ஸ்டெர்லைட்டை எவ்வாறு மூடுவது ? பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் ராஜு !
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை விவரிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு.
வருசம் பொறந்துருச்சாண்ணே… முதலாளி என்ன ராசின்ணே !
ஏன்ணே நம்ம ராசிக்கு தான் வருசா வருசம் எறங்குது, கெறங்குது.. எல்லா வருசமும் நல்லா இருக்கேன்ணே இந்த அம்பானி அதானி எல்லாம் என்னா ராசின்ணே!
உங்களுக்குச் சாவுமணி அடிக்கும் நாள் நெருங்கி விட்டது
ஜனங்களே பார்த்தீர்களா? இந்த மிருகங்கள் நம் கைகளைக் கொண்டே நம் தொண்டையை நெரிப்பதை நன்றாகப் பாருங்கள்! சிந்தித்துப் பாருங்கள்... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 45-ம் பகுதி...
கருத்துக் கணிப்பு : தமிழகத்தின் அர்னாப் கோஸ்வாமி யார் ?
தமிழகத்தின் அர்னாப் கோஸ்வாமி யார் ? வினவு விருதுகளுக்கான இந்தக் கருத்துக் கணிப்பில் உங்கள் அபிமானம் பெற்ற பத்திரிகை உலக அர்னாப்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் ..
குழந்தை இல்லாத ஆண்களின் மனநிலை குறித்து சிந்தித்ததுண்டா ?
குழந்தையில்லாவர்களுக்கு அது ஏற்படுத்தும் வலி, இழப்பு, துக்கம், மன அழுத்தம் போன்றவை சமூகத்தின் பார்வையால் ஏற்படுகின்றன. ஹாட்லியின் ஆய்வில் தங்களுடைய அனுபவத்தை ஆண்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் : படிப்பினை என்ன ?
கடந்த 6 நாட்களாக நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் போராட்டமானது தற்போது தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஆயினும் இறுதி வெற்றி கிட்ட என்ன செய்வது...?
பிக் பாஸ் : இனி அரசின் நேரடி கண்காணிப்பில் உங்கள் கணினிகள் !
“நாம் இப்போது போலிசு இராஜ்ஜியத்தை நோக்கியா செல்கிறோம்? பெரியண்ணன் நம்மை எப்போதும் கண்காணிக்கிறார். இந்த மீம்பெரும் தகவல்களை கையாளும் திறமை படைத்தவையா இந்நிறுவனங்கள்? ”
வரலாறு : மதுரைக் கோவில் நுழைவும் ஆர்.எஸ். நாயுடுவும் !
மதுரை கோவிலில் 2 உண்டியல்கள் இருந்தன. இதனால் பக்தர்கள் பலர் பட்டர்களிடம் காசு கொடுத்தனர். வட இந்தியர்கள் காசுகளை சந்நிதியில் தூக்கி எறிந்தனர். இதைப் பார்த்த நாயுடு கோவில் முழுக்க உண்டியல் வைக்க உத்தரவிட்டார். சந்நதியில் பணம் எறியும் பழக்கம் தடுத்து நிறுத்தப்பட்டது.
தள்ளு வண்டி காவியம் | துரை. சண்முகம்
வண்டியை ஏற்றத்தில் உந்தித் தள்ளி, இறக்கத்தில் இழுத்துப் பிடித்து, பள்ளிப் பிள்ளைகள் சைக்கிள்கள் பைக்குகளின் சீண்டல்கள் படாமல்... விலகி பக்குவமாய் கட்டுக்குள் நிறுத்தும் பெண்ணின் தொண்டைக்குழி தசையில் வியர்வை உருளும்.
கஜா புயல் பாதித்த பகுதிகளைத் தாக்கும் நுண்கடன் நிறுவனங்கள் !
கஜா புயலின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் மக்கள் மீளவில்லை என்பது அனைவரும் அறிந்த செய்திதான். மக்களுக்கு உரிய இழப்பீடுகள் மற்றும் நிவாரண உதவிகள் இன்னமும் கிடைக்கவில்லை என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டம்...
மனிதன் ஒரே ஒருமுறைதானே சாக முடியும் ?
ஒரு மனிதனின் கைகள் இரண்டையும் கட்டிப்போட்டுவிட்டு, இவர்கள் இஷ்டப்படியெல்லாம் அவனை வதைக்கிறார்கள். மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 44-ம் பகுதியின் பாகம்-2...
மதுரையில் மங்கி வரும் ஆட்டோ இலக்கியம் !
ஒருமுறை லாரி ஒன்றின் மின்கலப் பெட்டியில், "என்னை தவிக்க விட்டால், உங்களை தள்ள விடுவேன்" என்ற வித்தியாசமான வாசகத்தையும் அப்போது பார்த்த நினைவு உள்ளது.
மோடியை விட்டுக் கொடுக்காமல் வெண்பா பாடுவதில் நம்பர் 1 தமிழ் நடிகர் யார் ?
மோடியை எங்கும் எப்போதும் விட்டுக் கொடுக்காமல் அவருக்கு வெண்பா பாடும் தமிழ் நடிகர் யார் என நீங்கள் நினைக்கிறீர்கள் ? வாக்களியுங்கள் !
மார்க்சியம் ஒரு மனிதரின் பெயரில் இருந்தாலும் அது உண்மையில் இரண்டு மனிதர்களின் பணியாகும்
மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் இடையிலிருந்த நட்பு மனிதர்களுக்கிடையில் நட்பைப் பற்றி தொன்மைக் காலத்தில் கூறப்பட்ட மிகவும் உணர்ச்சிகரமான கதைகளைக் காட்டிலும் கூட உயர்வானது என்றார் லெனின். மார்க்ஸ் பிறந்தார் - தொடரின் 24-ம் பாகம்
சுதேசி வேடத்தில் பழங்குடிகளின் மூலிகை அறிவை திருடி விற்கும் பாபா ராம்தேவ்
வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல, உள்நாட்டு நிறுவனங்களும் இயற்கை வளங்களை சுரண்டுவதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் பங்கு தரவேண்டும் என தீர்ப்பில் தெரிவித்தார் நீதிபதி.





















