privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விசிதம்பரத்தில் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு !

சிதம்பரத்தில் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு !

-

ன்பார்ந்த பேராசிரியர்களே, மாணவர்களே!

“எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்கிறது குறள்.

காட்ஸ் - புதிய கல்விக் கொள்கைஆனால், மோடி அரசு முன் வைக்கும் புதிய கல்விக் கொள்கை – 2015 சமூகத்தின் கண்களாக இருக்கும் கல்வியை நோண்டி விற்றுத் தீர்க்கப் பார்க்கிறது. இந்தியக் கல்விக் கட்டமைப்பை நிர்மூலமாக்கி, மனிதவளச் சுரண்டலுக்கு உலகளாவிய அளவில் சட்டபூர்வ வடிவம் கொடுக்கவிருக்கிறது.

1986-ல் உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை, 1990-களில் புகுத்தப்பட்ட காட் ஒப்பந்தம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் 15, 2015 அன்று நைரோபியில் நடந்த உலக வர்த்தகக் கழக மாநாட்டில் காட்ஸ் (GATS – General Agreement on Trade in Services) ஒப்பந்தத்தில் கையெழுத்திட விவாதம் நடத்தியதை மூடிமறைத்து வருகிறது மோடி அரசு. இதனைத் தொடர்ந்து புதிய கல்விக் கொள்கை – 2015 நாட்டை முற்றாக அடிமைப்படுத்தி காலனியாக்குவதற்கு ஏற்ப தயார் நிலையில் இருக்கிறது.

இதன் ஒரு பகுதியாக மத்தியில் வீற்றிருக்கும் இந்துத்துவக் கும்பல், தன் பங்கிற்கு புதிய கல்விக் கொள்கையில் கலாச்சார பாசிசத்தை கட்டவிழ்த்து விட்டு, பார்ப்பனிய மேலாண்மையை நிறுவத் துடிக்கிறது. புதிய கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள நான்கு பேர் குழுவில் மூன்று பேர் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இன்னொருவர் ஆர்.எஸ்.எஸ் இந்து வெறியரான தீனாநாத் பத்ரா. இதிலிருந்து இந்தக் கல்விக் கொள்கையின் உண்மை முகத்தை அறியலாம்.

1990-களில் புகுத்தப்பட்ட மறுகாலனியாக்கக் கொள்கை, உற்பத்தித் துறையில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்று கூவி இந்திய விவசாயத்தையும், சிறு-குறுந்தொழில்களையும் நாசமாக்கி வருகின்றது. இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டனர். பல இலட்சக்கணக்கான தொழிலாளிகள் வேலை இழந்து உதிரிகளாகினர். இன்றைக்கு மறுகாலனியாக்கத்தின் கோரப்பற்கள் உற்பத்தி துறையிலிருந்து சேவைத் துறையையும் கவ்விக் கொண்டு நாட்டின் அடிப்படை ஆதாரங்களான தண்ணீர், உணவு, நிலம், கல்வி, சுகாதாரம், பொதுப் போக்குவரத்து என அனைத்தையும் கபளீகரம் செய்யக் காத்திருக்கின்றன. இந்நிலையில் கல்வியை முற்றிலும் விற்றுத் தீர்க்கும் பண்டமாக உலகளாவிய அளவில் சட்ட பூர்வமாக முன்வைக்கும் காட்ஸ்-ன் ஒரு பகுதியாக புதிய கல்விக் கொள்கை வந்து நிற்கிறது.

nep-rsyf-meeting-posterஉழைப்புச் சந்தைக்கேற்ற (Labour Market) திறன் படைத்த மனித மூலதனத்தை (கூலிகளை) உருவாக்கும் பொருட்டு இந்தியக் கல்வி அமைப்பு இருக்க வேண்டுமென புதிய கல்விக் கொள்கை பிரகடனப்படுத்துகிறது. இதன் பொருட்டு இந்திக் கல்வி கட்டமைப்பை கட்டம் கட்டமாக அழித்தொழிக்கும் திட்டத்தை பள்ளிக் கல்வியிலும் உயர்கல்வியிலும் புகுத்தியிருக்கிறது. இதன்படி சீர்திருத்தம் எனும் பெயரில் பாடத் திட்டம் மற்றும் கற்பிக்குள் முறைகளை மாநிலங்களின் கட்டுப்பாட்டிலிருந்து பிடுங்கி மத்தியத்துவப்படுத்துவது, பல்கலைக் கழக ஆட்சி மன்றங்களைக் கலைப்பது, பல்கலைக் கழகங்களின் கீழ் செயல்படும் கல்லூரிகளைத் துண்டித்து சமுதாயக் கல்லூரிகளாக மாற்றுவது, பல்கலைக் கழக மானியக் குழுவின் கீழ் செயல்படும் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து பல்கலைக் கழக மானியக் குழுவைக் கலைப்பது, ஆராய்ச்சி நிறுவனங்களை தனியார்மயமாக்குவது என மீதமுள்ள மக்களின் கல்விக்கான கட்டமைப்புகளை அழித்தொழிக்க முடிவு செய்திருக்கிறது.

இலவசக் கல்வியை தகுதி மற்றும் பொருளாதார அடிப்படையில் தலா ஒரு சதவீதமாகச் சுருக்குவது, வெளிநாட்டு கல்வி நிறுனவனங்கள் இந்தியாவிற்குள் பட்டங்கள் வழங்குவதற்கு ஏற்ற வகையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது, கல்விசார் வலைப்பின்னல்களுக்கான உலகளாவிய முன்முயற்சி (GIAN – Global Initiative of Academic Networks), “டீச் இன் இந்தியா” (இந்தியாவில் கற்பித்தல்) போன்ற திட்டங்களின் மூலம், வெளிநாட்டு கல்வியாளர்கள், துறைசார் வல்லுநர்களை இறக்குவது, இவர்களைக் கொண்டு மாபெரும் திறந்தவெறி இணைய பாடத்த்திட்டங்கள் MOOCs (Massive Online Open Course) போன்ற இணையவழி தகவல் களஞ்சியங்களுக்கு உள்ளடக்கங்களை உருவாக்கிக் கொடுத்து உள்நாட்டு ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை ஒழிப்பது, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களின் மூலம் கல்வி நிலையங்களை இணைத்து, கல்லூரிக்குச் செல்லாமல் கல்வி கற்பிக்கும் முறையை உருவாக்குவது, கல்வித் துறையில் மாணவர்களும் ஒரு அங்கம் என்ற முறையில் அவர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் புறக்கணிக்கப்படுவது, இவைகளின் மூலம் ஒட்டுமொத்த கல்வித்துறையுமே வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள், தனியார், கார்ப்பரேட்டுகளுக்கானதாக மாற்ற முனைவது; இறுதியாக தேசியக் கல்விக் கட்டமைப்பையே தகர்த்துவிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் மூக்ஸ் (MOOCs) போன்ற இணையவழி நிறுவனங்களின் கையில் உயர்கல்வியை ஒப்படைப்பது, சர்வதேச வணிகச் சட்டங்களுக்கு ஏற்ப இந்திய கல்விக் கொள்கையை மாற்றியமைப்பது என கல்வியை முறைப்படுத்தும் அரசின் அதிகாரத்தை உலக வர்த்தகக் கழகத்தின் காலடியில் சமர்ப்பிக்கவிருக்கின்றனர்.

காட்ஸ் ஒப்பந்தத்தின்படி, இனி கல்வி குறித்து முடிவெடுக்க இந்திய நாடாளுமன்றத்திற்கு எவ்வித சட்ட உரிமையும் கிடையாது. கார்ப்பரேட் நிறுவனங்களின் அடியாளான வணிகம்சார் ஒழுங்குமுறை ஆணையங்களின் (Trade Tribunals) கட்டப் பஞ்சாயத்துகள் மட்டுமே அங்கீகரிக்கப்படும். இந்த ஒழுங்குமுறை ஆணையங்களில் தொழிலாளர்களோ, மாணவர்களோ, தன்னார்வக் குழுக்களோ, தொழிற்சங்கங்களோ தங்களது தரப்பு நியாயத்தை முறையிட முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே தங்களது தரப்புக்காக முறையிட முடியும்.

மாணவர்களுக்கான உதவித் தொகைகளை இரத்து செய்ய முனைவது, மாணவர்களை அரசியலற்ற தக்கைகளாக்கும் ‘லிங்டோ கமிட்டி’ பரிந்துரைகளை அமுல்படுத்தியது, கல்வி வளாகங்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்கும்படி கோரிய யூ.ஜி.சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் (DST – Department of Science and Technology) பேராசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவது, ஆய்வுகளுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பது, ஐ.ஐ.டி, சி.எஸ்.ஐ.ஆர் (CSIR – Council for Scientific and Industrial Research) போன்ற அரசுக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை நிதித் தன்னாட்சி நிறுவனங்களாக மாற்றுவது, உயர்கல்வியைக் கட்டுப்படுத்தும் முக்கிய பொறுப்புகளில் ஆர்.எஸ்.எஸ் கைக்கூலிகளை நியமித்தது என அரசு இதுவரை செய்து கொண்டிருப்பவை எல்லாம் வரவிருக்கும் பேரழிவில் சிறுதுளி மட்டுமே.

மனிதர்களை ‘மனித மூலதனமாகவும்’ அறிவை ‘அறிவுச் சந்தையாகவும்’ பார்க்கும் காட்ஸ் ஒப்பந்தம், ஏகாதிபத்தியம் மற்றும் கார்ப்பரேட்டுகளின் நலன்களை முன்னிறுத்துகிறது. மேலும், உழைக்கும் மக்களின் உரிமையைப் பறித்து அவர்களை கார்ப்பரேட் நிறுவனங்களின் கொத்தடிமைகளாக்கும் மறுகாலனியாக்கச் சதியின் ஒரு அங்கமாகவே புதிய கல்விக் கொள்கை எனும் சிலந்திவலை நம்மைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ளது. உலக வர்த்தகக் கழகத்தையும், காட்ஸ் ஒப்பந்தத்தையும் மேலிருந்து ஆட்டுவிக்கும் அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் கைப்பாவையாக இருந்து அதனை பிரச்சனையின்றி முடித்து வைக்க இந்துத்துவ கும்பல் வேலை செய்கிறது. இதன்மூலம் நமது நாட்டின் பெயரளவு இறையாண்மைக்கு சாவுமணி அடிக்கத் துடிக்கின்றது.

இது மட்டுமின்றி திறமையை வளர்ப்பது என்ற பெயரில் 8-ம் வகுப்பு முதல் பள்ளிகளில் சிறுவர்களை முதலில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கும் பின்னர் சர்வதேச உழைப்புச் சந்தைக்கும் மலிவான உற்பத்தி சக்திகளாக்கும் சதியை அரங்கேற்றவுள்ளனர். அதிகாரத்தில் உள்ள பார்ப்பனக் கும்பலோ இதனைப் பயன்படுத்தி குலக்கல்வி முறையை உயிர்ப்பிக்கத் துடிக்கிறது. இதற்காக 14 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோரின் பாரம்பரியத் தொழிலைச் செய்யலாம் என குழந்தைத் தொழிலாளர் சட்டத்தைத் திருத்தியுள்ளது.

குலக்கல்வி முறையை உயிர்ப்பித்து சாதிய ஏற்றத் தாழ்வை நிலைத்திருக்கச் செய்வது மட்டுமின்றி, மாநிலங்களின் அதிகாரத்தைப் பிடுங்குவது, இடஒதுக்கீட்டை ஒழிப்பது, மாணவிகளை பாதுகாக்கிறோம் என்கிற பெயரில் வீட்டிலிருந்து கல்வி கற்கும் முறையைக் கொண்டுவந்து அவர்களை வீட்டுக்குள் பூட்டிவைக்கும் ஆணாதிக்க பார்ப்பனிய அடக்குமுறையை ஏவுவது, செத்துப் போன சமஸ்கிருத மொழியை நாடு முழுவதும் பரப்பவும், பார்ப்பனியக் கலாச்சாரத்தை இந்தியக் கலாச்சாரமாக நிலைநிறுத்தவும் இந்தியவியல் (Indology) ஆய்வுகள் மற்றும் இலந்த மொழிகளுக்கான துறையை (Department of Dead Languages) உருவாக்குவது உள்ளிட்ட இந்துத்துவக் கொள்கைகளை நிறைவேற்றும் விதமாகப் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளனர்.

nep-rsyf-meeting-banner

  • ஏகாதிபத்திய நலனையும், பார்ப்பனிய மேலாதிக்க நலனையும் பிரதிபலிக்கும் புதிய கல்விக் கொள்கை 2015-ஐ வீழ்த்தி, மக்களின் நலனுக்கான உண்மையான தேசப் பற்றாளர்களை உருவாக்கும் சுயசார்புள்ள புதிய கல்விக் கொள்கையைப் படைக்க அணி திரள்வோம்!
  • காட்ஸ் ஒப்பந்ததைக் கிழித்தெறிவோம்! நாடு மறுகாலனியாவதை முறியடிப்போம்!

புதிய கல்விக் கொள்கை 2015

பல்கலைக் கழகங்கள் இறக்குமதி! மாணவர்கள் ஏற்றுமதி!
மறுகாலனியாக்கத்திற்கான சுருக்குக் கண்ணி!

இந்துத்துவத்தின் கள்ளக் குழந்தை

அரங்கு கூட்டம்

8-1-2016 வெள்ளி, மாலை 3 மணி
காவேரி திருமண மண்டபம் (இரயில் நிலையம் அருகில்), சிதம்பரம்

தலைமை
தோழர் கதிர்வேல், செயலர்
பு.மா.இ.மு, விருத்தாசலம் வட்டம்

சிறப்புரை
திரு.க.ரமேஷ், APSC
(அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம்), ஐ.ஐ.டி, சென்னை

முனைவர் ப. கலைச்செல்வன், உதவி பேராசிரியர்,
வரலாற்றுத்துறை, அண்ணாமலை பல்கலைக் கழகம், சிதம்பரம்.

தகவல்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருத்தாசலம், கடலூர் மாவட்டம்
தொடர்புக்கு 96006 32017

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க