Wednesday, September 23, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக - கோவையில் ஆர்ப்பாட்டம்!

மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக – கோவையில் ஆர்ப்பாட்டம்!

-

ரியானா மாநிலத்தில் மாருதி சுசுகி நிர்வாகம் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தைக் கண்டித்து நாடு முழுவதும் 15 மாநிலங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அவற்றின் தொடர்ச்சியாக கோவையில் 08.02.2013-ம் தேதி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செஞ்சிலுவை சங்கம் முன்பு மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தோழர் ராஜன் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதிலும் தொழிலாளர்கள் வர்க்கத்திற்கு எதிராக செயல்படும் முதலாளித்துவத்தை வீழ்த்துவது நமது கடமை குறிப்பிட்டார்.

கண்டன உரையாற்றிய மாவட்டச் செயலாளர் 2012 – ஜூலை மாதம் வன்முறை நடந்ததாக அரசு கூறுகிறது. கடந்த 8 மாதங்களில் 2000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். நிர்வாகம் தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது என்று சுட்டிக்காட்டி பேசினார்.

தோழர் பூவண்ணன் நன்றி உரை ஆற்றினார்.


தகவல் : புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, கோவை

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. எப்படி…

    ஆர்ப்பாட்டம் நடத்தி முதலாளித்துவத்த வீழ்த்தீட்டீங்களா???

  2. //இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதிலும் தொழிலாளர்கள் வர்க்கத்திற்கு எதிராக செயல்படும் முதலாளித்துவத்தை வீழ்த்துவது நமது கடமை//

    அய்யோ ராமா…இந்த பன்ச்சுக்கெள்ளாம் ஒன்னும் குறச்சலில்லை, இப்ப உஙக போராட்டத்தினால் முதலாளித்துவத்தை வீழ்த்திட்டீங்களா?

    போய் ஒழுங்கா வேல பாத்து வாழ்க்கேல முன்னேறப்பாருங்கய்யா..

    • உழைக்கும் மக்களுக்கு எதிராக முதலாளித்துவத்தை வளர்க்கும் இந்த அரசும் அரசின் கொள்கைக்கும் பாடை கட்டும் நாட்கள் ரொம்ப தொலைவில் இல்லை அப்போது தெரியும் உமக்கு ஒய்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க