Monday, October 7, 2024
முகப்புசமூகம்சாதி – மதம்குறவர் என்றால் இளக்காரமா?

குறவர் என்றால் இளக்காரமா?

-

போலீசுவிருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கண்ணகி காலனியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் பத்மபிரியன் (14) கடந்த செப்டம்பர் 24 அன்று காலை தனது நண்பர்களுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது கம்மல் திருட்டு பற்றி விசாரிக்க அங்கே வந்த திருத்தங்கல் காவல் துறையினர் அந்த சிறுவர்களிடம் அவர்கள் யார் என்ன விபரம் என்று கேட்டிருக்கிறார்கள். குறிப்பாக அவர்கள் என்ன சாதி என்பதை விசாரித்துள்ளார்கள். சிறுவன் பத்மபிரியன் குறவர் சாதி எனத் தெரிய வரவே மற்றவர்களை அனுப்பி விட்ட காவல் துறையினர் அவனை மாத்திரம் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

முதலில் திருடியதை ஒத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளனர். சிறுவன் மறுக்கவே கடுமையாகத் தாக்கி உள்ளனர். மண் நிரப்பப்ப‍ட்ட பைப்புகள், கிரிக்கெட் ஸ்டெம்புகள், தென்னை மட்டை இவற்றால் நாள் முழுக்க அடித்து அவனை ஒத்துக்கொள்ள வைக்க முயன்றனர். ஸ்டேஷனுக்கு வந்து போகும் போலீசு வெறியர்கள் அச்சிறுவனை மாறி மாறி கன்னத்தில் அறைந்துள்ளனர். வலது கண்ணில் பார்வை போகும் வரை அவர்களது தாக்குதல் நிறுத்தப்படவே இல்லை.

“எனக்கு ஒன்றும் தெரியாது” என அப்பிஞ்சு மறுத்த போது, “நீ குறவர் சாதியில் பிறந்தவன். அதனால் கட்டாயம்  திருடியிருப்பாய்” என்று சொல்லிச் சொல்லியே தாக்கி உள்ளனர். மேலும் அவன் மறுக்கவே மின்சாரத்தால் சூடு வைக்கப் போவதாக மிரட்டியும் உள்ளனர். மாலை காவல்துறையினர் வீட்டில் அவனை விட்டபோது உடல் முழுதும் காயமாக இருந்ததாம். ஆனால் அந்த காயத்தை விட அவனை வார்த்தைகளால் அவமானப்படுத்தியதைத்தான் பெரிய காயமாகப் பார்க்கிறார் சிறுவனின் தந்தை கணேசன்.

திருத்தங்கல் நகராட்சியில் துப்புறவுத் தொழிலாளியாக பணியாற்றும் கணேசன் இதுபற்றி மதுரை உயர்நீதி மன்ற கிளையில் மனுச் செய்துள்ளார். திருத்தங்கல் காவல்துறை ஆய்வாளர் (குற்றம்)செல்லையா மற்றும் எழுத்தர் சுப்புராம் என்ற இரு ஆதிக்க சாதியினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார். நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என நம்புகிறார். முதலில் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பத்மபிரியன் தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.

முன்னர் சேலம் மாவட்டத்தில் ஆசிரியரது பிரம்படியால் கண் பார்வை போன தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த தனம், இப்போது போலீசால் பார்வை பறிபோன பத்மபிரியன், ஹரியாணாவில் ஜாட் சாதியின் காமவெறிக்கு ஆளாகும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண், படிக்கப் போன ஒரே காரணத்துக்காக ஊர் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்ட கயர்லாஞ்சியின் போக்மாங்டே குடும்பத்தினர், மேலவளவு, திண்ணியம், பரமக்குடி எனத் தொடர்கிறது தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதலின் பட்டியல். நீதிமன்றங்களின் ஆதிக்கசாதி மனப்பான்மைக்கு வெண்மணி உள்ளிட்ட பல தீர்ப்புகளை ஆதாரங்களாகக் காட்ட முடியும். கவுரவக் கொலையை உச்சநீதி மன்றமே ஆதரிக்கிறது.

குற்றப்பரம்பரைச் சட்டம் என்பது வெள்ளையர்கள் நம்மை ஆண்டபோது வகுத்த சட்டம். தமிழகத்தின் கள்ளர் சாதி, குறவர் சாதி, வட இந்தியாவின் குஜ்ஜார்கள், சந்தால் பழங்குடியினர் என இந்தியா முழுதும் இப்படி பட்டியலிடப்பட்ட சாதிகளின் ஆண்களை குலத் தொழில் திருடுதல் என்பதாக காவல்நிலையத்தில் இராத் தங்க வைத்தது காலனிய ஆட்சியின் போலீசு. இன்று காலனிய ஆட்சி போய்விட்டாலும் அந்த மக்களை அப்படி நடத்துவது பெரிதும் மாறிவிட்டாலும், குறவர் போன்ற எளிய மக்களை இன்னமும் அத்தகைய அடிமைத்தனத்துடன்தான் நடத்துகிறார்கள்.

இன்றைக்கு திருடுதல் என்பது கார்ப்பரேட் ஊழலாக தலையெடுத்து நிற்கிறது. நிலக்கரி திருடனும், ஸ்பெக்ட்ரம் திருடனும் ஜாலியாக வெளியே உலா வருகிறார்கள். தப்பே செய்யாதவன் போல பகுமானமாக பேசுகிறார்கள். ஆனால் பிக்பாக்கெட் கூட அடிக்கத் தெரியாத பத்மபிரியன் குற்றவாளியாகி தண்டிக்கவும் பட்டு விட்டான்.

மதுரை மாவட்டத்தில் கிரானைட் மலைகளை விழுங்கிய துரை தயாநிதியும், பிஆர்பி-யும் சொகுசாக இருக்க, சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்பட்ட பத்மபிரியன் குறவர் சாதி என்ற காரணத்துக்காக பார்வையை இழந்திருக்கிறான். கண்மாயை காணாமல் அடித்தவனுக்கு கோழிக்கறி விருந்து, கம்மலை பார்க்காதவனுக்கு கூட கண்ணை பறித்தல். வர்க்க சமூகத்தின் நீதி பிறகு எப்படி இருக்கும்.

  1. கொள்ளை, கொலை, கற்பழிப்பு எனப் பலநிலைகளில் தொடர்புடையவர்களுக்கு அரசியலில் ஆட்கள் தொடர்பு இருப்பின் காவல்துறை கண்டுக் கொள்ளாது. இந்தச் சாதியில் பிறந்தவன் திருடி இருப்பான் எனக் காவல்துறை நினைத்தால் எந்தச் சாதியில் தான் திருடன் இல்லை. செய்யாத தவறுக்கு ஒரு சிறுவன் தண்டிக்கப் படுகிறான் எனில் அந்த ஊர் மக்கள் இன்னமும் ஒன்று திரண்டு ஊர் கூடி கேட்காமல் இருக்கிறார்கள் எனில் அங்கே நியாயம், நேர்மை, உழைப்பு ஆகியவைகளைப் புதைத்து விட்டார்கள் எனப் பொருள். இன்றைக்கு அந்தச் சிறுவனுக்கு வந்த நிலை அவ்வூர் மக்கள் பெற்ற சிறுவர்களுக்கு வாராது என எப்படிக் கூற இயலும்? அந்தச் சிறுவன் படிக்கும் பள்ளி நிருவாகம் என்ன செய்துக் கொண்டிருக்கிறதோ? எல்லாம் மாயை.

    • அவன் பாப்பான் கெடையாதுன்னு சொல்லனுமா? அயோக்கியத் தனத்தை தொடருகிறவனுக்கு சமமா ஆரம்பிச்சு வைச்சவனைனும் தண்டிக்கனும். அவன் என்ன ஜாதியா இருந்தாலும் அவன் ஒரு பாப்பான். போதுமா.

  2. We often hear Govt announcements about increased allocation of funds for modernisation of police force.What is the use of modernisation when the policemen are not trained properly?Police should protect the citizens and should not take law into their hands.Caste based discrimination is the worst crime.

  3. // “நீ குறவர் சாதியில் பிறந்தவன். அதனால் கட்டாயம் திருடியிருப்பாய்” என்று சொல்லிச் சொல்லியே தாக்கி உள்ளனர். //

    இதை விட ஒருவனை கீழ்த்தரமாக நடத்த முடியுமா?.முடியாது.

    உடனடியாக அந்த திருத்தங்கல் போலீஸ் ஆய்வாளரையும்,எழுத்தரையும் சிறையில் அடைக்க ஊர் பொதுமக்கள் திரண்டு வரவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

  4. இந்த சாதியில் பொறந்தா இப்படிதான் இருப்பான் என்பது காலகாலமாய் இந்திய மக்கள் ரத்தத்தில் ஊறிய அழுக்கு அது எளிதில் போகாது.நாலு தலைமுறைக்கு பின்னால் போய் பார்த்தால் எல்லா நாயும் பிச்சை தான் எடுத்திருக்கும் ஒரு தலைமுறையில் ஒரு நல்ல வேலைக்கு வந்துவிட்டாலோ அல்லது பணம் காசு பார்த்து விட்டாலோ பரம்பரையாய் ஜமீன்தாராய் இருந்த மாதிரி ஒரு நினைப்பு. அந்த சிறுவனுக்கு நல்ல கல்வியை அளித்தால் பதினைந்து ஆண்டுகளில் அவன் தலைமுறையை மாற்றும் அளவு ஆளாகிவிடுவான்.என் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ஒரு போலீஸ்காரன் என் சகோதரனை எப்படி நடத்தவேண்டும் அவன் திருடியிருந்தால் கூட என்று நான் ஒவ்வொரு போலிஸ் அதிகாரியிடமும் போய் கெஞ்ச வேண்டுமா?அவ்வளவு மனிதாபிமானம் அற்ற சட்டமா இந்தியாவில் நடைமுறையில் உள்ளது?வினவின் வரிசெய்திகள் குருஞ்செய்திகளாய் எல்லோர் கைப்பேசிக்கும் உடனடியாய் செல்ல ஏற்பாடு செய்யுங்கள் ஊரில் இருப்பவர்கள் உடனடியாய் அந்தந்த காவல் நிலையங்களை முற்றுகை இட வேண்டும். LET THIS BE THE LAST CASE.நம்மில் மனிதம் மலரட்டும்.

  5. whenever there is a theft, it is general perception to doubt the poor. if you are searching your some item/money misplaced in your house, do you not doubt your servant even for a second?

  6. அவன் பாப்பானா இருந்தக்க இன்னேரத்துக்கு வினவு அதைச் சொல்லியே கும்மாளம் போட்டிருக்குமே. இப்போ கள்ள மௌனம் சாதிக்குது.

    அதோட உனக்கு வேறு வேலை இல்லையா? இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா அவன் ஆரம்பிச்சான், இவன் ஆரம்பிச்சான்னு சொல்லிக்கிட்டு இருப்பீங்க, ?

    அவன் ஆரம்பிச்சா மத்தவங்களோட மூளை ஊர் மேயப்போச்சா?

    டோண்டு ராகவன்

    • டோன்டு சார்…அமைதி அமைதி…
      முரண்பட்டின் மொத்த உருவமான ‘திராவிட’ கட்சிகளின் கவனச்சிதறடிக்கும் திட்டம் தான் இந்த பாப்பான் தான் எல்லாத்துக்கும் காரணம் என்ற பம்மாத்து…
      இவர்களின் எல்லா கொள்கைகளுமே நிரந்தரமற்றவை…
      உதா: தமிழ் பற்று அது இது என்று மேடையில் பேசி வீட்டில் தெலுங்க்கு பேசுபவரே பெரும்பாலான ‘தமிழினத்தலைவர்கள்’நம் தண்டமிழ்நாட்டில்…என்ன செய்ய…
      அதே சமயத்தில் பார்ப்பனர்களும் அநியாயம் செய்யதவர்கள் இல்லை…ஆனால் ஆதிக்க ஜாதி வெறியர்கள் பலர் பார்ப்பன எதிர்ப்பை உபயோகித்து தப்பித்திக்கொள்கின்றனர்….

    • நல்ல வெலை அந்த போலிசு பார்ப்பான் இல்லை

      இல்லைன்னா டோன்டு என்ன ஆயிருப்பாரு

    • பார்பன கும்பல் தீண்டாமையை நேரடியாக கையாண்டாலும், வன் கொடுமைகளை நேரடியாக கையாளாது ,மறைமுகமாகவே கையாளும். அல்லது அதில் குளிர் காயும். இங்கு எழுதுபவர்களின் சாதி என்ன வென்று யாருக்கும் தெரியாது. ஆனால் டோண்டு சாதி மட்டும் எல்லோருக்கும் தெரியும். இது ஒன்றே போதும் உண்மையை விளங்கி கொள்ள.

          • verum veruppa mattume pozhinju enna seyya poreenga,Theendamai naala enna achu.Paarpana vaathiyaro arasanga adhigaariyo velai seyyama irunthangala,illa thirudi thinnuttangala.

            inaikki ella vidhamana golmal pannura cinemavula slut thanam pannura paarpaanunga ellam engalukku caste kedayathunnu naanga ellam secularnnu solravunga thaan.

            • என்னா தல சொல்ல வர..
              தீண்டாமைக்கு ஒரே காரணம் பார்பனிய இந்து மதம். பார்ப்பனியர்கள் – பரப்பியவர்கள் அல்லது திணித்தவர்கள், ஆதிக்க வெறி சாதிகள் – திணிக்கப்பட்டவர்கள் அல்லது நன்றாக பிடித்து கொண்டவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் – பாதிக்கப்பட்டவர்கள் .
              முஸ்லிமுக்கு எதிரா கலவரம் பண்ண மட்டும் தாழ்த்தபட்டவன் வேணும், கும்பல் சேர்ப்பதற்கும், பார்ப்பனியத்தை தக்க வைத்து கொள்வதற்கும் எல்லோரும் இந்துக்கள் என்று ஜல்லி அடிப்பது. சாதி வெறியர்களை பற்றி பேசினால் மட்டும் பார்பனர்களுக்கு தங்களை அவர்களோடு சேர்த்து கொள்ள கூடாது.

              • // தீண்டாமைக்கு ஒரே காரணம் பார்பனிய இந்து மதம். பார்ப்பனியர்கள் – பரப்பியவர்கள் அல்லது திணித்தவர்கள், //

                வலங்கைச் சாதியினராக பார்ப்பன-வேளாளர்களுடன் கோவிலில் பணியாற்றி, மருத்துவம்,வானியல், நிலஅளவை போன்றவற்றில் அறிவு பெற்றிருந்த பறையர்கள் மேல் தீண்டாமை திணிக்கப்பட்டது எப்போது..?!

                நாயக்கர்களுடன், கைவினை-தோல்வினைப் பொருட்கள் செய்யும் தொழிலாளர்களாக தமிழகம் வந்த இந்துக்களான அருந்ததியர்கள் ஐரோப்பியர் வருகையின் பின் தொழில் போட்டியால் நசித்து தீண்டாமைக்குள்ளானதற்கும் ‘பார்ப்பன இந்து மதத்துக்கும்’ என்ன சம்பந்தம்..?!

                சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரையில் வேளாண்மையில் நிபுணர்களாக இருந்த, இந்துக்களான, மள்ளர்கள் மேல் ஒரு காரணமும் இல்லாமல் தீண்டாமை பாய்ந்ததற்கு மனுதர்மமும், பார்ப்பன இந்து மதமும்தான் காரணமா..?!

                // ஒடுக்கப்பட்ட மக்கள் – பாதிக்கப்பட்டவர்கள் . //

                இவர்கள் தம் முதுகில் ஏறி உட்கார்ந்திருப்பவனை எறக்கித் தொலைங்க என்று உங்களிடம் கேட்டால் நீங்கள் கொடுக்கும் பதில் இதுவா..?! :

                பார்ப்பான்தான் இந்த அப்பாவியை உன் முதுகில் ஏற்றிவிட்டவன், இவனால் இறங்க முடியாது, பாவம்..!!!

                • அம்பி கோபப் படாதேள் ! “இந்துக்களான மள்ளர்கள்,இந்துக்களான அருந்ததியினர்” எல்லாரும் இந்துக்கள் தானே , அப்புறம் எப்படி அவர்கள் மட்டும் இழிந்த குலதினராயினர்.
                  எல்லாம் மிலேச்சர்களான அரபியர்களும் ,கிருத்துவர்களும் செய்த சதி ! சரியாண்ணா..!

                  • இன்றைய ஒடுக்கப்பட்ட வகுப்பினர், கடந்த சில நூற்றாண்டுகளிலிருந்து தீண்டாமைக்கு இலக்கானதற்கு, பார்ப்பன இந்துமதம்தான் காரணம் என்ற பிரச்சாரம் திராவிட இயக்கங்களுக்கும், நீங்கள் சொன்ன மேற்படி ‘மிலேச்சர்களில்’ சிலருக்கும் வசதியாக இருக்கிறது…

                    • பார்ப்பன அம்பி, கொஞ்சம் இதையும் கண்டுகுறது ,
                      “இந்துக்களான மள்ளர்கள்,இந்துக்களான அருந்ததியினர்” எல்லாரும் இந்துக்கள் தானே , அப்புறம் எப்படி அவர்கள் மட்டும் இழிந்த குலதினராயினர்.?????

                    • தமிழகத்தின் இந்துக்களில் ’இழிந்த குலம்’ என்று எதுவும் இல்லை.. அருந்ததியர் குலமும், தேவேந்திர குலமும் இழிந்த குலம் என்று எந்த இந்துமத சாத்திரம்/புராணம் கூறுகிறது..?! ’இழிந்த சாதி’ என்று பிற்காலங்களில் ஒடுக்கப்பட நேர்ந்ததற்கு, பார்ப்பன இந்துமதம்தான் காரணம் என்று நம்பிக் கொண்டு திரிவதைவிட, அரசியல், சமூக, பொருளியல் காரணங்கள் இல்லாமல் சாத்திர, மதரீதியாக மட்டுமே தீண்டாமையும், சாதிய ஒடுக்குமுறைம் சாத்தியமா என்று மூளையை பயன்படுத்தி சிந்திக்க வேண்டும்… மனு சாத்திரத்தையும், பார்ப்பானின் பூணூலையும் மட்டும் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தால் போதாது, பிற ஆய்வு நூல்களையும் படித்துப் பார்த்து, சிந்தித்து, அறிவை வளர்த்துக் கொள்ளும் ஆர்வம் வேண்டும்…

                    • அறிவாளியே ! எழுதியை ஒரு முறை படித்துப் பார்க்கவும். //தமிழகத்தின் இந்துக்களில்//- இது என்னப்பா புது கத ?
                      //எந்த இந்துமத சாத்திரம்/புராணம் கூறுகிறது// – எது கூரலன்னு கேட்டா பொருத்தமா இருக்கும்
                      //அரசியல், சமூக, பொருளியல்// – பார்பனிய இந்து மதம் ஏதோ சமூகத்துக்கு தொடர்ப்பிலாத முற்போக்கு மதம் போல ஒரு சித்தரிப்பு.

      • தம்பி அசு…அதே தோசைய திருப்பி போடலாம்ல…. பாப்பானா இல்லாதவன் எல்லா வன் கொடுமை செஞ்சுட்டு ஏதாவது இது மாதிரி நடந்தா அத பாப்பான் மேல பழி போலடலாம்னு குளிர் காயிற ஆட்கள் நிறையவே இணைய தளத்தள அலஞ்சுகிட்டு இருக்காங்க தெரியுமா….?

        • நீங்கள் சொல்வதும் உண்மைதாண்ணே !இதில் தோசை திருப்பி போட என்னன்னே இருக்கு. பார்பனிய-ஆதிக்க சாதிகளின் ஒற்றுமையே தீண்டாமையில் தான் அண்ணே நிலவுகிறது.

  7. ஊர் மக்கள் இன்னமும் ஒன்று திரண்டு ஊர் கூடி கேட்காமல் இருக்கிறார்கள் எனில் அங்கே நியாயம், நேர்மை, உழைப்பு ஆகியவைகளைப் புதைத்து விட்டார்கள் எனப் பொருள்.

    • மலர் மன்னன்…திரு டோன்டு பஞ்சாஙத்தை தூக்கி எறிந்தால் எல்லா ஆதிக்க சாதிக்காரனும் திருந்திடுவான் என்று கூறுவது ‘சரி’ என்றால், பஞ்சாங்கத்துக்கு அவ்வளவு பவரா?

      ஐயோ…ஐயோ..தாங்க முடியலடா சாமி….
      எல்லா சாதிக்காரர்களும் கை சூப்ப கூட தெரியாதவர்கள் என்றால் வியாபாரிகள், ஜமீந்தார்கள் எல்லாம் பார்ப்பனர்களாக இருந்து இருக்க வேண்டும்…
      பார்ப்பனன் தான் இதற்கு காரணம் என்றால் பார்ப்பனரல்லாதவர் ‘முட்டாள் முண்டங்கள்’ என்பது உண்மை என்று அர்த்தமாகிவிடும்…

      லாஜிக் இல்லாமல் பினாத்த வேண்டாம்….இந்த அரை வேக்காட்டு திராவிட ‘கருப்பு சாயம்’ வெளுத்து மிக நாளாயிற்று…’சிகப்பு’ தான் சமூகத்தை சீர்த்திருத்த முடியும்….

  8. By Panchaangam I mean all outdated dogmas.Brahmins are for status quo.Inspite of TN ordinance,all caste people could not become Archagars due to case filed by Brahmins in the SC.The person heading rocket research goes to Balaji temple before every launch.

  9. whats the problem with all that?

    Temple archakar is not a mere means of livelihood,it is a service just like politics is supposed to be.Letting a weak,corrupt entity like the government handle this is in nobody’s interest.

    First ask all the teachers to go to school and teach before we talk about temples and all.

    Are you trying to tell me that in spite of doing all the right things scientifically that luck or chance have no role to play,even in firing a rocket.

    Just because you understand how earth,planets and space works,are u going to make it happen by putting on a switch?

    There are lot of dogmas associated with brahmins which are wrong but by saying all old,native things are wrong and new modern things are right,u r just making an unnecessary culture war,when the right thing to do is to just remove the stupid dogmas and not everything at once.

  10. எனக்கு தெரிந்தவரை ஆதிக்க சாதியைச்சேர்ந்த யாரும் வண்கொடுமைக்குப்பொறுப்பேற்றதே இல்லை…
    எல்லாம் அவன் (பார்ப்பனன்) செயல் என்று ஒளிந்து கொள்ளும் வீர ‘சிங்கங்களாகவே’ உலா வருகின்றனர்…
    ஒரு வேளை தம்மைத்தாமே சிங்கம், புலி என்று பல ஆயிரம் ஆண்டுகள் கூறிக்கொண்டு வந்ததால் ‘மனித’ மூளை பரினாம ‘வளர்ச்சி’யடைந்து மிருக (சிங்கம், புலி) மூளை போன்று மாறி விட்டிருக்கும்…ஏனென்றால் இவர்கள் ஒன்றுமே செய்யத்தெரியாத சர்க்கஸ் மிருகங்கள்…பார்ப்பனர்களை ரிங் மாஸ்டராக கருதுகிறார்கள் போலும்…

  11. Weather Archagar job is a means of livelihood or a service,why it should be a monopoly of Brahmins?TN Govt conducted Archagar training with proper teachers and 207 trainees are denied Archagar posts due to the stay obtained by Brahmins.Mr Harikumar should say whether the action of Brahmins is correct.In a Kancheepuram temple,the food prepared for Vaishnavite devotees is denied to non brahmins.Again in another temple in the same town,prasadam is served to brahmins who are made to sit in the Arthamandapam.But non brahmins are not allowed to sit.They have to get the prasadam and go out of the mandapam..In that temple,a non brahmin can not recite slogans even if he is well versed and is very pious.The above mentioned discrimination while distributing prasadam was brought to the knowledge of the HR&CE deptt and the circular issued by the deptt is still not followed.The local police station refuses to entertain complaint in this regard.The complaint was preferred by local devotees who have formed an association not for this purpose but to render group worship.Mr Hari can have all these information in back issues of Times of India

  12. Archagar job is not the monopoly of brahmins,it is the monopoly of a few families of brahmins.

    Otherwise i am against any kind of discrimination in prasadam and things like that.Nobody should get any special preference but regarding being an archakar,it should only be from a few families that are already in that job and secondly punishements should be of very serious nature for people abusing the respect like devanathan.

    • on your previous comment you will say that it is normal to suspect a poor person

      but now “issue here is the police action against a poor person on a suspected theft case. where is the caste angle coming?”

      ok what about the police’s statement // “நீ குறவர் சாதியில் பிறந்தவன். அதனால் கட்டாயம் திருடியிருப்பாய்” //

      is that not a caste issue?

      or simply a normal issue like suspecting a poor person

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க