வீடு நியாய வாடகையுடன் இருந்தது.
அமைந்துள்ள இடத்திற்கு
பெரிய சிறப்பில்லை.
வீட்டு உரிமையாளர் பெண்
அங்கு வசிக்கவில்லை என்பதை சொன்னாள்.
வேறொன்றும் பேச இருக்கவில்லை
வாக்குமூலமாக சொல்ல ஒன்றை தவிர.
‘மேடம்’ நான் ஆரம்பித்தேன்.
‘ஒரு தேவையற்ற பயணத்தை
தவிர்க்க விரும்புகிறேன்– நான் ஒரு ஆப்பிரிக்கன்’.
மறுமுனையில் நிசப்தம்.
அந்த மவுனம் செயற்கையாக
அழுத்தம் பெற்ற ஒரு நற்குணம்.
குரல் உயிர் பெற்ற போது
உதட்டு சாயம் பூசப்பட்டிருந்தது.
தங்க உருளையான நீண்ட சிகரட்-
பிடியின் ஒலி கேட்டது.
நான் சிறைபட்டிருந்தேன்
‘எவ்வளவிற்கு கருமை?…..’
எனக்கு சரியாகவே கேட்டது……..
‘நீங்கள் லேசான கருப்பா?
அல்லது ரொம்ப கருப்பா?’ பட்டன் B , பட்டன் A
வெளியேறாத மூச்சுக்காற்றின் துர்நாற்றம்
அந்த பொது தொலைபேசியகத்தை நிறைத்தது.
சிவப்புநிற தொலைபேசியகம்.
சிவப்பு அஞ்சல் பெட்டி.
சிவப்பு நிற ஈரடுக்கு ஆம்னி பேருந்து சாலையில்.
ஆம். எதுவும் கனவல்ல.
அமைதியும், சரணாகதியும் அவமானகரமாக இருந்தது.
அது வாய்ப்பூட்டை மெல்ல
திறந்து விளக்கம் கோரியது.
மீண்டும் அவள், அழுத்த மாறுபாடுடன்– நீங்கள்
‘ரொம்ப கருப்பா? அல்லது லேசான கருப்பா?’
உண்மை இப்போது மிகவும் உறைத்தது.
‘உங்கள் கேள்வி– சாதாரண சாக்லேட்டா?
அல்லது பால் சாக்லெட்டா? என்று கேட்பது போலவா’.
அவளின் அணுகுமுறை உணர்ச்சியற்றும்
எதிர்கொள்ள இயலாமலும் இருந்தது.
மெதுவாக ஒலி அளவை வேறுபடுத்தி நான் குறிப்பிட்டேன்.
‘மேற்கு ஆப்ரிக்க சீப்பியா’ — ஏதோ யோசித்தவனாக,
‘அது எனது கடவு சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது’.
எனது மனம் உடல் வண்ணத்தை
ஆராய மவுனம் பூண்டது.
அவள் குரலை வேறுபடுத்தி கடுமை காட்டினாள்.
‘என்ன அது? எனக்கு அது
என்னவென்று புரியவில்லை.
கருப்பு தலைமுடியை உடைய
வெள்ளைப் பெண் போலவா?
அப்படியிருந்தாலும் கருப்பு தான் இல்லையா?’
‘முழுவதுமாக அப்படியில்லை.
முகவமைப்பில் நான் ஒரு ப்ரூனட்’
‘ஆனால், மேடம் என்னுடைய மற்றவற்றையும்
பார்க்க வேண்டும்,நீங்கள்’.
‘எனது உள்ளங்கையும், கால்பாதமும்
வெளிறிய மஞ்சள் நிறம்’.
‘உட்காருவதால் ஏற்படும் உராய்வின் காரணமாக–
மேடம் —
எனது பின்புறக் குண்டி பளபள
கரும் பறவையின் நிறத்தில் இருக்கிறது’.
‘ஒரு நிமிடம் மேடம்’–
மறுமுனையில் இடியோசை கேட்டது— ‘
மேடம்’ —
நான் குழைந்தபடி,
‘நீங்கள் அதனை பார்க்க விரும்புகிறீர்களா?’
– வோல் சோயிங்கா
குறிப்புகள்:
சீப்பியா (sepia) — அடர் மாநிறம்
ப்ரூனட் (brunette)– கரும் பழுப்பு தலைமயிரும் வெள்ளைத் தோலும் உடையவர்.
Telephone Conversation by Wole Soyinka
ஆசிரியர் குறிப்பு:
மேற்கு நைஜீரியாவின் யோருபா நாட்டில் 1934 -இல் பிறந்த வோல் சோயிங்கா லீட்ஸ் பல்கலைக்கழக படிப்புக்கு பின்னர் லண்டனில் குடியேறினார். தனது எழுத்து இயக்கத்தின் பெரும் பகுதியை லண்டனில் மேற்கொண்டார். அவருடைய The Lion and the Jewel நாடகம் பெரும் கவனத்தை பெற்றது. ஒரு வெள்ளை இளைஞனின் ‘முற்போக்கு’ வசியம் ஒரு ஆப்ரிக்க இளம்பெண்ணிடம் தோற்பதை அழகாக சொல்லியிருப்பார். வெள்ளையர்களின் ‘நாகரிக’ உலக கண்ணோட்டம் கறுப்பின மக்களின் யதார்த்த, எளிமையான வாழ்க்கையை சிதைக்கும் நோக்கம் கொண்டிருப்பதை நாம் அறிய முடியும்.
இக்கவிதை 1950 –களில் பிரிட்டனில் கறுப்பின மக்கள் கடுமையான கண்காணிப்புக்கு ஆளாக்கப்பட்டு, சந்தேகத்துக்குரியவர்களாக கருதப்பட்ட நேரத்தில் வோல் சொயிங்காவால் எழுதப்பட்டது. வீடு தேடும் கறுப்பினத்தவருக்கு அவரின் நிறம், இனம் காரணமாக ஒரு வெள்ளையினப் பெண் மறுக்கிறாள். அவளுடைய கேள்வியில் தொனித்த கேலியை புரிந்து கொண்டவர், அதே மொழியில் பதிலடி தருகிறார். சென்னையில், ‘வெஜிட்டேரியன் ஒன்லி’ என்று அட்டை தொங்க விடப்படும் மாம்பலம், மைலாப்பூர் பகுதிகளில், அந்த வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் பார்ப்பன சூழ்ச்சியை, நமது பேச்சிலர்கள், தலித்துக்கள் இவ்வாறு தான் எதிர்கொள்கிறார்களோ?
_____________________________________________________________
– சம்புகன்
______________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]
தொடர்புடைய பதிவுகள்
இது சரியில்லை….?????????????
எது???? பின்புறமா அல்லது வெஜிடேரியனா
சென்னையில், ‘வெஜிட்டேரியன் ஒன்லி’ என்று அட்டை தொங்க விடப்படும் மாம்பலம், மைலாப்பூர் பகுதிகளில், அந்த வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் பார்ப்பன சூழ்ச்சியை, நமது பேச்சிலர்கள், தலித்துக்கள் இவ்வாறு தான் எதிர்கொள்கிறார்களோ? // This statement is idiotic. You mean there is no Vegetarian in other castes? Don’t try show a face that you guys are very much concerned about Dalit. You guys are the actual spoilers… Think before speak 🙂
கலைஞருக்கும், உங்கள மாதிரி கம்யூனிஸ்ட்களுக்கும் பொழுது போகலேன்னா, இருக்கவே இருக்கா.. ‘அவாள்’. அவ்வளவுதான் உங்க thinking.
சரி, ‘பிராமின்ஸ் ஒன்லி’ என விளம்பரம் கொடுப்பவர்களை என்ன செய்யலாம். அமெரிக்கா போல வீட்டு வசதியில் சமவாய்ப்பு சட்டம் போட்டு உள்ளே தள்ளலாமா ?
நீங்கள் வேண்டுமானால் ஒரு பிராமணராக இல்லாமல் இருந்தால் போய் ‘வெஜிடேரியன் ஒன்லி’ ஆத்துகளில் போய் நான் சைவம், பிராமணன் இல்லை என்று கூறி வீடு வாங்கி விடுங்கள். அங்கு தங்கும் வாடகை செலவு அத்தனையும் நான் கொடுத்துக் கொள்கிறேன்.
Mr. எவனோ seekaram veedu paarunga ingu oru Tyaagi irukkirar pola irukku???
நண்பரே. அந்த ஆஃபர் உங்களுக்கும் சேத்துத்தான்.
Isho lemabitten.. payment eppadi casha chequea
முதலில் முடிந்தால் வீடு பிடித்து காண்பி, வாடகை மட்டும் என்ன உணவும் தருகிறோம்.
you paamaran or “biraminan”?
பாக்க வர்றதுக்கு முன்னாடியே பொண்ணு கருப்பா சிவப்பான்னு தெரிஞ்சுக்க எவ்வளவு நேரம் ஆகும்?பொண்ணு பாக்க வீட்டுக்கு ஒரு கூட்டமாய் வந்துட்டு பொண்ணு கருப்பா இருக்கேன்னு ஆளாளுக்கு சத்தமாய் பேசிவிட்டு சாப்பிட்டுவிட்டு,போய் சொல்றோம்னு போன பிறகு மாப்பிள்ளை நம்பரை ப்ரோக்கர் மூலம் வாங்கி இதை விட அருமையான ஒரு வார்த்தையை சொன்னார் என் தோழி எதிர் முனை அதிர்ச்சியை நேராக பார்த்தோம்.
அய்யோ! என்ன வார்த்தை அது? சொல்லுஙக அய்யா சச்ப்னெசெ தாங்க முடியல!
நைஜீரியாவிற்கும் மைலாப்பூர் அவாலுக்கும் முடிச்சு போட்டு விட்டீர்களே! இதற்கு பெயர்தான் “சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவது” என்பதோ?? ஆனால், கேப்பே இல்லாமல், லாரி ஓட்டி விட்டீர்களே!!!
//ஆனால், கேப்பே இல்லாமல், லாரி ஓட்டி விட்டீர்களே!!!//
சார், கேப் இல்லாம எதுவும் ஓட்ட முடியாது. இங்க நெறைய கேப் இருக்கு. லீவுக்கு ஊருக்கு வரும்போது கொஞ்சம் துபாய் கூலிங்கிளாச கழட்டிட்டு பாருங்க. 🙂
இத வெலியீட்டு யென்ன சாதிக்க முடிஞது? ஒருபுடியா யெதவது போடுயா, சும்மா தொன்டி, குண்டி, கம்யுனிச்டுஇனு கிருகாத பயபுல்ல! போயா.
“எனது பளபள கருப்புக் குண்டியை காண விரும்புகிறீர்களா?”
னீ என்ன அறிவில இந்தத்தலைப்ப வச்ச..இந்தத்தலைப்ப வைக்கவேன்டிய அவசியம் என்ன?
அந்தக்கவிதையில மட்டமான வரீன்னா அது அந்த வரி தான் அதை தலைப்பா வைப்பது உன் ரசனை..
னீ எழுதும் கட்டுரைகளும் அதற்குநீ வைக்கும் தலைப்பும.. ****
//அந்தக்கவிதையில மட்டமான வரீன்னா அது அந்த வரி தான்//
….தொங்கும் அட்டையில் எழுதப்பட்டிருக்கும் ”வெஜிடேரியன் ஒன்லியை” விடவா
மூலத்தின் தெளிவான தமிழாக்கம்’ வேண்டுமானால் நீங்களே எனது புட்டத்தை நேரடியாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’. அந்த ஒரு சொற்றொடரில்தான் முழு கவிதையின் தீர்ப்பும் அர்த்தமும் அடங்கியுள்ளது. சரி நண்பரே. வேறு என்ன தலைப்பு வைக்கலாம் சொல்லுங்கள்.
பையா, கவிதையின் கருத்தை பற்றி விவாதிக்கவும், பெயரை அல்ல!
//அந்தக்கவிதையில மட்டமான வரீன்னா அது அந்த வரி தான் //
மட்டமான வரீன்னா அது இந்த வரி தான் , நீங்கள் ‘ரொம்ப கருப்பா? அல்லது லேசான கருப்பா?’
சென்னையில் பார்ப்பனர் அல்லாதவர்கள் மத்தியதர அடுக்ககங்களில் வாடகைக்கு வீடு பிடிப்பது சுலபம் அல்ல. அது பட்டவர்களுக்கே புரியும்.
ஒருவிஷயம் புரியவேயில்லை! சென்னைமட்டுமல்லாமல் மொத்த திழகத்திலேயே பார்ப்பனர்களின் சதவிகிதம் ஒரு 15% தேறுமா இதன் அடிப்படையில் பார்த்தால் தங்கள் தர்க்கம் எங்கோ உதைக்கிறதே?
தமிழக அளவில் பார்ப்பனர்கள் 5% க்கும் குறைவாகத்தான் இருப்பார்கள். ஆனால்,
1) படிப்பறிவு சார் தொழில்கள் மட்டும் செய்து வந்த பார்ப்பனர்கள், அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்தே சென்னை மற்றும் பிற நகரங்களுக்குக் குடி பெயரத் தொடங்கினார்கள். அதவாது நகரங்களில் அவர்கள் % அதிகம்.
2) பாதுகாப்பு, பொருளாதாரம், உறவுகளுடன் குடியிருத்தல் போன்ற காரணங்களுக்காக பார்ப்பனர்கள் 80 கள் தொடக்கம் அடுக்ககங்களையே விரும்பி குடியிருக்கிறார்கள்.
மேற்கண்ட காரணங்களால் தென் சென்னைப் பகுதியிலடுக்ககங்களில் 25% பார்ப்பனர் கட்டுப் பாட்டில் உள்ளன. சில அடுக்ககங்களில் எங்களைப் போன்றோர் வீடு கேட்டு நுழையவே முடியாத படி காவலாளியே பணிக்கப் பட்டிருப்பார்.
என் சொந்த அனுபவத்தில் திருவான்மியூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், சூளைமேடு இங்கெல்லாம் நான் சைவம் என்றாலும் பார்ப்பனன் இல்லை என்பதற்காகக் குடியிருக்க வீடு மறுக்கப் பட்டுள்ளேன்.
2005ல் ஆதம்பாக்கத்தில் ஒரு பார்ப்பனர் உங்களையோ உங்கள் பெயரையோ பார்த்தால் சைவம் போல் தெரியவில்லையே என்றார் (#$$##&&!).
நான் இதுவரை சிங்கப்பூர், தைவான், அமெரிக்கா, ஃபிரான்ஸ் நாடுகளில் பல வருடங்களாகத் தங்கியுள்ளேன். எங்குமே என் நிறத்தையோ, பிறப்பையோ வைத்து யாரும் எனக்கு குடியிருக்க வீடு மறுத்ததில்லை! ஆனால் நான் பிறந்த தமிழகத்தின் தலை நகரில் என்னால் ஒரு வீடு வாடகைக்குப் பிடிக்க முடியாது!
Naan veedu thedi alaiyum pothu ennai jaathi kettu izhivu paduthiya Aathambakkam avaalum, uyar saathiyinarum ninaivukku varukindranar. Naanum oru kevalamana aathikka saathikaaran endralum, athil naan perumalavum avamaanam adaikiren. adutha piravi irunthaal(apadi ondru illai)… naan dalith-aaga pirakka vendum!
பிளவு,
தமிழில் போடுங்க. 🙂
பின்னூட்டப் பெட்டியில் உள்ள ஒலிபெயர்ப்பு எளிதாக இல்லையெனில் கீழுள்ள சுட்டி உதவும்.
http://www.google.com/transliterate/tamil
நான் வீடு தேடி அலையும் போது என்னை ஜாதி கேட்டு இழிவுபடுத்திய ஆதம்பாக்கம் அவாளும் , உயர் சாதியினரும் நினைவுக்கு வருகின்றனர். நானும் ஒரு கேவலமான ஆதிக்க சாதிக்காரன் என்றாலும், அதில் நான் பெருமளவும் அவமானம் அடைகிறேன். அடுத்த பிறவி இருந்தால் (அப்படி ஒன்று இல்லை )… நான் தலித்-ஆகா பிறக்க வேண்டும்!
எந்த ஒரு கலை வடிவத்திலும் சொல்லிச்சென்றதை விட சொல்லாமல் விட்டுவிட்டவையே வாசகனை பார்வையாளனை சிந்திக்கவைக்கும், சிந்திக்கவைப்பதுதான் கலையும்கூட.அந்தவகையில் நைஜீரிய கவிஞனின் உண்ர்வுகளை அந்த கவிதையை பிரசுரித்ததோடு நிறுத்தியிருந்தாலே போதுமானது, அதுவே அக்கவிஞனின் சூழலை வாசகனுக்கு உணர்த்தியிருக்கும். தேவையில்லாமல் இந்திய பார்பனீயத்தை நைஜீரிய கவிஞனின் கழுத்தில் கட்டிவிட்டீர்கள்.
இது எப்படி இருக்கு தெரியுமா…தாத்தா கருனானிதியிடம், திமுக தோற்ற காரணத்தைக்கேட்டதற்கு அவர் சொன்னது பார்ப்பணர்களின் சதி…என்ன கொடுமை சார் இது…என்னே வாய் ஜாலம்..வாய் ஜாலம் கருனானிதிக்கு அடுத்து வினவிற்கே…
நண்பர் அவர்களுக்கு,
இக்கவிதை அதன் படைப்பு தன்மை மற்றும் கவித்துவத்தை விடவும் அதன் அரசியல் தன்மையையே அடித்தளமாக கொண்டுள்ளதாக படுகிறது. அந்த அரசியலை புரிந்து கொள்வதற்கு எந்த வகையிலும் பார்ப்பன ஒப்பீடு குறுக்கே நிற்கவில்லையே. மேலும் கவிதையில் எந்த இடத்திலும் நீங்கள் குறிப்பிடும் ‘இந்திய பார்ப்பினியம்’ சொருகப்படவில்லை. அப்படியிருக்க அப்பட்டமான ஒரு பொய்யை ‘பார்ப்பனர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை’ என்று ஆங்கில ஊடகங்களில் உளறும் அம்பிகள் பாணியில் அவிழ்த்து விட்டிருக்கிறீர்கள்.
//தேவையில்லாமல் இந்திய பார்பனீயத்தை நைஜீரிய கவிஞனின் கழுத்தில் கட்டிவிட்டீர்கள்.//
பத்திரிகையில் ‘வீடு வாடகைக்கு’ பகுதியில் ‘பிராமின்ஸ் ஒன்லி’ என்ற பதம் இன்னும் வழக்கில் இருக்கிறது. ஏன் எல்லாரும் சாதி வேறுபாடு பார்க்காமல் திருமணம் செய்ய ஆரம்பித்து விட்டார்களா? 1950 -இல் இங்கிலாந்துக்கு பொருத்தமாக இருந்த கவிதை இன்றைக்கும் இந்தியாவுக்கு பொருத்தமாக இருக்கிறது. //தேவையில்லாமல்// இதை இன்று வினவு வெளியிடவில்லை.
இப்பெல்லாம் யாருங்க சாதி பாக்குறாங்க – அப்படின்னு சொல்லிடுவீங்க போல… 🙂
கருணாநிதியே கண்ணீர் விட்டு கதறி அழுது நான் பார்ப்பன எதிர்ப்பை கை கழுவி பல வருடங்கள் ஆகின்றன
என்று கூறினாலும் பர்ப்பனர்கள் அதை நம்பத் தயாராக இல்லை.. அது தந்தை பெரியாரிடம்
வாங்கிய அடியினால்வருகின்ற பயம்..திராவிடக் கழகம் பெரியார் கொள்கையை புதைத்த இடத்தில் புல் கூட
முளைத்திருக்கலாம்.. ஆகவே பார்ப்பனர்கள் கருணாநிதியைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியமில்லை.
ஆனால் ம.க.இ.க வை அப்படி நினைத்து ஏமாந்து விட வேண்டாம்.. 1993-ல் திருவரங்கத்திலும், 2008-ல்
தில்லையிலும் மற்றும் பல இடங்களிலும் பூனூலும், குடுமியும் அறு பட்டதை மறந்து விட வேண்டாம்..
கருணாநிதியே கண்ணீர் விட்டு கதறி அழுது..
Andha aalu enga azhuvanum… Andha oozhal Mudhalaya ivlo naal aatchila ukkara vechadhukku makkal thaan azhaanum
அப்ப அந்த பாப்பாத்தி ஜெயலலிதா தான் நேர்மையின் மறுபக்கமோ? முட்டாள்களே ! அவள் ஜெயலலிதாவை ஆட்சியில் அமர்த்தியதட்கு தற்போது வாட் போட்ட நானும் தமிழக மக்களும் வருத்தப்படாத நாளே இல்லை.
Ada Sombugala!!!!Ayirandhan sollunga karunananidhi thirudanum andha aaloda kollakara kudumbamum adicha kollaya ulaga varalaatrula adichikka mudiyadhu..
paaru Karunanidhiya thituna vidna enna kovam varudhunnu?
அடக்கு முறை, ஏற்றத்தாழ்வுகள் அனைத்து இடத்திலும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை என்றாலும்
அடக்குமுறைக்கான காரணமும், அடக்குபவர்களின் மனநிலையும் ஒப்பீட்டளவில் ஒரே மாதிரியாகத்தானிருக்க்கிறது.
ஆகவேதான் கட்டுரையில் பிரிட்டனில் நிறவெறியினால் அடக்கப்பட்ட கருப்பின மக்களும், இங்கு தலித் என்பதால்
ஒடுக்கப்படும் மக்களும் ஒப்பிடப்படுகிறார்கள்.. இதில் என்ன தவறு?
எல்லாமெ தான் கட்டுரை fஉல்லா
ஏனோ தெரியவில்லை,ஹிந்து மதத்தில் மட்டும் தான் இனவெறியும் நிறவெறியும் தலைவிரித்து ஆடுவதாக வெற்று கூச்சலிடும் நண்பர்களின் கருத்துக்கள் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது…
—
மாக்ஸிமம்
எனது பளபள கருப்புக் குண்டியை காண விரும்புகிறீர்களா? – இக்கவிதை படித்து இரசிப்பதற்காக அல்ல. அல்லது கவித்துவத்தை மெச்சுவதற்காக அல்ல. கருப்பின மக்கள் மீது ஏவப்படும் இனரீதியான தீண்டாமை தொலைபேசியிலேயே இப்படி இருக்கிறது என்றால் நேரில் எப்படி இருக்கும்!
பிராமணாள் ஓட்டல் என்பதும், அசைவம் கூடாது என்பதும் தீண்டாமையை வெளிப்படுத்தும் செயல்தான். “மாட்டுக்கறி உணவா” என ஏளனம் செய்வதும் தீண்டாமையின் வெளிப்பாடுதான். இப்படி தீண்டாமை இன்னும் பல்வேறு வடிவங்களில் நமது நாட்டில் நிலவத்தான் செய்கிறது. தீண்டாமை இல்லை என மறுப்பதும் மற்றொரு வகை தீண்டாமைதான்.
வலை உலக நண்பர்களே! (வெகு சிலர்தான்)சமூக நடப்பை பரீசிலித்துப் பாருங்கள்.உண்மை விளங்கும்.
படித்தவர்களின் தீண்டாமை:
சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர்களிடமா?
http://hooraan.blogspot.com/2011/06/blog-post.html
நீங்கள் சுடியுள்ளது ரேசிசம்
வர்ணாசிரம(இந்து) மதம் செய்வது பார்ப்பனிசம்
ஆனால் செய்யப்படும் கொடுமை எல்லாம் ஒன்றே
***
மனித கூட்டங்களில் ஏதாவது ஒரு மொள்ளமாரி / முடிச்சவிக்கியின் / தத்துவ இம்சைகளின் பேரில் இப்படியான விசயங்கள் நடந்தேறிகொண்டே உள்ளது.
சைவாளை விடுங்கள். அசைவாளில் பன்னி அசைவாளை ஒட்டக அசைவாளுக்கு பிடிக்காது. பன்றிக்கறி விற்கும் தலித்திற்கு காயல்பட்டணத்தில் வீடு கொடுப்பார்களா சொல்லுங்கள்? இதுமதவாதம். எங்க சொல்லி அழ?
**
ரேசிசம்,பாசிசம்,நாசிசம்,ரிலிஜனிசம் வழியில் அடுத்து வருவது பார்ப்பனிசம்.
பார்ப்பனிசம் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு பார்ப்பது. வர்ணாசிரமக் கொடை இது. இதியாவில் பிறந்தாலே சாதியுடந்தான் பிறக்கமுடியும். மதம் மாறினாலும் சாதி தொடரும். கிறித்துவ நாடார், கிறித்துவ தலித் …
**
கொடுக்கப் பட்ட சுட்டியில் ஆங்கில மூலம் உள்ளது. மூலத்தில் படித்துப் பாருங்கள். உண்மை இன்னும் சுடும். நக்கல் இன்னும் தெளிவாகத் தெரியும். ‘நீங்கோ பிராமணாளா’ என்ற கேள்வியின் அர்த்தம் புரியும். ‘வெஜிடேரியன் ஒன்லி’ யில் உள்ள நாகரீக தீண்டாமை புலப்படும். நன்றி வினவு.
+1
இரட்டை தம்ளர் மற்றும் பிராமின்ஸ் ஒன்லி !
http://govikannan.blogspot.com/2010/05/blog-post_14.html
🙂
ஆமா தலித்துகள் வாயில் மலம ஊற்றுவது அம்பேத்கர் சிலையை சேதப்படுத்துவது தீண்டாமை சுவர் எழுப்புவது தலித்துகளை அடித்து கொள்ளுவது இதெல்லாம் எந்த பிராமின் செய்யுறாங்க?
சரி இதை சொல்லுங்கள். சமணர்களை கழுவேற்றியது கூன் பாண்டியன், மங்கையர்கரசி தம்பதியினரா அல்லது ஞானசம்பந்தமா. இதற்கான பதில்தான் உங்கள் கேள்விக்கான பதிலும்.
சமணர்களை கழுவேற்றியது கூன் பாண்டியன்
en adhukku munnadi kal;athukku poyen…
Yovvvvvv ippo irukka kaalathukku vaaya!!!!
எந்த காலத்தில் இந்த நாய்கள் கத்தியை பிடித்திருக்கிறார்கள். கொலை செய்வதற்குக் கூட ஆள் வைத்துதான் செய்வார்கள்.
சரி. உங்களுக்கு சமகாலத்தில் இருந்து எடுத்துக்காட்டு வேண்டும். அவ்வளவுதானே.
சங்கரராமனை கொலை செய்தது கூலியாட்களா அல்லது காஞ்சி பெரியவாளா.
குஜராத்தில் முசுலிம்களை படுகொலை செய்தவர்கள் மோடியா, சங் பரிவாரா?
இன்னும் எத்தனை காலம்தான் இந்த தீண்டாமையை வைத்து கொண்டு அரசியல் பண்ண முடியும் அல்லது உன்னை போல பத்திரிகை நடத்த முடியும்… ?
aduvae diwaalaam!!nallaa sonnenka!!
lol…
மனிதன்,
எல்லோரும் மனிதனாக(!)மாறும் வரை…
நான் கோயம்புத்தூரில் வீடு தேடும் போது எனது சாதி பெயர் கேட்டு தான் வீடு கொடுத்தார்கள்….!
சூரியன்,
வீடு வாடகைக்கு கொடுக்கும் போது ஒருவரின் சாதி, தொழில், வருமானம் மற்றும் இன்ன பிற விவரங்களை கேட்டு கொண்டு கொடுப்பதுதான் எல்லா நாடுகளிலும் மதங்களிலும் இனங்களிலும் வழக்கமாக உள்ளது.
கஷ்டப்பட்டு வீட்டை கட்டும், பராமரிக்கும் ஒருவன் அதில் தங்க வரும் நபரின் விபரங்களை கேட்டு உறுதி படுத்தி கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்.?அவரின் பழக்க வழக்கங்களால் தனக்கு ஏதும் தொந்தரவு இருக்குமா?, அவரால் சரியான முறையில் மாத வாடகையை தர இயலுமா? என்று தெரிந்து கொள்வதில் தவறேதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை..
தனக்கு இடையூறு இல்லாத பட்சத்தில் நிறத்தையும் இனத்தையும் காட்டி இடம் தர மறுப்பது கண்டிக்க தக்கது.
சைவ உணவு பழக்கம் உள்ள வீட்டு உரிமையாளரிடம் குடியிருக்கும் ஒருவர் மீனை கழுவி தண்ணீரை தெருவில் ஊற்றுவார். கருவாடு சுடுவார் , அதையெல்லாம் அந்த வீட்டு உரிமையாளர் கேட்ககூடாது. கேட்டால் அது தவறு. அப்படிதானே?
வீட்டை கட்டியவனுக்கே தன் வீட்டில் குடியிருக்கும் நபரை தீர்மானிக்கும் உரிமை இருக்க கூடாது என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்?
ஏதோ சென்னையில் மட்டும்தான் “பிராமின்ஸ் ஒன்லி ” அட்டை தொங்குவதாக அலறும் நண்பர்களே.. சற்று வெளி உலகத்தையும் பாருங்கள்.
அரேபியாவில் உள்ள ஒரு ஊருக்குள் இசுலாமியர் அல்லாத எவரும் நுழைய கூட தடை. அதாவது அவர்களது புனித இடத்தில் மாற்று மதத்தினர் நுழைய அனுமதி மறுக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது..
அரேபியாவின் பெரும்பாலான இடங்களில் இசுலாமியர் அல்லாத பிறருக்கு தங்குவதற்கு இடம் கொடுக்கபடுவதில்லை.
வளைகுடா வேலை வாய்ப்பு விளம்பரங்கள் தாங்கி வரும் தமிழ் நாளேடுகளை பாருங்கள். கொட்டை எழுத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் ” குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே விண்ணப்பிக்கவும்” என்று
(சிலர் கேட்கக்கூடும், சென்னையை பற்றி, இந்தியாவை பற்றி பேசிகொண்டிருக்கும் போது ஏன் அரேபியாவை இழுக்கிறாய் என்று? இந்த கட்டுரையின் அடிப்படையே ஒரு அயல் நாட்டு கறுப்பர் படும் அவஸ்தையை பற்றிதான்).
—
மாக்ஸிமம்
அரபு நாடுகளில் தவறு நடக்கிறது என்பதற்காக இந்கு நடக்கும் தவறை நியாயப்படுத்த வருகிறீர்களா? ”நிறத்தையும் இனத்தையும் காட்டி இடம் தர மறுப்பது கண்டிக்க தக்கது” இதில் சாதியையும் சேர்த்துக் கொள்ளுங்கள் நண்பரே!
//சைவ உணவு பழக்கம் உள்ள வீட்டு உரிமையாளரிடம் குடியிருக்கும் ஒருவர் மீனை கழுவி தண்ணீரை தெருவில் ஊற்றுவார். கருவாடு சுடுவார் , அதையெல்லாம் அந்த வீட்டு உரிமையாளர் கேட்ககூடாது. கேட்டால் அது தவறு. அப்படிதானே?//
வெளிநாட்டில் வந்து வேலை செய்து பாருங்கள் , இங்க வேலை செய்யுற “அவா”எல்லாம் எதை எதை தின்கிறா என்பது உங்களுக்கு தெரியும்.
தமிழக ஊழல் எதிர்ப்பு இயக்கம் – ஊழல்வாதிகளை கடுமையாக தண்டிக்கவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும் — மாபெரும் பேரணி.
ஆகஸ்ட் 6 , 2011 , சனிக்கிழமை அன்று மாலை 5 – 6.30 வரை, மரினா கடற்கரை காந்தி சிலை முதல் – அண்ணா சமாதி வரை. சுமார் 20000 மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
லக்சிமிகாந்தன் பாரதி, தமிழருவி மணியன், SM அரசு போன்றோர் கலந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். வாருங்கள் தோழர்களே நாமும் கலந்து கொள்வோம்.
. . . . .It is perhaps time to learn from previous mistakes
regarding evolution. One country in the recent past successfully curtailed the
teaching of genetics and evolution for several decades because, so thought its
leaders, this branch of science was contrary to its political philosophy. This
country was the USSR. In the case of genetics, Trofim Lysenko, Stalin’s
science advisor, convinced his boss that Mendel was wrong, and so genetics
became an unacceptable ‘‘bourgeois’’ science. The stance of the USSR against
evolutionary theory is more difficult to understand. Marxism is not intrinsically
anti-evolution or antiscience. After all, Marxism calls for deep
changes in society. But more subtly, Marxism predicts that humans are
socially perfectible, particularly under the aegis of the Communist Party, not
God. On the other hand, evolution by natural selection is blind and undirected
and does not necessarily lead to perfection. This idea was not quite in
accordance with the policies implemented in the Soviet Union, hence the
dismissal of evolutionary theory there. The result was an enormous setback
for biology in the USSR. In fact, Russian biology is still suffering from the
aftermath of these old political decisions. . . . . .
this i have read in a famous book (Evolution and Religious Creation Myths
How Scientists Respond by Paul F. Lurquin and Linda Stone) whose intentions are to popularize science among general public, and to negate the arguments of christian right wing fundamentalists trying to propagate intelligent design, and neocreationism as a valid scientific theory and advice the prevail of scientific reasoning.
is it true that our respectable leader stalin was cheated by dogmatists into throwing away a well established and evolving scientific theory for political reasons?
vinavu. kindly answer.
நண்பரே, இதுவும் ஸ்டாலின் குறித்த அவதூறு போலத்தான் தெரிகிறது… மார்க்கசியத்தை பற்றி என்னவன்றே தெரியாத ஒருத்தர் மட்டுமே இது போல எதியிருப்பார் என நினைக்கிறேன்..
பேராசான்கள் மார்க்சும்-லெனினும் வகுத்த இயக்கஇயல் பொருள்முதல்வாத தத்துவத்தில் டார்வினுக்கு முக்கிய இடமுண்டு. அந்த விஞ்ஞானபூர்வ பாதையில் சோசலிச உற்பத்தியை கட்டியமைத்து சோசலிச சமூகத்தை வளர்த்த தோழர் ஸ்டாலினுக்கு யாரோ ஒருவர் விஞ்ஞானத்துக்கு எதிராக மிட்டாய் கொடுத்து ஏமாற்ற முடியும் என்று இவர்கள் சொல்லுவது எல்லாம் நம்பக்கூடியதாக இல்லை….
அது சரி நீங்கள் மார்க்சிய விஞ்ஞானம் பயின்றுள்ளீர்களா?
நன்றி தோழரே. அதை நம்ப எனக்கும் இயலவில்லைதான். ஆனால் டார்வினின் கொள்கையை பாசிஸ்டுகளும் உபயோகித்து உள்ளனர். இப்பொழுது ஆர். எஸ். எஸ் காவாலிகளும் உபயோகித்துக் கொண்டு உள்ளனர். கல்லூரி காலங்களில் ஒரு தீவிர காவி கொள்கைவாதி சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு டார்வினின் கொள்கையையே விளக்கமாக கூறுவார். இவர்களுக்கு தெளிவான பதில் கூறயியல முடிய வில்லை.
இன்றும் என்றும் வரலாற்று இயக்கவியல் பயிலும் மாணவனாகவே இருப்பேன்.
உங்களிடமிருந்து சற்று விரிவான அல்லது விளக்கமான பதிலை எதிர்பார்த்தேன்.
நண்பரே நீங்கள் நான் சொன்னதை புரிந்து கொள்ளவில்லை, அதாவது, டார்வினின் பரிணாம கொள்கை என்பதும் அக்காலத்தில் ஏற்பட்ட பிற விஞ்ஞான புரட்சிகளுமே மார்க்சு-ஏங்கெல்சின் இயக்கஇயல் பொருள்முதல்வாத தத்துவத்தை செழுமைபடுத்த அடிப்படையாக இருந்தது. அப்படிப்பட்ட விஞ்ஞான பின்புலம் கொண்ட தத்துவத்தை வெகு சிறப்பாக நடைமுறைபடுத்தி விஞ்ஞான சோசலிச உற்பத்தியை உலகின் முதல்முறையாக சாதித்து காட்டிய தோழர் ஸ்டாலினை இது போன்றெல்லாம் போகிற போக்கில் ஒருவர் எதாவது சொல்லி விஞ்ஞானத்துக்கு எதிராக திருப்ப முடியாது என்றேன்.
மற்றபடி டார்வினின் கொள்கையை சமூக ஏற்றத்தாழ்வுக்கு விளக்கமாக கூறினால் அவர்களும் சரி அதை கேட்டவர்களும் சரி டார்வினின் கொள்கையை புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் பொருள்.
yappa mudiyalada sami
மக்சிமம் சொல்வது போல்
ஒரு சக்கிலிக்கு வீடு வாடகைக்கு கொடுத்தால் எப்படி வீட்டு வாடகை பெறுவது?
அவன் ஒவ்வொருநாளும் குடித்து விட்டு பொண்டு பிள்ளைகளை தாறு மாறாக அடிக்க..ஒவ்வொருநாளும் திருவிழா வாக தான் இருக்கும்..அவனுடைய பொண்டு பிள்ளைகளுக்கும் சாப்பாடு போடவேண்டியதாகவும் போகும்…ஊரு விட்டு ஊரு வருபவர்களும் நாளும் குடியும் கூத்தியாவும் தான் இருப்பானுங்க..ஏன் இந்த சோலி…
அது தான்நல்ல குடும்பங்களுக்கு எல்லாரும் வீடு குடுக்க ஆசை படுவது..
Babar அவர்களே,
//ஒரு சக்கிலிக்கு வீடு வாடகைக்கு கொடுத்தால் எப்படி வீட்டு வாடகை பெறுவது?//
அப்படியானால் உனது கண்ணோட்டத்தில் உயர் ஜாதியினர் மட்டுமே வாடகை கொடுப்பார்கள். மற்றவர்கள் எல்லாம் இலவசமாக தங்கிவிட்டு போவார்களா?
//அவன் ஒவ்வொருநாளும் குடித்து விட்டு பொண்டு பிள்ளைகளை தாறு மாறாக அடிக்க..ஒவ்வொருநாளும் திருவிழா வாக தான் இருக்கும்..//
ஐந்து நட்சத்திர விடுதிக்கு சென்று பார், யார் குடிகாரர்கள் என்று தெரியும்.
//ஊரு விட்டு ஊரு வருபவர்களும் நாளும் குடியும் கூத்தியாவும் தான் இருப்பானுங்க//
கூத்தியா வைத்திருப்பவர்கள் யார் என்று சொல்லமேலே அனைவருக்கும் தெரியும்
//அது தான்நல்ல குடும்பங்களுக்கு எல்லாரும் வீடு குடுக்க ஆசை படுவது..//
வாடகைக்கு விடுவதிற்கு முன்னேமே அது நல்ல குடும்பம் என்று நீ எப்படி கண்டுபிடிக்கிறாய் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
இதெல்லாம் ஒரு பொழைப்பா? தமிழன் குண்டி கழிவிட்டு வருகிறேன் என்பதைக் கூட கால் கழிவிட்டு வருகிறேன் என்றும் சொல்லும் பண்பெங்கே? ஒரு பாமரனுக்கு இருக்கும் அறிவு கூட இல்லாமல் ஒரு பிரபலமான பதிவில் குண்டி, …., …. என்று எப்படி ஐயா எழுத மனது வருகிறது. நீரின் அளவே நீராம்பல்.