Sunday, July 21, 2024
முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்க டாலரில் ஆம் ஆத்மி – நியாயப்படுத்தும் ஞாநி

அமெரிக்க டாலரில் ஆம் ஆத்மி – நியாயப்படுத்தும் ஞாநி

-

ஜெமினியில் விக்ரம் “ஓ” போடச் சொல்லி பாடுவதற்கு முன்பேயே தமிழக வாக்குச் சாவடிகளில் ‘ஓ’ போடப் சொல்லி காலம் எல்லாம் இசைத்தவர் பத்திரிகையாளர் ஞாநி சங்கரன். அவரது ‘கோரிக்கையை ஏற்று’ தேர்தல் ஆணையமும் “நோட்டா” பொத்தானை இந்த தேர்தலில் அறிமுகப்படுத்துகிறது. ஆனால் இன்று நோட்டாவுக்கு ஓ போடச் சொல்லும் நிலையில் ஞாநி இல்லை.

ஞாநி
ஓ போடச் சொன்ன ஞாநியை மாற்றியது அமெரிக்க ஆத்மியின் ‘யானம்’ !

ஆம். அவர் தேர்தல் அரசியலில் போட்டியிடும் ஞானத்தை பெற்று விட்டார். ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாகப் போட்டியிடப் போகிறார். இதைத் தொடர்ந்து அவரை ஆதரித்தும், விமர்சித்தும் சமூக வலைத்தளங்களில் பலர் எழுதி வருகின்றனர். அதில் முக்கியமானது, ஆம் ஆத்மி கட்சி மீதான விமரிசனங்களை ஞாநி எப்படி எதிர்க்கொள்கிறார் என்பது. இந்த எதிர்கொள்ளலிலிருந்தே அவரது ஆம் ஆத்மி ஞானத்தை உண்மையில் யானத்தை (24-ம் புலிகேசியின் ஞானம்) அறியலாம்.

“ஏதோ நம்மாலான தானம்” என்று கோவில் படிக்கட்டு பிச்சைக்காரர்களுக்கு தர்மமளிக்கும் ‘வள்ளல்கள்’ போல “ஏதோ நம்மாலான தொண்டு அரசியல்” என்று மட்டும் ஞாநியின் ஆம் ஆத்மி ஞானத்தை குறைத்து மதிப்பிட முடியாது. அதே சமயம் தமிழகத்தில் ஞாநியோ இல்லை ஒட்டுமொத்த ஆம்ஆத்மியையோ கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து ஆய்வு செய்யுமளவு அவர்கள் எதையும் சாதிக்கப் போவதில்லை. ஆனால் சாதிக்காத போதே இவர்களது சந்தர்ப்பவாதம் எப்படி விசுவரூபமெடுக்கிறது என்பதை முக்கியத்துவம் கொடுத்துத்தான் பார்க்க வேண்டும்.

ஒருவகையில் நடுத்தரவர்க்கத்தை தலைமை தாங்கும் கருத்துக்களாக இவை இருப்பதால் நமது அன்பிற்குரிய நடுத்தர வர்க்கத்தை அந்த போதையில் இருந்து மீட்பது அவசியம்.

ஆம் ஆத்மி கட்சி, தனது தேர்தல் செலவுக்கான நிதி சேகரிக்கும் வழிகளில் ஒன்றாக அரவிந்த் கேஜ்ரிவாலுடன் விருந்து சாப்பிட கட்டணம் வசூலிக்கிறது. ‘டின்னர் வித் கேஜ்ரிவால்’ என்று இதை விளம்பரப்படுத்தி ஒரு நபருக்கு 20 ஆயிரம் முதல் சில லட்சங்கள் வரை வசூலிக்கிறார்கள். மேற்குலக நாடுகளில் மிகவும் பிரபலமான, இந்த பணக்காரர்களிடம் நிதி திரட்டும் முறையை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்திருக்கிறது ஆம் ஆத்மி. இதிலிருந்தே இந்த கட்சியின் இயக்கம் பாமரர்களை சார்ந்து அல்ல, மேட்டுக்குடியை சார்ந்தது என புரிந்து கொள்ளலாம். தேர்தலை பண வசூலும், அந்த வசூலை இது போன்ற மேட்டுக்குடியிடம் திரட்டுவதுமே தீர்மானிக்குமென்றால், இந்தக் கட்சி காங்கிரஸ், பாஜகவின் புதுப் பங்காளி என்று காட்டி விடுகிறது.

இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு நடந்த இணைய விவாதம் ஒன்றில் ஞாநியும் பங்கேற்றார். அப்போது அவரிடம், அர்விந்த் கேஜ்ரிவாலின் என்.ஜி.ஓ. அல்லது அரசு சாரா நிறுவனத் தொடர்புகள் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு ஞாநி என்ன பதில் அளித்தார் என்பதை தெரிந்துகொள்ளும் முன்பு கேஜ்ரிவாலின் அரசு சாரா நிறுவன தொடர்பு குறித்து பார்த்து விடுவோம்.

கேஜ்ரிவால் நடத்தும் தொண்டு நிறுவனங்களில் ஒன்று, Public Cause Research Foundation. சுருக்கமாக பி.சி.ஆர்.எஃப். 2006-ம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட மகசேசே விருதுடன் கொடுக்கப்பட்ட பணப்பரிசை முதலீடாகக் கொண்டு இந்த தொண்டு நிறுவனத்தை துவங்கினார் கேஜ்ரிவால். இவருடன் பத்திரிகையாளர் மனிஷ் சிசோதியா, அபிநந்தன் சேக்ரி ஆகியோரும் இணைந்திருந்தனர். அண்ணா ஹசாரேவின் செட்டப் எழுச்சிக்குப் பிறகு நாடு முழுவதும் படித்த மேல்தட்டுப் பிரிவினர் மட்டுமல்ல சாதாரண மக்களும் ஊழலே இந்தியாவின் தலையாய பிரச்சினையாக சீற்றம் கொள்கின்றனர். அதற்கு தோதாக மாபெரும் ஊழல்கள் இந்தியாவில் அணிவகுக்க ஆரம்பித்தன.

அரவிந்த் கேஜ்ரிவால்
தேர்தல் மேளா கங்கையில் குளித்து காவி கெட்டப்பில் கேஜ்ரிவால். கும்பமேளா கங்கையில் குளித்த ஜெயமோகனது இந்துஞானமரபு அமெரிக்க ஆத்மியை ஆதரிப்பதில் வியப்பென்ன?

ஹசாரேவுடன் கேஜ்ரிவாலும் இணைந்து கொள்கிறார். அப்போது இவர்கள் எல்லோரும் இணைந்து ஊழலுக்கு எதிரான இந்தியா (India Against Corruption -IAC) என்ற அமைப்பைத் தொடங்குகின்றனர். பிறகு கேஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சித் துவங்கி அரசியல் அதிகாரத்தில் மேலே வந்த பிறகு அண்ணா ஹசாரே உறவு முடிந்தது. இவர்களுக்கிடையே இருந்த கோஷ்டி மோதல் முதலில் மறைவாகவும் விரைவிலேயே பகிரங்கமாகவும் வெளிவரத் துவங்கியது. அச்சமயத்தில் ஹசாரேவும், சுவாமி அக்னிவேஷ் போன்றோரும் கேஜ்ரிவால் மீது ஒரு குற்றச்சாட்டைக் கூறினார்கள்.

‘‘ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் நிதி சுமார் 70 லட்சம் ரூபாயை, அர்விந்த் கேஜ்ரிவால், தன் சொந்த தொண்டு நிறுவனத்திற்கு திருப்பி விட்டுள்ளார். இந்தப் பணம் ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்புக்காக நன்கொடையாகப் பெறப்பட்ட தொகை. அதை இப்படி திருப்பிவிட்டது முறைகேடானது’’ என்றார்கள். இதற்கு பதில் அளித்த கேஜ்ரிவால் குற்றச்சாட்டு பொய் என்றோ, பணத்தை திருப்பி விடவில்லை என்றோ கூறவில்லை மாறாக, ‘‘ஊழலுக்கு எதிரான இந்தியா என்பது ஓர் இயக்கமாக இருந்ததே ஒழிய, நிறுவனமாக இருக்கவில்லை. பி.சி.ஆர்.எஃப். (அவரது தொண்டு நிறுவனம்) என்பது ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் தலைமை அலுவலகம் போல செயல்பட்டது’’ என்று சொன்னார்.

அதாவது ஊழலுக்கு எதிரான இந்தியாவின் இயக்க செயல்பாடு மற்றும் நிதி செயல்பாடு உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் அவரது தொண்டு நிறுவனம் இயக்கியிருக்கிறது. இந்த பணத்தை தமது சொந்த நிறுவனத்தின் செலவிற்காக பயன்படுத்தவில்லை என்பதைத் தவிர கேஜ்ரிவால் வேறு எதையும் மறுக்கவில்லை. இதெல்லாம் தெரிந்துதான் அன்று ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அண்ணாவை ஆதரித்தது. எனில் அந்த தொண்டு நிறுவனம் இதை இலவச சேவையாக செய்ததா, அதன் நோக்கம் என்ன? அதன் நிதி வள மூலம் என்ன?

அடுத்தது, கேஜ்ரிவால் காபிர் (Kabir) என்ற மற்றொரு தொண்டு நிறுவனத்தையும் வைத்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மையப்படுத்தி இயங்கும் இந்த நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு பவுன்டேஷனிடம் இருந்து இரண்டு முறை நிதிபெற்றுள்ளது. ‘‘2005-ம் ஆண்டு 1,72,000 டாலர் நிதியும், 2008-ம் ஆண்டு 1,97,000 டாலர் நிதியும் ‘காபிர்’ நிறுவனத்திற்க்கு அளிக்கப்பட்டுள்ளது’’ என்கிறார் ஃபோர்டு பவுன்டேஷன் இந்தியா பிரதிநிதி ஸ்டீவன் சோல்நிக். இதை கேஜ்ரிவாலும் ஒப்புக்கொண்டுள்ளார். ‘‘நாங்கள் நிதி பெற்றது உண்மைதான். ஆனால் அவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டன. பழையனவற்றை இப்போது கிளறுவது அண்ணா ஹசாரே அணியினரின் வேலை’’ என்கிறார் அவர்.

ஸ்டீவன் சோல்னிக்
கேஜ்ரிவாலுக்கு படியளந்த அமெரிக்க பகவானின் இந்திய பிரதிநிதி : ஸ்டீவன் சோல்னிக்

ஆனால் இது குறித்து அண்ணா ஹசாரே மட்டுமின்றி பிற ஜனநாயக சக்திகளும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.  ‘‘ஃபோர்டு பவுன்டேஷனிடம் இருந்து சுமார் 4 லட்சம் டாலர் அளவுக்கு கேஜ்ரிவாலின் தொண்டு நிறுவனம் நிதியுதவி பெற்றுள்ளது’’ என்று தனது கட்டுரை ஒன்றில் அருந்ததி ராய் குறிப்பிட்டார்.

மாசுமருவற்ற மகானாக கேஜ்ரிவால் சித்தரிக்கப்பட்ட சமயத்தில், அமெரிக்க ஏகாதிபத்திய நலனுக்காக உருவாக்கப்பட்ட ‘இன்டெலக்சுவல்’ மற்றும் தொண்டு நிறுவன கையாளான ஃபோர்டு பவுன்டேஷனிடம் இருந்து நிதிபெற்ற விஷயம் திரும்பத் திரும்ப அவரைச் சுற்றி வரத் தொடங்கியது. கடுப்பான கேஜ்ரிவால், ‘‘இந்தக் கேள்வி தொடர்ந்து என்னிடம் எழுப்பப்படுகிறது. ஃபோர்டு பவுன்டேஷன் தவறானது என்றால், முதலில் அதைத் தடை செய்யுங்கள். இந்திய சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு அமைப்பிடம் இருந்து நிதிபெறுவதில் என்ன தவறு?’’ என்று கேட்டார். உண்மையில் இது நெத்தியடி கேள்விதான்.

ஏனெனில் இன்றைக்கு ஆம் ஆத்மியை தொண்டு நிறுவனங்களின் சதி என்று பிலாக்கணம் வைக்கும் பாஜக வீரர்கள் எவரும் தமது வீராதி வீரனான மோடியை வைத்து ஃபோர்டு பவுண்டேஷன் உள்ளிட்ட அன்னிய சேவை நிதி நிறுவனங்கள் தடை செய்யப்படும் என்று பேசவைக்க முடியுமா? காங்கிரசும், பாஜகவும் அமெரிக்காவின் அணுசக்தி ஒப்பந்தத்தையே பாராளுமன்றத்திற்கு தெரியாமல் நிறைவேற்றி அழகு பார்த்தவர்கள், பவுண்டேஷனுக்கு மட்டும் சவுண்டு விட முடியுமா? அதனாலேயே கேஜ்ரிவாலின் சவால் அப்படியே இருக்கிறது. ஆனால் பாஜக போன்ற மதவெறியர்கள் மற்றும் அமெரிக்க அடிமைகள் வேண்டுமானால் இதை கேட்பதற்கு அருகதை இல்லாதவர்களாக இருக்கலாம். நாம் கேட்போம்.

மகசேசே விருது கமிட்டிக்கும், ஃபோர்டு பவுன்டேஷனுக்கும் உள்ள தொடர்புகள் குறித்துக் கேட்கப்பட்டதற்கு அதைப்பற்றி தனக்குத் தெரியாது என்று சொன்னார் கேஜ்ரிவால். இந்தியாவில் எப்படி கிராம சுயராஜ்ஜியம் கொண்டு வரவேண்டும் என்று ஆய்வு செய்தவருக்கு இந்த உலகறிந்த விசயம் கூடத் தெரியாதாம். சந்தர்ப்பவாதத்திற்காக அறியாமை அடித்து பிடித்து தேடி வருகிறது.

இந்தப் பின்னணியில் நாம் ஞாநியிடம் திரும்ப வருவோம். அவரிடம், ‘இப்படி உங்கள் கட்சித் தலைவர் ஃபோர்டு பவுன்டேஷனிடம் நிதிபெற்றிருக்கிறாரே?’ என்று கேட்கப்பட்டதற்கு ‘‘கேஜ்ரிவால், தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிதிபெறுவதை நிறுத்தி விட்டதாக தெளிவாக சொல்லிவிட்டார். மேலும் ஃபோர்டு பவுன்டேஷன் நாடு முழுக்க பல கலை அமைப்புகளுக்கு நிதி உதவி செய்தது; செய்தும் வருகிறது. ‘கூத்துப்பட்டறை’ கூட ஃபோர்டு பவுன்டேஷனிடம் இருந்து நிதிபெற்றுள்ளது. (என்னுடைய ‘பரீக்‌சா’ நாடகக் குழுவுக்கு ஃபோர்டு பவுன்டேஷனிடம் நிதியுதவி பெறும் சாத்தியம் இருந்தும் நாங்கள் மறுத்துவிட்டோம்). தமிழ்நாட்டு நாட்டுப்புற கலைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஃபோர்டு பவுன்டேஷனின் நிதியுதவி குறிப்பிடத்தகுந்தது’’ என்று ஞாநி சொல்கிறார்.

தலித் ஆதார மையம்
மதுரை அரசரடி இறையியல் மையத்தில் இருக்கும் தலித் ஆதார மையம். தமிழகத்தில் தோற்றுவிக்கப்படும் தன்னார்வக் குழுக்களின் மெக்கா.

அவரது இந்த எட்டு வரி விளக்கமே எண்ணிலடங்கா கேள்விகளையும், விமரிசனங்களையும் கேட்க வைக்கின்றன. முதலில் கேஜ்ரிவால் ‘முன்னாடி வாங்கினேன். இப்போது வாங்கவில்லை’ என்றுதான் சொல்கிறார். ‘அப்போது வாங்கியது தவறு’ என்று சொல்லவில்லை. மேலும் இந்திய அரசு அங்கீகரித்த நிறுவனத்திடமிருந்து காசு வாங்குவதில் என்ன தவறு என்று ஏற்கனவே கேட்டிருக்கிறார். அப்படி தவறு என்றால் தடை செய்யுங்கள் என்றும் சவால் விட்டிருக்கிறார். அதாவது, ‘குடுக்குறான், வாங்குறேன். தப்புன்னா முதலில் அவனை நிறுத்தச் சொல்லு, நான் நிறுத்தறேன்’ என்று மணிரத்தினத்தின் குரலில் சொல்கிறார்.

இந்நிலையில், ‘அது போன மாசம்’ என்று கைப்புள்ள கணக்காக கேஜ்ரிவாலும், அவரை அடியொற்றி ஞாநியும் கூறும் விளக்கம் எந்த வகையிலும் ஏற்கத் தக்கது இல்லை. அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினால் என்ன, 20 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினால் என்ன… ஒரு குற்றத்தின் தன்மை அது செய்யப்பட்டு எவ்வளவு காலம் ஆகிறது என்பதில் இருந்து தீர்மானிக்கப்படுவது இல்லை. அதன் தன்மையில் இருந்துதான் அதை முடிவு செய்ய வேண்டும். அந்த வகையில் ஃபோர்டு பவுன்டேஷன் என்ற அமெரிக்காவுடன் பின்னிப்பிணைந்த ஒரு அமைப்பிடம், அமெரிக்க மேலாதிக்கத்தை உலகம் முழுவதும் கொண்டு வர கலை, சேவை, இலக்கிய, அறிவுஜீவித் துறைகளில் செயல்படும் ஒரு சதிகார நிறுவனத்திடம் நிதி பெற்றது சரியா, தவறா என்பதுதான் இங்கு பேச வேண்டிய விஷயம். அதற்கு ஒரு பதிலை கூறாமல் கடந்து செல்வது ஞாநியின் அயோக்கியத்தனம்.

ஒரு குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொள்வதன் நோக்கம் செய்த தவறுக்கு மனம் வருந்துவதும், எதிர்காலத்தில் அத்தகைய தவறுகளை செய்யாமல் இருப்பதும்தான். இத்தகைய குறைந்தபட்ச நாணயம் கூட இல்லாத ஆம் ஆத்மி கும்பல்தான் முழு இந்தியாவிற்கும் நேர்மைன்னா என்னவென்று சொல்லித் தரப்போகிறதாம். இதை நம்புங்கள் என்று நம்மையும் சித்திரவதை செய்கிறார் ஞாநி.

இங்கு கேஜ்ரிவாலிடம் ஃபோர்டு பவுன்டேசனிடம் நிதி பெற்றது குறித்த வருத்தம் இல்லை என்பதோடு பெருமையும் இருக்கிறது. எதிர்காலத்தில் வாங்கமாட்டோம் என்றும் உத்தரவாதம் ஏதும் இல்லை. சொல்லப்போனால் 2014-ம் ஆண்டும் அவரது ‘காபிர்’ தொண்டு நிறுவனம், ஃபோர்டு பவுன்டேஷனிடம் நிதியுதவி கோரியிருக்கிறது. ‘‘2014-ம் ஆண்டுக்கு நிதியுதவி கோரி கேஜ்ரிவாலின் ‘காபிர்’ என்.ஜி.ஓ. விண்ணப்பித்துள்ளது. நாங்களும் நிதி தர இசைந்துள்ளோம்’’ என்கிறார் ஃபோர்டு பவுன்டேஷன் இந்தியப் பிரிவின் பிரதிநிதி ஸ்டீவன் சோல்நிக். ஆக இப்போது வரை கேஜ்ரிவால் நிதி பெறுவதில் முனைப்போடு இருக்கிறார் என்பது உறுதியாகிறது. எனில் ஞாநியின் விளக்கத்தில் அறிவு நாணயம் ஏதும் இருக்கிறதா?

கூத்துப்பட்டறையின் நா. முத்துசாமி
ஃபோர்டு பவுண்டேசனிடம் கூத்துப்பட்டறையை விற்ற நா. முத்துசாமி

ஞாநி தனது முகநூல் விவாதத்தில், ஃபோர்டு பவுன்டேஷனிடம் இருந்து கூத்துப்பட்டறை நிதிபெற்றது என்பதை சொல்கிறார். இது உலகறிந்த விசயம்தான். ஆனால் ஞாநியின் கோணத்தில் இந்த நிதி பெறுவதில் தவறில்லை என்றால், ஏன் அவர் தனது ‘பரீக்சா’வுக்கு வாங்க மறுக்க வேண்டும்? நீங்களும் நிதி வாங்க வேண்டியதுதானே.. நிதியை மறுத்ததை இப்போது பெருமையாக அறிவித்துக்கொள்கிறார் என்றால் நிதிபெற்றதை அவர் சிறுமையாக கருதுகிறாரா? எனில் அந்த சிறுமையை இப்போது வரை செய்து கொண்டிருப்பவரை எப்படி அவர் தலைவராக ஏற்றுக்கொள்கிறார்?

கூத்துப்பட்டறை ஆரம்பத்தில் நாடகம் குறித்து அறிந்து கொண்டு வளர விரும்பிய எளிய அமைப்பாகத்தான் இருந்தது. பின்னர் நா.முத்துச்சாமி அதைக் கைப்பற்றி ஃபோர்டு பவுண்டேசனிடம் விற்று விட்டார். கூத்துப் பட்டறை மட்டுமல்ல, பல்வேறு இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் ஃபோர்டு பவுண்டேசன் நிதிபெறுவதை 80-களின் ஆரம்பத்திலேயே மகஇக மட்டுமே அம்பலப்படுத்தி போராடியிருக்கிறது. அதன் பிறகு தொடர்ச்சியாக தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை அம்பலப்படுத்தியும் வருகிறது. அப்போதே ஞாநி இத்தகைய நிலைப்பாட்டினை எடுக்கவில்லை. மேலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களது நிகழ்ச்சிகளுக்கு செல்வது, பேசுவது, அவர்களுக்கு தேவையான ஆவணப்படங்கள் எடுத்துக் கொடுப்பது போன்றவற்றை செய்திருக்கிறார். இன்றைக்கும் பல எழுத்தாளர்கள், கவிஞர்கள், பெண்ணியவாதிகள் இதைத்தான் செய்கிறார்கள். அதைப்பட்டியலிட்டால் எவரும் மிஞ்சமாட்டார்கள் என்றே நம்புகிறோம்.

பத்திரிகையாளராக தனது பணியை நடத்திக் கொண்டு பகுதி நேரமாக பரிக்-ஷா போன்ற நாடக முயற்சிகளை செய்ததால் அவருக்கு தொழில் முறையில் இயங்கும் கூத்துப்பட்டறைக்கு அவசியமாக இருந்த நிதி தேவைப்படவில்லை. மற்றபடி அவர் கொள்கை காரணமாக ஃபோர்டு பவுண்டேசனிடமிருந்து பணம் வாங்கவில்லை என்பதை இங்கே ஓங்கிச் சொல்கிறோம்.

மல்லிகா சாராபாய்
ஆம் ஆத்மியின் மல்லிகா சாராபாய் : அமெரிக்க டாலர் வாங்கிக் கொண்டு இந்திய நடனம் ஆடுவதில் வல்லவர்..

ஆகவே ஆம் ஆத்மியின் தன்னார்வத் தொண்டு நிறுவனத் தொடர்பு குறித்து நமக்கு ஏற்படும் கோபமும், விமரிசனமும் ஞாநிக்கு ஏற்படாது. மாறாக அவரது போன மாசம், இந்த மாசம் உளறலுக்கு காரணம் பொதுவில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மக்களிடையே அம்பலப்பட்டு போயிருப்பதுதான்.

கேஜ்ரிவாலும், ஞாநியும் மட்டுமே இந்த வளையத்திற்குள் இல்லை. ஆம் ஆத்மி என்ற கட்சியே என்.ஜி.ஓ.க்களின் கூடாரமாக இருக்கிறது. குறிப்பாக ஃபோர்டு பவுன்டேசனிடம் நிதிபெறுபவர்கள் அனைவரும் ஆம் ஆத்மி என்ற சரடின் கீழ் ஒன்றிணைந்துள்ளனர். இந்தக் கட்சியின் பொருளாதார கொள்கைகளுக்கான தேசிய குழு உறுப்பினராக மீரா சன்யால் என்பவர் இருக்கிறார். ‘ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து’ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த இவர் இதற்கு முன்பாக 2009-ம் ஆண்டு மும்பை தெற்கு தொகுதியில் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டார். இப்போது இவர்தான் ஆம் ஆத்மியின் மும்பை தெற்குத் தொகுதி வேட்பாளர். இவரது ‘பிரதான்’ தொண்டு நிறுவனத்திற்க்கு ஃபோர்டு பவுண்டேசன் பெருமளவு நிதி அளிக்கிறது.

மல்லிகா சாராபாய் என்கிற பிரபல நாட்டியக் கலைஞரும் ஆம் ஆத்மியில் ஐக்கியமாகியுள்ளார். இவரது ‘தர்பனா’ (Darpana)  என்ற தொண்டு நிறுவனமும் ஃபோர்டு பவுண்டேசனிடம் நிதி பெறுகிறது. தேர்தல் கணிப்பாளராக புகழ்பெற்றிருந்த யோகேந்திர யாதவ் இப்போது ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஐ.சி.எஸ்.எஸ்.ஆர். அமைப்பிடம் இருந்து நிதிபெறுகிறார். இந்த அமைப்புக்கு நிதி உதவி செய்வது ஃபோர்டு பவுன்டேசன்.

கவிதா ராமதாஸ்
கப்பற்படை தளபதி ராமதாஸின் மகள் கவிதா ஃபோர்டு பவுண்டேசனின் இந்தியத் தலைவர். இந்திய ராணுவமே சி.ஐ.ஏ கையில் இருக்கும் போது ஆம் ஆத்மி இருப்பதில் வியப்பென்ன?

இப்போது கேஜ்ரிவாலுக்கு நெருக்கமான ஆலோசகராக இருப்பவர், இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ராம்தாஸ் (இவரும் மகசேசே விருது பெற்றவர்). இவரது மகள் கவிதாதான் டெல்லியில் உள்ள ஃபோர்டு பவுன்டேஷன் அலுவலகத்தின் தலைமை செயல் அதிகாரி. இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஃபோர்டு பவுன்டேசன் வழங்கும் நிதியை அனுமதிப்பதும், ஒழுங்குப்படுத்துவதும் இவர்தான். அது மட்டுமின்றி மகசேசே விருதை வழங்கும் ‘ராக்பெல்லர் பவுன்டேசனின்’ நிதியளிக்கும் அமைப்பான ‘ராக்பெல்லர் பிரதர்ஸ் ஃபண்ட்’டின் தலைமை உறுப்பினராகவும் உள்ளார். இந்த கவிதாவின் கணவரும் லேசுபட்டவர் இல்லை… பாகிஸ்தானைச் சேர்ந்த சுல்பிகர் அஹமத் என்ற அவர், ‘பெர்க்லீஸ் நாட்டிலஸ் இன்ஸ்டிடியூட்’ என்ற அமைப்பின் தெற்காசிய பகுதி பொறுப்பாளர். தெற்காசியப் பகுதிகளின் அணு உலைகளில் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்துவதும், அமெரிக்க சார்பை உறுதிபடுத்துவதும்தான் இந்த அமைப்பின் முக்கியமான பணி.

இப்படி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ள பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் என்.ஜி.ஓ.க்களாகவே உள்ளனர் என்று நாகரீகமாக சொல்லலாம். சரியாகச் சொல்வதாக இருந்தால் அமெரிக்க கைக்கூலிகள். கேஜ்ரிவாலே, ‘பரிவர்த்தன்’ என்ற மற்றொரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அருணா ராய், கோபால் ராய், மேதா பட்கர் என ஆம் ஆத்மியில் உள்ள மற்றவர்களும் நேரடியான என்.ஜி.ஓ. தொடர்பிலும் அந்த பாணி அரசியலும் உள்ளவர்களே.

ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாட்டு ஒருங்கிணைப்பாளராக இருக்கும் கிறிஸ்டினா சாமி, கரூரைச் சேர்ந்தவர். இவரும் இவரது கணவர் ஆரோக்கியசாமி என்பவரும் சேர்ந்து கரூரில் அரெட்ஸ் (AREDS -Association of Rural Education and Development Services), ஸ்வாதி (SWATE – Society for Women in Action for Total Empowerment) ஆகிய இரண்டு தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இந்த இரண்டுக்கும் கடந்த காலங்களில் உலகின் பல நிதி உதவியளிக்கும் நிறுவனங்களிடம் இருந்து நிதி வந்துள்ளது. முக்கியமாக Catholic Committee against Hunger and for Development (CCFD-France)  World Solidarity, an organisation of Christian Workers Movement in Belgium (WSM) ஆகிய இரண்டும் கிறிஸ்டினா சாமியின் முக்கியமான நிதி மூலங்கள். கிறிஸ்டினாவுக்கு கிறிஸ்துகள் காசு கொடுக்கிறார்கள்.

கிறிஸ்டினா சாமி
ஆம் ஆத்மியின் தமிழகத் தலைவர் கிறிஸ்டினாவுக்கு படியளப்பது ஏகாதிபத்தியங்களின் அறக்கட்டளைகள். பதிலுக்கு கிறிஸ்டினா தாலியறுப்பது எதை?

இதைப் பற்றி எல்லாம் ‘ஜெயமோகனின் ஆசிபெற்ற வேட்பாளரான’ ஞாநி தவறாக கருத மாட்டார். ஜெயமோகனுக்கும் அப்படியே. ஆனால் ஒரு சிறிய வேறுபாடு உண்டு. ஞாநி ஒரு பத்திரிகையாளர் என்பதால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் காசு வாங்குவதெல்லாம் தவறல்ல என்று எளிமையாக சொல்கிறார். ஜெயமோகனோ மெகா சைஸ் புக் போடும் எழுத்தாளர் என்பதால் அதை சுற்றி வளைத்து சொல்லும் இழுப்பு தேவையாக இருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஃபோர்டு பவுண்டேசன் தொடர்பாக எம்.டி.முத்துக்குமாரசாமிக்கும், ஜெயமோகனுக்கும் நடந்த இணைய விவாதம் ஒன்றில் ‘‘இத்தகைய நிதிகள் எப்போதுமே முதல்பார்வைக்கு ‘சரியான’ பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு நேர்மையான தோற்றமுள்ள பண்பாட்டு அமைப்புகள் வழியாகவே அளிக்கப்படுகின்றன. அவற்றின் உள்நிபந்தனைகள் பெறுபவர்களுக்கும் தெரியும்… நிதிபெற்றவர்களெல்லாம் அயோக்கியர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் நிதி பெற்றவர்களின் கருத்துக்களையும் செயல்பாடுகளையும் அந்த நிதியையும் கணக்கில் கொண்டே யோசிக்கவேண்டும் என்கிறேன். அந்த நிதியும் நம் பண்பாட்டுச் சூழலில் பேசப்பட்டாக வேண்டும் என்கிறேன்’’ என்று கூறியிருந்தார் ஜெயமோகன்.

அதாவது ஃபோர்டு பவுண்டேசனது நிதியை வாங்கிக் கொண்டு ஜெயமோகனுக்கு ஆதரவான கருத்துக்களை கூறினால் பகவான் மன்னிப்பார். எதிரான கருத்துக்களை கூறினால் பகவான் கொஞ்சம் பதட்டப்படுவார்.

ஜெயமோகன்
ஃபோர்டு பவுண்டேசனிடம் காசு வாங்குபவர்கள் கருத்தளவில் ஜெயமோகனை எதிர்க்காமல் இருந்தால் அன்னாரது அருள் நிச்சயம் கிடைக்கும்.

ஜெயமோகனுக்கு இன்னும் அமெரிக்க என்ஜிஓக்களின் அருள் நமக்குத் தெரிந்து கிடைக்க வில்லை என்றாலும் அவரது ஆஸ்திரேலிய, மலேசிய, பயணங்களின் யோக்கியதை குறித்து வினவில் ஏற்கனவே எழுதியிருக்கிறோம். இவையெல்லாம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பாவக்கணக்கில்தான் வரும். பகல்கொள்ளைக்காரர் பச்சமுத்து, திமுக அமைச்சர் தம்பி எஸ்கேபி கருணா, இந்துதேசியத்தின் ஆகாசவாணி மணிரத்தினம்- கமல்ஹாசன், பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோருக்கு மட்டுமல்ல, மூப்பனாருக்கும் காவடி தூக்கியவர்தான் ஜெயமோகன். என்ஜிவோக்களில் கூட உள்நாடு வெளிநாடு, இந்துஞான மரபு, மேலைத்தேய கிறித்தவம் என்று பாகுபாடு பார்க்கிறார் ஜெயமோகன். அவ்வளவுதான் அவரது வேறுபாடு.

மேலும் ‘அஞ்ஞாடி’ நாவல் எழுத எழுத்தாளர் பூமணி, ஃபோர்டு பவுன்டேசனிடம் நிதி பெற்றிருப்பது தனக்கு ஏமாற்றமாக இருப்பதாகவும் ஜெயமோகன் சொல்லியிருக்கிறார். கவனியுங்கள், கண்டிக்கவில்லை, ஏமாற்றம்தான். ஜெயமோகனுக்கு பிடித்தவர்கள் பவுண்டேசனிடம் நிதி பெற்றால் ஏமாற்றம், பிடிக்காதவர்கள் வாங்கினால் அவர்களை மட்டும் எதிர்த்து விட்டு பவுண்டேசனிடம் நிதி வாங்கி வேலை செய்வது தவறில்லை என்று சமாளிப்பது – இதுதான் இவரது அறம்.

ஜெயமோகனோடு நடந்த விவாதத்தில் ஃபோர்டு பவுன்டேசனிடம் நிதிபெறுவதில் தமிழ்நாட்டில் முன்னோடியான எம்.டி.முத்துகுமாரசாமி, ‘‘என்.சி.இ.ஆர்.டி., நேஷனல் புக் ட்ரஸ்ட் போன்ற நிறுவனங்கள் ஃபோர்டின் நிதியுதவியுடன்தான் நிறுவப்பட்டன. க்ரியா பதிப்பகம் வெளியிட்ட ‘தற்கால தமிழ் அகராதி’ கூட போர்டு பவுன்டேஷன் ஃபண்டிங்தான். அதற்காக இதை எல்லாம் தவறு என்று சொல்வீர்களா?’’ என்று பல ஆதாரங்களை வெளியே எடுத்துவிட்டார். மொத்தமாக தொகுத்துப் பார்க்கும்போது ஃபோர்டு பவுன்டேசன் மொத்த அறிவுலகத்தையும் தத்து எடுத்திருக்கிறதோ என்று தோன்றுகிறது.

எம்.டி.முத்துக்குமாரசாமி
சைவப்பிள்ளை எம்.டி.முத்துக்குமாரசாமி மலேசியாவுக்கும் போவார், மங்காத்தாவைப் பற்றி ஆய்வும் செய்வார்.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் நாட்டுப்புறவியல் துறையில் வேலை பார்த்து விட்டு வெளியே பருப்பு வடையும், டிகிரி காபியும் குடித்து வந்த முத்துக்குமாரசாமி பின்னொரு நாளில் ஃபோர்டு பவுண்டேசனின் ஆசிய நிர்வாகிகளில் ஒருவராக பரிணமிப்போம் என்று கருதியிருக்க நிறையவே வாய்ப்பிருக்கிறது. நமது மக்கள் நாளைக்கு கால்வயிற்று கஞ்சி கிடைக்குமா என்று அஞ்சிய அந்தக் காலத்து நாட்களில் திருநெல்வேலி சைவப்பிள்ளை கூட்டம் எதிர்காலத்தில் நாம் எங்கே என்ன செய்து கொண்டிருப்போம் என்று குறிப்பான ஐந்தாண்டுத் திட்டங்கள் போட்டு கற்பனை செய்து கொண்டது. பார்ப்பனர்களுக்கு சற்றும் குன்றாத இந்த சாதியின் நீதியை எம் டி எம் நன்றாகவே பராமரிக்கிறார்.

அமெரிக்கா ரிட்டர்ன் என்.ஆர்.ஐ அம்பியான பத்ரி சேஷாத்ரி ஞாநியின் தேர்தல் செலவுக்கு எளிய நிதி உதவி அளிப்பதை பெருமையுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டார். இந்த உதவி ஞாநியின் மூலம் ஆம் ஆத்மியிடம் சென்று அமெரிக்காவுக்கு சேவை செய்கிறது. ஆனால், அதே அமெரிக்காவில்தான் பத்ரி சம்பாதித்தார் என்பதால் இது ஒரு பெரிய ‘குற்றம்’ இல்லை.

மானுடவியல், சமூகவியல், நாட்டுப்புறவியல், இயற்கை விவசாயம், மருத்துவம், இயற்கை வளம் என்று ஒன்று விடாமல் எல்லா துறைகளையும் குறித்து உலகம் முழுவதும் உள்ள அறிவு தேடல் மற்றும் ஆய்வுகளை அமெரிக்காதான் பிரதானமாக நடத்துகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் கூத்தோ இல்லை கோலாட்டமோ, இருட்டு கடை அல்வாவோ அந்த அல்வாவின் சுவைக்கு காரணமான, தாமிரபரணி தண்ணீரோ இன்னபிற விவரங்கள் அனைத்தும் ஏகாதிபத்தியங்களின் கையில். இதனால் என்ன ஆதாயம்? பிளாச்சிமடாவில் உள்ள சுவை நீர், கங்கைகொண்டானில் உள்ள தாமிரபரணியின் இனிமை நீர் இரண்டிலும் அமெரிக்க கோக் நிறுவனம் வந்து ஆலை திறந்து உறிஞ்சுவது இத்தகைய ஆதாயங்களுக்கு ஒரு சான்று.

மேலும் அரசியல், பொருளாதாரம், மதம், சாதி, தொன்மம், பால் என்று ஏராளமான துறைகளில் பயன்படத்தக்க இந்த விவரங்களை ஏகாதிபத்தியங்கள் சேகரித்துக் கொள்கின்றன. நேரம் மற்றும் தேவை வரும் போது அதை எடுத்து விடும். பயன்படுத்திக் கொள்ளும். மேலும் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள அறிஞர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவரும் வர்க்க போராட்டம் மற்றும் புரட்சிகர அரசியலுக்கு சென்று விடக்கூடாது என்பதோடு அவர்களை சிந்தனை மற்றும் வாழ்வியல் ரீதியாக ஊழல்படுத்த வேண்டும் என்ற காரணங்களுக்காகவும், இப்படி காசு கொடுத்து ஆய்வு வேலைகளை கொடுத்தும் வருகின்றன ஏகாதிபத்தியங்கள்.

ஆனால் இந்த சதிகார அரசியலை விடுத்து, நாங்கள் அகராதி போட்டோம், ஆமை வடை கண்டுபிடித்தோம், மகாபாரதம் ஆராய்ச்சி செய்தோம், விளிம்பு நிலை ஆய்வு செய்தோம் என்று இந்த சோரம் போன அறிவாளிகள் வியாக்கியானம் செய்கிறார்கள். இதைப் பற்றி எல்லாம் ஞாநிக்கு கருத்து வேறுபாடு இல்லை.

கேஜ்ரிவால்-அஷூதோஸ் குப்தா
கேஜ்ரிவாலுடன் ஐ.பி.என்&7&ன் முன்னாள் நிர்வாக ஆசிரியரான அஷூதோஸ் குப்தா : அமெரிக்க ஆத்மியில் அணிவகுக்கும் ஆங்கில பத்திரிகையாளர்கள்.

இந்தியா முழுவதுமே ஏராளமான பத்திரிகையாளர்கள் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜீ செய்தியின் முன்னாள் பத்திரிகையாளர் மனிஷ் சிசோதியா, சி.என்.என்.-ஐ.பி.என்.னில் தேர்தல் நிகழ்ச்சி நடத்திய யோகேந்திர யாதவ், ஐ.பி.என்7-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியரான அஷூதோஸ் குப்தா, முன்னாள் பத்திரிகையாளர் சேஸ்யா இல்மி, பிரபல பத்திரிகையாளர் அனிதா பிரதாப் என பட்டியல் நீள்கிறது (பட்டியலில் உள்ளவர்களை முழுமையாக ஆய்வு செய்தால் இந்த எண்ணிக்கை கூடலாம்). பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல… அறிவுஜீவிகள் என்று தங்களை கருதிக்கொள்வோர் பலர் ஆம் ஆத்மியுடன் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் இருக்கின்றனர். வாராது வந்த மாமணி போல ஆம் ஆத்மியை சித்தரிக்கும் இவர்கள், இதுநாள் வரை இந்த தேவதூதனின் வருகைக்காகத்தான் காத்திருந்ததைப் போல கதையளக்கிறார்கள்.

காங்கிரஸின் ஊழல், பா.ஜ.க.வின் இந்துமத வெறி இரண்டுக்கும் மாற்றுபோல ‘ஆம் ஆத்மி’யை முன்னகர்த்தும் இந்த அறிவுஜீவிகள் உண்மையில் யாருக்காக உழைக்கிறார்கள் என்பது இப்போதாவது உங்களுக்கு புரிகிறதா? ஏனெனில் அடுத்து வரும் பத்தாண்டுகளில் இந்திய நடுத்தர வர்க்கத்தின் மோகத்துக்குரிய கட்சியாக, அவர்களின் கனவுக் கட்சியாக ஆம் ஆத்மியை ஊடகங்களில் சித்தரிக்கப் போவது இந்த அறிவுஜீவிகள்தான். செத்து வீழ்ந்து கொண்டிருக்கும் இந்த போலி ஜனநாயகத்திற்கு செயற்கை சுவாசம் வழங்குபவர்கள் இவர்கள்தான்.

முக்கியமாக இந்தியாவில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை இயக்கும் அமெரிக்கா இப்போது நேரடி அரசியலிலும் தனது கிளையை துவங்கிவிட்டதன் அடையாளம்தான் ஆம் ஆத்மி. ஏற்கனவே அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற பல்வேறு கட்சிகளுக்கு விருந்து கொடுத்து உத்தரவு போட்ட அமெரிக்கத் தூதர் வாழும் தில்லியில் இனி அந்த தேவை இல்லை. அமெரிக்காவிற்கு பல்வேறு கட்சிகளில் தூதர்கள், புரோக்கர்கள் இருந்தாலும், காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற கட்சிகளே முழு அடிமைகளாக இருந்தாலும் போதவில்லை. புரட்சிகர முழக்கங்களுடன், புத்திசாலித்தனத்துடனும் ஒரு புதிய கட்சி அதுவும் சொந்தமாக இருந்தால் என்ன என்று யோசித்ததன் விளைவுதான் ஆம் ஆத்மி.

ஆம் இது அமெரிக்காவின் ஆத்மி.

மேலும் படிக்க

  • //ஏனெனில் இன்றைக்கு ஆம் ஆத்மியை தொண்டு நிறுவனங்களின் சதி என்று பிலாக்கணம் வைக்கும் பாஜக வீரர்கள் எவரும் தமது வீராதி வீரனான மோடியை வைத்து ஃபோர்டு பவுண்டேஷன் உள்ளிட்ட அன்னிய சேவை நிதி நிறுவனங்கள் தடை செய்யப்படும் என்று பேசவைக்க முடியுமா? காங்கிரசும், பாஜகவும் அமெரிக்காவின் அணுசக்தி ஒப்பந்தத்தையே பாராளுமன்றத்திற்கு தெரியாமல் நிறைவேற்றி அழகு பார்த்தவர்கள், பவுண்டேஷனுக்கு மட்டும் சவுண்டு விட முடியுமா? அதனாலேயே கேஜ்ரிவாலின் சவால் அப்படியே இருக்கிறது. ஆனால் பாஜக போன்ற மதவெறியர்கள் மற்றும் அமெரிக்க அடிமைகள் வேண்டுமானால் இதை கேட்பதற்கு அருகதை இல்லாதவர்களாக இருக்கலாம். நாம் கேட்போம்.//

   • இந்த கட்டுரை உதயகுமாரை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. ஏன்? அவரை பற்றியும்,நீங்கள் இணைந்து செயல்பட்டதையும் குறிப்பிட்டிருந்தால் இது ஒரு நேர்மையான கட்டுரையாக இருந்திருக்கும்.

 1. ICSSR இந்திய அரசின் கீழ் இயங்கும் நிதி நல்கை நிறுவனம்.. அது DST, DAE, DBT, ICHR போன்றது.. அது ஃபோர்ட்இலிருந்து நேரடியாக பணம் வாங்க இயலாது.. அது ஜென்யு வளாகத்திற்கு அருகில் இருந்தாலும் அது இந்திய அரசாங்கத்தின் மனித வளத்துறையின் கீழ் வரும் தனியான நிறுவனம்.. ஜென்யுவிற்கும் அதற்கும் சம்பந்தமில்லை..

  • அரசு நிறுவனங்கள்- கல்வி – சுகாதாரம் – மனித வளம் – விழிப்புணர்வு என்று பல்வேறு துறைகளில் பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடு சேர்ந்து இயங்குவனதாம். பல்வேறு திட்டங்களில் பல்வேறு ஏகாதிபத்திய தொண்டுநிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்றுக் கொண்டே அரசு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் அரசுக்கு ஒன்றும் கொள்கை மாறுபாடு இல்லை. இருந்தால் இத்தகைய நிதி வரவுகள் இங்கே ஏன் அனுமதிக்கப்பட வேண்டும்?

   • ஃபுல் பிரைட், ஃபோர்ட், யூரோப்பியன் யூனியன் போன்றவை இந்திய அரசுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதை நான் மறுக்கவில்லை.. ஆனால் ICHR & ICSSR இரண்டும் தான் இந்திய அரசால் சமூகவியல் ஆய்வுகளுக்கு நிதியுதவி அளிக்கும் நிறுவனங்கள்.. நீங்கள் கூறுவது படி பார்த்தால் இந்தியாவில் இந்திய அரசிடம் நிதி பெற்று எந்த ஆய்வாளர் ஆய்வு நடத்தினாலும் ஃபோர்டின் கையாள் என்று கூறுவது போல உள்ளது.. கல்விநிறுவனங்களில் வேலை செய்யும் பேராசிரியர்கள் அரசாங்கத்தின் நிதியுதவி கூட இல்லாமல் எப்படி ஆய்வு செய்ய முடியும்.. இது தான் DST, DBT, UGC, CSIR போன்றவற்றிலிருந்து நிதியுதவி பெற்று அறிவியல் புலத்தில் ஆய்வு செய்யும் பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமே பொருந்தும்.. ஏனென்றால் இவை DAAD, fulbright fellowship, Raman fellowship ஆகியவற்றை தொண்டு நிறுவனங்கள் மூலம் அளிக்கிறது.. இந்திய அரசு ஏகாதிபத்தியங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது என்பதால் இந்தியாவில் ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் எல்லாம் தங்கள் ஆய்வுப்பணிகளை விட்டுவிட வேண்டும் என்பது எனக்கு அபத்தமாக தோன்றுகிறது.. இந்திய – ஏகாதிபத்தியக் கூட்டை அம்பலப்படுத்துவது, பலகலைக்கழகங்களின் ஒவ்வொரு கமிற்றியிலும் என் ஜி ஓ க்களை நேரடியாக பங்கெடுக்க வைப்பதை எதிர்ப்பது போன்றவை சரி.. ஆனால் ஆய்வாளர்கள் இந்திய அரசு நிறுவனங்களிடமிருந்து ஆய்வு நிதி பெறுவது கூட என் ஜி ஓக்களிடம் நேரடியாக நிதியுதவி பெறுவதாக ஒப்பிடுவது, கம்யூனிஸ்டுகள் ஏன் MNC யில் வேலை செய்கிறார்கள் எனக் கேட்கும் அபத்தத்துடன் ஒப்பிடத் தோன்றுகிறது..

    • //ஆனால் ஆய்வாளர்கள் இந்திய அரசு நிறுவனங்களிடமிருந்து ஆய்வு நிதி பெறுவது கூட என் ஜி ஓக்களிடம் நேரடியாக நிதியுதவி பெறுவதாக ஒப்பிடுவது, கம்யூனிஸ்டுகள் ஏன் MNC யில் வேலை செய்கிறார்கள் எனக் கேட்கும் அபத்தத்துடன் ஒப்பிடத் தோன்றுகிறது..//

     திரு.ராஜன்,

     இதற்கான பதிலும் கட்டுரையில் இருப்பதாகத் தோன்றுகிறது..:

     “மானுடவியல், சமூகவியல், நாட்டுப்புறவியல், இயற்கை விவசாயம், மருத்துவம், இயற்கை வளம் என்று ஒன்று விடாமல் எல்லா துறைகளையும் குறித்து உலகம் முழுவதும் உள்ள அறிவு தேடல் மற்றும் ஆய்வுகளை அமெரிக்காதான் பிரதானமாக நடத்துகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் கூத்தோ இல்லை கோலாட்டமோ, இருட்டு கடை அல்வாவோ அந்த அல்வாவின் சுவைக்கு காரணமான, தாமிரபரணி தண்ணீரோ இன்னபிற விவரங்கள் அனைத்தும் ஏகாதிபத்தியங்களின் கையில். இதனால் என்ன ஆதாயம்? பிளாச்சிமடாவில் உள்ள சுவை நீர், கங்கைகொண்டானில் உள்ள தாமிரபரணியின் இனிமை நீர் இரண்டிலும் அமெரிக்க கோக் நிறுவனம் வந்து ஆலை திறந்து உறிஞ்சுவது இத்தகைய ஆதாயங்களுக்கு ஒரு சான்று.

     மேலும் அரசியல், பொருளாதாரம், மதம், சாதி, தொன்மம், பால் என்று ஏராளமான துறைகளில் பயன்படத்தக்க இந்த விவரங்களை ஏகாதிபத்தியங்கள் சேகரித்துக் கொள்கின்றன. நேரம் மற்றும் தேவை வரும் போது அதை எடுத்து விடும். பயன்படுத்திக் கொள்ளும்.”

     இதை மறுக்கிறீர்களா..?!

     எந்த ஆய்வுகளுக்கு நிதியுதவி தரப்படவேண்டும், அந்த ஆய்வுகளின் scope, போக்கு, முடிவுகள் இவற்றில் எந்த நுட்பமான தலையீடும் இருப்பதில்லையா..?!

  • IIT, JNU போன்றவையே போர்டு பவுண்டேசனிடம் நிதி பெற்றிருக்கின்றன.

   யார் யாரெல்லாம் போர்டு பவுண்டேசனால் ஊட்டி வளர்க்கப்படுகிறார்கள் என அறிய : http://www.fordfoundation.org/grants/search

 2. நெருடலான கட்டுரை. நன் கொடை வாங்கி செய்யும் எல்லாப் பணிகளும் சீர் தூக்கி அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டியதுதான். அது தொடர்பான உங்களின் எல்லா கட்டுரையும் படித்து விட்டு ஒரு முழுமயான கருத்துப் பகிர்தலுக்கு வருகிறேன். தற்போது நேரக்குறைவாக இருப்பதால் இத்துடன் …கவிஞர் தணிகை.

 3. When China waged war on India, What was the stand of communists?
  The communist can even support a foreign country takeover on the basis of ism

  What is wrong in getting donation from Ford foundation?

  Now I ask you this question?

  Comrade’s wife has health issue, And sand mofia leader is ready to donate money.
  Will he accept the money to fix his issue or will he go behind the leaders way of making money and reject?

  when country is in dire need of change, a guy with the will but not money, with all the ideology should simply wait for the money from the grass root people.

  That way you can make sure, nobody raises and can keep the corruption going on.
  when people fedup with the system, you guys can jump in and say “Gee we have a system which will provide solution for all, just hand us the power and trust us” and gullible people may fall for it

  • Mr. Raman,

   //Comrade’s wife has health issue, And sand mofia leader is ready to donate money.
   Will he accept the money to fix his issue//

   Sand mafia coming to the aid of the communist’s wife’s health issue is highly unlikely to happen.

   I don’t know if you understand the basic concept of Communism that the Communists strive for. As per communism, this earth and all its wealth is common to everyone and all can benefit from it to their just needs. Thus the comrade in question is entitled to not only the money that came from the sand but to any facility that came into being using the natural resources.

   However, the same cannot be said for others, who do not stand for communism but stand for unbridled private property.

   This is like a universal insurance scheme where only subscribers get cash-less treatment and others pay.

 4. //நாடு முழுவதும் படித்த மேல்தட்டுப் பிரிவினர் மட்டுமல்ல சாதாரண மக்களும் ஊழலே இந்தியாவின் தலையாய பிரச்சினையாக சீற்றம் கொள்கின்றனர். // உண்மை. அரசு அலுவலகங்களில் பார்த்ததால் அதை உள்ளச்சுருதியுடன் நம்புகின்றனர்.

  //கேஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சித் துவங்கி அரசியல் அதிகாரத்தில் மேலே வந்த பிறகு அண்ணா ஹசாரே உறவு முடிந்தது.// தவறு. அசாரே அரசியல் வேண்டாம் என்று சொன்னார் கேச்ரிவால் அரசியல் கட்சியை ஆரம்பித்தார் அதனால் உறவு முறிந்தது.

  //இதற்கு பதில் அளித்த கேஜ்ரிவால் குற்றச்சாட்டு பொய் என்றோ, பணத்தை திருப்பி விடவில்லை என்றோ கூறவில்லை // பொய்யான குற்றச்சாட்டு. பணம் திரும்ப கொடுக்கப்பட்டுவிட்டது.

  மாசுமருவற்ற மகானாக கேஜ்ரிவால் சித்தரிக்கப்பட்ட சமயத்தில், அமெரிக்க ஏகாதிபத்திய நலனுக்காக உருவாக்கப்பட்ட ‘இன்டெலக்சுவல்’ மற்றும் தொண்டு நிறுவன கையாளான ஃபோர்டு பவுன்டேஷனிடம் இருந்து நிதிபெற்ற விஷயம் திரும்பத் திரும்ப அவரைச் சுற்றி வரத் தொடங்கியது. \\ அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து நிதி பெறுவது தவறா? போர்டு பவுன்டேசன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனுக்காக மட்டுமே பணம் செலவழிக்குமா? அமெரிக்காவில் இருந்து எது வந்தாலும் நொட்டை சொல்லுவது உங்கள் வழக்கம் தவறானது.

  இந்தியாவில் எப்படி கிராம சுயராஜ்ஜியம் கொண்டு வரவேண்டும் என்று ஆய்வு செய்தவருக்கு இந்த உலகறிந்த விசயம் கூடத் தெரியாதாம். சந்தர்ப்பவாதத்திற்காக அறியாமை அடித்து பிடித்து தேடி வருகிறது. \\ அவருக்கு தெரியவில்லை என்றால் ஆதாரத்துடன் நீங்கள் வெளியிடலாமே.

  //அதாவது, ‘குடுக்குறான், வாங்குறேன். தப்புன்னா முதலில் அவனை நிறுத்தச் சொல்லு, நான் நிறுத்தரேன்’ என்று மணிரத்தினத்தின் குரலில் சொல்கிறார். // இந்திய அரசால் தடை செய்யப்படாத நிறுவனத்திடம் வாங்குவதில் என்ன தவறு? யாரிடம் இருந்து வாங்க வேண்டும்?

  //பரீக்சா’வுக்கு வாங்க மறுக்க வேண்டும் // எல்லோரும் நிதி பெற வேண்டும் என்பது கட்டாயமில்லையே? அவர் முடிவு வேண்டாம் என்பது அது தவறல்லவே.

  //அதைப்பட்டியலிட்டால் எவரும் மிஞ்சமாட்டார்கள் என்றே நம்புகிறோம்….80-களின் ஆரம்பத்திலேயே மகஇக மட்டுமே அம்பலப்படுத்தி போராடியிருக்கிறது // மகஇக மட்டும் தான் யோக்கியம் மற்றவர்கள் எல்லாம் அயோக்கியர்களா?

  //‘பெர்க்லீஸ் நாட்டிலஸ் இன்ஸ்டிடியூட்’ என்ற அமைப்பின் தெற்காசிய பகுதி பொறுப்பாளர். தெற்காசியப் பகுதிகளின் அணு உலைகளில் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்துவதும், அமெரிக்க சார்பை உறுதிபடுத்துவதும்தான் இந்த அமைப்பின் முக்கியமான பணி. // உருசியா, சீனாவிடம் இருந்து அணு உலைகளைப் பெறதடையாய் இருப்பது தான் உங்கள் எதிர்ப்பின் காரணமா?

  //மொத்தமாக தொகுத்துப் பார்க்கும்போது ஃபோர்டு பவுன்டேசன் மொத்த அறிவுலகத்தையும் தத்து எடுத்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. // மகஇக அறிவாளி இயக்கம் இல்லையா?

  மொத்தத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் எழுதப்பட்ட கட்டுரை.

  • unga kejriwal katchi terrorist support panratha pathi kavalaye illa ? Pakistan nadu official AAM Admi support panratha pathi kavala illa? Recent ah unga AAM Admi Katchi 2 student India Mujahideen operatives athavathu terrorists ah release panna porattam nadathinangale atha pathiyum kavala illa? neengalam indians ah allathu pakistan nattin kai kooligala ?

 5. எங்களை போன்ற சாதாரண மக்களுக்கு இப்பொழுது இருக்கும் ஒரே நம்பிக்கை ஆம் ஆத்மி தான்..வினவு சொல்லும் புரட்சி எல்லாம் நடைமுறையில் சாதியமிலாத ஒன்று. யார் கெட்டவர்கள் என்று பார்த்தால் இந்த உலகத்தில் உள்ள அனைவருமே ஒரு வகையில் கெட்டவர்கள் தான்..ஆனால் இதில் மிகவும் கொஞ்சம் கேட்டவர் என்று பார்த்தல் எங்களுக்கு கேஜ்ரிவால் தெரிகிறார்..ஞானி ஐ பற்றி ஏன் இவ்வளவு அவதூறு எழுதுகிறீர்கள்..உங்களை விட ஞானி க்கு நடைமுறையில் சாத்தியமான நல்ல அரசியல் எதுவென்று அவருக்கு தெரியும்..பெரியார் அந்த காலத்தில் தன்னுடன் போட்டோ எடுபதற்க்கு மக்களிடம் பணம் வசூலிதவர் என்பதை நீங்கள் தெரிந்தும் வேண்டும் என்றே மறைதுள்ளீர்கள்..பெரியாரும் அமெரிக்காவின் கை கூலியா..இந்த கட்டுரையில் தேவை இல்லாத உங்கள் கற்பனையை எல்லாம் புகுத்தி இருக்குறீர்கள்..இப்படி எழுதுவதை தயவு செய்து நிறுத்தவும்..தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்கள் தான் இருக்கிறது..நீங்கள் சொல்கிற புரட்சி இன்னும் 2 வாரத்தில் வர போவதில்லை..உங்களக்கு திருவண்ணாமலையில் கவுத்தி மலை போராட்டம் என்று ஒன்று நடப்பது தெரியுமா..முடிந்தால் அங்கு பொய் போராடும் என் தோழர்களுக்கு உதவி செய்யுங்கள்..நீங்கள் நடத்தும் இந்த வினவு தளமே அமெரிக்கா காரன் கண்டுபுடிச்ச ஒரு தொழில்நுட்பம் தான்..நீங்கள் ஏன் அதை உங்கள் இயக்கத்திற்கு உபயோக படுத்துகிறீர்கள்..நீங்களும் அமெரிக்கா கை கூலியோ.

  • நன்றாகச் சொன்னீர்கள். மஞ்சக் காமாலைக் கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாகவேதான் தெரியுமாம். வினவுவின் முட்டாள்த்தனமான கட்டுரை இது! வினவுவின் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய் விட்டது இந்தக் கட்டுரையின் மூலம்! நக்சல்கள் மட்டும்தான் ஒரே வழி என தீர்ப்பு சொல்வார்கள் போல் இருக்கிறது!

 6. இஸ்லாம் என்ற ஒன்றை சொல்லில் பாலஸத்தீனத்தில் நடக்கும் நகழ்வுகளுக்கு தமிழகத்தில் போராட்டம் ஆதரவு தெரிவிக்கபடுகிறது இந்தியாவும் ஆதரிக்கிறது. கம்யூனிஸத்தின் அடிப்படையில் கியூபா ரஷ்யா சீனா ரத்த பந்தம் இல்லாத நியைிலும் ஒன்றினைகிறது. சீனா ‌ஜப்பன் மதத்தின் அடிப்படையில் இலங்கைக்கு ஆதரவு அளிக்கிறது. ஆனால் பா‌ஐக இந்துத்துவ கட்சியாம் இலங்கையில் கொல்லப்பட்ட இந்துக்களுக்கு ஆதரவாக காட்டாதாம். திமுகவோ தமிழன் செத்தாலும் பரவாயில்லை மதவாத ஆட்சி அவர்கள் ஆதரவு இல்லாமல் ஆட்சியில் இருக்க கூடாது என்பதற்காக தமிழின படுகொலைக்கு துணைபோகும் காங்கிரஸூக்கு ஆதரவு அளிக்குமாம். அமெரிக்காவை எதிர்க்க இனப்படுகொலை என்ற இநதியா, இனப்டுகொலையை ஆயுதம் தந்து நடத்துமாம். தமிழன் 40 சீட்டு கொ‌டுத்து அதை அரியாசனத்தில் அமர்த்தி வைக்கனும் வாழ்க சனநாயகம்.

  • இது உண்மையா??? //இஸ்லாம் என்ற ஒன்றை சொல்லில் பாலஸத்தீனத்தில் நடக்கும் நகழ்வுகளுக்கு தமிழகத்தில் போராட்டம் ஆதரவு தெரிவிக்கபடுகிறது // சரி இஸ்லாம் என்ற ஒன்றுக்காக பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு என்றால் எதற்க்காக இவர்கள் ( http://jfjfp.com/ ) பாலஸ்தீனத்தை ஆதரிக்கிறார்கள்???

 7. எளிய மக்கள் கட்சி என்றால் எளிய மக்களிடம் தானே நிதி பெற வேண்டும் , அடித்தளமே அவர்கள் புண்ணியத்தில் இருக்கும் போது அவர்களை எதிர்த்து இவர்கள் எதை சாதிக்க முடியும் ?

 8. //ஞானி ஐ பற்றி ஏன் இவ்வளவு அவதூறு எழுதுகிறீர்கள்..//

  ஞாநியை அமெரிக்க கைக்கூலி என்று வினவு கூறுவதாகத் தோன்றவில்லை.. இன்று, அந்நிய தொண்டு நிறுவனங்களின் சிலபல உள்நோக்கங்களைப் கேள்வி கேட்கும் மிகச் சிலரும் குறைந்து கொண்டே வந்து இறுதியில் ம க இ க போன்ற இடதுசாரி அமைப்புகள் மட்டுமே மிஞ்சும் சூழல் நிலவுகிறது.. ஞாநி போன்றவர்களை குறை கூறும் அதே நேரம், இன்று சீரழிந்து கொண்டிருக்கும், ஊழல் மயமாகிவிட்ட, அரசியல் சூழலில் இருப்பதிலேயே lesser evil-ஆகத் ’தோன்றுவதை’ நடைமுறை சாத்தியக்கூறு கருதி தேர்ந்தெடுக்க வேண்டிய அவல நிலையில் அவரைப் போன்ற இடதுசாரி அறிவுஜீவிகள் இருப்பதையும் மறுக்கமுடியாது.. பெரியார் பஜனையிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தி அவ்வப்போது இது போன்ற இடதுசாரி கட்டுரைகளையும் வெளியிடும் வினவும் இது குறித்து சிந்திக்கவேண்டும்..

  • பூணூல்கள் பெருமாள் கோவில் கர்ப்ப கிரகத்தில்
   தேவனாதன் “காம” பூசை செயிவதை கண்டிக்குமா?

   பெரியார் பஜனை செய்வதில் பூணூல்களுக்கு எஙேகே சுளுக்கு?

 9. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையின்கீழ் செயல்பட்ட என்ஜிஓ-களின் சமூக நல செயல்பாடுகளில் குறையிருந்தாலோ, பெற்ற நிதியுதவியின் கணக்குகளில் முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலோ, அல்லது போர்ட் போன்ற அமெரிக்க நிறுவனக்களுக்கு கைமாறாக சட்டத்திற்கு உட்பட்டோ(அ)படாமலோ உதவி செய்திருந்தாலோ தவிர, வெறுமனே (சமூக நல அமைப்பின் செயல்பாட்டுகளுக்காக) நிதியுதவி பெற்ற காரணத்துக்காக மட்டுமே அமெரிக்க கைக்கூலி என்று குற்றம் சாட்டுவது, ‘கருங்காலியே’ வகை குட்டிச்சுவர் சுவரொட்டி சவடால்கள்.

  அதுவும் இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடி மட்டும் வாங்கி, அதையும் சமூக நல செயல்பாடுகளுக்கு செலவிட்டுவிட்டு, கைமாறாக இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் & இந்தியப் பெருமுதலாளிகளின் தயவோடு வெற்றி நடை போடும் இருபெரும் கட்சிகளான பாஜக & காங்கிரஸை எதிர்த்து மாற்று அரசியல் செய்கிறார என்ற இவ்வளவு பெரிய குற்றச்சாட்டா….? வெறும் 2 கோடி ரூபாய்க்கா..?! இந்திய ஊழல’ ‘இலட்சம் கோடி’களுக்கு பரிணாம வளர்ச்சி கண்டு பல வருடமாகிவிட்டது..! ஆக, வினவு மூச்சுப்பிடித்து இவ்வ்வ்வளவு பெரிய கட்டுரையெழுதியது இரண்டு கோடிக்கு கைமாறாக இந்திய சனநாயகத்துக்கே கெஜ்ரிவால் அச்சுறுத்தல் கொடுக்கிறார் எனக் குற்றம்சாட்டவா,,? இல்லை, நான் பாருங்கள் எல்லோரையும் விமர்சிக்கிறேன், அவ்ளோ நடுநிலையாளன் என்று கைவளைத்து தோள்தட்டிக்கொள்ளவா? 😉

 10. வினவு ,,, சைவப்பிள்ளை கூட்டம் & பார்ப்பனர் என்ன தொடர்பு ? !!!!

  //திருநெல்வேலி சைவப்பிள்ளை கூட்டம் எதிர்காலத்தில் நாம் எங்கே என்ன செய்து கொண்டிருப்போம் என்று குறிப்பான ஐந்தாண்டுத் திட்டங்கள் போட்டு கற்பனை செய்து கொண்டது. பார்ப்பனர்களுக்கு சற்றும் குன்றாத இந்த சாதியின் நீதியை எம் டி எம் நன்றாகவே பராமரிக்கிறார்.//

 11. பங்காளிச் சண்டையெல்லாம் பொதுவுல போட்டுகிட்டு….அப்புடி ஓரமா நின்னு அந்த மூத்திரச் சந்தில் போய் போடுங்கள்! AAP=ஆட்சிசெய்ய அருகதையற்ற பார்டி
  வினவு= ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத நக்ஸலைட்டு பார்டி.

 12. வினவு அய்யா.. நமது அதாவது இந்திய பொருளாதாரமே அமெரிக்க பிரட்டிஷ் ஸ்டைலில் இயங்கும் சமாச்சாரம்.. அமெரிக்கா பேரிக்கான்னா ஒன்ணும் பெறாது… அப்படித்தான் இருக்கும்.. உம்ம மாதிரி தூய வாதம் பேசிய ரசியா சீனா என்னாச்சு…? மேலும அமெரிக்காவில பணிபுரியும் முனனாள் இன்னாள் கம்யூனிஸ்ட்டு -இதில் போலி மட்டுமல்ல நிஜ கம்யூனிஸ்ட்டு (?) அதாங்க பாணி கம்யூனிஸ்ட் வேல பாக்கறாங்களே..? அது மட்டும் பரவாயில்லையா…? கரக்டா சொல்லுங்க…

 13. //வினவை ஆதரியுங்கள்; நன்கொடை தாருங்கள் // என்று முகப்பில் போட்டிருக்கிறீர்களே! ஒருவேளை ஃபோர்டு பவுண்டேசன் மாதிரியான அமெரிக்க பின்னனியில் இயங்கும் நிறுவனங்கள் நன்கொடை தந்தால் வாங்க மாட்டீர்களா? உங்கள் தோழர்கள் எல்லாம் உண்டியல் ஏந்தி நன்கொடை வசூலிக்கிறார்களே! அதில் விழும் பணம் எல்லாமே நேர்வழியில் சம்பாதித்த சாமான்ய மானவர்களின் பணம் மட்டுமே தானா? ஊழல் செய்து சம்பாதித்த ஒருத்தன் கூட உண்டியலில் பணம் போட்டு விட்டுப் போகலாம் தானே! அதையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளத் தானெ செய்கிறீர்கள்!
  ஆம் ஆத்மி இப்பொழுது தான் தொடங்கி யிருக்கிறார்கள்; அவர்களை விமர்சிக்கலாம்; தவறில்லை. ஆனால் நன்கொடை இன்னாரிடமிருந்து தான் வாங்க வேண்டுமென்றல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் மிகவும் செலவு பிடிக்கிற தேர்தல் அரசியலில் யாராலும் இயங்கவே முடியாது. சாமான்யமான மக்களிடமிருந்தெல்லாம் அவ்வளவு நிதி திரட்டுவது சாத்தியமே இல்லை. தேர்தல் அரசியலில் இறங்காமல் இங்கு எந்த மாற்றத்தையும் சாதிக்க முடியாது. அவர்கள் வெற்றி பெற்று அரசியலில் இயங்கத் தொடங்கிய பின்பு அரசியல் அதிகாரத்தை எதற்குப் பயன் படுத்துகிறார்கள் என்று பாருங்கள்! ஒருவேளை தங்களுக்கு நிதி கொடுத்தவர்களின் நலன்களுக்காக சட்டத்தை வளைக்கவோ அல்லது புதிதாக சட்டம் இயற்றவோ முயற்சித்தால் அப்போது அவர்களைத் தீவிரமாக விமர்சிக்கலாம். அதுவரை கொஞ்சம் அமைதி காத்திருங்கள்! 100% சுத்தவான்கள் என்று உலகத்திலேயே ஒருத்தனும் இருக்கமுடியாது வினவு தோழர்களே!

  • ஐயா சுப்புராஜ்,

   ///மிகவும் செலவு பிடிக்கிற தேர்தல் அரசியலில்///

   தேர்தல் அரசியலுக்கு எதுக்குங்க மிகவும் செலவு பிடிக்குது? செலவு செய்யலைன்னா அரசியல்ல ஈடுபடவே முடியாதா? முடியாதுன்னா அது யாருக்கான அரசியல்?
   நீங்க சொல்றதப் பார்த்தா செலவு செய்ய முடியாத சாமானியர்கள் இப்ப இருக்குற தேர்தல்ல போட்டி போடக்கூடாது அல்லது முடியாதுன்னு வருதே?

   /// 100% சுத்தவான்கள் என்று உலகத்திலேயே ஒருத்தனும் இருக்கமுடியாது///

   இந்த வார்த்தையை வச்சிக்கிட்டு தான் எல்லாரும் தான் செய்யும் செயலுக்கு நியாயம் கற்பிக்கின்றனர்.

   இந்த கட்டுரைக்கு கீழேயே தொடர்புடைய கட்டுரைகளில் இருக்கும் – ஞானியின் தவிப்பு நாவல் விமர்சனக் கட்டுரையையும், உங்களுக்குள் குரேனியே இல்லையா? என்ற புதிய கலாச்சாரம் கட்டுரையயும் படித்துப்பாருங்கள்.

   • ஐயா ஆணி
    //தேர்தல் அரசியலுக்கு எதுக்குங்க மிகவும் செலவு பிடிக்குது? செலவு செய்யலைன்னா அரசியல்ல ஈடுபடவே முடியாதா? முடியாதுன்னா அது யாருக்கான அரசியல்?
    நீங்க சொல்றதப் பார்த்தா செலவு செய்ய முடியாத சாமானியர்கள் இப்ப இருக்குற தேர்தல்ல போட்டி போடக்கூடாது அல்லது முடியாதுன்னு வருதே?// ஒரு கட்சியை இந்தியா முழுக்க தெரியப்படுத்துவதற்கு, போஸ்டர் அடிப்பதற்கு, வீதிவீதியாய்ப் போய் மகளைச் சந்தித்து வாக்குச் சேகரிப்பதற்கெல்லாம் நிதி தேவைப்படாதா? உட்கார்ந்த இடத்தில் கட்டுரை எழுதி அதை வினவு தளத்தில் வெளியிட்டு அதை மற்றவர்களைப் படிக்கச் சொல்வதற்கே /வினவை ஆதரியுங்கள்; நன்கொடை தாருங்கள் / என்று முகப்பில் போட்டிருக்கிறார்களே! ஒரு கட்சியை நடத்துவதற்கும் அதை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கும் எவ்வளவு நிதி தேவைப்படும்? ஒருவேளை அடிப்படையான தேர்தல் செலவுகளையெல்லாம் தேர்தல் கமிஷனே ஏற்றுக் கொள்ளும் ஒரு கால கட்டத்தில் மட்டுமே சாமான்ய மனிதர்களும் யாரிடமிருந்தும் நிதி பெறாமல் தேர்தலைச் சந்திக்க முடியும்.தேர்தல் அரசியலுக்கு செலவு செய்யத் தேவையில்லையென்றால் தேர்தல் கமிஷன் ஏன் ஒவ்வொரு வேட்பாளரும் ரூ.15 இலட்சம் வரை செலவு செய்ய அனுமதிக்கிறது.அதைத் தீவிரமாகவும் கண்காணிக்கிறது.

 14. வினவு நான் கேட்டிருந்த கேள்விக்கு இன்னமும் நீங்கள் பதில் சொல்லவில்லை. எல்லாவற்றிலும், எல்லாரையும் வெறுமனே குற்றம் கண்டுபிடித்துத் திட்டிக்கொண்டே இருப்பதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. சில நேரங்களில், சில சமயங்களிலாவது மக்கள் என்ன செய்யவேண்டும், என்ன முடிவெடுக்கவேண்டும் என்பதைச் சொல்லியாகவேண்டும். தேர்தலும் நெருங்கிவிட்டது. மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுங்கள். எல்லாரிடமும் குறை கண்டுபிடித்துப் பிறாண்டிக்கொண்டிருப்பதை மே மாதத்துக்குப் பிறகு வைத்துக்கொள்ளலாம்.

 15. வினவு அய்யா..

  Kindly give ans for some of the question

  (1) Mr.அரவிந்த் கெஜ்ரிவால் directly fight against reliance and other private sector, upto now any one political party they oppose corporate sector?

  (2) He also told magazine are directly supported B.J.P. and Modi? (Please remember some magazine written when uttarakhand floods modi taken the air bus and fly to uttrarkhand state and he has saved nearly 10000 people in one air bus and finally he return to gujarat also)

  (3) upto now, no one oppose for Mr. Modi.

  (4) Finally compare to your people Mr.அரவிந்த் கெஜ்ரிவால் far good, you people will talk and write only.

  No Process even another decade also.

  Thanks with Regards
  Udayan

 16. முக்கியமான ஒன்றை சொல்லாமல் விட்டுவிட்டிங்க…90-களின் ஆரம்பத்தில் திருநெல்வேலி பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் நாட்டுப்புற கலைகள் துறைகளுக்காக ஃபோர்ட் பவுண்டேஷன் நிதியுதவியுடன் மிகப்பெரிய விடியோ ஸ்டுடியோ அமைக்கப்ட்டது. 93 வருடம் ஒரு மில்லியன் டாலர் நிதி

 17. உலகமயமாக்கல் என்றாலே அமெரிக்கா மட்டுமே காரணம் என்ற மாயை வினவின் இந்த கட்டுரையிலும் பிரதிபலிக்கிறது ! ஐரோப்பிய யூனியன் தொடங்கி மேற்கத்திய நாடுகள் அனைத்துமே அவரவர் தகுதிக்கேற்ற சந்தையை பிடிப்பதில்தான் போட்டி போட்டுக்கின்றன. இன்றைய நிலையில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக பெரும் பொருளாதார பசியுடன் தன் தேசத்தின் நலனுக்காக மற்ற நாடுகளில் எதையும் செய்ய துணிந்த தேசமென்றால் அது ஜெர்மனியோ, பிரான்ஸோ அல்ல, உங்களின் கம்யூனிஸ்ட் சீனாதான் ! அதே வழியில் மீன்டும் துயில் மீன்டுக்கொண்டிருப்பது ரஸ்யா ! சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றி ஆழமாய் அலசி ஆராய்ந்து கட்டுரைகள் படைக்கும் வினவின் மனசாட்சிக்கு இது நிச்சயம் தெரிந்திருக்கும்.

  இனி இந்த கட்டுரையை பற்றி…

  மெற்சொன்ன முரண்கள் அகற்றி படித்தால் இந்திய வாக்காளர்கள் இன்னும் உணராத ஒரு உண்மை புரியும். ஆம் ஆத்மி ஒன்றும் இந்திய அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய வந்த மாமணி அல்ல. இதுநாள்வரையிலும் இங்கே ஆட்சிஆசையுடன் ( ஆட்சி தொண்டு அல்ல நண்பர்களே ! ) முளைத்துக்கொண்டிருக்கும் ஆயிரம் கட்சிகளில் ஒன்றுதான் ! ஒரே வித்யாசம் ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவுஜீவி என்பதால் அந்த பாணியிலேயே அரசியல் பிரவேசம் செய்துள்ளார். முன்னால் சினிமா தலைவர்களுக்கு சங்கங்கள் என்றால் அறிவுஜீவி கெஜ்ரிவால்களுக்கு தொண்டு நிறுவனங்கள். இந்தியாவில் கடைநிலை தொண்டர்கள், மாவட்ட செயலாளர்கள் மூலம் கட்டமைக்கப்படும் அரசியல் கட்சி மேலைநாடுகளில் சிறுதொண்டு அமைப்புகளின் மூலமே உருப்பெறுகிறது. இதை விளக்க தனி கட்டுரையே எழுத வேண்டும். சுருக்கமாக சொன்னால் இந்திய அரசியல் சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்ட புத்திசாலி அரசியல்வாதி கெஜ்ரிவால்.

 18. இவை எந்தளவிற்க்கு உண்மையோ அந்தளவிற்க்கு 1.கச்சத்தீவில் கொள்ளப்படும் தமிழனுக்கு என்னத்தீர்வு?2.குறுகியகடல்த்தூரத்தில் மீன்பாடு இல்லாமல் சர்வதேச எல்லையில் காணமல்போகும்,மரித்துபோகும் தமிழனுக்கு என்னதீர்வு?3.கடற்கரையோரங்களில்,கடலில் தினம் கொட்டப்படும் நச்சுகளுக்கு என்னதீர்வு?4. வளர்ச்சி தொழில்மயம் என்றதோற்றத்தில் எல்லாவகையானத் தொழில்களுக்கும் உலகில் ஏதாவது ஒருநாட்டையே எதிர்பார்த்து இருப்பதாலும், காங்கிரசு + பிஜேபி+ கம்னியூசுடுகள் இதுவரை இந்தியாவில் சரியில்லை என்பது எல்லாருக்கும் நன்றாகத்தெரிந்ததாலும்!!! இக்கட்சிகள் எங்கள் வளர்ச்சிக்கான முழுப்பணத்தையும் கையூட்டம் பெற்று யூரோப்பிய+அமெரிக்கநாடுகளின் வங்கிகளில் இட்டு கொள்ளைப்பணம் பெறுவதால் இந்தியாவின் அடிமட்ட சாதாரண குடிமக்கள் மாற்றம் வேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறில்லை.இதற்க்கு சிலர் மற்றவர்களைச்சார்ந்து இருப்பதும்,மேலும் பலர் சூழ்ச்சி செய்வதும்.நடக்கத்தான் செய்யும்.காரணம் நீ&நான்

 19. சோழியன் குடுமி சும்மா ஆடாது! மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்யநடக்கும் ‘ஜனனாயக?’நாடகத்தில் புதிய காட்சியும், புதிய கோமாளிகளும் வந்து போவார்கள்! இவர்களைநம்பிய மக்கள் ஏமாந்துதான் போவார்கள்! பங்களா வாசிகளின் ஊழலுக்கு எதிரான போராட்டம், அன்றைய எம்ஜியார்நடத்திய நாடகத்தைதான் நினைவூட்டுகிறது! ஜெயாவின் 4000கோடி ஊழலை இவர்கள் கூட விமரிசிக்காதது ஏன்? இடஒதுக்கீடு, ஏழைகளுக்கான இலவச திட்டங்கள் பற்றிய இவர்களீன்நிலைப்பாடு என்ன? முக்கியமாக மதவிஷ்யங்களில் சாதி ஒழிப்பு பற்றி பேச தயாரா? அரசுநிதியை கொள்ளையடிக்கும் அய் டி கம்பனிகள், ஏழை டாடா, அம்பானிகளைப்போல இவர்களுக்கும் ஒரு பன்னாட்டு பின்புலம் உள்ளதா?

 20. I am very much disappointed by this article. Kejrisal is the only person who has boldly announce that Ambanis and other capitalists are running the country and openly having fight with Ambanis for Gas price hike when no body questioned it and finally succedded in getting EC permission to stall the moveAt ptesent he is the only person questioning the crony capitalism. Pl let him have some breathing time and after May we can have another discussion.

 21. வினவு, கட்டுரையெல்லாம் ரொம்ப தெளிவாத்தான் இருக்கு ஆனா உங்க கூட்டம் காலத்துக்கும் உருப்புடவே மாட்டீங்க எனபது தான் நிதர்சனம்!!

 22. ஜனார்த்தனன் அவர்களே,

  அம்பானிகள் தொடங்கி ஏனைய ஏகாதிபத்திய முதலாளிகள் அனைவரின் மீதும் கெஜ்ரிவால் அறிக்கை போர் தொடுப்பது உண்மைதான். நீங்கள் கூறும் இந்த ” crony capitalism “மன்னர்கள் நாளையே கெஜ்ரிவாலின் விருந்துக்கு பணம் கொடுத்துவிட்டு வந்தால் மறுத்துவிடுவாரா ஆம் ஆத்மி தலைவர் ?! ஏனைய அரசியல் கட்சிகள் கொண்டிருக்கும் ” நன்கொடை ” திட்டத்தையும் புத்திசாலித்தனமாக நடத்துகிறார் ஆம் ஆத்மி தலைவர் ! அவரின் விருந்துன்னல் திட்டத்தில் கூட பணம் படைத்தவர்கள்தான் பங்கு பெற முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள் ! தேனெடுத்தவன் புறங்கையை நக்குவதை போல கொடுத்தவன் நிச்சயம் ஆட்சியின் போது எதிர்ப்பார்ப்பான் ! ஊழலின் ஊற்றுக்கண்ணே இங்குதான் ஆரம்பமாகிறது !!

 23. ஜெமோவின் இன்றைய பதில் (அவரது இணையதளத்தில்) வினவின் கட்டுரைக்கு ஒரு endorsement
  காந்தி பற்றி, இந்தியா ஏன் ஒன்றாக இருக்கவேண்டும் என்றெல்லாம் பக்கம் பக்கமாக நேர்த்தியாக எழுதும் ஜெமோ, இந்த எளிமையான கேள்விக்கு (அதாவது கேஜ்ரிவால் அந்திய சக்திகளிடமிருந்து நிதி பெறப்பட்டதை) பதிலை எப்படியெல்லாம் சொதப்புகிறார் என்று பாருங்கள். கேள்விக்கு சம்பந்தமேயில்லாமல் நான் யோக்கியம், என் விழாக்கள் மற்றும் வெளிநாட்டு பயணமெல்லாம் எப்படி நடத்தப்படுகின்றன என்று “self-attestation” வேறு. வினவு உன் சேவை இந்த நாட்டுக்கு தேவை!

 24. ஆம் ஆத்மி கட்சியின் உண்மை நிலை பற்றி இதை விட தெளிவாக யாராலும் எழுதி விட முடியாது…பல நிகழ்வுகளை தொகுத்து ஆம் ஆத்மி கட்சியின் சுயரூபத்தை வெளிக்கொண்டு வந்த வினவு தளத்திற்கு நன்றிகள்…

  பாஜக – காங்கிரஸ் இரண்டும் அமெரிக்க அடிவருடி…
  ஆம் ஆத்மி அமெரிக்காவின் நேரடி அரசியல் கட்சி…

 25. இஸ்லாம் என்ற ஒன்றை சொல்லில் பாலஸத்தீனத்தில் நடக்கும் நகழ்வுகளுக்கு தமிழகத்தில் போராட்டம் ஆதரவு தெரிவிக்கபடுகிறது இந்தியாவும் ஆதரிக்கிறது. கம்யூனிஸத்தின் அடிப்படையில் கியூபா ரஷ்யா சீனா ரத்த பந்தம் இல்லாத நியைிலும் ஒன்றினைகிறது. சீனா ‌ஜப்பன் மதத்தின் அடிப்படையில் இலங்கைக்கு ஆதரவு அளிக்கிறது. ஆனால் பா‌ஐக இந்துத்துவ கட்சியாம் இலங்கையில் கொல்லப்பட்ட இந்துக்களுக்கு ஆதரவாக காட்டாதாம். திமுகவோ தமிழன் செத்தாலும் பரவாயில்லை மதவாத ஆட்சி அவர்கள் ஆதரவு இல்லாமல் ஆட்சியில் இருக்க கூடாது என்பதற்காக தமிழின படுகொலைக்கு துணைபோகும் காங்கிரஸூக்கு ஆதரவு அளிக்குமாம். அமெரிக்காவை எதிர்க்க இனப்படுகொலை என்ற இநதியா, இனப்டுகொலையை ஆயுதம் தந்து நடத்துமாம். தமிழன் 40 சீட்டு கொ‌டுத்து அதை அரியாசனத்தில் அமர்த்தி வைக்கனும் வாழ்க சனநாயகம்.

  • iv.chellan சார்,

   இலங்கை பிரச்சினையில் பாஜக வின் நிலை என்ன?
   இராஜபக்சேவிடம் சுஸ்மா ஸ்வராஜ் வைர நெக்லசை வாங்கும்போது இலங்கையில் கொள்ளப்பட்டது இந்துக்கள் அல்ல என்றாகிவிட்டதா?
   இலங்கை விவகாரத்தில் மோடி, ராஜ்னாத்தின் கள்ள மௌனம் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
   அதிமுக வின் உண்மை முகம் என்ன?
   முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிப்பு பற்றி என்ன நினைகிறீர்கள்?
   இவர்களுக்கு 40 சீட்டு கொடுத்தால் மட்டும் தமிழர்களுக்கு விடிவுகாலம் கிடைத்துவிடுமா சார்?

 26. //இந்தக் குற்றச்சாட்டுக்களை நான் சொல்லும்போது அதற்கொரு கௌரவம் உள்ளது, சொந்தச்செலவில் இலக்கியச்செயல்பாடுகளைச் செய்பவன் நான். வினவு [ம.க.இ.க] போன்ற குழுக்கள் பேசும்போது வேடிக்கை உணர்வே எழுகிறது. சென்ற இருபதாண்டுக்காலமாக இவர்களை நான் நன்கறிவேன். இவர்களின் தலைமையில் அனைவரையும் நான் அறிவேன்

  இவர்களின் நிதியாதாரம் இரண்டு. ஒன்று வலுவான இடதுசாரி தொழிற்சங்கம் உள்ள தொழில்நிறுவன்ங்களில் அந்த இடதுசாரித்தலைமையை அவதூறுசெய்யவும் தொழிலாளர்களை பிளவுபடுத்தவும் அம்முதலாளிகளிடம் கைக்கூலி பெற்றுச் செயல்படுவார்கள். சமீப காலமாக இந்தியாவில் உள்நாட்டு அமைதியின்மையை உருவாக்கும் நோக்குடன் சீனா போடும் பருக்கைகளைத் தின்று வாழ்கிறார்கள்.//http://www.jeyamohan.in/?p=48484

  திருவரங்கம் முதல் தில்லை வரை மக்களுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் போராடிய தோழர்களின் மீது எழுப்பபடும் இத்தகைய அவதூறு வேதனை கொள்ள செய்கிறது. போராட்டத்தில் நாங்கள் எனும் தலைப்பின் கீழ் உள்ள வினவு கட்டுரைகளை படித்தால் கூட போதும், தோழர்களின் போராட்ட குணத்தை அறிந்து கொள்ளலாம். போகிற போக்கில் சேற்றை வாரி இறைக்கும் ஜெயமோகனின் இந்த அரைவேக்காட்டுத்தனமான உளறல்களுக்கு தோழர்கள் சரியான பதிலடி தரவேண்டும். முதலாளிகளின் கைக்கூலி பெறும் அமைப்பையா, அவர்கள் தடை செய்ய கோருகிறார்கள்? https://www.vinavu.com/2012/08/06/efsi-jaya/

 27. ஜெயமோகனுக்கு நான் அனுப்பிய பதில்:

  ஜெயமோகன் அவர்களே,

  ம.க.இ.க முதலான அமைப்புகள் சீன நிதி உதவி பெறுவது இல்லை. அப்படி பெறுவதாக இருந்தால் மத்திய அரசின் அயல் விவகார அமைச்சகத்தின் அறிவுக்கு எட்டாமல் செய்ய முடியாது. அடுத்த கணமே ம.க.இ.க அமைப்பை தடை செய்து விடுவார்கள். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பை இப்படிப்பட்ட அவதூறு மூலம் முடக்க நினைத்தார்கள். உதயகுமார் முன்பு அந்நிய நிதி உதவி பெறும் தொண்டு நிறுவனத்தை நடத்தியதால் இதனை வைத்து அந்த போராட்டத்தை ஒடுக்குவது எளிது என்று கணக்கு போட்டார்கள். முதலில் எடுபட்ட நாராயணசாமியின் குற்றச்சாட்டு பிறகு சந்தி சிரித்தது. ஏனென்றால், உதயகுமார் மிக வெளிப்படையாக செயல்பட்டதால் அரசும், இந்துத்துவவாதிகளும் போராட்டக் குழுவிடம் தோற்றார்கள்.

  உதயகுமாரை விட பன்மடங்கு வெளிப்படைத்தன்மையுடன் இயங்குவது ம.க.இ.க முதலான புரட்சிகர அமைப்புகள். கட்சியின் கொள்கைகள், நிதி ஆதாரம் முதலானவற்றில் அதிசயிக்கத்தக்க ஒளிவின்மை இருக்கிறது. கட்சி நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கு அந்த பகுதிகளில் தோழர்கள் குவிந்து பொதுக்கூட்ட நேரத்துக்கு முன்பாக பொதுக்கூட்ட நோக்க பிரசுரத்தை விநியோகித்து அஞ்சு, பத்து, ஐம்பது, நூறு என்று மக்களிடம் வசூல் செய்வார்கள். மாநாடு என்றால் சில மாதங்களுக்கு முன்பாகவே தோழர்கள் குவிந்து குறிப்பிட்டப் பகுதியை சுற்றிலும் முகாமிட்டு பணியாற்றி மக்களிடம் வசூல் செய்வார்கள். முக்கியமாக, கட்சியின் கொள்கைகளையும், கூட்டத்தின் நோக்கத்தையும் விளக்கிய பிறகே வசூல் செய்வர். சில வார்த்தைகளிலிருந்து சில மணிநேரம் வரையிலும் உரையாடி விட்டே நிதி வசூல் செய்வார்கள், தோழர்கள். இது போக தனி நபர்கள், தோழர்கள் மனமுவந்து அளிக்கும் நிதிகளும் உண்டு. பேருந்துகள் மற்றும் ரயிலில் தோழர்கள் குழுவாக பிரிந்து சென்று பிரச்சாரம் செய்வார்கள். அப்போது நிறைய மக்கள் கொட்டி கொடுப்பார்கள்.

  பொதுக்கூட்டம் அல்லது மாநாடு நடைபெறும் போது உரை நடுவே துண்டேந்தி தோழர்கள் கூடியிருக்கும் மக்களிடம் செல்வார்கள். அப்படியும் நிதி கிடைக்கும். அதனை கூட்ட முடிவில் தோழர்கள் அறிவிப்பார்கள். வசூலிலும் நெறிமுறைகள் உண்டு. அடகுகடைகாரர்கள் மற்றும் சுரண்டல் முதலாளிகளிடமிருந்து வசூலிக்க மாட்டார்கள், தோழர்கள். சி.பி.எம் -க்கு அடுத்தபடியாக கம்யூனிஸ்ட் கட்சிகளில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவது ம.க.இ.கவுக்குத் தான். ஒரு சாதாரண பொதுக்கூட்டத்துக்கு பத்தாயிரத்துக்கும் குறையாமல் மக்கள் கூடுவார்கள். பொதுமக்கள், மாற்றுக் கட்சியினர், ஜனநாயக இயக்கத்தினர் என்று பலரும் விருப்பார்வத்தோடு கலந்து கொள்வர். 20 வருடமாக தோழர்களை அறிந்திருப்பதாக நீங்கள் சொல்வது பொய். நீங்கள் தோழர்களை பற்றி மகஇகவுக்கு விரோதமான நபர்களிடமிருந்து மட்டுமே அறிந்திருக்க வாய்ப்புண்டு.

  நீங்கள் திறமையாக வைத்திருக்கும் வாதம் ஒன்று இருக்கிறது. அந்நிய நிதி உதவி பெற்றுக் கொண்டு ‘இந்தியா ஒழிக’ என்று கத்துபவர்கள் மட்டுமே தேச் விரோதி என்கிறீர்கள். அதன்படி அந்நிய நிதி உதவி பெற்று இடதுசாரி அரசியல் பேசுபவர்கள் மட்டுமே மோசமானவர்கள் ஆகிறார்கள். ஆனால், அந்நிய நிதி உதவி பெற்றுவிட்டு தேசபக்தி வேடம் போடும் வி.ஹெச்.பி, ஆர்.எஸ்.எஸ் பிழையானவர்கள் அல்லர் ஆகிறார்கள். உங்கள் திறமை இல. கணேசனுக்கே வராது. பா.ஜ.கவில் எங்கோ இருக்க வேண்டியவர் நீங்கள். ஏன், இப்படி கஷ்டப்படுகிறீர்கள் என்று நினைக்க பரிதாபமாக இருக்கிறது. அந்நிய நாடுகளிலிருந்து நிதி பெறும் அமைப்புகளிலே முன்நிற்பது வி.ஹெச்.பி என்ற விபரம் நீங்கள் அறியாமல் இருக்க முடியாது. அமெரிக்கா உட்பட பல நாடுகளிலிருந்து வசூலிக்கப்படும் நிதிகள் மூலம் இந்தியாவில் ஏராளமான கலவரங்களை திட்டமிட்டு நடத்தி இருக்கிறார்கள். நீங்கள் அறிந்த இந்த உண்மைகளை சொன்னால் நீங்கள் ஜெயமோகனாக இருக்க முடியாது.

 28. இவர்களாவது போர்டு பவுண்டேசன் நிதி தான் வாங்குகிறார்கள், ஆனால்
  ஆம் ஆத்மி குமரி வேட்பாளர் எஸ்.பி.உதயகுமாரோ (இனி அவரை கூடங்குளம் போராட்டத்துடனோ, மக்களுடனோ அடையாளப்படுத்தக் கூடாது என்பதால் தான் ஆம் ஆத்மி உதயகுமார் என்றேன்) போர்டு பவுண்டேசன் போன்ற பல ஏகாதிபத்திய தொண்டு நிறுவனங்களுக்காக தீயாகவே வேலை செய்திருக்கிறார். மேலும் இது ரகசியமும் அல்ல, இதை அவரே குமுதம் தீராநதியில் கூறியுள்ளார். ஏகாதிபத்தியதாசனாக சேவை செய்ததில் அவருக்கு அப்படி என்ன பெருமையோ ?

  எனது கேள்வி என்ன என்றால், வினவு ஏன் இந்தக் கட்டுரையில் அமெரிக்க ஆத்மியின் முக்கிய என்.ஜி.ஓ புள்ளியான உதயகுமாரைப் பற்றி எழுதவில்லை என்பது தான்.

 29. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இப்போதைக்குத் தேவைப்படுகிறது ஒரு புதிய அடிமை.ஆனால் அது இந்திய அரசியலில் மாவீரனாக சித்தரிக்கப்பட்டிருக்க வேண்டும்.அது மோடி என்ற கேடி.பிற்காலத்தில் தேவைப்படுவது[பிற்காலம் என்பது இந்திய மக்கள்-ஓட்டு வங்கி-எவ்வளவு இளித்தவாயாக இருக்கிறதோ அவ்வளவு விரைவில்]ஒரு சொந்த அடிமை அல்லது அடிமைகளின் ராஜா.அது அரவிந்த் கேஜ்ரிவால்.அது அறிவுஜீவிகளின் ஜாம்பவானாக காட்சிப்படுத்தப் பட்டிருக்கவேண்டும்.தொண்டு நிறுவனங்கள் அது எவ்வளவு பெரிய சிறந்த தொண்டு செய்தாலும் பன்னாட்டு நிறுவனங்களின் அறக்கட்டளைகளிடமிருந்து பணம் பெற்றால் அது ஏகாதிபத்திய கைக்கூலித்தனம் தான்.இவர்கள்தான் கேஜ்ரிவால் அல்லது நரிவால் ஏதோ ஒன்றின் ஆணி வேர்.இது தான் பெரும்பான்மை மக்களின் நலனுக்கு எதிரான சதிகாரக் கூட்டம்.

 30. Your article on Aam Aadmi..

  strategic misrepresentation of facts. not a detailed deep analysis..getting help from foundations does not make you an American Aadmi..these foundations have independent charter and outlook. lot of Marxist /Maoist oriented NGOs get financial and material support from them.
  Pl also realise one of the major accusuations against AAP.. is it is far left leaning marxist maoist supporting people in the leadership positions.

  I have assisted many of these NGOs and its leaders and I know for sure..they are not pro-Americal poltical government or its agencies.

  I am inteested to know who has written this article and the sources on which this article is based both for my own research and course correction .

 31. ராஜா சார்,
  நாங்க உருபுடரமா என்பது இருக்கட்டும்,
  நீங்க உருப்புட்டு உண்டகட்டி வாங்கிட்டு இத சொல்லலாமே..?

  வினவுல வர அனைத்தும் கற்பனை கதாபத்திரங்கள் அல்ல, ஆதாரப்பூர்வமான உண்மைகள், மறைக்கபட்ட வரலாற்று உண்மைகள்,

  நடைமுறைகளிலும் சாதித்து காட்டிருகிறோம்,

  எங்களுக்கு தோல்வி என்பதே கிடையாது….

 32. AVAR NITHI VAANGI IRUNDHAL ENNA?IRANDU VARUDANGALUKKU MUNBE NIRUTHI VITTEN ENDRU KOORUM PODHU..THAVARAI UNARNDHU VITTAR ENBADHU THAANE PORUL..IDHAI KOORUM NEENGAL ANNIYA NITHIYIL IRUNDHU NALLADHU SEIYUM ETHANAYO IYAKKANGAL ULLANA ADHAI VENDAM ENDRU THADUPEERKALA…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க