Thursday, January 1, 2026
கள்ளர் பகுதியினர் நடத்திய பிள்ளையார் சதுர்த்திக் கூட்டத்தில் பேசிய எச்சு.ராஜா, “ஈன சாதிப் பயலுகளயெல்லாம் நம்ப பிள்ளக கல்யாணம் பண்றாங்கன்னு கேள்விப்பட்றேன். நீங்கள்லாம் என்ன செய்றீங்ஹ‼” என உசுப்பேத்திவிட்டுப் போயிருக்கிறார். எச்சு.ராஜாவுடன், ‘பசும்பொன் தேசியக் கழகம்’ மற்றும் ஆதிக்க சாதிகளின் ‘இந்து முன்னணி'ப் பிரமுகர்களும் வந்திருக்கின்றனர்.
புதிய கல்விக் கொள்கை 2016! கார்ப்பரேட் மூளை! பார்ப்பனிய யுக்தி! மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை, சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிராக பேரணி-பொதுக்கூட்டம் மாலை 5 மணி செப்டம்பர் 25, 2016 ஞாயிறு போல்நாராயணன் பிள்ளை தெரு, சிதம்பரம்
அரசிடம் கெஞ்சாதே போலீஸ்க்கு அஞ்சாதே எவன் வருவான் பார்ப்போமென்று கடையை உடைத்தார் எரித்தார் போராடக் கற்றுக் கொடுத்த தோழர் தன் இறப்பின் மூலம் போராட விட்டார்.
மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை நகல் எரிப்புப் போராட்டம்! செப்டம்பர் – 20 சென்னையில்: காலை 12 மணி இடம்: அண்ணாசாலை தபால்நிலையம் அருகில். மற்றும் விழுப்புரம்/விருத்தாச்சலம்/திருச்சி/கோவை/நெல்லை.
பார்ப்பனர்களின் ஆன்மீக வாத, இயக்க மறுப்பு வாதம் முறையான அறிவியல் பரிசீலனையை எதிர்கொள்ள முடியாது என்று அவர்களுக்குத் தெரிகிறது. இந்த அறிவு மறுப்புவாத இயக்க மறுப்புக்கு "அறிவியல்" என்று போர்வை போர்த்துவது, உண்மையான அறிவியலின் விமர்சன பூர்வமான ஆய்விலிருந்து அதை தற்காப்பதற்கான இறுதிக் கட்ட முயற்சியே.
குடியாத்தம் அரசுக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேரா ப.சிவக்குமார், அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புச் செயலர் திரு.ரமேஷ் பட்நாயக், அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் திரு.ரமேஷ் உரைகள்
அழுது கதறும் பிள்ளையை அழைத்துக் கொண்டு இறந்த மனைவியின் உடலை தோளிலேயே தூக்கிக்கொண்டு ஊருக்கு பல மைல் நடக்கும் ஒடிசாவின் துயரம் கூட, ரயிலில் அடித்துத் தூக்கி எறியப்பட்ட ஒடிசாவின் பிள்ளைகளுக்கு வாய்க்குமா தெரியவில்லை !
மனநலம் பாதிப்போடு உள்ள மாரியம்மாள், வேலைக்கான கூலியை கிண்டி இரயிலடி டாஸ்மாக்குக்கே சமர்ப்பணம் செய்கிறார். எங்கள் கண் முன்னே காசை வாங்கி கொண்டு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு பறந்து போனார்.
ஒரு கொடுமையை ஏற்கும் சொற்கள் எல்லாக் கொடுமைகளையும் நியாயப்படுத்துகின்றன. எனவே நான் எதைப் பற்றிச் சொன்னாலும் நீ எதைப் பற்றிச் சொன்னாலும் எல்லாவற்றைப் பற்றியும் சொன்னது போலத்தான்.
தமிழகத்தில் நாம் எடுக்கும் போராட்டம் இந்தியாவிற்கே வழிகாட்ட கூடிய கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும். மழையோ, வெயிலோ, காற்றோ, சிறையோ நமக்கு ஒரு நாளும் தடையாக இருக்க முடியாது.
தங்குறத்துக்கு ரூம் இருக்கு. ஆனா நாங்க பெரும்பாலும் ஆஸ்பத்திரி ஸ்டெச்சர்ல இல்ல, வண்டிலதான் தூங்க முடியும். ரூமுக்கு போய் தூங்கல்லாம் நேரமே கெடையாது, குளிச்சு, கக்கூஸ் போக மட்டும் தான் ரூம்.
1965-ல் இந்தித் திணிப்பை விரட்டியடிக்க தமிழகத்தில் இருந்து தீப்பிழம்பாக மாணவர்கள் கிளம்பியதைப் போல இன்று நம்மை நெருங்கி வரும் புதிய கல்விக் கொள்கை – சமஸ்கிருத திணிப்பு எனும் அபாயத்தை முறியடிக்க மாணவர்கள் கொதித்தெழ வேண்டும்.
கம்யூனிஸ்டுகள் இன உணர்வாளர்களாக இருந்து நான் பார்த்ததில்லை. ஆனால் புரட்சிகர அமைப்பினர், சோசலிசம் பேசுகிறவர்கள், மொழி, இன உணர்வாளர்களாக இருக்கிறீர்கள் என்பது பாராட்டுவதற்கு உரியது.
கல்லூரி, பள்ளிகளில் பாடம் நடக்கும் போதோ, வீட்டில் போரடிக்கும் போதோ சினிமா, கிரிக்கெட், உலா என்று அலைபாயும் மாணவர் சமூகம் இப்படி கட்டுக் கோப்பாக புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக அணிவகுப்பதை உளவுத்துறை போலிசார் குறித்து வைத்திருப்பார்கள்.
பாதையோரத்தில் போர்வைக்குள் குடும்பம் நடத்தும் நிலையில் உள்ள மக்களை உருவாக்கி இருக்கும் அரசுக்கு ஒண்ணுக்கு போறதெல்லாம் கண்ணுக்கு தெரியாத பிரச்சனைகளில் ஒன்று

அண்மை பதிவுகள்