Friday, June 12, 2026
முகப்பு பதிவு பக்கம் 21

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர் 01-31, 2003 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 19, இதழ் 02 | டிசம்பர் 01-31, 2003 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: டான்சி தீர்ப்பு: சட்டப்பூர்வக் கொள்ளைக்கு ஜே!
  • பத்திரிகைகள் மீது தாக்குதல்: பாசிச ஜெயாவைத் திருத்த முடியுமா?
  • ”சங்கம் வைத்தால் வேலை கிடையாது!” – ருச்சி ஃபுட்ஸ் நிர்வாகத்தின் வெறியாட்டம்
  • ரேசன் கடைக்கு மூடுவிழா
    சாராயக் கடைக்குத் திறப்பு விழா
    இதுதான் பார்ப்பன ஆட்சி
  • வன்கொடுமைக்கு எதிராகக் கலகம் புரிவோம்! – புரட்சிகர அமைப்புகளின் அறைகூவல்
  • ஊர்வலம் – பொதுக்கூட்டத் தடை: நீதிமன்ற பாசிசத்துக்கு ஒத்தூதும் “மார்க்சிஸ்டுகள்”
  • போலி முத்திரைத் தாள் ஊழல்: தெரியாது பார் தேசிய ஒருமைப்பாடு!
  • மகாராஷ்டிரா போலீசின் மறுபக்கம்
  • குற்றவியல் சட்டத் திருத்தப் பரிந்துரை: “ஒரு பொடா சட்டம் போதாது!”
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



தூய்மைப் பணியாளர்கள்: நவீன நகரங்களின் அடித்தளங்கள் | பாகம் 2

“தூய்மைப் பணியாளர்கள்: நவீன நகரங்களின் அடித்தளங்கள்” என்ற தலைப்பில் புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2025 இதழில் (சிறப்பிதழ்) வெளியான இந்த சிறப்புக் கட்டுரை, மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு வினவு தளத்தில் வெளியிடப்படுகிறது. இது கட்டுரையின் இரண்டாவது பாகம்.

***

மனிதக் கழிவுகளை மனிதர்களே
கையினால் அள்ளும் அவலம்

மேலே குறிப்பிட்டது போல, பெரும்பாலும் மலத்தை கையால் அள்ளும் நிலையில்தான் தூய்மைப் பணியாளர்களின் வேலை நிலைமைகள் அமைந்துள்ளன.

நகர்ப்புறங்களில் மிக சொற்பமான மக்களே போதிய சுகாதாரக் கட்டுமானங்களுடன் வீடுகளைக் கட்டுகின்றனர். நகரங்களில் கட்டப்படும் பல வீடுகளில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதியின்றி தெருக்களில் நிறுத்தி வைக்கும் வகையில்தான் பெரும்பாலான வீடுகள் கட்டப்படுகின்றன என்பது நகர விரிவாக்கத்தின் நிலைமையாகும். அது போலத்தான் கழிவுகள் மேலாண்மையும் குப்பை மேலாண்மையும் அமைந்துள்ளன.

புதிய குடியிருப்பு விரிவாக்கப் பகுதிகளுக்கு நீண்ட நாட்கள் கழித்துதான் பாதாள சாக்கடை கட்டுவது, குடிநீர் குழாய் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவையும் அப்பகுதிகளின் எதிர்கால தேவைகளைக் கணக்கில் கொள்ளாமல், தற்காலிகமாக, சடங்கிற்காக மேற்கொள்ளப்படும் பணிகளாகவே இருக்கின்றன. அதனால்தான், பாதாள சாக்கடைகள், நிலத்தடி மின் கேபிள்கள், குடிநீர் குழாய்கள் போன்றவை அடிக்கடி தோண்டி மறுகட்டுமானம் செய்வது நடக்கின்றன.

இதனால், பல நேரங்களில் அனைத்து வகையான குப்பைகளும் கழிவுகளும் பொதுக்கழிவுகளுடனேயே கலக்கப்படுகின்றன. இந்த அராஜகம் அடிப்படை உழைக்கும் மக்கள் வாழும் பகுதியில் இன்னும் மோசமாக இருக்கின்றது. பொதுக் கழிப்பறைகள் கட்டப்படாத நிலையில் தெருக்களில் மலம் கழிப்பது, குப்பைகளில் சிறுநீர் கழிப்பது போன்றவை பெரு நகரங்களில் கூட இன்றும் தொடர்கிறது.

‘கக்கூஸ்’ என்ற ஆவணப்படத்தை இயக்கிய வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான திவ்யபாரதி கூறுகையில், “சானிடேசன் இன்ஜினியரிங் (Sanitation Engineering) படிப்பும் அதற்கென தனியாக துறையும் இல்லாத இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் மனிதக் கழிவுகளை அள்ளுபவர்கள் என்ற முடிவுக்கு வருவதே சரியாக இருக்கும்” என்கிறார். மனிதக் கழிவுகள் மட்டுமன்றி நாய்கள், மாடுகள் உள்ளிட்ட விலங்குகளின் கழிவுகளும் இதில் அடக்கம்.

மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கான வரையறையை சட்டத்தை இயற்றியதன் மூலம் மாற்றிவிட்டதாகவும், எனவே, கையால் மலம் அள்ளும் தொழிலை ஒழித்துவிட்டதாகவும் ஒன்றிய, மாநில அரசுகள் தம்பட்டம் அடிக்கின்றன. இது எவ்வளவு கேலிக்கூத்தானது என்பதை கக்கூஸ் என்ற ஆவணப்படத்தில் திவ்யபாரதி அம்பலப்படுத்தியிருப்பார்.

2019 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் நாடு முழுவதும் சுமார் 377 பேர் சாக்கடை மற்றும் மலக்குழிகளில் ஆபத்தான முறையில் கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டதன் மூலம் மரணமடைந்துள்ளதாக அரசு தரப்பு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உண்மை நிலவரங்கள் இதனைவிடப் பல மடங்கு இருக்கும். 2023-2024 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் 113 மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் பா.ஜ.க. ஆளும் குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் முதலிடத்தில் உள்ளன.

கையினால் மலம் அள்ளுவதைத் தடுக்காத சட்டங்கள்,
கார்ப்பரேட் கொள்ளைக்கு வழிவகுத்த கதை

நமது நாட்டில் பட்டியலின மக்களுக்கு முக்கியமான சட்டங்களாகக் கருதப்படும், சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1976 மற்றும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 ஆகியவை கையினால் மலம் அள்ளுவதைத் தடை செய்யவில்லை; தடுக்கவும் இல்லை.

இந்நிலையில்தான், 1980-களின் பிற்பகுதியில் உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம், உலக நாணய நிதியம் ஆகியவை கல்வி, மருத்துவம், சாலை வசதி போன்ற அடிப்படை சேவைத் துறைகளைத் தனியார்மயமாக்க வேண்டுமென வளரும், பின்தங்கிய நாடுகளின் அரசுகளுக்கு உத்தரவிடத் தொடங்கின.

அதன் ஒரு பகுதியாக தூய்மைப் பணியை நவீனமயமாக்குவதற்கும் அதன் ஊடாக, தனியார்மயமாக்குவதற்கும் உலக சுகாதார நிறுவனமும், ஐக்கிய நாடுகள் சபையும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்தன.

அதன் அடிப்படையில் இந்தியாவில் முதன் முறையாக, கையால் மலம் அள்ளுபவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் உலர் கழிப்பறைகள் கட்டுதல் (தடை) சட்டம் 1993 கொண்டுவரப்பட்டது. இது, சட்டப்பூர்வமாக கையினால் மலம் அள்ளுவதைத் தடை செய்வதாகக் கூறியது. எனினும், இந்தச் சட்டத்தை ஒன்றிய, மாநில அரசுகளே மதிக்கவில்லை.

இந்நிலையில்தான், 2013-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரசு அரசின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில், கையால் மலம் அள்ளுவோர் பணித்தடை மற்றும் மறுவாழ்வுச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் கையினால் மலம் அள்ளுவதைத் தடுப்பது, தூய்மைப் பணியாளர்கள் மறுவாழ்வு தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்களைக் கொடுத்தது.

அதன்பின்னர், 2014-இல் ஆட்சிக்கு வந்த மோடி அரசு, காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி, 2014 அக்டோபர் மாதத்தில் “தூய்மை இந்தியா (சுவச் பாரத்) இயக்கத்தை”த் தொடங்கியது. இது, முதன்மையாக, பின்தங்கிய வடமாநிலங்களில் உள்ள கிராமப்புற மக்கள் மத்தியில் திறந்தவெளி மலம் கழிப்பதற்கு எதிரான பிரச்சாரமாக அமைந்தது. ஆனால், மோடி புகழ் பாடுதல், விளம்பரம் தேடிக்கொள்ளுதல் என்ற வகையில் இந்த இயக்கம் அமைந்ததே அன்றி, கையினால் மலம் அள்ளுவதையும், மலக்குழி மரணங்களையும் தடுக்கவும் இல்லை, குறைக்கவும் இல்லை.

மாறாக, நகராட்சிகள், மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகள், குறிப்பாக, கையினால் மலம் அள்ளும் வகையிலான தூய்மைப் பணிகள் ஒப்பந்த முறையில் தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டன. அதுவரை மாநில அரசு, உள்ளூராட்சி மன்றங்களின் பொறுப்பின் கீழ் செயல்பட்டுவந்த தூய்மைப் பணியாளர்கள், காண்ட்ராக்ட் நிறுவனங்களால் சுரண்டப்பட்டதைத் தாண்டி இந்தச் சட்டம் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக தூய்மைப் பணிகள் அனைத்தும் தனியார், கார்ப்பரேட் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்படலாகின.

இந்நிலையில், மேற்குறிப்பிட்ட சட்டங்களில் வழங்கப்பட்ட அனைத்து விதிமுறைகளைப் பின்பற்றும் கடமையில் இருந்து அரசுகளும் அரசு நிறுவனங்களும் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டன. அதனால், மலக்குழி மரணங்கள், விபத்துகள் தொடர்பான பதிவுகள் அனைத்தும் கைவிடப்பட்டன. இழப்பீடுகள் வழங்குவதும் தனியார் நிறுவனங்களின் பொறுப்பு என்றாக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதும், பணியாளர்களின் பாதுகாப்பு, கையினால் அசுத்தங்களைத் தொடும் நிலைமையை தடுப்பது போன்றவற்றிற்காக அன்றி, இலாப நோக்கில்தான் மேற்கொள்ளப்படுகிறது.

தூய்மை இந்தியா இயக்கத்தின் முதல் கட்டத்தில், ஒதுக்கப்பட்ட நிதியில் குறிப்பிட்ட அளவு கழிவறைகளைக் கட்டும் நோக்கத்தில் செலவிடப்பட்டதே அன்றி, மலக்குழி மரணங்களைத் தடுப்பதற்காகவோ, கையினால் மலம் அள்ளுவதைத் தடுப்பதற்காகவோ செலவிடப்படவில்லை.

தற்போது “தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்) 2.0” அறிவிக்கப்பட்டு, அது 2025-26 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வர இருப்பதாகக் கூறியுள்ளது மோடி அரசு. இந்தத் திட்டத்திற்காக மட்டும் முதல் கட்டத்தைவிட இரண்டரை மடங்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.1,41,600 கோடி ரூபாய் ஆகும். இதுவும் திறந்தவெளி மலம் கழிப்பதைத் தடுப்பது, கழிவறைகளைக் கட்டித் தருவது, பொதுக்கழிவறைகள் கட்டுவதை நோக்கமாகக் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், நவீனமயமாக்கம் என்ற பெயரில், தூய்மைப் பணிகளைக் காண்ட்ராக்ட்மயமாக்குவது மற்றும் கார்ப்பரேட்மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்கு இணையாக, 2023-இல் உச்சநீதிமன்றம், “பாதுகாப்புக் கருவி மற்றும் சுத்தப்படுத்தும் கருவிகளுடன் மனிதர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் மலக்குழி சுத்தம் செய்யும் பணி அனுமதிக்கத்தக்கதே. அபாயகரமான தூய்மைப் பணி செய்பவரும் மற்றும் கையால் மலம் அள்ளுபவரும் மனித மலத்தைக் கையாள்கின்றனர் என்றாலும், இந்தச் சட்டம் அபாயகரமான தூய்மைப் பணிகளுக்கு மட்டுமே அபராதம் விதிக்கிறது; மற்றும் அத்தொழிலாளர்களின் மறுவாழ்விற்கான அடுத்தடுத்த நடவடிக்கைகளை இது வழங்காது” என்று ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கி, 2013 சட்டத்தை முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டது.

இதனால், இத்தனை செலவுகள் செய்தும், கடந்த 10 ஆண்டுகளில் அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி 453 தொழிலாளர்கள் செப்டிக் டேங்க்-களை தூய்மைப்படுத்தும் போது இறந்துள்ளனர். இதில் கையினால் மலம் அள்ளும் பிற பணிகளால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களையும் கணக்கில் கொண்டால், மோடி அரசின் “தூய்மை இந்தியா இயக்கம்” யாருக்கானது என்பதை உணர முடியும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டங்களும்
நவீன கொத்தடிமைத்தனமும்

2014-இல் மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் முன்னிலைக்கு வந்தன. இந்தியாவின் பெருநகரங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு எந்தக் கட்சியாலும் சரியான மாற்றுத் திட்டங்களை முன்வைக்க இயலாததாலும், அதற்கான திறனும் உணர்வும் இல்லாததாலும் ஏகாதிபத்தியங்களால் முன்வைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை மோடி-அமித்ஷா கும்பல் முன்தள்ளியது, அதனை எதிர்க்கட்சிகளும் வரவேற்றன. இந்தியாவின் உள்கட்டமைப்பில் பெரும் மூலதனத்தை இடும் இத்திட்டத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரிதும் வரவேற்றுப் பிரச்சாரம் செய்தன.

அதற்கு முன்பே, பெருநகரங்களில் இருக்கும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் குடியிருக்கும் சேரிப் பகுதிகளைக் கைப்பற்றி, அவர்களை பெருநகரங்களின் தொலைவிலிருக்கும் பகுதிகளுக்கு வெளியேற்றும் வேலையை செய்யத் தொடங்கியிருந்தன. அதனால், குடிசை மாற்று வாரியங்கள் மூலமாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்பட்டு புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன.

இப்போக்கை ஸ்மார்ட் சிட்டி திட்டமானது மேலும் தீவிரமான நிலைக்கு உயர்த்திக்  கொண்டு செல்கிறது. கோவிட் பெருந்தொற்றின் போது இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. சமூகத்தில் உயர் வருவாய் கொண்ட 20 சதவிகித மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கையை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதாவது, அரசு வழங்கும் சட்டப்பூர்வ உரிமைகள் அனைத்தும் இந்த 20 சதவிகித வருவாய் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்றவர்களுக்கு அரசின் சட்ட உரிமைகள் பொருந்தாது.

தொழில்நுட்ப வளர்ச்சியானது நகரத்தின் சேவைகளை சிறப்பாக வழங்கும் என்ற முதலாளித்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கப்படுகின்றன. அதற்கேற்ப, நகரக் கட்டமைப்பு மற்றும் செயலாக்கத்தையும் வடிவமைக்கின்றன.

தெருக்களின் வசதி, பாதாள சாக்கடை வசதி, திடக்கழிவுகள் சேகரித்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல், தண்ணீர் வினியோகம், மின்சாரப் பயன்பாடு உள்ளிட்ட அனைத்தையும் நவீன முறைகளில் மேற்கொள்வதற்கேற்ப புதிய இணையவழி பொருட்கள் (மென்பொருட்கள் மற்றும் வன்பொருட்கள்) உருவாக்கப்படுகின்றன. குப்பை அள்ளும் இயந்திரங்கள் உள்ளிட்ட பலவகை இயந்திரங்களும் வடிவமைக்கப்படுகின்றன. மேலும், நவீன நகரங்கள் எதிர்கொள்ளும் காற்று மாசு, ஒலி மாசு, நீர் மாசுபாடுகளைக் கையாள்வதற்கான திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த ஸ்மார்ட் சிட்டிகளை அமைக்கும் நோக்கத்திலிருந்துதான் தற்போதைய பெருநகரங்கள், கிராமப்புற நகரங்களில் உள்ள அனைத்து சிக்கல்களும் கையாளப்படுகின்றன. சான்றாக, சென்னையில் தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள், அதற்கு அருகில் குடியிருந்தனர். அந்தக் குடியிருப்புகளை அகற்றி நகரத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் கண்ணகி நகருக்கு மாற்றியுள்ளது. ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுக் கல்லூரிகள் நகரத்தின் மையப் பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கத்திலிருந்து சிறிது சிறிதாக அவற்றின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு வருகின்றன. சாலையோரக் கடைகள், சிறுவியாபாரிகளின் கடைகள் எல்லாம் ஆக்கிரமிப்புகள் என்ற பெயரில் அகற்றப்படுகின்றன.

முழுமையான வடிவங்களில் இந்த ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கப்படும் பொழுது தற்போதைய தூய்மைப் பணியாளர்கள் இந்த அளவு எண்ணிக்கையில் தேவைப்பட மாட்டார்கள். அதனால், அவர்கள் எதிர்க்காலத்தில் ஒன்று சேர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு அரசுக்கும் சமூகத்திற்கு ‘நெருக்கடி’, ‘ஆபத்துகளை’ ஏற்படுத்திவிடக் கூடாது என்ற நோக்கத்திலிருந்து இந்த புறநகர் குடியிருப்புகள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படுகின்றன.

அதாவது, எதிர்காலத்தில், உயர் வருவாய் கொண்டவர்களுக்கான நகரமாக தற்போதைய நகரங்களை மாற்றுவது, ஸ்மார்ட் சிட்டிகளை அமைப்பது என்ற நோக்கத்திலிருந்து மட்டுமே தூய்மைப் பணிகளைக் கையாளும் முறைகளும் அணுகப்படுகிறது. மாறாக, தூய்மைப் பணியாளர்களின் நலனிலிருந்து அல்ல.

(தொடரும்…)

பகுதி 1, பகுதி 3


பாரி, தங்கம்

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 01-30, 2003 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 19, இதழ் 01 | நவம்பர் 01-30, 2003 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இலங்கை: அதிகார சண்டையில் பலியாகும் சமாதான முயற்சி
  • எங்கெங்கு காணினும் கட்டப் பஞ்சாயத்து!
  • காவிரி சவடாலும் வறண்டு போனது
  • அமெரிக்கா தயாரித்து வழங்கும் உலகமய எதிர்ப்பு
  • தொழிலாளர் போராட்டத்திற்கு எதிராக புலிகள்
  • கிடா வெட்டும் போராட்டம்: “பார்ப்பனியத்தைப் பலி போடுவோம்!”
  • ஒரு அபலைக்கெதிரான ஈனச் செயல்
  • பாமரர்களின் பக்தியே ஆர்.எஸ்.எஸ்.-இன் அடித்தளம்! | பகுதி 5
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



தூய்மைப் பணியாளர்கள்: நவீன நகரங்களின் அடித்தளங்கள் | பாகம் 1

“தூய்மைப் பணியாளர்கள்: நவீன நகரங்களின் அடித்தளங்கள்” என்ற தலைப்பில் புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2025 இதழில் (சிறப்பிதழ்) வெளியான இந்த சிறப்புக் கட்டுரை, மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு வினவு தளத்தில் வெளியிடப்படுகிறது. இது கட்டுரையின் முதல் பாகம்.

***

ணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் உப்பு உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கும் இச்சமூகம் எந்த அளவிற்கு கடமைப்பட்டுள்ளதோ, அதனைவிட கூடுதலாக, கழிவுகளைத் தூய்மை செய்யும் தொழிலாளர்களுக்குக் கடமைப்பட்டுள்ளது. அத்தொழிலாளர்களின் வேலை நிலைமை ஜனநாயகமாக இருப்பதையும் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் இந்தச் சமூகம் உறுதி செய்ய வேண்டும்.

யார் இந்த தூய்மைப் பணியாளர்கள்?

தூய்மைப் பணியாளர்களைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டுமென்றால், இந்தியா போன்ற ஜனநாயகமும் தொழில்நுட்பமும் வளர்ச்சியடையாத நாடுகளின் பெருநகரங்களின் உருவாக்கத்தையும் அதன் கட்டமைப்பையும் நாம் புரிந்துகொள்வது அவசியமாகும்.

தூய்மைப் பணியாளர்கள் என்பவர்கள் அராஜகமான முறையில் வளர்கின்ற நகரங்களின் ஆக அனைத்துக் கழிவுகளையும் அகற்றுபவர்களாகவும் சுகாதாரக் கட்டமைப்பின் பெரும் சுமையைத் தாங்குபவர்களாகவும் விளங்குகின்றனர்.

மக்கள்தொகை அதிகரித்தல், விவசாயத்தை விட்டு விவசாயிகள் வெளியேற்றப்படுதல், பழங்குடி மக்கள் காடுகளை விட்டு வெளியேற்றப்படுதல் ஆகியவற்றால் தீவிரமடைந்துவரும் நகரமயமாக்கல் என்பது அதன் இயல்பிலேயே அராஜகமான வளர்ச்சியைக் கொண்டுள்ளது. அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும் முன்னரே மக்கள் குடியேற்றம் செய்யப்படுவது அதன் இயல்பாக அமைந்துள்ளது.

இதனால், இந்திய நகரங்கள் என்பதே தொடர்ச்சியாக மறுகட்டமைப்பு செய்யப்படுவதாகவும் விரிவாக்கம் செய்யப்படுவதாகவும் அமைந்துள்ளதை நாம் பார்க்க முடியும். இதனால், மலை போன்று கட்டடக் கழிவுகள் குவிவதையும் நாம் காண்கிறோம்.

இத்துடன், அதிகரித்துவரும் சமூக இடைவெளியானது, சமூக உற்பத்தியின் பெரும் பகுதியை மேட்டுக்குடி சமூகம் நுகர்வதற்கேற்ப இந்நகரங்கள் விரிவாக்கமும் நகர ஆதிக்கமும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், சமூகத்தின் இந்த மேட்டுக்குடி பிரிவின் மூலமாக, பெரும் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்துடன், நகர வளர்ச்சியின் முதுகெலும்பாக இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் குறைவான அளவே நுகர்கின்றனர். அதன் விளைவாக இன்னொரு பகுதி கழிவுகளும் சேருகின்றன.

முதலாளித்துவத்தின் இந்த அராஜகமான வளர்ச்சியானது, சுற்றுச்சூழல் சீர்கேடுகளை வளர்த்துவிட்டு, அதனைக் கட்டுப்படுத்த துப்புக்கெட்டு நிற்பதைப் போன்று, அராஜகமான உற்பத்தியின் விளைவாக உருவாகும் கழிவுகளையும் மேலாண்மை செய்வதில் திறனின்றி நிற்கிறது.

மேலும், சமூகம் முழுவதும் அதிகரித்துவரும் நுகர்வுவெறி – குறிப்பாக, ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும் (Use and throw) வகையிலான பொருட்களின் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்தல், சுற்றுச்சூழலுக்குக் கேடான நெகிழி போன்ற பொருட்களின் பயன்பாடுகள் அதிகரித்தல், வகைவகையான நுகர்வுப்பொருட்கள் அதிகரிப்பு இவற்றின் காரணமாக, ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுடன் இணைந்த வகையில், நகரங்களின் கழிவுகள் மிகப்பிரம்மாண்டமாகப் பெருகுகின்றன.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 2.1 முதல் 2.3 பில்லியன் டன் நகர்ப்புறக் கழிவுகள் உருவாகின்றன என்று உலக வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2050-ஆம் ஆண்டிற்குள் இந்த அளவு 3.4 பில்லியன் டன் முதல் 3.8 பில்லியன் டன்னாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 62 மில்லியன் டன் குப்பைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மிதமிஞ்சிய கழிவு உற்பத்தி, வசதி படைத்த முன்னேறிய பிரிவினருக்கு மட்டுமான கழிவு மேலாண்மை என்ற அராஜகமும் இத்துடன் இணைந்து கொள்கிறது. ஒவ்வொரு பகுதியின் ஆட்சியாளர்களின் தன்மைக்கேற்ப சமூகத்தின் பிற பிரிவு மக்களுக்கான சுகாதார மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த அராஜகத்தின் மொத்த சுமையும் தூய்மைப் பணியாளர்கள் மீது சுமத்தப்பட்டிருப்பதுதான் அவர்களது வாழ்நிலையை மிகவும் அவலம் நிறைந்ததாக மாற்றியுள்ளது.

நாட்டின் மையப்பகுதியாக கருதப்படும் தொழில் நகரங்களில் உற்பத்தி செய்யப்படும் கழிவுகளை அகற்றுவதற்காக அந்நகரங்களின் கடைக்கோடி விளிம்பில், எவ்வித பாதுகாப்புமின்றி, கடுமையான அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் வகையில் தூய்மைப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

நிலக்கரி சுரங்கங்களிலும் அணு உலைகளிலும் பாதுகாப்பற்ற முறையில் வேலை செய்யும் தொழிலாளர்களைப் போல, மிக உயரமான கட்டடங்களில் அந்தரத்தில் கயிறுகளில் தொங்கிக்கொண்டு வேலை செய்யும் கட்டடத் தொழிலாளர்களைப் போல, மிக ஆபத்தான நிலையில் வேலை செய்பவர்கள்தான் தூய்மைப் பணியாளர்கள்.

எனினும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிவான நிலையிலும் அவர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய, அராஜகமான சுகாதாரக் கட்டமைப்பினால் சமூகத்தில் ஏற்படும் மொத்த அழுத்தத்தையும் தாங்குபவர்களாகவும் அவர்களே இருக்கின்றனர்.

எந்தவொரு நாட்டிலும் மக்களுக்கான சுகாதாரக் கட்டமைப்பை உத்தரவாதப்படுத்துவதில் கழிவுகள் மேலாண்மை முக்கியப் பங்காற்றுகிறது. ஆனால், நமது நாட்டில் கழிவுகள் உற்பத்தியாவதிலும் அதனை அப்புறப்படுத்துவதிலும் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் கையாளும் வழிமுறைகளும் கொள்கைகளும் பெரும்பாலும் மக்கள் விரோதமாகவே இருக்கின்றன. கழிவுகளை சுகாதாரமான முறையில் அகற்றுவதற்கும் மறுசுழற்சி செய்வதற்கும் போதிய கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு அரசு நிதி ஒதுக்குவதில்லை; போதுமான அளவு நவீனப்படுத்துவதில்லை; மேற்கொள்ளும் சில நவீனப்படுத்துதல்களும் கார்ப்பரேட் நலனிலிருந்தும் வேண்டாவெறுப்பான முறையிலுமே மேற்கொள்ளப்படுகின்றன.

கழிவு மேலாண்மையில் அரசு காட்டிவரும் அக்கறையின்மையால், பொதுமக்கள் குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரும் சுகாதாரச் சீர்கேட்டாலும் பல்வேறு நோய்த் தொற்றுகளாலும் அவதிப்படுகின்றனர். அவர்களில் இந்தச் சீர்கேடுகளை முன்வரிசையில் நின்று எதிர்கொள்பவர்களாக இருப்பதால், தூய்மைப் பணியாளர்களின் நிலை மிகவும் ஆபத்து நிறைந்ததாக மாறி வருகிறது.

அராஜகமான நகரமயமாக்கம்
அரசின் அலட்சியம்
பொது அறிவில்லாத பொதுமக்கள்
சாதி ஆதிக்க – ஆணாதிக்க மனநிலை

“மலம் அள்ளும் வேலையை நாங்கள் செய்யவில்லை என்றாலும் நகரத்தின் குப்பைகளில் மனித மலம், நாய், மாடுகள் போன்ற விலங்குகளின் கழிவுகளும் கலந்தே இருக்கின்றன. அவற்றைத்தான் நாங்கள் அள்ளுகிறோம்.”

“பயன்படுத்தப்பட்ட நேப்கின்கள், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், குழந்தைகளின் டயப்பர்கள் என அனைத்தையும் சேர்த்தே அள்ளுகிறோம்.”

“திடக்கழிவுகளை அள்ளுவதுதான் எங்களது வேலை என்றாலும் சிறுநீர் கலக்கப்படாத திடக்கழிவுகள் மிகக்குறைவு.”

“உலர்ந்த கழிவுகளை சேகரிக்க வேண்டும்; குப்பைகளைப் பிரிக்க வேண்டுமென்று வழிகாட்டப்படுகிறது. ஐந்து நாட்கள், பத்து நாட்களாகக் கொட்டி வைக்கப்பட்டிருக்கும் வீட்டுக் கழிவுகளில் வெளிப்படும் துர்நாற்றமும் அவற்றில் இருக்கும் சமையல் கழிவுகளும் மிகவும் அருவருப்பானவை.”

“மருத்துவக் கழிவுகள், ஆபத்தான ரசாயனக் கழிவுகள், குப்பைகளில் கொட்டப்படும் கண்ணாடித் துண்டுகள், உடைந்த பாட்டில்கள், துருப்பிடித்த கம்பிகள், துருப்பிடித்த தகரங்கள், உடைந்த பல்புகள் போன்ற அனைத்தும் குப்பைகளில் கலந்துள்ளது. அந்தக் குப்பையைத்தான் அள்ளவேண்டியுள்ளது.”

“டிரான்ஸ்பார்மர்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. அவற்றின் அருகிலேயே குப்பைகளைக் கொட்டுகின்றனர். அக்குப்பைகளைச் சேகரிக்கச் செல்லும்போது மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் பலர், நிரந்தரமாக உடல் உறுப்புகளை இழந்தவர்கள் மேலும் பலர்”

“மழைக்காலங்களில் திடக்கழிவு, திரவக் கழிவு என்றெல்லாம் கிடையாது; சாக்கடைக் கழிவுகளையும் மலங்களையும் சேர்த்துதான் அள்ளுகிறோம்”

“எலி இறந்தாலும் தெருவில்தான், நாய் இறந்தாலும் தெருவில்தான். செத்துக் கிடக்கும் எலி, பூனை, நாய் முதல் கேட்பாரற்ற பிணங்கள் வரை, அவை அழுகி, புழுவைத்து எந்த நிலையில் இருந்தாலும் இறந்த உடல்கள் அனைத்தையும் நாங்கள்தான் அள்ளுகிறோம்.”

“தெருக்களில் முளைக்கும் புல்பூண்டுகள், மர விழுதுகள் முதல் அனைத்தையும் நாங்களே அகற்ற வேண்டும். சுடுகாடுகளிலும் இடுகாடுகளிலும் உள்ள குப்பைகளையும் அங்கே போடப்படும் இறந்தவர்களின் பொருட்களையும் நாங்கள்தான் அப்புறப்படுத்த வேண்டும்.”

“அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், திருவிழா, பண்டிகை என்றால் ஊருக்குத்தான் கொண்டாட்டம், எங்களுக்கு வேலைச்சுமை. திருவிழாவுக்கு முன்னதாக மருந்து போடுவது முதல், திருவிழா முடிந்து குப்பைகளை அகற்றுவது வரை அனைத்தையும் நாங்கள்தான் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல, தீபாவளி குப்பைகளை அள்ளுவது என்பது ஆபத்தானதும் கூட.”

“மழை வெள்ளம் வந்தாலும் கொரோனா போன்ற நோய் தொற்றாக இருந்தாலும் மக்கள் வீட்டிற்குள்ளேயே அடங்கிவிடுவர். நாங்கள்தான் அந்த ஆபத்துகளை எதிர்கொண்டு வேலை செய்ய வேண்டும்.”

இவை, தூய்மைப் பணியாளர்கள் மேற்கொள்ளும் வேலையின் கொடூரத் தன்மை மட்டுமல்ல, இவை அராஜகமான நகரமயமாக்கம், ஜனநாயகப்படுத்தப்படாத சமூகத்தின் இழிந்த நிலைக்கு சாட்சிகள்.

கொரோனா ஊரடங்கின்போது பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து நகரங்களின் தூய்மைப் பணியாளர்கள் தெரிவிக்கும் இந்த பொதுவான அனுபவங்கள், உலகத்தின் நான்காவது பொருளாதாரம் என்று மார்தட்டிக்கொள்ளும் நமது நாட்டின் யோக்கியதையை எடுத்துக்காட்டுகிறது.

பராமரிப்பு இல்லாத பொதுக்கழிவறைகள் ஒருபக்கம், கழிவறைகளுக்கு வெளியே சிறுநீர், மலம் கழிக்கும் அராஜகம் இன்னொரு பக்கம்; பராமரிப்பு இல்லாத குப்பைத் தொட்டிகள் ஒருபக்கம், குப்பைத் தொட்டியில் குப்பைகளைப் போடாமல் கொட்டிவிட்டுச் செல்லும் அராஜகம் இன்னொரு பக்கம் என பொது இடங்களைப் பராமரிப்பதில் அரசின் அலட்சியமும் பொது அறிவு இல்லாமல் பொதுமக்கள் நடந்துகொள்ளும் அராஜகமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து தூய்மைப் பணியாளர்கள் மீதான சுமையாக மாறுகின்றன.

இதுபோல, மலம் அள்ளுதல், குப்பைகளை அள்ளுதல், சாக்கடை தூர்வாருதல், கொசு மருந்து அடித்தல், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல், செப்டிக் டேங்க் சுத்தம் செய்தல், குடிநீர் குழாய்களைப் பராமரித்தல், மழைநீர் வடிகால்களைப் பராமரித்தல், தேசிய நெடுஞ்சாலைகளைத் தூய்மை செய்தல் போன்ற பணிகள் ஒவ்வொன்றிலும் அரசின் அலட்சியங்கள், அராஜகமான நகர மேலாண்மை, பொது அறிவு இல்லாமல் மக்கள் கையாளும் வழிமுறைகள் அனைத்தையும் தூய்மைப் பணியாளர்களே எதிர்கொள்கின்றனர். இந்த துன்பங்களை விவரிக்கத் தொடங்கினால் அது பெரும் தொடர்கதையாக நீளும்.

‘கழிவுகளை சுகாதாரமான முறையில் அகற்றுவது’ என்பதற்குப் பதிலாக ‘கண்களுக்குத் தெரியாமல் மூடி மறைப்பது’ என்பதே ஒன்றிய, மாநில அரசுகளின் கொள்கையாக இருக்கிறது. இந்நிலையில், இத்தகைய பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பது கழிவு மேலாண்மையை மேலும், அபாயகரமான சூழலுக்குத் தள்ளுவதுடன் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக காலங்காலமாக ஒடுக்கப்பட்டுவரும் தூய்மைப் பணியாளர்களை முற்றிலும் கைவிடுவதாகவும் அமைகிறது.

000

இவை அனைத்திலும் மக்களின் பொது அறிவில்லாத செயல்பாடு, அரசின் அலட்சியம் ஆகியவை மட்டுமல்ல, சாதி ஆதிக்க மனநிலை முக்கியமான பங்கு வகிக்கிறது. தாங்கள் வீசும் குப்பைகளை அள்ளுவதற்கு ஒருவர் இருக்கிறார், தான் கழிக்கும் மலத்தை அள்ளுவதற்கு ஒருவர் இருக்கிறார் என்ற மனநிலையும் அல்லது அது பற்றிய அக்கறையில்லாத உணர்வும் இந்நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

குறிப்பாக, சாதி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் தலித் மக்கள், கல்வி கற்க வாய்ப்பில்லாத நிலையில், வேறு தொழில் எதுவும் தெரியாததால் மீண்டும் மீண்டும் தூய்மைப் பணிகளுக்கே திரும்புகின்றனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் பிற வகைகளிலும் குறிப்பிட்ட அளவு பிற சாதியினர் இப்பணிக்கு வந்தாலும் சாதி ரீதியாக இழிவானவர்கள் செய்யும் தொழிலாகவே இத்தூய்மைப் பணியானது சமூகத்தின் பொதுப்புத்தியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது தூய்மை குறித்து அதிக அக்கறை கொள்ளும் ஒவ்வொருவரும் நகரங்களில் தமது வாழ்க்கைமுறையே தூய்மைப் பணியாளர்களுக்கு சுமையை ஏற்படுத்துகிறது என்பதை உணர்வதில்லை. இப்பணியை இழிவானதாகக் கருதும் மனநிலையும் சாதி ஆதிக்க மனநிலையும் இந்த உணர்வின்மைக்கு அடிப்படையான காரணமாக அமைந்துள்ளது.

தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக சாதி ஆதிக்கத்தை வெளிப்படுத்துவதில் அரசே முதல்நிலையில் இருக்கிறது. 2016-இல் சென்னை பெரு மழை வெள்ளப் பணிகளை மேற்கொள்வதற்காக கோவை, நெல்லூர் என தொலைதூரங்களில் இருந்து தூய்மைப் பணியாளர்களைக் குப்பை வண்டிகளில் அழைத்து வந்த கொடுமைதான் இதற்கு சான்றாகும். அத்தொழிலாளர்களுக்கு குப்பை வண்டிகளின் மூலமாகவே குடிநீரும் உணவுப் பொட்டலங்களும் வினியோகம் செய்யப்பட்டது. இவை ஊடகங்களில் வெளிவந்தபோதும், அரசு அதிலிருந்து சிறிதும் பின்வாங்கவில்லை. இது, அரசின் அலட்சியம் மட்டுமல்ல, அரசிலும் அதிகார வர்க்கத்திலும் நிலவும் சாதியாதிக்க மனநிலையின் வெளிப்பாடாகும்.

முக்கியமாக, நாடு முழுவதும் உள்ள தூய்மைப் பணியாளர்களில் 77 சதவிகிதம் பேர் தாழ்த்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களாவர். எனவே, தூய்மைப் பணியாளர்களின் உத்தரவாதமற்ற வாழ்க்கை நிலை என்பது, சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை மென்மேலும் விளிம்பு நிலையில் அழுத்தி வைப்பதற்கான பார்ப்பனிய சாதியாதிக்க கண்ணோட்டத்தை உள்ளடக்கியதாகும்.

000

நமது நாட்டின் தூய்மைப் பணியாளார்களில் பெரும்பான்மையினர் பெண்கள். அதிலும் மலம் அள்ளும் வேலையில் பெண்கள்தான் அதிக அளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கையினால் மலம் அள்ளும் முறையை ஒழித்துவிட்டதாக அரசுகள் கூறிக்கொண்டாலும் எல்லா இடங்களிலும் “பயோ கழிவறைகள்” அமைக்காமையே இதற்கு சிறந்த சான்றாகும். இத்துடன், பாதுகாப்பான கருவிகள் வழங்காமை, முறையாக கழிவறைகளை பராமரிக்காமை, நீரில்லாத கழிவறைகள் போன்றவை, கையினால் மலம் அள்ளும் பணியை தூய்மைப் பணியாளர்கள் மீது இன்னும் சுமத்திதான் உள்ளது. ஆகையால், தூய்மைப் பணியாளர்களில் கீழ் நிலையில் இருக்கும் பெண்களே, கையினால் மலம் அள்ளும் வேலையில் பெரிய அளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மேலும் குறைந்த கூலி என்ற வகையிலும் தூய்மைப் பணியில் பெண்களே அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றனர். பணியிடங்களில் இப்பெண்கள் மீது தொடுக்கப்படும் ஆணாதிக்கப் பாலியல் துன்புறுத்தல்கள் மிக அதிகம். தலித்தாகவும் பெண்ணாகவும் தூய்மைப் பணியைச் செய்பவர்களாகவும் இருப்பதால், ஆணாதிக்கத்தின் அனைத்துக் கொடுமைகளையும் இப்பெண் தொழிலாளர்களே சுமக்கின்றனர்.

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2025 சிறப்பிதழின் பின் அட்டை

நச்சுச் சுழலுக்குள் சிக்கிக் கொண்ட
தூய்மைப் பணியாளர்கள்

“பொதுவில் திடக்கழிவுகளை அள்ளுவதற்கான கருவிகளை மட்டுமே எங்களுக்கு வழங்குகின்றனர். 2013 மனிதக் கழிவுகளை அள்ளும் தடைச் சட்டம் 44 வகையான பாதுகாப்புக் கருவிகளை தூய்மைப் பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்கிறது. ஆனால், நடைமுறையில் கையுறைகளைக் கூட முறையாக வழங்குவதில்லை. அவ்வாறு வழங்கப்படும் கையுறைகள் கூட ஊசி குத்தினாலோ, பிளேடு கீறினாலோ, சேதமடைந்த கண்ணாடிகள் குத்தினாலோ உடனே கிழிந்து விடும் அளவிற்கு தரமற்றவையாக உள்ளன. அந்த ரப்பர் கையுறைகளே மிகவும் மோசமான துர்நாற்றம் வீசுபவையாக உள்ளன” என்கின்றனர் தூய்மைப் பணியாளர்கள்.

மற்றொருபுறம், அபாயகரமான தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுகளும் முறையாக கையாளப்படுவதில்லை. நச்சுத்தன்மை வாய்ந்த, தோல் அரிப்பை உண்டாக்குகின்ற, வெடிக்கும் தன்மை கொண்ட வேதிப்பொருட்கள், ஆபத்தான நோய்களை உண்டாக்கக்கூடிய மருத்துவக் கழிவுகள் ஆகியவை மருத்துவமனைகள் மற்றும் தொழில் நிறுவனங்களால், முறையாக சுத்திகரிக்கப்படாத நிலையில் அப்புறப்படுத்தப்படுகின்றன. இதில் அரசு மருத்துவமனைகளும் அடக்கம் என்பது மிகப்பெரும் அவலநிலையாகும்.

பாம்புகள், பூரான்கள் மற்றும் ஆபத்தான பூச்சிகள் நிறைந்த சாக்கடைகளுக்குள் எவ்வித பாதுகாப்புமின்றி இறங்கி கழிவுகளை அகற்றி வருகின்றனர். இவற்றால் அன்றாடம் தூய்மைப் பணியாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலை செய்து வருகின்றனர்.

மேலும், மழைக்காலங்களில் மின்கசிவினால் தூய்மைப் பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். போதிய படிப்பறிவு மற்றும் விழிப்புணர்வு இல்லாத தொழிலாளர்கள் வெறும் கைகளால் குப்பைகளைக் கையாளும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் சமயத்தில் சென்னை கண்ணகி நகரில் வரலக்ஷ்மி என்ற தூய்மைப் பணியாளர் அதிகாலையில் தூய்மைப் பணி செய்துக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

2009-ஆம் ஆண்டுக்கு முன்னதாக, பணியில் இருக்கும்போதே இறந்த 1,244 சென்னை மாநகராட்சி பணியாளர்களின் வாரிசுகளுக்கு 2009-2010 ஆம் ஆண்டில் பணி வழங்கப்பட்டது. இவ்வாறு இறந்தவர்களில் 924 பேர் தூய்மைப் பணியாளர்களாக இருந்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கையானது, தூய்மைப் பணியின் ஆபத்தை உணர்த்துகிறது.

இத்துடன், மருத்துவக் கழிவுகள் ஏற்படுத்தும் தொற்றுகள் தூய்மைப் பணியாளர்களின் எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்குகின்றன. நமது நாட்டில் ஆண்டுதோறும் 2,71,000 டன் மருத்துவக் கழிவுகள் உற்பத்தியாகின்றன. இவற்றில் 90 சதவிகிதம் மட்டுமே முறையாக அப்புறப்படுத்தப்படுகின்றன. மீதமுள்ள மருத்துவக் கழிவுகள் பொதுக் கழிவுகளுடன் கலக்கப்படுகின்றன. இவற்றில், 15 சதவிகிதம் ஆபத்தான கழிவுகளாகும். இது அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள்தான். உண்மை நிலை இன்னும் அதிகமாகவே இருக்கும்.

இக்குப்பைகளைத் தரம் பிரிப்பதில் ஈடுபடும் தொழிலாளர்கள் பல்வேறு ஆபத்தான நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், நமது நாட்டில் குப்பைகளைக் கையாளும் பணியாளர்களில் 33,800 பேருக்கு எச்.ஐ.வி. தொற்றும், 1,70,000 பேருக்கு ஹெபடைட்டிஸ் பி தொற்றும், 3,15,000 பேருக்கு மஞ்சள் காமாலை (ஹெபடைட்டிஸ் சி) தொற்றும் ஏற்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நோய்த்தொற்றுகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், பொருளாதார நெருக்கடியினாலும் போதிய மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளாமல் ஒரு கட்டத்தில் உயிருக்கே அச்சுறுத்தலான நிலையில் தூய்மைப் பணியாளர்கள் கைவிடப்படுகின்றனர். இவ்வாறு தீவிர நோய் தாக்கம் கொண்ட தொழிலாளர்கள் வேலை செய்ய இயலாமல் சிறிது காலம் வீட்டிலேயே முடங்கிப் போய், விரைவிலேயே மரணமடைந்து விடுகின்றனர்.

குடும்பச் செலவுகளை தாங்கி நிற்கும் இப்பணியாளர்களின் மரணம் இவர்களின் அடுத்த தலைமுறையை வேறு வழியின்றி இத்தொழிலுக்குள் ஆழ்த்துகிறது. ஒரு நச்சுச் சுழலுக்குள் சிக்கிக் கொண்ட இம்மக்கள் அதற்குள்ளேயே தங்களது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் முடித்துக் கொள்கின்றனர்; தலைமுறை தலைமுறையாக இப்பணியிலேயே உழல்கின்றனர்.

(தொடரும்…)

பகுதி 2, பகுதி 3


பாரி, தங்கம்

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



தண்டகாரண்யம் – எழுப்பும் கேள்விகளும், எழுப்பப்பட வேண்டிய விவாதங்களும்

1

டத்தின் முதல் காட்சியில் வரும் வசனத்தில் துணை ராணுவப் படையில் பயிற்சியில் இருக்கும் சிப்பாய்களின் முன்பு பின்வருமாறு ராணுவ அதிகாரி பேசுகிறார். “நம்ம ISGS நாட்டுக்குப் பெரிய சேவைகளைச் செய்து வந்தாலும், இம்மண்ணில் புதைந்துள்ள தங்கம், இரும்பு, பாக்சைட், நிலக்கரி போன்ற கனிம வளங்களை நம்ம நாட்டு முதலாளிகள் மட்டுமல்லாது, உலக நாட்டு முதலாளிகளும் இங்கு தொழில் செய்ய வருவதற்கு (அதாவது, கொள்ளையடிப்பதற்கு) பெரும் தடையாகவும், அச்சுறுத்தலாகவும் இருந்து வரும் நக்சலைட்டுகளை விரட்டியடிக்கும் பணியில் நம்ம ISGS முதன்மையானது. நம்ம ஜார்க்கண்ட் மட்டுமல்லாமல், ஆந்திரா, ஒடிசா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களிலடங்கிய தண்டகாரண்ய காடுகள் முழுக்க நக்சலைட்டுகள் பரவியுள்ளனர். இவர்களை அழிக்கும் பணியில் நீங்கள் எல்லோரும் இணையறது உங்களுக்கும் பெருமை. நம்ம நாட்டுக்கும் பெருமை” என்று அவர் பேசுகிறார்.

இந்த முதல் காட்சியிலேயே அரசு கார்ப்பரேட்டுகளின் சேவகன் என்பதையும், நக்சலைட்டுகள் எதற்காக ஒடுக்கப்படுகிறார்கள் என்பதையும் நேரடியாக அம்பலப்படுத்துகிறார் இயக்குநர் அதியன் ஆதிரை. இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சார்பான படைப்புதான் என்பதை ஒளிவுமறைவின்றி தனது முதல் காட்சியிலேயே கடத்தும் இயக்குநரின் செயல் பாராட்டுக்குரியது.

தண்டகாரண்யம் படம் நக்சலைட்டுகளை ஒழிப்பது என்ற பெயரால் நிகழ்த்தப்படும் போலி மோதல் படுகொலைகளைப் பற்றி கூர்மையாக விமர்சனப்படுத்துகிறது. நக்சல்பாரிகளை கைது செய்து பின்பு சுட்டுக் கொல்லும் போலி மோதல் கொலைகளை நாம் அறிவோம். ஆனால், இங்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து, அப்பாவி இளைஞர்களை ராணுவ ஆசை காட்டி அழைத்து வந்து, அவர்களை சரணடைந்த நக்சலைட்டுகள் என்றும், அவர்களுக்கு மறுவாழ்வு தருகிறோம் என்று கூறி, அவர்களை ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்தி, அதன் பின்பு அவர்களை போலி மோதல் படுகொலை செய்வதை இத்திரைப்படம் பதிவு செய்கிறது. அரசின் நயவஞ்சகத்தையும், அது செய்யும் பயங்கரவாதப் படுகொலைகளையும் காட்சிகளின் மூலம் மக்களுக்குக் கடத்துகிறார் இயக்குநர்.

அப்படி இராணுவத்தில் வேலை கிடைக்கும் என்று ஏமாற்றப்பட்டு, நக்சலைட் மறுவாழ்வு மையம் என்ற பெயரில் நடக்கும் சட்ட விரோத கேம்ப்-பிற்கு அழைத்து செல்லப்படுபவர்களில் ஒருவர்தான் கதையின் முன்னிலை கதாபாத்திரமான முருகன் (கலையரசன்).


படிக்க: ஆபரேஷன் ககர்: பாசிச மோடி அரசின் உள்நாட்டுப் போர்!


கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அஞ்செட்டி மலைக்கிராமப் பகுதியில் உள்ள தொழுவபெட்ட கிராமத்திலிருந்து அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற இலட்சியத்தில் உள்ள பழங்குடி இளைஞர் முருகன். அந்தக் கனவு நிறைவேற வேண்டுமென்பதற்காக அங்கு வனத்துறையில் ரேஞ்சருக்கு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

முருகனின் அண்ணன் சடையன் (தினேஷ்). வனத்துறை தன் மக்களை விதிமுறைகள் என்ற பெயரில் ஒடுக்குவதைக் கேள்வி எழுப்புபவராக, அவர்களைப் பாதுகாப்பவராக இருக்கிறார்.

“இராவோடு இராவா கோட்டையில் உக்காந்துகினு புதுப்புது திட்டம் போடுவீங்க, தூங்கி எழுந்துப் பாத்தா நாங்க குற்றவாளியா, இதான உங்க நியாயம்” என்று போலீசு அதிகாரியிடம் சடையன் எழுப்பும் கேள்வி, கார்ப்பரேட்டுகளின் இயற்கை வளச் சூறையாடலுக்காக வனப் பாதுகாப்பு சட்டங்கள் திருத்தப்படுவதையும், பழங்குடி மக்களும், நக்சல்பாரிகளும் சமூக விரோதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு அன்று ஆபரேசன் க்ரீன் ஹன்ட் என்றும், இன்று ஆபரேசன் ககர் என்ற பெயரிலும் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பதையும் அம்பலப்படுத்தும் கேள்வியாக நாம் உணர வேண்டியுள்ளது.

வனத்துறை போலீசின் பழங்குடி மக்கள் மீதான ஒடுக்குமுறை, வனப்பகுதியில் கஞ்சா பயிரிடும் வியாபாரிக்கு ஆதரவாக வனத்துறை செயல்படுவது, இதனை சடையன் அம்பலப்படுத்துவது, இதனால் போலீசின் வன்முறையை எதிர்கொள்வது, பழங்குடி மக்களின் நிலங்களைப் பறிப்பதற்காகத் துடிக்கும் பண்ணையார் ஒருவனுக்கு போலீசு ஆதரவாகச் செயல்படுவது என்பதன் ஊடாக தொழுவபெட்ட கிராமப் பழங்குடிகளின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்துவதன் மூலம் உண்மைக்கு நெருக்கமாக இருக்கிறது இத்திரைப்படம்.

வனத்துறையின் சமூக விரோதிகளுக்கு ஆதரவான நடவடிக்கையை வெளிக் கொண்டு வந்ததில் சடையனோடு சேர்ந்து முருகனும் செயல்பட்டது தெரிந்து, முருகனை வேலையை விட்டு தூக்குகிறார்கள். அப்போது முருகன் உடன் பணியாற்றும் ஒரு போலீசு “என்னதான் அண்ணன் தம்பியா இருந்தாலும், டிபார்ட்மெண்ட் விசயத்த வெளில சொல்லக் கூடாதுனு உனக்குத் தெரியாதா? இருக்குற வேலைய காப்பாத்திக்க தெரியல” என்று முருகனுக்கு அறிவுரை கூறுகிறார்.

அதிகார வர்க்கத்தின் சமூக விரோதச் செயல்பாடுகளை அங்கிருப்பவர்கள் வெளியில் அம்பலப்படுத்தினால், அப்படிப்பட்டவர்கள் அங்கு நீடிக்க முடியாது என்பதற்கு இந்த வசனம் ஒரு சாட்சி. எத்தனையோ சகாயம்கள் அதற்கு நடைமுறை சாட்சி.


படிக்க: ஆபரேஷன் ககர்:  மாவோயிச அழிப்பா? இயற்கை வள சுரண்டலா?


உளவுத்துறை அதிகாரி ஒருவனின் நயவஞ்சகத்தால் இராணுவத்தில் வேலைக்கு சேரும் ஆசையை ஏற்படுத்திக் கொள்கிறார் முருகன். அதற்கு பணம் கட்ட வேண்டும் என்று கூறி ஏமாற்றுகிறான் அந்த உளவுத்துறை அதிகாரி. முருகனுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக நிலத்தை விற்கிறார்கள் அவனது அப்பாவும், அண்ணன் சடையனும்.

இன்று எல்லாத் துறைகளும் தனியார்மயமாக்கப்பட்டு, அரசு வேலை என்பதே சுருங்கிப் போய் கானல்நீராக மாறியிருக்கும் சூழலில், அரசு வேலைவாய்ப்பு என்பது அதிகாரிகளின் கொழுத்த ஊழலை திருப்திப்படுத்திப் படுத்தினால்தான் சாத்தியமாகும் என்ற நிலையில், தன் பிள்ளைகளை எப்படியாவது அரசு வேலைக்குச் சேர்த்து விட வேண்டும் என்பதற்காகத் துயருறும் ஆயிரக்கணக்கான பெற்றோரின் அவலம் கண்முன்னே வந்து செல்கிறது.

சடையன் ஏன் நக்சல்பாரியாக மாறுகிறான், நக்சல்பாரிகள் யாருக்காக போராடுகிறார்கள், அரசுக்கும் மக்களுக்குமான உறவு, கார்ப்பரேட்டுகளுக்கும் அரசுக்குமான உறவு ஆகியவற்றைக் காட்சிப்படுத்துவதில் இன்னும் அழுத்தம் இருந்திருக்க வேண்டும் என்பது போன்ற குறைகள் படத்தில் உள்ளதையும் உணர முடிகிறது.

அதைத் தாண்டி, நக்சல் ஒழிப்பு என்ற பெயரில் நடத்தப்படும் போலி மோதல் படுகொலைகள் பற்றி அழுத்தமாக இத்திரைப்படம் வெளிக்கொணர்ந்து அரசு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியுள்ளதும், அரசு மக்களுக்கானதாக இல்லை என்பதை பல்வேறு காட்சிகளின் மூலம், வசனங்களின் மூலம் நிறுவ இயக்குநர் எடுத்துக் கொண்ட முயற்சியும் முக்கியமானது.

கதாபாத்திரங்களை வடிவமைப்பதிலும் திரைக்கதையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் அரசின் கோர முகத்தை பார்வையாளர்களின் மனதில் இன்னும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்க முடியும்.

கனிம வளக் கொள்ளைக்காக பழங்குடிகள் மற்றும் மாவோயிஸ்டுகள் மீதான ஆபரேசன் ககர் என்ற அரச பயங்கரவாதம் அரங்கேறிவரும் இச்சூழலில் இத்திரைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.

அதேபோது, தண்டகாரண்யம் திரைப்படம் முடியும் இடத்திலிருந்து, நாம் தீவிரமான விவாதத்தைத் தொடங்க வேண்டியுள்ளது. அரசே சட்டவிரோதமாகச் செயல்படும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் சட்ட வரம்பிற்குள் மட்டும் நின்று போலி மோதல் படுகொலைகளையோ, காடுகளும், மலைகளும் அழிக்கப்படுவதையோ, பழங்குடிகள் ஒடுக்கப்படுவதையோ ஒருபோதும் தடுக்க முடியாது.

எனவே, அரசின் கார்ப்பரேட் கொள்கைகளுக்கு மாற்றாக, நாம் மாற்று அரசியல், பொருளாதாரக் கொள்கைகளை முன்வைத்து மக்கள் எழுச்சியைக் கட்டியமைத்தே ஆக வேண்டியுள்ளது.

அப்படிப்பட்ட மக்கள் எழுச்சியின் ஊடாக, உண்மையில் மக்களைப் பாதுகாக்கும், மக்கள் அதிகாரத்தை நிறுவுகின்ற மாற்றுக் கட்டமைப்பை, ஒரு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை, நிறுவுவது குறித்தான விவாதத்தைத் தீவிரமாக முன்னெடுப்பது என்பதே தண்டகாரண்யம் முடியும் இடத்திலிருந்து நாம் தொடங்க வேண்டியதாகும்.


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | அக்டோபர் 01-31, 2003 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 18, இதழ் 12 | அக்டோபர் 01-31, 2003 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: உச்சநீதி மன்ற பாசிசத்தின் புதிய வெளிப்பாடு
  • பயங்கரவாத பீதியில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள்
  • இறால் பண்ணைகள் அழிப்பு: கிள்ளை கிராம மக்களின் எழுச்சி
  • உ.பி.யில் முலாயம் ஆட்சி: போலி மதச்சார்பின்மை வேடமும் கலைந்தது
  • “கலாச்சார காவலன்” – தமிழக போலீசின் புதிய அவதாரம்
  • கர்நாடக விவசாயிகள் தற்கொலை: தாராளமய பயங்கரவாதம்
  • கான்கன் மாநாடு: வல்லரசுகளின் திட்டம் மண்ணைக் கவ்வியது
  • கொடி கட்டிப் பறக்குதடா கல்வி வியாபாரம்
  • பாமரர்களின் பக்தியே ஆர்.எஸ்.எஸ்.-இன் அடித்தளம்!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர் 01-30, 2003 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 18, இதழ் 11 | செப்டம்பர் 01-30, 2003 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: நீதிமன்ற பாசிசம்: சட்டவாதத்தில் சிக்கிய சங்கங்கள்
  • கோக் – பெப்சி போதையில் ஆட்சியாளர்கள்
  • பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி எழுதிய தீர்ப்பு
  • இந்தியா திவாலாகிறது – உலக வங்கியின் எச்சரிக்கை
  • கிசுகிசு பத்திரிகைகளின் எழுத்து விபச்சாரம்
  • ஈராக்: ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர் வலுக்கிறது
  • லைபீரியா: சாவு வியாபாரிகள் திணித்த ‘சமாதானம்’
  • பாமரர்களின் பக்தியே ஆர்.எஸ்.எஸ்.-இன் அடித்தளம்!
  • கல்வி அதிகாரிகளைப் பணிய வைத்த வி.வி.மு.வின் போராட்டம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



கேளாத செவிகள் கேட்கட்டும்.. | பகத்சிங் படுகேஷ்வர் தத்துக்கு எழுதிய கடிதம்

மத்திய சிறைச்சாலை, லாகூர்,
நவம்பர், 1930

ன்புள்ள சகோதரனுக்கு,

தீர்ப்பு கூறப்பட்டு விட்டது. எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சிறையறைகளில் என்னைத்தவிர தூக்கிலிடப்படுவதற்காக காத்திருக்கும் கைதிகள் பலர் இருக்கின்றனர். எப்படியாவது தூக்குக் கயிற்றில் இருந்து தப்பிவிட வேண்டும் என்பதே இவர்களின் ஒரே பிரார்த்தனை. ஒரு வேளை அவர்களுள் நான் ஒருவன் மட்டுமே என்னுடைய கொள்கைகளுக்காக தூக்குமரத்தை ஆரத்தழுவும் பெரும் பேறை அடையப்போகும் அந்த நாளுக்காக ஆவலோடு காத்திருக்கும் மனிதனாக இருக்கலாம்.

நான் அக மகிழ்வோடு தூக்குமேடையில் தாவியேறுவேன். இலட்சியத்திற்காக தங்களது இன்னுயிரையும் தியாகம் செய்யும் புரட்சியாளர்களின் நெஞ்சுரம் எப்படிப்பட்டது என்று இந்த உலகத்திற்குக் காட்டுவேன்.

நான் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளேன். ஆனால் உனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீ உயிருடன் வாழப் போகிறாய். நீ வாழும் போது, புரட்சியாளர்கள் தங்களது இலட்சியங்களுக்காக உயிரை விடுபவர்கள் மட்டுமல்ல; எத்தனை பேரிடர்களையும் வீரத்துடன் தாங்கவும் கூடியவர்கள் என்பதை இந்த உலகத்திற்கு நீ காட்ட வேண்டும். உலகத்தின் சிரமங்களில் இருந்து தப்பிச் செல்வதற்கானதொரு வழியாக மரணம் இருக்கக் கூடாது. எதிர்பாராத வகையில் தூக்குமரத்தில் இருந்து தப்பிய புரட்சியாளர்கள், தாம் இலட்சியத்திற்காக தூக்குமரத்தை தழுவக்கூடியவர்கள் மட்டுமல்ல, இரகசியமான அழுக்கடைந்த சிறையறைகளில் செய்யப்படும் மிக மோசமான சித்திரவதைகளையும் தாங்கக் கூடியவர்கள் என்பதை இந்த உலகிற்கு வாழ்ந்து காட்ட வேண்டும்.

உன்
பகத்சிங்.

ஆதாரம்: ”தியாகி. பகத்சிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்” சிவவர்மா, 1986 வெளியீடு.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஆகஸ்ட் 01-31, 2003 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 18, இதழ் 10 | ஆகஸ்ட் 01-31, 2003 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: நிழல் மனிதர்களும் உளவுத் துறையும்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • உலக வங்கி உத்தரவில் அமலாகிறது புதிய தொழிலுறவுக் கொள்கை
  • வாஜ்பாயியின் முகமும் முகமூடியும்
  • குஜராத் இனப்படுகொலை வழக்குகள்: தயார் நிலையில் தீர்ப்பு
  • விதை நெல்லுக்கும் வந்தது ஆபத்து!
  • வறட்சி – விவசாயிகளுக்கு நிவாரணம் – யாருக்கு?
  • தொழிற்சங்க தரகர்களின் பிடியில் கோவை தொழிலாளர்கள்
  • பாமரர்களின் பக்தியே ஆர்.எஸ்.எஸ்.-இன் அடித்தளம்! | தொடர் கட்டுரை: பகுதி 2
  • கும்பக்குடியில் கள்ளர் சாதிவெறி அட்டூழியம்
  • மாமூல் கொடுக்க மறுத்த சாராய வியாபாரி கொலை!
    கலால் பிரிவு போலீசாரின் பயங்கரவாதம்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை 01-31, 2003 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 18, இதழ் 9 | ஜூலை 01-31, 2003 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: சமூக விரோதிகளின் கூடாரமாக சுயநிதிக் கல்வி நிறுவனங்கள்
  • பாமரர்களின் பக்தியே ஆர்.எஸ்.எஸ்.-இன் அடித்தளம்!
  • அயோத்தி சமரசம்: ஜெயேந்திரனின் கரசேவை
  • தருமபுரியில் காலரா சாவுகள்: அரசின் கொலை!
  • ஜெயா ஆட்சி
    உல்லாசம்-ஊதாரித்தனம்-ஊழல்
  • கோகோ-கோலாவின் தண்ணீர்க் கொள்ளை
  • ‘காணாமல்’ போகும் காசுமீரிகள்
  • ஈராக்: புஷ்-பிளேரின் “பேரழிவுப் பொய்”
  • போலீசு அதிகாரி பிரேம்குமாருக்கு தரும அடி!
    மதுரை வழக்குரைஞர்கள் வழங்கிய தீர்ப்பு!
  • இவரல்லவோ வீராங்கனை!
  • ஓசூர்: நவீன கொத்தடிமைகளின் நகரம்
  • ஏகாதிபத்திய பொறியில் சிக்கிய புலிகள்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



அவன் ஜென் சி, நீ பகத்சிங்!

(கட்டுரையை பி.டி.எஃப் வடிவில் டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்)

அவன் ஜென் சி, நீ பகத்சிங்!

வனை உனக்குத் தெரிந்திருக்கலாம்,
அதில் வியப்பேதுமில்லை.
உன்னை அவனுக்குத் தெரியும்,
அதற்கு
நீ வியப்படையத் தேவையில்லை,
ஏனென்றால்,
அவன் பகத்சிங்!

அவனுக்கும் உனக்கும்
கால இடைவெளி
ஒரு நூற்றாண்டு.
அவனையும் உன்னையும்
சூழ்ந்திருக்கும்
அரசியல் இடைவெளியோ
சில நூலிழைகள்!

இதைப் புரிந்து கொள்ளும் போது
நீ வியப்படையப் போவதில்லை.

000

1907
அப்போதுதான் அவன் பிறந்தான்.
அப்பனும் சித்தப்பனும் சிறைக்கொட்டடியில்.
மத அடிப்படையில் வங்கப் பிரிவினை
அதனை எதிர்த்துப் போராடியது
அவர்கள் செய்த ‘குற்றம்’

1913
அப்போது அவன் சிறுபிள்ளை.
தோட்டத்தில் துப்பாக்கியை நட்டு
விளையாடிக் கொண்டிருந்தான்.
“எதற்கு துப்பாக்கியைப் புதைக்கிறாய்?”
இது தாத்தா கேட்டது.
“விடுதலைப் போராட்டத்திற்கு
துப்பாக்கிகள் வேண்டுமே,
அதற்காக நடுகிறேன்”.
இந்த பதில்,
அவனிடம் ஊற்றெடுத்துக் கொண்டிருந்த
விடுதலை உணர்வின் வெளிப்பாடு.

1915
அவன் விடுதலைப் போராட்டத்திற்கான
மாணவர் சங்கத்தில்
உறுப்பினரானான்!
அப்போது அவனுக்கு வயது 8.

1919
ரௌலட் சட்டத்திற்கு எதிரான
போராட்டங்கள் அரங்கேறின.
ஏப்ரல் 13 ஜாலியன் வாலாபாக்கில்
பச்சைப் படுகொலை அரங்கேறியது.
உடனே அமிர்தசரஸ் சென்றான்.
அப்போது அவனுக்கு வயது 12.
ரத்தம் தோய்ந்த மண்ணை
வீட்டுக்கு எடுத்து வந்தான்.
அவற்றியே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
மக்களின் குமுறல்
மனதில் ஒலித்துக் கொண்டிருந்தது.
பல நாட்கள் உறங்காமல் தவித்தான்.
அவனுக்குள் குமுறிக் கொண்டிருந்தது
வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு.

1922
ஒத்துழையாமை இயக்கத்தை
திருப்பப் பெற்றார் காந்தி.
காந்தியின் மீதிருந்த மதிப்பை
திருப்பிக் கொண்டான் பகத்சிங்.
அரசியலில் துரோகத்தை
உணர்ந்த தருணமது.
அப்போது அவனுக்கு வயது 15.

1924
கான்பூருக்குச் சென்றான்.
அக்காலத்தில்
அவன் அரசியல் கட்டுரையாளன்.
விடுதலை உணர்வூட்டும்
கட்டுரைகளை எழுதினான்.
அப்போது அவன் கட்டிய மாணவர் அமைப்பு (சபா)
இந்துஸ்தான் குடியரசு சபா.
அது, அவன் அமைப்பாளனாக வளர்ந்த காலம்.

1927 அக்டோபர்,
தசரா குண்டுவெடிப்பில்
மக்கள் பலர் பலியாகினர்.
தோழர்கள் மீது
பொய்வழக்கைப் போட்டது,
பிரிட்டீஷ் போலீசு.
பகத்சிங் சிறை சென்றான்,
குற்றம் நிரூபிக்கப்படவில்லை,
விடுதலையானான்.
அவனது தீவிரமான செயல்பாட்டின்
எதிர்வினையை உணர்ந்த தருணமது.

1928 ஜூலை,
டெல்லியில் மாநாடு.
புரட்சிக் குழுக்களை ஒருங்கிணைத்தான்.
இங்குதான்
இந்துஸ்தான் குடியரசு சபா
இந்துஸ்தான் சோசலிச குடியரசு சபாவாக
பரிணமித்தது.
அவன் மார்க்சிய-லெனினிய
சித்தாந்ததைத் தழுவினான்.
இது, அவன் கம்யூனிஸ்ட் தலைவராக பரிணமித்த காலம்.
இப்போது அவனுக்கு வயது, 21.

இதோ,
இந்த கட்சியின் மத்திய செயற்குழு.
அக்குழுவில்
அவனுடன்
ஆசாத், சுகதேவ் மற்றும்
பல தோழர்கள்.
அதன் கீழ் ஒரு படை.
அதன், காமாண்டராக ஆசாத்.
“சைமன் கமிசனுக்கு எதிராக
மக்கள் இயக்கத்தைத் துவங்குதல்”
இது, அதன் உடனடி அரசியல் நடவடிக்கை.
தீர்மானத்தை செயலுக்குக் கொண்டு சென்றான்.

1928 அக்டோபர் 30
லாலா லஜபதிராய் தலைமையில்
அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்.
பகத்சிங்கும் அவன் தோழர்களும்
கருப்புக் கொடிகளுடன் முன்னணியில்.
“சைமனே திரும்பிப் போ!
புரட்சி ஓங்குக!”
இது, அவர்களின் முழக்கங்கள்!

ஸ்காட்,
போலீசு கண்காணிப்பாளர்.
லஜபதிராயை மிருகத்தனமாக தாக்கினான்.
17 நாட்கள் உயிருக்குப் போராடி
நவம்பர் 17, லஜபதிராய் மறைந்தார்.
நாடே கொந்தளித்தது.
பகத்சிங்கும் அவனது தோழர்களும்
ஸ்காட்டுக்கு நாள் குறித்தனர்.
அது, டிசம்பர் 17.
குறி தவறியது
சாண்டர்சன் கொல்லப்பட்டான்.
அவன் துணைக் கண்காணிப்பாளர்.

ஓரிரு நாட்களில்
தோழர்களின் துண்டுபிரசுரப் பிரச்சாரம்.
“லாலாஜியின் மறைவுக்கு பழித் தீர்ப்பு,
நாட்டிற்கு நேர்ந்த அவமானம் துடைப்பு!”
நாடெங்கும் பரவியது இச்செய்தி!
ஆம், அவனும் அவனது தோழர்களும்
நாடறிந்த தலைவர்களான காலமது.
அப்போது, அவன்
21 வயதைக் கடந்து கொண்டிருந்தான்.

1929, ஏப்ரல் 8,
நாடாளுமன்ற அவை நிறைந்திருந்தது.
பொது பாதுகாப்பு மசோதா,
தொழில் தகராறு மசோதா
தாக்கல் செய்யப்பட்டன.
கருத்துரிமையை நசுக்கவும்
தொழிலாளர்களைக் கொத்தடிமையாக்கவும்
கொண்டுவரப்பட்ட மசோதாக்கள் இவை.

“பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக,
புரட்சி ஓங்குக!”
பகத்சிங்கும் படுகேஷ்வர் தத்தும்
நாடாளுமன்றத்தில் முழங்கிய  முழக்கங்கள்.
நாடாளுமன்ற மண்டபத்தின் மத்தியில்
வெடிகுண்டுகளை வீசி முழங்கிய முழக்கங்கள்.

“கேளாத செவிகள் கேட்கட்டும்”
இது, அவர்கள் பறக்கவிட்ட
துண்டு பிரசுரத்தின் தலைப்பு!
“அடக்குமுறைகள், முடிவுறப் போவதில்லை,
விடுதலை கிடைக்கப் போவதுமில்லை”
“நாட்டின் விடுதலையை
அகிம்சையால் அல்ல,
ஆயுதத்தால் மட்டுமே சாதிக்க முடியும்”
“புரட்சி நீடூழி வாழ்க!”
இவை, அந்த பிரசுரம்
நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்த செய்தி!

1929, ஜூன் 6
‘குற்றத்தை’ மறுக்கவில்லை.
பகத்சிங்கும் தத்தும்
வெளியிட்ட வாக்குமூலம் இது.

“போலி நாடாளுமன்றம்,
இந்திய அடிமைத்தனத்தின் அடையாளம்”
“தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள்
பறிக்கப்படுகின்றன”
“கேளாத செவிகள் கேட்கட்டும்!”
“மனித உயிர்கள் மதிப்புமிக்கவை”
“தனிநபர்களை அழிப்பது எங்களது நோக்கமல்ல”
“எங்களை அழிப்பதன் மூலம்
இந்நாட்டை அழிக்க முடியாது”
“புரட்சி என்பது வெடிகுண்டுகளின் வழிபாடு அல்ல”
“பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிலைநாட்டப்படும்”
இவை, அவர்கள் விளக்கிய கொள்கைகள்.

இப்போது அவனுடைய தோழர்களுடன்
அவனும் சிறையில்.
“அரசியல் கைதிகளை
திருடர்களைப் போல நடத்தாதே!”
தொடங்கியது சிறையிலும் போராட்டம்!
அது,
63 நாட்கள் நீடித்த உண்ணாநிலைப் போராட்டம்!
ஜதீந்திர தாஸ் மரணம்.
தற்காலிகமாக பின்வாங்கியது அரசு.
மீண்டும் தொடங்கியது
அரசியல் கைதிகள் மீதான அடக்குமுறைகள்.
மீண்டும் உண்ணாநிலைப் போராட்டம் அறிவிப்பு.
சிறையில் இருந்து பறந்தன
அறிக்கைகள், கடிதங்கள்.
நாட்டு மக்களைக் கொந்தளிக்கச் செய்தன.
“தோழர்களை விடுதலை செய்!”
போராட்டங்கள் வெடித்தன.
காந்தியின் துரோகம் திரைகிழிந்தது.
விடுதலைக் கனல் மூண்டெழுந்தது.
தனது போராட்டத்தால்,
மக்களை இயக்கினான் அவன்.

வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்
வேகமாக தண்டனை வழங்கிவிட வேண்டும்
இது, அரசுக்கு இருக்கும் நிர்பந்தம்.
அரசுக்கு மட்டுமா,
துரோகிகளுக்கும் அதே நிர்பந்தம்.
அதன் வெளிப்பாடு,
லாகூர் சதிவழக்கு அவசரச் சட்டம்,
எதிர்வாதத்திற்கான வாய்ப்புகள் மறுப்பு
இன்ன பிற அடக்குமுறைகள்.

இனி என்ன செய்வது,
“பிரிட்டிஷ் அரசாங்கத்தின்
நீதிமன்றத்தைப் புறக்கணிக்கிறோம்”
இது,
எதிர்வாதம் செய்ய
அனுமதி மறுக்கப்பட்டவர்களின் வாக்குமூலம்.
வாக்குமூலம், அரசியல் அனலைக் கிளப்பியது.
“என்ன செய்தாலும் அரசியல் செய்கிறார்களே”,
இது, துரோகிகளுக்கு எதிரிகளுக்கும்
வாக்குமூலம் ஏற்படுத்திய கலக்கம்.

பகத்சிங், இராஜகுரு, சுகதேவ்
மூவருக்கும் மரண தண்டனை.
மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை.
தோழர்களுக்கும் தந்தைக்கும் எழுதினான்
கடிதங்கள்.

“எல்லாம் முடிந்துவிட்டது;
இனி செய்வதற்கு ஒன்றுமில்லை”
என்று சோர்வுறத் தேவையில்லை
“தற்கொலை தவறான அரசியல்”
“மரண தண்டனை
மக்களைத் தட்டியெழுப்புவதற்கு
கிடைத்த வாய்ப்பு”
இது, தோழர்களுக்கு அவன் சொன்ன செய்தி.

“சட்டவாதங்களைப் பயன்படுத்தி
விடுதலைப் பெறுவது,
அரசியல் நோக்கத்தைப் பின்னுக்குத் தள்ளுவதாகும்”
“இதன் மூலமாக, நீங்கள் எனது முதுகில் குத்திவிட்டீர்கள்”
“ஒவ்வொருவரின் மனவுறுதியும்
சோதிக்கப்படும் தருணம் இதுவே.
நீங்கள் அதில் தோற்றுவிட்டீர்கள்”
இது, தந்தைக்கு அவன் சொன்ன விமர்சனம்.

பகத்சிங், இராஜகுரு, சுகதேவ்
விடுதலைக்கான போராட்டங்கள்
நாட்டையே உலுக்கி எடுத்தன.
காந்தி-இர்வின் பேச்சுவார்த்தை
நடந்து கொண்டிருந்தது.
காங்கிரசு கட்சிக்குள் ஒலிக்கத் தொடங்கியது
மூவரின் மரண தண்டனைக்கெதிரான குரல்.
கராச்சியில் காங்கிரசு மாநாடு தொடங்க இருந்தது.
மாநாடு நடந்தால்,
மூவரின் மரண தண்டனைக்கெதிரான தீர்மானம்
நிறைவேற்ற வேண்டியிருக்கும்.

1931, மார்ச் 24
மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நாள்.
“தூக்கிலிடாதீர்கள், சுட்டுக்கொல்லுங்கள்”
இது, விடுதலை வீரர்களின் முழக்கம்.

ஆனால்,
கராச்சி காங்கிரசு மாநாட்டிற்கு
முன்தினமே
அவசர அவசரமாக தூக்கிலிடப்பட்டனர்.
அது, மார்ச் 23.
மூவரின் உடல்களை மறைத்து எரித்தனர், எதிரிகள்.
கராச்சி மாநாட்டில் இரங்கல் தெரிவித்தனர், துரோகிகள்.
கொதித்தெழுந்து காந்தியை முற்றுகையிட்டனர், மக்கள்.
கருப்பு கொடிகளால் சூழப்பட்டது,
கராச்சி மாநாடு.
காந்தியின் முகத்திரை கிழிந்து தொங்கியது.

1931, மார்ச் 22.
பகத்சிங்
இசைத்துச் சென்ற
புரட்சியின் கீதத்தைக் கேள்!

“ஒரு சிறைக் கைதியாகவோ
நிபந்தனை வரம்புகளுக்கு உட்பட்டவனாகவோ
வாழ எனக்கு விருப்பமில்லை.
என் பெயர்
இந்தியப் புரட்சியின் அடையாளச் சின்னமாகியுள்ளது.
புரட்சிகரக் கட்சியின்
கொள்கையும் தியாகமும்
ஒருவேளை நான் உயிர் வாழ்ந்தாலும்
என்னால்
ஒருபோதும் அடைய முடியாததொரு
உயரத்திற்கும் அப்பால்
என்னை ஏற்றி வைத்துள்ளன.”

“… துணிச்சலோடும் புன்னகையோடும்
நான் தூக்குமேடையேறினால்,
அது,
இந்தியத் தாய்மார்களின்
உணர்வுகளைத் தூண்டும்.
தங்களது பிள்ளைகளும்
பகத்சிங்கைப் போல
ஆகவேண்டுமென்று அவர்கள் விரும்புவார்கள்.
இதன் மூலம்,
நமது நாட்டின் விடுதலைக்காக
தங்களது உயிர்களையும் தியாகம்
செய்யச் சித்தமாயிருப்பவர்களின் எண்ணிக்கை
பெருமளவில் அதிகரிக்கும்.
அதன் பிறகு,
புரட்சிப் பேரலையை எதிர்கொள்வதற்கு
ஏகாதிபத்தியத்தால் முடியாமல் போகும்!”

இந்த இறுதி கீதத்தை
அவன் இசைத்த போது,
வயது 23-ஐ தாண்டவில்லை.

1931 மார்ச் 23,
மாலை 7.35 மணிக்கு
லாகூர் சிறை மதில்களுக்குள்
ஓங்கி ஒலித்தன,
அந்த வீரர்கள் இறுதியாக முழங்கிய முழக்கங்கள்.
“ஏகாதிபத்தியம் ஒழிக”,
“புரட்சி ஓங்குக!”
தூக்குக் கயிறுகள்
அவர்களது குரல்வளையை நெறித்தன.
அவர்களது உணர்வுகள்
நமக்குள் ஊடுறுவின,
தலைமுறை தலைமுறையாக.

000

இப்படித்தான்
உன்னை அவனுக்குத் தெரியும்.

பகத்சிங்கும்
அவனது தோழர்களும்
அன்றைய இளந்தலைமுறை.
அதற்கு அவன் தலைவன்.
இந்தியப் புரட்சியின் அடையாளச் சின்னம்.
நூற்றாண்டுகளைக் கடந்தும்
அவன் மூட்டியக் கனல்
எரிந்து கொண்டிருக்கிறது.
செரபண்டராஜ், பாலன்,
முத்துக்குமார், அனிதா…
இளந்தலைமுறைகள்
அனைத்தினதும்
நம்பிக்கைச் சின்னம், அவன்.
உனக்கும்தான்.

நூற்றாண்டுகளுக்கு முன்பு,
காலனியாதிக்கம்.
இன்று, மறுகாலனியாதிக்கம்.
அன்று, காங்கிரஸ்,
இன்று, ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி.
அன்று, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சர்வாதிகாரம்,
இன்று, அம்பானி, அதானிகளுக்காக பாசிச சர்வாதிகாரம்.
அன்றும் இன்றும்
தேவை, விடுதலைப் போராட்டம்!

நாட்டுப்பற்று, சோசலிச உணர்வு,
பார்ப்பனிய எதிர்ப்புணர்வு,
தியாகம், அர்ப்பணிப்பு…
இவை, இளந்தலைமுறையின் இயல்புகள்.
இன்றைய இளந்தலைமுறையை
“ஜென் சி”, “ஆல்ஃபா” என்று
வகைப் பிரித்துள்ளது முதலாளித்துவம்.
பெயர்களை மாற்றிவிடுவதால்
இளந்தலைமுறைகள் என்பது
மாறிப் போய்விடுமா என்ன?

ஆம்,
அன்றைய ஜென் சி,
அன்றைய ஆல்ஃபா பகத்சிங்!
இன்றைய பகத்சிங், நீதான்!


பரமேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன் 01-30, 2003 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 18, இதழ் 8 | ஜூன் 01-30, 2003 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தா.கிருட்டிணன் படுகொலை: அரசியல் கிரிமினல்மயமாவது முழுமையடைந்தது
  • காட்டிலே ஒரு வீரப்பன் ஓட்டுக்கட்சிகளிலே பலநூறு வீரப்பன்கள்
  • வெட்டு, குத்து விளையாட்டு… மணல் தேச மர்மக் கூட்டணி!
  • தனியார் வசமாகும் மருத்துவக் கல்வி
    தோற்றது மாணவர்கள் மட்டும்தானா?
  • “பொடா” பெண் கைதிகளைக் கொடூரமாக ஒடுக்கும் ‘குடிமகள்’ ஜெயா அரசு
  • இந்தியா-பாக். உறவு: கையைக் குலுக்கிக் கொண்டே… காலை வாரிக் கொண்டே…
  • தொடரும் சாதிவெறியாட்டங்கள்
    இதுவா சமூகநீதி?
  • பட அதிபர் ஜீ.வி. தற்கொலை: ஒட்டுண்ணியின் சாவுக்கு ஒப்பார் ஏன்?
  • மே.வங்கத்தில் நடப்பது போலீசு ஆட்சிதான்! – மனித உரிமை அமைப்புகள் பகிரங்க குற்றச்சாட்டு
  • உப்பு ஆலையா? நச்சு ஆலையா?
  • போர்க் கைதி மீட்பு: அண்டப் புளுகு… ஆகாசப் புளுகு… அமெரிக்கப் புளுகு
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே 01-31, 2003 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 18, இதழ் 7 | மே 01-31, 2003 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: மு.க.வின் பொடா எதிர்ப்பு: கசாப்புக்காரனிடம் கருணை மனு
  • உலக ரவுடி அமெரிக்காவின் மேலாதிக்கப் போர்வெறியைக் கண்டித்து
    புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்கள்
  • ஜெயாவின் காட்டுத் தர்பார் கருணாநிதியின் அமைதிப் புரட்சி
  • மதிப்புக் கூட்டு வரி: சிறுவணிகத்துக்குச் சுருக்கு
  • போலீசு: மக்களின் நண்பனா? ரவுடியின் தோழனா?
  • பயங்கரவாத மோடியின் அரண்மனைக் கொலை
  • லாரி உரிமையாளர் போராட்டம்: பாதி வழியில் நின்றது…
  • ஜெயா-எதிர்க்கட்சிகள் இணைந்து வழங்கும்
    சட்டமன்ற சடுகுடு
  • ஈராக்: ஆக்கிரமிப்புப் போர் முடிந்தது மறுகாலானியாதிக்க எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியது
  • அன்னியப் பொருட்கள் புறக்கணிப்புப் போராட்டம்: போலிகளின் சந்தர்ப்பவாதம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல் 01-30, 2003 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 18, இதழ் 6 | ஏப்ரல் 01-30, 2003 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: உலக வங்கிக் கைக்கூலி அரசின் மிகக் கொடிய தாக்குதல்
  • ஈராக்: ஏகாதிபத்திய பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்புப் போர்
  • “தடா”வை விஞ்சும் “பொடா”
  • அயோத்தியில் அகழ்வாராய்ச்சி நீதிமன்றத்தின் கரசேவை
  • தியாகத் தோழர் பீட்டர் அந்தோணி
    மக்களுக்காக வாழ்ந்து மரணத்தை வென்றார்!
  • கிரிமினல்களாக போலீசு: நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
  • கிரிக்கெட் ரசிகர்களா? ஆர்.எஸ்.எஸ்.இன் கூடாரங்களா?
  • மைய அரசின் பட்ஜெட்: கோவணத்திற்கும் வந்தது ஆபத்து
  • அமெரிக்க “அம்பி” இந்தியனாம்! வங்கதேச முசுலீம் அந்நியனாம்!
  • இரத்தக் காடாக வயநாடு: நிலத்தைப் பறித்தவர்கள் உயிரையும் பறிக்கிறார்கள்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச் 01-31, 2003 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 18, இதழ் 5 | மார்ச் 01-31, 2003 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஜெயலலிதாவின் அராஜகத்தை எதிர்த்தாக்குதல்கள்தாம் வீழ்த்தும்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • பெரியார் மண்ணில் பார்ப்பன வெறிக்கூச்சல்
  • பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு: புரட்சிகர ஜனநாயகச் சக்திகளின் புதிய எழுச்சி
  • பார்ப்பன பண்பாட்டுக்கெதிரான போர்முழக்கம்
  • இந்துத்துவ மூலவருக்கு படத்திறப்பு போலி கம்யூனிஸ்டுகள் முகத்தில் கரிப்பூச்சு
  • புரட்சிகர அமைப்புகள் மீது பாய்ச்சல்: த.தே.பொ.க.வின் மூளைக் காய்ச்சல்
  • “காசேதான் கல்வியடா!” – சுயநிதி கல்லூரி முதலாளிகள் கொட்டம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram