மீண்டும் எரியக் காத்திருக்கிறது கோவை !

52

ண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒன்றும் புதிதில்லை தான். ஆனால் சமீபத்தில் கோவையில் கண்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களில் ஒரு வித்தியாசத்தை உணர முடிந்தது. சேலத்தில் செத்துப் போன ஆடிட்டர் ரமேசுக்கு அடிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களில் “இந்து மக்கள் மக்கள் கட்சி மற்றும் ஊர் பொதுமக்கள்” சார்பாக அஞ்சலி செலுத்தப்படுவதாக அச்சிடப்பட்டிருந்தது. புறநகர்ப் பகுதிகளில் ‘கோவைபுதூர் / சின்னியம்பாளையம் / நரசிம்மநாய்க்கன் பாளையம்” என்று அந்தந்த ஊரின் பெயர்களை அச்சிட்டிருந்ததைக் காண முடிந்தது.

கலவரம் - ஆர்எஸ்எஸ்
கலவரத்தைத் தூண்டி விடும் ஆர்எஸ்எஸ் குண்டர்கள்.

கோவை ப்ரிக்காலில் நண்பர் ஒருவரைப் பார்த்து வரச் சென்றிருந்த போது அதே போன்ற கண்ணீர் அஞ்சலிப் போஸ்டர்கள் பெரியநாய்க்கன் பாளையத்திலும் ஒட்டப்பட்டிருப்பதைக் காண நேர்ந்தது.

ப்ரிக்கால் கேட்டிலிருந்து பேருந்து நிறுத்தம் வரும் வழியில் ஆங்காங்கே மோடி, அத்வானி , பாரதமாதா போன்ற பாரதிய ஜனதா தலைவர்களின் படங்களைக் காண முடிந்தது. தேனீருக்காக ஒரு கடையில் நின்ற போது கேட்டோம்.

“அண்ணா, இந்த ஆர்.டி.ஓ ஆபீஸ்ல புரோக்கரா இருந்தாப்லயே ரமேசு, அவரு தானே இங்கே பி.ஜே.பி செயலாளரு?” டீக்கடைக்காரரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தேன். எப்படியும் ஊருக்கு நாலைந்து ரமேசும் சுரேசும் இருந்தாக வேண்டும் தானே?

“ராமேசா… அப்பிடி யாருமே இல்லீங்களே. பிஜேபிக்கு இங்கெ யார் தலைவருன்னே தெரிலீங்க. போஸ்டர் மட்டும் ஒட்டிக்கிறாங்க” பதில் சொல்லி விட்டு ‘நீ யார்’ என்பது போலப் பார்த்தார்.

“நமக்கு பழனி பக்கம்ங்க. அப்பப்ப, கோயமுத்தூருக்கு வருவனுங்க. முன்னாடியெல்லா ரமேசு பேர்ல தான் போஸ்டர் போடுவாங்க, இப்ப ஊர் மக்கள்னு போட்ருக்காங்களேன்னு கேட்டனுங்க”

”ஓஹோ… இது சம்பத்து கட்சிக் காரங்க போட்ட போஸ்டருங்க” சம்பத்து கட்சியெனப்பட்டது இந்து மக்கள் கட்சி “இந்த _____ (முசுலீம்) பசங்க சும்மாவே இருக்க மாட்டீங்கறாங்க பாத்தீங்களா.. எல்லா ஊர்லயும் பிஜேபி காரங்கள கொன்னுட்டே இருக்காங்களாமா?” உங்க ஊர் நிலவரம் என்னவென்பதைப் போல பார்த்தார்.

“இன்னும் போலீசு வெசாரிச்சே முடிக்கலீங்க. அதுக்குள்ளாற இன்னாருன்னு எப்படீங்க சொல்றது? ஏற்கனவே இவிங்க கட்சிக்காரங்க காசு மேட்டருக்கும் லேடீஸ் மேட்டருக்கும் தான் அடிச்சிட்டு செத்துப் போயிருக்காங்க. இப்பவே அவசரப்பட்டு பாய்ங்க மேல பழியப் போடக் கூடாதில்லீங்க?” எனது பதில் அவரைத் தவறான இடத்தில் சீண்டியிருக்க வேண்டும். நேரடியான பதிலைத் தவிர்த்து விட்டு சுற்றி வளைக்கத் துவங்கினார்,

”அதில்லீங்க.. இந்த ____ (முசுலீம்) பசங்க பாத்தீங்கன்னா நம்மள மாதிரி இல்லீங்க; அவிங்களுக்குள்ளாற ஒன்னா சேந்துக்குவாங்க. அடிதடின்னா துணிஞ்சி நிக்கறாங்க, போலீசு கேசுன்னு ஒரு பயமும் இல்லீங்க. ஒருத்தன் பிரச்சினைன்னு உள்ள போனா மத்தவிங்க அந்த குடும்பத்தையே பாத்துக்கறாங்க. இப்ப கோயமுத்தூர்ல திரும்பவும் ஆட்டம் போட்ட ஆரம்பிச்சிட்டாங்க. கொஞ்ச நாளைக்கு மின்ன ஆத்துப்பாலத்துல ஒரு பிரச்சினை நடந்தது கேள்விப்பட்டிங்களா?”

”இல்லீங்களே”

“அதாவதுங்க, நம்ம கெம்பட்டிக்காலனி பையன் ஒருத்தன் வண்டில குனியமுத்தூருக்கு போயிட்டிருந்திருக்கானுங்க. செக்போஸ்ட்டு கிட்டெ பாலக்காட்டு கார் ஒன்னு மேல லேசா ஒரசிருக்கானுங்க. காருக்காரன் மலையாளி பாய்ங்களாமா. இவிங்க ரண்டு பேரும் என்ன ஏதுன்னு பேசிட்டு இருக்கறதுக்குள்ளார கரும்புக்கட பக்கத்தாப்டி இருந்து ஒரு அம்பது பாய்ங்க வந்திருக்காங்க. பாலக்காட்டுக்காரன் தாடி வச்சிருக்கங்காட்டியும் அவிங்காளுன்னு தெரிஞ்சிக்கிட்டாங்களாமா. ஒடனே இந்தப் பையன் கிட்ட பஞ்சாயத்து பேச வந்திருக்காங்க. பேச்சு முத்தி இவன் _______நாயிங்களான்னு திட்டிருக்கான். ஒடனே சுத்தி நின்னு அடிக்க ஆரம்பிச்சிருக்காங்க. அந்தப் பையன் ஓடிப் போயி போலீசு பீட்டுக்குள்ளாற ஒளிஞ்சிருக்கானுங்க. வெளிய ___ (முசுலீம்) ஒன்னாச் சேந்து அந்தப் பய்யனோட புது வண்டிய போட்டு அடிச்சி நொறுக்கிருக்கானுக. அப்பறம் கெம்பட்டிக்காலனிக்கு போன் பண்ணவும் இந்து மக்கள் கச்சிக்காரங்க பத்தம்பது பேரு கெளம்பி வந்து பஞ்சாயத்துப் பேசி அந்தப் பையன காப்பாத்தி கூட்டிட்டு போயிருக்காங்க” எனது பதிலை எதிர்பார்த்தார்.

”சரிங்க.. இது ஏதோ வாய்த்தகராறுங்க. இவனெதுக்கு நாயி பேயின்னு வாய் உடோனும்? அவிங்க அத்தன பேரு இருந்துட்டு அவங்க எட்த்துலேயே பேச்சு வாங்கிட்டு சும்மாப் போவாங்களா?”

”அதுக்கு சொல்லலீங்க தம்பீ… (முசுலீம்) பசங்க எப்படி ஒன்னு கூடிக்கறாங்க பாத்தீங்களா?. நம்மாளுக இந்த மாறி ஒத்துமயா இருக்க மாட்டீங்கறாங்களே?”

சுற்றிச் சுற்றி இப்படியே பேசிக் கொண்டிருந்தார். ஒருவழியாக அவருக்குப் புரிய வைப்பதற்குள் போதும் போதுமென்றானது. கடைசியாக கேட்டேன்,

“இத்தன சொல்றீங்களே.. அடுத்த எலெக்சனுக்கு தாமரைக்காண்ணா ஓட்டுப் போடப் போறீங்க?”

”தம்பி, நமக்கு இப்ப அம்பது வயசாச்சுங்க. இத்தினி வருசமா ரெட்டெலைக்குத் தான் ஓட்டு குத்தி இருக்கனுங்க. பளக்கத்த மாத்த முடியாதில்லீங்களா?

கிளம்பினேன். கோவையில் பலரிடமும் பேசியதில் இது போன்ற எண்ணற்ற கதைகளைக் கேட்க முடிந்தது. எங்கோ நடந்த அல்லது நடந்தேயிராத சம்பவங்களை அரைகுறையாக கேட்டு அதற்கு கண் காது மூக்கு வைத்து விரித்து விரித்துப் பேசினர்.

”சுந்தராபுரத்துல ஒரு பிஜேபிகாரனைக் கொன்னு குறிச்சி குளத்துக்குள்ளார பொணத்த வீசீட்டாங்களாம்”

“செலுவபுரத்துல பூட்டி வச்சிருந்த நம்மாளுங்க கடைக்குள்ளே ராத்திரி பெட்ரோலை ஊத்தி எரிச்சிட்டாங்களாம்”

“__(முசுலீம்)களுக்கு எங்கிருந்தோ பணம் வந்துட்டே இருக்காம்”

இது போன்ற கதைகள் புதிதல்ல; சொல்லப் போனால் இந்த உரையாடல் கோவையின் பழைய நினைவுகளை மீட்டும் ஒன்றென சொல்லலாம்.. 96-லிருந்து 2000 வரை கோவை இப்படித்தான் இருந்தது. 98-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பையும் அதற்கு முந்தைய கலவரங்களையும் பார்த்தவர்கள் இப்போதைய கோவையை நினைவு கூரலாம்.

96-ம் ஆண்டு இறுதியிலிருந்தே கோவையின் வீழ்ச்சி மெல்ல மெல்லத் துவங்கி விட்டது. பெரும்பான்மையானோருக்கு வேலை கொடுத்து வந்த தங்கப் பட்டறைகளும், பஞ்சு மில்களும் கொஞ்சம் கொஞ்சமாக நசிவடையத் துவங்கியிருந்தன. தங்க இறக்குமதியின் மீதிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது மற்றும் சங்கிலித் தொடர் நகை மாளிகைகளின் வரவு போன்றவை தங்க நகைத் தொழிலை பாதிக்கத் துவங்கியிருந்த காலம் அது. உள்ளூர் அளவில் சுயேச்சைத் தன்மையோடு இயங்கி வந்த பட்டறைகள் மூடத் துவங்கியிருந்தன. எஞ்சிய பட்டறைகள் பீஸ் ரேட்டுக்கு (குறைவான கூலிக்கு) பெரிய கடைகளுக்கு நகைகள் செய்து கொடுக்கத் துவங்கியிருந்தன. ஏறக்குறைய அதே காலத்தில் சீனப் பஞ்சின் வருகை கோவை மில்களை பாதிக்கத் துவங்கியிருந்தன.

தொழில் வாய்ப்புகள் குறுகிப் போனது வியாபாரிகளிடையே கடுமையான கழுத்தறுப்புப் போட்டியைத் தோற்றுவித்திருந்தது. நகரில் மார்வாடிகளுக்கும் முசுலீம் வியாபாரிகளுக்கும் போட்டி மிகவும் இறுக்கமடைந்திருந்த அதே காலகட்டத்தில் தான் ஓட்டுப் பொறுக்க என்னத்தையும் செய்யத் தயார் என்று இந்துத்துவ கும்பல் களமிறங்கியிருந்தது. இந்துத்துவ கும்பலுக்கு இயல்பாகவே மார்வாடி வியாபாரிகளின் ஆதரவு கிடைத்தது. மார்வாடிகளின் ஆதரவில் இந்துத்துவ பயங்கரவாத இயக்கங்கள் விறுவிறுப்பாக செயல்பட்ட காலம் அது.  அந்தக் காலகட்டத்தில் தான் இசுலாமிய வெறுப்புக் கிசுகிசுப் பிரச்சாரத்தை இந்துத்துவ கும்பல் தீவிரமாக முன்னெடுத்து வந்தது.

“கோட்டைமேட்டில் பாகிஸ்தான் கொடியை ஏற்றுகிறார்கள்”

”பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜெயித்ததை கொண்டாடுவதற்காக கோட்டைமேடு முசுலீம்கள் மணிக்கூண்டு பஸ்டாண்டில் எல்லோருக்கும் மிட்டாய் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்”

“கோட்டைமேட்டுக்குள் முசுலீம் அல்லாதவர்கள் நுழையவே முடியாதாம்”

”இந்துக்களை ஆத்திரமூட்டுவதற்காகவே முசுலீம்கள் தங்கள் முகங்களை எதிர் கடிகாரச் சுற்றில் கழுவுவார்கள்”

“இந்துக் கோயிலைப் பார்த்தால் கீழே துப்பி வைத்து விட்டுப் போக வேண்டும் என்று குரானில் எழுதிருக்கிறதாம்”

மேலே உள்ளதெல்லாம் சில உதாரணங்கள் மட்டும் தான். இது போன்ற எண்ணற்ற கட்டுக்கதைகள் அன்று புழக்கத்தில் இருந்தன. வேறு ஒருவர் சொல்லக் கேட்பவர், தன் பங்குக்கு சில கற்பனைகளை சேர்த்து அடுத்தவரிடம் சொல்வார். ஒரு கதை ஏழெட்டு சுற்று வந்தபின் அந்தக் கதையில் வரும் முசுலீம் ஒரு மாபெரும் டைனோசராக உருமாறியிருப்பார். இந்தப் பரப்புரைகள் இறுதியாக 97-ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் காவலர் செல்வராஜ் கொலையைத் தொடர்ந்த கலவரத்தில் வந்து முடிந்தது. அந்தக் கலவரத்தில் 17 முசுலீம்கள் கொல்லப்பட்டதோடு கோவை நகரில் முசுலீம் வர்த்தகர்களின் அடித்தளம் முற்றாக அடித்து நொறுக்கப்பட்டது.

இந்து முன்னணி இயக்கத்தின் மூலம் லும்பன்களையும் கிரிமினல்களையும் அணிதிரட்டி வைத்திருந்த இந்துத்துவ கும்பல், காவல்துறையின் நேரடியான ஆதரவோடு இசுலாமிய மக்களுக்கு எதிரான கலவரங்களை கட்டவிழ்த்து விட்டனர். செல்வராஜ் கொலையைத் தொடர்ந்த இரண்டு நாட்கள் கோவையில் நடந்த கொள்ளைச் சம்பவங்களைப் பட்டியலிட்டு மாளாது. ஒப்பனக்கார வீதியில் ஜிம்சன் கடை உடைக்கப்பட்டு கடிகாரங்கள் பட்டப்பகலில் கொள்ளையிடப்பட்டது; கனி ரேடியோஸ் உடைக்கப்பட்டு மின்னணுப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டது; ஷோபா துணிக்கடை முற்றிலுமாக எரித்து தரைமட்டமாக்கப்பட்டது. ராஜவீதி, வைசியால் வீதி குறும்பர் சந்து போன்ற பகுதிகளில் இருந்த முசுலீம் வர்த்தகர்களின் கடைகள் சூறையாடப்பட்டன.

97 நவம்பர் கலவரத்துக்கு எதிர்வினையாக 98 பிப்ரவரியில் அல் உமா நிகழ்த்திய குண்டுவெடிப்பு கோவையின் பொருளாதார இயக்கத்தை சுமார் ஒரு வார காலத்துக்கு உறைய வைத்தது. அல் உமாவைத் தவிர்த்து ஏராளமான, நூற்றுக்கணக்கான முசுலீம் அப்பாவிகள் பல ஆண்டுகளாய் சிறை வைக்கப்பட்டனர். இந்தக் கலவரங்களின் பாதிப்பிலிருந்து இன்று வரை அந்த நகரம் முழுமையாக மீண்டெழவில்லை. தொண்ணூறுகளின் இறுதியில் இசுலாமிய வெறுப்பை முன் வைத்து ஓரளவு செல்வாக்கையும் இரண்டு எம்.பி தேர்தல் வெற்றியையும் சம்பாதித்திருந்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் வெகுசீக்கிரத்திலேயே அம்பலப்பட்டு அதே கோவை மக்களால் குப்பையில் தூக்கி வீசியெறிப்பட்டனர். இந்துத்துவ இயக்கங்களும் துண்டுத் துண்டாக சிதறிப் போயின.

தற்போது ஏறக்குறைய 96-ம் ஆண்டில் நடந்ததை ஒத்த நச்சுப் பிரச்சாரங்களை இந்து பயங்கரவாதிகள் கட்டவிழ்த்து விட்டிருப்பதைக் காண முடிகிறது. கோவையின் புறநகர்ப் பகுதிகளெங்கும் ஆடிட்டர் ரமேசுக்கு இந்து மக்கள் கட்சி வைத்துள்ள போஸ்டர்களின் நோக்கமும் சமீப காலத்தில் இல்லாத அளவுக்கு இசுலாமியர்கள் குறித்த வதந்திகள் பரப்பப்பட்டு வருவதும் இதைத் தான் உணர்த்துகிறது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை உத்தேசித்து ஒருபுறம் குஜராத் வளர்ச்சி குறித்த பொய்களைத் திட்டமிட்ட ரீதியில் பிரச்சாரமாக முன்னெடுத்து வரும் பாரதிய ஜனதா, இன்னொருபுறம் தனது பயங்கரவாதப் பிரிவான விசுவ இந்து பரிக்சத் அமைப்பைக் களமிறக்கி மீண்டும் அயோத்தி பிரச்சினையைக் கிளற முயற்சித்து வருகிறது. இவற்றோடு பிராந்திய அளவில் இசுலாமிய வெறுப்பை முன்வைத்துக் கலவரங்கள் நடத்துவதன் மூலம் ஓட்டுக்களைப் பிரித்து அறுவடை செய்யவும் திட்டமிட்டிருப்பதைத் தெளிவாக உணர முடிகிறது.

காங்கிரசு கும்பல் ஒருபக்கம் பொருளாதார ரீதியில் நாட்டை ஓட்டாண்டியாக்கியுள்ளது என்றால் இந்துத்துவ கும்பல் இன்னொரு பக்கம் வேட்டைக்காடாக மாற்ற முயல்கிறது. கோவை மக்கள் தங்களது வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்து அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய நேரம் இது.   இந்து மதவெறியர்களை முறியடிக்காமல் கோவைக்கு மட்டுமல்ல, முழு இந்தியாவுக்கும் நிம்மதியில்லை.

வினவு செய்தியாளர்.

சந்தா செலுத்துங்கள்

அச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா? ஆதரியுங்கள்.

52 மறுமொழிகள்

 1. // சேலத்தில் ** செத்துப் போன ** ஆடிட்டர் ரமேசுக்கு

  **கொல்லப்பட்ட**. அரை டவுசர்கள் விசாரணை முடியும் முன்பே, இது இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய கொலை என்று பிரச்சாரம் செய்கிறார்கள் என்றால், நீங்கள் இதை கொலை என்று சொல்லாமல், சாவு என்று எழுதுவது முறையா?

  • உங்களுக்கு தமிலு வரலன்னு நெனக்கேன். இயற்கையாவோ அல்லது கொல்லப்பட்டோ செத்தாலும் செத்துப்போன பொணம்தான்.

  • வெறி நாய் செத்துப் போச்சு. நோயில செத்தா என்ன, அடிபட்டு செத்தா என்ன. தொல்லை விட்டுச்சுன்னு நிம்மதியா இருங்க.

   • //////வெறி நாய் செத்துப் போச்சு. நோயில செத்தா என்ன, அடிபட்டு செத்தா என்ன. தொல்லை விட்டுச்சுன்னு நிம்மதியா இருங்க////

    நல்ல தத்துவம்!!! அருமையாக இருக்கிறது. இதனை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். இது குஜராத் கலவரத்திற்கும் பொருந்தும் போல் உள்ளது. அது போல் இனி நடக்கும் தவறுகளுக்கெல்லாம், கற்பழிப்பு உள்பட, அனைத்தையும் விசாரிக்காமல் விட்டுவிடலாம். நேரம் மிட்சம். வினவு போன்ற வலை தளவும் தேவை இல்லை.

    • நட்டு அண்ணே. விசாரிக்குறதுக்கு முன்னாடியே முசுலிமுங்கதான் இத செஞ்சாங்கன்னு சொல்லீட்டாங்க ஏழு வயசுலயே எளனி வித்த ஆத்தா முதக்கொண்டு, டில்லி அத்துவானி ஜீ வரைக்கும். அதெல்லாம் தப்பில்ல ஒங்களுக்கு. வெறிநாய வெறிநாயின்னு சொன்னது தப்பு. வெறி நாயி ஊர்காரன கடிச்சா ஊர்க்காரன் கொல்லுவான், வீட்டுக்காரன கடிச்சா வீட்டுக்காரன் கொல்லுவான். யாரு கொன்னார் ன்னு எப்புடியும் தெரிஞ்சுடும். ஆனா சொந்தக்காரனே அடிச்சு கொன்னுருக்கலாம் ல. விசாரிங்கண்ணே நல்லா விசாரிங்க. வெறிப்பிடிக்கிறதுக்கு முன்னாடிதான் தடுப்பூசில்லாம். புடிச்சுடுச்சுன்னா கொல்ல வேண்டியதுதான்.

 2. திட்டமிட்ட பொய் பிரசாரங்களும் வதந்திகளுமே இருசமுதாயங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தி வந்திருக்கிறது . குறிப்பாக கோட்டைமேடு பகுதி முஸ்லிம்களை குறித்து அவதூறு பிரசாரங்களை சங்க பரிவார் அமைப்பினர் நடத்தி வருகின்றனர் . ஆனால் கோட்டைமேடு பகுதியில் காலாகாலமாக இந்துக்களும் முஸ்லிம்களும் அண்ணன் தம்பிகளாகதான் பழகி வருகிறார்கள் .

  கோவையில் புகழ்பெற்ற பழமையான கோவில்களான கோட்டை ஈஸ்வரன் கோவிலும் கோனியம்மன் கோவிலும் கரிவரதராஜா பெருமாள் கோவிலும் கோட்டைமேட்டில் தான் உள்ளது . கோட்டை மேட்டில் சுமார் 400 இந்து குடும்பங்கள் உள்ளது . கோனியம்மன் தேரின் போது நீர் மோர் கொடுப்பதில் இருந்து ஈஸ்வரன் கோவில் அன்னதானத்தின் போது ஒன்றாக அமர்ந்து உண்ணுவது வரை இந்து முஸ்லிம் ஒற்றுமை இருந்தது .இந்து முன்னணி வந்த பின்புதான் இந்த ஒற்றுமைக்கு பங்கம் வந்தது .

  கோவையில் நடந்த கலவரங்களில் போது முஸ்லிம்கள் குறைவாக வாழும் கெம்பட்டி காலனி கவுண்டம்பாளையம் ரத்னபுரி காமராஜபுரம் போன்ற பகுதிகளில் மசூதிகள் எரிக்கப்பட்டு அங்குள்ள முஸ்லிம் குடும்பங்கள் RSS கும்பலால் அடித்து விரட்டப்பட்ட போதும் கோட்டைமேட்டில் இருக்கும் மேற்படி கோவில்களுக்கோ அல்லது அங்கு வசிக்கும் இந்துக்களுக்கோ ஒரு சின்ன சேதம் கூட ஏற்பட்டதில்லை . கோட்டை மேட்டில் வசிக்கும் இந்துக்கள் தாக்கப்பட்டதாக சரித்திரமே இல்லை .

  கோவை மக்கள் மீண்டும் மதவாதிகளின் சூழ்சிக்கு பலியாகாமல் இருக்க வேண்டும்

 3. ///ஒருவர் சொல்லக் கேட்பவர், தன் பங்குக்கு சில கற்பனைகளை சேர்த்து அடுத்தவரிடம் சொல்வார். ஒரு கதை ஏழெட்டு சுற்று வந்தபின் அந்தக் கதையில் வரும் முசுலீம் ஒரு மாபெரும் டைனோசராக உருமாறியிருப்பார்.///

  ஒருவர் 6 அல்லது 7 உதவி ஆசிரியர்களுடன் இணைந்து இன்று எப்படிடா கதை புனையலாம், இந்துக்களைத்தூற்றலாம் என விவாதிப்பார்…அப்ப ஒரு உதவிஆசிரியர் பக்கி சொன்ன கதைதான் இது….

 4. Dear Vinavu,

  The content of this article seems to be one sided or rather does not tell the story from the opposite side.
  I personally beleive there is some tension between the two communities recently the fact is that RSS is able to spread the false rumour’s and gather the support of a typical Hindu who would be neutral otherwise, so it is a duty for Vinavu to bring light on wat happened in 1990’s in coimbatore and educate the readers. I can see some intolerance among few Hindus i know who read this article they seem to beleive Vinavu is on Muslim’s side it’s our duty to bring the whole story to public.

  Thanks in advance

 5. மிகவும் கவலைக்குறிய விஷயம். இஸ்லாமியர்களிடையே உள்ள உலகளாவிய அடிப்படைவாதிகள் இந்து பயங்கரவாதத்துக்கு உரம் ஊட்டுகிறார்கள். திராவிட அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக செல்வாக்கு இழந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் வட இந்தியாவை போல் தமிழகமும் மதவெறி தீயில் தள்ளப்படும். கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம் இருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் தமிழகத்துக்கு வெளியில் இருந்து (குறிப்பாக வட இந்தியாவில் இருந்து) நாற்பது லட்சம் பேர் தமிழகத்தில் குடியேறி உள்ளார்கள். பிழைப்பதற்கு வந்த இந்த வந்தேறிகள் தங்களுடைய மத வெறி அரசியலையும் இங்கே கொண்டு வந்து உள்ளார்கள். அதனால் தான் தமிழ்நாட்டில் இலை மறை காயாக இருந்த மதவெறி அரசியல் கொளுந்து விட்டு எரியத்தொடங்கி உள்ளது.இந்த உண்மை சர்வதேசியம் பேசும் வினவு கும்பலுக்கு தெரியாதது ஏனோ? கோவையில் வட இந்திய மார்வாடிகளுக்கும் கேரள இஸ்லாமியர்களுக்கும் இடையே இருந்த வியாபாரப்போட்டி தான் கலவரத்திலும் குண்டுவெடிப்பிலும் போய் முடிந்தது. சாதாரண தமிழர்கள் நிறைய செத்தார்கள். அவர்களின் பிழைப்பும் பெரும் பாதிப்படைந்தது. இப்போது உலகளாவிய பொருளாதார மந்த நிலை இந்தியாவை கடுமையாக பாதிக்கத்தொடங்கி இருக்கிறது. ரூபாய் சரிவு போன்றவை. இது தான் காலக்குறி. வந்தேறிகளின் அரசியல் செயல்பாடுகளை கடுமையாக கண்காணித்து ஒடுக்க வேண்டும். அது தான் தமிழ் நாட்டுக்கு நல்லது.

  • பத்து வரிக்குள் பதினேழு முட்டாள்தனங்களை அடைக்கும் திறன் தமிழினவாதிகளுக்கே வரும்.

   முதலில் “வட இந்திய மார்வாடிகளிடம்” பொறுக்கித்தின்கிறவர்கள் பச்சைத் தமிழ் இந்துத்துவ பொறுக்கிகள் தான்.

   இரண்டாவது தமிழ் இந்துத்துவ பொறுக்கிகள் வடநாட்டு மார்வாடிகளின் கண்டுபிடிப்போ உருவாக்கமோ அல்ல. அது பச்சைத் தமிழரான பொள்ளாச்சி மகாலிங்கம் போன்றோரால் ஊட்டம் கொடுத்து வளர்க்கப்பட்டது.

   மூன்றாவது, கோவையில் ”மலையாள” முசுலீம் வியாபாரிகளுக்கு அத்தனை செல்வாக்கில்லை. பெரும் பாதிப்புக்குள்ளானவர்கள் எல்லாம் உள்ளூர் முசுலீம்கள் தான். ராஜ வீதி, வைசியால் வீதி, குறும்பர் வீதி, சுக்ரவாரபேட்டை, மரண்ணகவுடர் வீதி போன்ற பகுதிகளில் உள்ள மொத்த வியாபாரக் கடைகள் பெரும்பாலும் உள்ளூர் முசுலீம் வர்த்தகர்களுடையது.

   நான்காவது, நியாயமாக பார்த்தால் கோவையில் “கிரீன் கலர் தமிழர்களான” கொங்கு வேளாலர்கள் தான் மதவெறி அரசியலின் அடித்தளம். கன்னடம் பேசும் குறும்பர்களும் ஒக்கலிகர்களும் பெரும்பாலும் தி.மு.க பக்கமும் தெலுங்கு பேசும் நாயுடுக்கள் தி.க / மதிமுக பக்கமும், தெலுங்கு பேசும் அருந்ததியினர் அ.தி.மு.க பக்கமும் உள்ளனர். இடைநிலைச் சாதிகளில் இவர்களே மதச்சார்பற்ற சக்திகள்

   ஐந்தாவது, ஈழ இன அழிப்பின் போது ‘பச்சைத் தமிழ்’ கவுண்டர்கள் நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டீருந்த போது ஈழத் தமிழர்களுக்கு அணுசரனையாக போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டது கன்னடம் மற்றும் தெலுங்கு பேசும் பகுதியில் தான்.

   கோவையின் பச்சை தமிழர்கள் ரித்தேஷ், ஜிஜேஷ் என்று பெயரிட்டு வரும் காலத்தில் கன்னட குறும்பர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அழகான தமிழ் பெயர்கள் இடுவது இன்றைக்கும் சர்வசாதாரணம்…

   உங்க சொம்பு ரொம்ப நசுங்கியிருக்கு போயி வேற வேலைய பாருங்க.

   • கோயமுத்தூர்காரன்!

    நான் உண்மையை சொன்னவுடன் உங்களுக்கு எவ்வளவு ஆத்திரம். எப்படி எப்படியெல்லாம் திசை திருப்ப பார்க்கறீங்க. கொங்கு வேளாளர்களில் ஒரு சில முட்டாள்கள் இந்துத்துவ அமைப்புக்களை ஆதரிக்கிறார்கள் என்பது உண்மை தான். ஒட்டு மொத்தமாக யாரும் ஆதரிக்கவில்லை.பொள்ளாச்சி மகாலிங்கத்தின் இந்துத்துவ ஆதரவு பற்றி எல்லோருக்கும் தெரியும். கோவை பகுதி மட்டும் அல்ல. நீலகிரி பகுதியிலும் இந்துத்துவ அமைப்புக்கள் மிகவும் வலிமையாக உள்ளன. இதற்கு காரணம் இந்தப்பகுதியில் தமிழர் அல்லாதவர்கள் கணிசமாக இருக்கிறார்கள் என்பது தான் . இந்த பகுதிகளில் வாழும் கன்னடம் பேசும் மக்களில் ஒரு சாரார் திப்பு சுல்த்தான் காலத்தில் மைசூர் பகுதியில் இருந்து தப்பித்து வந்தவர்கள். இவர்களிடம் இயல்பாகவே இந்துத்துவ வெறி இருப்பதை நான் நேரிலேயே கண்டிருக்கிறேன்.மேலும் கோவை மற்றும் நீலகிரி பகுதியில் கேரள மாநிலத்தவர் பலர் குடியேறியுள்ளனர். இந்தபகுதியின் தமிழ் அடையாளத்தை அழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் பல உத்திகளில் ஒன்று தான் இந்துத்துவ மயமாக்கும் முயற்சி.

    “முதலில் “வட இந்திய மார்வாடிகளிடம்” பொறுக்கித்தின்கிறவர்கள் பச்சைத் தமிழ் இந்துத்துவ பொறுக்கிகள் தான் ”
    இது இன்னொரு கடைந்தெடுத்த பொய். தமிழ் தேசியவாதிகளுக்கு நிதி வழங்கி தமிழ் தேசியவாதத்தை வளர்க்கும் முயற்சிக்கு துணை போகிற அளவுக்கு வட இந்திய மார்வாடிகள் முட்டாள்கள் அல்ல.

    “மூன்றாவது, கோவையில் ”மலையாள” முசுலீம் வியாபாரிகளுக்கு அத்தனை செல்வாக்கில்லை. பெரும் பாதிப்புக்குள்ளானவர்கள் எல்லாம் உள்ளூர் முசுலீம்கள் தான். ராஜ வீதி, வைசியால் வீதி, குறும்பர் வீதி, சுக்ரவாரபேட்டை, மரண்ணகவுடர் வீதி போன்ற பகுதிகளில் உள்ள மொத்த வியாபாரக் கடைகள் பெரும்பாலும் உள்ளூர் முசுலீம் வர்த்தகர்களுடையது.”

    பெரும் பாதிப்புக்குள்ளானவர்கள் எல்லாம் உள்ளூர் முஸ்லீம்களாக இருக்கலாம். ஆனால் இந்த கலவரத்தின் பின்னணியில் இருந்தவர்கள் பெரும் செல்வந்தர்களான கேரள முஸ்லீம்கள் தான். இந்த மாதனிக்கும் கேரளாவில் மட்டுமே இருக்கும் அவர் அமைப்புக்கும் கோவையில் என்ன வேலை?

    “தெலுங்கு பேசும் நாயுடுக்கள் தி.க பக்கமும்,…….உள்ளனர்”
    திராவிட கட்சிகளின் பின்னணியில் தமிழர் அல்லாத தென்னிந்தியர்கள் தான் அதிகம் என்று இப்போதாவது ஒப்புக்கொண்டீர்களே.

    “ஐந்தாவது, ஈழ இன அழிப்பின் போது ‘பச்சைத் தமிழ்’ கவுண்டர்கள் நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டீருந்த போது ஈழத் தமிழர்களுக்கு அணுசரனையாக போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டது கன்னடம் மற்றும் தெலுங்கு பேசும் பகுதியில் தான்.”

    ஏன் ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் ஒட்டமுடியலையா?

    “கோவையின் பச்சை தமிழர்கள் ரித்தேஷ், ஜிஜேஷ் என்று பெயரிட்டு வரும் காலத்தில் கன்னட குறும்பர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அழகான தமிழ் பெயர்கள் இடுவது இன்றைக்கும் சர்வசாதாரணம்…”
    தமிழில் பெயர் வைப்பது என்பது ஒரு உத்தி. அது மட்டும் தமிழ் உணர்வுக்கு அடிப்படை அல்ல.

    பெரிய ஆள் மாதிரி இத்தனை வருசமா பேசறீங்க. இருந்தாலும் உங்க கூட்டத்துக்கும் போராட்டத்துக்கும் அதிகபட்சம் ஐம்பது பேராவது வருவாங்களா?
    யோக்கியன் வரான். சொம்ப எடுத்து உள்ளே வை.

    • ////யோக்கியன் வரான். சொம்ப எடுத்து உள்ளே வை.///

     திருச்சிக்கு வரும் மோடியை சொல்லுகிறீர்களோ

     • உங்கள் மாதிரி ஆட்களுக்கு வருவதை விட அதிகம் பேர் அவனுக்கு (மோடி) கூட்டமாக வருகிறார்கள். இத்தனை ஆண்டுகள் பெரிய புடிங்கி மாதிரி மற்றவர்கள் எல்லோரையும் திட்டி என்ன மக்கள் ஆதரவு பெற்றீர்கள்?. ஒரு பாசிஸ்டுக்கு வரும் கூட்டம் கூட உங்களுக்கு இல்லை. அதுவும் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும்.

    • தாமதமாகவே இந்த பதிலைக் காண முடிந்தது. நான் கொட்டைப் பாக்கு என்கிறேன், நீங்கள் புதுக்கோட்டை என்கிறீர்கள்.

     //கொங்கு வேளாளர்களில் ஒரு சில முட்டாள்கள் இந்துத்துவ அமைப்புக்களை ஆதரிக்கிறார்கள் என்பது உண்மை தான்.//

     இதை எவனாவது குடுமி வைத்துக் கொண்டு வருவான் அவனிடம் போய் சொல்லுங்கள். கொங்குவேளாளர்களில் ஒரு மிகச் சிறுபான்மை மக்களே சாதி மதவெறிக்கு எதிரானவர்கள். ஆகப்பெரும்பான்மை சாதி வெறி மதவெறி அரசியலின் அடித்தளம். இந்தப் பேச்சைக் கேளுங்கள் –> http://www.youtube.com/watch?v=wUjTrHn4pR0

     நீங்கள் சொல்வது போல் கொங்குவேளாளர்களில் யோக்கியர்கள் பெரும்பான்மையாக இருந்தால் இந்த மணிகண்டனை சாதி விலக்கம் செய்யச் சொல்லுங்கள் பார்க்கலாம். கோவை ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளில் பெரும்பாலானோர் கவுண்டர்கள், பாரதியஜனதாவிலும் அப்படியே. மற்ற கட்சிகளில் இந்த நிலை இல்லை. இந்துத்துவ அமைப்புகள் மட்டும் தான் தமிழமைப்புகளா என்ன?

     //இந்த பகுதிகளில் வாழும் கன்னடம் பேசும் மக்களில் ஒரு சாரார் திப்பு சுல்த்தான் காலத்தில் மைசூர் பகுதியில் இருந்து தப்பித்து வந்தவர்கள்//

     கோபம் வர்றாப்ல வகையில் காமெடி செய்யாதீங்க பாஸ். முதலில் படுகர்கள் அந்த மலையின் மைந்தர்கள் – நீலகிரிக்குள் தமிழர்களே வந்தேறிகள். அடுத்து, படுகர்களின் முன்பு தி.மு.க சார்பும் தற்ப்போது அ.தி.மு.க சார்பும் தான் உண்டு (திமுக காலத்தில் தேயிலைக்கு விலைகிடைக்காத பிரச்சினை வந்த போது – 2001ம் ஆண்டு என்று நினைவு – படுகர்களிடம் திமுக எதிர்ப்பு உருவானது. இன்று வரை அவர்களில் பெரும்பாலோனோருக்கு திமுக பிடிக்காது). ஒரு தேர்தலில் கூட பா.ஜ.க இங்கே டிப்பாசிட் வாங்கிய நியாபகம் இல்லை. பெரும்பாலான அட்டிகளில் திமுக அதிமுக கொடிகள் தான் இருக்குமே ஒழிய எங்கும் இந்துமுன்னணி பலகைகள் இல்லை.

     //“முதலில் “வட இந்திய மார்வாடிகளிடம்” பொறுக்கித்தின்கிறவர்கள் பச்சைத் தமிழ் இந்துத்துவ பொறுக்கிகள் தான் ”
     தமிழ் தேசியவாதிகளுக்கு நிதி வழங்கி தமிழ் தேசியவாதத்தை வளர்க்கும் முயற்சிக்கு துணை போகிற அளவுக்கு வட இந்திய மார்வாடிகள் முட்டாள்கள் அல்ல.//

     நான் தமிழ் இந்துத்துவ பொறுக்கிகள் என்று தான் சொன்னேன் நீங்களே அதற்கு தமிழ்தேசியவாதிகள் என்று சேம் சைட் கோல் போட்டுக் கொள்கிறீர்கள்.

     //பெரும் பாதிப்புக்குள்ளானவர்கள் எல்லாம் உள்ளூர் முஸ்லீம்களாக இருக்கலாம். ஆனால் இந்த கலவரத்தின் பின்னணியில் இருந்தவர்கள் பெரும் செல்வந்தர்களான கேரள முஸ்லீம்கள் தான். இந்த மாதனிக்கும் கேரளாவில் மட்டுமே இருக்கும் அவர் அமைப்புக்கும் கோவையில் என்ன வேலை? //

     அல்-உம்மா துவங்கப்பட்டதற்கும் அவர்களது தீவிரவாத செயல்களுக்கு வேறு காரணங்கள் உள்ளன. கட்டுரையாளரே அது பற்றி எழுதியிருக்கிறார். பழனி பாபா தெரியும் தானே? ஏங்க திருப்பி அடிக்கிறதுக்கு பாய்ங்க ஏன் கேரளாவிலேர்ந்து ஆள் கூட்டியாறனும்?

     ///திராவிட கட்சிகளின் பின்னணியில் தமிழர் அல்லாத தென்னிந்தியர்கள் தான் அதிகம் என்று இப்போதாவது ஒப்புக்கொண்டீர்களே.///

     நான் கோவையின் நிலைமை பற்றி மட்டும் தான் சொன்னேன். நீங்கள் மொத்த தமிழ்நாட்டுக்கும் அதை விரித்து வாயால் வடை சுடும் முன், தமிழரல்லாதவர்களின் ஆதரவு கொண்ட திராவிட கட்சிகளை தமிழர்கள் ஆதரவு கொண்ட நீங்கள் ஒரு பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் தேர்தலிலாவது ஜெயித்து விட்டு வாருங்கள். பார்க்கலாம்.

     ///ஏன் ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் ஒட்டமுடியலையா? /// –> பெங்களூரில் கன்னட அமைப்பு ஒன்று போஸ்டர் ஒட்டியது. இப்ப உங்களுக்கு என்ன பிரச்சினை?

     //பெரிய ஆள் மாதிரி இத்தனை வருசமா பேசறீங்க. இருந்தாலும் உங்க கூட்டத்துக்கும் போராட்டத்துக்கும் அதிகபட்சம் ஐம்பது பேராவது வருவாங்களா?
     யோக்கியன் வரான். சொம்ப எடுத்து உள்ளே வை.//

     உங்க கூட்டங்களுக்கு வரும் லச்சக்கணக்கான தமிழ்தேசிய வீரர்களை அனுப்பி ராஜபக்சே கிட்ட சண்டை போட்டு டயர்டானவன் மாதிரியே பில்டப் கொடுக்கறீங்களே? இங்க ஒக்காந்துட்டு ரன்னிங் கமென்ட்ரி கொடுத்து அத்தினி பேரு சாவறதை வேடிக்கை பாக்க வேண்டியது, வாயி மட்டும் காது வரைக்கும் கிழியும். ”கிளிநொச்சியையா பிடிப்பாய், கிளிக்குஞ்சைக் கூட உன்னால் பிடிக்க முடியாது” அப்படின்னு ராம்நாதபுரம் கூட்டத்துல கடலை பாத்து கத்தின சீமான்ல இருந்து அத்தினி பேரும் கடைசி நேரத்துல என்னாத்துக்கு செல்போனை சுவிட்ச் ஆப் பண்ணானுங்கன்னு கேட்டு சொல்லுங்க.

     ஆமா, ஆர்.எஸ்.எஸ் காரனை சொன்னா உனக்கு ஏன் எரியுது? அவன் மேல உனக்கு அப்படி என்ன அக்கறை? எதுக்கு இப்ப வாண்டடா ஜீப்ல ஏறனும்னு அடம்புடிக்கிறீங்க?

     • தயவு செய்து உங்களுடைய “பின்வாங்கி, உள்ளிழுத்து, சுற்றிவளைத்து தாக்கும்” தந்திரத்தை இங்கே காட்டி வாயைப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம்.

      விவாதம் தமிழ்தேசிய அரசியல் குறித்தெனில் அது தொடர்பான கட்டுரைக்கு வரவும். காத்திருக்கிறேன். இங்கே விவாதம் இந்துத்துவ பயங்கரவாதம் தொடர்பானதாகவே இருக்கட்டுமே நண்பரே

   • உண்மை சுடும்…
    உங்கள் பதில் எனக்கு சந்தோசம் தருகிறது தம்பி!

 6. பாவம் உங்களின் முஸ்லீம் பாசம் ஓவராகிகொண்டே போகிறது. சிரியாவில் அப்பாவி மக்கள் மீது ரசாயன ஆயுதங்களை போட்டு இரண்டாயிரத்துக்கும் மேற்ப்பட்ட மக்களை கொன்று விட்டார்கள்.இதுவரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கடந்த ஆண்டு மட்டும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் தினசரி குண்டு வெடிப்பு. பாகிஸ்தானில் ஷியா மற்றும் சன்னி பிரிவுகளிடையே தினசரி மோதல்!!! இந்தியாவில் இப்படி இல்லையே என்ற ஏக்கம் உங்களுக்கு இருப்பது தெரிகிறது. இந்திய மக்கள் பண்பட்டவர்கள். தற்குறி கூட்டங்கள் அல்ல. இதை நீங்களும் உங்கள் விசுவாசிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

 7. If you want to talk about thamizh names,why don’t u ask. Christians and Muslims to have tamizh names instead of Latin and Arabic names.

  Secondly,what’s the point of putting posters,if tamilnadu had serious nationalistic politics,eazham would be alive now.

  Thank you for admitting Telugu castes being with dk,which was a long known story.

  Finally,how come al umma madani from kollam is able to influence things in Coimbatore.

 8. மார்வாடிகள் எந்த சூழீநிலையிலும் தப்பித்துக் கொண்டு மற்றவ்ர்களை பலி கடா ஆக்கி விடும் சூழ்ச்சிக்காரர்கள். அவர்கள் சமுதாயத்தை சுரண்டுவதுடன் நின்று விடாமல் அதை முடமாக்கி விடுவ்தில் கை தேர்ந்தவர்கள். அவர்களை கவனமாக கையாள்வது அவ்சியம்.

 9. தனது வீட்டில் தானே குண்டு வீசிய பாஜக நிர்வாகி, நண்பர் கைது
  By dn, திண்டுக்கல்
  First Published : 31 August 2013 02:18 AM IST
  புகைப்படங்கள்
  கமலக்கண்ணன் பி.பிரவீண்குமார்
  கமலக்கண்ணன் பி.பிரவீண்குமார்
  பிரபலம் அடைய தன்னுடைய வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசிய பாஜக நிர்வாகியும், அவரது நண்பரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

  திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் 3 ஆவது தெருவில் வசித்து வருபவர் பாஜக நிர்வாகி பி. பிரவீண்குமார். இவரது வீட்டில் புதன்கிழமை நள்ளிரவு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

  அப்போது, வீட்டிலிருந்த பிரவீண்குமாரின் மனைவி சத்தியலட்சுமி, பெட்ரோல் குண்டை வீசிச் சென்ற 2 மர்ம நபர்கள் குறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தொடர்ந்து வியாழக்கிழமை காலை, பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் பிரவீண்குமாரும் சத்தியலட்சுமியும் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப் பதிந்த போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

  இந்நிலையில் சுயவிளம்பரம் தேடும் வகையிலும், போலீஸ் பாதுகாப்பு பெறுவதற்காகவும், தனது வீட்டின் மீது தானே வெடிகுண்டு வீசிய தகவலை பிரவீண்குமார் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் கமலக்கண்ணன் (28) என்பவர் இதற்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பிரவீண்குமார் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்

 10. எழுத மேட்டர் ஏதும் கிடைக்கலைன்னா உடனே இனவெறியை தூண்டி பிரித்தாளும் சூழ்சியை கையில் எடுத்துருவீங்க….

  கோவை மீண்டும் ஏறிய வேண்டும் என்ற ஆசையில் நீங்கள் மக்களை தூண்டிவிடக்கூடிய கட்டுரையை துண்டு போடப்போகிறீர்கள் என தெரிகிறது…

  என்ன இருந்தாலும் தாமரைக்கு ஒட்டு போடா மாட்டார்கள் என உங்களை நீங்களே சமாதானம் செய்கிறீர்கள்… சிரிப்பு வருகிறது….

  ஆதாரும் அமலுக்கு வந்து… மோடியும் ஆட்சிக்கு வந்தால் – புரட்சி புதைந்துபோகும் என்ற மிரட்சி உங்களுக்கு இருப்பது தெரிகிறது…. கவலை வேண்டாம்.. கவலை வேண்டாம் யார் பிரதமர் ஆனாலும் தமிழகத்தை பற்றி கவலை கொள்ள மாட்டார்கள் – ஜெயா அம்மாவை தவிர…. 🙂

 11. வினவுக்கு நேரம் சரியில்லை…. இதுக்குப்பேருத்தான் மாமா வேலை பாக்குறது….

 12. இன்று ( 31.08.13 ) மதியம் சுமார் 02.30 மணியளவில் நாகப்பட்டினம் வெளிப்பாளையம் தம்பித்துரை பூங்கா அருகிலுள்ள சாலையில் இந்து மதவெறி காலிகள் 10 பேர் உட்கார்ந்து மறியல் செய்தனர்.
  சாலையையொட்டி ஒரு கட்டிடம் உள்ளது.20 ஆண்டுகளாக ஒரு இஸ்லாமியருக்கு சொந்தமாக உள்ளது.தற்போது இன்னொரு இஸ்லாமியர் குத்தகைக்கு எடுத்துள்ளார்.ஒரு மளிகைக் கடை வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.கட்டிடத்தையொட்டி முன்பக்கம் ஒரு சிறிய பிள்ளையார் கோயில் இருந்துள்ளது.பெரிய பங்களா கட்டி வெளிப்புற முகப்பு வாசல் சுவரில் பிள்ளையாரை பதித்து வைப்பார்களே அந்த மாதிரி.அந்த பிள்ளையாரை அகற்றி பூங்கா ஓரம் அதே மாதிரி வைப்பதற்கு கோயிலும் கட்டப்பட்டுவிட்டது.பிள்ளையாரை அகற்றியதுதான் பிரச்சனை.மீண்டும் கட்டிடத்தையொட்டி முன்பக்கம் கோயில் கட்டப்பட்டு வருகிறது.இதற்கிடையில் பாகிஸ்தான்,நாமெல்லாம் இந்து,தீவிரவாதம்…ன்னு காலிகளுக்கிடையே பேச்சு.பிறகு ஒரு குடுமி வந்திச்சு.காலிகளுடன் ஒரு டிஸ்கஷன்.பிள்ளையாரை பிரதிஷ்ட்டை பண்ணும்ல்ல அதான்.
  சரி, அதுக்கு பிள்ளையார் வேணும்ல்ல.அந்த கல் பிள்ளையாரைதான் போலீஸ் தேடிக்கிட்டிருக்கு.பூங்கா ஓரம் வழக்கமாக தட்டு வண்டி தொழில் செய்யும் தொழிலாளர்கள்தான் பிள்ளையாரை தூக்கிக்கிட்டு போயிட்டாங்களாம்.

  நாகை – நாகூர் பகுதிகளில் இந்து மதவெறி பரவாமல் இருக்க –
  இந்து என்று சொல்லாதே ! பார்ப்பான் பின்னே செல்லாதே ! என்று முழங்க வேண்டியதாக உள்ளது.

  ஒரு பக்கம் மன்மோகனின் மறுகாலனியாக்கம்.
  இன்னொரு பக்கம் இது போன்ற மதவெறி கூச்சல்கள்.

  இவ்விரண்டையும் ஒழிக்க நக்சல்பரி பாதையே ஒரே வழி !

 13. முசுலிம் மதவெறியை போகிறபோக்கில் கூறிவிட்டு இந்து மதவெறியை பற்றி விரிவாக எழுதியுள்ளீர்கள் ………… வாழ்த்துக்கள், ஹிந்து அடிவாங்குகிறவரை எவனும் இங்கு கொடிபிடிப்பதில்லை , கோசம் போடுவதில்லை……….. நடுநிலையாளர்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பார்கள்….. கம்முனிச வியாதிகள், கம்முன்னு இருப்பார்கள்………, வோட்டு கட்சிகள் எங்காவது அடி வருடிகொண்டிருப்பார்கள் ……. ஆனால் திருப்பி அடித்தால் அவனவன் அப்பன் ஆத்தாளை அடித்தது போல் மேற்சொன்னோருக்கு கோபம் கொப்பளித்து வரும்…………. போராட ஓடோடி வருவார்கள் ………… இங்கு ஹிந்து அடிக்கப்பட்டால் ஒருவனும் கேட்க நாதியில்லை…………..கோத்ராவில் ஹிந்துக்கள் ரயிலில் உயிரோடு எரிக்கப்பட்ட போதும், செல்வராஜ் கொல்லப்பட்ட போதும், ………… மேற்சொன்ன பன்னாடைகள் ஒன்றும் துக்கத்தில் பங்கு போடவரவில்லை………… இன்று கஷ்மீர் பண்டிட்டுகள் தில்லி தெருக்களில் பிச்சை எடுக்கும் நிலைக்கு யாரும் இரங்கி வந்து போராடவில்லை,………… சுதந்திரம் அடைந்தபோது நம் நாட்டில் முசுலிம் மூன்று கோடி , இன்று 15 கோடி………. ஆனால் பாகிஸ்தானில் சுதந்திரம் அடைந்தபோது ஒரு கோடி ஹிந்துக்கள் இருந்தார்கள் ,,,,,,,,,, ஆனால் இன்று 5 லட்சம் கூட இல்லை……… இதிலிருந்து யார் அஹிம்சாவாதி என்று புரியும்…. ஹிந்து அடிப்படையிலேயே அஹிம்சாவாதி அதனால்தான் 1௦௦ ஹிந்து குடும்பம் இருக்கும் இடத்தில் ஒரு முசுலிம் சுதந்திரமாக வாழமுடியும் ,ஆனால் 1௦ முஸ்லிம் குடும்பம் இருக்கும் இடத்தில் ஒரு ஹிந்து குடும்பம் கூட இருக்கமுடியாது………… இதை உங்களுக்கு எளிதாக சொல்வதென்றால் உங்கள் அமைப்பிலேயே ஹிந்துக்கள் தான் 99.99 சதவீதம் இருப்பார்கள்,,,,,,,,,, வாரத்திற்கு ஒரு கட்டுரை எழுதினால் முஸ்லிமகளை தாஜா பண்ணிவிடலாம் என்று கருதுகிறீர்கள் ,,,,,,,,,,, உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 14. ஒரு பிராமிணன் இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டு மகாத்மா காந்தியை கொன்றதில் ஆரம்பித்து நாடு முழுவதும் குண்டுகளை வைத்தது , பாகிஸ்தான் கொடியை ஏற்றியது, ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் தனக்கு தானே குண்டுவைத்தது, கோவிலில் மாட்டு கறியை வீசுவது என்று…. இன்று திண்டுக்கல்லில் நடந்த தன் வீட்டுக்கு தானே பெட்ரோல் குண்டை வீசிக்கொண்டதுவரை எவ்வளவு சூழ்சிகள்….ரேசிஸ்ட் அதிகாரிகள், ஆட்சியாளர்கள்,இது போன்ற செய்திகளை மூடி மறைக்கும் மீடியாக்கள் போன்றவைகளை எல்லாம் மீறி வெளியே தெரிந்ததே இவ்வளவு என்றால்….. ? தெரியாதது இதைவிட பல மடங்கு இருக்கும். அப்படி இஸ்லாம் இவர்களை என்ன செய்துவிட்டது ? இஸ்லாமின் மீதும் இஸ்லாமியர்களின் மீதும் இவ்வளவு குரோதம் ஏன் ? ஆடு மாடுகளை போல் இழி மக்களாய் நடத்தப்பட்ட பெரும்பான்மை மக்களை சகோதரர்களாய், தோழர்களாய் பாவித்தது இஸ்லாத்தின் குற்றமா ? மக்கள் எல்லோரும் சமமே என்று சொன்னது தவறா ? மரம், பாம்பு, கழுதை குதிரை என்று கண்ணில் பட்டதை எல்லாம் தெய்வமாக வணங்காதீர்கள், இவை எல்லாவற்றையும் படைத்த ஒரு சூப்பர் பவரை வணங்கு என்று ஓர் இறை கொள்கையை சொன்னது தவறா ? இஸ்லாம் என்ற மார்கத்தை, வாழ்வியலை அநேகம் பேர் ஆராய்ந்து பார்க்கவே மறுக்கிறார்கள். குரான் ஒவ்வொரு நிகழ்வுகளையும் சிந்திக்க சொல்கிறது. மற்ற மதங்கள் எல்லாம் சிந்திக்கவே கூடாது என்று சொல்லும்பொழுது இஸ்லாம் மட்டுமே சிந்திக்க தூண்டுகிறது. இதை பல ஆயிரம் ஆண்டுகள் காலமாக வஞ்சிக்கப்பட்ட சமுதாயத்தினர் கூட செய்ய மறுக்கின்றனர். அதை பற்றி சிந்தித்தவர்கள் இஸ்லாமை தன் வாழ்வியலாக மாற்றிக்கொண்டு முஸ்லீம்களாக மற்றவர்கள் பொறாமை பட்டு மனித நிலையிலிருந்து கீழிறங்கி பல இழி செயல்கள் புரிந்து இஸ்லாமியர்கள் மீது வலிந்து பலி போடும் நிலைக்கு அவர்கள் தாள்ளப்படும் அளவிற்கு கண்ணியமாகவே வாழ்கின்றனர். இது தான் உண்மை. இது தான் எதார்த்தமானது.

  • //ஆடு மாடுகளை போல் இழி மக்களாய் நடத்தப்பட்ட பெரும்பான்மை மக்களை சகோதரர்களாய், தோழர்களாய் பாவித்தது இஸ்லாத்தின் குற்றமா //

   Wow! So why there is bombing in Ahamadi or shia prayer places. Have your community learned to treat each other with brotherhood before claiming the pride?

   If 20 percent of Hindus are daliths and illtreated, in Islam 50% of women are illtreated. They cant pray the super dooper god along with husband and kids.

   //மரம், பாம்பு, கழுதை குதிரை என்று கண்ணில் பட்டதை எல்லாம் தெய்வமாக வணங்காதீர்கள், இவை எல்லாவற்றையும் படைத்த ஒரு சூப்பர் பவரை வணங்கு என்று ஓர் இறை கொள்கையை சொன்னது தவறா ?//

   So preserving and respecting nature is worse then praying imaginary character?

   //. மற்ற மதங்கள் எல்லாம் சிந்திக்கவே கூடாது என்று சொல்லும்பொழுது இஸ்லாம் மட்டுமே சிந்திக்க தூண்டுகிறது//

   Great! What kind of civilaization your relegion has shaped? Is there anything for the rest of the world to follow? Any social engineering like democracy,communism shaped by the people who are encouraged to think ?

   Or are they encouraged to think within a boundry provided by the relegion?

   ————–
   Relegion will brainwash the mind. You will live in the false sense of pride that you are walking the right path. Dont come and preach here how good your relegion is !

   • நீங்கள் கொடுத்த பதிலில் உங்களுக்கே திருப்தி இல்லை என்பதை என்னால் உணர முடிகிறது. நீங்கள் இஸ்லாமை பற்றி முழுமையாக ஆய்வு செய்தால் உங்களுக்கு தெளிவு கிடைக்கும். onlinepj.com தளத்திற்கு வரவும். நன்றி

 15. Munna

  This is not a website for innocent people,please set up shop elsewhere.

  I have no patience to counter you word by word.

  Cant start from the beginning again and again.

  • //ஒரு பிராமிணன் இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டு மகாத்மா காந்தியை கொன்றதில் ஆரம்பித்து நாடு முழுவதும் குண்டுகளை வைத்தது , பாகிஸ்தான் கொடியை ஏற்றியது, ஆர் எஸ் எஸ் அலுவலகத்தில் தனக்கு தானே குண்டுவைத்தது, கோவிலில் மாட்டு கறியை வீசுவது என்று…. இன்று திண்டுக்கல்லில் நடந்த தன் வீட்டுக்கு தானே பெட்ரோல் குண்டை வீசிக்கொண்டதுவரை எவ்வளவு சூழ்சிக//

   Don’t escape for above quotes. This is what you people doing to divide the people. I remember that the person name who killed Gandhi was mentioned in the school book when my school days. But now a days it is printed as ‘A man killed Gandhi’ In future, it will be mentioned as ‘A muslim man’ and then ‘A muslim man Ismail’ and after that ‘A muslim terrorist Ismail’. These are all your Saffron Terrorism.

 16. //தற்போது ஏறக்குறைய 96-ம் ஆண்டில் நடந்ததை ஒத்த நச்சுப் பிரச்சாரங்களை இந்து பயங்கரவாதிகள் கட்டவிழ்த்து விட்டிருப்பதைக் காண முடிகிறது. //
  98 போல் மீண்டும் ஒரு சம்பவம் இங்கே அரேங்கேராமல் இருப்பது வினவு மற்றும் இதற முற்ப்போக்கு அமைப்புகளின் பொருப்பிலும் உண்டு.

 17. தமிழகத்தில் வாழும் மக்களில் அசல் தமிழர்கள் Vs வெளியார் என்று பிரித்து செய்யும் இனவெறி அரசியல் இந்துத்துவத்திற்கு எதிரான ஒன்றல்ல. பல இந்துத்துவவாதிகள் இன்று தமிழ்த்தேசியர்களுடன் கலந்து இருக்கின்றனர். இவர்கள் மோடியை வெளிப்படையாக ஆதரிக்கிறார்கள். ராஜபக்சேவை கண்டிக்கிறார்கள். பாஜக உயர்மட்டத்துக்கும் ராஜபக்சே கும்பலுக்கும் உள்ள உறவை கள்ளமவுனத்தின் மூலம் கடக்க முயல்கிறார்கள். ராஜ்ய சபா எதிர்க்கட்சி துணை தலைவராக இருக்கும் பாஜகவின் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் ஒரு பாஜக எம்பிக்கள் குழு நேபாளம் மற்றும் இலங்கைக்கு சமீபத்தில் சென்று வந்தது. அப்போது ரவிசங்கர் அளித்த பேட்டியில், இலங்கை மற்றும் நேபாளம் விசயத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியுடன் தமது கட்சியின் நிலைப்பாடு பெரிதும் ஒத்துப் போவதாக (commonalities) தெரிவித்தார். பாகிஸ்தான் மற்றும் சீனா தொடர்பான கொள்கைகளுடனே முரண்படுவதாக தெரிவித்தார். காங்கிரஸ் எதிர்ப்பில் தீவிரமாக இருக்கின்ற இனவாதிகள் இந்துத்துவ கும்பலின் உயர்மட்டம் ராஜபகசே கும்பலுடன் அனுசரணையாக இருப்பதை சாதாரண விசயமாகப் பார்க்கிறார்கள்.

  இங்கே பெரியசாமி போன்றோரும் அந்த தவறையே செய்கின்றனர். தமிழர்களாக இருந்தாலே போதும்; அவர் இயற்கையாகவே இந்துத்துவ எதிர்ப்பாளராக இருப்பார் என்று நம்பும் அளவுக்கு இனவாத நோய் தாக்கியிருக்கிறது. இந்துத்துவ சக்திகள் மாற்று மாநில மக்கள் மூலமாக இந்துத்துவத்தை பரப்பும் போர்த்திறத்தை தமிழகத்தில் கையாளவில்லை. ‘இந்து முன்னணி’, ‘இந்து மக்கள் கட்சி’ போன்றவை தீவிர தமிழ் அடையாளத்துடனே இங்கு செயல்படுகின்றன. தமிழ், தமிழர் என்ற அடையாளம் பேணும் ‘தினத்தந்தி’ இன்று ‘தினமலருக்கு’ போட்டியாக இந்துத்துவ விஷம் கக்கி வருகிறது. எந்த தமிழ்த் தேசிய இனவாதிக்கும் இது ஒரு பிரச்சினையாக தெரியவில்லை.

 18. vinavu nee oru newsaa potta mathavankha inkha vanthu easyaa marketing pannarankha.. publish pannarathuku munnadi oru tagga podu.. related comment or non related.. ellathium paduchu veena poren..

  • கட்டுரைக்கு சம்பந்தப்பட்ட, பாதிக்கப்பட்ட சமுதாயத்தின் சார்பாகத்தான் கருத்து இருக்குது. உண்மை சுடுது ஒரு நூலுக்கு. வினவுக்கு புத்தி சொல்லுது .

 19. கோவையில் புகழ்பெற்ற பழமையான கோவில்களான கோட்டை ஈஸ்வரன் கோவிலும் கோனியம்மன் கோவிலும் கரிவரதராஜா பெருமாள் கோவிலும் கோட்டைமேட்டில் தான் உள்ளது . கோட்டை மேட்டில் சுமார் 400 இந்து குடும்பங்கள் உள்ளது . கோனியம்மன் தேரின் போது நீர் மோர் கொடுப்பதில் இருந்து ஈஸ்வரன் கோவில் அன்னதானத்தின் போது ஒன்றாக அமர்ந்து உண்ணுவது வரை இந்து முஸ்லிம் ஒற்றுமை இருந்தது .இந்து முன்னணி வந்த பின்புதான் இந்த ஒற்றுமைக்கு பங்கம் வந்தது . ##

  இந்து முன்னணி மட்டுமல்ல, தூய இசுலாத்தை காக்க வந்த இசுலாமிய அமைப்புகளும் “ஹராம்” கண்டுபிடிப்புகளை திணித்து ஒட்டவிடாமல் செய்துள்ளன. இங்கே பின்னோட்டமிட்டுள்ள இசுலாமியர்களின் கருத்துக்களை கவனியுங்கள்.வினவில் இசுலாமியக் கோட்பாடுகளைப்பற்றியும் இசுலாமிய நாடுகளின் சரியத் சட்டங்களைப்பற்றியும் பல கட்டுரைகள் வந்துள்ளபோதும் இசுலாமிய கோட்பாடுகளை “ஆய்வுசெய்யுங்கள்” என்று தங்களின் மதவெறியைத்தான் முன்னிருத்துகின்றனர். இவர்கள் இசுலாமிய ஆட்சியே வேண்டும் என்கிறபோது ஜனநாய சக்திகளின் போராட்ங்கள் பயனுள்ளதாக இருக்காது.

 20. ஓரு திமுக காரரையே இந்துத்துவாவின் பிரச்சாரம் திசைத்திருப்புவதற்கு காரணம் வெறும் இந்துத்துவா அமைப்புகள் மட்டுமல்ல. இந்துக்களோடுள்ள இசுலாமியர்களின் அனுகுமுறையும்தான். சமயம் கிடைக்கும்போதெல்லாம் சரியத்தை நுழைக்கத் தவறுவதில். என் அம்மா மட்டும்தான் பத்தினி என்று இவர்கள் கூறுவதும் இந்துத்துவாவின் வெற்றிக்கு அடித்தளம். நீங்கள் ஒரு உண்மையான இந்துபோல் களமிறங்கி பேசிப்பாருங்கள். இன்னும் நிறைய உண்மைகளைக் காணலாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க