தோழர் சம்பத் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் | மதுரை
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
![]()
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 22, இதழ் 06 | ஏப்ரல் 01-30, 2007 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

இந்துராஷ்டிரக் கனவை அடைவதற்காக ஒரே நாடு – ஒரே மொழி – ஒரே மதம் என்ற பாசிச சர்வாதிகாரத்தை இந்தியாவில் நிறுவிவரும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல், தலித் – பழங்குடியின, கிராமப்புற மக்களின் மத வழிபாட்டை பார்ப்பனமயமாக்கியும் இஸ்லாமிய – கிறித்துவ மத உரிமைகளை பறித்தும் வருகிறது. குறிப்பாக, மசூதிகளுக்கு வெளியில் இஸ்லாமிய மக்களை தொழுகை செய்ய அனுமதிக்காதது, மசூதிகளில் பாங்கு ஓதத் தடை விதிப்பது, இந்து பண்டிகைகளின் போது மசூதிக்கு செல்லக்கூடாது என்று மிரட்டுவது என இஸ்லாமிய மக்களின் மத வழிபாட்டு உரிமைகளை பறித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் “ஐ லவ் முகமது” (I Love Muhammad) என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தியதையும் காவி கும்பல் தடுத்தது. ஆனால், இம்முறை இஸ்லாமியர்கள் கிளர்ந்தெழுந்து போராடியது பா.ஜ.க. கும்பலை பீதியில் ஆழ்த்தியது.
பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் கடந்த செப்டம்பர் 4 மீலாடி நபி நாளன்று இஸ்லாமிய மக்கள் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் “ஐ லவ் முகமது” என்று வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனை சகித்துக்கொள்ள முடியாத சங்கிக் கும்பல் இஸ்லாமிய மக்களிடம் தகராறில் ஈடுபட்டது.
இதனையடுத்து, போலீசால் அப்பெயர் பலகை அகற்றப்பட்டது. செப்டம்பர் 10 அன்று சையத் நகரைச் சேர்ந்த 15 பேர் மீது வகுப்பு நல்லிணக்கத்தை சீர்குலைப்பது, பொது ஒழுங்கை அச்சுறுத்தும் வகையில் புதிய பாரம்பரியத்தை தொடங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் போலீசு வழக்கு பதிந்தது.
இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமிய மக்கள் உன்னாவ், கௌஷம்பி, லக்னோ உள்ளிட்டு உத்தரப்பிரதேசத்தின் பல இடங்களில் தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உத்தராகண்ட், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் இஸ்லாமிய மக்களின் போராட்டம் வெடித்தது. போராட்டக் களங்களில் “ஐ லவ் முகமது” என்ற முழக்க பதாகைகளை ஏந்தி, சங்கி கும்பலின் செவிப்பறைக் கிழிய இஸ்லாமியர்கள் முழக்கமிட்டனர். சமூக வலைதளங்களில் #ஐ_லவ்_முகமது என்ற ஹாஷ்டாக் டிரெண்ட் ஆகியது.
பா.ஜ.க. கும்பல் இஸ்லாமிய மக்களின் அரசியல் – பொருளாதார – மத உரிமைகள், அதிகாரங்களை பறித்து அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கிவரும் நிலையில், இப்போராட்டமானது இஸ்லாமிய மக்களின் மத வழிபாட்டு உரிமைக்கான குரலாகவும், அவர்கள் மீது தொடுக்கப்பட்டுவரும் பாசிச அடக்குமுறைக்கான எதிர்ப்புக் குரலாகவும் அமைந்தது.
மேலும், இஸ்லாமிய மக்களை அச்சத்தில் இறுத்தி வைப்பதற்காக உத்தரப்பிரதேசத்தில் பாசிச யோகி ஆதித்யநாத் அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளை தகர்ப்பதாக இப்போராட்டம் அமைந்தது.
இந்துராஷ்டிரத்தின் சோதனைச்சாலை என்று சங்கிகள் கொக்கரிக்கும் உத்தரப்பிரதேசத்தில் இப்போராட்டம் வெடித்தது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பலுக்கு பீதியூட்டியது. எனவே, நாடு முழுவதும் 4,500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மீது வழக்கு பதிந்தது, 285 இஸ்லாமியர்களை கைது செய்து சிறையிலடைத்தது, இஸ்லாமியத் தலைவர்களை வீட்டு சிறையில் அடைத்தது, போராட்டத்தில் ஈடுபட்டோரின் வீடுகளை புல்டோசரால் இடித்தது, துப்பாக்கிச்சூடு நடத்தியது என போராடிய இஸ்லாமிய மக்கள் மீது மிருகத்தனமான ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது.
ஆனால், இப்பாசிசத் தாக்குதல்கள் இஸ்லாமிய மக்களின் போராட்டத்தையும் எதிர்ப்புணர்வையும் ஒடுக்கிவிடாது. பாசிச மோடி அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான இஸ்லாமியர்களின் போராட்டம் நிச்சயம் காட்டுத்தீயாய் கொழுந்துவிட்டு எறியும். இதற்கு இந்தியா முழுவதுமுள்ள பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் ஆதரவளிக்க வேண்டும்.
![]()
பானு
(புதிய ஜனநாயகம் – நவம்பர் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 22, இதழ் 05 | மார்ச் 01-31, 2007 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 22, இதழ் 04 | பிப்ரவரி 01-28, 2007 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா.லெ)-வின் தலைமைக்குழு உறுப்பினரும் புதிய ஜனநாயகத்தின் முன்னாள் ஆசிரியருமான தோழர் சம்பத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த நவம்பர் 17-ஆம் தேதி சென்னையில் உயிரிழந்தார். தனது வாழ்நாளில் 50 ஆண்டு காலத்தை புரட்சிகர அரசியலுக்கு அர்ப்பணித்துக் கொண்ட தோழர் சம்பத், கட்சி, தோழர்கள், அரசியல், அமைப்புப் பணிகள் என்றே தன் வாழ்நாளை செலவிட்டார்.
தனக்கென எதுவும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல் கம்யூனிஸ்ட்களுக்கே உரிய எளிய வாழ்க்கையை வாழ்ந்தார். தோழர் உயிரிழந்த போது அவரிடம் ஓரிரு சட்டை – பேண்ட்களும், பத்திரிகை வேலைக்கு அடிப்படையான சில பொருட்களுமே இருந்தன.
இவ்வாறு, தனது இறுதி மூச்சிருக்கும் வரை மக்களுக்காகவும் புரட்சிக்காகவும் அயராது உழைத்த தோழர் சம்பத்தின் மறைவானது புரட்சிகர அரசியலுக்கு பேரிழப்பாகும். தோழர் மறைந்தாலும் அவரது உயர்ந்த கம்யூனிசப் பண்புகளையும் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் தோழர்களின் மனதில் உரமாக்கி சென்றுள்ளார்.
இதனை உயர்த்திப்பிடிக்கும் விதமாகவும் தோழர் சம்பத்தை மக்களிடத்தில் கொண்டுசென்று சேர்க்கும் விதமாகவும் ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தோழர் சம்பத் அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்துவது, தோழரின் புகைப்படத்தை வைத்து சிவப்பஞ்சலி செலுத்துவது, சுவரொட்டி ஒட்டுவது என தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, தோழர் சம்பத் உயிரிழந்த அன்றிரவு, சிவப்பஞ்சலி சுவரொட்டிகளை குரோம்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், சென்ட்ரல், சைதாப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, தரமணி, வேளச்சேரி, பூந்தமல்லி, மதுரவாயல் என சென்னை முழுவதும் தோழர்கள் ஒட்டினர். மிக சொற்ப எண்ணிக்கையிலான தோழர்களாக இருந்தாலும் அன்றிரவு முழுவதும் தூங்காமல் சுமார் 1,200 சுவரொட்டிகளை ஒட்டினர். இத்தோழர்கள் யாவரும் முந்தைய நாள் வரையில் தோழர் சம்பத்தின் மருத்துவ சிகிச்சை தொடர்பான வேலைகளிலும், பிற வேலைகளிலும் ஓய்வின்றி ஈடுபட்டிருந்த இளம் தோழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த இரு நாட்களில் தமிழ்நாடு முழுவதுமுள்ள தோழர்கள், மதுரை, கிருஷ்ணகிரி, ஓசூர், கோவை, நெல்லை, தூத்துக்குடி, கடலூர், உளுந்தூர்பேட்டை, உசிலம்பட்டி, ராணிப்பேட்டை, விருத்தாச்சலம், புதுச்சேரி உள்ளிட்ட பல மாவட்ட, நகரப் பகுதிகளில் தோழர் சம்பத்தின் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். உசிலம்பட்டி பகுதியில் அமைப்பின் ஆதரவாளர்களாக இருப்பவர்களும் தாமாக முன்வந்து சுவரொட்டி ஒட்டும் பணியில் உணர்வுப்பூர்வமாக கலந்துகொண்டுள்ளனர்.
குறிப்பாக, ம.க.இ.க. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராமலிங்கத்தின் மகள் சிறுமி தேன்மொழி, மக்கள் அதிகாரக் கழகத்தின் கிருஷ்ணகிரி இணைச்செயலாளர் தோழர் அருணின் மகள் சிறுமி சஞ்சனா ஆகிய இரண்டு இளம் தோழர்களும் தாமாக முன்வந்து, உணர்வுப்பூர்வமாக தோழர் சம்பத்தின் சுவரொட்டிகளை ஒட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் மக்கள், ஜனநாயக சக்திகள், அரசியல் கட்சிகள், இயக்கங்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. அவர்கள் தோழர் சம்பத்தின் மறைவு குறித்து அமைப்புத் தோழர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்து, இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தங்களால் இறுதி அஞ்சலி நிகழ்விற்கு வர முடியாமல் போனதற்காக வருத்தம் தெரிவிப்பதுடன், தோழர் சம்பத் உடனான தங்களின் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், தோழர் சம்பத்தின் சுவரொட்டிகள் இணைய போஸ்டர்களாகவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. அவற்றை பத்தாயிரக்கணக்கானோர் பார்த்திருக்கின்றனர். பின்னூட்டங்களில் ஆயிரக்கணக்காணோர் தோழர் சம்பத் அவர்களுக்கு சிவப்பஞ்சலி செலுத்தியுள்ளனர். பலர் இவற்றை பகிர்ந்து தோழருக்கு சிவப்பஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
***

மதுரை கிழக்கு

மதுரை மேற்கு

உளூந்தூர்பேட்டை

விருத்தாச்சலம்

சென்னை

கோவை

கிருஷ்ணகிரி

புதுச்சேரி

நெல்லை

திருவாரூர்

![]()
வினவு களச்செய்தியாளர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

கடந்த ஐம்பது ஆண்டுகளாக நக்சல்பாரி புரட்சிகர அரசியலுக்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட முதுபெரும் தோழர் சம்பத் என்கிற குமார் (70 வயது) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பலனளிக்காத நிலையில், நவம்பர் 17 அன்று தான் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார்.
மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ)-வின் தலைமைக் குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” சித்தாந்த இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியரான தோழர் சம்பத், தான் கல்லூரி மாணவராக இருந்த போதே நக்சல்பாரி அரசியலை ஏற்று கட்சியில் ஊழியராக செயல்படத் தொடங்கினார். உறவினர்கள், திருமணம் குறித்தெல்லாம் சிந்திக்காமல் கட்சி, தோழர்கள், கட்சி பணிகள் என்று மக்களுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டார். கம்யூனிச பண்புகளுக்கும் உணர்வுகளுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்தார்.
தோழரின் இளமை, சிந்தனை, ஆற்றல், வாழ்க்கை என அனைத்தும் மக்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது போலவே, அவரின் இறப்பிற்கு பிறகும் அவரின் உடலும் இச்சமூகத்திற்கு அதிகபட்ச பயனளிப்பதாக இருக்கும் வகையில், தோழர் சம்பத்தின் உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.
தோழரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நவம்பர் 18 அன்று அவர் வாழ்ந்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் உள்ள இல்லத்தில், செஞ்சட்டை தோழர்கள் புடை சூழ நடைபெற்றது. முழக்கங்கள் விண்ணதிர, செங்கொடி ஏந்திய தோழர்களின் அணிவகுப்புடன் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அதன் பிறகு தோழரின் உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஓமந்தூரார் அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

நவம்பர் 19-ஆம் தேதி அன்று காலை தோழர் சம்பத்தின் உடலை தானம் செய்வதற்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவுற்று ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மருத்துவக் கல்லூரியின் உடற்கூறியல் துறையின் தலைமை மருத்துவரும், நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்களும் ஒன்றிணைந்து தோழரின் உடலைப் பெற்றுக் கொண்டனர். தோழர் சம்பத்தின் உடலுக்கும், தோழரின் உடலை ஒப்படைக்க சென்ற மக்கள் அதிகாரக் கழகத் தோழர்களுக்கும் உரிய மரியாதை செலுத்தினர்.
“மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்பிற்காக, ஆராய்ச்சிக்காக உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளதை நாங்கள் மதிக்கிறோம். எள்ளளவும் உடலை அவமதிக்க மாட்டோம்” என்று மருத்துவக் கல்லூரியைச் சார்ந்தவர்களும் தோழர்களும் கையை உயர்த்தி உறுதிமொழி ஏற்றனர். தோழரின் உடல் தானம் செய்யப்பட்டதற்கான சான்றிதழ் தோழர்களிடம் வழங்கப்பட்டது.



மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன், தோழர் சம்பத் ஐம்பதாண்டுகளாக மக்களுக்கு தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டது பற்றியும், அவர் இறந்தப் பிறகும் அவருடைய உடல் மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக தானம் செய்யப்பட்டுள்ளது குறித்தும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

புதிய ஜனநாயகம் பத்திரிகையின் வெளியீட்டாளரான தோழர் இரா. சண்முகராசு, தோழர் சம்பத் தனது வாழ்க்கையை மகிழ்ச்சியுடனேயே இச்சமூகத்திற்கு அர்ப்பணித்துக் கொண்டதை போலவே, அவரது உடலும் சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் மருத்துவ ஆராய்ச்சிக்காக மகிழ்ச்சியுடன் வழங்கப்படுகிறது என்பதை உணர்த்தும் வகையில், “இன்பத்திற்காக வாழ்ந்தோம்; இன்பத்திற்காகப் போர்க்களம் புகுந்தோம்; இன்பத்திற்காகவே இப்பொழுது இறந்து கொண்டிருக்கிறோம். ஆகவே, துன்பம் எங்கள் பெயரோடு என்றும் இணைக்கப்பட வேண்டாம்” என்ற தோழர் ஜூலியஸ் பூசிக்கின் புகழ்பெற்ற வாசகத்தை வாசித்துக் காட்டினார்.

இறுதியாக, செவ்வணக்கம் செலுத்தப்பட்டு தோழர் சம்பத்தின் உடல் மருத்துவக் கல்லூரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் முன்மாதிரியான நடவடிக்கையும் ஆகும். இது சமூக மாற்றத்தை விரும்பக்கூடிய, அதற்காக போராடிவருகின்ற சக தோழர்களிடம், தாங்களும் தங்கள் உடலை தானம் செய்ய வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
தன் வாழ்நாள் முழுவதும் கம்யூனிசப் பண்புகளுக்கும் உணர்வுக்கும் முன்மாதிரியாக திகழ்ந்த தோழர் சம்பத் தன் மறைவுக்குப் பிறகும் சமூகத்திற்கு எவ்வாறு பயனளிப்பது என்பதற்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.
![]()
வினவு களச்செய்தியாளர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ)-வின் தலைமைக் குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” சித்தாந்த இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் என்கிற குமார் (வயது 70), புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பலனளிக்காத நிலையில், 17.11.2025 அன்று மதியம் 2.15 மணிக்கு சென்னையில் உயிரிழந்தார்.
அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 18-ஆம் தேதி காலையில் 10.30 மணியளவில் அவர் வாழ்ந்த சென்னை குரோம்பேட்டையில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் திருவாரூர் மற்றும் மதுரை மாவட்டத்தில் தோழருக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியில் மக்கள் அதிகாரக் கழகத்தின் சார்பாக 18.11.2025 அன்று நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களின் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தோழருக்கு செவ்வணக்கம் செலுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மதுரை மேற்கு:
20.11.2025 அன்று மதுரை மாவட்டம் மேற்கு பகுதியில் நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களின் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ)-வின் தலைமைக் குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” சித்தாந்த இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் என்கிற குமார் (வயது 70), புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பலனளிக்காத நிலையில், 17.11.2025 அன்று மதியம் 2.15 மணிக்கு சென்னையில் உயிரிழந்தார்.
அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 18-ஆம் தேதி காலையில் 10 மணியளவில் அவர் வாழ்ந்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய தோழர்களின் உரைகளில் உள்ள சில முக்கியமான கருத்துகளை மட்டும் இக்கட்டுரையில் சுருக்கமாக பதிவிடுகிறோம்.


மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா தனது தலைமை உரையில், “தோழர் சம்பத் தன் வாழ்நாளில் தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கு எந்த சமரசமும் இல்லாமல், அர்ப்பணிப்புடன் வாழ்ந்தவர். எந்தவொரு மார்க்சிய குழுக்களும் சொல்லக்கூடிய கருத்துகளை சரியான மா-லெ பார்வையில் உடனடியாக விமர்சிக்கக்கூடிய அரசியல் ஆளுமை கொண்டவர். சொந்த வாழ்க்கையில் எந்தப் பகட்டையும் விரும்பாமல் மிக எளிமையாக வாழ்ந்த தோழர்” என்று தோழரின் கம்யூனிச பண்புகள், அரசியல் ஆளுமை குறித்து பேசினார்.

திரைப்பட இயக்குநர் தோழர் லெனின் பாரதி, “ஐம்பதாண்டு காலம் மா-லெ அரசியலில் உறுதியாக அர்ப்பணிப்புடன் இருந்த தோழர். அவருடைய மறைவு என்பது வருத்தமானது. ஆனால் அவருடைய அர்ப்பணிப்பு உணர்வையும் மா-லெ அரசியலின் சிந்தனை தொடர்ச்சியையும் நாம் கைக்கொண்டு தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு பணி செய்வோம்” என்று உறுதியேற்று தன்னுடைய உரையை சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் குருசாமி தன்னுடைய உரையில், “புரட்சிகர அமைப்புகளில் பல பேர் பயணிக்கிறார்கள்; பலர் பாதியிலேயே சென்று விடுகிறார்கள். இந்த தோழர் இறுதிவரை எந்தவித சலனமுமில்லாமல் நீடித்து நிற்பதற்கு அவரிடம் கம்யூனிசப் பண்புகள் நிறைந்திருந்தன. அமைப்பு பிளவுப்பட்ட போதுகூட, தோழர் எந்த சஞ்சலமும் இல்லாமல், தன்னுடன் பழகியவர்கள் என்று முக்கியத்துவம் கொடுக்காமல் கொள்கைக்காக நின்று அமைப்பை பாதுகாத்தவர்.
நான் கற்ற மா-லெ கருத்துகளில் அதிகமாக அவரிடம் இருந்து கற்றுக்கொண்டது. ஏனென்றால் கற்றுக்கொடுக்கும் சிறந்த ஆசிரியருக்குரிய பண்பைப் பெற்றவர்.
மார்க்சிய கருத்துகளை இழிவுப்படுத்துவது, இனிமேல் மார்க்சியமே செல்லாது என்று பேசுவது; மார்க்சியம் காலாவதியாகிவிட்டது என்று பேசுபவர்களை எள்ளிநகையாடி மார்க்சியத்தை நிலைநாட்டிய சிறந்த தோழர்” என்று தோழர் சம்பத்துடனான தன்னுடைய புரட்சிகர பயணத்தை பகிர்ந்துகொண்டார்.

பு.ஜ.தொ.மு., மாநில ஒருங்கிணைப்புக்குழு தோழர் சுந்தர், தன்னுடைய உரையில், தோழர் சம்பத் ஒரு கம்யூனிஸ்ட் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று தன்னுடைய வாழ்நாளில் வாழ்ந்து காட்டியது குறித்தும் சர்வதேச அரசியல் நிலைமைகளை மிக எளிதாக விளக்குவது குறித்தும் பேசினார்.

தமிழ்த்தேச மக்கள் முன்னணியைச் சார்ந்த தோழர் செந்தில் தன்னுடைய உரையில், “மக்கள் திரள் வழியை முன்வைத்து மா-லெ அமைப்புகளை சி.பி.எம் கட்சியுடன் போட்டிபோடக் கூடிய வகையில் நிறுவனமயப்பட்ட மாபெரும் இயக்கமாக வளர்த்தெடுத்ததில் தோழர் சம்பத்திற்கு மிகப்பெரிய பங்கிருக்கும். தோழர் மறையும் காலத்தில் நாடு மிகப்பெரிய இருள் சூழந்த நிலையில் இருக்கிறது. இந்த கெடுவாய்ப்பான தருணத்தில்தான் நாம் மிகவும் ஈகம் நிறைந்த, அனுபவம் மிகுந்த தோழர்களை இழந்து கொண்டிருக்கிறோம்” என்று பதிவு செய்தார்.

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியைச் சார்ந்த தோழர் தீரன் தன்னுடைய உரையில், “இந்த மரணத்தை தோழர் எதிர்கொண்டதை நாங்கள் கண்கூட பார்த்தோம். “இடையறாத போராட்டம்தான் தோழர் எல்லாம், ஒரு கட்டத்தை தாண்டி வந்துவிட்டோம். தொடர்ந்து போராடுங்கள், புரட்சிக்காக.. நான் இல்லையென்றாலும் பரவாயில்லை நீங்க போராடுங்க” என்ற வார்த்தைகள் அவர் கடைசியாக கூறியவை. எங்களுக்கெல்லாம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு எடுத்த தோழர், மிகச் சிறந்த ஆசிரியர். அவர் கூறியபடி எல்லா சந்தர்ப்பவாத போக்குகளுக்கு எதிராகவும் பு.மா.இ.மு. செயல்படும்” என்று உறுதியேற்றார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராமலிங்கம் தன்னுடைய உரையில், தோழர் சம்பத்தின் மார்க்சியத்தை எளிதாக விளக்குவது, அரசியல் கூர்மை, இளம்தோழர்களை வளர்க்க வேண்டும் என்ற நோக்கம் குறித்தும் பேசினார்.

பு.ஐ.தொ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆ.கா.சிவா தன்னுடைய உரையில், “மார்க்சிய-லெனினியவாதியாக இருப்பதற்கான அடிப்படைகளை நான் அவரிடம் இருந்து கற்றுகொண்டேன். சித்தாந்த நூல்களை இயந்திரகதியாக புரிந்துகொள்ளாமல் அறிவியல்பூர்வமாக எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்பதை விளக்கியவர்” என்று தோழருடனான புரட்சிகர பயணத்தை பகிர்ந்து கொண்டார்.

மக்கள் அதிகாரக் கழகத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் சிவகாமு தன்னுடைய உரையில், தோழர் சம்பத் உடனான தன்னுடைய அமைப்பு அனுபவங்களையும், தன்னுடைய மனதில் நிற்கும் வகையில் தோழர் சம்பத் விளக்கும் திறன் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

தோழர் சம்பத்தின் இறுதி நாட்களில் அவருடன் உடனிருந்த, கழக வழக்கறிஞர் அணி தோழர் ஓவியா, தோழரின் கம்யூனிசப் பண்புகள், மக்களுடன் எளிதாகப் பழகும் பண்புகள், உழைக்கும் மக்கள் மீதான பற்று குறித்து தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

முற்போக்கு இளைஞர் முன்னணியின் தோழர் ஞானம், “தமிழகத்தில் மா-லெ கட்சியின் பாதை தனிநபர் அழித்தொழிப்பை நோக்கி சென்ற நேரத்தில், மேற்கு பிராந்தியக் குழுதான் தனிநபர் அழித்தொழிப்பு வறட்டுத்தனமான நடவடிக்கை, இதற்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சம்மந்தம் கிடையாது. கம்யூனிஸ்ட் கட்சி என்றால் திட்டம், செயல்தந்திரம், அமைப்பு கோட்பாடுகளை எல்லாம் உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் 1970-72 காலகட்டங்களிலேயே மேற்கு பிராந்தியக் குழு ஈடுபட்டது.
1978 காலத்தில் மேற்கு பிராந்தியக் குழு மாநில அமைப்புக் கமிட்டி என்று உருவான காலக்கட்டத்தில் தான் தோழர் சம்பத் இந்த அமைப்பில் இணைகிறார். மக்களை அதிகாரத்திற்காக அணிதிரட்டி அவர்களை புரட்சிகரப் போராட்டங்களில் பங்கெடுக்க வைத்து அதன் தொடர்ச்சியாக ஆயுதப் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் உருவான மாநில அமைப்புக் கமிட்டியில் தோழர் சம்பத் மிகப்பெரும் பங்காற்றினார் என்பதை அறிய முடிகிறது” என்று தன்னுடைய உரையில் மா.அ.க.வில் தோழர் சம்பத்தின் பங்களிப்பு குறித்து பதிவு செய்தார். மேலும், சித்தாந்த போராட்டம் நடத்தி ஒன்றுபட்ட மா-லெ கட்சியை கட்டுவதற்கான அழைப்பு கொடுத்தார்.

மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன், “அமைப்பு பிளவுகளின் கலைப்புவாதிகளும் அராஜவாதிகளும் அமைப்பை ஒழித்துக் கட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட போது, எல்லாவிதமான தனிநபர் கண்ணோட்டத்தையும் ஒழித்துக்கட்டி சரியான அரசியலில் உறுதியாக நின்றவர். ஆசானாக நின்று புதிய வடிவத்தை முன்னிறுத்தி துரோகிகளை எல்லாம் திரைகிழித்து ஒரு வழிகாட்டியாக நின்றவர்தான் தோழர் சம்பத் தத்துவார்த்த ரீதியில் சரியான திசைவழியில் கொண்டுசென்றவர்” என்று தோழர் சம்பத்தின் கலைப்புவாதிகள், அராஜகவாதிகளுக்கு எதிரான போராட்டம் குறித்து பேசினார்.

தோழர்களின் உரைகளுக்கு இடையே மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சிவப்பு அலை கலைக்குழு சார்பாக, “கஷ்டஜூவிகள் நாங்கள் கம்யூனிஸ்டுகள்”, “தோழரே வா” என்ற இரு பாடல்கள் பாடப்பட்டன.

இறுதியாக, “நக்சல்பாரி புரட்சியாளர் மூத்த தோழர் சம்பத்துக்கு செவ்வணக்கம்!, மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை வெல்லட்டும்!, பாட்டாளி வர்க்க விடுதலைக்காக தியாகிகளே, உங்கள் தியாகத்தை மறக்க மாட்டோம், கம்யூனிச செஞ்சுடரை அணையவிடோம், உழைப்பாளர் உள்ளத்தில் உதித்தெழுந்த செங்கொடியை தாழவிடோம், அராஜகவாதத்தையும் கலைப்புவாதத்தையும் திரைகிழிப்போம், மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்” ஆகிய முழக்கங்களுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இதனைத் தொடர்ந்து தோழரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

![]()
வினவு களச்செய்தியாளர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ)-வின் தலைமைக் குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” சித்தாந்த இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் என்கிற குமார் (வயது 70), புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பலனளிக்காத நிலையில், 17.11.2025 அன்று பகல் 2.15 மணிக்கு சென்னையில் உயிரிழந்தார்.
தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 18-ஆம் தேதி காலையில் 10.30 மணியளவில் அவர் வாழ்ந்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரக் கழகம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இவ்வமைப்புகளின் சென்னை, மதுரை, கிருஷ்ணகிரி, கோவை, நெல்லை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத் தோழர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தோழருக்கு சிவப்பஞ்சலி செலுத்தி உரையாற்றினர்.
அவ்வுரைகளில் கம்யூனிசப் பண்புகளுக்கு தோழர் முன்மாதிரியாக திகழ்ந்ததையும், தோழரிடம் இருந்து தாங்கள் கற்றுக்கொண்டதையும், தோழருடனான தங்களுடைய அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டனர். தோழர் ஜம்பதாண்டு காலம் பயணித்த மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை பாதையில் தாங்களும் பயணிக்க உறுதியேற்றனர்.
மேலும், தமிழ்த்தேச மக்கள் முன்னணி, முற்போக்கு இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புத் தோழர்களும் திரைப்பட இயக்குநர், பத்திரிகையாளர் உள்ளிட்ட ஜனநாயக சக்திகளும் கலந்துகொண்டு தோழருக்கு சிவப்பஞ்சலி செலுத்தி உரையாற்றினர். முற்போக்கு இளைஞர் முன்னணியினர் முழக்கமிட்டவாறு வந்து தோழருக்கு செங்கொடி போர்த்தி சிவப்பஞ்சலி செலுத்தி உரையாற்றினர்.
புரட்சிகர இளைஞர் முன்னணி, ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு (CPDR-TN) ஆகிய அமைப்புகளை சார்ந்த தோழர்களும், தோழர் சம்பத்தின் நீண்டகால நண்பர்களும் அமைப்பு பணிகளில் அவரோடு ஒன்றிணைந்து ஈடுபட்டவர்களும் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தோழருக்கு சிவப்பஞ்சலி செலுத்தினர்.
அதன்பிறகு, மதியம் 12 மணியளவில் லட்சுமிபுரம் இல்லத்திலிருந்து குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலை வரை இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது. தோழரின் உடலை தாங்கிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன்னணியில் பு.மா.இ.மு. தோழர்கள் ஊர்வலத்தை வழிநடத்தி சென்றனர். வாகனத்திற்கு பின்னால் மற்ற தோழர்கள் அணிவகுத்து வந்தனர். ஊர்வலத்தில் கலந்துகொண்ட பெரும்பாலான தோழர்கள் செஞ்சட்டை அணிந்து செங்கொடி ஏந்தியிருந்ததால் ஊர்வலமே செந்நிறமாக காட்சியளித்தது.
ஊர்வலத்தில் “நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்துக்கு செவ்வணக்கம்!”, “ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ; அம்பானி-அதானி பாசிசத்தை முறியடிப்போம்”, “வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம்”, “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு கட்டியமைப்போம்” “மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை வெல்லட்டும் வெல்லட்டும்!” உள்ளிட்ட முழக்கங்கள் விண்ணதிர எழுப்பப்பட்டன.
இறுதியாக, ஊர்வலம் நிறைவுற்றவுடன் உடல் தானம் வழங்குவதற்குவதாக தோழரது உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
***



![]()
வினவு களச்செய்தியாளர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா.லெ)-வின் தலைமைக்குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களின் உருவப்படத்தை வெவ்வேறு வடிவங்களில் கீழே கொடுத்துள்ளோம். அவரது நினைவாக பெரிய தட்டிகளாகவும், சுவரொட்டிகளாகவும் பயன்படுத்தத்தக்க வகையில் உயர் தெளிவுத் திறனுடன் (ஹை ரெசொலூஷன் – High Resolution) இப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை சிறிய சுவர்ப் படங்களாகவும், மேசைப் படங்களாகவும் அச்சடித்துப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஒவ்வொரு படத்திற்கும் கீழே உள்ள இணைப்புகளை தொட்டால் படங்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

18.11.2025
அன்பார்ந்த வாசகத் தோழர்களே, உழைக்கும் மக்களே!
மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா-லெ)-வின் தலைமைக் குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” சித்தாந்த இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் என்கிற குமார் (வயது 70), புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பலனளிக்காத நிலையில், நேற்று (17.11.2025) பகல் 2.15 மணிக்கு சென்னையில் உயிரிழந்தார்.
தனது இளமைக்காலம் முதல் கடந்த 50 ஆண்டுகளாக புரட்சிகர அரசியலுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தோழர் சம்பத் அவர்களுக்கு “புதிய ஜனநாயகம்” ஆசிரியர் குழு சார்பாக சிவப்பஞ்சலியைச் செலுத்துகிறோம்.
கடந்த 41 ஆண்டுகளாக மார்க்சிய–லெனினிய புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளிவந்து கொண்டிருக்கும், புதிய ஜனநாயகம் இதழின் ஆசிரியராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக தோழர் சம்பத் செயல்பட்டுள்ளார்.
1985-ஆம் ஆண்டு கருப்பு – வெள்ளை அட்டைப்படத்துடன் வெளிவந்த முதல் இதழ் தொடங்கி பல்வண்ண அட்டைப்படமாக வெளிவருவது வரை எல்லா காலகட்டத்திலும் புதிய ஜனநாயகத்தின் வாழ்விலும் வளர்ச்சியிலும் தோழரின் பங்களிப்பு அளப்பரியது.
தொடக்கத்தில் புதிய ஜனநாயகம் ஒரு ரூபாய் விலையில் 24 பக்கங்களைக் கொண்ட – மாத இருமுறை இதழாக வெளிவந்தது. 15 ஆண்டுகளுக்குள் நிறுவன முறையிலும் சுயமாகவும் இதழை இயங்கச் செய்ததில் தோழர் சம்பத்தின் உழைப்பு மகத்தானது.
குறிப்பாக, புதிய ஜனநாயகத்தின் அட்டைப்படம் இரு வண்ணமாக வெளிவந்த சமயத்தில் அதனை பல வண்ணத்திலானது என்று கருதும் அளவிற்கு, ஒரு வண்ணத்திற்குள்ளேயே பல வண்ணத் தாக்கத்தைக் கொண்டுவர உழைத்துள்ளார். புதிய ஜனநாயகம் இதழின் அட்டைப்படத்தில் கார்ட்டூன்களைக் கொண்டுவருவதற்காக, கார்ட்டூனிஸ்டுகளைக் கண்டறிந்து அவர்களிடம் வரைந்து பெறுவதற்கு பெரும் உழைப்பைச் செலுத்தி இதழின் அட்டையைக் கலைநயத்துடன் கொண்டுவந்துள்ளார்.
குறிப்பாக, பத்திரிகையில் பணியாற்றிய தோழர்களின் எண்ணிக்கை குறைந்து, பத்திரிகை ஆட்பற்றாக்குறையை எதிர்கொண்ட காலங்களில், ஆசிரியர் பணியுடன், அச்சிடல் பணிகள் முடிந்தவுடன் பல ஆயிரம் பத்திரிகைகளைப் பேருந்துகளிலும் இரயில்களிலும் பார்சல் கட்டி அனுப்பி வைப்பது, கணக்குகளைப் பராமரிப்பது போன்ற பணிகளுக்கும் கூடுதல் பொறுப்பெடுத்துக் கொண்டு நிறைவேற்றினார். தொழில்நுட்பம் வளர்ச்சியடையாத அக்காலத்தில் இப்பணிகளை நிறைவேற்றிட கடும் உழைப்பைச் செலுத்திடத் தயங்கியதில்லை.
இப்பணிகளை அதற்குரிய நிறுவனங்களிடம் ஒப்படைத்தால் நிர்வாகச் செலவுகள் அதிகரிக்கும் என்பதால், உடல் உழைப்பு செலுத்தி பத்திரிகையின் நிர்வாகச் செலவுகளை சிக்கனமாக மேற்கொள்ள வேண்டும் என்பதில் தோழர் கண்ணும் கருத்துமாக செயல்படுவார். புதிய இளம் தோழர்கள் பொறுப்பெடுத்துக் கொண்ட காலத்திலும் இவற்றைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
அச்சிடல் பணிகளின் போது அச்சு தெளிவாகப் பதிகிறதா என்பதை பூதக்கண்ணாடியின் மூலம் சோதிப்பதைக் கண்டு அச்சகத் தொழிலாளர்கள் ஆச்சரியப்படுவார்கள். தான் பொறுப்பெடுத்துக் கொண்ட வேலை மீதும், ஏற்றுக்கொண்ட அரசியல் மீதும் தோழர் வைத்திருந்த ஆழ்ந்த பற்றுக்கான அடையாளம் இது. அவர் வேறு பொறுப்புகளுக்கு மாறிய பிறகும் கூட அச்சு, தாள் கொள்முதல் உள்ளிட்ட எல்லா அம்சங்களுக்கும் இடையறாத ஆலோசனைகளை எங்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். நாம் இழைக்கும் ஒவ்வொரு சிறு தவறும் கூட, பத்திரிகையின் மதிப்பைக் குலைத்து விடுமோ என்ற அச்சத்தைக் கொண்டவராகவே இருந்தார்.
அதேபோல், 50-க்கும் மேற்பட்ட முகவர்களிடமிருந்து முறையாக இதழ் தொகையை பெறுவது, நினைவூட்டல் கடிதங்களை அனுப்பி வைப்பது, கணக்கு வழக்குகளை முறையாக முடிப்பது என நிர்வாகத்தை நேர்த்தியாகக் கையாண்டார். ஒரு கம்யூனிஸ்ட், ஒரு சிறந்த நிர்வாகியாக எவ்வாறு இருக்க வேண்டுமென மற்ற தோழர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.
அவ்வப்போது புதிய ஜனநாயகம் இதழை உழைக்கும் மக்களிடம் நேரடியாக விநியோகித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிய வேண்டும் என்பதிலும், இதழ் வந்தவுடன் தோழர்கள் – வாசகர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைக் கேட்டறிவதிலும் தீராத ஆவல் கொண்டவராக இருந்தார். மேலும், புதிய ஜனநாயகம் இதழில் வெளியாகும் கட்டுரைகளின் மீது வாசகர்கள் எழுப்பும் கேள்விகள், சந்தேகங்களுக்கு முறையாக பதில் அனுப்பி வைப்பதிலும் கவனம் செலுத்தினார். ஓர் அரசியல் பத்திரிகைக்கான எழுத்தாளர் என்பவர் அறையில் உட்கார்ந்து கொண்டிராமல், மக்கள் கருத்துகளை கேட்டறிய வேண்டும், நம்முடைய அரசியல் மக்களிடையே எவ்வாறு வினையாற்றுகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில் அவர் கொண்டிருந்த அக்கறை முன்மாதிரியானது.
இன்று அரசியல் களத்தில் செயல்பட்டுவரும் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் புதிய ஜனநாயகத்தின் அறிமுகம் உள்ளதெனில், அதன் அரசியல் உள்ளடக்கம்தான் முக்கியக் காரணம். உள்நாட்டு, சர்வதேச அரசியல் போக்குகள், சமூகப் பொருளாதார நிலைமைகள், மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்களை அலசி ஆராய்ந்து, அவற்றை மாற்றி அமைப்பதற்கான மாற்று அரசியல் பொருளாதாரக் கொள்கைகளையும் செயல் திட்டங்களையும் முன்வைப்பது புதிய ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு. பல நேரங்களில் பல விசயங்கள் குறித்த கட்டுரைகள், பார்வைகள் புதிய ஜனநாயகம் இதழில் வெளியான பிறகே ஆங்கில பத்திரிகைகளில் அவை குறித்த செய்திகள் வெளிவரும் என்னுமளவுக்கு முன்முயற்சியுடன் செயல்பட்டிருக்கிறோம்.
1990-களில் அமல்படுத்தப்பட்ட தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளைத் தோலுரித்துக் காட்டியது, ஈழ விடுதலைப் போராட்டத்தை சரியாக மதிப்பிட்டுத் தொடர்ச்சியாக வினையாற்றியது, ஆர்.எஸ்.எஸ். என்னும் பார்ப்பன பாசிச அமைப்பு 1990-களில் தலைதூக்கிய போதே அதனை சரியாகக் கணித்து தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருவது உள்ளிட்டவை புதிய ஜனநாயகத்தின் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை எல்லாவற்றிலும் தோழர் சம்பத் அளப்பரிய பங்காற்றியுள்ளார்.
தோழர் சம்பத் வேறு பொறுப்புகளுக்குச் சென்ற பிறகும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகளையும், தொழிலாளர் வர்க்கத்தின் நிலை குறித்தான கட்டுரைகளையும் எழுதி புதிய ஜனநாயகம் இதழுக்கு பங்களிப்பு செய்து வந்தார். மறுபுறம், வினவு வலைதளத்திற்கும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகளை எழுதியும் மொழிபெயர்த்தும் அனுப்பி வந்தார்.
இவ்வாறு, புதிய ஜனநாயகம் இதழின் தொடக்கம் முதல் இன்று வரை ஒவ்வொரு நிலையிலும் தோழரின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பு நீக்கமற நிறைந்துள்ளது. தோழரின் இந்த அர்ப்பணிப்பையும் உழைப்பையும், மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தின் மீதான பற்றுறுதியையும் வரித்துக்கொண்டு தொடர்ந்து செயல்பட உறுதியேற்கிறோம்.
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக சிவப்பஞ்சலியைச் செலுத்துகிறோம்.
![]()
ஆசிரியர் குழு, புதிய ஜனநாயகம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
