இன்றும் உலெகங்கிலும் பாசிச சக்திகளுக்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டத்துக்கு நாஜிகளை முறியடித்த சோவியத் மக்களின் போராட்டம் முன்னுதாரணமாகவும், வழிகாட்டுவதாகவும் உள்ளது.
ஒரு பக்கம் தமிழ்நாடு, வடமாநிலங்களை விட முன்னேறியுள்ளது என்று சொல்லிக் கொண்டாலும், சாதி ஒடுக்குமுறைகளில் முன்னணியிலேயே உள்ளது என்பது சமூகத்தை ஜனநாயகப்படுத்த வேண்டிய தேவையை ஆழமாக உணர்த்துகிறது.
பல நாட்கள் தேங்கி நின்று கொண்டிருந்த கழிவுநீர் அடைப்பை எடுத்துவிட்டதும் விஷவாயு வெளியேறி சிறுவன் பலியானான். குடும்ப வறுமை நிலையை போக்க சென்ற சிறுவனுக்கு வாழ்வே இல்லாமல்போனது.
உனக்கு திப்பு சுல்தானையும் தெரியாது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை திரட்டி கொண்டு போய் திப்புவுக்கு ஆதரவாக போர் செய்த தீரன் சின்னமலையையும் உனக்கு தெரியாது.
சாதியை வைத்து மீண்டும் மக்களை பிளப்பதின் மூலம் தங்கள் உருவாக்க இருக்கும் இந்துராஷ்டிர கட்டமைப்பிற்குள் சூத்திர அடிமைகளையும் நவீன கார்ப்பரேட் அடிமைகளையும் உருவாக்க எத்தனிக்கிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல்.
ஏகாதிபத்திய ஏகபோக நிறுவனங்கள், ஆளும் வர்க்கங்களின் அரசியல், பொருளாதார, சமூக ரீதியான ஆதிக்கத்திற்காகத்தான் இன்று கால்பந்து எனும் விளையாட்டு விளையாடப்படுகிறது.
வண்ண வண்ண ஆடை உடுத்தி செல்வதும், விலையுயர்ந்த வாகனங்களை சாலைகளில் ஓட்டி சாகசம் செய்வதும், பிறரை அடிப்பதும்-துன்புருத்துவதும் தான் கெத்து என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் கெத்து எது?
ரோகித் வெமுலா எதிர்கொண்டதை விட, இப்பொழுது பார்ப்பன இந்து மதவெறி பாசிச ஒடுக்குமுறைகள் முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகரித்துள்ளன. இதை எதிர்கொள்ள ரோகித் வெமுலவை நெஞ்சில் ஏந்துவோம். பாசிசத்துக்கு எதிரான போராட்டங்களை கட்டி அமைப்போம்.
டெல்லி, ஆக்ரா நகரங்களில் சாலையோர வியாபாரம் செய்பவர்கள் கூட பொருட்களை தரையில் போட்டுத்தான் விற்கின்றனர். தரைவிரிப்பு கூட இல்லை. சிறுநீர் துர்நாற்றத்துக்கு இடையில்தான் வியாபாரம் நடக்கிறது.
பாசிசத்திற்கு எதிராக களத்தில் நிற்கிற ஜனநாயக சக்திகள் மற்றும் புரட்சிகர சக்திகள் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான கருத்தியல் பிரச்சாரத்திற்கு இந்நூல் பயன்படும்.
அண்மையில் கடலூருக்கு வந்திருந்த டிடிஎஃப் வாசனை வரவேற்கவும் ஆராதிக்கவும் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் வந்திருந்தனர். திரைப்பட இயக்குனர் ஒருவர் தன்னுடைய அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக டிடிஎஃப் வாசனை அழைத்து இருந்தார்.
டிடிஎஃப் வாசனை காண்பதற்காக நூற்றுக்குமேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் வந்திருந்தனர். அலுவலக திறப்பு நிகழ்ச்சி முடியும் வரை தங்களுடைய வாகனத்தை சாலையின் நடுவிலேயே நிறுத்திவிட்டு...
உனது செம்படை இன்னும் உலக முதலாளித்துவ ஓநாய்களுக்கு அச்சுறுத்துலாகவே இருக்கிறது…ஏனென்றால், நீ ஒரு சர்வாதிகாரி அல்லவா! ஆம், முதலாளித்துவத்தைக் கொல்லவந்த பாட்டாளி வர்க்க பிரதிநிதியின் சர்வாதிகாரி!
பெண்ணை தனிச்சொத்தாகவும் நுகர்வுப் பொருளாகவும் கருதும் இச்சமூகத்தில் நாம் இனியும் வாழமுடியுமா என்ன? முடியாது என்ற முடிவுக்கு வராத வரையில் மூட நம்பிக்கைகளை நம்பிப்பயணம் செய்து படுகுழியில்தான் விழவேண்டும்.
நாம் போராட வேண்டும் என்று பெண்களுக்கு சொல்வது, அதை மீறி வர வேண்டும் என்று நாம் சொல்வது உபதேசமாக இருக்குமே ஒழிய.. அதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே, சமூகத்தை மாற்றுவதே தீர்வாக இருக்கும்.
சாதி ஒழிப்புக்கான வழிகளில் ஒன்று, சுய சாதி மறுப்பு - தீண்டாமை மறுப்பு புரட்சிகர மணவிழாக்கள்தான் என்று புரட்சிகர அமைப்புகள் இந்த மண விழாக்களை திட்டமிட்டு தொடக்கம் முதலே அரங்கேற்றி வருகின்றன.