Thursday, August 11, 2022
முகப்பு பார்ப்பன இந்து மதம் நச்சுப் பிரச்சாரம் டெல்லி குண்டு வெடிப்பு : ஆரம்பிச்சுட்டாங்கையா !

டெல்லி குண்டு வெடிப்பு : ஆரம்பிச்சுட்டாங்கையா !

-

புதுதில்லி உயர்நீதிமன்றத்தின் ஐந்தாவது வாயிலிற்கு வெளியே இன்று (7.9.2011) காலை 10.20அளவில் குண்டு வெடித்து 12 பேர் உயிரிழக்க, அறுபதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோர் அருகாமை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். எவரும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்நீதிமன்றத்தின் ஐந்தாவது வாயில்தான் முதன்மையான வாயிலென்பதால் மக்கள் கூட்டம் அதிகமிருக்கும், சேதம் அதிகமிருக்கும் என்று முன்னறிந்தே இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் சமீப ஆண்டுகளாக நிகழும் குண்டு வெடிப்பின் அரசியல் பரிமாணங்களை வினவில் பலமுறை எழுதியிருக்கிறோம். பொதுவில் அரச பயங்கரவாதம் மற்றும் இந்து மதவெறி பயங்கரவாதத்தின் எதிர் விளைவுதான் இத்தகைய பயங்கரவாதங்கள். எனினும் இதை யார் வைத்தார் என்று தேசவெறி ஊடகங்கள் சந்தேகமில்லாமல் எழுப்பும் இலக்குகளைத் தாண்டி பல குண்டுவெடிப்புகள் இந்துமதவெறி அமைப்புக்காளாலும் நடத்தப்பட்டிருக்கின்றன. இதனால் ஜிகாதி பயங்கரவாதம் இல்லை என்பதல்ல. ஆனால் எந்த குண்டு வெடித்தாலும், எந்த ஆதாரமும் இல்லாமல் உடனடியாக கைகாட்டப்படுபவை இசுலாமிய தீவிரவாத இயக்கங்கள்தான்.

தற்போதைய குண்டு வெடிப்பிற்கு கூட அர்கத் அல் ஜிகாத் இசுலாமி எனும் இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டு மின்னஞ்சல் அனுப்பியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட கையோடு அவர்கள்தான் சந்தேகத்திற்கிடமற்ற குற்றவாளிகள் என்பதாக குற்றம் சாட்ட ஆரம்பித்து விட்டார்கள். இதில் டைம்ஸ் நௌ அம்பி ஆர்னாப் கோஸ்வாமி சாமியாடவே ஆரம்பித்து விட்டார்.

குண்டு வெடிப்பை அவர்கள் வைத்தார்களா, இல்லை வேறு யாரும் வைத்தார்களா என்பதை எதை வைத்து முடிவு செய்வது? ஒரு மின்னஞ்சல் மட்டுமே போதுமானது என்றால் இந்த நாட்டில் பலரும் ‘தேச விரோத’ கருத்தை பேசியதற்காக உள்ளே போக வேண்டும். ஒரு பாரிய குண்டு வெடிப்பின் பின்னே யார் வைத்தார்கள் என்பதை மட்டும் சுலபமாக சொல்ல முடியுமா? அல்லது அப்படி சொல்ல வேண்டுமா? இது யாருக்கு ஆதாயம்?

இந்த குண்டுவெடிப்பை யார் வைத்தார்கள் என்பது இப்போதைக்கு தெரியவில்லை என்றும், அந்த மின்னஞ்சலை வைத்து மட்டும் முடிவு செய்ய முடியாது என்றும் தேசிய புலனாய்வுத்துறை நிறுவன தலைமை அதிகாரி கூறிய பிறகும் ஊடக அம்பிகள் துள்ளிக் குதிக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை உடனடி வில்லன். அந்த வில்லன் இசுலாமிய அமைப்பென்றால் அவர்களுக்கு கல்லா கட்டுவது சுலபம்.

குறிப்பிட்ட அந்த மின்னஞ்சலில் அப்சல் குருவை விடுவிக்க வேண்டும் என்று இருக்கிறதாம். இது தெரியமலேயே இந்த குண்டு வெடிப்பு செய்தியை கேட்ட மாத்திரத்திலேயே பலரும் மூவர் தூக்கு நிறுத்தி வைத்ததற்காக கடும் கண்டனங்களை பொழிய ஆரம்பித்துவிட்டார்கள். ராஜிவ் கொலைக்கான குண்டு வெடிப்பை நடத்தியவர்களையெல்லாம் தூக்கில் போடக்கூடாது என்பதுதான் இத்தகைய தீவிரவாதிகளுக்கு குளிர் விடக் காரணமென்று அவர்கள் ஆங்கில, தமிழ் ஊடகங்களில் ஆவேசம் பொங்க கத்துகிறார்கள்.

அப்சல் குருவுக்கும் எந்த தீவிரவாத இயக்கத்திற்கும் சம்பந்தமில்லை. அவரை இந்த வழக்கில் சிக்க வைத்தது இராணுவ, துணை இராணுவ படைகள்தான். அவரது வழக்கில் கூட உச்சநீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லையென்றாலும், தேசத்தின் மனசாட்சியை கருத்தில் கொண்டு தூக்குத் தண்டனை விதித்திருப்பதாக கூறியிருக்கிறது. இந்த மனசாட்சியைத்தான் இப்போது ஆங்கில ஊடகங்கள் எடுத்துக் கொண்டு தீர்ப்புகளை அள்ளி வழங்குகிறார்கள்.

அதில் அம்பி அர்னாப் கோஸ்வாமியின் டைம்ஸ் நௌ முன்னிலை வகிக்கிறது. அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு மேளாவில் டி.ஆர்.பி ரேட்டிங்கை எகிற வைத்த அந்த தொலைக்காட்சிக்கு அடுத்த சென்சேஷனாக இந்த குண்டுவெடிப்பு கிடைத்திருக்கிறது. அதில் அவர்கள் அச்சு பிசகாமல் நடுத்த வர்க்கத்தின் மேலோட்டமான இந்துத்வ மற்றும் பாசிச அரசியல் பார்வையை திருப்திபடுத்தும் வகையில் பேசுகிறார்கள். இதுதான் சமூகத்தை பாசிசமாக்கும் நடவடிக்கை என்பதை எத்தனை பேர் புரிந்து கொள்கிறார்கள்?

டெல்லி உயர்நீதிமன்றத்தில் மெட்டல் டிடெக்டரும், சி.சி.டி.டிவியும் வேலை செய்ய வில்லை என்பதை உலகமகா கண்டுபிடிப்பாக எடுத்துக் காட்டும் டைம்ஸ் நௌ குத்தாட்டம் போடுகிறது. 120 கோடி மக்களை காப்பாற்ற ஒரு சில வேலை செய்கின்ற மெட்டல் டிடெக்டரும், சி.சி.டி.டிவியும் மட்டும் போதுமா? ஆனால் அவர்களது நோக்கம் மக்களை காப்பது அல்ல. ஆளும் வர்க்கத்தின் கேந்திரமான இடங்களை மட்டும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் உயிரைத் துச்சமென மதிக்கும் ஒருவன் இந்த கண்காணிப்புகளுக்கு ஏன் பயப்படப் போகிறான்?

குண்டு வெடித்து மக்களிடமிருந்து சிந்தும் இரத்தம் கூட நிற்கவில்லை. அதற்குள் குண்டில் என்ன ரசாயனம் இருந்தது, யார் வைத்தார்கள், என்று ஊடகங்களின் மொக்கை நிருபர்கள் கேள்விக்கணைகளால் துளைக்கிறார்கள். இது அமெரிக்காவாகவே இருந்தாலும் சோதனைச்சாலையில் ஆய்வு செய்த பிறகுதானே என்ன வகை குண்டு என்பதை சொல்ல முடியும்? அவர்களது நோக்கம் உடனடி நீதி வேண்டுமென்பதால் ஆதாரங்களை அவர்களே ஜோடிக்க முயல்கிறார்கள்.

வங்கதேசத்திற்கு சென்றிருக்கும் பிரதமர் நாட்டு மக்கள் இத்தகைய தீவிரவாதிகளின் செயல்களுக்கு பலியாகக்கூடாது என்கிறார். அப்படி பலியாகக்கூடாது என்றால் தீவிரவாதிகள் உருவாக காரணமாக இருக்கும் செயல்கள், சக்திகளை கண்டறிந்து ஒழிக்க வேண்டும். அதை விடுத்து இந்த ஃபார்முலா அட்வைசு சாதிப்பதென்ன?

இந்து மதவெறியர்களைப் பொறுத்த வரை இந்த குண்டு வெடிப்பு அவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். மூவர் தூக்கை நிறுத்தி வைக்க தமிழகம் காட்டிய முன்னுதாரணத்தை இதன் மூலம் ரத்து செய்து அப்சல் குருவை தூக்கிலேற்றி இந்துத்தவ வெறியை ஓட்டாக்கலாம் என்பது அவர்களது எண்ணம்.

இந்த குண்டு வெடிப்பை நாம் கண்டனம் செய்கிறோம். இது யார் வைத்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்களே. அப்பாவி மக்களின் உயிரைப் பணயம் வைத்து இலட்சியம் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் அந்த உரிமையை வைத்துக் கொண்டுதான் இந்திய அரசு காஷ்மீரிலும், வடகிழக்கிலும், இந்துமதவெறியர்கள் குஜராத் உள்ளிட்ட இந்தி மாநிலங்களிலும் மக்கள் மீது குறிப்பாக சிறுபான்மையினர் மீது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இந்த நிறுவன பயங்கவரவாதத்தை வேரறுக்காமல் நாம் குண்டு வெடிப்புகளை நிறுத்த முடியாது.

இனி மீண்டும் தடா, பொடா போன்ற சட்டங்கள் அவசியம் என்ற வாதம் எழுப்பப்படும். தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குரு, மற்றும் தமிழக மூவருக்கும் கருணை காட்டக்கூடாது என்ற இரைச்சல் ஊடகங்களை நிறைக்கும். மொத்தத்தில் அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாகவே இந்த குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது.

ஊழல் வழக்குளில் பிரதமர் உள்ளிட்ட பெரும் தலைகளெல்லாம் சிக்கியுள்ள நிலையில் முதல் ஆசுவாசமாக அண்ணா ஹசாரே இருந்தார், இரண்டாவதாக இந்த குண்டு வெடிப்பு! 11 பேர் உயிரிழந்ததை விட இதுதான் பெரிய இழப்பு!!

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

 1. //இந்த குண்டு வெடிப்பை நாம் கண்டனம் செய்கிறோம். இது யார் வைத்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்களே. அப்பாவி மக்களின் உயிரைப் பணயம் வைத்து இலட்சியம் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் இந்து மதவெறியர்களைப் பொறுத்த வரை இந்த குண்டு வெடிப்பு அவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். மூவர் தூக்கை நிறுத்தி வைக்க தமிழகம் காட்டிய முன்னுதாரணத்தை இதன் மூலம் ரத்து செய்து அப்சல் குருவை தூக்கிலேற்றி இந்துத்தவ வெறியை ஓட்டாக்கலாம் என்பது அவர்களது எண்ணம்.//
  உண்மையான வார்த்தைகள்..

 2. சட்ட அமைச்சரான சு.சாமி, ராஜிவ் கொலை பற்றிய விசாரணை என்ற ஒன்று ஆரம்பிக்கும் முன்பே, கொலை நடந்த ஒரு மணிநேரத்திலேயே ‘இதை செய்தது விடுதலைபுலிகள் தான்’ என்று செய்தி வெளியிட்டாரே? அதையே இன்றுவரை அனைத்து இந்திய ஊடங்களுமே அதை தானெ சொல்கின்றன? விசாரணை கூட இதே கண்ணோட்டத்திலேயே நடந்து முடிந்துள்ளதே? இதைவிடவா இப்போது நடந்த குண்டுவெடிப்பை இந்தியா சரியான திசையில் நடத்தபோகிறது? ஆக, இன்னைய தேதிக்கு இந்தியாவுக்கு எவன் குடைச்சல் கொடுக்கிறானோ (உதாரணமாக: தெலுங்கானா வேண்டும் என்று போராடும் மக்கள்) அவனின் தலையில் இந்த குண்டுவெடிப்பு வழக்கை போட்டு, ‘குண்டு வைத்தவனுக்கு கு*டி கழுவிவிட்டான்’ என்று யாரையாவது பிடித்து தூக்கில் போட்டாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.

  • //சட்ட அமைச்சரான சு.சாமி, ராஜிவ் கொலை பற்றிய விசாரணை என்ற ஒன்று ஆரம்பிக்கும் முன்பே, கொலை நடந்த ஒரு மணிநேரத்திலேயே ‘இதை செய்தது விடுதலைபுலிகள் தான்’ என்று செய்தி வெளியிட்டாரே?//
   பொன்ராஜ், நாம் இதுபோன்ற சிறிய ஆனால் வாழ்கின போக்கை மாற்றகூடிய உண்மைகளை ஆதாரத்தோடு மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

   வினவு அதனை செய்யுமா?

   வினவு அதனை செய்யாத பட்சத்தில் நம்மை போன்ற உண்மை அறிய விரும்பும் மனிதர்களின் கடமை இது.

  • உயர் திரு, மேதகு, அறிவு திருமகன் பொன்ராஜ் அண்ணன் அவர்களுக்கு சில தாழ்மையான வினாக்கள்.. தயவு செய்து துவேஷம் காட்டாமல், பெரும் பெரும் பத்திகளாக பழங்கதையை எழுதாமல் நறுக்கு தெறித்தல் போல விடை கூற முயலவும்…

   அ) உங்கள் கருத்துப்படி ராஜீவ் கொலையாளிகள் விடுதலை புலிகள் இல்லையெனில் வேறு யார்… ஆதாரத்துடன் கூறவும்…
   ஆ)மேதகு புலித்தலைவர் “துன்பியல் சம்பவம்” என்று வருத்தம் தெரிவித்திருந்தாரே ஏன்?
   இ)புலிகள் இயக்கம் ஏன் மறுப்பு தெரிவிக்க வில்லை 20 ஆண்டுகளாக…
   ஈ) சிவராசனும், தனுவும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்பதாவது உங்களுக்கு தெரியுமா?
   உ) ராஜீவ் கொலைக்கு பிறகுதான் புலிகள் இயக்கத்தை பார்த்து உலகம் பயப்பட தொடங்கியது எனபது உங்களுக்கு தெரியுமா… புலிகளின் பலம் வெளி உலகுக்கு தெரிய இது தான் ஆரம்பம் என்று தெரியுமா…
   ஊ)1980 -களில் புலிகளிடம் மாட்டும் தான் தற்கொலைப்படை அமைப்பு இருந்தது எனபது உங்களுக்கு தெரியுமா?
   எ)புலிகளே தங்களின் அளப்பெரிய வெற்றியாக நினைத்து கொண்டாடிய இன்றளவும் பெருமைப்படும் ஒரு சம்பவத்தை அவர்கள் செய்யவில்லை என்று எளிதாக கூறுகிறீர்களே, இது புலிகளை அவமதிக்கும் செயல் என அறிவீரா…

   பதில் எழதும் நண்பர்களுக்கு… தயவு செய்து காழ்ப்புணர்ச்சி இன்றி பதில் கூறவும்…

   • //அ) உங்கள் கருத்துப்படி ராஜீவ் கொலையாளிகள் விடுதலை புலிகள் இல்லையெனில் வேறு யார்… ஆதாரத்துடன் கூறவும்…//
    இதை நீங்கள் கேட்க வேண்டிய இடம் பல்நோக்கு விசாரணை குழு. யாம் கேட்பதும் அது தான். ஜெயின் கமிஷன்,வர்மா கமிஷன்களின் (உங்கள் கேள்விக்கு அந்த கமிஷஙளின் அறிக்கையே பதில் சொல்லும்) பரிந்துரையை ஏற்று ராஜிவ் விசாரணை மீண்டும் ஆரம்பிக்க பட வேண்டும் என்பதே எமது எண்ணம். இவை எதையும் கணக்கில் கொள்ளாது சண்டித்தனமாக அளிக்கபட்ட தீர்ப்பு தான் ராஜிவ் கொலைக்கான தீர்ப்பு என்பதை நினைவில் கொள்க.

    //ஆ)மேதகு புலித்தலைவர் “துன்பியல் சம்பவம்” என்று வருத்தம் தெரிவித்திருந்தாரே ஏன்?//
    கொலை நடந்த அன்று ராஜிவை விமான நிலையத்தில் சந்தித்த நபர்களுள் ஒருவர் ‘உணர்ச்சி கவி’ காசி ஆனந்தன். அவரிடம் ராஜிவ் கொடுத்த உறுதிமொழி “கேட்பார் பேச்சை கேட்டு செய்த தவறுக்காக, நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் செய்த தவறை திருத்திகொள்ள முயற்சிகிறேன்’. இந்த செய்தி புலித் தலைவருக்கும் சென்று சேர்ந்தது. இது இப்படி இருக்க தனக்கு ஒரே ஆதரவாக உள்ள இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் வைத்து எந்த கேனையனும் ராஜிவை கொன்றிக்க மாட்டான். தனக்கான மனம் திருந்திய ஒருவர் கொல்லப்படும்போது எவனாக ஒருந்தாலும் அதை துன்பமான விசயமாகத் தான் கருதுவான். இதுவே நீங்கள் கேட்ட “துன்பவியல் சம்பவம்”.

    //இ)புலிகள் இயக்கம் ஏன் மறுப்பு தெரிவிக்க வில்லை 20 ஆண்டுகளாக//
    தவறு. அவர்கள் தெரிவித்த மறுப்பை இந்திய ஊடகங்கள் (மாலை முரசு நீங்கலாக) வெளியிடவில்லை.

    //ஈ) சிவராசனும், தனுவும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்பதாவது உங்களுக்கு தெரியுமா?//
    இதுவும் தவறு. அவர்கள் ‘முன்னாள்’ புலி உறுப்பினர்கள். மேலும் ராஜிவினால் தன்வின் குடும்பம் நேரடியாகவே பாதிக்கப் பட்டிருந்தது. உணர்ச்சி வேகத்தில் சதிவலையில் மாட்டிய அந்த பெண் செய்து முடித்தது ராஜிவின் கொலை.(இதிலேயே இன்னும் நிறைய சந்தேகங்கள் உண்டு). நிற்க. அவள் ஒரு முன்னாள் புலி என்று கூறி, சம்பநதமே இல்லாமல் புலிகளை இந்த வழக்கில் இழுத்துவிட்டிருக்கிறார்கள் என்பதே என் போன்றோர் வாதம். இந்த அணுகுமுறை சரி என்றால் ‘தனு’ ஒரு இலங்கையர். அதனால் இந்தியா ஏன் ராஜிவ் கொலைக்காக இலங்கை மீது போர் தொடுக்க கூடாது?

    //உ) ராஜீவ் கொலைக்கு பிறகுதான் புலிகள் இயக்கத்தை பார்த்து உலகம் பயப்பட தொடங்கியது எனபது உங்களுக்கு தெரியுமா… புலிகளின் பலம் வெளி உலகுக்கு தெரிய இது தான் ஆரம்பம் என்று தெரியுமா…//
    நல்ல தமாஷ். புலிகளை தடை செய்ய மும்முரமாக முயன்றவர்கள் ரணில்விக்ரம சிங்கே, லக்ஷமண் கதிர்காமர் மற்றும் இந்தியா. “உலக நாடுகள் புலிகள் இயக்கத்தை தடை செய்ததன் மூலம் மிகப்பெரிய அவலத்திற்கு வழிவகுத்துவிட்டார்கள்” என்று டப்ளின் நீதிமன்றம் சமீபத்தில் அறிவுறுத்தியது உங்களுக்கு தெரியுமா?

    //ஊ)1980 -களில் புலிகளிடம் மாட்டும் தான் தற்கொலைப்படை அமைப்பு இருந்தது எனபது உங்களுக்கு தெரியுமா?//
    சாதாரண வீரன் போர்ட்ட்டால் உயிர்பிழைக்க வாய்ப்பு இருக்கிறது. கரும்புலிகள் போரிட்டால் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை. புலிகள் தற்கொலைப் படை வைத்திருந்தார்கள் என்று பிரகடனப் படுத்திய சிங்கள,கதிர்காமர்கள் ‘கருப்பு ஜூலை’ முதலாக தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட சிங்கள் வெறியை வாய்திறக்கவில்லை ஏன்? உயிரை தியாகம் செய்யும் அளவுக்கு அவர்களை தள்ளியது எது எனபதே,அப்படி ஒரு படை அமைக்க காரணம். அவர்கள் என்ன கூலிக்கா மாரடித்தார்கள்?

    //எ)புலிகளே தங்களின் அளப்பெரிய வெற்றியாக நினைத்து கொண்டாடிய இன்றளவும் பெருமைப்படும் ஒரு சம்பவத்தை அவர்கள் செய்யவில்லை என்று எளிதாக கூறுகிறீர்களே, இது புலிகளை அவமதிக்கும் செயல் என அறிவீரா…//
    ராஜிவ் கொல்லப் படுவதற்கு ஈழமக்களுக்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. (என் ஈழ நண்பன் ராஜிவ் இறந்த அன்று இனிப்பு வழங்கி விருந்துவைத்து கொண்டாடினான்). ஆனால் அப்படி பாதிக்கப் பட்ட அனைவரும் புலிகள் என்று நீங்கள் சொல்வது தான் காமெடியின் உச்சம்.

     • //பயபுள்ள…ராஜீவ் தற்கொலை செஞ்சிருப்பாரு…சொல்லவேயில்லையே…//
      தினமலத்தை கேட்டுப்பாருங்கள். ராஜிவ் காதல் தோல்வியால் தற்கொலை செய்யப் பட்டார் என்று சொல்லும். 🙂

    • ஆனாலும் பொன்ராஜ், உங்கல் கற்பனாசக்தியும், கதைபுனையும் திறனும் வினவையே மிஞ்சி விட்டது…

     • ராமர் இங்கு தான் பிறந்தார் என்று சூடம் அணைத்து சத்தியம் செய்த நீதிபதிகளை விடவா?:-)

     • //ஆனாலும் பொன்ராஜ், உங்கல் கற்பனாசக்தியும், கதைபுனையும் திறனும் வினவையே மிஞ்சி விட்டது…//

      பையா அண்ணே,
      சி.பி.ஐ ரகோத்தமன் சொன்னது: “பேரறிவாளன் வாங்கித் தந்த அந்த 9 வோல்ட் பேட்டரி கொலையாளிகள் புலித்தலைவருடன் பேசப் பயன்படுத்திய கருவிக்காக வாங்கப் பட்டது….” . நிற்க. இப்படி இவர்கள் பேசியத்தற்க்கான எந்த ஒரு ஆதாரத்தையும் சி.பி.ஐ சமர்பிக்கவே இல்லை. இப்போது சொல்லுங்கள் பாஸ்… கற்பனையில் கதை எழுதியது உங்கள் சி.பி.ஐயா இல்லை நானா? 🙂

    • அன்பு நண்பர் பொன்ராஜ், உங்கள் விடைகளுக்கு நன்றி… உங்கள் விடைகளுக்கு மறு மொழி…

     அ) உனக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது, அடுத்தவன் கூறுவதையும் ஒப்புக்கொள்ள மாட்டேன், இரு நாட்டு அரசு கூறினாலும் நம்ப மாட்டேன்… என்னிடம் ஆதாரம் இல்லை…அரசிடம் இருந்தாலும் அதை நம்ப தயாரில்லை… அனால் வேறு யாரிடமோ எமக்கு ஏற்புடைய ஆதாரம் இருக்கலாம் என நம்புகிறேன்… நம்ப வேண்டிய நிலையில் இருக்கிறேன்… 20 ஆண்டு காலம் அமைதியாக இருந்தேன் ஏன் என்று தெரியவில்லை… அனால் இப்போது எமக்கு ஞானோதயம் வந்திருப்பதாக நினைக்கிறேன்,… இதுதான் உங்கள் நிலை … சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்…

     ஆ ) \\இது இப்படி இருக்க தனக்கு ஒரே ஆதரவாக உள்ள இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் வைத்து எந்த கேனையனும் ராஜிவை கொன்றிக்க மாட்டான்\\
     அப்ப கொன்னவன் கேனையன்…? மீண்டும் இயக்கத்தினரை அவமதிக்கிறீர்…
     இ) \\அவர்கள் தெரிவித்த மறுப்பை இந்திய ஊடகங்கள் (மாலை முரசு நீங்கலாக) வெளியிடவில்லை\\
     ஆதாரத்தை காட்டவும் …. வெறும் கையில் முழம் அளப்பார் இல்.
     ஈ) \\அவர்கள் ‘முன்னாள்’ புலி உறுப்பினர்கள்\\
     கட்டுக்கதை … இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட என்ன குற்றம் செய்தனர்… எப்போதிலிருந்து எப்போது வரை உறுப்பினர்.. யாரால் அவர்கள் நீக்கப்பட்டனர்… நீக்கப்பட்ட பின் அவர்கள் எங்கு புலம் பெயர்ந்தனர்… ?
     உ) கேள்விக்கு சம்பந்தம் இல்லாத பதில்.
     ஊ) ஈழ மக்கள் அனைவரும் புலிகள் இல்லை… ஆனால் புலிகள் அனைவரும் ஈழ மக்கள்… உண்மையா இல்லை இதுவும் காமெடி என்று அங்கலாய்க்க போகிறீர்களா…

     • பொன்ராசே பொன்ராசே, நிறைய வேண்டாம் புலிகள் தெரிவித்த மறுப்புக்கான ஆதாரத்தை காட்ட முயற்சி செய்யுங்கள் பொன்ராசே…

      • ராஜிவ் இறந்த மறுநாள் புலிகள் விடுத்த அறிக்கை மாலை முரசில் வந்ததை எடுத்துப் பாரும் மங்குணி பாண்டியரே…!!!

      • Dear sir, what ponraj says is true. everyone knows, but they say that don;t worry. its issued from london. our media didn’t care for that as they were making money with rajiv murder case.

       i was just telling to my friend yday that, i will take 30 days leave and come to chennai, let us visit library and get the truth out.

     • I will answer for this Mr Manithan.
      //அ) உனக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது, அடுத்தவன் கூறுவதையும் ஒப்புக்கொள்ள மாட்டேன், இரு நாட்டு அரசு கூறினாலும் நம்ப மாட்டேன்… என்னிடம் ஆதாரம் இல்லை…அரசிடம் இருந்தாலும் அதை நம்ப தயாரில்லை… அனால் வேறு யாரிடமோ எமக்கு ஏற்புடைய ஆதாரம் இருக்கலாம் என நம்புகிறேன்… நம்ப வேண்டிய நிலையில் இருக்கிறேன்… 20 ஆண்டு காலம் அமைதியாக இருந்தேன் ஏன் என்று தெரியவில்லை… அனால் இப்போது எமக்கு ஞானோதயம் வந்திருப்பதாக நினைக்கிறேன்,… இதுதான் உங்கள் நிலை … சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்…//
      You doubt everything till its clear beyond dount. what Ponraj asks are the questions asked by neutral people, and nobody answers.

      what Ponraj says are in Government apointed comission reports, sir. he is not saying anything new. worst part is that our CBI maintains all the reports of the cases they investigated in their website. excluding this Rajiv murder and bofors case. can you tell why?

      its not our duty to prove who is guilty/who is innocent. its duty of our indian government.

      you go and check the way this case if conducted, no congress person was intersted in this case, except the power they got because of Rajiv’s blood.

      my age is 33, i was 13 when this happened. once after getting to know how this case is conducted, for last 10 years, we are series about this issue. we are talking about this. for us truth is important.

      we don’t get any benefit by knowing this, but still its just to avoid finger point on wrong direction.

     • //அப்ப கொன்னவன் கேனையன்…? மீண்டும் இயக்கத்தினரை அவமதிக்கிறீர்…//
      if they have done it they are idiots and assholes. without knowing the consequences of this if they have done this, they are the idiots, idiots. Why we worry to accept that. We want to know the truth. All we ask this idiot Indian government and Indian courts is, get the truth out. otherwise what you guys are eating is not food, yes, shit is what you guys are eating.

     • //கட்டுக்கதை … இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட என்ன குற்றம் செய்தனர்… எப்போதிலிருந்து எப்போது வரை உறுப்பினர்.. யாரால் அவர்கள் நீக்கப்பட்டனர்… நீக்கப்பட்ட பின் அவர்கள் எங்கு புலம் பெயர்ந்தனர்… ?
      //
      Let it be. Have you checked the facts, how they are considered as LTTE people. the worst part is that anybody they arrested during this case investigation, they tagged to LTTE and later many found to be wrong.

   • //பதில் எழதும் நண்பர்களுக்கு… தயவு செய்து காழ்ப்புணர்ச்சி இன்றி பதில் கூறவும்…//
    இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம் என்று முதலில் உங்களுக்கு தெரியுமா ‘மனிதா’?

    • பொன்ராசே… உங்களுடன் நான் விவாதிக்க காரணம் நீங்கள் பேசும் ஒரு கருத்து… எந்த சூழ்நிலையிலும் புலிகள் உங்கள் வாதத்தினை விரும்ப மாட்டார்கள்… ஏனோ ராஜீவ் கொலையில் தங்கள் மீது பொய் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என புலிகள் கூறுவது போல உள்ளது உங்கள் கருத்து… அது தவறு… புலிகள் விரும்புவது கொலைக்கான காரணத்தையும், நியாயத்தையும் எடுத்து கூற, அல்லது தங்கள் நன்மதிப்பை வருத்தம் தெரிவிப்பதன் மூலம் காப்பாற்றிக்கொள்ள.. அதுவல்லாது நான் செய்யவில்லை என்ற முதுகெலும்பற்ற கோழை வாதத்தை அவர்கள் ஒரு போதும் விரும்பவில்லை… உண்மை இவ்வாறு இருக்க… நீங்கள் ஈழ ஆதரவு என்று நினைத்து இயக்கத்துக்கு போராளிகளின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக பேசுகிறீர்கள்… இதனால் ஈழ இனம் ஒரு போதும் மகிழாது…

     இதை எடுத்து சொன்னால் “அழையா விருந்தாளி” என்று கொச்சை படுத்துகிறீர்கள்… இதை தவிர்க்கவே “தயவு செய்து காழ்ப்புணர்ச்சி இன்றி பதில் கூறவும்” என வினாவில் வினவப்பட்டது…

     • // நீங்கள் ஈழ ஆதரவு என்று நினைத்து இயக்கத்துக்கு போராளிகளின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக பேசுகிறீர்கள்…//

      புலிகளின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஒருவேளை நீங்கள் சொன்னது போல எதாவது இடத்தில் குறிபிட்டிருந்தால் அதை சுட்டிக் காட்டவும். மேலும் காழ்ப்புணர்ச்சி என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள நீங்கள் எழுதிய அனைத்து பின்னூட்ங்களையும் சற்று வாசிக்கவும்.

     • //எந்த சூழ்நிலையிலும் புலிகள் உங்கள் வாதத்தினை விரும்ப மாட்டார்கள்… ஏனோ ராஜீவ் கொலையில் தங்கள் மீது பொய் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என புலிகள் கூறுவது போல உள்ளது உங்கள் கருத்து… //

      இவ்வளவு நேரம் விவாத்தித்தும் நீங்கள் எதையும் புரிந்துகொண்டதாக தெரியவில்லை.புலிகளை மட்டுமே பிடித்து தொங்குவதை சற்று தள்ளிவைத்துவிட்டு, சற்று விசாலமாக சிந்திக்கவும்.இன்றைய தேவை அதுவே.

     • //எந்த சூழ்நிலையிலும் புலிகள் உங்கள் வாதத்தினை விரும்ப மாட்டார்கள்//
      we are not here for LTTE or anyone. Here we are for truth Mr Manithan.

      //ஈழ ஆதரவு என்று நினைத்து இயக்கத்துக்கு போராளிகளின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக பேசுகிறீர்கள்//
      போராளிகளின் கொள்கை – புகை மற்றும் மது ஆகிய வற்றிக்கு எதிரானது.

      Sivarasan and co, house after they got killed was found with liquor bottles and cigarettes.

      so can i say that so they are not members of LTTE. atleast i won’t say its a evidence.

      Yes, i support Eelam people, not becasue they are Tamils, not becasue Vaiko & co are saying. Its their right to live like me and you, what is needed is for them to decide.

 3. மையமான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இந்து மதவெறி பயங்கரவாத அமைப்புகளே இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தி விட்டு, ஏதாவதொரு இணைய மையத்திலிருந்து இசுலாமிய அமைப்புகளின் பெயரில் மின்னஞ்சலை அனுப்பியிருக்க கூடும். இதில் அவர்களுக்கு இரண்டு பயன்கள் உண்டு. கவனத்தை திசை திருப்புவது – இசுலாமிய வெறுப்பை உருவாக்குவது. மாலேகானிலும் இப்படி தானே நடந்தது. மாலேகான் குண்டு வெடிப்பில் பலியானவர்கள் மொத்தம் 45 பேர். அந்த குண்டுவெடிப்பை நடத்தியவர்கள் உலகில் அமைதியையும் சாந்தத்தையும் மட்டுமே விரும்பும் இந்து அமைப்புகளை சேர்ந்த துறவிகள்.

  இந்தியாவின் உண்மையான, ஒப்பற்ற பயங்கரவாதிகள் பா.ஜ.க RSS இந்துமதவெறி கும்பல் தான்.

 4. குஜராத் பிரச்சனையை திசை திருப்ப ஆளும் அல்லது எதிர் கட்சியால் வைக்கப்பட்டு அப்பாவிகளை சிக்க வைக்கும் ஒரு சாதாரண நிகழ்ச்சியே இந்த குண்டு வெடிப்பு.

 5. //குண்டு வெடிப்பை அவர்கள் வைத்தார்களா//
  //இந்த குண்டுவெடிப்பை யார் வைத்தார்கள்//

  இது போன்ற வாக்கியம் பல இடங்களில் வருகிறது இது பொருத்தமற்றதாக உள்ளது, வெடிகுண்டை வைத்தார்கள், வெடிகுண்டை வைத்தவர்கள் யார் என்பது பொருத்தமானது மாறாக குண்டுவெடிப்பை வைத்தார்களா, குண்டுவெடிப்பை யார் வைத்தார்கள் என்பது பொருளற்ற வாக்கியமாக உள்ளது கவனிக்கவும்.

 6. \\தற்போதைய குண்டு வெடிப்பிற்கு கூட அர்கத் அல் ஜிகாத் இசுலாமி எனும் இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டு மின்னஞ்சல் அனுப்பியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட கையோடு அவர்கள்தான் சந்தேகத்திற்கிடமற்ற குற்றவாளிகள் என்பதாக குற்றம் சாட்ட ஆரம்பித்து விட்டார்கள்.//

  \\குறிப்பிட்ட அந்த மின்னஞ்சலில் அப்சல் குருவை விடுவிக்க வேண்டும் என்று இருக்கிறதாம்.//

  இந்த மின்னஞ்சல் இந்த குண்டு வெடிப்புகளுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை ஓரளவுக்கு விளக்குகிறது.அப்சல் குருவின் கருணை மனு இன்னும் குடியரசு தலைவரின் பரிசீலனையில்தான் உள்ளது.நிராகரிக்கப்படவில்லை.அவரை தூக்கில் போட நாள் ஒன்றும் குறிக்கப்பட்டு விடவில்லை.இந்த நிலையில்தான் குண்டு வெடிப்பு நிகழ்ந்து அப்சல் குருவை விடுவிக்க கோரி மின்னஞ்சல் வந்துள்ளது.

  குடியரசு தலைவர் அப்சல் குருவின் கருணை மனுவை ஏற்று விடுதலை அல்லது தண்டனை குறைப்பு செய்வதற்கும் வாய்ப்புண்டு.அந்த நம்பிக்கையில்தான் அவரது மனைவியும் மனித உரிமை ஆர்வலர்களும் பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் ராசீவ் கொலை வழக்கில் அநியாயமாக தண்டிக்கப்பட்டிள்ள தமிழர் மூவரை விடுவிக்க தமிழக மக்கள் நடத்தும் வீரஞ்செறிந்த போராட்டங்கள் அப்சல் குருவையும் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவரை விடுவிக்க கோரி குண்டு வெடிப்பு நடத்தப்பட்டால் அது அவரது விடுதலைக்கான வாய்ப்பை நாசமாக்கவே செய்யும்.இப்படியான பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் அப்சல் குருவின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம்தான் குடியரசுத்தலைவருக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் ஏற்படும்.

  ஆகவே அப்சல் குரு விடுவிக்கப்பட வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த குண்டு வெடிப்பை நடத்தியிருக்க வாய்ப்பில்லை.மாறாக அப்சல்தான் இந்த குண்டு வெடிப்பின் மையப்பொருள் என்றால் அவர் தூக்கிலேற்றப்பட வேண்டும் என்று விரும்புபவர்கள்தான் இந்த குண்டு வெடிப்பை நடத்தியிருக்கவேண்டும்.

 7. என்னது, இந்த தடவை குண்டு வச்சதும் இந்து தீவிரவாதியா?

  நீ நடத்து சித்தப்பு…..

  சபாஷ்.!

  ஒரு நாள் உங்க சீட்டுக்கு அடியிலயும் குண்டு வெடிக்கும்.. அப்போ வரைக்கும் அப்சலும் கசாபும் அப்பாவின்னே சொல்லிட்டு திரியுங்க….

  மாக்ஸிமம்

  • //என்னது, இந்த தடவை குண்டு வச்சதும் இந்து தீவிரவாதியா? //

   உண்மையை, கண்டுபிடிக்க வேண்டியது அரசின் கடமை. அதுவும் விருப்பு வெறுப்பு இல்லாமல் மற்றும் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல், இல்லையேல் இது போன்ற நிகழ்வுகள் பல நடைபெற வாய்ப்புகள் உள்ளன.

  • அவனோட சீட்டு சீனாவில பாதுகாப்பா இருக்கு… இங்க எங்க குண்டு வெடிச்சாலும் அவனுக்கு கவலை இல்லை… அவனுக்கு இலாபம் தான்…

  • மாக்சிமம்.

   \\ஒரு நாள் உங்க சீட்டுக்கு அடியிலயும் குண்டு வெடிக்கும்//

   எப்படி அவ்வளவு நிச்சயமாக சொல்கிறீர்கள்.உங்கள் கைவசம் ஏதேனும் உளவுத்தகவல் இருந்தால் தயவு செய்து காவல்துறைக்கு தெரிவித்து விடுங்களேன்.பல உயிர்களை காப்பாற்றிய புண்ணியம் கிடைக்கும்.

   \\அப்போ வரைக்கும் அப்சலும் கசாபும் அப்பாவின்னே சொல்லிட்டு திரியுங்க….//

   அப்சல் அப்பாவி தான் என்றும் கசாபு குற்றமற்றவன் என்றோ அவனை விடுவிக்க கோரியோ யாரும் பேசவில்லை என்றும் முந்தைய விவாதம் ஒன்றில் ஆதாரங்களுடன் தெரிவித்த போது கள்ள மவுனம் சாதித்த நீங்கள் மீண்டும் மீண்டும் கசாபை அப்பாவி என்று யாரோ சொல்வது போல் இட்டு கட்டுகிறீர்கள்.அதுசரி கோயபல்சின் தலைவன் இட்லரை கொண்டாடும் சங்க பரிவார் கூட்டம்தானே உங்களுக்கு பிடித்தமானது.அதன் தாக்கம் வேலை செய்கிறது.

   சங்க பரிவார் காலிகள் தென்காசி இந்து முன்னணி அலுவலகத்திலேயே குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தியது போன்று உங்கள் மீதும் தாக்குதல் நடத்தும் வரை அந்த பார்ப்பனிய பயங்கரவாத கும்பலை ஆதரித்து கொண்டு ”திரியுங்க…”

   • திப்பு,

    நிச்சயமாக என் கைவசம் தகவல்கள் இருக்கும் பட்சத்தில், கண்டிப்பாக காவல் துறைக்கு தெரிவிப்பேன்.. ஒரு சிலர் போல் மத பற்று (வெறி) கொண்டு பயங்கரவாதிகளுக்கு உதவி, அடைக்கலம் தந்து அப்பாவிகளை பலி கொடுக்க விரும்ப மாட்டேன்.

    “அப்சல் அப்பாவி தான் என்றும் கசாபு குற்றமற்றவன் என்றோ அவனை விடுவிக்க கோரியோ யாரும் பேசவில்லை”

    எப்படி இவ்வாறு உங்களால் கூறமுடிகிறது?

    அப்சல் பாகிஸ்தானை சார்ந்த லஷ்கர் இ தோய்பாவால் உருவாக்கப்பட்டவன், கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டவன். இந்த அரசாங்கத்திற்கு எதிராக போராடுமாறு, சதிசெயல்களில் ஈடுபடுமாறு பணிக்கப்பட்டவன். ஆனால் உங்களுக்கு அப்பாவி. அப்படிதானே? அவனது முகமோ அவன் சார்ந்த சமுதாயத்தில் காஷ்மீர் விடுதலை வீரன்…

    அடுத்து நமதருமை தம்பி கசாப்.. இவனை பற்றி பெரிதாக கூற தேவை இல்லை …

    இவ்விருவரும் செய்த படுகொலைகளுக்கு / நாசகார செயல்களுக்கு காரணம் ஹிந்துத்வம் தான் என்று அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ஒரு கூட்டம். ஏன் நமது வினவும் கூட அவர்கள் செய்தது தவறல்ல, பதிலடி என்று திரும்ப திரும்ப தனது கருத்தை அனைத்து பதிவுகளிலும் சொல்லி இருக்கிறது..

    ஆக எனது கருத்துக்கள் இட்டு கட்டப்பட்டவை அல்ல என்பதை உணரவும்…

    கசாபிற்கு இந்த அரசாங்கம் தூக்கு தண்டனை நிறைவேற்றும்போது உங்களுக்கு இதே மனநிலை இருக்குமா? சந்தேகம் தான்.. ( அப்சல் குரு தியாகி விட்டான். கூடிய சீக்கிரம் மரணதண்டனை குறைவு பெற்று , ஏன் விடுதலை கூட அடையலாம். அதற்கான வேலைகளை தொடங்கி விட்டனர்) ..

    பார்பனிய பயங்கரவாத கும்பல் என்று ஒன்று இருந்தால் கூட அதனை ஆதரிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.


    மாக்ஸிமம்

    • மாக்சிமம்.
     \\ஒரு சிலர் போல் மத பற்று (வெறி) கொண்டு பயங்கரவாதிகளுக்கு உதவி, அடைக்கலம் தந்து அப்பாவிகளை பலி கொடுக்க விரும்ப மாட்டேன்.//

     புரிகிறது.முசுலிம்கள் சிலர் பயங்கரவாதிகளுக்கு உதவினார்கள் என்கிறீர்கள்.இந்து மதவெறி பார்ப்பன பயங்கரவாதத்தால் தங்கள் சமூகம் பாதிக்கப்பட்ட நிலையில்,அதனால் ஆத்திரமுற்று,தவறான வழிகாட்டல்களால் முசுலிம் இளைஞர்கள் சிலர் பயங்கரவாதத்தில் ஈடுபட்டார்கள்.அவர்கள் விரல் விட்டு எண்ணி விடும்வகையில் மிக குறைந்த அளவினரே.அதேசமயம் முசுலிம் சமூகத்தில் ஆகப்பெரும்பான்மையினர் அந்த கிறுக்குப் பயல்களை ஆதரிக்கவில்லை.முசுலிம் அமைப்புகள்,இயக்கங்கள் என முசுலிம் சமூகம் முழுவதுமே அந்த பயங்கரவாத செயல்களை ஒருமித்த குரலில் கண்டித்துள்ளனர்.

     இந்த இடத்தில் இந்து மதவெறி பார்ப்பன பயங்கரவாதிகள் எவ்வாறு கொண்டாடப்படுகிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். பெரும்பான்மையான இந்துக்கள் மத வெறி கொள்ளாதவர்களாகத் தான் இருக்கிறார்கள்.ஆனால் சங்க பரிவார் கும்பல் எப்படி நடந்து கொள்கிறது.மாலேகான்,அச்மீர்,சம்சுட்ட தொடர்வண்டி குண்டுவெடிப்பு என தொடரும் பார்ப்பன பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட அயோக்கியர்களை அத்வானியில் ஆரம்பித்து உமாபாரதி,தொகாடியா என அனைவரும் ஆதரித்து பேசுகின்றனர்.பிரக்யா சிங் கைது செய்யப்பட சமயத்தில் பா.ச.க.அவரை கை விடக் கூடாது என பொங்கி எழுந்தார் உமாபாரதி.

     இப்படி அப்பட்டமாக இந்து பயங்கரவாதிகளை ஆதரிக்கும் இந்து மதவெறியர்களை முசுலிம் பயங்கரவாதிகளை கண்டிக்கும் முசுலிம்களுடன்ஒப்பிட்டு பார்த்தால் ” மத பற்று (வெறி) கொண்டு பயங்கரவாதிகளுக்கு உதவி” செய்பவர்கள் யார் என விளங்கும்.

     \\அப்சல் பாகிஸ்தானை சார்ந்த லஷ்கர் இ தோய்பாவால் உருவாக்கப்பட்டவன், கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டவன். இந்த அரசாங்கத்திற்கு எதிராக போராடுமாறு, சதிசெயல்களில் ஈடுபடுமாறு பணிக்கப்பட்டவன். ஆனால் உங்களுக்கு அப்பாவி.//

     அப்சல் JKLF அமைப்பில் சேர்ந்து செயல்பட்டார்.உண்மைதான்.யாரும் மறுக்கவில்லை.ஆனால் அவர் அந்த போராட்ட வழியை விட்டு விலகி சரணடைந்து அமைதியான வாழ்க்கை வாழ முற்பட்டவர்.அநியாயமாக நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் காவல்துறையால் சிக்க வைக்கப்பட்டவர்.அப்சல் அப்பாவிதான் என்பதை இந்த சுட்டியில் உள்ள கட்டுரைகள் ஐயத்திற்கு இடமின்றி நிறுவுகின்றன.

     http://justiceforafzalguru.org/

     வினவிலும் அப்சல் அப்பாவிதான் என நிறுவும் பதிவுகள் உள்ளன.
     https://www.vinavu.com/2008/12/10/mumbai5/

     படித்துவிட்டு வாருங்கள்.மேற்கொண்டு விவாதிக்கலாம்.

     \\அடுத்து நமதருமை தம்பி கசாப்.. இவனை பற்றி பெரிதாக கூற தேவை இல்லை …
     இவ்விருவரும் செய்த படுகொலைகளுக்கு / நாசகார செயல்களுக்கு காரணம் ஹிந்துத்வம் தான் என்று அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ஒரு கூட்டம். ஏன் நமது வினவும் கூட அவர்கள் செய்தது தவறல்ல, பதிலடி என்று திரும்ப திரும்ப தனது கருத்தை அனைத்து பதிவுகளிலும் சொல்லி இருக்கிறது..

     ஆக எனது கருத்துக்கள் இட்டு கட்டப்பட்டவை அல்ல என்பதை உணரவும்…//

     உங்கள் தமிழாசிரியர் இதை படித்தால் நிச்சயம் உங்கள் காதை திருகி விடுவார்.”உனக்கு நல்லாத்தானே சொல்லி கொடுத்தேன்,இப்படி தமிழ் சொல்லுக்கு மாற்றி மாற்றி பொருள் சொல்கிறாயே” என கண்டிப்பார்.முந்தைய பின்னூட்டத்தில் கசாப் ”அப்பாவி” என வினவு சொல்வதாக சொல்லி விட்டு இப்போது ”பதிலடி”என சொல்லி நியாயப் படுத்துகிறார்கள் என சொல்கிறீர்கள்.ஆகவே கசாப் அப்பாவி என சொல்வதாக நீங்கள் சொல்லியது ”இட்டுக்கட்டல்” தான்.

     ஒன்று மட்டும் நிச்சயம்.இந்து மதவெறி பார்ப்பன பயங்கரவாதத்தின் எதிர்வினைதான் முசுலிம் பயங்கரவாதம்.பதிலடி எனபது கூட சரியான சொல் அல்ல.ராசீவை புலிகள் போட்டார்கள் என்றால் அது பதிலடி.அது போல் அந்த முசுலிம் பயங்கரவாதிகள் வெறியாட்டம் போட்ட சங்க பரிவார் கும்பலை குறி வைத்திருந்தால் அது பதிலடியாக இருந்திருக்கும்.

     மாறாக அப்பாவிகளை குறி வைப்பது பதிலடி ஆகாது.

     \\கசாபிற்கு இந்த அரசாங்கம் தூக்கு தண்டனை நிறைவேற்றும்போது உங்களுக்கு இதே மனநிலை இருக்குமா? சந்தேகம் தான்.

     முசுலிம்கள் கசாபுக்கு சாவுத்தண்டனை விதிக்க கோரி போராடுவதற்கு முந்தைய விவாதத்தில் ஆதாரம் கொடுத்திருக்கிறேன்.அப்படி இருந்தும் இப்படி பேசுவது கட்ட உள்நோக்கம் கொண்டது.

     \\பார்பனிய பயங்கரவாத கும்பல் என்று ஒன்று இருந்தால் கூட அதனை ஆதரிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.//

     மிகவும் சாமர்த்தியமாக பேசுவதாக நினைப்பா.இந்து மதவெறி பார்பனிய பயங்கரவாத கும்பல் கண் முன்னால் முசுலிம்களையும் கிருத்துவர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் கொத்து கொத்தாக கொன்று குவித்து வருகிறது.மொராதாபாத்.மீருட்,மலியான,பாகல்பூர்,ரத யாத்திரை,மும்பை,குசராத்,கந்தமால்.பாதிரியார் எரித்து கொலை,லச்சார் படுகொலை.என வெறியாட்டம் போடும் கும்பலை ”இருக்குதோ”இல்லையோ” என ஐயம் கொள்ளத்தக்க வகையில் ”பார்பனிய பயங்கரவாத கும்பல் என்று ஒன்று இருந்தால் கூட ” என்று எழுதி அவர்கள் மீதான உங்கள் பற்றுதலை வெளிப்படுத்துகிறீர்கள்.என்னதான் சொற்களை போட்டு மெழுகினாலும் உங்கள் மதவெறி கோரமுகம் இங்கு அப்பட்டமாக வெளிப்படுகிறது.

 8. என்னமோ அப்சல் குரு உன் பக்கத்து வீட்டுப்பையன் மாதிரிப்பேசுரது எல்லாம் ரொம்ப ஓவர்…அந்த தீவிரவாதக் கூட்டம் பொறுப்பேற்ப்பதாக வந்த மெயில் தான் செய்தியாக வந்தது….ஆனா இந்த குண்டுவெடிப்பில் இந்து மதவெறி எங்கடா வந்தது…உனக்கு சிறுபான்மையினரின் காவலன்னு ஒரு முகமூடி வேனும்…அதுக்கு இந்து மதவெறி இந்து மதவெறி இந்து மதவெறின்னு புலம்பிக்கிட்டேஇறுக்குனும்…ஆனா ஒன்னு இப்படி லூசு மாதிரி பொலம்பிக்கிட்டு பாம்பே பக்கம் போயிராதே..அப்சலும் கசாபும் போல பாகிஸ்தான்ல இறுந்து உன் அப்பாவித் தம்பி யாராவது உனக்கும் சேர்த்து குண்டு வச்சுடப்போறான்..அப்புறம் அந்த அப்பாவித் தம்பிகளுக்காகப் போராட ஒரு கை கொரயப்போகுது…அவனுகளே ஒத்துக்கிட்டாக்கூட இவனுக வுடமாட்டானுக..தூங்குறவன எழுப்பலாம்………..

 9. //இந்த குண்டு வெடிப்பை நாம் கண்டனம் செய்கிறோம். இது யார் வைத்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்களே. அப்பாவி மக்களின் உயிரைப் பணயம் வைத்து இலட்சியம் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் இந்து மதவெறியர்களைப் பொறுத்த வரை இந்த குண்டு வெடிப்பு அவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். மூவர் தூக்கை நிறுத்தி வைக்க தமிழகம் காட்டிய முன்னுதாரணத்தை இதன் மூலம் ரத்து செய்து அப்சல் குருவை தூக்கிலேற்றி இந்துத்தவ வெறியை ஓட்டாக்கலாம் என்பது அவர்களது எண்ணம்.//

  உண்மை.

  //இனி மீண்டும் தடா, பொடா போன்ற சட்டங்கள் அவசியம் என்ற வாதம் எழுப்பப்படும். தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குரு, மற்றும் தமிழக மூவருக்கும் கருணை காட்டக்கூடாது என்ற இரைச்சல் ஊடகங்களை நிறைக்கும். மொத்தத்தில் அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாகவே இந்த குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது.//

  வருத்தப்படவேண்டிய உண்மை

 10. \\குண்டு வெடிப்பை அவர்கள் வைத்தார்களா, இல்லை வேறு யாரும் வைத்தார்களா என்பதை எதை வைத்து முடிவு செய்வது? ஒரு மின்னஞ்சல் மட்டுமே போதுமானது என்றால் இந்த நாட்டில் பலரும் ‘தேச விரோத’ கருத்தை பேசியதற்காக உள்ளே போக வேண்டும்….\\

  முட்டாள் லெனினே… ஒரு மின்னஞ்சலை வைத்து எவ்வாறு முடிவு செய்வாய் என கேட்கிறாயே…

  உன் வாதப்படியே வைத்துக்கொண்டால் அப்படி சம்பந்தப்பட்ட இயக்கம் தன் மீது குற்றச்சாட்டு பொது வெளியில் கோரப்படும்போது ஏன் இன்னும் மறுப்பு தெரிவிக்கவில்லை? அதே மின்ன்னஞ்சல் வாயிலாக ஏதாவது ஒரு ஊடகத்துக்கு மறுப்பு தெரிவிக்க முடியுமா முடியாதா??

  தயவு செய்து தீவிரவாதியை ஒரு மதவாதியாக பார்க்காதீர்… அப்படி பார்த்தல் இந்த கம்முனிச தீவிரவாதி கூட ஒரு மதத்தை தான் சார்ந்து இருக்கிறான்…

  குண்டு எவன் வைத்தால் என்ன பதிப்பு இந்தியாவுக்கு தானே… சீனாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.. அதனால் தான் இந்த பொய்யன் இதை மத பிரச்சினையாக்கி மத தீவிரவாதத்தை அறுவடை செய்ய நினைக்கிறான்…

  மருதளிப்போம்… சீன கைக்கூலிகளை வேரறுப்போம்… !!!!

  • //தயவு செய்து தீவிரவாதியை ஒரு மதவாதியாக பார்க்காதீர்… அப்படி பார்த்தல் இந்த கம்முனிச தீவிரவாதி கூட ஒரு மதத்தை தான் சார்ந்து இருக்கிறான்…//
   I agree with you Manithan. What i ask is, doubt everyone including the prasident/pm of this country. but get the truth.

   மதம் மனிதனால் உருவாக்கப்பட்டது, இது தான் கம்முனிசம் சொல்வது.

 11. மனிதன் அண்ணாச்சிமார்களுக்கு,

  (குறிப்பு: இவை அனைத்திற்கும் ஆதாரங்கள் உள்ளன).
  1.”ராஜிவ் உயிருக்கு ஆபத்து. அவரின் பாதுகாப்பை அதிகப் படுத்துங்கள்” — யாசர் அராபத். யாசர் உயிருக்கு ஆபத்து என்று பல ஆயிரம் மைல்கள் தள்ளி உள்ள யாசர் அராபத்துக்கு தெரிந்திருக்கிறது.
  2.ராஜிவ் கொல்லப் படும் காலத்தில் அவர் எடுத்திருந்த ரஷ்ய சார்பு நிலை.
  3.ராஜ்வின் அமெரிக்க எதிர்ப்பு நிலை. (உதாரணம்: அவர் அமெரிக்காவின் ஈராக் மீதான போரை வன்மையாக கண்டித்திருந்தார்)
  4.மத்திய கிழக்கும் நாடுகள்,ஆசியா உட்பட அமெரிக்க எதிர்ப்பு அடுத்த தலைமுறை தலைவர்களை அழித்தொழிக்கும் அமெரிக்காவின் திட்டம்.
  5.இந்தியாவில் ராஜிவ் மட்டும் அல்லாது அவருக்கு அடுத்தகட்ட தலைவர்களான ராஜேஷ் பைலட்,மாதவ்ராவ் சிந்தியா போன்ற ரஷ்ய சார்பு தலைவர்களும் சொல்லிவைத்தார்போல அகால மரணத்தை தழுவுவது
  6.எந்த தொகுதியிலும் நின்று வெற்றிபெறாத அமெரிக்கசார்பு நிலை உடைய மன்மோகன் சிங் பத்தாண்டுகளுக்கு மேலாக இந்தியாவை ஆள்வது.
  7.மாதவ்ராவ் சிந்தியா தனது ஆட்சிகாலத்தில் சந்திராசாமியை சிறையில் தள்ளியது மற்றும் ராஜிவ் கொலையிலும் சந்திராசாமி பெயர் அடிபடுவது.
  8.நடந்த இரண்டு சுற்று தேர்தலிலும் வி.பி.சிங் தலைமையிலான இடதுசாரி கூட்டணி முண்ணணியில் இருந்தது.
  9.ராஜிவ்கொலையை காரணம் காட்டி எவரையும் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக டி.என்.சேஷன் மூன்றாம் கட்ட தேர்தலை தள்ளிவைத்தது.
  10.இடைப்பட்ட காலத்தில் திமுகவின் மீது ராஜிவ்கொலை குற்றம் சாட்டி தோல்விஅடைய வைத்தது மற்றும் வி.பி.சிங் கூட்டணி தோற்றது.
  11.ராஜிவின் பயணத்திட்டத்தில் இல்லாத சிறீபெரும்புதூருக்கு அவரை மரகதம் சந்திரசேகரும்,ஜெயந்தி நடராஜனும் வரச் செய்தது.
  12.மரகதம் சந்திரசேகருடன்,சிங்கள ஜெயவர்த்தனேவின் நட்பு மற்றும் ராஜிவ் கொலைவிசாரணையில் இருந்து மரகதம் சந்திரசேகரை எவ்விதகாரணமும் இன்றி விடுவித்தது.
  13.ராஜிவின் மெய்க்காப்பளர் சிறீபெரும்புதூருக்கு செல்லும்போது மட்டும் உடன் இல்லாதது.
  14.ராஜிவின் இறப்பின்போது எந்த காங்கிரஸ்காரனும் உடன் இல்லாதது.
  15.கொலை நடந்து அடுத்த ஒரு மணிநேரத்திலேயே “இதை செய்தவர்கள் விடுதலை புலிகள்” என்று அன்றைய சட்ட அமைச்சர் சுப்ரமணிய சாமி சொன்னது.
  16.கார்த்திகேயன் குழுவில் இருந்த தேவராஜ்(?) என்ற சி.பி.ஐ அதிகாரி, விசாரணை சரியான பாதையில் நடக்கவில்லை என்று ஒதுங்கிகொண்டது. மேலும் சுப்ரமணிய சாமியை விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என்று அவர் சமீபத்தில் கும்தம்.காமுக்கு கொடுத்த பேட்டி.
  17.கொலை நடந்தபோது எடுக்கப் பட்ட ஒலிஒளி நாடாவை சி.பி.ஐ கேட்டும் இன்றும் கூட அதை தராமல் வைத்திருக்கும் எம்.கே.நாராயணன். எத்தனையோ குற்றச்சாடூகளி இந்த நாராயணன் சிக்கி இருந்தாலும் அவர் இன்றும் மென்மேலும் அனுபவித்துவரும் பதவிகள்.
  18.ப.சிதம்பரம் ராஜிவ் கொலைக்கான ஆவணங்களை தொலைத்தது.
  19.சந்திராசாமியை விசாரிக்காமல் வேண்டுமென்றே அவரை தப்பவிட்ட சி.பி.ஐ
  20.பான்டிச்சேரி காங்கிரஸ் தலைவர்,தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் உட்பட பலரும் எப்போதெல்லாம் ராஜிவ் கொலைபற்றியோ, அல்லது ஈழத் தமிழர்களுக்கு சாதகமாக பேசும்போதோ அப்பொழுதெல்லாம் அவர்களின் வாய் மேலிடத்தால் அடைக்கப் படுவது. (தங்கபாலுவின் சமீபத்திய ஸ்டேட்மென்ட்: “நான் ஒருகுரல் கொடுத்தால் தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடும்”).

  …அண்ணாச்சிங்களா,
  ஒரு சாதரணமான ஆளே இப்படி யோசிக்கும் போது பல்நோக்கு புலனாய்வு குழு ஏன் விசாரிக்கவில்லை? மேற்சொன்ன சில விசயங்களை கூட்டிக் கழித்து பார்த்தால் குழந்தைக்கு கூட தெரியும். “ராஜிவ் கொலையில் புலிகளை விட மேலும் பலர் சம்பந்தபட்டிருக்கிறார்கள்,அப்படி சம்பந்தபட்ட ஒவ்வொருவருக்கும் ராஜிவ் இறப்பின்மூலம் ஒவ்வொரு பலன் இருந்திருக்க கூடும்” என்று.

  இப்போது நீங்கள் வாய்திறக்கலாமே? இலலை வழக்கம்போல “இதுவெறும் கதை” என்று உளறப் போகிறீர்களா? 🙂

  • ராஜிவ் கொலைவழக்கு விசாரணை அதிகாரியான ரகோத்தமன் கூறியவை: “முதலில் இந்த கொலையில் சி.ஐ.ஏ,பாகிஸ்தான்,இசுலாமிய தீவிரவாத இயக்கங்கள்,காஷ்மீர் இயக்கங்கள் இருக்கலாம் என்று தான் நினைத்திருந்தோம்…..”.நிற்க. ராஜிவ் கொலைவழக்கில் சி.ஐ.ஏ சம்பந்தப் பட்டிருந்தால், இந்த சி.பி.ஐ ஒரே கிழியாய் கிழித்து,அமெரிக்காவை அம்பலப் படுத்தியிருக்குமா? அந்த திராணி இந்தியாவுக்கு உண்டா? அப்புறம் ஏன் இந்த வெட்டி உதார்? கையில் கிடைத்த குவாட்ரோச்சியை பல்வேறு காரணங்களுக்காக கோட்டைவிட்ட சி.பி.ஐ, ராஜிவ் கொலைவழக்கில் சி.ஐ.ஏ சம்பந்தப் பட்டிருக்கா என்று விசாரணை நடத்தியதாம். கேட்க ரொம்ப தமாஷாக இல்லை.

   • பொன்ராஜ் அண்ணாச்சிகளுக்கு… சீன கைக்கூலி வலையில் வந்து புலி நியாயம் பேசும் உங்கள் தமாசு ….

    சிவராசன் – அமெரிக்காவில் பிறந்த சி.ஐ.ஏ உறுப்பினர்.
    தனு – ஒரு பாகிஸ்தானி.
    பேரறிவாளன் – இஸ்லாமிய தீவிரவாத இயக்க உறுப்பினர்.
    முருகன் – காஷ்மீரத்து தீவிரவாதி.
    சாந்தன் – சி.ஐ.ஏ உளவாளி…
    அப்புறம்……
    ராஜீவ் – பிரபாகரனின் நெருங்கிய நண்பர்…

    ஆகவே புலிகளுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என பொன்ராஜ் அவர்கள் கூறும் சாட்சியங்களின் அடிப்படியில் தெளிவாகிறது…

    • //ஆகவே புலிகளுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என பொன்ராஜ் அவர்கள் கூறும் சாட்சியங்களின் அடிப்படியில் தெளிவாகிறது…//

     கொஞ்சம் உங்கள் புளுத்துபோன புரணிகளை ஓரம்வைத்துவிட்டு சற்று மூளைக்கு வேலை கொடுங்கள் பாஸ். இல்லை புழுதிவாறி தூற்றுவது மட்டுமே உங்கள் வேலை என்றால் அதை வழக்கம்போல நீங்கள் தாராளமாக செய்யலாம்.

     • \\எந்த தொகுதியிலும் நின்று வெற்றிபெறாத அமெரிக்கசார்பு நிலை உடைய மன்மோகன் சிங் பத்தாண்டுகளுக்கு மேலாக இந்தியாவை ஆள்வது\\

      மன்மோகன் இந்தியாவை 10 ஆண்டுகளாக ஆளுகிறார் என்று கூறுவதன் மூலம் நீங்கள் இந்திய அரசியலை எவ்வுளவு புரிந்து வைத்திருக்கிறீர்கள் எனபது தெளிவு…

      • //மன்மோகன் இந்தியாவை 10 ஆண்டுகளாக ஆளுகிறார் என்று கூறுவதன் மூலம் நீங்கள் இந்திய அரசியலை எவ்வுளவு புரிந்து வைத்திருக்கிறீர்கள் எனபது தெளிவு…//

       இத்தனை நாளாக அவர் தான் ‘இந்திய பிரதமர்’ என்று நினைத்திருந்தோம். அப்போ மன்மோகன் இந்தியாவை ஆளவில்லையா? ஒரே காமெடி தான் உங்களுடன். இந்த லட்சணத்தில் நீங்கள் அண்டை நாட்டை குறைசொல்கிறீர்கள்.

       • தேசிய அரசியலில் எம் மக்களுக்கு இல்லாத புரிதலும் தெளிவும் தான் எம்மக்களின் இந்த இழி நிலைக்கு காரணம்… – சொன்னது யார் தெரியுமா?

        • அதெல்லாம் இருக்கட்டும் பாஸ். நீங்க என்னத்த புரிஞிகிட்டீங்க? அதை சொல்லுங்க. நாங்களும் தெரிஞ்குவோமுல்ல..

      • Give answer for each question Ponraj asked.

       //ஒரு சாதரணமான ஆளே இப்படி யோசிக்கும் போது பல்நோக்கு புலனாய்வு குழு ஏன் விசாரிக்கவில்லை? மேற்சொன்ன சில விசயங்களை கூட்டிக் கழித்து பார்த்தால் குழந்தைக்கு கூட தெரியும். “ராஜிவ் கொலையில் புலிகளை விட மேலும் பலர் சம்பந்தபட்டிருக்கிறார்கள்,அப்படி சம்பந்தபட்ட ஒவ்வொருவருக்கும் ராஜிவ் இறப்பின்மூலம் ஒவ்வொரு பலன் இருந்திருக்க கூடும்” என்று.//

       hope you can read. what he and i say is, even if LTTE is involved, who has asked and what for.

       //ஆகவே புலிகளுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை என பொன்ராஜ் அவர்கள் கூறும் சாட்சியங்களின் அடிப்படியில் தெளிவாகிறது…//
       i leave this to you to decide your intelligence.

    • Mr Manithan, if you have guts, open up your face and talk. What ponraj says is the open questions needs to be addressed.

     //15.கொலை நடந்து அடுத்த ஒரு மணிநேரத்திலேயே “இதை செய்தவர்கள் விடுதலை புலிகள்” என்று அன்றைய சட்ட அமைச்சர் சுப்ரமணிய சாமி சொன்னது.//
     This Swami dog, has told to his pary person on May 21st, 1992 around 10.30 itself is that Rajiv got killed.

     he had a meeting at Madhurai on 22nd evening, but didn;t book a ticket to chennai/madurai.

     all these are documented in verma comisson report sir.

     more than that he told that the real people behind Rajiv murder is Sonia and co. do you have guts to ask Swami why he is saying that?

     i am ashamed of sonia, rahul, priyanka. i don’t whether rahul/priyanka are true Rajeev childrans. yes i doubt sonia’s character itself. please try to get this news to sonia and her associates.

     //18.ப.சிதம்பரம் ராஜிவ் கொலைக்கான ஆவணங்களை தொலைத்தது.//
     this idiot should have comitted suside if he was teally worry about this case as soon as documents are lost. but he was never worried about this case.

     another important CD which was never produced in court, which is again in jain or verma commision report.

     why only CBI direction, IB direction and few individual only saw this, whoever seen this CD is in good position now, so what was there in this CD, why don’t you openup if really you guys wants to bring the truth.

     • ஷான் – ஒரு வேண்டுகோள்… தாங்கள் தங்கள் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்து தெரிவித்தல் சற்று படிக்க தெளிவாயிருக்கும்.. பதிலளிக்கவும் வசதிப்படும்… செய்வீரா…

  • Dear Manithan, தங்கபாலு – this guys duty at Delhi was to supply girls to Congress leaders.

   i openly tell this, if you have தங்கபாலு contact please pass it on.

   i am telling with proof in hand so i don’t worry.

   all these will be revealed in our new book which is getting ready.

   • சுஜித் கான் … உங்களுக்கு அரசியல் தெளிவு இல்லை… சீனாவுக்கும் ப.ஜ வுக்கும் என்ன தொடர்பு?

    • //உங்களுக்கு அரசியல் தெளிவு இல்லை//
     நீங்கள் அரசியலில் மூழ்கி முத்தெடுத்தவர் என்பதை ஒப்புகொள்கிறோம். தயவுசெய்து எண்:14க்கான எமது சந்தேகங்களை உம் அரசியல் அகராதிகளை தூசுதட்டி தீர்த்து வையும்.

     • லீக் முனுசாமி – காங்கிரஸ் காரர் தானே… முஸ்லிம் லீக் என்று நினைத்தீரோ…

      • நீங்க கேள்வியை தப்பா புரிஞுகிட்டீங்க பாஸ். லீக் முனுசாமி கூப்பிட்டு ஒன்றும் ராஜிவ் காந்தி சிறீபெரும்புதூருக்கு வரவில்லையே? லீக் முனுசாமி ஒன்றும் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கவில்லையே? லீக் முனுசாமி ஒன்றும் தமிழக காங்கிரஸ் தலைவராக இல்லையே? இன்னும் உங்களுக்கு புரிகிறமாதிரி சொல்லறேன். “லீக் முனுசாமி ஒரு காங்கிரஸ்காரன். அத்னால ராஜிவ் கொலையில் இறந்தவர்களில் அவரே அதிமுக்கியமானவர்.மற்றபடி காங்கிரஸுக்கு இராஜிவ்கொலையில் எந்த பங்கும் இல்லை” என்று நீங்கள் கூறினால், “ராஜிவை கொன்ற தனுவே புலிகள் இயக்கத்தில் அதி முக்கியமானவர். எனவே புலித் தலைவர் பிரபாகரனை இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்த்தது செல்லாது” என்கிறேன். புரிகிறதா?

 12. \\”அழையா விருந்தாளி”\\
  உங்களுக்கு ஆதரவா ஜால்ரா போடுறவனெல்லாம் தோழன், உங்களை கேள்வி கேட்டால் “அழையா விருந்தாளி”. சீன எதேச்சதிகார சர்வாதிகார கும்பலின் உண்மை முகம் தெளிவாகிறது…

  • மனிதன் என்னையும் ஒரு கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்திவிட்டார். எல்லாரும் ஜோரா கைதட்டுங்கோ…!!! 🙂

  • //உங்களை கேள்வி கேட்டால் “அழையா விருந்தாளி”//
   எதிர்கேள்வி கேட்டால் எங்கெங்கோ ஓடி ஒள்கிறீரே? 21 பாயிண்டுகளில் உங்களுக்கு தோதான மன்மோகன் சிங்கை மட்டும் எடுத்து அதற்கும் மொக்கையான ஒரு கமெண்டு போட்டு தப்பிக்கும் உங்களிடம் என்னை போன்ற கேனையர்கள் தான் வாதம் செய்வார்கள். மற்றவர்கள் வாதம் செய்ய அவர்களுக்கு என்ன கிறுக்கா பிடித்திருக்கு. 🙂

 13. “எல்லாரும் ஜோரா கைதட்டுங்கோ”

  அழையா விருந்தாளி என எம்மை அழைத்ததற்கு நீர் வருத்தம் தெரிவிப்பீராயின் நான் ஜோராக கை தட்டுவேன்…

 14. பொன்ராசு உங்கள் கருத்துக்களுக்கு நன்றி… மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்… கருத்து பகிர்வோம்… படிப்பித்து படிப்போம்… நன்றி.

 15. 1.மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார். விசாரணை வெளிப்படையாக நடந்தது. கொலையாளி சார்ந்த இயக்கம் இன்னும் இயங்குகிறது.
  2.இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டார். விசாரணை வெளிப்படையாக நடந்தது.கொலையாளி சார்ந்த மக்களோ இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்கள்.
  3.ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
  — விசாரணை வெளிப்படையாக நடைபெறவில்லை.
  — கொலையாளி சார்ந்த மக்கள் ஒன்றறை லட்சம் பேர் இதற்காக பழிவாங்கப் பட்டார்கள்.

  காரணம் ‘தமிழன் இளிச்சவாயன். பணம் கொடுத்தால் காட்டிகொடுக்கும் ஆட்கள் அதில் உண்டு’ என்பதால்.

 16. இனி மீண்டும் தடா, பொடா போன்ற சட்டங்கள் அவசியம் என்ற வாதம் எழுப்பப்படும். தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குரு, மற்றும் தமிழக மூவருக்கும் கருணை காட்டக்கூடாது என்ற இரைச்சல் ஊடகங்களை நிறைக்கும். மொத்தத்தில் அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாகவே இந்த குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது.-,இனி
  என்னப்பா ராஜீவ் வாரிசுகளா?சந்தோஸம்தானே!

 17. பயங்கரவாதம் என்றால் என்ன ? – அம்பிகளே தெரிந்து கொள்ளுங்கள்.

  சங்கரராமன் கொலையில் ஜெயந்தரனுக்கு சம்பந்தம் இல்லை என்றால் – அரசு செய்தது பயங்கரவாதம்.

  ஜெயந்தரனுக்கு சம்பந்தம் உண்டு என்றால், கொலை செய்து விட்டு ஜெயந்தரன் தப்பிக்க பார்க்கிறான் – இது சங்கர மடத்தின் பயங்கரவாதம்.

  அம்பிகளே புரிகிறதா ?

 18. Mr. Ponraj

  They ‘way’ in which you put your points are nice. I read your comments in few other articles as well. Below are my thoughts

  1) Rajiv need not be killed by LTTE, but they could have been used as Weapon by USA. And these 3 people sent for hanging may not be real culprits. You can very well argue, but don’t mark the reason as ‘Tamilans’- every group will start saying similar pattern. It will lead to a very bad example. Do you agree?

  2) Dinamalar – you all people say its parpan newspaper. Ok. In TN, less than 2% will be parapans. Is it not? Why you folks are every time bothering about parpans. Here you mean only Iyer or you mean all ‘FC/BC’ like Devar, Mudaliar, vanniar etc. If you mean all of them I am ok to use the term ‘parpan’. But if you say it means only ‘Iyer’ then its meaningless. Its practically impossible to that only Iyer is in POWER everywhere in India (that too after reservation schemes) or only Iyer is doing all these terrorism and all 98% are still allowing them. I don’t think any one of our MLA is a Brahmin. all are non-brahmin, then why they hell TN is not showing any progress? Don’t say JJ is Paatthi.None(at least 99%) of their MLA are parpans Why the magic does not happen in KK period?

  3) RSS – they are non-existence in TN. You folks are introducing them to many tamilans who read this website or other media to TN by bringing them in loop every time in all articles. Please never say all muslim terrorism in India is ‘repel’ effect of ‘RSS’ activities. Even if we take RSS has done all those terrorist activities, if you go & ask them they will tell similar story that they are doing that because its their ‘repel/revenge’ attempt against Muslims(they will quote something else). So its never ending story. TERRORISM in any form, any religion is NOT acceptable whatever be the reason. Hope you agree.

  4)Indian Democracy – I never support any of the present political party (leaders). Most of them are culprits. But don’t blindly go against democracy. Only in Democracy, your Absal Guru is still alive and lots and lots of investigation is happening for many years. Is it same case in any Communists or Arab countries? You can very well say we need to change our IPC(law) to present scenario, i agree, but not the democracy. Thats the reason we are all discussing here without any worries. Is it not?

  5) Hindusim – I did not read much from you, but many of your vinavu brothers always speak against Hinduism – stating repeatedly manudarmam. Many of them are not ready to accept the BASE – Hindusim allows everything – someone see Raman (to have single wife), some one talk about krishna leelai, some one talks about Advaitham (siva, vishnu are same), Mr. Ramasamy can put serupu mallai on Ramar photo, vinavu brothers can just like that say Hindusim is not at all a religion, and so on….so anyone one can anything. Is it possible in Islam, Christianity or any other religion. Did we every comment on them why they are putting 1000 restrictions? Its up them …all these vinavy folks are telling that some 2% of TN population are ruling in some format the remaining 98%…real comedy…what do you think?

  • Contd.

   6) Terrorism in Gujarat – குஜராத்தில் நடைபெற்ற படுகொலைகளை யாரும் நீங்கள் சொல்வது போல் கண்விரிய ரசிக்கவில்லை. ரசித்தவன் மனிதனுமில்லை. ff you ask RSS they may say its ‘REPEL’ effect similar to Vinavu comments on Muslism terrorism. Let them all be….

   I think it happened at least 5 years back. Can any of you give us statistics from Gujarat –
   a) how many Muslims are moved from Gujarat after this incident?
   b) How many Muslims gain/lost their job/business or after this incident?

   Why none of you make any comment on the improvements made in the state? particularly the industries, agriculture and employment opportunities. Please don’t say its capitalism. Whatever be the ‘ism’, the people in Gujarat are getting ‘jobs’ easier and they life style is improving a lot compared to other states. Again, please don’t give 1 or 2 incidents happened in state as ‘excuse/reason’ – its practically impossible to run the show 100% perfect.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க