🔴நேரலை: புத்தக வெளியீட்டு விழா | புதிய ஜனநாயகம் பதிப்பகம்
நேரம்: 11.01.2025 மதியம் 3:30 மணி | இடம்: புதிய ஜனநாயகம் பதிப்பகம், அரங்கு எண் 246
சிவந்த மண் – நூல் அறிமுகம்
சிவந்த மண் நூலானது தமிழில் மார்க்சியத்திற்கான அறிமுக நூலாக அமைகிறது. கம்யூனிசத்தை நேசிக்கும் சக்திகள், குறிப்பாக இளைஞர்கள், இந்நூலை கட்டாயம் வாங்கிப் படித்து தமது நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.
நூல் அறிமுகம் : தென்னிந்தியாவைக் கண்டேன் | மீள்பதிவு
ஆரம்பகால இந்தியப் பொதுவுடைமை இயக்கம் பின்னாளில் நாடாளுமன்ற இயக்கமாகச் சீரழிந்து விட்டாலும், துவக்க காலப் பொதுவுடைமை இயக்கப் போராளிகளின் வரலாறு, தியாகத்திற்கும் போர்க்குணத்திற்கும் சான்று பகர்கிறது.
கல்வி: காவிமயம் – கார்ப்பரேட் மயம்! | சிறுநூல்
கல்வி உரிமைக்காகப் போராடக்கூடிய பல்வேறு அமைப்புகளும், இயக்கங்களும் இணைந்து மக்களிடம் சென்று, களப்போராட்டங்களைக் கட்டியமைக்க உதவும் இலக்கில் இந்த வெளியீட்டைப் பயன்படுத்திக் கொள்ள, எமது புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணியின் சார்பில் அழைப்பு விடுக்கிறோம்.
ஊழிக்காலம் (காலநிலை மாற்றம்: ஒரு விரிவான அறிமுகம்) | நூல் மதிப்புரை
கரிம உமிழ்வுகளைக் கட்டுப்படுத்த தங்களது லாபத்தில் ஒருபகுதியை செலவு செய்ய வேண்டும் என்பதால் காலநிலை மாற்றம் ஒன்றே இல்லை என்பதுபோன்ற பிரசாரத்திற்கு பல மில்லியன் டாலர்களை இந்த பெருநிறுவனங்கள் செலவு செய்கின்றன
ஸ்பார்ட்டகஸ் (அடிமைச் சமுதாய சரித்திர நாவல்) | நூல் அனுபவம்
அடிமைகளைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பதே உயிரோடு வாழ்வது மட்டும் தான். அன்றாடம் எஜமானர்களின் சவுக்கடிகளில் இருந்து தப்பித்தாலே போதுமானது. இதுபோன்ற வரலாற்றுச் சூழல் தான் ஸ்ப்பார்ட்டகஸ்ஸை உருவாக்கியது.
மகத்தான மக்கள் விஞ்ஞானி மேக்நாட் சாகா
பின்தங்கிய சூழ்நிலையில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களிடம் மேக்நாட்டைக் கொண்டுபோய்ச் சேர்த்தால், அவர்கள் எதிர்மறைச் சூழல்களை வென்று எப்படிச் சாதிப்பது என்பதற்கான பாடத்தை அவரது வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வர்.
நூல் அறிமுகம்: ஆர்.எஸ்.எஸ். ஆழமும் அகலமும்
பாசிசத்திற்கு எதிராக களத்தில் நிற்கிற ஜனநாயக சக்திகள் மற்றும் புரட்சிகர சக்திகள் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான கருத்தியல் பிரச்சாரத்திற்கு இந்நூல் பயன்படும்.
நூல் அறிமுகம் : கழிவறை இருக்கை | Dr.அசுரன்
படிப்போம்! பாலின பாகுபாடுகளை கலைக்கக்கூடிய வர்க்கமற்ற நவீன பொதுவுடமை சமுதாயத்தை படைக்க விவாதிப்போம்!
பாட்டாளி வர்க்கத்தை அமைப்பாக்குவதற்கு இதோ ஓர் ஆயுதம்! – நூல் அறிமுகம்
‘சுரண்டுபவர்கள் - சுரண்டப்படுபவர்கள்’ என்ற இரு பிரிவுகளில், அதிலும் குறிப்பாக ‘முதலாளி - தொழிலாளி’ என்ற இரு பெரும் வர்க்க முரண்பாடுகளில் ‘தொழிலாளி வர்க்கம்’ என்ற ஒரு கூறை எடுத்துக் கொண்டு, இந்தியாவில் அதன் நிலைமை குறித்து விரிவாகப் பரிசீலித்திருக்கிறது, இந்நூல்.
புத்தகத்தின் சாரம் : பண்டிட்டுகள் வெளியேற்றம் பற்றி ஒரு காஷ்மீர பண்டிட்டின் பார்வை வழியிலான கதை !
விவேக்கின் மாமா ராம்ஜி பால் வாங்கச் சென்றபோது சி.ஆர்.பி.எஃப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அவர்களிடம் நான் ஒரு பண்டிட் என கூறியபோது, அவரை அடித்தவர்கள் கூறியது: ‘காஷ்மீரில் ஒரு நாய் கூட பாகிஸ்தானி தான்’.
நூல் அறிமுகம் : ஒரு கம்யூனிஸ்ட் கிராமத்தின் கதை | பொதும்பு வீரணன்
ஆர்.எஸ்.எஸ் ஒரு அடி கொடுத்தால் நாம் 100 அடி கொடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. ஒரு கம்யூனிஸ்டுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பொதும்பு தியாகிகள் இந்நூல் மூலம் உணர்த்தும் பாடம் இதுவன்றி வேறென்னவாக இருக்க முடியும்!
நூல் விமர்சனம் : ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் || ஸ்டீபன் ஹாக்கிங் || ராஜசங்கீதன்
interstellar-ல் நாசூக்காக சொல்லப்பட்ட 'பூமியை கைவிட்டு வேறுலகுக்கு சென்று தப்பிக்க வேண்டும்' என்கிற விஷயத்தை, பட்டவர்த்தனமாக விண்வெளியை colonize செய்ய வேண்டுமென காலனியாதிக்கத்துக்கு நியாயம் வேறு கற்பிக்கிறார்.
நூல் விமர்சனம் : வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி || நக்கீரன்
நாவலில் பாலியல் தொழிலாளர்களிடையே நடக்கும் ’பச்சையான உரையாடல்கள்’ உண்மையில் அவர்களது வலிகளையும், துயரங்களையும், வேறு வழியின்றி அவர்கள் பகடிகளாக்கிக் கொள்வதை நம் கண்முன்னே விரித்துச் செல்கிறது.
நூல் அறிமுகம் : மதரிங் எ முஸ்லிம் || MOTHERING A MUSLIM – NAZIA ERUM ||...
உங்கப்பா தலிபானில் இருக்கிறாரா? உங்க அப்பா அம்மாவுக்கு வெடிகுண்டு செய்யத் தெரியுமா? இவையெல்லாம் ஜோக் என்ற பெயரில் பள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் முஸ்லீம் குழந்தைகள் மீது இயல்பாக ஏவும் வன்முறைகள்.