privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் - ஜூன் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் – ஜூன் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

-

புதிய-ஜனநாயகம்-ரூபாய்-வீழ்ச்சி

புதிய ஜனநாயகம் ஜூன் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

  1. உழைக்கும் மக்களின் விடுதலைக்காக தனது இறுதிக்காலம்வரை அயராது உழைத்த தோழர் சீனிவாசனுக்கு வீரவணக்கம்!
  2. ரூபாய் வீழ்ச்சி: வல்லரசுக் கனவுக்குச் சங்கு!
  3. நேபாளப் புரட்சி: பின்னடைவு அளிக்கும் படிப்பினை
  4. நித்தியானந்தா விவகாரம்: அசிங்கத்தில் விஞ்சி நிற்பது மதமா? சாதியா? சொத்தா? சி.டி.யா?
  5. புரட்சிகர அரசியலைப் பரப்பிக் கொண்டே மரணமடைந்த தோழர் செல்வராசுக்கு வீரவணக்கம்!
  6. கறுப்புப் பணம்: கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில்….
  7. தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! மீண்டும் உறுதிப்படுத்துகிறது மணியரசன் கும்பல்
  8. என்.எல்.சி.யின்  ஆண்டைத்தனத்துக்கு எதிராகத் தொழிலாளர்களின் தொடர் போராட்டம்
  9. குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர்கள் மீதான போலீசின் கொலைவெறித் தாக்குதலை எதிர்த்து பு.ஜ.தொ.மு.வின் ஆர்ப்பாட்டங்கள்!
  10. வீரப்பன் வேட்டை அட்டூழியம்: பிதாரிக்குப் பதவி உயர்வு!
  11. மோடியின் மதவெறிப் படுகொலைகள்: நரியைப் பரியாக்கியது சிறப்புப் புலனாய்வுக் குழு
  12. நின்னா வரி… நடந்தா வரி…. நெரிசல் வரி!

புதிய ஜனநாயகம் ஜூன் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

__________________________________

வினவுடன் இணையுங்கள்

  1. நேபாளத்தில் மன்னராட்சியை புறந்தள்ளி மாவோஷ்ட்டுகளின் அட்டுழியத்தால் நடந்த ஆட்சி மாற்றத்தால் என்ன நடந்துள்ளது? ஒன்றும் நடக்காமல் மக்கள் அல்லல்படும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. பட்டினிசாவுதான் அதிகமாக உள்ளது. முன்பு ரஷ்யா சீனா போன்ற நாடுகளில் நடந்தது போன்று வெளியில் தெரியாமல் “இரும்புத்திரையால்” மறைக்கப்படுகிறது!!! ஆனால் இந்தியாவில், அங்கு பாலும் தேனும் ஓடுவதுபோல் விளம்பரப்படுத்த்ப்படுகிறது!! இன்னும் கொஞ்சநாளில் எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிடும். அப்போதும் அமெரிக்காவையும் மற்ற பிற ஜனநாயக நாடுகளையும் குறைகூறி அவர்கள் மேல் நேப்பாள அரசியல் தோல்விக்கு பலிபோடுவார்கள். நல்ல ஜனநாயகம்(புதிய)!! பாவம் மக்கள்!!!!!

    • அண்ணன் தூங்கி ரொம்ப நாளாவுது போலருக்கு. என்னன்னெமோ உளருறாரு. மாவோஷ்டு ஆட்சில பட்டினி சாவுங்குறாரு, பாலும் தேனும் ஓடுதுன்னு இந்தியாவுல சொல்றாங்கன்றாரு, இரும்புத் திரைன்றாரு. அப்புறம் நேபாளத்துல அரசியல் தோல்வின்றாரு என்ன்னமோ போங்க கைப்புள்ளலாம் அரசியல் பேச வந்தா இப்படித்தான்.

      • மிஸ்டர் நட்டு(கலண்ட)ராயன் இன்னாதன் சொல்லவரீங்கோ, பெட்ரோல் விலை ஒண்ணு போதும்.. போய் ஜனங்க கிட்ட சொல்லி பாருங்க, விளக்குமாத்தாலேயே உங்க ஜனநாயகத்தை பிச்சுருவாங்க…..

  2. பேருந்து விற்பனை அனுபவம்:

    இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி பற்றி பேசுவதுதான் ஆரம்பம். கடந்த 7 மாதங்களில் இந்திய ரூபாயின் மதிப்பு 25% குறைந்திருக்கிறது. இது எதனால் நிகழ்ந்தது என்ற காரணங்கள் ஒரு புறமிருக்க, இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று பார்க்க வேண்டும். உடனடி விளைவாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகமாகும். அதன் முதல் தாக்கத்தை நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம். பெட்ரோல் விலையை 7 ரூபாய் ஏற்றினார்கள். இது போல விலைவாசி ஏற்றம் பரவி சமையல் எரிவாயு, டீசல் என்று விலை ஏறி மற்ற பொருட்களும் பாதிக்கப்படும்.

    நீண்ட கால நோக்கில் இது நாட்டை அடிமை நிலைக்கு கொண்டு தள்ளி விடும். நம்ம ஊர்களிலேயே பார்த்திருக்கிறோம். ஒருவர் நன்றாக வாழும் போது அவருக்கு கடன் கொடுக்க நிறைய பேர் இருப்பார்கள், அவர் நொடித்துப் போய் விட்டால், சொத்தை எல்லாம் அடமானம் வைத்துதான் கடன் வாங்க முடியும். இந்தியாவின் நிலையும் இப்போது அப்படித்தான். நமது இறக்குமதிகளை சரிக்கட்ட, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு நமது நிலங்கள், நீர் வளங்கள், மற்ற தேசிய உடமைகளை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். இப்படித்தான் முன்பு பிரிட்டிஷ் ஆட்சியில் காலனி ஆட்சியை ஏற்படுத்தினார்கள். இப்போது மறுகாலனியாதிக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

    ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி என்றால் பொருட்களை விலை உயர்த்துவதில் துடிப்பை காட்டும் அரசாங்கம் தொழிலதிபர்கள், பெரும் பணக்காரர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தைப் பற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. பெட்ரோல் விலை ஏற்றத்தை உடனடியாக தீர்மானித்து ஒரே இரவில் செய்து காட்டும் அரசாங்கம் கருப்பு பணம் மீது நடவடிக்கை எடுக்க பல ஆண்டுகளாக பேசிக் கொண்டேதான் இருக்கிறது.

    இன்னொரு பக்கம் பார்த்தால் இந்த மடாதிபதிகள், ஆதீனங்களின் அட்டகாசம். நித்யானந்தா சில கோடி ரூபாய்கள் கொடுத்து மதுரை ஆதீனத்தின் தலைவராக நியமனம் பெற்றிருக்கிறார். ஏன்? சிவனுக்கு தொண்டு செய்யவா? உண்மையில், ஆதீனங்கள், மடங்கள் போன்றவை பழைய மன்னராட்சி காலத்தில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை மானியமாக பெற்றன. பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான இந்த சொத்துக்களை யார் அனுபவிக்க வேண்டும் என்பதற்குத்தான் இந்த அடிதடிகள். ஆனால். பத்திரிகைகள் இந்த செய்திகளை நித்யானந்தா, ரஞ்சிதா வீடியோ என்று கிசுகிசு பாணியில் எழுதுகின்றனவே தவிர, மக்களை பாதிக்கின்ற அம்சங்களைப் பற்றி பேசுவதில்லை.

    சென்னை நகரத்தை எடுத்துக் கொள்வோம். நகரத்துக்குள் நெருக்கடி, அதாவது வாகன நெருக்கடி அதிகமாகி விட்டது என்றும் அதைக் குறைக்க நெரிசல் வரி விதிக்கலாம் என்று அரசு பரிசீலித்து வருகிறது. இந்த நெருக்கடி ஏன் உருவானது, இதை உருவாக்கியது யார்? என்று ஆராய்ந்து அதை தீர்க்க வழி செய்யாமல், இன்னொரு பக்கம் மக்களுக்கு இடியாக வரி வசூலிக்க திட்டமிடுகிறார்கள். பொது போக்குவரத்தை நலிவடையச் செய்து, பல லட்சம் பேரை இரு சக்கர வண்டி, கார் என்று வாங்க வைத்து சாலையில் நெருக்கடி, பெட்ரோல் தட்டுப்பாடு என்று உருவாக்கியதே அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான். அதை சரி செய்ய மீண்டும் நமது பாக்கெட்டுகளில் கை வைக்கிறார்கள்.

    இந்த நெருக்கடிகளை சமாளிக்க சம்பள உயர்வு பெற வேண்டும் என்றால் பெரும் போராட்டமாக இருக்கிறது. பெரும் பகுதி தொழிலாளர்கள் ஒப்பந்த முறையில் எடுக்கப்பட்டு பணி பாதுகாப்பு, நியாயமான ஊதியம், வாழ்க்கை நல வசதிகள் இல்லாமல் பணி புரிகிறார்கள். இப்படிப்பட்ட தொழிலாளர்கள் நெய்வேலி லிக்னைட் கார்பொரேஷனில் 2008ம் ஆண்டு முதல் போராடும் போராட்டம் பற்றிய விபரங்களும் இந்த இதழில் வெளியாகி இருக்கின்றன.

    புதிய ஜனநாயகம் 30 ஆண்டுகளாக வெளியாகி வரும் மார்க்சிய- லெனினிய அரசியல் ஏடு. விளம்பரங்களே இல்லாமல், லாப நோக்கம் இல்லாமல், மக்கள் நடுவே நேரடியாக பிரச்சாரம் செய்து விற்கப்படும் பத்திரிகை. விலை ரூ 10 மட்டுமே. வாங்கி படித்து ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க