மோடி பிரச்சாரம் செய்த தொகுதிகளில் மண்ணைக் கவ்விய பாஜக !
மோடி பிம்பம் உடையும்பட்சத்தில் அடுத்து யாரை முன்னிறுத்துவது என்கிற சங் பரிவார் கும்பல் சோதனை முயற்சியில் ஆதித்யநாத் வெற்றி கண்டிருக்கிறார்.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதான மணிப்பூர் பத்திரிகையாளருக்கு ஓராண்டு சிறை !
காவி அரசு ஊடகங்களை வளைக்கிறது அல்லது எதிர்ப்பவர்களை தேச துரோகியாக்கி சிறையில் அடைக்கிறது. அடிப்படைவாதிகளின் ஆட்சியில் கருத்து சுதந்திரம் படும்பாடு இதுதான்.
மோடி ஆட்சியில் வேலை இழப்பு – சிறுதொழில் அழிவு அபாய கட்டத்தை எட்டியது !
பழமைவாதத்தில் ஊறிப்போன காவி கும்பல், தொலைநோக்குப் பார்வையுடன் எப்படி மக்களின் நலன்களில், தொழில்துறை வளர்ச்சியில் அக்கறை கொள்ளும் என்பதை, மோடியை நம்பியவர்கள் சிந்திக்க வேண்டும்.
இந்தியாவை இந்து நாடாக அறிவியுங்கள் மோடிஜி ! மேகாலயா நீதிபதி கோரிக்கை !
சதாசிவம், கோயல் பாணியில், ’வளர்ச்சி நாயகனின்’ மனம் கவர்ந்தால் கிடைக்கவிருக்கும் ராஜ வாழ்க்கை கண்களில் வந்து சென்றிருக்கும்...
ஒன்றரை கோடி வேலை வாய்ப்பு : மோடியின் முன்னாள் ஆலோசகர் சுர்ஜித் பல்லாவின் புள்ளிவிவரப் பொய்கள் !
தேசிய அளவிலான வேலைவாய்ப்பு நிலவரம் குறித்த சுர்ஜித் பல்லாவின் இப்புள்ளி விவரம் நேர்மையற்றது என குற்றம் சாட்டியிருக்கிறார், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தலைவர் மகேஸ் வியாஸ்.
ஜம்மு : கத்துவா சிறுமி வன்கொடுமை வழக்கில் ஆஜரான வழக்கறிஞருக்கு வாடகை வீடு கிடையாது !
மிகக் கொடூரமான காவிவெறி கொலையாளிகளுக்கு எதிராக நின்ற ஒரே குற்றத்துக்காக பொதுவெளியில் புறக்கணிப்பை சந்தித்ததோடு, அரசு தரப்பிலும் அலைகழிப்புகளை சந்தித்து வருகிறார் தீபிகா.
ராஜஸ்தான் தேர்தல் முடிவு : நோட்டாவுக்கு ஆப்பு வைப்பார்களா ஓட்டுக் கட்சிகள் ?
இராஜஸ்தானில் நோட்டாவால் பல தொகுதிகளை இழந்தது காங்கிரஸ். கடந்த கர்நாடக தேர்தலில் நோட்டாவால் அடி வாங்கியது பாஜக. நோட்டாவை விட்டு வைப்பார்களா ஓட்டுக் கட்சிகள்?
சட்டமன்ற தேர்தல் : தெலுங்கானாவில் பொய்த்துப் போன பாஜக கனவு !
முசுலீம் மக்களை தூண்டிவிடும் விதமாக தீவிரமான வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார், ஆதித்யநாத். ஆனாலும், தெலுங்கானாவில் ராஜா சிங் லோத் என்பவர் மட்டும் வெற்றி பெற்றுள்ளார்.
உயர்சாதியினரை பகைத்தால் பாஜக வெல்ல முடியாது : உ.பி. எம்.எல்.ஏ வின் பார்ப்பனிய குமுறல்
இரண்டு ஆயிரம் ஆண்டுகளாக உலவிக்கொண்டிருக்கும் பார்ப்பனிய சாதித் திமிர் பிடித்த இந்த காவிவெறி ஸோம்பிகளால் பாஜக, ‘வெற்றிகரமான தோல்வியை’ கண்டுள்ளது.
ஒலி வடிவில் இன்றைய செய்தி அறிக்கைகள் – 12/12/2018 | டவுண்லோடு
ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !... மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார் ?... ரிசர்வ் வங்கி புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ் : பின்னணி என்ன ?... இன்றைய செய்திகள் ஒலி வடிவில்.
ஏண்ணே ! வெற்றிகரமான தோல்வின்னா என்னான்னே ?
அப்ப அந்த மாட்டுக்கறி, ராமன், சபரிமலை, அயோத்தி எதுவும் வேலைக்க ஆவலயாண்ணே? ரொம்ப கத்தி கத்தி மோடி வேல பாத்தாரேண்ணே!
ராஜஸ்தான் : உலகின் முதல் பசு அமைச்சர் சுயேட்சையிடம் தோற்றார் !
மாட்டை முன்னிறுத்தி வெறுப்பு அரசியல் செய்த, காவி கும்பலின் ‘இந்துத்துவா’ முழக்கத்தை புறந்தள்ளிவிட்டனர் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மக்கள்.
சட்டீஸ்கரில் பாரதிய ஜனதா தோல்வி ஏன் ? தினமலரின் பயங்கரமான ஆய்வு !
இத்தேர்தலில் தோல்வியடைந்துள்ள பா.ஜ.க.-வை காப்பாற்ற பக்தாள்கள் தினுசு தினுசாக கிளம்பியுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார் ?
அடிபட்ட நரிக்கு ஆத்திரம் அதிகம் என்பது உண்மை. ஆனால் பாஜக போல காங்கிரசும் இத்தகைய குதிரைப்பேர வர்த்தகத்தில் தேர்ந்த கட்சி என்பதால் அது அத்தனை சுலபத்திலும் நடக்காது.
பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் கர்ப்பிணிப் பெண்கள் நடத்தப்படும் இலட்சணம் – ஒரு சான்று !
மோடி அறிவித்த பகட்டான திட்டங்களின் நிலை என்ன ஆனது என்பதற்கு உதாரணமாகியுள்ளது, கர்ப்பிணி பெண்களுக்காக கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம்.