கொரோனா ஊரடங்கால் அவதிப்படும் மக்களுக்கு வேலை கொடு ! சார் ஆட்சியரிடம் மனு !!
வேலையின்றி தவிக்கும் மக்களுக்கு வேலை வழங்க்கக் கோரி, மக்கள் அதிகாரம் சார்பில் 29.07.2020 அன்று விருத்தாச்சலத்தில் உள்ள சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
’இந்து ராஷ்டிரத்திற்கான’ கல்விக் கொள்கை – தமிழகம் கிளர்ந்தெழட்டும் !
கல்வியை சர்வதேச சந்தையில் கடைவிரிக்கும் கார்ப்பரேட் நலனும், ‘சூத்திரனுக்கு கல்வி எதற்கு’ எனும் பார்ப்பனிய மேலாண்மையை நிறுவும் காவிகளின் நலனும் ஒன்றிணைந்த வீரிய ஒட்டுரக புதிய மனுநீதி!
திருச்சி லால்குடி : நுண்கடன் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் தாசில்தாரை கண்டித்து சுவரொட்டி பிரச்சாரம் !
அடாவடி நுண்கடன் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், புகார் கொடுக்க சென்ற பெண்களை ஒருமையில் பேசியும் இழிவுபடுத்திய தாசில்தாரை கண்டித்து சுவரொட்டி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
தோழர் வரவர ராவ் உள்ளிட்ட 11 செயல்பாட்டாளர்களை விடுதலை செய் ! திருச்சியில் ஆர்ப்பாட்டம் !!
தோழர் வரவர ராவ், பேராசிரியர் சாய்பாபா, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், ஆனந்த் தெல்தும்டே உள்ளிட்ட 11 செயல்பாட்டாளர்களை விடுவிக்கக் கோரி திருச்சியில் ம.க.இ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மின்சார- வேளாண் அவசர திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறு ! மதுரையில் ஆர்ப்பாட்டம் !!
கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக திருத்தப்படும் வேளாண் மற்றும் மின்சார சட்டங்களைக் எதிர்த்து, மதுரையில் அனைத்து கட்சி சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது.
திருச்சி : வேலை வழங்க முடியாது ! கடனையும் கட்ட வேண்டும் ! அதிகார வர்க்கத்தின் கோர முகம்...
கொரோனா காலத்தில் வேலையிழந்த மக்களுக்கு, வேலை வழங்க துப்பில்லை. அடாவடி நுண்கடன் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த துப்பில்லை. யாருக்கானது இந்த அரசாங்கம்.
அடாவடி நுண்கடன் நிறுவனங்களை எதிர்த்து பெண்கள் உரிமைப் பாதுகாப்புச் சங்கம் உதயம் !
கொரோனா காலத்திலும் கூட அடாவடியாக செயல்படும் நுண்கடன் நிறுவனங்களால் பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு உதவ, சமூக அக்கறையுள்ள வழக்கறிஞர்கள் முன்வந்துள்ளனர்.
அடாவடி நுண்கடன் நிறுவனங்கள் ! பெண்களை துணிவோடு எதிர்கொள்ள வைக்கும் மக்கள் அதிகாரம் !
அடவாடியாக நடந்து கொள்ளும் நுண்கடன் நிறுவனங்களுக்கு எதிராக, பெண்கள் நீங்களே முன் நின்று போராடுங்கள். மக்கள் அதிகாரம் உங்களுக்கு துணைநிற்கும்.
பல்கலைக்கழக தேர்வுகளை இரத்து செய் ! திருச்சியில் பு.மா.இ.மு போராட்டம் !
மாணவர்களின் எதிர்காலத்தையும், உயிரையும் பறிக்கும் விதமாக செயல்படும் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கையைக் கண்டித்து, திருச்சியில் புமாஇமு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் கவிஞர் தோழர் – வரவர ராவை விடுதலை செய் ! ம.க.இ.க ஆர்ப்பாட்டம் !
'மக்கள் கவிஞர் தோழர்-வரவரராவ் உள்ளிட்ட 11 போராளிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்'. என ம.க.இ.க சார்பில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கண்டன அறிக்கை என பல்வேறு வழிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது.
கருப்பர் கூட்டம் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று அவர்களை உடனே விடுதலை செய் !
தற்போது தமிழகத்தை ஆளும் எடப்பாடி அரசு, ஆர்.எஸ்.எஸ். - பிஜேபி கும்பலின் அடியாளாகவே மாறி பகுத்தறிவு கருத்துக்களுக்கு எதிரான தாக்குதல்களை தொடுத்து வருகிறது.
பல்கலைக்கழக தேர்வுகளை இரத்து செய் ! பு.மா.இ.மு கோரிக்கை
கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி காஞ்சிபுரம், கரூர் ஆகிய பகுதிகளில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கியுள்ளனர்.
பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளை இரத்து செய் ! விழுப்புரம் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !
கொரோனா தீவிரமாகும் போது பல்கலை கழக தேர்வுகளை மாணவர்களின் உடல்நலன் கருதி நடத்தக்கூடாது! என்பதை வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கொரோனா – வேலை, வாழ்வாதாரம், பொது சுகாதாரத்திற்காக போராடு !
உடனடி வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை நிர்பந்தித்து போராடுவதோடு கார்ப்பரேட் - காவி பாசிசத்தை வீழ்த்தவும் மக்கள் அணிதிரள வேண்டும்.
மக்கள் கவிஞர் தோழர் வரவர ராவை சிறையிலிட்டு வதைக்காதே ! மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி
மக்களுக்காக போராடியவர்களை காக்கும் கடமை அரசியல் அமைப்புகள் ஜனநாயகவாதிகள், மனித உரிமை இயக்கங்கள் தொழிற்சங்கங்கள் ஆகிய அனைவருக்கும் உண்டு.
























