privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்சீன நிறுவனத்துக்காக பெல் நிறுவனத்தை முடக்கும் அரசு

சீன நிறுவனத்துக்காக பெல் நிறுவனத்தை முடக்கும் அரசு

-

ண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமையவுள்ள தமிழக மின்வாரியத்திற்கு தேவையான 660 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பாய்லருக்கான பணி ஆணையை முறையான டெண்டரில் BHEL நிறுவனம் வென்றது. ஆனால், போட்டியில் இரண்டாவதாக இருந்த சீன நிறுவனம் (CSEPEI), BHEL-க்கு கிடைத்த ஆணைக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தடை பெற்றுள்ளது. அரைகுறையான, உண்மைக்குப் புறம்பான விவரங்களைக் கூறி இந்த தடையாணை பெறப்பட்டுள்ளது. அநீதியான இந்த தடையால் BHEL-ன் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இதைக் கண்டித்து, நீதிமன்ற தடையாணையை உடைத்து BHEL-க்கு பணியாணை கிடைக்க ஏற்பாடு செய்யக் கோரி திருச்சி பாய்லர் பிளான்ட் வொர்க்கர்ஸ் யூனியன் தொழிலாளர்கள் ஊர்வலமாகச் சொன்று மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

மனு :

01.09.2014

அடைதல்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
திருச்சி

அம்மா,

பொருள் :
BHEL நிறுவனத்திற்கு கிடைத்த பத்தாயிரம் கோடி ரூபாய் பணி ஆணைக்கு தடை – உயர்நீதி மன்றத்தடையை உடைத்து பல்லாயிரம் தொழிலாளர்களின் குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்க நடவடிக்கை கோருதல் – தொடர்பாக

எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமையவுள்ள தமிழக மின்வாரியத்திற்கு தேவையான 660 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பாய்லருக்கான பணி ஆணையை முறையான டெண்டரில் BHEL நிறுவனம் வென்றது. ஆனால், போட்டியில் இரண்டாவதாக இருந்த சீன நிறுவனம் (CSEPEI), BHEL-க்கு கிடைத்த ஆணைக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தடை பெற்றுள்ளது. அரைகுறையான, உண்மைக்குப் புறம்பான விவரங்களைக் கூறி இந்த தடையாணை பெறப்பட்டுள்ளது. அநீதியான இந்த தடையால் BHEL-ன் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தற்பொழுதே BHEL-ன் துணை நிறுவனங்கள் 500-க்கு மேல் மூடிக்கிடக்கிறது. பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். எதிர்காலத்தில் மேலும் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கவும் அவர்களது குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கவுமான நிலை ஏற்படும் என்பது தாங்களும் அறியக் கூடியதே!

ஆகவே, இந்தத் தடையாணையை உடைத்து BHEL-க்கே பணியாணை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு மாநில அரசும் மத்திய அரசும் முனைப்பு காட்ட வேண்டும் என எமது சங்கத்தின் சார்பின் எமது நிறுவனத் தொழிலாளர்கள் சார்பிலும் கேட்டுக் கொள்கிறோம். தமிழகத்தின் முக்கிய பிரச்சினையாக உள்ள இந்த கோரிக்கையை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு சென்று தீர்க்க வேண்டுமாய் தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், உலகமயக் கொள்கை காரணமாக அரசுத்துறை நிறுவனமான தமிழக மின்வாரியம், மற்றொரு அரசுத்துறை நிறுவனமான BHEL-க்கு நேரடியாக ஒப்பந்தம் தர முடியாத நிலை உருவாகியுள்ளது. அதையும் தாண்டி சர்வதேச அளவிலான டெண்டரில் போட்டியிட்டு கடும் போட்டியில் வென்றபின்னும் நமது உயர்நீதி மன்றத்திலேயே அதற்குத் தடை பெற ஒரு அந்நிய நிறுவனத்தால் முடிகிறது. இதன் மூலம் இந்திய சிறுதொழில் முனைவோரையும், பல்லாயிரம் தொழிலாளர்களையும் நசுக்க முடிகிறது. வாழ்வாதாரத்தைப் பறிக்க முடிகிறது. இந்தக் கொடுமை முடிவுக்கு வரவேண்டும். எனவே, இதற்கெல்லாம் காரணமான உலகமயக் கொள்கையை விட்டும் உலக வர்த்தகக் கழகத்தை விட்டும் இந்தியா வெளியேற வேண்டும் என்பதையும் இத்தருணத்தில் எமது கோரிக்கையாக முன்வைக்கிறோம்.

உலகமயக் கொள்கையால் அம்பானி, அதானி, டாடா, மிட்டல் போன்ற விரல் விட்டு எண்ணக் கூடிய சில முதலாளிகள் அய்ரோப்பாவிலும் ஜப்பானிலும் முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அதைவிட பல்லாயிரம் இந்திய சிறு முதலாளிகளின் தொழில் அழிந்து கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்விழக்கும் அபாயம் கொடுமையானது. நாட்டை நலிவடையச் செய்யக் கூடியது. இந்த நிலையை எண்ணித் தாங்கும் எமது நியாயமான இந்தக் கோரிக்கைக்காக அரசை வலியுறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி,

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

K சுந்தரராசு.
பொதுச்செயலாளர்
BPWU/பு.ஜ.தொ.மு
திருச்சி

தகவல்
பாய்லர் பிளான்ட் வொர்க்கர்ஸ் யூனியன்,
BHEL, திருச்சி.