Wednesday, July 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 59

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக அறிவித்திடுக! வழக்குரைஞர் போராட்டம் வெல்க! | தோழர் மருது

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக அறிவித்திடுக!
வழக்குரைஞர் போராட்டம் வெல்க! | தோழர் மருது

28.02.2024 முதல்
இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில்,
எழும்பூர், சென்னை.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாசிச பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகரிக்கும் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள்!

0

2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் நாளொன்றுக்கு சராசரியாக இரண்டு முஸ்லீம் விரோத வெறுப்பு பேச்சு நிகழ்வுகள் நடப்பதாகவும், அதில் 498 (75 சதவிகிதம்) பாசிச பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நடந்துள்ளதாகவும் ”இந்தியா ஹேட் லேப்” (India Hate Lab) என்ற ஆராய்ச்சிக்குழு பிப்ரவரி 26 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

இந்தியா ஹேட் லேப் என்பது அமெரிக்காவின் வாஷிங்டன், டி.சி-யை (Washington, DC) தளமாகக் கொண்ட ஒரு ஆராய்ச்சிக் குழுவாகும். இது பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்படுகிறது.

”இந்தியாவில் வெறுப்பு பேச்சு நிகழ்வுகள்” (Hate Speech Events in India) என்று தலைப்பிடப்பட்ட இக்குழுவின் ஆய்வறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு நிகழ்வுகள் 255 நடந்துள்ளன; அதே வேளையில் ஆண்டின் இரண்டாவது பாதியில் இந்த எண்ணிக்கை 413 ஆக உயர்ந்துள்ளது. அதாவது ஆண்டின் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் 62 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

வெறுப்பு பேச்சுகளில் 36 சதவிகித (239) நிகழ்வுகள் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைக்கு நேரடியாக அழைப்பு விடுப்பவையாகவும், 63 சதவிகிதம் (420) லவ் ஜிஹாத், நில ஜிஹாத், ஹலால் ஜிஹாத், மக்கள்தொகை ஜிஹாத் போன்ற ”சதி கோட்பாடுகளை” உள்ளடக்கியதாகவும் இருந்தன. சுமார் 25 சதவிகிதம் (169) முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களைக் குறிவைக்கும் உரைகளை கொண்டிருந்தன.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றது. இந்த காலகட்டத்தில் வெறுப்பு பேச்சு நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெற்றன.


படிக்க: பாசிச இனப்படுகொலைகளுக்கு பக்குவப்பட்டுவிட்டது நாடு!


மகாராஷ்டிரா மாநிலத்தில் குறைந்தது 118 வெறுப்புப் பேச்சு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் 104 வெறுப்புப் பேச்சு நிகழ்வுகளும், மத்தியப் பிரதேசத்தில் 65 நிகழ்வுகளும், ராஜஸ்தானில் 64 நிகழ்வுகளும், ஹரியானாவில் 48 நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. உத்தராகண்டில் 41, கர்நாடகாவில் 40, குஜராத்தில் 31, சத்தீஸ்கரில் 21, பீகாரில் 18 வெறுப்பு பேச்சு நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.

இதில் விஷ்வ இந்து பரிஷத் – பஜ்ரங் தளம் 32 சதவிகித (216) வெறுப்பு பேச்சு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக, 46 சதவிகித (307) வெறுப்பு பேச்சு நிகழ்வுகள் சங்க பரிவார அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டவை.

மேலும், பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் டி ராஜா சிங் மற்றும் நிதேஷ் ரானே, அந்தராஷ்ட்ரிய இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா, இந்துத்துவவாதியான காஜல் ஷிங்காலா, சுதர்சன் நியூஸ் உரிமையாளர் சுரேஷ் சவ்ஹாங்கே, இந்து மதத் தலைவர்கள் (இந்து பயங்கரவாத சாமியார்கள்) யதி நரசிங்கானந்த், காளிச்சரண் மகாராஜ், சாத்வி சரஸ்வதி மிஸ்ரா ஆகியோர் அதிக வெறுப்பு பேச்சுகளுக்குக் காரணமான முதல் எட்டு பேச்சாளர்கள் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


படிக்க: விலைவாசி உயர்வு: அசாம் முதல்வர் சர்மா முஸ்லீம் வெறுப்பு பேச்சு!


”முஸ்லீம் விரோத வெறுப்பு பேச்சு இயல்பாக்கப்பட்டு இந்தியாவின் சமூக-அரசியலில் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்பதை எங்கள் பகுப்பாய்வு காட்டுகிறது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்காளர்களை துருவப்படுத்த முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு பரவலாக பயன்படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று ”இந்தியா ஹேட் லேப்” மற்றும் ”இந்துத்துவா வாட்ச்” ஆகியவற்றின் நிறுவனரான ரகீப் ஹமீது நாயக் (Raqib Hameed Naik) எச்சரித்துள்ளார்.

கடந்த ஜனவரி 29 அன்று, தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 இன் கீழ் ”இந்தியா ஹேட் லேப்” மற்றும் ”இந்துத்துவா வாட்ச்” ஆகியவற்றின் வலைத்தளங்களை பாசிச மோடி அரசு இந்தியாவில் முடக்கியது குறிப்பிடத்தக்கது. பாசிச மோடி அரசின் இந்த நடவடிக்கையைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ளப் போவதாக இவ்விரண்டின் நிறுவனரான ரகீப் ஹமீது நாயக் அப்போது கூறியிருந்தார்.

ஏதோ வெறுப்பு பேச்சுகள் தொடர்பான தரவு என்று எண்ணி இந்த செய்தியை நாம் அலட்சியமாகக் கடந்துவிடக்கூடாது. பாசிச சங்க பரிவார கும்பலின் வெறுப்பு பேச்சுகள் எவ்வளவு அபாயகரமானவை என்பதைப் புரிந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டை மட்டும் பார்ப்போம்.

அந்தராஷ்ட்ரிய இந்து பரிஷத்தின் (Antarrashtriya Hindu Parishad) நிறுவனரும் தற்போதைய தலைவருமான பிரவீன் தொகாடியா, 2023 ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று ஹரியானாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ”இன்று இஸ்ரேலின் முறை. அதே பாலஸ்தீனம் நமது கிராமங்களிலும், தெருக்களிலும் எழுச்சி பெற்று வருகிறது. அவர்களிடமிருந்து எங்கள் வளத்தை, எங்கள் பெண்களைக் காப்பாற்றுவது எங்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கிறது” என்று பேசினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தியாவில் முஸ்லீம்களை இனப்படுகொலை செய்வதற்கான தருணத்திற்காகக் காத்திருப்பதாகப் பொருள்படும் படி வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.

பாசிச கும்பலின் வெறுப்பு பேச்சுகளை இனிமேலும் அனுமதிக்க முடியாது. இந்தியாவில் காசாவைப் போன்றதொரு இனப்படுகொலையை நடத்த துடிக்கும் பாசிஸ்டுகளை முறியடிக்க வேண்டியது புரட்சிகர – ஜனநாயக சக்திகள் அனைவரின் கடமையாகும்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



இரக்கமில்லா தண்டவாளங்கள்

டக்கில் பிறந்த அவனையும்,
தெற்கில் பிறந்த என்னையும்
ஏனோ இணைக்கிறது
இந்த இரக்கமில்லா
இரு தண்டவாளங்கள்.

இந்த தண்டவாளத்தில் பயணிக்கும்
ஒரு ரயிலில், இரு வேறு வர்க்கங்களாய்
பயணம் நீள்கிறது.
பணம் இருப்பவனுக்கு
குளிர்சாதன அறையில் உயர் ரக உணவுகளுடன் உறக்கம் நீள்கிறது

மற்றொரு பெட்டியோ

ஆட்டையும், மாட்டையும்
அடைத்து சந்தையில் விற்க
கூட்டிச்செல்வது போல

நிரம்பி வலியும் மக்கள் கூட்டத்தில்
நிற்கக்கூட இடம் இல்லாமல்
நிற்கதியாய் பயணிக்கும்
ஒர் மனிதக் கூட்டம்
அவசரத்திற்க்கு மூத்திரம் வந்தாலும் அடக்கித் தான் வைக்க வேண்டும்
விடியும் வரை.
அவ்வப்போது கடந்து போகும்
உணவு பொட்டலங்களை
ஏக்கத்தோடு பார்க்கும் போது
மனித நேயத்தை மரணிக்கவே செய்கிறது
பலமுறை பார்த்திருக்க முடிந்தது
முன்பதிவு செய்யப்படாத ரயில் பயணங்களின் போது .

உழைப்பின் களைப்பில்
உறங்கும் விழிகளும்,
உழைப்பு சுரண்டலினால்
உருக்குழைந்த அவர்களின்
வாழ்க்கை நிலையையும்.

தமிழ்நாட்டினனோ
வெளிநாடுகளில்
கூலி அடிமைகளாய்,

தமிழ்நாட்டிலோ
வடமாநில இளம் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாய்!

உண்பதற்கோ சப்பாத்தியும்,உருளைக்கிழங்கும்
மட்டுமே பிரதானம்

இரவு பகல் உழைத்து
உடல் களைத்து தஞ்சம் அடைவதற்கோ
பத்துக்கு பத்து தகர கூடுகளே.
பகலில் உள் இருந்தால்
நெருப்பில் உருக்கிய இரும்பை உடல் முழுவதும் பூசியது போன்று இருக்கும்

இரவோ உறைய வைக்கும் குளிர்
உடல் எல்லாம் வெடவெடக்கும்
மழைக்காலம் வந்தால்
மண்டைக்குள் மச மசக்கும்
மழை சத்தம் வேறு ,
மருந்துக்கும் மருத்துவருக்கும்
செய்யும் செலவு வேறு

காதல், நட்பு என
மகிழ்ச்சியில் திளைக்க வேண்டிய
இளமைப் பருவம் முழுவதும் சிதைக்கப்பட்ட இளைஞர் கூட்டங்களாய்,
புத்தகங்களையும் கனவுகளையும்
பேரம் பேசி சந்தையில் பிடித்து வந்த அடிமைகளாய் கடக்கும் சிறார் கூட்டம்

தினமும் ஒரு வேளை
உணவு மட்டுமே உண்ணும்
தன் குழந்தைகளுக்கும், மனைவிக்கும்
ஒருவேளை உணவுக்காக
உயிரையே பனையம் வைக்கும்
எத்தனை தந்தைகளின் மனக்குமுறல்கள்
மௌனித்து, மரணிக்கிறது.

எங்களின் இரத்தத்தையும் உழைப்பையும் புசித்து, ருசித்த
முதலாளிகளின் அகோர பசி அடங்கவில்லையே இன்னும்.
இன்னும் , இன்னும் என கேட்கிறது
முதலாளிகளின் அடங்காத ரத்தவெறி.

ஆனால் இவர்களோ
நம் எதிரிகளாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்
போலி தமிழ் தேசியவாதிகளால்.

இந்த இனவாதிகள் மக்களிடம் ஓட்டுப் பொறுக்கவே இனவெறியை தூண்டுகிறார்கள்

இந்த இனவெறியாளர்கள் ஒருபோதும் அம்பானி, அதானியின் சுரண்டலை பற்றி பேசுவதே கிடையாது
இவர்களுக்கு அந்த
நோக்கமும் கிடையாது

இவர்களா தமிழர்களுக்கு எதிரி
இவர்களா திருடர்கள்
இவர்களா நம் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்

ஆம் என்றால்,
எவ்வளவு இழிவான பிறவிகள் நாம்.

’வடக்கனோ’, தமிழனோ
உழைப்பாளிகள் எனில்
யாவரும் ஒன்றாவோம்!

இந்தச் சுரண்டல்வாதிகளை
ஒழித்துக் கட்டுவோம்!!!


செந்தாழன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அசாம்: முஸ்லீம்கள் மீது சட்ட ரீதியான தாக்குதலைத் தொடுத்துள்ள பாசிச பாஜக

சாம் மாநிலத்தில்  நடைமுறையில் இருந்து வந்த முஸ்லீம் திருமண மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம் 1935 ஆனது பா.ஜ.க அரசால் கடந்த 23-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அசாம் பா.ஜ.க  அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

”மணமகனுக்கு 21, மணமகளுக்கு 18 என்ற சட்டப்பூர்வ வயது ஆகாவிட்டாலும்கூட திருமணத்தை பதிவு செய்ய அனுமதிக்கும் விதிகள் முஸ்லீம் சட்டத்தில் இடம்பெற்றிருந்தன. எனவே சட்டத்தை ரத்து செய்யும் நடவடிக்கையானது, அசாமில் குழந்தை திருமணத்தை தடுப்பதற்கான மற்றொரு முக்கியமான படியாகும்” என்று ஆளும் அசாம் பா.ஜ.க அரசால் கூறப்படுகிறது.

அம்மாநிலத்தில், முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம் 1935 -இன் அடிப்படையில் 94 முஸ்லீம் பதிவாளர்கள் (அரசு காஜிகள்) முஸ்லீம் திருமணங்களை பதிவு செய்து வந்தனர். அசாம் அரசின் நடவடிக்கையால் அது தற்போது   நிறுத்தப்பட்டுள்ளது.

”அசாமில் இதுவரை நடந்துள்ள முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்தை அரசு பதிவு செய்து வைத்துள்ளது. அப்படி திருமணத்தை பதிவு செய்யும் போது வயது, பிறப்பு சான்றிதழ் தொடர்பான எல்லா ஆவணங்களையும் சரிபார்த்து தான் அரசு காஜி திருமணத்தை செய்து வைக்கிறார். பிறகு எப்படி அவரால் குழந்தை திருமணத்தை செய்து வைக்க முடியும். இந்தச் சட்டத்தையும் மீறி குழந்தைத் திருமணம் நடந்திருந்தால், அரசு காஜி மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவரது உரிமத்தை ரத்து செய்திருக்க வேண்டும். இந்த சட்டத்தின் கீழ் குழந்தைத் திருமணம் நடந்ததாக அரசிடம் தரவு இருந்தால் அது வெளியிடப்பட வேண்டும். இப்படி செய்யாமல் பா.ஜ.க அரசு திட்டமிட்டே முஸ்லீம் மக்களை குறிவைக்கிறது” என்று குவஹாத்தி உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான ஹபீஸ் ரஷீத் அகமது செளத்ரி கூறியுள்ளார்.


படிக்க: அசாம் பலதார மணம் தடை மசோதா: பொது சிவில் சட்டத்தின் ஒரு பகுதியே!


பொது சிவில் சட்டம் என்பது சங்க பரிவார கும்பலால் ஒரு வாக்குறுதியாக தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. முஸ்லீம்கள் மீது சட்ட ரீதியாக தாக்குதல் தொடுப்பதற்கான முக்கிய ஆயுதமாக அது அவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

அதன் அடிப்படையில் தான், சமீபத்தில் – பிப்ரவரி 7 அன்று – உத்தராகண்ட் மாநில பா.ஜ.க அரசால் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வருகின்ற மே மாதம், நாடாளுமன்ற தேர்தல் முடிவிற்குப் பிறகு, பொது சிவில் சட்டத்தை அசாம் மாநிலத்தில் நிறைவேற்றப் போவதாக அசாம் பா.ஜ.க அரசு கூறியுள்ளது. அசாமில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் வேளையில் தான் முஸ்லீம் திருமண மற்றும் விவாகரத்து பதிவுச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அசாமின் மக்கள் தொகையில் 34 சதவிகிதம் பேர் முஸ்லீம்கள். அதாவது அசாமில் உள்ள மொத்த மக்கள் தொகையான 3.12 கோடியில் 1.06 கோடி பேர் முஸ்லீம்கள். எனவே, முஸ்லீம்களை வதைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகத் தான் அசாம் மாநிலம் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் லான்செட் குளோபல் ஹெல்த் நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, 5 சிறுமிகளில் ஒருவரும், 6 சிறுவர்களில் ஒருவரும், 18 வயதுக்கு முன்பே கட்டாயத் திருமணத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மத வேறுபாடின்றி நாடு முழுவதும் இத்தகைய அவலநிலை இருக்கும்போது, முஸ்லீம்களைக் குறிவைத்துத் தாக்க வேண்டும் என்பதற்காகவே அசாம் அரசு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. சமீபத்தில் குழந்தை திருமணத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்து  ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கைது செய்தது அசாம் அரசு. இதிலும் முஸ்லீம்கள் திட்டமிட்டே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாசிச கும்பலை எதிர்த்து, சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாகப் போராட வேண்டியது நம் அனைவரின் கடமை.


ஆதன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மாநில மதிப்பீட்டு புலம் – திறனறி தேர்வு எனும் ஏமாற்று வேலை | உமா மகேஸ்வரி

6-9 வகுப்பு மாணவர்களுக்கு நாளை (அதாவது பிப்ரவரி 26) முதல்…

திறன் அடிப்படையிலான மதிப்பீடு

தமிழ்நாடு அரசின் முன்னோடித் திட்டமான மாநில மதிப்பீட்டுப் புலம் என்று இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (இவங்களா பேர் போட்டுக்கிறாங்க போல முன்னோடித் திட்டம் என்று)

சுற்றறிக்கையில் இவர்கள் சொல்லும் நேரத்தில் வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஒரே நாளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 6-9 வகுப்பு குழந்தைகளையும் அவர்கள் பெற்ற கற்றல் விளைவுகளையும் (learning outcomes) திறன் வழித் தேர்வுகள் முறையில் (Skills – Competencies based) மதிப்பீடு செய்ய வேண்டும்.

ஏனுங்க, இன்னும் இங்கு கற்றலே நிகழாமல் தான் டிசம்பர் மாதம் வரை, 6-9 வகுப்பு மாணவர்களில் பெரும்பான்மையோருக்கு (60% and above) அடிப்படை வாசிப்புப் பயிற்சி வகுப்புகள் நடந்து வந்தன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாடப் புத்தகத்தில் இருக்கும் பாடங்களை முழுவதுமாக நடத்தக் கூட நேரமே இல்லை என்று ஆசிரியர்கள் புலம்பல் ஒரு பக்கம்.

ஒரு வகுப்பில்/பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குள்ளேயே கற்றலை மதிப்பீடு செய்வது என்றால், அந்த சம்மந்தப்பட்ட ஆசிரியர்க்கு தான் மாணவர் பற்றித் தெரியும். அந்த ஆசிரியர் செய்வது தான் உண்மையான மதிப்பீடு. அதோடு மாணவர்களுக்கு எந்தத் திறனையும் நாம் கற்றுக் கொடுக்கவில்லை, வெறும் மனப்பாடத் திறன்களை மட்டுமே வலியுறுத்தும் கல்வி முறையை வைத்துக் கொண்டு திறன்களின் அடிப்படையிலான மதிப்பீடு என்பதை எப்படி வரையறை செய்கிறோம் என்பது புரியாத புதிர்.


படிக்க: பள்ளி சிறுவர்களுக்கு PARAKH தேர்வு எதற்கு? கேள்வியெழுப்பும் ஆசிரியர் உமா மகேஸ்வரி


இந்தத் திட்டம் மாணவரை போட்டித் தேர்வுகளுக்கு தயாரிப்பு செய்யும் புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020 இன் திட்டத்தின் ஒரு வடிவம் தான். இது மையப்படுத்தப்பட்ட அதிகார முறை. இந்த முறையில் மாணவரின் உண்மையான திறனை மதிப்பீடு செய்ய இயலாது. பெரும்பாலும் ஒத்தையா இரட்டையா முறை தான் இதற்கு மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஏனென்றால் பாட நூலில் உள்ள கருத்துகளைப் புரிந்து சிந்தித்து பதில் தர வேண்டிய தரமான கல்வி பெறும் இடத்திற்கு நம் குழந்தைகளை ஆசிரியர்களாகிய நாம் இன்னும் தயார் செய்ய வில்லை. இங்குள்ள கல்விச் சூழலும் அத்தகைய மேம்பட்ட நிலையில் இல்லை‌.

வகுப்பாசிரியர் கட்டாயமாக குறிப்பிட்ட தேதிகளில் இத்தேர்வுகளை நடத்த வேண்டும் எனக் கூறுகிறது சுற்றறிக்கை. ஆனால் வழக்கமான பாடங்களை நடத்தும் நேரத்தை எங்கிருந்து பெறுவார்கள் என்பதை சுற்றறிக்கையில எங்கேயும் சொல்ல வில்லை. தலைமை ஆசிரியர்களும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், இது போன்ற சுற்றறிக்கைகளை ஆசிரியர்களது பள்ளிக் குழுக்களில் பகிர்ந்து அவர்களை செய்து முடிக்க விரட்டுவது மட்டுமே தலைமை ஆசிரியர்களின் அதிகார வரம்பின் எல்லையாக உள்ளது.

இந்த மாநில மதிப்பீட்டுப் புலம் வழித் தேர்வு என்பது, நம் மாணவர்களுக்கு தேவையா தேவையில்லையா என்பதை ஆசிரியர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் ஆசிரியர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு இருக்கிறதா என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வி. ஏனென்றால் அவர்களுக்கு இது பற்றி எல்லாம் அறிந்து கொள்ள ஆர்வமோ நேரமோ கிடையாது. வகுப்பில் தன்னிடம் உள்ள குழந்தைக்கு முழுமையான கற்பித்தல் நிகழ்த்தி கற்றல் விளைவைக் கொடுக்க முடியாது என்பதை அறிந்து இருந்தாலும் அதிகாரங்களின் கட்டுப்பாட்டில் தலையாட்டும் பொம்மைகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆக எப்படியாவது தேர்வை நடத்தியது போல ஒரு நாடகம் எல்லாப் பள்ளிகளிலும் நடக்கும்.

இந்தக் கடிதத்தில் பார்வையை கவனியுங்கள். இதற்காக ஒரு அரசாணையே போடப்பட்டுள்ளது (அரசாணை எண் 155). நவம்பர் மாதம் 2021/11/16. ஒரு அரசாணை போடப்பட்டு கொண்டுவரப்பட்ட திட்டம்.

ஏன் கொண்டு வருகிறது கல்வித்துறை, எதற்காக இந்த நடைமுறை, இதனால் மாணவர்கள் அடையும் நன்மை என்ன? நடைமுறை சாத்தியம் என்ன என்பதெல்லாம் ஆசிரியர் சங்கங்கள் கவனம் கொண்டனவா? இந்த சங்கத் தலைமைகள் துறையில் உயர் அலுவலர்களிடம் பேசினார்களா என்பதையும் இங்கு நாம் அனைவருக்குமான சந்தேகமாக முன்வைக்கிறோம். ஏனெனில் வகுப்பறையில் பாடம் நடத்தி மாணவர்களை உருவாக்க வேண்டியவர்கள் ஆசிரியர்களே. உண்மை நிலையைக் கூறி மாணவர்களுக்காக நிற்க வேண்டியதும் சங்கங்களின் பொறுப்பு அல்லவா?


படிக்க: பள்ளி மாணவர்களிடம் அதிகரிக்கும் போதைப்பொருள் கலாச்சாரம்! | ஆசிரியர் உமா மகேஸ்வரி


பாடப் புத்தகங்கள் என்னவோ SCERT தயாரிப்பு என்றாலும், இந்த மதிப்பீட்டு முறையான மாநில மதிப்பீட்டு புலத்தின் தயாரிப்பும் SCERT தான் செய்கிறது என்கின்றனர். இருந்தாலும் மாநில அரசின் நிதி 40% இத்துடன் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் திட்ட இயக்ககத்தின் (மத்திய அரசின் திட்டம் -சமக்கிர சிக்ஸா அபியான்) 60% நிதி வழங்குவதையும் வைத்துப் பார்த்தால், ஒருவேளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கம் இருக்கிறதாகவும் கூட ஒரு வகையில் புரிந்து கொள்ள முடிகிறது (இது ஆய்வுக்குறியதே).

தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஏன் இந்த மதிப்பீட்டு புலம் வழியாகத் தேர்வுகள் நடத்துவதில்லை? ரொம்ப எளிதாகப் புரிந்து கொள்ள முடியும், ஏனெனில் அங்கு மாணவர்களை இச்சமயத்தில் ஆண்டு இறுதித் தேர்வுக்கு தயார் செய்யும் வேலையில் பிசியாக இருப்பார்கள். அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு நன்றியுடையவராக இருக்க வேண்டும், அப்போதுதான் அவர்கள் கல்விக் கட்டணத்தை சரியாகக் கொடுப்பதோடு வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையும் பள்ளிகளுக்கு நடக்கும்.

ஆனால் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அதிகாரத்துக்கு நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும், அப்போதுதான் அவர்கள் பணிக்கு குந்தகம் வராது, பள்ளி மாணவர்கள் கற்றல் இழப்பைப் பற்றியோ கற்றல் அடைவை மதிப்பீடு செய்வது பற்றியோ கவனம் செலுத்த வேண்டியதேவை இல்லை, தலைமை ஆசிரியர்கள், BRT உள்ளிட்டவர்களின் வாட்ஸ் அப் செய்திகளுக்கு தரும் முக்கியத்துவத்தை மாணவர் சமுதாயத்திற்கு இழைக்கும் அநீதிகள் குறித்தான செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்தானவற்றுக்கு தரமறுப்பது ஏனோ!

அதோடு ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கும் நம் முதல்வர் கருத்தை ஆமோதிக்கும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கல்வி அமைச்சர் இந்த ஒரே மாநிலம் ஒரே தேர்வு முறையை ஏன் எதிர்க்கவில்லை என்ற கேள்வியையும் முன்வைக்கிறோம். ஆம்…கல்வி மாநிலப் பட்டியலுக்கு வரவேண்டும் என்று சொல்லும் நாம் மதிப்பீட்டு முறைகளை மாநில அளவில் ஒரே மாதிரியாக நடத்த அனுமதிப்பது சரியா என்றும் விவாதிக்க வேண்டும்.

சு.உமா மகேஸ்வரி
கல்விச் செயற்பாட்டாளர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மக்கள் அதிகாரம் மூன்றாவது பொதுக்குழு தீர்மானங்கள்

24.02.2024

மக்கள் அதிகாரம் மூன்றாவது பொதுக்குழு தீர்மானங்கள்

ன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே, தோழர்களே,

மக்கள் அதிகாரம் அமைப்பைத் தொடங்கிய நாள் முதல் 2021 வரை, கொள்கை அறிக்கை அமைப்பு விதிகளை வகுத்து, முறையாக அமைப்பில் வைத்து விவாதித்து நிறைவேற்றாமல் பின்பற்றப்பட்டு வந்த நவீன கலைப்புவாத, நவீன அராஜகவாதப் போக்குகளை முடிவுக்கு கொண்டு வந்தது, 2022 ஜனவரியில் நடந்த எமது அமைப்பின் முதல் மாநில மாநாடு. “காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்”, “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்”, “புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்” ஆகிய மைய முழக்கங்களின் அடிப்படையிலான கொள்கை அறிக்கை, அமைப்பு விதிகளை வகுத்து அதன் அடிப்படையில், அன்று முதல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது; ஆண்டு தோறும் முறையாக பொதுக்குழு கூட்டங்களை நடத்தி வருகிறது.

அந்த வகையில், 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி மாதம் 24–ஆம் தேதி வெற்றிகரமாக நடந்தேறியது.

மக்கள் அதிகாரம் மாநில இணைச் செயலாளர் தோழர் குருசாமி அவர்கள் மக்கள் அதிகாரம் கொடியை ஏற்றினார். பிறகு தியாகிகளுக்கு நினைவு சின்னத்தின் முன்பு பொதுக்குழு தோழர்கள் அனைவரும் வீரவணக்கம் செலுத்தினார்கள். தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் கூட்டம் தொடங்கியது. முதல் அமர்வு ஸ்டர்லைட் எதிர்ப்புப் போராளி தோழர் ஜெயராமன் அவர்கள் பெயரிலும், இரண்டாவது அமர்வு தோழர் சம்மனசு மற்றும் அம்பிகாபதி அவர்கள் பெயரிலும் துவங்கியது.

மக்கள் அதிகாரம் மாநில இணைச் செயலாளர் தோழர் குருசாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தலைமைக்குழு உறுப்பினர் தோழர் சாந்தகுமார் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. முதல் நிகழ்ச்சியாக மேலப்புலம் புதூரை தோழர் வெங்கடேசன் அவர்களுக்கு சிவப்பஞ்சலி செலுத்தப்பட்டது. 2023க்கான ஆண்டறிக்கை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சர்வதேசிய நெருக்கடிகளும் படர்ந்து வரும் பாசிச சூழலும் என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் செய்தித் தொடர்பாளர் தோழர் மருது அவர்களும் , இன்றைய அரசியல் நிலைமையும் பாசிசத்தை வீழ்த்தப்பட வேண்டிய கடமையும் என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் மாநிலச் செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்களும் உரையாற்றினார்கள். தோழர் சிவகாமு அவர்களால் பொதுக்குழு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.

ஆண்டுதோறும் ஜனவரியில் நடத்த வேண்டிய பொதுக்குழு கூட்டம் ஒரு மாதம் காலதாமதமாக நடத்தப்பட்டதற்கு மாநில செயற்குழு முன்வைத்த சுயவிமர்சனத்தை பொதுக்குழு ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. அந்த அடிப்படையில் 2023-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பாக மாநில செயற்குழு முன்வைத்த அறிக்கை, நிதி அறிக்கையைப் பொதுக்குழு விவாதித்த அடிப்படையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சென்ற 2022-ஆம் ஆண்டை விட 2023-ஆம் ஆண்டில் மக்கள் அதிகாரம் அரசியல் அரங்கில் முன்முயற்சியுடன் செயல்பட்டுள்ளது. முதன்மையான கட்சிகளுக்கு நிகராக மக்கள் அதிகாரம் நடப்புப் பிரச்சினைகள், மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக உடனுக்குடன் குரல் கொடுத்துள்ளது. தோழமை அமைப்புகள் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பாசிசத்திற்கு எதிராக போராடி முன்னேறி வருவதை இப்பொதுக்குழு வாழ்த்தி வரவேற்கிறது.

அந்த அடிப்படையில், 2022 ஜனவரி மாநாடு, 2023 ஜனவரி பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றத் தொடர்ந்து போராடி வந்துள்ளதை இந்தப் பொதுக்குழு அங்கீகரித்தது. மேலும், கீழ்க்கண்ட தீர்மானங்களை இப்பொதுக்குழு ஒருமனதாக முன்வைக்கிறது.

000

  1. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்ட சோதனையை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உள்ளது என்ற ஒரு காரணத்தை கூறி மேற்கொண்ட இந்த நடவடிக்கையானது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஜனநாயக இயக்கங்களையும் முடக்குவதற்கான சதிவேலை என்று மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.
  2. இராமர் கோயில் திறப்பு நடவடிக்கை என்பது இஸ்லாமிய மக்கள் மீது நடத்தப்பட்ட இன்னும் ஒரு தாக்குதலாகும். இது, இந்துராஷ்டிரத்திற்கான திறவுகோலே. இதனை வெறும் தேர்தல் பிரச்சார யுத்தியாக மட்டுமே சுருக்குவது தவறாகும். இதன் மூலம் பெயரளவிலான மதச்சார்பின்மைக்கு முடிவுகட்டி ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.; அம்பானி – அதானி பாசிச கும்பலின் ஆட்சியை அரங்கேற்றத்தின் ஒரு படி கல்லாகும். இதற்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டங்களை கட்டியெழுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகளையும் பாசிச எதிப்பு ஜனநாயக சக்திகளையும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
  3. அயோத்தி பாபரி மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்பொழுது ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபடுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் நீதித்துறை இந்துராஷ்டிரத்துக்கான ஒரு கருவியாக மாறி அப்பட்டமாக செயல்படுகிறது. உத்தராகண்ட் மாநில பா.ஜ.க. அரசு ஒரு மதரசாவை இடித்திருக்கிறது. அதையொட்டி போலீசால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கலவரத்தில் நான்கு இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு இசுலாமிய மக்களின் வழிபாட்டு தளங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அயோத்தி ராமர் கோயில் உட்பட இஸ்லாமியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இசுலாமியர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
  4. ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிச கும்பல் தனது பாசிச நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அமலாக்கத்துறையை ஏவிவிட்டு எதிர்க்கட்சிகளை மிரட்டியும் எதிர்க்கட்சி ஆளும் மாநில முதல்வர்களைக் கைது செய்தும் வருகிறது. அவ்வாறே பாசிச பிஜேபிக்கு கட்டுப்படாத ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எந்த ஒரு நபரையும் அமலாக்கத்துறை கைது செய்து தொடர்ந்து சிறைப்படுத்துவதற்கான கட்டற்ற அதிகாரத்தை பெற்றுள்ளது. அமலாக்கத்துறை மற்றும் என்.ஐ.ஏ ஆகியவற்றை கலைத்திட வேண்டும் என்று கோரிக்கையை எதிர்க்கட்சிகளும் இயக்கங்களும் முன்னெடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
  5. டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மார்க்ஸ், லெனின், பெரியார், பூலே படங்கள் உடைக்கப்பட்டதை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது. பாசிச ஆர்.எஸ்.எஸ்., ஏ.பி.வி.பி. அமைப்பினரை கல்வி நிலையங்களில் இருந்து முற்றிலுமாக ஒழித்துக் கட்ட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
  6. காஷ்மீருக்கான சிறப்புரிமையை ரத்து செய்த பாசிச மோடி அரசின் நடவடிக்கையை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது. மோடி அரசின் இப்பாசிச நடவடிக்கையை மக்கள் எதிர்க்கவில்லையெனில், காஷ்மீரிகளுக்கு மட்டுமல்ல, இனி, அனைத்து தேசிய இன மக்களுக்கும் இதுவே நடக்கும் என்று மக்கள் அதிகாரம் எச்சரிக்கிறது.
  7. காசா முனையிலும் மேற்குக் கரையிலும் தங்களது தாய் நாட்டை காப்பாற்ற போராடுகின்ற பாலஸ்தீன மக்களுக்கு மக்கள் அதிகாரம் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன் அவர்களுடன் இணைந்து தோள் கொடுக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு தெரிவிக்கிறது. போர் நிறுத்தத்தையும் போரையும் முடிவுக்கு கொண்டு வருவதில் பாசிச நெதன் யாஹூ அரசு செயல்படவில்லை என்பதை உணர்ந்த இஸ்ரேல் மக்கள் அவருக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதனை மக்கள் அதிகாரம் வரவேற்கிறது.
  8. அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்குத் திறந்து விடப்பட்டிருப்பதே இதற்கு அடிப்படை காரணம். அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.தென் மாநிலங்களின் நிதி ஆதாரங்களை வழிப்பறி செய்து கொள்ளையடிக்கும், தென்மாநில சிறு தொழில்களை அழிக்கும் ஜி.எஸ்.டி. வரியை இரத்து செய்ய வேண்டும் என மக்கள் அதிகாரம் வலியுறுத்துகிறது.
  1. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவிலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்தும் போராட்டத்தின் மீது துணை இராணுவப் படை கொண்டு மோடி அரசு தாக்கியுள்ளதை மக்கள் அதிகாரம் வன்மையாக் கண்டிப்பதுடன் விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு மக்கள் அதிகாரம் மோடி அரசை வலியுறுத்துகிறது.

000

  1. வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலத்தைக் கலந்த குற்றவாளிகள் இப்போது வரை கைது செய்யப்படாமல் இருப்பது என்பது, ஆதிக்கச் சாதி சக்திகள் அரசு அதிகாரத்தில் வலுவான நிலையில் இருப்பதையே காட்டுகிறது. இதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் குற்றவாளிகள் உடனே கைது செய்யப்பட வேண்டும் என்று மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறது.
  2. மேல்பாதி கிராமத்தில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையக்கூடாது என்று இப்பொழுது வரை ஆதிக்கச் சாதி வெறியர்கள் அக்கோயிலை திறக்கவிடாமல் போராடி வருகின்றனர். மேல்பாதி கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபடுவதற்கான அனைத்து உரிமைகளையும் இந்து அறநிலையத்துறை நிலைநாட்ட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
  3. விவசாய நிலங்களை அழித்துக் கொண்டு வரப்படும் பரந்தூர் விமான நிலைய விரிவாக்கத் திட்டம், செய்யாறு மேல்மா சிப்காட் திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் மக்களை மக்கள் அதிகாரம் வாழ்த்துவதுடன் மேற்கண்ட திட்டங்களை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.மதுரை மாவட்டம், மேலூர் வட்டாரத்தில் உள்ள ஓட்டக்கோவில்பட்டி, செக்கடிப்பட்டி, சேக்கிப்பட்டி , திருச்சுனை ஆகிய கிராமங்களில் பல வண்ண கிரானைட் குவாரிகளை அமைப்பதை எதிர்த்து அக்கிராமங்களின் மக்கள் போராட்டம் நடத்தி, கிரானைட் குவாரிகள் அமைக்கப்படுவதை முறியடித்துள்ளதை மக்கள் அதிகாரம் வாழ்த்தி வரவேற்கிறது. மேலும், மதுரை மாவட்டத்தில் கல்குவாரிகள் அமைப்பதற்கு தற்போது தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
  1. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சைலேஷ் குமார் யாதவ் டி.ஜி.பி.யாக நியமனம் செய்யப்பட்டதை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
  2. அம்மோனியா வாயு கசிவு, எண்ணெய் கசிவு என அடுத்தடுத்து வடசென்னை மக்கள் பாதிக்கப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்குவதுடன் எண்ணெய் கசிவுக்கு காரணமான சி.பி.சி.எல். நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; அமோனியா கசிவுக்கு காரணமான முருகப்பா கோரமண்டல் நிறுவனத்தை உடனடியாக மூடவேண்டும். மிக மோசமான நச்சு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் வட சென்னை மக்களுக்கு பெரும் ஆபத்தாக அமையவிருக்கிற காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கான அனுமதியை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
  3. சென்னை, தூத்துக்குடி பெருமழை வெள்ளம் – இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்காமல், கண்துடைப்பாக அற்ப தொகையை வழங்கி ஏமாற்றுவதை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது. வீடுகளை இழந்தவருக்கு வீடுகளை கட்டிக் கொடுப்பது, பொருட்களை இழந்தவருக்கு பொருட்களை வழங்குவது என்ற வகையில் முழு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். பேரிடர் என்று அறிவிக்க முடியாது, நிவாரணமும் வழங்க முடியாது என்ற பாசிச மோடி அரசை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.
  4. காவிரியில் தமிழ்நாட்டின் மீதான உரிமையை பாதுகாக்கவும் மீண்டும் மாபெரும் மக்கள் திரள் இயக்கத்தை கட்டியெழுப்பவும் தமிழ்நாட்டு மக்களை மக்கள் அதிகாரம் அறைகூவி அழைக்கிறது.
  5. தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த அநீதிக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இலங்கையுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
  6. நாங்குநேரி, பெருந்தெரு தாழ்த்தப்பட்ட பள்ளி மாணவர் மீதான தாக்குதலை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் ஆதிக்கச் சாதி சங்கங்கள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
  7. சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
  8. பாசிசப் படையின் உளவாளியாக இருக்கும் ஆர்.என்.ரவி நாகாலாந்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டது போல தமிழ்நாட்டில் இருந்தும் விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
  9. தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் டாஸ்மாக் உடனடியாக மூடப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
  10. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்ற வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

000

  1. “ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்” என்ற மைய முழக்கத்தின் கீழ் தோழமை அமைப்புகளுடன் இணைந்து “சுற்றிவளைக்குது பாசிசப் படை”, “வீழாது தமிழ்நாடு , துவளாது போராடு” என்ற முழக்கத்தின் கீழ் 2023 மே, மதுரையில் வெற்றிகரமாக மாபெரும் மாநாடு நடத்தப்பட்டது; 2024 நாடாளுமன்றத் தேர்தல்: “ வேண்டாம் பி.ஜே.பி, வேண்டும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் தோழமை அமைப்புகளோடு இணைந்து மேற்கொள்ளப்பட்ட இயக்கம் ஆகியவை மக்கள் மத்தியிலும் அரசியல் முன்னணியாளர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதை, ஒவ்வொரு தருணத்திற்கு ஏற்ப மிகச் சரியான அரசியல் முழக்கங்களை முன்வைத்து செயல்படுவதற்கான நிரூபணங்களாக இருப்பதை இந்தப் பொதுக்குழு பேருற்சாகத்துடன் வரவேற்றது.
  2. கடந்த 10 ஆண்டுக்கால ஆட்சியில் தனியார்மய-தாரளமய-உலகமயக் கொள்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தி நாட்டு மக்களை சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்தியும் தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு தொழில் முனைவோர், வியாபாரிகள், மீனவர்கள், மாணவர்கள், பெண்கள், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், பழங்குடியினர், தலித் மக்கள் என அனைத்து உழைக்கும் மக்களுக்கும் மாபெரும் அநீதியை இழைத்து வரும் பாசிச மோடி-அமித்ஷா கும்பலுக்கு நாட்டு மக்கள் முடிவு கட்ட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் தெரிவித்துக் கொள்கிறது. அமலாக்கத்துறை, தேர்தல் கமிசன் உள்ளிட்ட அனைத்து அதிகார அமைப்புகளையும் தனது ஏஜெண்டுகளாகப் பயன்படுத்தி, சட்ட விதி முறைகளை மீறி சர்வாதிகார முறையில் பாசிசத்தை அரங்கேற்றி வரும் இக்கும்பலை, தேர்தலில் வீழ்த்தி விட முடியும் எனக் கருதுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். ஜல்லிக்கட்டுக்கான தமிழ்நாட்டு மக்களின் போராட்டம், சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் போன்ற மக்கள் போராட்டங்கள் மட்டுமே மோடி-அமித்ஷா கும்பலைத் தோல்வி முகத்தை நோக்கித் தள்ளியுள்ளது. ஆகையால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில், இந்த பாசிச கும்பலைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் தேர்தலுக்கு வெளியே மாபெரும் மக்கள் போராட்டங்களைக் கட்டியெழுப்புவதைத் தவிர வேறுவழி ஏதுமில்லை என்று மக்கள் அதிகாரம் உறுதிப்பட கூறுகிறது.
  1. மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட ராஜு -காளியப்பன், முத்துக்குமார் – கோபிநாத் போன்றவர்கள் எமது அமைப்பு பெயரை தொடர்ந்து பயன்படுத்துவதை பொதுக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.


பொதுக்குழு,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டம்

பிப்ரவரி 22 அன்று தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழிலகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் – பணியாளர்கள்

சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை விடுவிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியா்கள் – பணியாளா்கள் பிப்ரவரி 23 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கிரீஸ் விவசாயிகள் போராட்டம் | புகைப்படங்கள்

0

பிப்ரவரி 20 அன்று கிரீஸ் தலைநகர் ஏதென்சில் சுமார் 8 ஆயிரம் விவசாயிகள் நாடாளுமன்றத்துக்கு முன்பாகக் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் கிரீஸ் பாராளுமன்றத்தை அலங்கரித்தன. போராடிய விவசாயிகள் ”விவசாயிகள் இல்லாவிட்டால் உணவே கிடையாது” என்று முழக்கங்களை எழுப்பினர்.

தற்போது இந்தியாவில் நடந்துவருவதைப் போல் ஐரோப்பிய நாடுகளிலும் விவசாயிகள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்பெயின், கிரீஸ், நெதர்லாந்து, போலந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் ஆங்காங்கு விவசாயிகள் போராடி வருகின்றனர்.

விவசாயத்தை மேற்கொள்வதற்கான செலவுகள் பலமடங்கு அதிகரித்து விட்டது; ஆனால் விவசாயிகளைக் காப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அரசு தலையிட்டு நிலைமையை சரி செய்ய வேண்டும் என்பது தான் விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது.

மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடுகள் 60 சதவிகிதத்திற்கும் மேல் குறைந்துவிட்டது என்றும், அவர்களின் வருவாயானது இதுவரை இல்லாத அளவிற்கு சரிந்து விட்டது என்றும் கிரீஸ் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

விவசாயத்திற்கு வரியில்லா எரிபொருள், கடன் தள்ளுபடி, வெளிநாட்டுப் போட்டியை கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கைகள், இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதங்களுக்கு விரைவான இழப்பீடு வழங்குவது ஆகிய கோரிக்கைகளையும் விவசாயிகள் முன்வைத்தனர்.

டிராக்டர் பேரணி நடந்து முடிந்த பின்னர் சில விவசாயிகள் இரவு முழுவதும் நாடாளுமன்றத்திற்கு வெளியே தங்கிவிட்டு அடுத்த நாளன்று (பிப்ரவரி 21) தங்கள் டிராக்டர்களுடன் வெளியேறினர்.

தீரமிகு கிரீஸ் விவசாயிகளின் போராட்டத்தின் புகைப்படங்களை வாசகர்களுக்குத் தொகுத்து வழங்குகிறோம்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஸ்டெர்லைட்டை மூட சிறப்பு சட்டம் இயற்றாமல் துரோகம் செய்யும் திமுக அரசு | தோழர் மருது

ஸ்டெர்லைட்டை மூட சிறப்பு சட்டம் இயற்றாமல்
துரோகம் செய்யும் திமுக அரசு | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



டெல்லி சலோ 2.0: மூன்று விவசாயிகளை கொலைசெய்த மோடி அரசு | தோழர் அமிர்தா

டெல்லி சலோ 2.0: மூன்று விவசாயிகளை கொலைசெய்த மோடி அரசு
| தோழர் அமிர்தா

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



கல்வியில் பொருளாதார சுரண்டல்! | சு.மூர்த்தி

தரம் குறைந்த அரசு பள்ளி! அதிகரிக்கும் தனியார் பள்ளி!
கல்வியில் பொருளாதார சுரண்டல்! | சு.மூர்த்தி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவசாயிகள் போராட்டம் | ஒடுக்கும் மோடி அரசு | சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் | முழக்கங்கள்

விவசாயிகள் போராட்டம் | ஒடுக்கும் மோடி அரசு | சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் | முழக்கங்கள்

மீண்டும் டெல்லி சலோ போராட்டம் நடத்தி, டெல்லியை நோக்கி செல்லும் விவசாயிகள் மீது கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது மோடி அரசு. இதனை கண்டித்து இன்று (22.02.2024) சென்னையில் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி, மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், வெல்ஃபேர் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மே 17 இயக்கம், ரெட் ஸ்டார், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் பங்கேற்றனர்.

போராடும் விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசை கண்டித்து விண்ணதிரும் முழக்கங்கள் எழுப்பப்பட்ட காணொளியை இங்கே பதிவிடுகிறோம்…

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



வெல்லட்டும் விவசாயி போராட்டம் – கானா பாடல் | தோழர் தீரன் | ம.க.இ.க | சிவப்பு அலை கலைக்குழு

வெல்லட்டும் விவசாயி போராட்டம் – கானா பாடல் | தோழர் தீரன் | ம.க.இ.க | சிவப்பு அலை கலைக்குழு

மீண்டும் டெல்லி சலோ போராட்டம் நடத்தி, டெல்லியை நோக்கி செல்லும் விவசாயிகள் மீது கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது மோடி அரசு. இதனை கண்டித்து இன்று (22.02.2024) சென்னையில் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி, மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், வெல்ஃபேர் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மே 17 இயக்கம், ரெட் ஸ்டார், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் பங்கேற்றனர்.

போராடும் விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசை கண்டித்து ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு சார்பாக தோழர் தீரன் பாடிய கானா பாடலின் காணொளியை இங்கே பதிவிடுகிறோம்…

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவசாயிகள் போராட்டம் | ஒடுக்கும் மோடி அரசு | தோழர் அமிர்தா ஊடகச் சந்திப்பு

விவசாயிகள் போராட்டம் | ஒடுக்கும் மோடி அரசு
சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் | அமிர்தா ஊடகச் சந்திப்பு

மீண்டும் டெல்லி சலோ போராட்டம் நடத்தி, டெல்லியை நோக்கி செல்லும் விவசாயிகள் மீது கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது மோடி அரசு. இதனை கண்டித்து இன்று (22.02.2024) சென்னையில் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி, மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், வெல்ஃபேர் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மே 17 இயக்கம், ரெட் ஸ்டார், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் பங்கேற்றனர்.

போராடும் விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசை கண்டித்து மக்கள் அதிகாரம், மாநிலப் பொருளாளர், தோழர் அமிர்தாவின் ஊடகச் சந்திப்பு காணொளியை இங்கே பதிவிடுகிறோம்…

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube