தமிழகத்தில் கலவரம் நடத்த திட்டமிடும் ஆர்.எஸ்.எஸ் ! | மருது வீடியோ

தமிழகத்தில் கலவரம் நடத்தி காலூன்ற எத்தனிக்கும் ஆர்.எஸ்.எஸின் செயல்பாடுகளை RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...

ர்.எஸ்.எஸ் என்பதை மற்ற அமைப்புகள் போலவே இதுவும் ஓர் அமைப்பு என்று பார்ப்பது தவறு. ஆர்.எஸ்.எஸ் ஏன் உறுவாக்கப்பட்டது என்ற பின்னணியுடன் தான் சேர்ந்து நாம் பார்க்க வேண்டும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை ஒரு வழிமுறை இருக்கிறது.

திமுக திராவிட நாடு என்று கோரிக்கை வைத்தார்கள். அதற்காக தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மூலம் தங்களுடைய கருத்துக்களை, தங்களுடைய சிந்தனைகளை மக்களுக்கு கொண்டு சென்றார்கள்.

கம்யூனிஸ்ட்டுகள், காலம் முழுக்க பிரச்சாரம் செய்து, மக்களை நேரடியாக சந்தித்து பேசுவது மூலமாக தங்களது போராட்டங்களை நடத்தி பல்வேறு உரிமைகளை பெற்று தந்தார்கள்.

அப்படி ஆர்.எஸ்.எஸிற்கு என்னதான் கொள்கை என்றால், ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு பாசிச அமைப்பு, அதாவது வழக்கம்போல இருக்கக்கூடிய ஒரு பாசிச அமைப்பா என்றால் அப்படி அல்ல. உலகத்திலேயே 100 ஆண்டுகள் நீடித்து நிற்கக்கூடிய ஒரு பாசிச அமைப்பு. அந்த அமைப்பு பல்வேறு அனுபவங்களை பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் இருந்த பாசிச அமைப்புகள் எப்படி மக்களால் ஒழித்துக்கட்டப்பட்டது, எப்படி காலாவதியானது என்பதில் இருந்து பல்வேறு அனுபவங்களை எடுத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஊருக்கும் ஏற்றார் போல தங்களின் வழிமுறைகளை மாற்றிக் கொள்கிறது.

குறிப்பாக அவர்கள் வழிமுறையே வன்முறைதான். கலவரம் செய்வதும் அதன்மூலமாக ஆட்சியை பிடிப்பதும்; முஸ்லீம்களையும், கிருத்துவர்களையும், கம்யூனிஸ்ட்டுகளையும் கொன்றொழிப்பதுதான் அவர்கள் இலக்கு. இப்படிபட்ட இலக்கை வைத்திருக்கிற ஒரு அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ்.

தமிழகத்தில் கலவரம் நடத்தி காலூன்ற எத்தனிக்கும் ஆர்.எஸ்.எஸின் செயல்பாடுகளை RED SEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

பாருங்கள்! பகிருங்கள்!!

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க