அவசர அவசரமாக தூக்கிலிட்டு அறைகுறையாக வெட்டியெறிந்து சட்லெஜ் நதியில் கரைத்தார்கள் இதோ அவன் மெரினா கரையில் துளிர்க்கிறான்... அலகாபாத் ஆல்பிரட் பூங்காவில் வீரமரணம் எய்திய ஆசாத்தை வெறிகொண்டு முடித்தார்கள். இதோ அவன் நெடுவாசலில் வந்து நிற்கிறான்.
ஏர்டெல்லு, செல்போனு, டிவின்னு எல்லாம் நாளுக்கு நாளு புதுசு புசுசா மாறுவதால மட்டும் நாகரீகம் வந்து விடாதுங்கிறத அழகப்பனோட அனுபவம் சொல்லுது.
பகத்சிங்கின் முன் சாவர்க்கர் கால் தூசி பெறுவாரா ?. இவருக்குப் பெயர் ‘வீர்’ சாவர்க்கர் என்று ஆர்.எஸ்.எஸ். கும்பல் கூறுகிறது.
மாதவனின் வர்க்கத்தைப் “பன்னாட்டு நிறுவனத்தின் கூலி” என்று நல்லசிவம் சாடுகிறார். ஒண்ணாம் நம்பர் கைக்கூலிக் கட்சியான பாரதீய ஜனதாவின் தலைவர் இல.கணேசனோ படத்தைப் பாராட்டுகிறார்.
ஏண்டா பாவிகளா...முதலுதவி பண்ண வேண்டாமா?...என்ன பண்ணா காப்பத்தலாமுனு சொல்லியிருக்கலாமே...பாம்பு விஷம் எம்பொண்ண சாவடிக்கலடா...உங்களோட அலட்சியம்தான் சாவடிச்சிருக்குடானு கத்திட்டு வந்துட்டேன்.
புருசனா இருக்கான் என்னேரமும் குடிபோதையில. பையன் வண்டிங்களுக்கு கீரீஸ் போடற வேல. அப்பனும் மகனும் மாத்தி மாத்தி போதையில கெடப்பானுங்க.
இப்போது தாலி கட்டிக் கொண்டிருக்கும் பெண்களுக்குச் சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால் அறுத்தெறியட்டும். அல்லது புருஷன் கழுத்திலும் ஒரு கயிறு கட்ட வேண்டும் தங்களை தாங்களே அடிமை என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமூகம் உறுப்படியாகாது !
பணமதிப்பு நீக்கத்தின் மூலமும், பணப் பரிவர்த்தனைக்கு எதிரான வங்கிகளின் அதிரடி நடவடிக்கைகள் மூலமும், இணையம் மற்றும் மொபைல் ஆப்புகளின் வழியான பரிவர்த்தனைகள் மூலமும் நம்மை அமெரிக்காவின் இணைய கண்காணிப்பு வலைக்குள் தள்ளிவிடுகிறது மோடி அரசு.
வீட்டுல நான் ஒரு பொம்பள வயசான அப்பா, முடியாத அண்ண, வெவரம் இல்லா தம்பி, அரியா வயசு கொழந்த எல்லாரையும் அம்போன்னு விட்டுட்டு கல்யாணம் செஞ்சுக்க மனசு வரல!
சர்வதேச எண்ணெய் நிறுவன முதலாளிகளின் ''பெட்ரோல் டெக்'' மாநாட்டில் பேசிய மோடி, “இந்தியாவில் பழைய லைசென்ஸ் நடைமுறைகள் கைவிடப்பட்டு விட்டன. இப்போது அந்நிய நிறுவனங்களை இந்திய நிறுவனங்களைப் போல கையாள்கிறோம். தாராள சலுகை அனுமதிகள் வழங்குகிறோம். எனக் கூவிக் கூவி அழைக்கிறார்.
பெண் எப்போது அடிமையாக்கப்பட்டாள் ? அது தனியாக நடந்த நிகழ்வு அல்ல சமூகமாற்றத்தின் போக்கே. மனிதன் இயற்கையுடன் ஒன்றுபட்டு வாழ்ந்தான் அப்போது எந்த ஏற்றத் தாழ்வும் இல்லை, மனிதனை மனிதன் அடிமைப்படுத்தியதும் இல்லை.
கம்பெனிய எதுத்து கேள்வி கேட்டா அதோட சரி, வேலை கிடைக்காது! அடிமையா இருந்து சாகலாம் என்பதுதான் சிவகாசியில் நிலை! இந்த அரசும் ஓட்டுக்கட்சிகளும் நரபலி வாங்கும் கும்பலின் பின்னேதான் நிற்கின்றனர்.
பெப்சி கோக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று போராடும் உழைக்கும் பெண்களுக்கு எதிராக ‘பெப்சியின் தலைமை அதிகாரியாக தன் உழைப்பால் உயர்ந்திருக்கிறார் இந்திரா நூயி ’ இதுதான் மகளிரின் சிறப்பு என்று வாதிட்டால் என்ன செய்வீர்கள்?
மெரினா போராட்ட களத்தில் முகம் தெரியாத ஆணும் பெண்ணும் கைகோர்த்து நின்ற அந்த நிலையில் ஒரு ஆணின் கையை பிடித்து இருக்கிறோம் என்ற அச்சமோ – ஒரு பெண்ணின் கையை பிடித்து இருக்கிறோம் என்ற எண்ணமோ ஏற்படவில்லை. காரணம் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே இதை சாத்தியப்படுத்திது.
பிராமின்ஸ் தான் சாதி பார்ப்பாங்க. இங்க வராதே, இத்த தொடாதேன்னு. அவங்க வீட்டுல ஒரே நாள்ல செஞ்ச வரைக்கும் போதுமின்னு அந்த நாள் சம்பளத்தை கொடுன்னு வாங்கிட்டு வந்துட்டேன். நமக்கு மரியாதை இல்லாத எடத்துல எப்படி...பா வேலை பாக்குறது?
























