Tuesday, July 8, 2025

உத்தரப்பிரதேசம் : இந்து ராஷ்டிரத்திற்குள் ‘சாத்தியமான மாற்று’ இல்லை !

ஆர்.எஸ்.எஸ். என்ற பாசிசப் படை, பா.ஜ.க. என்ற கட்சியை மட்டும் பயன்படுத்தித்தான் இந்துராஷ்டிரத்தை அடையவேண்டுமென்பதில்லை. ஆர்.எஸ்.எஸ்.க்கு பா.ஜ.க. ஒரு கருவி மட்டுமே.

இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாகும் அசாம் !

பெரும்பான்மை மக்களிடம், அவர்களின் ‘‘எதிரிகள்’’ என்று ஒருபிரிவு மக்களை முன்னிறுத்தி மோதவிடுவதுதான் பாசிஸ்டுகள் மக்களை வென்றெடுப்பதற்குக் கையாளும் வழிமுறை. அசாமிலும் அது நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கிறது.

கெய்ர்ன் வழக்கு : இந்திய இறையாண்மையை செல்லாக்காசாக்கிய மோடி !

இந்திய அரசின் சட்டத்திலிருந்து விலக்கு பெறுவதோடு, இந்தியாவின் சொத்துக்களையே ஒரு கார்ப்பரேட்டால் முடக்கி வைக்க முடியுமெனில் அரசுகளின் இறையாண்மை கார்ப்பரேட்டுகளின் காலடியில் சமர்ப்பிக்கப்பட்டது என்றுதானே பொருள்

இந்து ராஷ்டிரக் கனவோடு வரலாற்றைத் திரிக்கும் சங்கப் பரிவாரக் கும்பல் !

அடக்குமுறைகளுக்கு எதிரான வீரம்செறிந்த போராட்டங்களின் வரலாறு, மக்களிடம் போராடும் உணர்வை ஊட்டி வளர்க்க கூடியவை என்பதால்தான், அதன் சின்னங்களை பாசிஸ்டுகள் அழித்துவிடத் துடிக்கின்றனர்.

திரிபுராவில் இந்துவெறி குண்டர்களின் வெறியாட்டம் !

தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டும் இந்துவெறி பாசிச அமைப்பை முறியடிக்கும் வகையில் ஆற்றல் கொண்ட ஓர் அமைப்பு அல்லது பல்வேறு அமைப்புகளின் கூட்டணியால்தான் பார்ப்பன பாசிசத்தை வீழ்த்த முடியும்.

உத்திரப் பிரதேசம் : தாழ்த்தப்பட்ட மக்களின் வதைக்கூடம்

கடந்த 2020-ம் ஆண்டு மட்டும் உத்திரப் பிரதேசத்தில் 1,642 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான இதர தாக்குதல்கள் நடந்துள்ளன. இது தேசியளவில் நடத்தபட்ட 2,312 தாக்குதல்களில் மொத்தம் 71 சதவிகிதமாகும்.

தேசிய பணமாக்கல் திட்டம் : நோக்கமும் பின்னணியும் !

நம் கண்முன்னே ஒரு பெரும் சூறையாடல் நடந்து வருகிறது. பொருளாதாரத் திட்டமாக மட்டுமின்றி, எதிர்த்துப் போராடுபவர்களை கடுமையாக ஒடுக்கும் காவி − கார்ப்பரேட் பாசிசத்தின் அரசியல் தாக்குதலாகவும் இது இருக்கிறது.

தேசியக் கடல் மீன்வள மசோதா – 2021 : கடல் வள பேரழிப்பின் ஒரு அங்கம் !

இந்திய கடல் வளத்தை பகாசுர முதலாளிகள் சூறையாடுவதற்கே ‘‘கடல் மீன்வள சட்டம் 2021''-ஐ நிறைவேற்றியுள்ளது மோடி அரசு. கார்ப்பரேட்களிடமிருந்து கடல் வளத்தை பாதுகாக்க மீனவர்களுடன் இணைந்து போராட வேண்டியது அவசியம்

பாசிச மோடி அரசுக்கு எதிராக வளர்ந்துவரும் போராட்டங்கள் !

சிறுபொறி பெருங்காட்டுத் தீயாகப் பற்றிப் படர்வதைப் போல, சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகும் உழைக்கும் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது

காஷ்மீர் சிறப்பு உரிமை ரத்து – இரண்டு ஆண்டு நிறைவு : துளிர்விடுகிறது விடுதலை முழக்கம் !

மோடி அரசுக்கு எதிராக லடாக்கில் மூண்டெழும் போராட்டமானது, அடக்குமுறைகளாலும், இயற்கைவளச் சூறையாடலாலும் சின்னபின்னமாகியுள்ள காஷ்மீரை மீண்டும் எரிமலையாக வெடித்தெழச் செய்யும்

இந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா?

ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு அதிரடியாகப் பிணை வழங்கிய உச்ச நீதிமன்றம், மற்றைய அரசியல் விசாரணைக் கைதிகள் விடயத்தில் ஓரவஞ்சனையாக நடந்துவருகிறது.

மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறது வேதாளம் !

யாரும் பார்க்காத வண்ணம் நடக்கும் தீண்டாமையைக் குற்றமாகக் கருத முடியாது என தீர்ப்பு வழங்கியிருக்கும் நீதித்துறை, நாளை பெண்கள் மீதான பாலியல் குற்றங்களுக்கும் இதேவகையில் தீர்ப்பு வழங்கினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை

இந்திய தேசிய ஜோதியில் தமிழகம் கலக்க மறுப்பதேன்?

அரசு ஒடுக்குமுறைக்கான கருவி என்பதை நாம் அறிவோம். ஆனால், சங்கிகளோ அரசு ஒடுக்குமுறை கருவியாக இருந்தால் மட்டும் போதாது; அது இலாபம் ஈட்டும் இயந்திரமாகவும் இருக்க வேண்டும் என்றும் கருதுகிறார்கள்.

முதலாளித்துவம் உருவாக்கும் முரண் நிலை || உலகப் பட்டினிக் குறியீடு

அம்பானி, அதானி, அசிம் பிரேம்ஜி என உலகக் கோடீசுரர்கள் வாழும் இந்தியா, உலகப் பட்டினிக் குறியீட்டுத் தரவரிசைப் பட்டியலிலோ அதலபாதாளத்தில் கிடக்கிறது.

வெட்கக்கேடு : மத்தியப் பிரதேசம் பாலியல் குற்ற வழக்கு

ம.பி. உயர் நீதிமன்றம் பாலியல் வழக்கொன்றில் குற்றவாளிக்கு வழங்கியிருக்கும் பிணை உத்தரவு பாதிக்கப்பட்ட பெண்ணைத் தண்டிக்கிறது.

அண்மை பதிவுகள்