பு.மா.இ.மு தோழர்கள் மீது நடத்திய போலீசு தாக்குதலைக் கண்டித்து பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!
தனியார் பள்ளிகள், கல்லூரிகளை அரசுடைமையாக்கு! அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்கு! போன்ற முழக்கங்களை முன்வைத்து 28.06.2012 காலை டிபிஐ யை முற்றுகையிட்ட 250க்கும் மேற்பட்ட பு.மா.இ.மு தோழர்களை போலீசு காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி கைது செய்து சிறையிலடைத்துள்ளது.
சிறுவர்கள், குழந்தைகள் என்றும் பாராது, போலீசார் நடத்திய கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்தும், பு.மா.இ.முவின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், இல்லையேல், எமது போராட்டம் வகுப்புகளைப் புறக்கணிப்பது என்பதோடு மட்டுமல்லாது, வீதியிலும் இறங்கிப் போராடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். இது போன்று திருச்சி ஈ.வே.ரா கல்லூரியிலும் மாணவர்கள் போலிசு தாக்குதலைக் கண்டித்து வகுப்புக்களைப் புறக்கணித்து போராடி வருகின்றனர். விழுப்புரத்தில் பு.மா.இ.மு தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்னும் பல இடங்களில் மாணவர்கள் இந்த தாக்குதலைக் கண்டித்து போராடி வருகின்றனர்.
_________________________________________________________
– புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை
___________________________________________________
வாழ்த்துக்கள் தேழர்களே…
வடிவேலு பாணி தமிழ்த் தேசியமும்; புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தியாகமும்
http://mathimaran.wordpress.com/2012/06/30/543/
[…] […]
[…] […]
//தியாகுJune 30, 2012 at 10:13 am Permalink
1
வாழ்த்துக்கள் தேழர்களே…
//
யாரும் கன்பூஸ் ஆகிக்காதீங்க இந்த தியாகு நானில்லை
தொடரட்டும் போராட்டம்
அரசு அலுவலகங்களில் எங்கு பார்த்தாலும் லஞ்சம தலைவிரித்தாடுகிறது. மக்கள் சொல்லன்ன துயரத்தை அனுபவிக்கிறார்கள். இந்த புரட்சியாளர்கள் லஞ்ச ஊழலை தடுக்கவும் மக்களுக்கு நல்லது செய்யவும் தங்களது “புரட்சியை” பயன்படுத்தாமல் சில்லறை விசயங்களுக்கு பயன்படுத்தி தங்களைத்தானே வீழ்த்திக்கொல்கிரார்கள்!
அரசு அலுவலகங்களுக்கு சென்று “லஞ்சம” வாங்குபவர்களை தண்டியுங்கள்.இது மக்களுக்கு நன்மையாக முடியும்.
தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
[…] […]
[youtube http://www.youtube.com/watch?v=C1hrO1gTmdQ&w=420&h=315%5D
போராட்டத்திற்க்கு வாழ்த்துக்கள்….முகத்தை ஏன் மூடீ இருக்கீங்க…..முகத்தை காட்ட ஏன் பயம்? என்ன காரணம்? தெரிந்துகொள்ள விரும்புகிறேன்…
https://www.facebook.com/photo.php?fbid=380994585288968&set=a.241270245928070.62047.126346710753758&type=1
See the above link…
திருத்த முடியுமா
போலீச திருத்த முடியுமா
நிமுத்த முடியுமா
நாய் வால நிமுதத் முடியுமா………….
ம.க.இ.க வின் இந்த பாடல் வரிகளை நிலனைவில் கொள்வோம்
நாய்களுக்கு சரியான தருணத்தில் பதிலடி கொடுப்போம்
[…] […]
[…] […]