privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்து மதம் கேட்ட நரபலி !

இந்து மதம் கேட்ட நரபலி !

-

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவோமென பார்ப்பன பாசிச பா.ஜ.க கும்பல் தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. மேலும் ஆட்சியைக் கைப்பற்றும் பட்சத்தில் இந்தியாவில் அதாவது அவர்களது பாரதத்தில் ராமராஜ்ஜியம் கொண்டு வருவோமென கொக்கரித்துள்ளது.  பாபர் மசூதியை இடித்தும், ஆயிரக்கணக்கான முசுலீம்களை பலியிட்டும் இந்து மதத்தை வளர்க்க நினைக்கும் இந்துமதவெறிக் கும்பல் ராமர் கோவில் கட்டுவது இருக்கட்டும், இருக்கும் ‘இந்துக்’ கோவில்களின் அருகதை என்னவென்று அவர்களால் கூட்டம் போட்டு பேச முடியுமா? இந்து மதம் என்பது வருண, சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டும் சிறைச்சாலை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நாட்டுப்புறங்களில் இருக்கும் கோவில்களில் தலித்துக்களுக்கு இன்றும் அனுமதியில்லை. எங்கெல்லாம் தலித் மக்கள் அந்த உரிமையை  கோருகிறார்களோ அங்கெல்லாம் ராமனின் வாரிசுகள் என்ன செய்கிறார்கள்? சூத்திரன் சம்புகன் நேரடியாக ஆண்டவனை வணங்கி தவம் இருந்தான் என்பதற்காக அதாவது ஒரு சூத்திரன் தெய்வத்தை தொழவேண்டுமென்றால் பாரப்பன பூசாரிகள் மூலம்தான் செய்யவேண்டும் என்பதற்காக அந்த சம்புகனை வெட்டிக் கொன்றவன் இந்த அயோத்தி ராமன். இது இராமயணத்தில் பலரது கவனத்திற்கும் வராத செய்தி. அந்த பார்ப்பனிய வெறிபிடித்த அயோக்கிய ராமனின் வாரிசுகள் இந்தியாவெங்கும் தாழ்த்தப்பட்ட மக்களை இன்றும் மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் கொன்று வருகிறார்கள். ஆம், இந்து மதம் சமீபத்தில் தென்தமிழகத்தில் நடத்தியிருக்கும் நரபலியை உங்கள் கவனத்திற்காக கொண்டு வருகிறோம். ராம ராஜ்ஜயம் குறித்து இந்திய மக்கள் எச்சரிக்கையாக இருக்கட்டும்!

திருநெல்வெலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டி கிராமத்தில், பெரும்பான்மையாக யாதவர்களும், கணிசமான அளவில் செட்டியார்களும், தாழ்த்தப்பட்டோரும் உள்ளனர். பெரும்பான்மையாக இருப்பதாலேயே யாதவ சாதி வெறியர்கள்  சாதித் தினவெடுத்து திமிருடன் நடந்து வந்துள்ளனர்.

கடந்த மார்ச் ஆறாம் தேதியன்று தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பரமசிவன், ஈஸ்வரன் ஆகிய இருவரையும் யாதவ சாதி வெறியர்கள் மறைந்திருந்து தாக்கிக் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். மேலும், யாதவ  சாதி வெறியர்கள் கொலை வெறியாட்டத்தில் படுகாயமடைந்த சுரேஷ் என்பவர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே, இக்கிராமத்தில் தாழ்த்தப்பட்டோரின் மீது திட்டமிட்டு சாதிய மேலாதிக்கத்தை ஏவி யாதவ சாதி வெறியர்கள் ஒடுக்கி வருகின்றனர். செந்தட்டி ஊரிலிருக்கும் முப்பிடாதி அம்மன் கோவிலில் மூன்று சாதி மக்களும் சேர்ந்துதான் கோவில் விழாவை நடத்துவது வழக்கம். கடந்த 2003இல் குடமுழுக்கு நடைபெற்ற பொழுது தாழ்த்தப்பட்ட மக்கள் தீர்த்தம் எடுத்துக் கொண்டு உள்ளே வருவதை யாதவ சாதியினர் தடுத்துள்ளனர்.

கடந்த வருடம் தாழ்த்தப்பட்டோருக்குச் சொந்தமான சுடலை மாடசாமி கோயில் திருவிழாவின் போது பாடப்பட்ட பாடல்கள் பிடிக்கவில்லை என்று கூறி, மின் இணைப்பை துண்டித்து ஆதிக்க சாதியினர் ரவுடித்தனம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர்  2008இல் முப்பிடாதி அம்மன் கொடை விழாவை யாதவ சாதியினர் நடத்தும்முன், கணக்குவழக்குகளை முறைப்படி நேர் செய்ய வேண்டும் என்று தாழ்த்தப்பட்டோர் கோரிக்கை வைத்தனர். பிறகு, இரு தரப்பினரும் தனித்தனியே விழா நடத்திக் கொள்ளலாம் என அனைவரும் ஒப்புதல் அளித்து, மாவட்ட போலீசு துணைக் கண்காணிப்பாளர் ஆர்.பாலகிருஷ்ணன் முன்னிலையில் கைச்சாத்து(ஒப்பந்தம்) இடப்பட்டுள்ளது.

ஆதிக்க சாதியினர் கொடைவிழாவை நடத்தி விட்ட நிலையில், மார்ச் 10ஆம் தேதி தமது கொடைவிழாவை நடத்தத் திட்டமிட்டு தாழ்த்தப்பட்டோர் மனுக் கொடுத்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்ய அவர்கள் முற்பட்டபோது, இதனை எதிர்த்து யாதவர்கள் நடைபாதைகளில் முட்களை வெட்டிப் போட்டு  யாதவ சாதிவெறியர்கள் இடையூறு செய்துள்ளனர். தாழ்த்தப்பட்டோர் ஒருவரின் வளர்ப்பு நாயை வெட்டிக் கொன்று குரூரத்தனத்தைக் காட்டினர். மேலும், தாழ்த்தப்பட்டோரை சமூக விலக்கம் செய்து ஊரில் உள்ள செட்டியார் கடைகளில் அவர்களுக்குப் பலசரக்கு விற்பதை நிறுத்திவிட்டனர்.

இந்நிலையில், யாதவ சாதிப் பெண் ஒருவர் வந்தபோது, புதர்க்காட்டில் மலம் கழித்துக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் எழுந்து நிற்கவில்லை என்ற அற்ப காரணத்தை முன்வைத்து இக்குரூரக் கொலைகளை செய்துள்ளனர். படுகொலைத் தாக்குதல் நடப்பதற்கு முன்பே தாழ்த்தப்பட்டோர் வீடுகளுக்குச் சென்று மிரட்டியுள்ளனர்.

சங்கரன்கோவிலில் இருந்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த கருப்பசாமி என்பவரை வழிமறித்து தாக்கியுள்ளனர். அவர் தப்பி ஓடிவிட்டதால்  அவருக்கு பின்னால் வந்த ஈஸ்வரன், பரமசிவம், சுரேஷ் ஆகியோரை தாக்கியுள்ளனர். ஈஸ்வரனின் கழுத்தை வெட்டித் துண்டாக்கி தலையை அறுத்தெடுத்து, இரண்டு துண்டுகளாகப் பிளந்துள்ளனர். பரமசிவத்தின் கை வேறு கால் வேறாக வெட்டித் துண்டாக்கி வீசியெறிந்துள்ளனர்.  இந்த வெறிச்செயலுக்கு பழிவாங்கும் உள்நோக்கம் மட்டும் காரணமல்ல. ‘இனி தாழ்த்தப்பட்டோர் யாராவது சம உரிமை கேட்டால் ஆதிக்கசாதி குரூரமாகப் பழிதீர்க்கும்’  எனும் பீதியில் தாழ்த்தப்பட்டோர் அனைவரும்  அஞ்சி நடுங்க வேண்டும் எனும் சாதிவெறிதான் வெட்டுப்பட்டு இறந்தவர்களையும் கண்டம் துண்டமாய்க் கூறுபோட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டோரைக் கொன்றொழிப்பது மட்டுமின்றி, பீகார் சாதிவெறி நிலப்பிரபுக்களைப் போல அந்த வட்டாரமெங்கும் ஆதிக்க சாதிவெறி பயங்கரத்தை நிலைநாட்டும் நோக்கத்தோடுதான் இப்படி கண்டம்துண்டமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

போலீசும், ஓட்டுக் கட்சிகளும், பத்திரிகைகளும், கோவில்கொடை தகராறு மட்டுமே இந்த பிரச்சினைக்கு காரணம் என்று கூறி இதன் பின்னணியில் உள்ள ஆதிக்க சாதிவெறியை மறைக்க முயலுகின்றன.

தம்மை மிகவும் பிற்படுத்தப்பட்டோராக அங்கீகரிக்கக் கோரி அரசிடம் கெஞ்சும் ஆதிக்க சாதியினர், சம உரிமை கோரும் தாழ்த்தப்பட்டோரை ஆண்ட சாதித் திமிரில் இவ்வாறு வெட்டிக் கொல்வதை ‘சமூக நீதி’ காவலர்களோ அல்லது இந்து ஒற்றுமை பேசும் ஆர்.எஸ்.எஸ் கும்பலோ கண்டிப்பதே இல்லை.

சி.பி.ஐ; சி.பி.எம்; கட்சிகளையும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமியையும் தவிர வேறெந்த தலித் தலைவர்களும் இக்கொடுமைக்கெதிராகக் குரல் கொடுக்கவில்லை. கிருஷ்ணசாமியோ, உயிர்நீத்தவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரியுள்ளார். மேலும், இந்தப் படுகொலையைச் செய்தவர்கள் சாதி மோதலை உருவாக்குவதற்காகத் திட்டமிட்டுக் கூலிப்படை துணையுடன் இதனைச் செய்துள்ளதாகச் சொல்கிறார். இதன் மூலம், இந்த படுகொலைதான் அங்கு சாதி மோதலை உருவாக்கியுள்ளது போன்ற கருத்தை உருவாக்கி, ஆதிக்க சாதி வெறியை மறைக்க முயலுகிறார்.

செந்தட்டி மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல கிராமங்களிலும் கோவில் வழிபாட்டுரிமை கோரும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியும் அரசும் கைகோர்த்து ஒடுக்குமுறையை ஏவி விடுகின்றன. இதே வட்டாரத்தில் இருக்கும் படர்ந்தபுளி கிராமத்தில், கோவில் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டதால் தாழ்த்தப்பட்ட மக்கள் ஊரைக் காலி செய்துவிட்டு மலையில் குடியேறிய சம்பவம் சில மாதங்களுக்கு முன் நடந்தது.

மக்களின் உரிமை போராட்டங்களின் போது சட்டம்ஒழுங்கு பேசும் போலீசோ, இங்கு ஆதிக்க சாதியினரின் ஏவல்நாயாக வலம் வருகிறது. யாதவ சாதியைச் சேர்ந்த சிலரை பெயரளவில் கைது செய்துவிட்டு, இன்னும் மூன்று தாழ்த்தப்பட்@டாரைப் படுகொலை செய்ய யாதவ சாதிவெறியர்கள் திட்டமிட்டிருப்பதாகப் பீதி கிளப்பி, ஒடுக்கப்பட்டோரின் அடுத்தக்கட்ட போராட்ட முயற்சிகளைப் போலீசு தடை செய்துள்ளது. பச்சைப் படுகொலைகள் செய்த சாதி வெறியர்கள் வெற்றிக் களிப்புடன் வலம் வரும் போது, உரிமைக்காக போராடிய ஒடுக்கப்பட்ட மக்களோ சங்கரன் கோவில் காந்திநகர் சமுதாயக் கூடத்தில் அகதிகளைப் போல தஞ்சம் புகுந்துள்ளனர்.

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2009

 1. அட ஆமாங்க, நீங்க சொல்வதெல்லாம் நிஜம்தான்..

  என்ன பன்றது..

  இங்க ஒன்னும் பன்ன முடியாது.ஏன்னா, இங்க தேவமாரும்,கோனாரும் வச்சது தான் சட்டம்.சில நேரத்தில இவங்க ரெண்டு பேரும் வெட்டிகுவாங்க.

  கோயில்ல இருந்து சுடு காடு வரை இவங்க வச்சது தான் சட்டம். நல்லா வட்டிக்கு விட்டு கொலுத்து அப்பாவிகளை கொல்றது தான் இவங்க வேலை.சி.பி.ம் சி.பி.ஐ,மத்த எல்லாவனுங்களும் இவங்களுக்கு சொறிந்து தான் விடுரானுங்க..
  கிருஸ்னஸாமி அதுக்கு மேல.

  ஆர் எஸ் எஸ் காரங்க மாறியே எல்லாம் பன்ராங்க.

 2. அந்த கோயிலின் கட்டுமானத்திற்காக தாழ்த்தப்பட்டவர்கள் ஒரு லட்சம் பணம் கொடுத்திருக்கிறார்கள். அதையும் வாங்கி கொண்டு, உள்ளே விடமாட்டேன் என்கிற ஆதிக்க சாதியினரை என்ன செய்வது?

  நீங்கள் சொல்கிறபடி, இப்பொழுது நடந்த அநீதியை கண்டிக்காத பலர், மீண்டும் அபூர்வமாய் எங்காவது, எப்பொழுதாவது திருப்பி தாழ்த்தப்பட்டோர் தாக்கும் பொழுது, எல்லோரும் அமைதியாக (!) இருக்க சொல்லி, ஆர்.எஸ்.எஸ். உட்பட எல்லொரும் வருவார்கள்.

 3. சிங்கள நரபலிக்கு ஒத்தூம் பன்னாடைத்தனமான மானங்கெட்ட அரசுகள் முதலில் தமது நாட்டு மக்களின் வேற்றுமைகளைக் களைய முனையலாமே. கண்டு கொள்ளாதவர்களை இந்த மக்கள் நிராகரக்க வேண்டும். பாரதி இன்று இருந்திருந்தால் எப்படிப் பாடியிருப்பாரோ !

 4. பாப்பான்களுக்கு இதை படித்ததும் கோபம் வருவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் அந்த ஆச்சரியக்குறி தொடர்ந்து நிமிர்ந்து நிற்க முடியாதபடி ஒடிக்கப்படவேண்டும். அதைத்தான் புதிய ஜனநாயகம் தொடர்ந்து செய்துவருகிறது. இதுகுறித்து பேசும் போது அங்கொன்றும் இங்கொன்றுமான நிகழ்வுகள் என்று கூறுபவர்கள், இந்த அங்கொன்றும் இங்கொன்றுமான நிகழ்வுகள் ஏன் அன்றிலிருந்து இன்று வரை எங்கெங்கிலும் நடத்தப்பட்டுவருகிறது என்பதை சிந்திக்கவேண்டும்.

  இந்த சிச்சுவேசனுக்கு பாரதி பாட்டு எப்படி இருக்கும் எனும் நொச்சியானுக்கு வாலி பாட்டைவிட மோசமிருக்காது என்று வேண்டுமானால் கூறலாம்.

  தோழமையுடன்
  செங்கொடி

 5. இந்தியா வல்லரசு வண்டியில ஏறி டாப் கீர்ல டுர்ர்ர்ர்ர்ர்னு போறதா பினாத்தும் ஐடி செட்டுகளை இந்த கட்டுரை எழுப்பட்டும்.

 6. தாழ்த்தப்பட்டவர்களே இல்லாமல் செய்ய பீசேபீக்கு ஓட்டு போடுங்கோ.

 7. அருமையான இணைப்புக்கு நன்றி வினவு. பெரியார் பிறந்த மண்ணிலேயே இது இன்னமும் நடக்கிறது என்றால் பின்தங்கிய வட இந்தியாவை ப்ற்றி நினைத்தால் மனம் பதறுகிறது. சாதி மிகக் கொடியது.

 8. ஊரிலுள்ளவர்கள் செய்யும் கொடுமைகளுக்கு வழிகாட்டும் சமயத்தை குற்றம் சொல்லுவது எனக்கு நியாயமாகப் படவில்லை!
  தவறிருந்தால் மன்னிக்கவும்!

 9. எந்த மதத்தில் குறைகள் இல்லை .மற்றவர் மதத்தை பற்றி பேச உங்களுக்கு யோகிதை இல்லை .உங்களால் முடிந்தால் தெருவில் உரக்க பேச முடிஉமா.இதை விட என்னால் எழுத முடிஉம்.வேண்டாம் போதும்

  .உங்கள் மேல் அவமதிப்பு வழக்கு போட முடிஉம் மறக்க வேண்டாம்
  ——————– —————–

  இதை தமிழிஷ்ல் கோவை சக்தி எனப்படும் jstar83 (எ)கோவை சக்தி பிதற்றியிருந்தது,

  அய்யா கோவை சக்தி மதத்தை விமர்சனம் செய்வது தவறு என்றால் அதை பிரச்சாரம் செய்வதும் தவறுதானே… சாமியார் மேல எப்ப கேசு போடுவீங்க

 10. நகரத்தில் வாழ்பவர்கள் இன்னும் சிலர் கேட்கிறார்கள். ‘சாதி எங்கே இப்பெல்லாம் பார்க்கிறார்கள்? இந்த மண்ணில் தினம் ஒரு தலித் இழிவுப்படுத்தப்படுவதாக ஏதோ ஒரு விவரணப்படத்தில் பார்த்தது தான் நினைவுக்கு வருகிறது!

  கொடூரமாக தலையை தனியாக வெட்டுகிற அளவுக்கு சாதிவெறி ஆதிக்க சாதிகளிடம் ஆழமாக வேரூன்றி கிடக்கிறது. இந்துமதம் இந்த மண்ணில் இருக்கும் காலம்வரைக்கும் மனித நரபலிகள் கேட்டுக்கொண்டு தான் இருக்கும்! அதை ஒழித்துக்கட்டாமல் இதற்கு தீர்வு கிடையாது.

  தேர்தலில் பங்கெடுக்கும் எந்த கட்சிக்கும் சாதியை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணமும் கிடையாது. அந்தந்த சாதிகாரர்கள் பார்த்து தான், எல்லா கட்சிகளும் வேட்பாளர்களை பார்த்து நிப்பாட்டுகிறார்கள்.

 11. http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=DK+members+beat+up+youth+at+a+meet+for+criticising+chief&artid=axMIumsN|Nc=&SectionID=vBlkz7JCFvA=&MainSectionID=fyV9T2jIa4A=&SectionName=EL7znOtxBM3qzgMyXZKtxw==&SEO=Dravidar+Kazhagam,Sri+Lanka

  DK members beat up youth at a meet for criticising chief
  editor on 05 April, 2009 04:09:07 | 50 times read
  Adjust font size:

  Dravidar Kazhagam (DK) volunteers beat up a youth at a public meeting on Saturday for criticising their leader K Veeramani over the Sri Lankan Tamils issue. The youth was identified as a member of the Makkal Kalai Elakiya Kazhagam (MKEK), an ultra Leftist outfit.

  The incident occurred when DK chief K Veeramani was addressing a meeting on “Parliamentary elections and Eelam Tamils issue”, at Periyar Thidal.

  When the DK chief was explaining the stand of the organisation vis-à-vis the Lok Sabha polls, a young man stood up and shouted slogans denouncing the stand of Veeramani on the Sri Lankan turmoil.

  The man, Pandian said the DK chief was simply echoing the views of Chief Minister M Karunanidhi on the Eelam tangle that did no good for the affected Tamils.

  Even as he tried to leave the hall, the young man was surrounded by dozens of DK workers and was beaten up.

  He was later dragged to the ground outside the hall and showered with ‘choicest abuses’.

  Pandian was later handed over to the police. The police also took a young man, who accompanied the MKEK office- bearer, into custody.

  Ironically, a DK information board that features sayings of Periyar and Veeramani everyday read on Saturday: “You should not allow emotions to rule yourselves… instead, you should rule over the emotions.”

  ‘Vote for DMK’

  Veeramani said the DMK and Congress did whatever they could on the Sri Lankan issue.

  Medical relief was sent, and External Affairs Minister Pranab Mukherjee also visited the island nation. It was important that the DMK combine should be voted to Parliament to ensure that secularists were at the helm of affairs, he noted.

 12. எப்படி சார் சாதி ஒழியும், சாதிய காங்கிரசுக்கு மாற்றா சுயமரியாதை திராவிட இயக்கம் வந்தது…. அப்புரம் காங்கிரசு திராவிட கட்சிகளோட சமரசம் செஞ்சுகிச்சு…அந்த கள்ள உறவுல பல பத்து சாதி கட்சிங்க தோன்றி இன்னிக்கு சாதிய வச்சு பொழப்பு நடத்துது.. இன்னிக்கு ஊரே வெட்டிகிட்டு செத்தாலும் திராவிட இயக்க மொதலைங்க வந்து சாதி ஒழிப்பு பிரச்சாரம் பண்ணுராங்களா? இல்லையே… அவங்க பெரியார வி்த்து சொத்து சேக்கறத தவுர வேற வேலையே செய்யக்காணும்… இனிமே பெரியார் பொறந்து வந்தா கூட தி.க ஆளுங்க அவர ஒரு சாதிக்கு தலைவர் ஆக்கிடுவாங்க சார். அப்பத்தானே இன்னும் ஒரு 100 வருசம் ஒக்காந்து திங்க முடியும்

 13. Hello Friend, Hope everything is fine.
  I am a researcher from psychology department. Interested in bloggers and their behavior. My research topic is “Improving self concept through blogging”. In connection with my research I need your help. If you spare your mail Id, I will be sending the research questionnaire to your mail Id. You can give your responses to the questionnaire. It will take only ten minutes to complete the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. To end with friendly note, I am always ready to help you if you have any queries or doubts related to psychology. Thank you.

  Regards
  Meharunnisha
  Doctoral Candidate
  Dept of Psychology
  Bharathiar University
  Coimbatore – 641046
  Tamil Nadu, India
  meharun@gmail.com

 14. நீங்கள் எல்லாம் திருந்தாத ஜென்மங்கள்

  உள்ளூர் பிரச்சினையை உலக பிரச்சினையா பார்க்கும் குணம்

  ஜாதி வெறிக்கும் மதத்திற்கும் என்ன தொடர்பு அப்ப நீங்கள் சொல்லும் தாழ்த்தப்பட்டோர் இந்துக்கள் இல்லையா? ( என்னை பொறுத்தளவில் தாழ்த்த பட்டோர் என்று யாரும் இல்லை)

  இன்றைய உலகத்தில் இருப்போர் இல்லாதாவர் என்று இரண்டே ஜாதிதான்.

  ஆமா அது என்ன செட்டியார், யாதவர் என்று மற்றவன் ஜாதியை சொல்ல தெரிந்த உங்களுக்கு. பாதிக்கப்பட்டவன் ஜாதியை சொல்ல என்ன தயக்கம்.

  அப்ப அந்த ஜாதியை பிடிக்கவில்லை என்றால் செட்டியார் / கவுண்டர் என்று ஜாதி சான்றிதலை வாங்குங்கள்.. இல்லை அரசை அப்படி அறிவிக்க கோருங்கள்.

  இன்று இந்த ஜாதியை கட்டி அழுவது நீங்கள் தான்.

  சில சரி பல கிராமங்களில் நீங்கள் சொல்லும் பிரச்சினை இருக்கிறது அது பேசியும் கடுமையான நடவடிக்கையாலும் திருத்த வேண்டியது / ஒழிக்க வேண்டியது.
  அதில் மாற்று கருத்து இல்லை.

  ஆனால் அந்த கிராமத்து யாதவனும் / செட்டியாரும் எப்படி ஒட்டு மொத்த இந்துக்களின் / இந்து மதத்தின் பிரதி நிதியாக முடியும்.

  இந்த பிரச்சினை நகரங்களில் இன்று உள்ளதா?

  திருப்பதி, பழனி, மதுரை மீனாட்சி சபரி மலையில் யாரையும் உள்ளே விட வில்லையா? (இன்று)

  //மதத்தை விமர்சனம் செய்வது தவறு என்றால் அதை பிரச்சாரம் செய்வதும் தவறுதானே///

  இன்று பல கிரமாங்களில் நீங்கள் சொல்லும் தாழ்த்தபட்டவர்களுக்கு தனி சர்ச் இருக்கே அது ஏன்? அதை பற்று எவனும் பேசவில்லையே.. ஏன்?

  உடல் ஊனத்தை குனப்படுத்துகிறேன் என்ற பேரில் ஜெபக்கூட்டங்களை நடத்தும் / மாதமாற்றம் செய்யும் பாதிரியார்கள் இல்லை யென்று சொல்லுங்கள்!

  எதிலும் தப்பு சொல்வதையே பிழைப்பாக நடத்தாமல் உங்கள் சக்தியை / திறமையை நீங்கள் சொல்லும் தாழ்த்தபட்டவர்களை பொறுளாதார ரீதியாக / கல்வி ரீதியாக மேம்படுத்த உதவுங்கள். அது தான் பலன் தரும்.

  வங்கி துறை தொடர்பு உள்ளவன் என்பதால் சொலிகிறேன். இன்று அரசு தரும் கல்வி கடனை அதிகம் பெறுபவர்கள் வசதி படைத்தவர்களே/ முன்னேறியவர்களே. (இது எனது பார்வை – நீங்கள் வேண்டுமானல் இங்கும் ஜாதியை புகுத்துங்கள்)

  ஆனால் முதல் தலை முறையாக கல்லூரியில் கால் வைக்கும் ஏழை மாணவர்கள் (நீங்கள் சொல்லும் தாழ்த்த பட்டவர்கள்) திறமை இருந்தும் வங்கிகளுக்கு நடந்தே கால் தேய்ந்தது தான் மிச்சம்.

  ஒரு அறிவிப்பு வெளியிடுங்கள் எத்தனை மாணவன் வருகிறான் என்று பாருங்கள். அவர்களுக்கு அந்த கடன் கிடைக்க செய்வதை ஒரு இயக்கமாக நடத்துங்கள்..

  அம்பானியை பிடிக்காது – அவனும் ஒரு காலத்தில் வளைகுடா நாட்டில் கூலி வேலை செய்தவர் தானே..

  நானோவை பிடிக்காது. சரி பெப்சிக்கும் / கோக்குக்கும் / சென்னை கார் நிறுவனங்களுக்கும் அரசு அளித்த சலுகைகள் என்ன அதையும் வெளியிடுங்கள்.

  முன்னேற்றம் வேண்டாம். புதியவை வேண்டாம் ஆனால் அதை பிரச்சாரம் செய்ய இந்த இணையம் என்ற வலைத்தளம் வேண்டும்.

  என்ன ஒரு முரண்பாடு.

  இன்று டாஸ்மார்க்கில் அதிகம் விற்பனை நீங்கள் சொல்லும் தாழ்த்தபட்டவரால் தான், அவனை குடி என்று எந்த மேல் ஜாதி நாயும் சொல்லவில்லை. அந்த மக்களை திருத்துங்கள்.

  மாற்றம் ஒரு நாளில் நடக்காது ஆனால் நிச்சயம் நடக்கும்.

  தவறுகள் தடுக்கப்படனும் / தப்பு செய்றவன் எந்த நாயா இருந்தாலும் தண்டிக்கப்படனும். ஆனால் அதை சுட்டி காட்டும் போது ஜாதி / மதம் என்ற போர்வையை போர்த்த வேண்டாம்.

  தப்பு செய்யறவன் எல்லா இடத்திலும் இருக்கான் / எல்லா மதத்திலும் / எல்லா ஜாதியிலும் இருக்கான்.

  உள்ளூரில் ஓணான் பிடிக்க தெரியாதவன் வெளியூரில் உடும்பு பிடிக்க போனனாம். அது போல தமிழ் நாட்டு தாழ்த்த பட்டோரி உரிமைக்காக போராட கட்சி ஆரம்பித்த திருமாவளவன்கள் உலக தமிழர்களின் காவலர் என்பது கேவலமாக இல்லை?

  இன்று அம்பேத்கார் என்ற அறிவு ஜீவியை தலித் என்ற வேலிக்குள் அடைத்து பிழைப்பு நடத்தும் செயலை என்னவென்று சொல்வது.

  சென்ற நூற்றாண்டில் இல்லாத ஜாதிய வெறியா? அதிக்க வெறியா இன்று தலை விரித்து ஆடுகிறது. அந்த காலகட்டத்திலேயே ஒரு சட்ட மேதையை உரு வாக்க தெரிந்த நீங்கள் சொல்லும் தாழ்த்த பட்டவர்களால், இன்று வரை இன்னொரு தரணி போற்றும் ஒருத்தரை உருவாக்க முடியாதது ஏன். ? மாற்று கருத்துள்ளவர்களை விவாதிக்க வாருங்கள் என்று அழைத்து அப்படி வருபவர்களை ஜாதி ரீதியாக திட்டி மனித தாக்குதல் நடத்தும் போக்கினை நிறுத்துங்கள்.. தயவு செய்து…

  சிந்தியுங்கள் செயல் படுங்கள்.

 15. நீங்கள் எல்லாம் திருந்தாத ஜென்மங்கள்

  உள்ளூர் பிரச்சினையை உலக பிரச்சினையா பார்க்கும் குணம்

  ஜாதி வெறிக்கும் மதத்திற்கும் என்ன தொடர்பு அப்ப நீங்கள் சொல்லும் தாழ்த்தப்பட்டோர் இந்துக்கள் இல்லையா? ( என்னை பொறுத்தளவில் தாழ்த்த பட்டோர் என்று யாரும் இல்லை)

  இன்றைய உலகத்தில் இருப்போர் இல்லாதாவர் என்று இரண்டே ஜாதிதான்.

  ஆமா அது என்ன செட்டியார், யாதவர் என்று மற்றவன் ஜாதியை சொல்ல தெரிந்த உங்களுக்கு. பாதிக்கப்பட்டவன் ஜாதியை சொல்ல என்ன தயக்கம்.

  அப்ப அந்த ஜாதியை பிடிக்கவில்லை என்றால் செட்டியார் / கவுண்டர் என்று ஜாதி சான்றிதலை வாங்குங்கள்.. இல்லை அரசை அப்படி அறிவிக்க கோருங்கள்.

  இன்று இந்த ஜாதியை கட்டி அழுவது நீங்கள் தான்.

  சில சரி பல கிராமங்களில் நீங்கள் சொல்லும் பிரச்சினை இருக்கிறது அது பேசியும் கடுமையான நடவடிக்கையாலும் திருத்த வேண்டியது / ஒழிக்க வேண்டியது.
  அதில் மாற்று கருத்து இல்லை.

  ஆனால் அந்த கிராமத்து யாதவனும் / செட்டியாரும் எப்படி ஒட்டு மொத்த இந்துக்களின் / இந்து மதத்தின் பிரதி நிதியாக முடியும்.

  இந்த பிரச்சினை நகரங்களில் இன்று உள்ளதா?

  திருப்பதி, பழனி, மதுரை மீனாட்சி சபரி மலையில் யாரையும் உள்ளே விட வில்லையா? (இன்று)

 16. //மதத்தை விமர்சனம் செய்வது தவறு என்றால் அதை பிரச்சாரம் செய்வதும் தவறுதானே///

  இன்று பல கிரமாங்களில் நீங்கள் சொல்லும் தாழ்த்தபட்டவர்களுக்கு தனி சர்ச் இருக்கே அது ஏன்? அதை பற்று எவனும் பேசவில்லையே.. ஏன்?

  உடல் ஊனத்தை குனப்படுத்துகிறேன் என்ற பேரில் ஜெபக்கூட்டங்களை நடத்தும் / மாதமாற்றம் செய்யும் பாதிரியார்கள் இல்லை யென்று சொல்லுங்கள்!

  எதிலும் தப்பு சொல்வதையே பிழைப்பாக நடத்தாமல் உங்கள் சக்தியை / திறமையை நீங்கள் சொல்லும் தாழ்த்தபட்டவர்களை பொறுளாதார ரீதியாக / கல்வி ரீதியாக மேம்படுத்த உதவுங்கள். அது தான் பலன் தரும்.

  வங்கி துறை தொடர்பு உள்ளவன் என்பதால் சொலிகிறேன். இன்று அரசு தரும் கல்வி கடனை அதிகம் பெறுபவர்கள் வசதி படைத்தவர்களே/ முன்னேறியவர்களே. (இது எனது பார்வை – நீங்கள் வேண்டுமானல் இங்கும் ஜாதியை புகுத்துங்கள்)

  ஆனால் முதல் தலை முறையாக கல்லூரியில் கால் வைக்கும் ஏழை மாணவர்கள் (நீங்கள் சொல்லும் தாழ்த்த பட்டவர்கள்) திறமை இருந்தும் வங்கிகளுக்கு நடந்தே கால் தேய்ந்தது தான் மிச்சம்.

  ஒரு அறிவிப்பு வெளியிடுங்கள் எத்தனை மாணவன் வருகிறான் என்று பாருங்கள். அவர்களுக்கு அந்த கடன் கிடைக்க செய்வதை ஒரு இயக்கமாக நடத்துங்கள்..

  அம்பானியை பிடிக்காது – அவனும் ஒரு காலத்தில் வளைகுடா நாட்டில் கூலி வேலை செய்தவர் தானே..

 17. நானோவை பிடிக்காது. சரி பெப்சிக்கும் / கோக்குக்கும் / சென்னை கார் நிறுவனங்களுக்கும் அரசு அளித்த சலுகைகள் என்ன அதையும் வெளியிடுங்கள்.

  முன்னேற்றம் வேண்டாம். புதியவை வேண்டாம் ஆனால் அதை பிரச்சாரம் செய்ய இந்த இணையம் என்ற வலைத்தளம் வேண்டும்.

  என்ன ஒரு முரண்பாடு.

  இன்று டாஸ்மார்க்கில் அதிகம் விற்பனை நீங்கள் சொல்லும் தாழ்த்தபட்டவரால் தான், அவனை குடி என்று எந்த மேல் ஜாதி நாயும் சொல்லவில்லை. அந்த மக்களை திருத்துங்கள்.

  மாற்றம் ஒரு நாளில் நடக்காது ஆனால் நிச்சயம் நடக்கும்.

  தவறுகள் தடுக்கப்படனும் / தப்பு செய்றவன் எந்த நாயா இருந்தாலும் தண்டிக்கப்படனும். ஆனால் அதை சுட்டி காட்டும் போது ஜாதி / மதம் என்ற போர்வையை போர்த்த வேண்டாம்.

  தப்பு செய்யறவன் எல்லா இடத்திலும் இருக்கான் / எல்லா மதத்திலும் / எல்லா ஜாதியிலும் இருக்கான்.

  உள்ளூரில் ஓணான் பிடிக்க தெரியாதவன் வெளியூரில் உடும்பு பிடிக்க போனனாம். அது போல தமிழ் நாட்டு தாழ்த்த பட்டோரி உரிமைக்காக போராட கட்சி ஆரம்பித்த திருமாவளவன்கள் உலக தமிழர்களின் காவலர் என்பது கேவலமாக இல்லை?

  இன்று அம்பேத்கார் என்ற அறிவு ஜீவியை தலித் என்ற வேலிக்குள் அடைத்து பிழைப்பு நடத்தும் செயலை என்னவென்று சொல்வது.

  சென்ற நூற்றாண்டில் இல்லாத ஜாதிய வெறியா? அதிக்க வெறியா இன்று தலை விரித்து ஆடுகிறது

 18. அந்த காலகட்டத்திலேயே ஒரு சட்ட மேதையை உரு வாக்க தெரிந்த நீங்கள் சொல்லும் தாழ்த்த பட்டவர்களால், இன்று வரை இன்னொரு தரணி போற்றும் ஒருத்தரை உருவாக்க முடியாதது ஏன். ? மாற்று கருத்துள்ளவர்களை விவாதிக்க வாருங்கள் என்று அழைத்து அப்படி வருபவர்களை ஜாதி ரீதியாக திட்டி மனித தாக்குதல் நடத்தும் போக்கினை நிறுத்துங்கள்.. தயவு செய்து…

  சிந்தியுங்கள் செயல் படுங்கள்.

 19. சாதிய பத்தி பேசாம உருப்படியா எதாவது செய்ய முடியுமான்னு யோசி, உன்னை மாதிரி சாதீயில குளிர் காய நெறயா தலைவர்கள் இருக்காங்க

 20. தோழர் அரடிக்கட்,

  அத பார்த்தேன்.ஆனா மனுசன் ரொம்பத்தான் குழம்பிபோயிருக்கிறார் . பைத்தியம் எல்லோரையும் பைத்தியம் ஆக கருதுமாம். அந்த முத்துவின் வாயிலிருந்து உதிர்த்த ரத்தினங்கள்

  1.நான் பி.சி எனக்கு கட் ஆப் மார்க் பத்தலஎம்பிசியா இருந்தா கிடச்சிருக்கும்(யோவ் மெண்டல் ஆர்.எஸ்.எஸ்.காரனுங்க பிந்து முன்னணி காரனுங்க வட மாவட்டங்கள்ல ஓட்டு கேக்கும் போது ராமன் வட நாட்டு வன்னியருன்னு MBC சொன்னானுங்க )

  2.எப்புடி எப்புடி எல்லாம் தானா கிடக்குமா ? என்னதம்பி ஒபிசிக்கு உயர் கல்வியில இடஒதுக்கீடுன்னு சொன்னதுக்கே மாடுமேய்க்குற பயலுக்கு எங்க என்ன வேலைன்னு கேட்டானுவளே. அப்ப என்னத்த புடுங்கப்போனேள்?

  3.தானா கிடக்கும் தானே உங்கப்பன் சங்கரன் எதுக்கு பெயுலுக்கு அலஞ்சான்

  4.தானாவா கிடச்சுது சேலைகட்டும் உரிமை,நாடார் சாதி பெண்கள் மார்பறுத்து கொல்லப்பட்டார்களே அதுவும் கடவுள் செயலா

  5.தாங்க முடியாத காமெடி எது தெரியுமா அதுக்கு சப்போர்ட்டா நாலு மெண்டல் வந்து கும்மியடிக்குறதுதான்

  அடச்சே அது ஒரு இந்துத்வா காமடிகாரன் என்னபண்ணுறது அதுக்கும் ஒரு விளக்கம் தர வேண்டியதா போச்சே

 21. நண்பர்களே..

  நான் இந்த raameeeshh இல்லை. அதே போல் புழுதிகாடு பதிவுக்கும் எனது பின்னூட்டத்திற்கும் சம்மந்தம் இல்லை.

  நான் ஜாதி வெறியை ஆதரிக்கவில்லை அங்கு நடந்த சம்பவத்தை காட்டு மிராண்டி தனத்தை, நானும் உங்களை போல கண்டிக்கிறேன்.

  ஆனால் அதற்கு இந்து மதம் கேட்ட நரபலி என்று சொல்வது தவறு என்பதே.

  அதே போல நமக்கு போராட பல வழிகள் இருக்கு. அதில் முக்கியமான வழி கல்வி மற்றும் பொறுளாதார முன்னேற்றம் தான்.

  அதை கையில் எடுங்கள் / எடுப்போம் என்பதே தாழ்மையான கருத்து.

  எந்த இடத்திலும் ஜாதியை ஆதரிக்கவில்லை அல்லது ஜாதியை முன்னிலை படுத்த வில்லை.

  என்னை கல்வியில் / பொறுளாதரத்தில் முன்னிலை பெற்றவனாகத்தான் அடையாளம் காட்ட விரும்புகிறேன்.

  அரசியலுக்கு ஜாதியை / மதத்தை பயன் படுத்தும் அனைவரையும் வெறுக்கிறேன். யாரையும் ஆதரிக்கவில்லை.

  பல நாட்கள் உங்கள் பதிவுகளை படித்திருக்கிறேன். பின்னூட்டம் எழுத தயங்கியதற்கு காரணம், எதிர் பின்னூட்டம் என்ற பெயரில் தங்களால் அல்லது தங்களின் ஆதரவால் / அனுமதியுடன் நடக்கும் தரம் தாழ்ந்த / தனி மனித தாக்குதல் தான். இது என்ன நாகரிகம் என்று தெரியவில்லை. (உங்களுக்கு எதிர் கருத்து தெரிவிப்பவர்களும் அவ்வாறு செய்வதும் தவறுதான் அநாகரிகம் தான்)

  முகம் தெரியாது என்ற வசதியாலா? இது.

  இதுவும் ஒரு வகையில் மனநிலை பாதிப்பா?

  நாளை ஒரு வேளை ஒரு பொது இடத்தில் விவாதம் செய்தால் இப்படித்தான் அந்த மகன் இந்த மகன் என்று பேசுவோமா?

  அர டிக்கெட் சொன்ன மாதிரி இது முதல் பின்னூட்டம் உங்கள் பதிவுக்கு ஆனால் பதிவுலகத்துக்கு புதியவன் இல்லை.

  இங்கு எதிர் கருத்துகளுக்கு இடம் இல்லை என்பது நன்றாக தெரிகிறது.

  மன்னிக்கவும் உங்கள் பதிவுக்கு பின்னூட்டம் எழுதியதற்கு இதுவே முதலும்
  கடைசியுமாக… இருக்கட்டும் விடைபெறுகிறேன்.

 22. //இந்நிலையில், யாதவ சாதிப் பெண் ஒருவர் வந்தபோது, புதர்க்காட்டில் மலம் கழித்துக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் எழுந்து நிற்கவில்லை என்ற அற்ப காரணத்தை முன்வைத்து இக்குரூரக் கொலைகளை செய்துள்ளனர்//

  வெக்கமா இல்லை?

 23. ரமேஷ் ஏதோ தனிமனித தாக்குதலுக்காக ஓடவில்லை,

  அவரின் சில பின்னூட்டங்களை பாருங்கள்,இது என்ன பதிவு யாதவ சாதிவெறியர்கள் அற்ப காரணத்துக்காக 2 பேரை கொன்று போட்டிருக்கிறார்கள்.சாதியை எதிர்ப்பவன் அதை இங்கு பதிவு செய்ய வேண்டியதுதானே. எதனால் நானோவையும் பெப்ஸியையும் எதிர்க்க வேண்டும் என்ற அறிவு சிறிதும் இன்றி பயித்தியக்காரன் போல திட்டியது யார்?

  அம்பானி தன் ரெண்டு மகன்களுக்கும் 100000கோடி வைத்து விட்டு செத்தானே அது எப்படி முடிந்தது ?

  ரமேசு சொல்லுறார் அவரு கூலி வேலை செஞ்சாராம் கஷ்டப்பட்டாராம்.வெங்காயம்.அதுக்கு சரியான பதில் தால் நீதான் போயி கழுவினியா என்பது.

  அம்பானி 10000கோடி பணத்த லோக்கல் கால்ன்னு ஐஎஸ்டிகால் ஐ மாத்தினானே அதுக்கு என்ன சொல்லுறீங்க.அதாலதான் நீதான் கழுவினியான்னு கேட்டாங்க. சொல்லுறதுக்கு பதில் இல்லைன்னா ஓடுறானுங்க அதுக்கு ஏன் வீரவசனம்.

  அப்புறம் என்ன தனிமனித தாக்குதல்

  ஒட்டு மொத்த சமூகத்தின் மீது சேற்றை வாரி இறைக்கும் மனிதன் மீது எப்படி பட்ட விமர்சனம் வைக்க வேண்டும். ரமேஷ் விமர்சனம் செய்யவில்லை மாறாக சாதி வெறி கொண்டு தனது கழிவறை வாயால் திட்டியிருந்தார் மேலும் மறுகாலனிய இந்த அடிமைப்புத்தியே இவரை இப்படி பேச வைத்தது. சமூகத்தின் மீதான வரன்முறையற்ற தாக்குதலை உழைக்கும் மக்கள் மீதான தனிமனித தாக்குதலை யார் தொடர்ந்தாலும் தக்க வகையில் திருப்பி எதிர்வினையாக கண்டிப்பாய் தொடரும்.

  அம்பானிக்கு சப்பை கட்டும் இந்த ரமேஷ் -டம் நாங்களும் கேட்கிறோம் அதே கேள்வியை

  அம்பானி கூலி வேலை செஞ்சு முன்னேற முடியும்னா எங்க தாத்தா என்ன இன்னும் கூலி வேல செய்யுறார் ஒருவேளை அவனைமாறி பிராடு தனம் செய்யமுடியாம இருந்ததுதான்

  இன்னா ரமேசு புர்தா

  புரிஞ்சா நீ வர மாட்டே ஆனா யோகியன் மாறி பேசாதப்பா ஏப்பா நீ யெப்படி வேணுமினாலும் மக்களை கேவலமா பேசுவ நாங்க கழுவப்போனியான்னு கேட்டதுக்கு கோச்சுக்குறீயேம்மா.

  வர்ட்டா டாட்ட்டா அம்ப்பானி வாழ்க –
  உனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குமே

 24. உங்களுக்கு ஜாதி ஒழியும்னு அக்கரையல்லாம் கெடையாது…உங்களுக்கு உங்க ஜாதிக்கு தேவர்,யாதவர் போல மரியாதை இல்லையேனு ஒரு ஆத்ங்கம்….அதுக்கு ஒன்னும் பன்ன முடியாது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க