Saturday, August 8, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் தாது கொள்ளைக்கு எதிரான போராட்டத்தை தடுக்க ஜோசப் பெர்னாண்டோ படுகொலை!

தாது கொள்ளைக்கு எதிரான போராட்டத்தை தடுக்க ஜோசப் பெர்னாண்டோ படுகொலை!

-

 • தாது மணல் கொள்ளைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை தடுக்கவே ஜோசப் பெர்னாண்டோ படுகொலை!
 • வைகுண்டராஜன் – S.D.R.விஜயசீலன் – அரசு அதிகாரிகளின் கூட்டுச் சதியை முறியடிப்போம்!
 • தாது மணல் மாபியாக்களுக்கெதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்!

ன்பார்ந்த பொதுமக்களே!

 • தாது மணல் பிரச்சனையில் S.D.R. விஜயசீலன் தலையிடுவது ஏன்?
 • ஜோசப்பை கலெக்டரிடம் மனு கொடுக்க வைத்தது யார்?
 • S.D.R. விஜயசீலனின் காங்கிரஸ் அலுவலகத்தில் ஜோசப்பை அழைத்து கடந்த சில நாட்களாக என்ன பேசப்பட்டது?
 • ஜோசப் பெர்னாண்டோ திடீரென்று தற்கொலை செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் என்ன?
 • ஜோசப் பெர்னாண்டோவின் குடும்பத்தினரிடம் புகார் பெறாமல், S.D.R. விஜயசீலனின் உதவியாளர் கனகவேலிடம் புகார் பெறப்பட்டது ஏன்?

  வி.வி.மினரல்ஸ்
  வி.வி.மினரல்ஸ்
 • வெற்றுப் பேப்பரில் ஜோசப்பின் மனைவியிடம் காவல்துறை கையொப்பம் கேட்டது யாருடைய நலனுக்காக?
 • பிளசிங் நர்சரியில் விசத்தை பெற்றது யார்?
 • மணல் கொள்ளைக்கெதிராகப் போராடி வரும் சுபாஷ் பெர்னாண்டோ, சேவியர் வாஸ் மீது பொய் வழக்குப் போட முயற்சிப்பதேன்?
 • S.D.R. விஜயசீலன் – கனகவேல் – இதுவரை காவல்துறையால் விசாரிக்கப்படாத மர்மம் என்ன?
 • கடந்த 25 ஆண்டுகளாக வரைமுறையின்றி சூறையாடப்பட்டு வரும் தாது மணல் கொள்ளை த்தற்போது தெளிவாக அம்பலமாகி மக்கள் போராட்டமாக மாறியுள்ளது.
 • தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நாடு முழுவதும் கடலோரங்களில் மணல் அள்ளத் தடை விதித்துள்ளது.
 • மக்களின் தொடர் போராட்டத்தால் தமிழக அரசே வருவாய்த் துறை செயலாளர் ககன் தீப்சிங் பேடி தலைமையில் விசாரணைக் குழு அமைத்துள்ளது.
 • விசாரணை திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, மதுரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
 • ஆனால் இன்றுவரை வைகுண்ட ராஜன் கைது செய்யப்படவில்லை.
 • மணல் நிறுவனங்களின் சொத்துக்கள் முடக்கப்படவில்லை. ஏற்றுமதி தொடர்ந்து நடைபெறுகிறது.
 • ககன் தீப்சிங் பேடி குழு அறிக்கை வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பது ஏன்?
 • குளத்தூர் வி.ஏ.ஓ. கொடுத்த புகாரில் வி.வி. மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
 • சட்ட விரோதமாக மணல் எடுத்ததன் தடங்களை மறைக்க அரசே அனுமதிக்கிறது.
 • கூத்தன் குழி கிராமத்தில் வெடிகுண்டு வீசப்பட்டும், வைகுண்டராஜன் மீது வழக்கில்லை.
 • பத்திரிகையாளர்கள் விலைக்கு வாங்கப்படுகின்றனர்.
 • போராடும் முன்னணியாளர்கள் விலை பேசுவது – மிரட்டுவது – பொய் வழக்கு போடுவது தொடர்ந்து நடக்கிறது.
 • மக்களின் போராட்டத்தை திசை திருப்ப ஜோசப் பெர்னாண்டோவை கொலை செய்து, போராடும் தலைவர்கள் மீது பொய்யாக கொலை வழக்குப் போடுவது வரை அரசு வி.வியுடன் கூட்டுச் சேர்ந்து செயல்படுகிறது.
 • தூத்துக்குடி, நெல்லை, குமரி, மாவட்டங்களில் சாதிக் கலவரத்தைத் தூண்டி ரத்தம் குடிக்கத் துடிக்கிறது வி.வி.கும்பல். அதிகார வர்க்கமும், அரசும் அதற்கு துணை போகின்றன.
 • தாது மணல் கொள்ளைக்கெதிராகப் போராடுவோரை மிரட்டுவதற்கான சதியே ஜோசப் பெர்னாண்டோ கொலை!
 • கொலையாளிகளான வைகுண்டராஜன் – S.D.R. விஜயசீலனை கைது செய்!
 • தமிழக அரசே, காவல்துறையே, தாது மணல் மாபியாக்களுக்கு துணை போகாதே!
 • திரைமறைவு சதிகள், பொய் வழக்குகளுக்கு அஞ்சாமல் தாது மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடுவோம்!

தகவல் :

மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.
தூத்துக்குடி மாவட்டக் கிளை,
தொடர்புக்கு – 9443527613, 9443584049

செய்தி

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. உண்மையாகவே மனித உரிமை பாதுகாப்பு மையமானது இந்த மணல் நிறுவனங்கள் மூடியிருப்பதால் வேலையிழந்து நிற்கும் கூலி தொழிலாளர்களின் நலனுக்காக அல்லவா போராட வேண்டும்??? அதை விடுத்து தேவையில்லாத பிரச்சனைகளை இந்த மணல் நிறுவனங்களின் மீது சுமத்தி இந்த நிறுவனங்களை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகுக்க கூடாது ……

  • சரி வாங்க துரை நீங்களும் நானும் நம்மோட பு.ஜா.தொ.மு வுல சேர்ந்து வேலையிழந்த தொழிலாளர்களின் நலனுக்காக போராடலாம்.

   • வேலையிழந்த தொழிலாளர்களுக்காக நாம போராட வேண்டாம்…..அவர்களுக்காக போராடுபவர்களை கொலை செய்யாமல் இருந்தால் போதும் ASAD

 2. எங்க எது நடந்தாலும் எல்லாத்தையும் தூக்கி இந்த மணல் நிறுவனங்களின் மீது பழி போடுவது அநியாயம்……..வீட்டில் யாருக்கும் உடம்பு சரியில்லாமல் போனால் கூட அதற்கு காரணம் மணல் நிறுவனங்கள் தான் என்று சொல்லுவீர்களோ???

 3. திரு.சரவணன்.

  //மக்களின் போராட்டத்தை திசை திருப்ப ஜோசப் பெர்னாண்டோவை கொலை செய்து, போராடும் தலைவர்கள் மீது பொய்யாக கொலை வழக்குப் போடுவது வரை அரசு வி.வியுடன் கூட்டுச் சேர்ந்து செயல்படுகிறது.//

  நீங்கள் மேற்கண்ட வாக்கியத்தை கட்டுரையில் படித்தீர்களா இல்லையா? அப்படி படித்திருந்தால் முதலில் இந்த கேள்வியை நீங்கள் “எல்லாத்துக்கும் போராட்டக்காரர்கள்தான் காரணமா” என்று அரசிடம் அல்லவா கேட்கவேண்டும். அரசிடம் கேட்டுப்பார்த்தீர்களா? என்ன பதில் கிடைத்ததா?

  • Mr. ASAD…. மணல் நிறுவனங்களை திறக்க சொல்லியும் பல தலைவர்கள் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்………….அப்படி போராடிய ஒருவர் தான் இந்த ஜோசப் பெர்னாண்டோ …….யாராவது ஆதரவாளர்களை கொலை செய்வார்களா?? அவர் மணல் ஆலைகளுக்கு ஆதரவாக மனு அளித்தபோதே அவரின் வீட்டை முற்றுகையிட்டவர்கள்(மணல் நிறுவனத்திற்கு எதிரானவர்கள்) தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும்……இந்த தனி நபர் தான் தன்னுடைய கட்டுரையின் வாயிலாக நடந்த கொலையை திசை திருப்ப பார்க்கிறான்…….நீங்கள் வேண்டுமானால் இந்த கட்டுரை ஆசிரியரிடம் இந்த கொலைக்கான ஆதாரத்தை கேட்டு பாருங்களேன்…………………..

 4. திரு சரவனன் அவர்லே,நான் உங்கல் கருதை ஒப்பு கொல்கிரென்,அனைதுகும் மனல்நிருவனம் மிது குட்ரம் சொல்வது தப்பு…

 5. இந்த மனல் நிருவனம் அரசு முலம் அங்கிகாரம் பெட்ருலது…இது அனைவரும் தெரிந்து கோல வேன்டும்…..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க