வாய்க்காலை தூர்வார துப்பற்ற அரசு! களத்தில் மக்கள் அதிகாரம் !
நாத்துபறி, உழவு, நடவு என விவசாயிகளுக்கு தலைக்கு மேல் வேலைகள் இருந்தாலும் ”மழைகாலத்தில் தண்ணீரை சேமிக்காவிட்டால் இன்று உழவுக்கு நீர் இல்லாமல் போகும். நாளை குடிக்கவே தண்ணீர் கிடைக்காது" என்ற அபாயத்தை உணர்ந்து சீர் செய்ய வந்ததாக ஒரு விவசாயி கூறினார்.
விவசாயிகளின் இரத்தம் குடிக்கும் பாரத ஸ்டேட் வங்கி !
விவசாயிகளுக்கு எதிரியே இந்த அரசு தான். அய்யாக்கண்ணு சொல்வது போல் அரசை நம்பினால் அம்மணமாக தான் நிற்க வேண்டும் என்று அவர் தலைமையில் டெல்லியில் நடத்திய போராட்டமே சாட்சி என்பதை விவசாயிகள் உணர வேண்டும்.
ஓபசமுத்திரம் கிராம மக்களின் இறால் பண்ணை அழிப்பு போராட்டம் !
இனி அரசு அதிகாரிகளை நம்பி பயனில்லை என உணர்ந்த கிராம மக்கள் கடந்த 29.10.2017 அன்று கிராம கூட்டத்தை கூட்டி இறால் பண்ணை உரிமையாளர்களுக்கு, பண்ணையை அகற்றுவதற்கு ஒரு வாரம் கெடு விதித்து தீர்மானம் நிறைவேற்றினர்.
சீர்காழி : பயிர்க் காப்பீட்டிற்கு பகவானிடம் கேட்கச் சொன்ன கலெக்டர் !
நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் அவர்களிடம் விவசாயிகள் மனுக்கொடுத்து காப்பீடு வழங்க கேட்டபோது என்னால் ஒன்றும் செய்ய முடியாது. கடவுளிடம் தான் சொல்ல வேண்டும் என்றார்.
பாஜக-வைப் பணிய வைத்த ராஜஸ்தான் விவசாயிகள் !
அரசைப் பணியவைக்கும் போராட்டங்களை நடத்துவதன் மூலம்தான் கோரிக்கைகளை ஓரளவாவது நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதை ராஜஸ்தான் விவசாயிகளின் போராட்டத்திலிருந்து தமிழக விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
மோடியின் நர்மதா அணை பிரகடனம் : சதிகாரன் புத்திசாலி ! சகிப்பவன் குற்றவாளி !!
நர்மதா பாதுகாப்பு இயக்கம் 2000-ஆம் ஆண்டில் தொடுத்த வழக்கில், "வெளியேற்றப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரம், மறுவாழ்வு வழங்குவது குறித்து மட்டுமே தாம் இனி தலையிடப் போவதாகவும், அணை கட்டுவதை நிறுத்தி வைக்க உத்தரவிடப் போவதில்லை" என்றுதான் நீதிபதிகள் மனச்சாட்சியின்றித் தீர்ப்பை எழுதினர்.
சட்டவிரோதமாக மரபீனி உணவுப் பொருட்களை அனுமதிக்கும் இந்திய அரசு !
மரபீனி மாற்ற உணவுப்பொருட்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும் அல்லது முறையான ஆய்வுக்குட்படுத்தி லேபிள் ஓட்ட வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் அருணா ரோட்ரிகஸ் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருந்தார்.
நெல்லை ஆலங்குளம் – தொடர் முற்றுகையில் மூடப்பட்டது டாஸ்மாக் !
”தீபாவளிக்கு டார்கெட் வச்சு கொள்ளையடிக்கத்தானே அவகாசம் கேட்கிறீர்கள், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி, ஏசி ரூமில் இருக்கும் உங்களுக்கு எங்க சிரமம் எப்படித் தெரியும்?”
மணல் கொள்ளையை நிறுத்து ! – கூடலையாத்தூர் பொதுக்கூட்டம் !
கடந்த மூன்று மாதகாலமாக வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்தோடு எமது மக்கள் அதிகார தோழர்களும் இணைந்து வெள்ளாற்றில் இயங்கி வரும் கூடலையாத்தூரில் மணல் குவாரியை மூடியாக வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தினோம்.
ஓசூர் : “விவசாயியை வாழவிடு !” மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
நான் விவசாயி என்பதால் விவசாயத்தால் நான் மட்டும் பயன் அடைவதில்லை, மனித இனங்களோடு சேர்த்து மற்ற உயிரினங்களும் பயனடைகின்றன.
கூடலையாத்தூர் – மணல் கொள்ளையை நிறுத்து ! – பொதுக்கூட்டம்
இந்த அரசிடமே நம்பிக்கை வைத்து மன்றாடுவதால்தான் போராட்டம் மாதக்கணக்கில், நீடிக்கிறது. பெரும் திரள் மக்கள் போராட்டம், எழுச்சி இந்த அரசின் அதிகாரத்தை, அதன் கொள்கைகளை, கேள்வி கேட்க வேண்டும். தனித்தனி போராட்டம் தனிதனி தீர்வு இனி சாத்தியம் இல்லை.
சிறு குறு தொழில்களை அழிக்கப்போகும் ஜி.எஸ்.டி !
நெல் கொள்முதலுக்கு வரி இல்லை. ஆனால், அதை அரிசியாக்கிப் பையில் அடைத்து விற்றால் வரி. கோதுமை கொள்முதலுக்கு வரி இல்லை. ஆனால், அதை மாவாக்கி விற்றால் வரி. மிளகாயைப் பவுடராக்கி பையில் அடைத்தால் வரி. எலுமிச்சை பழத்திற்கு வரி இல்லை. ஆனால், ஊறுகாய்க்கு வரி.
விவசாயிகளுக்கு 50 காசு தள்ளுபடி ! கேடி ஆதித்யநாத்தின் மோசடி !
எகத்தாளமாக விவசாயிகளை நோக்கி சில்லறைக் காசுகளை வீசுவதற்கு பதில், அவர்களது விளைச்சலுக்கான முறையான விலை நிர்ணயத்தைச் செய்தாலே தாங்கள் வாங்கிய கடனை முறையாக கட்ட முடியும்.
திருப்பூர் – விவசாயியைக் ’கொன்ற’ கோடக் மஹிந்திரா வங்கி – போலீசு – நீதிமன்றம்
’அவகாசம் கொடுக்க முடியாது’ எனப் பிடிவாதம் பிடித்திருக்கிறது கோடக் மஹிந்திரா வங்கி. மனமுடைந்த விவசாயி வெள்ளியங்கிரிநாதன் போலீசு நிலையத்திலேயே பூச்சி மருந்தைக் குடித்துத் தன் உயிரை விட்டுள்ளார்.
சிறப்புக் கட்டுரை : பிரெஞ்சுப் புரட்சி – உலகம் தன் தலை மீது நின்ற காலம் !
பிரெஞ்சுப் புரட்சியின் வரலாற்றையும் கவித்துவத்தையும் ஒருங்கே அறிமுகம் செய்கிறது. அரசியல் ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.