பள்ளி மாணவர்களிடம் அதிகரிக்கும் போதைப்பொருள் கலாச்சாரம்! | ஆசிரியர் உமா மகேஸ்வரி

பள்ளி மாணவர்களிடம் அதிகரிக்கும் போதைப்பொருள் கலாச்சாரம்! | ஆசிரியர் உமா மகேஸ்வரி

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

1 மறுமொழி

 1. தலைவிரித்தாடும் கார்ப்பரேட் உலகம்!
  அழிந்து கொண்டிருக்கும் மானுடம்!

  ★ ஜாதி,மதம்,இனம் என்னும் அடையாள அரசியலுக்குள்ளும் போதை, இணையதளம், சினிமா எனும் வலைப்பின்னலுக்குள்ளும் உலக மக்களை அடைத்துக்கொண்டிருக்கிறது கார்ப்பரேட் உலகம்!

  ★ லாபவெறி பிடித்த மிகை உற்பத்தி, ஆடம்பர நுகர்வு வெறி கலாச்சாரம். மற்றொரு பக்கம் கோடிக்கணக்கான மக்கள் பட்டினியின் பிடியில் தள்ளப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

  ★ தீவிரமாகும் கார்ப்பரேட் சுரண்டலால் வயிற்றுப்பிழைப்புக்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள்!

  ★ மக்களுக்கு கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, இருப்பிடம் இதற்கு உத்திரவாதம் செய்யாமல் இருப்பதன் மூலம் அரசுகள் கார்ப்பரேட்களின் பொம்மைகள்தான் என்பது அம்பலப்பட்டு கொண்டிருக்கின்றது.

  ★ கார்ப்பரேட் லாபத்திற்கான உற்பத்தியால் கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் விலங்குகளை விட மிக மோசமான வாழ்நிலையை எதிர்கொள்கிறார்கள், மக்கள்!

  ★ முதலாளித்துவம் கட்டியமைக்கும் நகர வாழ்க்கையானது பொருளாதார சிக்கலை தாண்டி மனநிலை சிக்கல்களையும் உருவாக்கி கொண்டிருக்கிறது!

  ★ பெரும்பான்மை மக்கள் அடையாள அரசியல், இணையதளம், சினிமா, டிவி,போதை என ஏதோ ஒரு சீரழிவுக்குள் மூழ்கடிக்கப்பட்டு நிதானமாக சிந்திக்க முடியாமல் வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்!

  ★ கார்ப்பரேட்கள் அவற்றின் பொம்மை அரசுகள் வழங்கும் கல்வி,மருத்துவம் ஆனது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்க்கும் அடிப்படைகளை வழங்கவில்லை!

  ★ இயற்கை வளச்சுரண்டல் அதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் சீர்கேடுகளால் பாதிக்கப்படுவது மக்கள் தானே அன்றி கார்ப்பரேட்களோ அதிகாரவர்க்கத்தினரோ அல்ல!

  ★கார்ப்பரேட் முதலாளிகளின் பேராசையால் உலகம் இடையறாது போர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அப்பாவி மக்கள் செத்து கொண்டிருக்கிறார்கள்!

  ★ கார்ப்பரேட் கொள்ளையர்களின் தீராத சுரண்டல், லாபவெறி சொத்துக்குவிப்பை தடுத்து நிறுத்தினால்தான் வாழ்விழக்கும் மக்களின் ஓட்டத்தை தடுக்க முடியும்!
  கார்ப்பரெட்களின் உற்பத்தி முறையானது லாபத்தை அடிப்படையாக கொண்டது, மக்கள் நலனை அடிப்படையாக கொண்டது அல்ல என்பதை இனியும் ஆதாரங்கள் தேடிக்கொண்டு இருக்க வேண்டியதில்லை!

  ★ உலகமக்கள் மீது கார்ப்பரேட்கள் நடத்திக் கொண்டிருக்கும் சுரண்டல் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்!

  ★ மனித குலம் சந்தித்து கொண்டிருக்கும் இந்த நெருக்கடிகளுக்கு காரணம் உடைமை வர்க்கம் நடத்தும் சுரண்டல் கொள்ளைதான் என்பதை மிகச் சரியாக மார்க்சியம் வரையறுத்துள்ளது!

  ★ லாபம், சுரண்டல், சொத்துக்குவிப்பு இவற்றை மார்க்சியத்தின் அடிப்படையான உற்பத்தி முறை, இயக்கவியல் என்ற பூதக்கண்ணாடி வழியாக பிரச்சனைகளை பரிசீலிக்கும் இளைஞர் கூட்டத்தை திரட்ட வேண்டும்!
  கார்ப்பரேட் கும்பல் நடத்திக் கொண்டிருக்கும் ஜனநாயகம்,தேர்தல், சர்வாதிகார ஆட்சி முறை நாடகங்களை திரைகிழித்து அம்பலப்படுத்த வேண்டும்!

  ★ மக்களை காப்பாற்ற ஒன்றிணைவோம்.. கார்ப்பரேட் சுரண்டலுக்கு முடிவு கட்டுவோம்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க