Friday, November 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 49

கால்டுவெல்-ஐ நினைவு கூர்வோம்!

0

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை எழுதிய ராபர்ட் கால்டுவெல் மறைந்த நாள் 28 ஆகஸ்டு 1891.

இந்தியாவில் காவி-கார்ப்பரேட் பாசிச மோடி அரசு, 2014-ஆம் ஆண்டு ஆட்சியமைத்திலிருந்து இன்று வரை இந்தி – சமஸ்கிருத மொழியையும் அதன் பார்ப்பனிய பண்பாட்டையும் நாடுமுழுவதும் திணித்து வருகிறது. பள்ளி-கல்லூரி பாடத்திட்டங்கள் முதல் உயர்கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் வரை இந்துத்துவ சித்தாந்தத்தைத் திணித்து வருகிறது. இந்த பாசிச சூழலில் நாம், தமிழ் மொழியையும் பார்ப்பன எதிர்ப்பு மரபையும் உயர்த்தி பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

சமஸ்கிருதமே அனைத்து மொழிகளுக்கு முதன்மையானது என்ற பார்ப்பன கும்பலின் பிரச்சாரத்தை அடித்து நொறுக்கும் வகையில் தமிழ்மொழியே உயர்தனிச் செம்மொழி என்பதை ஆய்வின் மூலம் நிரூபித்தார். தமிழ்நாட்டின் பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்கள் உருவாவதற்கு அது அடித்தளமாக இருந்தது.

படிக்க : நேற்று முருகன் மாநாடு, அடுத்து அம்மன் மாநாடு? – பு.மா.இ.மு கண்டன அறிக்கை!

எனவே, கால்டுவெல்-ஐ நினைவுகூர்ந்து தமிழ் மொழி – தமிழ்நாட்டு மக்களின் பார்ப்பன எதிர்ப்பு மரபை வளர்த்தெடுப்போம். ஆர்.எஸ்.எஸ்.-பாஜக கும்பலை விரட்டியடிக்கும் பாதையில் வீறு நடைபோடுவோம்.

***

தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கம், மொழி முதலானவற்றை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார். மூன்று ஆண்டுகள் மதராசப்பட்டினத்தில் தங்கியிருந்த கால்டுவெல், அதன்பிறகு நானூறு மையில்கல் தொலைவில் இருந்த திருநெல்வேலிக்கு நடந்தே சென்றார். திருநெல்வேலி (இன்று தூத்துக்குடி மாவட்டம்) மாவட்டத்தில் தேரிப்பகுதியில் உள்ள இடையன்குடியை அடைந்தார்.

தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பண்டைத் தமிழ் இலக்கியங்களை படித்தார். ஆங்கிலத்தில் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற நூலை எழுதி 1856-இல் வெளியிட்டார். அதுவரை உருவாக்கப்பட்டிருந்த சமஸ்கிருத மேன்மை எனும் பொய்மூட்டைகளை அந்நூல் உடைத்து நொறுக்கியது.

அதாவது, இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள மொழிகள் அனைத்துமே சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியவை என்கிற பார்ப்பனியப் பிரச்சாரத்திற்கு அனைவருமே பலியாகியிருந்த நேரத்தில் திராவிட மொழிக் குடும்பம் சமஸ்கிருதத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்றும் அதில் தமிழ் மொழி தொன்மையும் தனித்துவமும் வாய்ந்தது என்பதையும் கால்டுவெல் முதன் முதலில் ஆதாரப்பூர்வமாக நிறுவினார்.

படிக்க : மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: ஐந்து விழுக்காடு என்பதுதான் நஞ்சு கலந்த மாற்றம்! | பவானி பா.மோகன்

கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் பின்வரும் உண்மைகளை தெள்ளத் தெளிவாக நிரூபித்தது.

  1. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு நேர் எதிர் தன்மை கொண்ட திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை
  2. தமிழில் உள்ள சமஸ்கிருத சொற்களை எடுத்து விட்டாலும் தமிழ் தானாகவே இயங்கும் ஆற்றல் கொண்ட செம்மொழி
  3. இதுவரை கருதி வந்ததுபோல், தமிழ் மரபு என்பது வேத-பார்ப்பன-இந்து மரபின் தொடர்ச்சி அல்ல
  4. அதற்கு சமண, பவுத்த, பார்ப்பன எதிர்ப்பு மரபு உள்ளது.

கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூல், தமிழ்ச் சமூகத்தில் உருவாக்கிய தாக்கம் ஆழமானது. இருபதாம் நூற்றாண்டில் பார்ப்பன எதிர்ப்பு இயக்கம் உருவெடுக்க கால்டுவெல்லின் கோட்பாடுகள் அடித்தளமாயின.

சந்துரு

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: ஐந்து விழுக்காடு என்பதுதான் நஞ்சு கலந்த மாற்றம்! | பவானி பா.மோகன்

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்:
ஐந்து விழுக்காடு என்பதுதான் நஞ்சு கலந்த மாற்றம்!

பவானி பா.மோகன்,
வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஹிண்டன்பர்க்கின்  குற்றச்சாட்டு என்ன? | முகநூல் பார்வை

ஹிண்டன்பர்க்  இந்தியாவை அவமதித்துவிட்டது. காங்கிரசுடன் கைகோர்த்துக்கொண்டு இந்தியப் பங்குச் சந்தையை அழிக்க முயல்கிறது. மோடியின் தலைமையில் இந்தியா முன்னேறுவதை விரும்பாத, இளவரசர் ராகுல் காந்தி இந்தக் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இருக்கிறார்.

இதெல்லாம் கடந்த நான்கு நாட்களாக பிஜேபி சொல்லி வருபவை.

ஹிண்டன்பர்க்கின்  குற்றச்சாட்டு என்ன?

Tax Haven என்று அழைக்கபபடக் கூடிய மொரீஷியஸ், பார்படாஸ் போன்ற நாடுகளின் வழியாக பணத்தைக் கொண்டு வந்து பங்குச் சந்தையில் கொட்டி, செயற்கையான ஏற்றத்தை உருவாக்கி, மிகப்பெரிய ஊழலில் ஈடுபடுகிறது அதானி நிறுவனம் என்பது ஹிண்டன்பர்க்கின்  பழைய குற்றச்சாட்டு. வழக்கு நீதிமன்றம் போகவும், அதை சிபிஐ போன்ற ஏஜென்சிகள் விசாரிக்கவேண்டியதில்லை. பங்குச்சந்தையை நிர்வகிக்கும் அமைப்பான செபி விசாரித்து அறிக்கை அளிக்கும் என்றது உச்சநீதிமன்றம்.

இப்போது, எந்த ஊழலை செபி விசாரித்துக்கொண்டிருக்கிறதோ அதில் தொடர்புடைய நிறுவனங்கள் எந்த வழிமுறையில் இந்த ஊழலைச் செய்தனவோ, அதே வழியாக செபியின் தலைவரும் பணத்தை முதலீடு செய்திருக்கிறார் என்பதுதான் ஹிண்டன்பர்க்கின் இரண்டாவது குற்றச்சாட்டு.

தன்னுடைய விளக்கத்தில், நானோ என் கணவரோ எந்த முதலீடும் செய்யவில்லை என்று செபியின் தலைவராக இருக்கிற மாதபி புச் மறுக்கவில்லை. இந்த ஒப்புகையைத்தான் conflict of interest என்கிறது ஹிண்டன்பர்க். செபியின் தலைவர் பதவி விலகவேண்டும், பாராளுமன்ற கூட்டு விசாரணைக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோருகிறது காங்கிரஸ். காங்கிரசின் கோரிக்கையில் எல்லா நியாயமும் உண்டு.


படிக்க: மீண்டும் ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானியின் கைப்பாவையாக செபியின் தலைவர்


நான், இதில் பிஜேபியே நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கும் என்று சந்தேகப்படுகிறேன். மாதபி புச்சின் நியமனம், அதானிக்கும் மோடிக்கும் உள்ள உறவு, அதானிக்கும் மதாபிக்கும் உள்ள உறவு எல்லாமே சந்தேகப்படும்படும்படியாக இருக்கிறது.

இன்று ஒரு முக்கியமான செய்தி. அதானிக்கு சொந்தமான 1600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் ஜார்கண்டில் இருக்கிறது. அதில் பெறப்படும் மின்சாரம் நூறுசதமும் வங்கதேசத்துக்கு விற்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த ஆகஸ்ட் பன்னிரண்டு முதல், அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை இந்தியாவிற்குள்ளும் விற்கலாம் என்று அனுமதி அளித்து புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது அரசு.

இதன் பொருள் என்ன?

வங்கதேசத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை. அது பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். இந்தியாவின் செல்லப்பிள்ளையாக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு துரத்தப்பட்டிருக்கிறார். இதெல்லாம் அதானியின் மின் வியாபாரத்தை பாதிக்கும். நம் அரசு எவ்வளவு விரைவாக, அதானியின் நலனைக் காப்பாற்றும் பொருட்டு களத்தில் இறங்கி, அதானி தயாரிக்கும் மின்சாரத்துக்கு அவசர அவசரமாக நமது சந்தையைத் திறந்துவிடுகிறது பாருங்கள். அதுதான் எனக்கு வியப்பூட்டுகிறது.

இலங்கை பொருளாதாரச் சிக்கலில் இருந்தபோது அதற்கு இந்தியா உதவியது. அப்போது, அதானியின் முதலீடுகளை இலங்கையில் அனுமதிக்கவேண்டும் என்று இந்திய அரசே அழுத்தம் கொடுத்தது என்று இலங்கை அரசில் முக்கியமான பொறுப்பில் இருந்தவரே குற்றம் சாட்டினார்.

அதானிக்கு ஒன்று என்றால் ஒட்டுமொத்த பிஜேபி நிர்வாகமும் களத்துக்கு வருகிறார்கள். எந்த லெவலுக்கும்  இறங்கி எதிர்க்கட்சியினர் மீது குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால் ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுக்கு இதுவரை எந்த நேரடியான, நேர்மையான பதிலையும் மத்திய அரசு சொல்லவில்லை.

இன்றைய இந்தியச் சூழலைப் பொறுத்தவரை பிஜேபி, மோடி, அதானி இம்மூவரும் வேறு வேறல்ல. எதிர்க்கட்சிகள் இன்னும் ஒற்றுமையுடன் வலுவாகக் களத்திற்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை என்பதே நிலவரம்.


ஜி. கார்ல் மார்க்ஸ்
14.08.2024

disclaimer

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



கோவை:‌ மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கும் சங்கி கும்பல்!

பாசிச மோடி அரசே மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு!” என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடைபெறுவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையிலும் அரங்கக் கூட்டம் வருகின்றன வெள்ளிக்கிழமை (30-08-2024) நடைபெறவுள்ளது. பல்வேறு ஜனநாயக சக்திகள் இயக்கங்கள் இதில் கலந்து கொள்கின்றனர். மக்கள் அதிகாரம் தோழர்கள் 25-08-2024 ஞாயிறு மாலை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த போது கோவை, சரவணம்பட்டி பிஜேபி -யை சேர்ந்த சங்கி கும்பலைச் சேர்ந்த சிலர் பிரச்சாரத்தைத் தடுக்கும் விதத்தில் துண்டறிக்கை, புத்தகங்களைத் தோழர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கிக்கொண்டு பிரச்சாரம் செய்ய விடாமல் தடுத்தனர்.

இந்நிகழ்வு இன்று மட்டும் நடந்ததல்ல. மோடி அரசு – பிஜேபிக்கு எதிராக பிரச்சாரம் துண்டறிக்கை கொடுப்பதைத் தடுப்பதும், பிரச்சாரம் செய்யும் இயக்கங்களை மிரட்டுவதும் தொடர் நிகழ்வாக மாறியுள்ளது..

ஆனால் இதே கோவையில் தான் வருகின்ற செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிஜேபி இந்து முன்னணி சார்பாக நடைபெறவுள்ள நிகழ்ச்சி நிரல் துண்டறிக்கையில் இஸ்லாமிய வெறுப்பு, மதக் கலவரங்களைத் தூண்டும் வகையில் கருத்துகளை எழுதி கோவை முழுவதும் பிரச்சாரம் செய்கின்றனர்.

கருத்துச் சுதந்திரம் என்பது யாருக்கு இருக்கிறது? மக்களைப் பிளவுபடுத்தி இந்துத்துவ கருத்துகளை அப்பாவி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் இந்த பாசிச கும்பலுக்கு மட்டும் தான் இருக்கிறது கருத்துச் சுதந்திரம்.. அக்கும்பலுக்கு எதிராகப் பேசும் முற்போக்கு இயக்கங்களுக்குக் கருத்துச் சுதந்திரம் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.

கோவையில் தொடர்ந்து கலவரங்களை உருவாக்குவதற்கும், மாணவர்கள் மத்தியில் பாசிச மத வெறி கருத்துகளைப் பிரச்சாரம் செய்வதற்கும் செயல்பட்டுவரும் பிஜேபி இந்து முன்னணி போன்ற அமைப்புகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக இயக்கங்களும்  ஒன்று சேர்ந்து போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டும்.


மக்கள் அதிகாரம்
கோவை மண்டலம்
9488902202

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும் | முஜிபுர் ரஹ்மான்

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான
போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும் | முஜிபுர் ரஹ்மான்

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும்!

திரு.M.முஜிபுர் ரஹ்மான், வழக்கறிஞர், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

காசா: அல்-அக்ஸா மருத்துவமனையில் இருந்து வெளியேறும் பாலஸ்தீன மக்கள்! | படக்கட்டுரை

0

க்டோபர் 7, 2023 முதல் காசா முனையில் இருந்த பல மருத்துவமனைகளை இஸ்ரேல் ராணுவம் தாக்கியுள்ளது. முதல் முறை தாக்குதலுக்குள்ளான அல்-ஷிஃபா மருத்துவமனையில் குழந்தைகள், பெண்கள், நோயாளிகள் உட்படப் பலர் கொலைகார இஸ்ரேல் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். பலர் தாக்குதலில் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் இருக்கும் நிராயுதபாணியான மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதற்கு உலகம் முழுவதிலும் பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. பல்வேறு நாடுகளின் மக்கள் “காசா மீதான போரை நிறுத்து” என்ற முழக்கத்துடன் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தனர்.

தற்போது மத்திய காசாவில் செயல்பட்டுவரும் ஒரே மருத்துவமனை அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனை ஆகும். இங்கு நோயாளிகள் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்குப் போர் சூழலிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


படிக்க : பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகப் போராடிய மாணவர்களை ஒடுக்கும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்


ஆனால், தற்போது மத்திய காசாவில் உள்ள டெய்ர் எல்-பலாஹ் பகுதியில் இருந்து அனைவரையும் வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது. எனவே, அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையும் தாக்குதலுக்குள்ளாகும் என்ற அச்சத்தில் பாலஸ்தீன மக்கள் மருத்துவமனையில் இருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

காசா அரசாங்க ஊடக அலுவலகம், அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனை சிவப்பு மண்டலம் என்று இஸ்‌ரேலால் வரையறுக்கப்பட்ட பகுதிக்குள் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், “வரைபடத்தில் குறிக்கப்பட்ட பகுதியான பிளாக் 128-இல் உள்ள டெய்ர் அல்-பலாஹ் சுற்றுப்புறத்தில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த பாலஸ்தீன மக்களுக்கு…., உங்கள் பகுதியில் உள்ள இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடும். இது ஆபத்தான போர் பகுதி..,” என்று X தளத்தில் இராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சே அட்ரே (Avichay Adraee) கூறினார். “உங்கள் பாதுகாப்பிற்காக, [அல்-மவாசியின்] மேற்குப் பகுதிக்கு உடனடியாக செல்லவும்,” என்று அவர் மேலும் கூறினார்.

பாலஸ்தீன மக்கள் “பாதுகாப்பான பகுதிகளுக்கு” செல்லும் வழியில் இஸ்ரேல் இராணுவத்தால் தாக்குதலுக்கு ஆளாகுகின்றனர்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கழகம் தீர்மானம் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த போதிலும், கடந்த ஆண்டு 2023 அக்டோபர் முதல் காசா முனையில் இஸ்ரேல் தனது கொடூர தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.


படிக்க : காசாவின் டெய்ர் எல்-பாலாவிலிருந்து வெளியேற்றப்படும் பாலஸ்தீன மக்கள் | படக்கட்டுரை


இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 40,400-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 93,500 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காசா மீதான தொடர்ச்சியான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போரின் காரணமாக உணவு, சுத்தமான நீர் மற்றும் மருந்து ஆகியவற்றிற்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியின் பெரும்பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

***

இஸ்ரேலிய தரைப்படை தாக்குதலுக்கு அச்சம் கொண்டு பாலஸ்தீன நோயாளிகள் அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையிலிருந்து வெளியேறுகின்றனர்.

***

கிழக்கு டெய்ர் எல்-பாலாவில் உள்ள ஒரு பகுதியை காலி செய்யுமாறு இஸ்ரேலிய இராணுவம் கோரியதை அடுத்து, அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை மக்கள் வெளியேற்றுகின்றனர்.

***

***

காசா மீதான இஸ்ரேலின் போரில் 40,400-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் சுமார் 93,500 பேர் காயமடைந்துள்ளனர்.

***

ஒரு பெண் நோயாளி தனது மருத்துவமனை படுக்கையில் தனது உடைமைகளால் சூழப்பட்டுள்ளார். அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பயந்து அங்கிருந்து வெளியேறும் நோய்வாய்ப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.

***

அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையிலிருந்து இஸ்ரேலிய தாக்குதலுக்கு பயந்து நோயாளிகள் வெளியேறுவதை ஒரு நபர் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

***

எல்லைகளற்ற டாக்டர்கள் சங்கம் (MSF) அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனைக்கு அருகில் உள்ள பகுதிகளுக்கு இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளதை, இந்த “நிலைமை ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறியது.

***

அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில் தஞ்சம் புகுந்த நோயாளிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் மருத்துவமனையை விட்டு வெளியேறி வருகின்றனர்.

***

காசாவில் ஒவ்வொரு மணி நேரமும் 15 பேர் கொல்லப்படுகிறார்கள் – அவர்களில் ஆறு பேர் குழந்தைகள் – 35 பேர் காயமடைகின்றனர்.

***

கிழக்கு டெய்ர் எல்-பாலாவில் உள்ள ஒரு பகுதியை காலி செய்யுமாறு இஸ்ரேலிய இராணுவம் கோரியதை அடுத்து, அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை மக்கள் வெளியேற்றுகின்றனர்.


கல்பனா

நன்றி: அல் ஜசீரா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



இலங்கை அரசால் பாதிக்கப்படும் மீனவர்கள் | ஜெரோன் குமார் | சேனாதிபதி சின்னத்தம்பி

இலங்கை அரசால் பாதிக்கப்படும் மீனவர்கள்
ஜெரோன் குமார் | சேனாதிபதி சின்னத்தம்பி

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதல்: இருநாட்டு அரசுகளின் திட்டமிட்ட சதி

ஜெரோன் குமார்
மாநில இளைஞர் அணித் தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

000

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலுக்கு மத்திய மாநில அரசுகள்தான் இழப்பீடு வழங்க வேண்டும்!

சேனாதிபதி சின்னத்தம்பி
தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



மூன்றாம் அடி..! | கவிதை

மூன்றாம் அடி..!

மூன்றடி நிலம் கேட்ட பெருமாளுக்கு
மூன்றாவது அடிக்காக (மகாபலி) தலையைக் காட்டியது போல
நாங்கள் இருக்கும் சேரியைக் காட்டினர் அதிகாரிகள்…

பெரிய பெரிய ஃபேக்டரி வரவிருப்பதால்
எங்களை விடை பெறவும் சொல்லினர்..

“காணி நிலமோ
கஞ்சித் தண்ணியோ இல்லாதப்போ வராத கம்மனாட்டிங்க
கம்பெனி வரப் போகுதுனு
சொல்ல வாரானுங்க..

கம்பெனிக்காரன் தர்ற துட்டுல
மஞ்சக் குளிக்குறவ புருஷனுங்கோ வந்து காலி பண்ண சொல்றானுவ கஸூமாலங்க”னு
பாட்டி மண்ணை வாரி இறைத்தாள்

“யாரும் போ மாட்டோம்
குயந்தைலேருந்து இருந்த எடத்தை வுட்னு போ சொல்றியே
உன் வூட்டுக்கு இட்னு போவ போறீயா எங்கள”னு மீன்பாடி வண்டி மிதிக்கிற மைக்கேல் அண்ணா கேள்வி கேட்டார்..

“ஆதி இனத்து ஆளுங்க நாங்கோ..
இந்த ஊர உருவாக்குனது நாங்க..
குப்பை மேடும்
பீக் காடுமா கிடந்தத
நாங்கதான் சுத்தம் செஞ்சு
நீங்க சொகுசா வாழ உருவாக்கித் தந்தோம்ன்ற
மறவாத ஆபிசரே”னு அரசியல் பேசினார்
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் நடத்தும் கலையரசன் அண்ணா..

காற்றின் மென்மையைக்
கிழித்துப் போட்டது
இன்னும்
இன்னும் ஆயிரம் குரல்கள்..

ஜேசிபிகூட இயங்கி இருக்காது
இத்தனைப் பேரின் சத்தத்தையும் கேட்க
அதற்கு காது இருந்திருந்தால்..

ஒருவேளை கருணையும் வந்து
எதிர்த்திசையில்
எந்திர கையை வீசியும் இருக்கும்..

காதுகளும் கருணையுமற்ற எந்திரங்களைக் கொண்டே
எதையும் சாதித்துக் கொள்கிறது அதிகார வர்க்கம்..

அத்தனைப் பேரின் கதறல்களையும், கண்ணீரையும் கண்டுகொள்ளாமல்
ஓரடி கூட மிச்சம் வைக்காமல்
எங்கள் தலை மீது கால் வைத்து
மூன்றாவது அடியையும் அளந்து கொண்டிருந்தது அதிகார வர்க்கம்….


ஏகலைவன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



தொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதி கட்டப் போர்! | தோழர் ம.சரவணன்

தொழிலாளி வர்க்கத்தின் மீதான இறுதி கட்டப் போர்!

தோழர் ம.சரவணன்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்)

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



இனி போலீசே தீர்ப்பு எழுதும்! | தோழர் அமிர்தா

இனி போலீசே தீர்ப்பு எழுதும்!

தோழர் அமிர்தா,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு-புதுவை.
99623 66321.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



ராணிப்பேட்டை ஆணவப் படுகொலை | மக்கள் அதிகாரம் கண்டனம்

சோளிங்கர் அருகே மீண்டும் ஒரு ஆணவப் படுகொலை

24.08.2024

கண்டன அறிக்கை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருங்காஞ்சி கிராமத்தில் வசித்துவரும் நரசிம்மன், மகேஸ்வரி ஆகியோரின் மகன் கதிர், 19.08.2024 அன்று இரவு அதே ஊரைச் சேர்ந்த யாதவர் சாதி வெறியர்களால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மக்கள் அதிகாரம் இதை வன்மையாகக் கண்டிப்பதுடன், சம்பந்தப்பட்ட சாதி வெறியர்களையும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைதுசெய்து கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.

பெருங்காஞ்சி கிராமத்தைச் சார்ந்த டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்துவரும் தலித் சமூகத்தைச் சார்ந்த கதிர் என்ற இளைஞனும், அதே ஊரில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் ஆதிக்க சாதியைச் சார்ந்த சுரேஷ் என்பவரின் மகள் நிவேதாவும் காதலித்து வந்துள்ளார்கள்.

இந்த விவகாரம் நிவேதாவின் தந்தை சுரேஷுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்துள்ளது. ஆத்திரமடைந்த சுரேஷ், கதிரை அடித்து உதைத்து துன்புறுத்தியுள்ளார். அதோடு மட்டுமின்றி, “நீ இதே எண்ணத்தோடு இருந்தால் உன்னை கொன்று புதைத்து விடுவேன்” என்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் அதன் பிறகும், அவர்களின் விடலைப் பருவ காதல் தொடர்ந்துள்ளது.

மகளின் கல்வி முக்கியம் என்று நினைத்தாலோ அல்லது அவர்களது காதலை விரும்பவில்லை என்றாலும் கூட, சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை அழைத்துப் பிரச்சனையை பேசி தீர்த்திருக்க வேண்டும். ஆனால் தன் மகள் ஒரு தலித் இளைஞனை காதலிக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத ஆதிக்க சாதிவெறி, கதிரை ஆணவக் கொலை செய்ய தூண்டியுள்ளது.


படிக்க: தர்மபுரி முகமது ஆசிக் ஆணவப் படுகொலை | கள அறிக்கை


கதிரை நிவேதா அழைப்பதாகக் கூறி போன் செய்து, திட்டமிட்டு வீட்டுக்கு வரவழைத்துள்ளனர். பின்னர் குடும்பமாக இணைந்து அவரைக் கொடூர சித்திரவதைக்கு உள்ளாக்கி, கை கால்களை முறித்து பாறாங்கல்லை கட்டி தனது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் தூக்கிப்போட்டு கொன்றுள்ளார்கள், சாதி வெறியர்கள்.

ஒருநாள் முழுக்க கதிரை காணாத பெற்றோரும் உறவினர்களும் அவரைத் தேடி அலைந்துள்ளனர். மறுநாள் (20.08.2024) சந்தேகத்தின் பெயரில் குறிப்பிட்ட அந்தக் கிணற்றின் அருகே சென்று பார்த்தபோது, கதிரின் ஒரு கால் செருப்பு இருந்ததைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். கிணற்றுக்குள் கிடந்த கதிர் சடலத்தை போலீஸ், அந்த ஊர் இளைஞர்கள் உதவியுடன் மீட்டு உடற்கூறாய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

சுரேஷும் அவருடைய குடும்பத்தாரும்தான் கதிரை கொன்றார்கள் என்ற தகவல் அறிந்த கதிரின் குடும்பத்தினர் மற்றும் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கதிருக்கு நடந்த கொடுமைக்கு நியாயம் கேட்க, சுரேஷின் வீட்டிற்கு சென்றபோது, சுரேஷ் மற்றும் அவருடன் இருந்த ஆதிக்க சாதி வெறியர்கள் அந்த இளைஞர்களையும் அறிவாளால் தாக்கியுள்ளார்கள். பலத்த வெட்டுக்காயம் அடைந்த மூன்று இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரறிய “கொலையாளி” என அம்பலப்பட்டபோதும், தட்டிக் கேட்கச் சென்ற இளைஞர்களை அரிவாள்களால் வெட்டிய சம்பவம் கண் முன்னே சாட்சியங்களாக இருந்தபோதும், கதிர் படுகொலையை ஆணவக் கொள்கையாகக் கருதி, SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கை பதிவு செய்ய மறுக்கிறது போலீசு. கதிர் உடலை வாங்க மறுத்து பெற்றோர்களும் உறவினர்களும் போராடி வருகின்றனர்.

“இது பெரியார் பூமி” என்று நாம் மார்தட்டிக் கொள்ளும் இந்த தமிழ்நாட்டில்தான், தலித் மக்கள் மீதான ஆணவக்கொலைகள் நாள்தோறும் அதிகரித்து வருவதை காண்கிறோம். கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு நாம் சும்மா இருந்தால், தொடரும் அநீதிகளை தடுக்க முடியாது. நாலாபுரங்களிலும் பற்றி பரவி வரும் “சாதிவெறி தீ”க்கு எதிராக ஜனநாயக சக்திகள் களமிறங்கி போராடாவிட்டால், மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரும் என்று அஞ்சுகிறோம்.

ஒன்றரை ஆண்டுகள் ஆன பின்பும் வேங்கை வயலில் மலத்தை கலந்த மிருகங்கள், இன்றுவரை கைது செய்யப்படவில்லை. கூடுதல் கால அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்கிறது சிபிசிஐடி.  இன்னொரு பக்கம் சாதி வெறியர்களோ, திரௌபதி, கவுண்டம்பாளையம் போன்ற சாதி வெறியை தூண்டும் திரைப்படங்களை துணிச்சலாக வெளியிட்டு வருகிறார்கள். இந்த போக்குக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

தமிழ்நாடு போலீசே, கதிரை கொன்ற சாதி வெறியர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்!

தமிழ்நாடு அரசே

ஆதிக்கச் சாதி சங்கங்களை தடைச் செய்!

சாதி வெறியை தூண்டும் திரைப்படங்களை தடை செய்!

சாதிவெறி நச்சுக் கருத்துகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ பேசும், ஊக்குவிக்கும் அனைவரையும் கைது செய்!

சாதிவெறி நிகழ்வுகளுக்கு எதிராக போராடுவதோடு, சாதிவெறி-மதவெறி எதிர்ப்பு ஜனநாயகக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வோம்!


தோழமையுடன்
அமிர்தா,
சென்னை மண்டலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
91768 01656

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



🔴LIVE: அரங்கக் கூட்டம் | சென்னை | பாசிச மோடி அரசே, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு!

🔴LIVE: அரங்கக் கூட்டம் | சென்னை
பாசிச மோடி அரசே, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு!

தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம்
அரங்கக் கூட்டம்

தேதி : 25.08.2024 நேரம் : மாலை 5.00 மணி
இடம் : TGP கல்யாண மண்டபம், ராஜாஜி சாலை, தாம்பரம்.

நேரலையைக் காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்..

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



நீதியை எதிர்நோக்கி ஆசிக் குடும்பத்தினர்

டந்த ஜூலை 26-ஆம் தேதி தர்மபுரி மாவட்டம் வி.ஜெட்டி அள்ளி பகுதியில் உள்ள உணவகத்தில் பணியாற்றிவந்த முகம்மது ஆஷிக் என்ற இஸ்லாமிய இளைஞர் பறையர் சாதியைச் சார்ந்த பெண்ணைக் காதலித்ததற்காக பெண்ணின் குடும்பத்தினரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டியை சார்ந்த முகமது ஆசிக் என்ற இஸ்லாமிய இளைஞர் சேலம் மாவட்டம் ஓமலூர் செட்டிப்பட்டியை சார்ந்த சித்த மருத்துவரான தமிழரசி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற பெண்ணை இரண்டு வருடங்களுக்கும் மேலாகக் காதலித்து வந்துள்ளார்.

தமிழரசி முகமது ஆசிக்கின் அப்பா ஜாவித்திடம் தொடர்பு கொண்டு “எங்கள் வீட்டிற்கு வந்து என் பெற்றோரிடம் திருமணத்தைப் பற்றிப் பேசுங்கள்” என்று கூறியுள்ளார். அதன்பிறகு முகமது ஆசிக்கின் அப்பா ஜாவித், தமிழரசியின் பெற்றோரிடம் பேசத் தொடர்பு கொண்ட பொழுது தமிழரசியின் சித்தப்பா பேசியுள்ளார். தமிழரசியின் சித்தப்பா “தமிழரசியின் பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லை; நான்தான் பேசுவேன்” எனக் கூறி “பொருளாதார ரீதியிலும், மத ரீதியிலும் உங்களுக்கும் எங்களுக்கும் ஒத்து வராது” என்று கூறியுள்ளார். இன்னும் கீழ்த்தரமாக நாக்கூசும் வார்த்தையிலும் திட்டி உள்ளார்.

அதன் பிறகு தமிழரசி மறைமுகமாக முகம்மது ஆசிக்கின் பெற்றோரை தொடர்பு கொண்டு தொடர்ந்து பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் இந்த சம்பவம் தமிழரசியின் குடும்பத்தாருக்கு தெரிய வந்த பிறகு தமிழரசி தங்கள் குடும்பத்தாரிடம் “என் உயிரை போனாலும் ஆசிக்கை தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு தமிழரசியின் சகோதரர்கள் சினிமா பாணியில் “அவன் உயிரோடு இருக்கும் வரையில்தான் நீ இப்படி பேசுவ; அவனை கொன்னுட்டால் என்ன செய்வ? இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்” என்று கூறியுள்ளனர். ஜூலை 26 அன்று இரவு 9:30 மணியளவில் தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் தொப்பி வாப்பா பிரியாணி கடையில் கிரில் மாஸ்டராக பணியாற்றி வந்த முகமது ஆசிக்கை தமிழரசியின் இரட்டை சகோதரர்கள் ஜெனரஞ்சன், ஜன அம்சப்ரியன், மற்றும் அவர்களது நண்பர்களான கௌதம், பரிதி வலவன் ஆகிய நான்கு பேரும் கூட்டுச் சேர்ந்து முகமது ஆசிக்கை ஹோட்டலில் சூழ்ந்து கொண்டு கழுத்து, மார்பு, இடுப்பு ஆகிய இடங்களில் கத்தியால் குத்தியும், இரும்பு ராடை கொண்டு தாக்கியும் மிகக் கொடூரமான முறையில் கொலை செய்தனர்.

இந்த சம்பவத்தை கேட்ட ஆசிக்கின் அம்மா ரீனா இதுவரை சுயநினைவின்றி படுத்த படுக்கையாகவே உள்ளார்.


படிக்க: முகம்மது ஆஷிக் ஆணவப்படுகொலை நமக்கு உணர்த்துவது என்ன?


இந்தப் படுகொலை நடந்த பிறகு பல்வேறு கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள் முகமது ஆசிக்கின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறி வந்துள்ளனர். ஆனால், தற்போது வரை எந்த அரசியல் கட்சியும் போராட்டங்களோ ஆர்ப்பாட்டங்களோ நடத்தவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் அரசியல் ஆதாயங்களுக்காகவே நேரில் சென்று சந்தித்து விட்டு வந்துள்ளனர் என்று மக்கள் கருதுகின்றனர்.

சம்பவம் நடந்து 25 நாட்களுக்கு மேலாகியும் தமிழ்நாடு அரசோ மாவட்ட நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என ஆதங்கப்படுகிறார்கள் ஆசிக்கின் குடும்பத்தினர்.


படிக்க: இஸ்‌ரேலின் தாக்குதலால் காசாவின் நகரங்களை விட்டு வெளியேறும் பாலஸ்தீனியர்கள் | புகைப்படக் கட்டுரை


“இதுவரை மாவட்ட நிர்வாகம் எங்களை தொடர்பு கொண்டு பேசவே இல்லை; நாங்கள் தான் தொடர்பு கொண்டு தொடர்ந்து பேசி வருகிறோம். இந்த வழக்கை மிகவும் மெத்தனமான முறையில் போலீசு கையாண்டு வருகிறது. இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று கூறுகிறார் ஆஷிக்கின் அப்பா ஜாவித்.

“எந்தக் குற்றமும் செய்யாமல் எங்களது மகனை பிரிந்து தவிக்கிறோம். எங்களுக்கு எந்த விதமான சட்ட ரீதியான உதவியோ, நிதி உதவியோ அரசு செய்யவில்லையே ஏன்? அதே ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞரை பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் கொலை செய்திருந்தால் சும்மா இருந்திருக்குமா தமிழ்நாடு? போர்க்களமாக மாறி இருக்காதா? முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்தால் நாங்கள் பழிவாங்கப்படுகிறோமா? என்று கேள்வி எழுகிறது. முஸ்லிம்கள் ஓட்டு வங்கிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள். எங்கள் உயிரைப் பற்றி எந்த அரசுக்கும் கவலை இல்லை என்பது இந்த சம்பவத்தின் மூலம் நாங்கள் உணர்ந்துள்ளோம்” என்கிறார் ஆசிக்கின் சித்தப்பா வாகித்.

இந்த ஆணவக் கொலையைக் கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, சி.பி.எம் ஆகியோர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூரில் நடைபெற்ற அரசு விழாவில் தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்களை 16/08/2024 ஆசிக்கின் குடும்பத்தார் நேரில் சென்று சந்தித்து மனு கொடுத்துள்ளனர். இந்த விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சாந்தியிடம் அந்த மனுவை ஒப்படைத்துள்ளார் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். ஆனால், அந்த மனுவின் மீது இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுகின்றனர் முகமது ஆசிக்கின் குடும்பத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் சாந்தி, மாவட்ட கண்காணிப்பாளர் ஆகிய அனைவரிடமும் நேரில் சென்று சந்தித்து மனு கொடுத்துள்ளனர். “இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, நிதி உதவியும் செய்யவில்லை, வழக்கும் தீவிரமான முறையில் விசாரிக்கப்படவுமில்லை. தற்போது என் மகனுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை” என்கின்றனர் முகமது ஆசிக்கின் குடும்பத்தினர்.

இப்படுகொலையில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும். ஆசிக்கை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.


களச்செய்தியாளர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கல்வித்துறையில் ஆணையங்களும் கார்ப்பரேட்மயமும் | தோழர் தீரன்

கல்வித்துறையில் ஆணையங்களும் கார்ப்பரேட்மயமும் | தோழர் தீரன்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அறிவிப்பு: மதுரை அரங்கக் கூட்டம் | தேதி மாற்றம்

துரை மாட்டுத்தாவணி ராமசுப்பு அரங்கில் மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பாக ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடைபெறவிருந்த அரங்கக் கூட்டம் சில காரணங்களால் ஆகஸ்ட் 31 ஆம் தேதி மாலை 05:30 மணிக்கு மாற்றப்படுகிறது.

ஜனநாயக சக்திகள், பொதுமக்கள் என அனைவரும் ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

***

பாசிச மோடி அரசே, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு!

தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம்
அரங்கக் கூட்டம்

தேதி : 31.08.2024 நேரம் : மாலை 5.30 மணி
இடம் : இராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி, மதுரை.

தலைமை உரை :
தோழர் இராமலிங்கம்,
மாநில ஒருங்கிணைப்பாளர் மக்கள் கலை இலக்கிய கழகம்.

வாழ்த்துரை :
வழக்கறிஞர் மோகன் குமார்,
செயலாளர், மதுரை வழக்கறிஞர் சங்கம்.

வழக்கறிஞர். மு.ஆனந்த முனிராஜன்,
துணை தலைவர்,
வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டு குழு (JAAC).

சிறப்புரை :
வழக்கறிஞர் லஜபதிராய்,
மூத்த வழக்கறிஞர், மதுரை உயர் நீதிமன்றம்.

தோழர் அமிர்தா,
மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம்.

ம.க.இ.க சிவப்பு அலை கலை குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெறும்.

நன்றியுரை :
தோழர் சங்கர்,
மக்கள் கலை இலக்கிய கழகம்.

ஜனநாயக சக்திகள், முற்போக்கு இயக்கங்கள், வழக்கறிஞர்கள், சட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரும் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிக்கு அனைவரும் வருக!

  • மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: இந்துராஷ்டிரத்திற்கான போலீசு இராஜ்ஜியமே!
  • முடிவுக்கு வரும் சட்டத்தின் ஆட்சி! அரங்கேற்றப்படும் பாசிச கும்பல் ஆட்சி!
  • எதிர்க்கட்சிகளே, சட்டங்களைத் திருத்துவது அல்ல: திரும்பப் பெறுவதே தீர்வு!

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு),
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.

தொடர்புக்கு :
97916 53200, 94448 36642,
73974 04242, 99623 66321.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube