privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசென்னை திருப்பெரும்புதூர் : பு.ஜ.தொ.மு முற்றுகை

சென்னை திருப்பெரும்புதூர் : பு.ஜ.தொ.மு முற்றுகை

-

கழுத்தை இறுக்குது லாபவெறி! தொழிலாளி வர்க்கமே கொதித்தெழு!
திருப்பெரும்புதூர் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முற்றுகை!

ன்னாட்டு முதலாளிகளுக்கும், இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தை காவு கொடுக்கின்ற வகையில் பல்வேறு தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தி வருகிறது, மோடி அரசு. நிரந்தரத் தொழிலாளி என்பதையே ஒழித்துக் கட்டி தினக்கூலி-மணிநேரக் கூலிகளாக்கிடும் வகையில் இந்த சட்டத்திருத்தங்கள் இருக்கின்றன.

ndlf-rally-meeting-018 மணிநேர வேலைமுறைக்கு சாவு மணி அடித்து தினசரி 10-14 மணிநேரம் வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை சட்டபூர்வமாகவே உருவாக்கி வருகிறது, மோடி அரசு. வரிச்சலுகை முதல் கட்டுமான வசதி வரை எல்லாவற்றையும் அனுபவிக்கின்ற முதலாளிகளுக்கு மலிவான கூலியில், எவ்வித உரிமையும் இல்லாத தொழிலாளர்களை உருவாக்கித் தருகிறது அரசு.

இனிவரும் காலங்களில் கொத்துக்கொத்தான வேலை பறிப்புக்கள் காத்திருக்கின்றன. அரசும், ஓட்டுக்கட்சிகளும் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பி இருக்க முடியாது.

பொறுத்திருந்ததும், பிளவுபட்டிருந்ததும் போதும். செங்கொடி ஏந்தி போர்க்களம் இறங்க வேண்டிய வேண்டிய தருணம் இது. தொழிலாளி வர்க்கமே கொதித்தெழு” என்பதை பிரச்சார முழக்கமாக வைத்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் நவம்பர் 16 முதல் ஒருமாத பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

ndlf-rally-meeting-20ரயில்-பேருந்து பிரச்சாரங்கள், ஆலைவாயில் – தெருமுனைக் கூட்டங்கள், தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் பெருந்திரள் பிரச்சாரம் போன்ற பல்வேறு வடிவங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு உணர்வூட்டப்பட்டது. பிரச்சாரத்தின் இறுதியாக, டிசம்பர் 17 அன்று சென்னை-திருப்பெரும்புதூரில் உள்ள தொழிலாளர் துறை உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட அறிவிப்புகள் செய்யப்பட்டன.

முற்றுகைப் போராட்டம் நடத்த போலீசு தடை விதித்தது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினோம். குறிப்பிட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம்-பேரணி நடத்த அனுமதி வழங்குவதை பரிசீலிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது.

ndlf-rally-meeting-1117.12.2014 அன்று காலை 10 மணியளவில் திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் எதிரில் பு.ஜ.தொ.மு-வின் மாநிலத் தலைவர் தோழர். அ.முகுந்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ndlf-rally-meeting-17

பு.ஜதொ.மு-வின் புதுவை பகுதி தலைவர் தோழர் சரவணன், “புதுவையிலிருந்து முற்றுகைக்கு கிளம்பிய தோழர்களை தடுப்பதற்காக புதுவை மாநிலத்திலுள்ள ஆலைகளில் சில முதலாளிகள், ‘இன்று (டிச-17) கண்டிப்பாக வேலைக்கு வரவேண்டும். இல்லையென்றால் பணியிடை நீக்கம் செய்யப்படுவீர்கள். நீங்கள் வேலைக்கு காலதாமதமாக வந்தாலும் பரவாயில்லை. ஆனால் கண்டிப்பாக வர வேண்டும்’ என்று உத்தரவிட்டு, மிரட்டி தொழிலாளர்களை பணிக்கு வரச்செய்துள்ளனர். பு.ஜ.தொ.மு.வின் கூட்டத்துக்கு சென்றால் தனக்கு ஆபத்து. தொழிலாளிகள் வர்க்க உணர்வு பெறுவார்கள் என்றஞ்சி முதலாளிகள் தங்களது கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்தியதே இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி” என்று தனது கண்டன உரையை பதிவு செய்தார்.

ndlf-rally-meeting-10

தொடர்ந்து கண்டன உரையாற்றிய காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தோழர் சிவா “தொழிலாளர் நலச்சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் போதே இதுவரை எந்த முதலாளியும் தண்டிக்கப்பட்டதில்லை. இவை அனைத்தும் திருத்தப்பட்டால் ஒட்டு மொத்த தொழிலாளி வர்க்கமும் நடுவீதிக்கு தள்ளப்படும்” என்று பதியவைத்ததோடு, சிறப்பு பொருளாதார மண்டலம் என்கிற பெயரில் திருப்பபெரும்புதூர், ஒரகடம், மண்ணூர்பேட்டை சுற்றுவட்டார தொழிலாளிகளை பன்னாட்டு முதலாளிகளின் அடிமைகளாக்கி, சுரண்டி கொழுக்க அரசு சேவை செய்து வருவதை திரைகிழித்தார்.

ndlf-rally-meeting-12அன்று தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளை காத்திட தன் உயிரையும் துச்சமென மதித்து பாராளுமன்றத்தில் குண்டு வீசி தொழிலாளி வர்க்கத்தின் உரிமைக்காக போராடினார் பகத்சிங். இன்று சுதந்திர இந்தியா, ஜனநாயகம், என்றெல்லாம சொல்லப்படுகிற காலத்தில் தொழிலாளர்களின் உரிமையைப் பறித்து, முதலாளிகளின் காலை நக்கி வரும் அரசை வன்மையாகச் சாடினார்.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட செஞ்சட்டைப் பேரணி புறப்பட்டது. விண்ணதிரும் முழக்கங்களுடன் பு.ஜ.தொ.மு-வின் செயல்வீரர்கள், இணைப்புச் சங்க முண்ணனியாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு வழிநெடுகிலும் முழக்கமிட்டபடி சென்றனர். முற்றுகையிடச் சென்ற தோழர்களை தேரடி அருகில் தடுத்து நிறுத்திய போலீசு, அனைவரையும் கைது செய்தது, மாலையில் விடுவித்தது.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு அரசின் முதலாளி வர்க்க பாசத்தை திரைகிழித்துக் காட்டியதாக அமைந்த இந்த முற்றுகைப்போராட்டம் பாட்டாளி வர்க்க அமைப்பின் கீழ் அணிதிரள வேண்டிய அவசியத்தையும் உணர்த்தியுள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புதுச்சேரி மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க