ்க்கையை பற்றி சிந்திப்பார்கள் ? இந்திய சீனா போரின் போது நேரடியாக சீனாவை ஆதரித்தவர்கள், இந்திய ராணுவத்திற்கு ரத்ததானம் கொடுக்க கூடாது என்று சொன்ன அயோக்கியர்கள் எப்படி இந்திய மக்களின் நலனை பேசுவார்கள் ?

    நிச்சயம் கம்யூனிஸ்ட்களுக்கு தகுதி கிடையாது.

   • நான் இந்த விடீயோக்களை பார்க்கவில்லை ஆனால் இதில் என்ன சொல்லப்பட்டு இருக்கும் என்பதை உறுதியாக கணிக்க முடியும்…

    1. ஹிந்துத்துவா சதித்திட்டம்
    2. கல்வியை கார்பொரேட்களுக்கு விற்க மோடி அரசின் திட்டம்
    3. இந்த கல்வி திட்டத்தால் அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படுவார்கள்
    4. இந்த கல்வி திட்டம் தரமற்றது

    நான் சவாலாகவே சொல்கிறேன் இந்த விடியோக்கள் பெரும் பகுதி இந்த நான்கு விஷயங்களை சுற்றியே இருக்கும்.

    எனது இந்த கணிப்பிற்கு காரணம் ஸ்வாட்ச் பாரத் போன்ற திட்டங்களை பற்றி கூட அவதூறுகளை பரப்பியவர்கள், எப்படி இந்திய மக்களுக்கு தரமான கல்வி கிடைப்பதை ஏற்றுக்கொள்வார்கள் முடிந்தளவுக்கு அதையும் அவதூறுகளை பரப்பி தடுக்கவே பார்ப்பார்கள்.

    உண்மையாகவே மக்களின் மீது அன்பு உள்ளவர்கள் மக்களின் நலனை பற்றி சிந்திப்பவர்கள் இவ்வாறு செயல்பட மாட்டார்கள்.

 2. புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம் என்ற பெயரில் சமச்சீர்கல்வி மாதிரியான குப்பைகளை கொண்டு வந்து தமிழ்நாட்டு மக்கள் தலையில் கட்ட இந்த கூட்டம் முயற்சி செய்யக்கூடும். இவர்கள் கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தில் இவர்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் ஆகியோரை படிக்க வைக்கவில்லை. விவரமாக சிபிஎஸ்சி பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார்கள். இது தெரிந்தும் சமச்சீர் கல்வி என்னும் குப்பையை ஆகா ஓகோ என்று பாராட்டிக் கொண்டு தமிழ்நாட்டில் பல கும்பல்கள் கும்மி அடித்துக் கொண்டு திரிந்தன. இந்த வினவு கூட்டமும் அவற்றில் ஒன்று. இப்போது பின்லாந்தில் ஏழு வயதில் தான் குழந்தைகள் பள்ளிக்கு போக ஆரம்பிக்கிறார்கள் என்று இவர்கள் குதிக்கிறார்கள். ஆனால் பின்லாந்தில் பள்ளி கல்வி முடித்த குழந்தைகள் எவ்வளவு திறமையோடு வெளிவருகிறார்கள் என்பதை இவர்கள் சொல்ல மறுக்கிறார்கள். சர்வதேச அளவில் நடக்கும் தேர்வுகளில் மிக அதிக மதிப்பெண்களை பின்லாந்து மாணவர்கள் எடுக்கிறார்கள். பள்ளிக் கல்வி முடித்து வரும் அந்த நாட்டு மாணவர்களின் திறமையையும் சர்வதேச அளவிலான ஒரு தேர்வின் மூலமே அளவிடப்படுகிறது. தமிழகத்தின் பள்ளி கல்வி முறை இப்போது இருப்பதைப் போன்றே குப்பையாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இவர்கள் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம் என்னும் பெயரில் கூத்தடிக்கிறார்கள்.

  • பெரியசாமி சார்,
   பிசா (PISA) அறிக்கை 74 நாட்டுக்குழந்தைகளின் கல்வித்தரத்தை ஆராய்ந்து சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த இந்தியக்குழந்தைகளின் கல்வித்தரம் 73 என்று தெளிவாக எடுத்துக்காட்டியது. (அவ்வறிக்கையின்படி நமக்கும் கீழே தரவரிசையிலுள்ளது கஜக்கஸ்தான் மட்டுமே). சமச்சீர்கல்வியும் அதைப்போல இன்னொரு தரமற்ற கல்வியாகவே இருந்துட்டுப்போகட்டும். ஆனால் எதைக் கற்கிறார்களோ அதைப் புரிந்து கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாகவும், அதன் மூலமே மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிவகைகளையும் சமச்சீர்கல்வியின் மூலமாக சட்டரீதியாக உறுதி செய்தால் எந்தவித பாராதீரமான விளைவுகளும் ஏற்படாதே?

   • இந்திய மக்கள் எந்த சூழ்நிலையிலும் கல்வி தரத்தில் உயர்ந்து விட கூடாது என்று நினைக்கும் உங்களை போன்ற கம்யூனிஸ்ட்களின் உயர்ந்த எண்ணத்தை சீனாவும் பாகிஸ்தானும் பாராட்டும், வாழ்க உங்களின் சீனா பாக்கிஸ்தான் தொண்டு.

   • 2009ல் நடந்த PISA தேர்வில் தமிழ்நாடு மற்றும் இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 400 பள்ளிகளிலிருந்து 16000 மாணவர்கள் பங்கெடுத்தனர். இந்தப் பள்ளிகளில் பெரும்பாலானவை மாநில அரசுப் பள்ளிகள். இந்த இரு மாநிலங்களும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு காரணம் இவை இரண்டும் இந்தியாவிலேயே பள்ளிக்கல்வியில் சிறந்த மாநிலங்கள் என கருதப்பட்டதால் தான் (கல்வியில் சிறந்த தமிழ்நாடுங்கோ). இந்த தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பங்கெடுப்பதற்கு ஆட்சியில் இருந்த வா(பா)ழும் வள்ளுவம் தான் அனுமதி கொடுத்ததாக படித்தேன். இந்த தேர்வில் வந்த கேவலமான முடிவுக்கு பின்னர் இந்தியா பிறகு பங்கெடுக்கவில்லை. வரும் 2021ல் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்க வைப்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது

 3. (அரசு தொடக்க பள்ளிகளில் படித்து, ஆறாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, தமிழ் வாசிக்க தெரியாததால், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது.மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டம், தமிழகத்தில், 2009 முதல் அமலில் உள்ளது. இந்த சட்டத்தின் கீழ், 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு, இலவச கட்டாய கல்வி வழங்கப்படும். அதனால், எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு, தேர்வுகள் எதுவும் இன்றி, தேர்ச்சி செய்யப்படுகின்றனர்.தேர்வுகள் இல்லாததால், அரசு தொடக்க பள்ளிகளில், மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்துவதில்லை. மாணவர்களின் கற்றல் திறனில், ஆசிரியர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால், ஐந்தாம் வகுப்பு முடித்து, ஆறாம் வகுப்பில் சேரும் பெரும்பாலான மாணவர்களுக்கு, தமிழ் எழுத, படிக்கவே தெரியாத நிலை உள்ளது.இதையடுத்து, இந்த ஆண்டு, அரசு தொடக்க பள்ளிகளில் படித்து, உயர்நிலை பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் கற்றல் மற்றும் வாசிப்பு திறன் ஆய்வு செய்யப்பட்டது. அதில், பல மாணவர்கள், தமிழ் வாசிக்கவே திணறியது தெரிய வந்தது.அதைத்தொடர்ந்து, அந்த மாணவர்கள் படித்த, தொடக்க பள்ளிகள்; அதன் ஆசிரியர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு, அவர்களிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பும் பணி துவங்கியுள்ளது.)

  மேற்படி செய்தி இன்று 22 ஜூலை 2019 தினமலம் நாளேட்டில் வெளிவந்துள்ளது. இந்த லட்சணத்தில் புதிய கல்விக் கொள்கையை கண்டனம் பண்ணி கருத்தரங்கம் நடத்தறானுங்களாம். வாத்தியாருங்க சம்பள உயர்வு கேட்டு அடாவடித்தனமா போராட்டம் பண்ணுனா அதுக்கு சப்போர்ட் பண்ணி கட்டுரை வேற எழுதறானுங்க.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க