மீப காலமாக ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களிடம் பிரபலாகி வருகிறது ‘ட்ரூ காலர்’ செயலி.  செல்போனுக்கு வரும் பெயர் தெரியாத அழைப்பாளர்களின் உண்மையான பெயர் இந்தச் செயலியை வைத்திருந்தால் அதில் தெரிந்துவிடும்.

ஸ்வீடனைச் சேர்ந்த நிறுவனத்தின் செயலியான ட்ரூ காலர், ஸ்மார்ட் போனில் உள்ள அனைத்து தொடர்பு எண் குறித்த விவரங்கள், இருப்பிடத் தகவல், உங்களுடைய குறுஞ்செய்திகளையும்கூட அறியக்கூடியது. இந்தியாவில் 14 கோடி பயனாளர்கள், அதாவது 60 – 70 சதவீத இந்தியர்கள் இந்தச் செயலியை பயன்படுத்துகிறார்கள்.

இத்தகைய செயலிகள் தொடர்புடைய ஸ்மார்ட் போனில் பதியப்படும் அனைத்து விவரங்களை அறிந்துகொள்வதால்தான், தேவைப்படும்போது விவரங்களை அளிக்கின்றன. இன்னொரு விதமாகச் சொன்னால் நமக்கு யாரிடமிருந்து அழைப்பு வருகிறது என்பதை நாம் அறிந்துகொள்வதற்காக நம்மைப் பற்றிய ஒட்டுமொத்தத் தகவல்களையும் எடுத்துக் கொள்கிறது இந்தச் செயலி.

இப்படி திரட்டப்படும் தகவல்களை இணைய கள்ளச்சந்தையில் ரூ. 1.5 லட்சத்துக்கு இந்த நிறுவனம் விற்றுள்ளதாக எகனாமிக்ஸ் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மற்ற நாடுகளின் பயனாளர்கள் குறித்த விவரங்கள் ரூ. 20 லட்சத்துக்கு விற்கப்படுவதாகவும் அந்தச் செய்தி சொல்கிறது.

இந்தச் செய்தியை மறுத்துள்ள ட்ரூ காலர் நிறுவனம், “சிலர் இதுகுறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தார்கள். ஆனால், பயனாளர்கள் குறித்த விவரங்களோ நிதி மற்றும் பணபரிமாற்ற விவரங்களோ வெளியாகவில்லை என்பதை உறுதிசெய்கிறோம்” என அறிவித்துள்ளது.

ட்ரூ காலர் செயலியைத் தவிர, யூபிஐ (Unified Payment Interface – UPI) என்ற பணபரிமாற்ற சேவையையும் வழங்குகிறது இந்த நிறுவனம். கள்ளச் சந்தையில்  தங்களுடைய பயனாளர்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை என மறுத்துவிட்டு, அதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறுகிறது நிறுவனம்.

படிக்க:
ஐநூறு ரூபாய் கொடுத்தால் இலட்சக்கணக்கான ஆதார் தகவல்கள் கிடைக்கும் !
♦ ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – 23/05/2019 | டவுண்லோடு

ஆனால், ட்ரூ காலர் நிறுவனத்தின் விளக்கத்தில் திருப்தி கொள்ளாத இணைய பாதுகாப்பு நிபுணர்கள், நிறுவனம் திரட்டி வைத்திருக்கும் பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்கள், இருப்பிட விவரங்கள் மற்றும் மொபைல் சேவை வழங்குனர்கள் குறித்த விவரங்களை அவற்றை மீறுவதன் மூலமே பெறமுடியும் என்கிறார்கள்.

நமக்கு தகவல் அளிப்பதாகக்கூறி, நம்மைப் பற்றி ஒட்டுமொத்த தகவல்களையும் கசாக்கியிருக்கிறது ட்ரூ காலர் செயலி. அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆதார் எண் பயனாளர் விவரங்களே விற்கப்பட்ட நாட்டில், பன்னாட்டு நிறுவனங்கள் தகவல்களைத் திருடுவது குறித்து யாரிடம் முறையிட முடியும்!


– அனிதா
நன்றி : பிஸினஸ்டுடே 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க