Tuesday, May 18, 2021
முகப்பு போலி ஜனநாயகம் இராணுவம் இந்தோ சீன எல்லைப் பதற்றம் : வெத்து வேட்டாக சத்தமிடும் பாஜக

இந்தோ சீன எல்லைப் பதற்றம் : வெத்து வேட்டாக சத்தமிடும் பாஜக

-

“இந்திய இராணுவத்திற்கு ஒரே நேரத்தில் இரண்டரைப் போர் முனைகளில் சண்டையிடும் வலிமை உண்டு” என்கிறார் ராணுவ தளபதி பிபின் ராவட். சீனாவுடனான போரும், பாகிஸ்தானுடனான போரும் மேலே குறிப்பிடப்பட்ட “இரண்டரை” முனைகளில் அடங்கும்; மீதமுள்ள அரை முனை என்பது உள்நாட்டு சவால்கள். சீனாவுடனான எல்லைத் தகராறுகள் ஒருபுறமும், பாகிஸ்தான் தீவிரவாதிகளுடனான சச்சரவுகள் இன்னொருபுறமுமாக தேசபக்தர்கள் கடந்த சில மாதங்களாகவே மயிர்க்கூச்செறியும் உணர்ச்சிகளில் திண்டாடி வருகின்றனர்.

இந்தோ சீன எல்லை (மாதிரிப்படம்)

இந்நிலையில், மத்திய கணக்குத் தணிகைத் துறை பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ள அறிக்கை ஒன்று தேசபக்தர்களின் இன்பக் கனவுகளின் மேல் கோமாதாக் கழிவைக் கரைத்து ஊற்றியுள்ளது. இந்திய இராணுவத்திற்கான ஆயுதக் கொள்முதல் மற்றும் உற்பத்தி தொடர்பான மேற்படி அறிக்கையில் ஏராளமான ஊழல்களைப் பட்டியலிட்டப்பட்டுள்ளதோடு, போர்ச்சூழலில் தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் கையிருப்பில் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

அரசால் நடத்தப்படும் ஆயுத தொழிற்சாலைகள் குழுமத்தால் உற்பத்தி செய்யப்படும் சுமார் 152 வெடி பொருட்களில் 40 சதவீதம் பத்து நாட்களுக்கே போதுமானது என்று தெரிய வந்துள்ளது. மேலும் சுமார் 55 சதவீத வெடிபொருட்களைக் கொண்டு சுமார் 20 நாள் போரை மட்டுமே சமாளிக்க முடியும் என்கிறது மத்திய தணிகைத் துறையின் அறிக்கை. மேலும் ஆயுத தொழிற்சாலைக் குழுமத்தின் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் வெடி பொருட்களின் தரமும் படு மோசமாக உள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும் பீரங்கி போன்ற ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளுக்கான மின்காப்ப இழை (Fuze) 17 சதவீத அளவுக்கே கையிருப்பில் உள்ளதாக அறிக்கை தெரிவிக்கின்றது. எனவே கையிருப்பில் இருக்கும் பீரங்கி குண்டுகளில் 83 சதவீதம் பயன்படுத்த முடியாத அளவிலேயே உள்ளன. கையிருப்பில் உள்ள 152 வகையான வெடி பொருட்களில் முப்பத்தோரு வகையான வெடி பொருட்களே 40 நாள் வரையிலான போரைச் சமாளிக்கும் அளவில் உள்ளதாக மேற்படி அறிக்கை குறிப்பிடுகின்றது.

காட்சிப் பொருளாக ராணுவ பீரங்கிகள்

மேலும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (DRDO) சார்பாக சுமார் 49.50 கோடி செலவில் வான்வழி கண்காணிப்புக்காக தீட்டப்பட்ட திட்டமே கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்திற்காக சுமார் 6.20 கோடி செலவில் வாங்கப்பட்ட பலூன்களும் பயனற்ற நிலையில் உள்ளதாக அறிக்கை தெரிவிக்கின்றது. இது தவிர சென்னை ஆவடி டாங்கு தொழிற்சாலையில் ஆயுத தயாரிப்புகளுக்காக மேற்கொள்ளப்பட்ட உதிரிபாக கொள்முதல் துவங்கி இராணுவத்தின் வெவ்வேறு மட்டங்களில் ஆயுத கொள்முதலில் நடந்துள்ள முறைகேடுகளையும் தணிகை துறையின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

கணக்குத் தணிகை அதிகாரியின் அறிக்கை குறித்து இன்று 25.07.2017 பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அருண் ஜேய்ட்லி, மேற்படி அறிக்கை முந்தைய காலகட்டத்திற்கானது என்றும், தற்போது ஆயுத மற்றும் வெடிமருந்து கொள்வனவு குறித்த நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள எதிர்கட்சிகள், ஆயுதக் கொள்வனவு குறித்த நடைமுறைச் சிக்கல்கள் கடந்த மூன்றாண்டுகளாக சரி செய்யப்படவில்லை என்றும், தற்போது சீர் செய்யப்பட்டுள்ள நிலையிலும் ஐஸ்க்ரீம் வாங்குவது போல் ஆயுதங்களை உடனடியாக வாங்கி அடுக்கி விடமுடியாது என்றும் தெரிவித்தனர். எப்படிப் பார்த்தாலும், தற்போதைய நிலையில் போதுமான ஆயுதங்கள் கையிருப்பில் இல்லை என்றே தெரிய வருகின்றது.

இந்நிலையில் பூட்டானுக்கு உதவி செய்வதான முகாந்திரத்தில் சீனாவுடனான எல்லைத் தகராறைத் துவங்கியுள்ளது மோடி அரசு. சீன அரசு தரப்பில் ஒன்று இந்தியா பின்வாங்க வேண்டும் – அல்லது, நாங்கள் இந்திய இராணுவ வீரர்களை உயிருடனோ பிணமாகவே பிடிப்போம் எனத் தெரிவித்துள்ளனர். மோடியின் உற்ற தோழனான அமெரிக்காவோ, இந்தியாவும் சீனாவும் விசயத்தைப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என கைகழுவியுள்ளது.

இந்திய – சீன எல்லையில் நிலவும் பதற்ற நிலை போரை நோக்கிச் செல்வது இந்தியாவுக்குப் பேராபத்தை ஏற்படுத்தும் என்பது சர்வநிச்சயமாக உறுதியாகியுள்ள நிலையில், இதைக் கொண்டு அரசியல் ரீதியிலான பலன்களை அறுவடை செய்ய நினைக்கிறது பாரதிய ஜனதா. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பீற்றிக் கொண்ட ”வளர்ச்சி” கானல் நீராகிப் போன நிலையில், இந்தியர்களிடையே போர் பீதியையும் தேச பக்த உணர்வையும் ஒரே நேரத்தில் தூண்டி அதைக் கொண்டே எதிர் வரும் தேர்தலைச் சந்திக்க இந்துத்துவ கும்பல் திட்டமிட்டுள்ளது தெளிவாகத் தெரிகின்றது.

தனது அரசியல் சுயலாபத்துக்காக மொத்த நாட்டையும் ஆபத்தான நிலையில் தள்ளிவிட்டுள்ள இந்துத்துவ கும்பல், போர் குறித்த குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் கருத்து தெரிவித்து வருகின்றது. “கைலாஷ், ஹிமாலயா, அவ்ர் திபெத் சீன் கி அசூரி ஷக்தி சே முக்த் ஹோ” (இதற்கு, கைலாயத்தையும், ஹிமாலயத்தையும் திபெத்தையும் சீன அரக்கனிடம் இருந்து விடுபடட்டும் என்று பொருள்) என்கிற மந்திரத்தை இந்தியர்கள் தினமும் ஐந்து முறை உச்சரிக்க வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்த்ரேஷ் குமார்.

இதோடு சேர்த்து இந்தியர்கள் சீனத் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம் செய்து வருகின்றது. இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்புகள் அனைத்தையும் திட்டமிட்டு ஒழித்துக் கட்டியதே இந்த கும்பல் தான். கடந்த தேர்தலுக்கு முன் பிரச்சாரத்தின் போது தனது தொண்டர்களுக்கு மோடியின் மூஞ்சி வடிவிலான முகமூடிகளை கோடிக்கணக்கில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்தது பாரதிய ஜனதா.

குஜராத்தில் மோடியின் கனவாக உருவாகி வரும் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்குத் தேவையான் இரும்பைக் கூட சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளனர். இத்தனைக்கும் சீனப் பொருட்களைத் தடை செய்யும் அதிகாரமும் பாரதிய ஜனதாவிடமே உள்ளது. பாரதிய ஜனதாவுக்கு மோடியின் முகமூடிகளையும் சர்தார் பட்டேலின் சிலைக்கு இரும்பையும் விற்ற லாபத்தில் எத்தனை சதவீதம் சீன இராணுவத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்கிற விவரம் நமக்குத் தெரியாது.

ஆனால், மொத்த நாட்டையும் மாபெரும் போர் அபாயத்தில் தள்ளி விட்டுள்ள இந்துத்துவ கும்பலை விரட்டியடிக்காத வரை மக்களுக்கு எந்த நிம்மதியும் இல்லை என்பது மட்டும் நிச்சயமாகத் தெரியும்.

செய்தி ஆதாரம் :

_______________________

இந்த செய்தி உங்களுக்கு பயணளிக்கும் வகையில் உள்ளதா!

உழைக்கும் மக்களின் இணையக் குரலான வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

 1. இந்தியாவிடம் போதுமான வெடிமருந்து இல்லாமல் இருக்கும் பின்னணி இன்று தான் அடியேனுக்கு தெரிந்தது. இந்தியாவிடம் போதிய வெடிமருந்து இல்லை என்பதை ஊடகங்கள் வழியாக சீன மற்றும் பாகிஸ்தான் அரக்கர்களுக்கு தெரிய வைக்கவே மோடி இவ்வளவு பாடுபட்டார்.

  இந்தியாவிடம் வெடி மருந்து இல்லை என்பதை அறிந்ததும் இந்தியாவை கைப்பற்ற சீனாவும் பாகிஸ்தானும் தாக்குதல் நடத்துவார்கள்.

  இந்தியாவில் இருக்கும் வினவு போன்ற ஆண்டி நேசனல்ஸ் உற்சாகத்தில் என்ன செய்வது என்று தலைகால் புரியாமல் ஆடுவார்கள்.

  ஆம். வெடிமருந்து பற்றகுரைக்கு பின்னணியில் ஏதேனும் காரணம் இருக்ககூடும் என்று மணிகண்டன் போன்ற தேஷபக்தால்ஸ் கூறுவது உண்மைதான்.

  அமெரிக்கா, இரசியா, இசுரேல், சீனா என்று எந்த நாட்டிடமும் இல்லாத காளி என்ற ஒரு பிரமாஸ்திரம் இந்தியாவிடம் உள்ளது. அது எப்பேர்பட்ட ஏவுகணைகள் அணு விமானங்கள் இந்தியாவில் நுழைந்தாலும் தாகி அளித்து விடும் வல்லமை கொண்டது.

  இந்த உண்மையை கூட தெரியாமல் இந்தியாவிடம் அது இல்லை இது இல்லை என்று பிணத்துவதால் என்ன பயன். இது தெரிந்து இருப்பதால் தான் மணிகண்டன் சீனைவை வா வா என்று அழைக்கிறார். உண்மையில் அன்னாரை நினைத்து எனக்கு பிரமிப்பாக இருக்கிறது.

  http://indiatoday.intoday.in/education/story/indias-top-secret-weapon/1/479199.html

 2. என்னை மன்னியுங்கள் மணிகண்டன்….. மோடி மீது வைத்து இருந்த சிறு நம்பிக்கையையும் அவர் தகர்த்துக்கொண்டார்… நேரு அளவுக்கு முட்டாள் தனமாக உங்கள் மோடி ஆயதங்கள் இல்லாமல் சீனாவுடன் போர் தொடுக்க மாட்டார் என்று நம்பியிருந்தேன்… அந்த நம்பிக்கையை உங்களின் பிஜேபி அரசு கொஞ்சம் கொஞ்சமாக தகர்த்துக்கொண்டு உள்ளது…

  //இந்நிலையில் பூட்டானுக்கு உதவி செய்வதான முகாந்திரத்தில் சீனாவுடனான எல்லைத் தகராறைத் துவங்கியுள்ளது மோடி அரசு. சீன அரசு தரப்பில் ஒன்று இந்தியா பின்வாங்க வேண்டும் – அல்லது, நாங்கள் இந்திய இராணுவ வீரர்களை உயிருடனோ பிணமாகவே பிடிப்போம் எனத் தெரிவித்துள்ளனர். மோடியின் உற்ற தோழனான அமெரிக்காவோ, இந்தியாவும் சீனாவும் விசயத்தைப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என கைகழுவியுள்ளது//

 3. என்ன மணிகண்டன் இது…..? வெக்கமா இல்லையா உங்களுக்கு? “கடந்த தேர்தலுக்கு முன் பிரச்சாரத்தின் போது தனது தொண்டர்களுக்கு மோடியின் மூஞ்சி வடிவிலான முகமூடிகளை கோடிக்கணக்கில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்தது பாரதிய ஜனதா”

 4. பதில் இருக்கா பிஜேபி தேச துரோகிகளே? மணிகண்டன் உங்களையும் சேர்த்து தான் கேட்கினேன்…

  ###குஜராத்தில் மோடியின் கனவாக உருவாகி வரும் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்குத் தேவையான் இரும்பைக் கூட சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளனர். இத்தனைக்கும் சீனப் பொருட்களைத் தடை செய்யும் அதிகாரமும் பாரதிய ஜனதாவிடமே உள்ளது. பாரதிய ஜனதாவுக்கு மோடியின் முகமூடிகளையும் சர்தார் பட்டேலின் சிலைக்கு இரும்பையும் விற்ற லாபத்தில் எத்தனை சதவீதம் சீன இராணுவத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது?

 5. ஒரு கேள்வி அது எப்படி உங்களை போன்ற ஆட்களால் சீனாவின் அய்யோக்கியத்தனங்களை எல்லாம் மூடி மறைத்து விட்டு அனைத்து தவறுகளுக்கும் இந்தியா தான் காரணம் என்று கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் சொல்ல முடிகிறது ?

  பூட்டான் இந்தியாவின் பாதுகாப்பில் இருக்கும் நாடு, திபெத்தை கைப்பற்றிய பிறகு பூட்டான் சிக்கிம் போன்ற பகுதிகளையும் கைப்பற்றினால் தான் திபெத் ஆக்கிரமிப்பு முழுமையடையும். பூட்டானை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே அந்த பகுதியில் சாலை அமைக்கிறோம் என்று பொய் சொல்லி உள்ளே வருகிறார்கள்.

  நீங்கள் எல்லாம் சீனா சார்பாக பேசுவதால் சீனாவின் ஆக்கிரமிப்பு செயல்கள் எந்தளவுக்கு சரி என்று சொல்வதற்கு கடமைப்பட்டவர்கள்.

   • முதலில் உங்கள் சீனாவின் அய்யோக்கியத்தனங்களுக்கு பதில் சொல்லுங்கள்

  • பூட்டானின் பாதுகாப்புக்கு இந்தியா தான் பொறுப்பு என்றால் உண்மையில் என்ன செய்து இருக்க வேணும் இந்திய அரசு…பார்க்கலாமா?

   ஒன்று சீனாவுடன் பூட்டான் சார்பாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்…

   அல்லது சீனாவுடன் பூட்டான் சார்பாக போர் தொடுக்க வேண்டும்….

   இரண்டில் ஒன்றை கூட செய்ய இயலாத நிலையில் தானே பிஜேபி அரசு நடைமுறையில் இருந்து கொண்டு உள்ளது! ஆயுதங்கள் ஏதும் இன்றி மந்திரம் ஊத சொல்லும் மகா முட்டாள்களின் அரசாக தானே இருக்கு உங்க மோடியின் பிஜேபி அரசு…. மேலும் CAG அறிக்கையை பற்றி பேசவே முடியாத கோமா நிலையில் தானே இருக்கீங்க நீங்க மணிகண்டன்!

 6. அது எப்படி உங்களை போன்ற ஆட்களால் கொஞ்சம் கூட இந்தியாவிற்காக பேசுவதற்கே முடிவது இல்லை. கார்கில் போரின் போது கூட பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பை மூடி மறைத்து விட்டு என்னமோ பிஜேபி அரசு தான் திட்டமிட்டு போரை துவக்கியது போல் பொய்களை பரப்பினார்கள், அதேபோல் மும்பை தாக்குதலின் போது அஜ்மல் கசாபை உயிரை கொடுத்து பிடித்த காவலரின் தியாகத்தை கொச்சைப்படுத்தி அஜ்மல் கசாப் நேபாளில் இருந்து வந்த அப்பாவி என்று பொய் கதைகளை பரப்புகிறீர்கள்.

  சீனா தொடர்ச்சியாக எல்லை தாண்டி வந்து இந்தியா பகுதிகளை ஆக்கிரமிக்க பார்ப்பது பற்றி ஒரு வார்த்தை கூட உங்களை போன்ற அயோக்கியர்கள் இன்று வரையில் பேசியதே இல்லை. எப்போது எல்லாம் சீனா அதிபர் இந்தியா வருகிறோ அப்போது எல்லாம் சீனா ராணுவம் இந்தியாவில் ஆக்கிரமிப்பு செயலில் ஈடுபடுவதை வழக்கமாகி வைத்து இருக்கிறது. சீனாவின் இந்த அய்யோக்கியத்தனங்களை பற்றி எல்லாம் ஒரு வார்த்தை கூட பேசாத நீங்கள் இந்தியாவை குறை சொல்வதற்கு உங்களை போன்ற ஆய்யோக்கியர்களுக்கு என்ன தார்மிக தகுதி உள்ளது.

  இந்தியாவின் நியாயங்களை பார்க்காத குருட்டு கம்யூனிஸ்ட் அயோக்கியர்கள் உங்களை எல்லாம் சொல்ல வேண்டும்.

  • என்ன ஹேருக்கு சீனாவோட பொருளாதார மற்றும் தூதரக உறவு வெச்சு இருக்கீங்க. அத்துட்டு விட வேண்டியது தானே?

   ஏற்கனவே செந்தில் கேட்டது தான். சும்மா பினாத்திகிட்டு இருக்காம பாகிஸ்தான் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீட்க வேண்டியது தானே?

   எங்கள ஏன் எதிர்கவில்லை என்று கேட்டுவிட்டு சந்துல சீனாவோட டூயட் பாடிட்டு இருக்கீங்களே கொய்யால….

   • என்ன ஹேருக்கு உங்கள் சீனா பாக்கிஸ்தான் எங்கள் நாட்டோடு தூதரக உறவை வைத்து இருக்கிறது ? அத்து விட வேண்டியது தானே ?

    • அப்போ உங்களுக்கு சூடு சொறன வெக்கம் மானம் மருவாதி எல்லாம் கிடையாதுங்குறீங்க…..சீனாக்காரனுக்காவது இருக்கானு பாப்போம் ங்கிறீங்க…. அப்படிதானே….

     உங்க வாதம் படியே பாத்தா கூட….சீனக்காரன் நமக்கு ஏற்றுமதி பண்றத நிறுத்தனும்…..நீங்க மோடிக்கு முகமூடியையும் படேலுக்கு சிலையையும் அவன வெச்சு செய்வீங்க…..

     ஹஹஹா…..எப்பவே தெரிஞ்சுது தான். ஆனா இந்த அளவுக்கு மரகலண்ட கேசுங்குறத லேட்டா தான் தெரிஞ்சிகிட்டேன்….ஆமா எப்படியா எல்லாம் ஒரே மாதிரி இருக்கீங்க…..

  • மணிகண்டன் இப்படி அறிவில்லாமல் பேசிகிட்டு இருக்காரே! சீனா போன்ற எதிரி நாடு யுத்தத்துக்கு தயார் என்றால் இந்தியா என்ன செய்து இருக்கனும்? ஆயுதங்களை தயார் நிலையில் தானே வைத்து இருக்கனும்? அதுக்கு தானே உங்க பிஜேபி அரசை மக்கள் ஆட்சியில் ஏத்தி வைத்து இருக்காங்க…. நாட்டின் பாதுகாப்புக்கு தயார் செய்யாமல் ஊர் சுத்திகிட்டு இருந்தால் எப்படி மணிகண்டன்? சாரி மோடி அவர்களே?

   அடுத்து இந்திய -சீன பிரச்சனையை நம்ம அரசே இந்திய -சீன எல்லை பிரச்சனை என்று கூறிக்கொண்டு தான் இருக்கு… அந்த எல்லை பிரச்சனையை எப்படி தீர்க்க போறாரு மோதிய அவர்கள்? அடி பணிந்து போய் சீனாவுக்கு பொருளாதார பலன்களை இறக்குமதி என்ற பெயரில் கொடுத்தா? வல்லமாய் பட்டேல் சிலைசெய்ய சீனா காரனுக்கு ஆர்டர் கொடுத்தா? இல்ல அடுத்த தேர்தலிலும் மோடியின் முகமூடி செய்ய கோடிகணக்கான ஆர்டர்களை கொடுத்தா?

 7. விட்டால் 1962 போரில் செய்தது போல் உங்களை போன்ற அயோக்கியர்கள் சீனாவோடு சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக போர் செய்தாலும் செய்விர்கள்.

  உங்கள் போன்றவர்கள் முகத்தில் காரி துப்பினால் கூட உங்களுக்கு எல்லாம் சூடு சுரணை வராது.

  போங்கடா நீங்களும் உங்கள் புரட்சி போராட்டங்களும். தூ

  • உங்கள என்னமோ நெனெச்சேன்…இப்படி பொசுக்குனு கொவப்பட்டுடீங்களே….

   • கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் இந்தியாவிற்கு எதிராக செயல்படும் உங்களை போன்ற கம்யூனிஸ்ட் அயோக்கியர்கள் வெட்கப்பட வேண்டும். நான் பிஜேபியை ஆதரிப்பதற்கு உங்களை போன்றவர்களின் இந்தியா விரோத செயல்களும் ஒரு காரணம்.

    • அப்போ பிஜேபியை ஆதரிக்கரவங்களுக்கு சொந்த புத்தி இல்லைன்னு சொல்லுங்க….
     மல்லாக்க படுத்துகிட்டு துப்பாதீங்க பாஸ்.

     • திரு செல்வம்,

      சீனாவின் உதிரி பொருட்களால் சீனாவில் தயாரான ஐபோனை வைத்து இருக்கும் மணிகண்டனுக்கு வந்துள்ள கோபத்தை போலி தேச பக்தியை போன்றே போலியான கோபமாக தான் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்….அவர் வைத்து உள்ள ஐபோனின் தயாரிப்பு மற்றும் உதிரி பாகங்கள் சீனாவை சேர்ந்தது என்று நாம் அவருக்கு நிருபித்து பத்து நாட்கள் மேல் ஆகியும் இன்னும் அவர் சீனாவின் ஐபோனை தான் வைத்துகொண்டு உள்ளார் என்னும் போதே நீங்கள் எப்படி அவரின் கோபத்தை உண்மை என்று நம்புகின்றீர்கள் செல்வம்? ஆமாம் இவர் மட்டுமா அந்த ஐபோனை வைத்து உள்ளார் இல்லையே! மோடியும் கூட தான் அதே சீனாவில் தயாரிக்கபட்ட ஐபோனை வைத்து இருகாரு… அதுக்காக….! அதனால…. அதே அதே தான் காரணம்… தங்கள் சொந்த தேவைக்கு இனிமையான சுகமான டிஜிட்டல் அனுபவம் தேவை படுத்து இவர்களுக்கு…. அதே நேரத்தில் சீனாவுக்கு எதிரா போலியா தேச பக்தியையும் பேசித்தானே ஆகணும்…பிழைப்பு நடத்த…!

  • 1962 ல் இந்தியாவுக்கு எதிராக போரை சீனாவுடன் அறிவித்து தொடங்கியது முட்டாள் தனமாக ஆயுதங்கள் இல்லாமல் தொடங்கியது நேரு தானே தவிர கம்யுனிஸ்டுகள் அல்ல… இதனை பற்றி உங்களுக்கு ஆதாரங்களுடன் விளக்கியும் வெளங்காத மாதிரியே நடித்தால் எப்படி மணிகண்டன்? வேண்டுமானால் பழைய விவாதத்தை பாருங்க!

   அன்று 1960 களின் தொடக்கத்தில் இருந்தே அருணாசலபிரதேச எல்லையில் கண்ணா பூச்சி ஆட்டம் ஆடிகொண்டு தான் இருந்தார்கள்…இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் போஸ்டிங் அடிப்பதும் ,சீன எல்லைக்குள் இந்தியா புகுந்து போஸ்டிங் அடிப்பதுமாக தான் இருந்தார்கள். இதனை ராணுவ தந்திர(defense startergy) நிலையில் ஜிக் ஜாக் (zik jack) நிலை என்போம்…. உங்களுக்கு புரியும் படி கூறினால் எல்லையின் அருகருகே இந்திய ராணுவம் சின எல்லைக்குள்….சின ராணுவம் இந்திய எல்லைக்குள்… இந்த நிலையில் தான் நேரு யுத்த தளவாடங்கள் ஏதும் இன்றி வீரப்புக்காக சீனாவுடன் போரை அறிவித்தார். இத்தகைய சிக்கலான நிலையில் உங்கள் மோடி கூட யுத்தத்தை தொடங்க மாட்டார் என்றே நம்புகின்றேன்.. ஆனால் ஊஞ்சல் ஆடுவார் மோடி சீன தலைமையுடன்…. அதை தானே மோடி அவரின் குஜராத்தில் செய்தார்!உலக அளவில் யுத்தத்துக்கான ஜெர்னல்கள் பல வந்து கொண்டு உள்ளன… விலைகொடுத்து வாங்கி படித்து இந்த விசயத்தில் தெளிவு அடைவீர்களா மணிகண்டன்….

   அடுத்து நீங்களே உங்க மூ ஞ்சில் காரிதுப்பிகவேண்டியதற்கான காரணங்களை கீழ் கொடுக்கின்றேன்…

   1.சீனாவுடனான வர்த்தகத்தில் இந்தியா 50 பில்லியன் டாலர் அளவுக்கு பற்றாகுறையை ஏற்படுத்தி உள்ள மோடியின் போலி தேசபக்திக்காக…

   2. மோடி அவர்கள் குஜராத்துக்கு சீன தலைவரை அழைத்து அவருடன் ஊஞ்சல் ஆடியமைக்க்கா…

   3. ஆப்பிள் ஐ போனில் சீனத்து உதிரிபாகங்கள் பெருமளவில் இருந்து உள்ள போதும் அதனை தூக்கி எறியாமைக்காக…..

   இன்னும் சொல்லிகொண்டே போகலாம் உங்கள் முகத்தில் காரி உமிழ….

   • சரி உங்கள் வார்த்தைபடியே நேரு முன்னேற்பாடு இல்லாமல் இருந்தார் என்றே வைத்துக்கொள்வோம், உங்களை போன்ற இந்திய கம்யூனிஸ்ட்கள் ஏன் சீனாவோடு சேர்ந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டது ஏன் ? இந்திய துருப்புகளின் நிலை பற்றி சீனாவிற்கு எதற்கு காட்டி கொடுத்திர்கள் ?

    சீனா லடாக் பகுதியை ஆக்கிரமிப்பு செய்ய உங்களை போன்ற கம்யூனிஸ்ட்கள் துணை நின்றிர்கள் என்பது என் குற்றசாட்டு, இதற்கான பதில் என்ன ?

    1952 இந்திய தோல்விக்கு உங்களை போன்ற மனசாட்சி நேர்மையற்ற கம்யூனிஸ்ட்களும் ஒரு என்று குற்றம் சாட்டுகிறேன்.

    இந்தியாவின் உப்பை தின்று கொண்டு சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்ட(செயல்படும்) உங்களை போன்ற கம்யூனிஸ்ட்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருக்கிறதா ?

    என் கேள்விகளுக்கு திசை திருப்பல்கள் இல்லாமல் உங்கள் எல்லோரிடமும் பதிலை எதிர் பார்க்கிறேன்

    • குற்றசாட்டுகள் ஒருவேளை உண்மை என்றால் இந்திய கம்யுனிஸ்டு கட்சி அல்லது மார்சிஸ்டு கம்யுனிஸ்டு கட்சி அரசால் தடை செய்யபட்டு இருக்கும் மணிகண்டன்! உங்களின் குற்றசாட்டுக்கு ஆதாரம் கொடுங்கள்…!

     • இந்திய கம்யூனிஸ்ட்களின் துரோக வரலாறு பற்றிய அடிப்படை கூட தெரியாமல் பேசுகிறீர் (தெரிந்தாலும் தெரியாத மாதிரி நடிப்பீர்கள்)… 1962 – 63 ல் இந்திய அரசு கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்வது பற்றி கேபினட் கமிட்டியில் விவாதம் நடத்தினார்கள். அதன் பிறகு நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டார்கள்.

      இணையதளங்களில் கம்யூனிஸ்ட்களின் துரோகம் பற்றி ஏராளமான ஆதாரங்கள் உள்ளத்து

      http://archive.indianexpress.com/news/during-china-war-comrades-cracked-down-on-vs-for-saying-let-s-give-blood-to-jawans/488983/
      http://www.sify.com/news/how-the-communists-betrayed-india-to-china-news-columns-okkq3Ucfbcefb.html
      http://defenceforumindia.com/forum/threads/role-of-indian-communists-and-1962-war.7142/

      இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியை படியுங்கள் அந்த நேரத்தில் நடந்ததை போட்டு இருக்கிறார்கள். VS அச்சுதானந்தன் இந்திய ராணுவம் எல்லையில் போரிட்டு கொண்டு இருக்க, நாம் ராணுவ வீரர்களுக்கு ரத்த தானம் செய்ய வேண்டும் என்று சொன்னார் (இதன் மூலம் கம்யூனிஸ்ட்கள் ஏற்பட்டு இருந்த கெட்ட பெயர் நீங்கும் என்று நினைத்தார்) அவர் இவ்வாறு சொன்னதற்காக கட்சியை விட்டு உடனே நீக்கினார்கள். இந்திய கம்யூனிஸ்ட்களின் சீனா ஆதரவு நிலைப்பாட்டிற்கு எதிரானது என்பதால் நீக்கப்பட்டார்.

      இது ஒரு பக்கம் என்றால் போரின் போது கம்யூனிஸ்ட்கள் சீனாவோடு நேரடி ரேடியோ தொடர்பில் இருந்தார்கள், இந்திய ராணுவத்தின் நிலைகளை பற்றி சீனாவிற்கு தகவல்கள் கொடுத்து கொண்டு இருந்தார்கள்.

      கம்யூனிஸ்ட்கள் இந்தியாவிற்கு செய்த துரோகங்கள் ஒன்றா இரண்டா :(( இந்த துரோகங்களும் உங்களை போன்ற கம்யூனிஸ்ட்கள் பதில் சொல்ல வேண்டும்.

      • மீண்டும் வதந்தியை கிளப்பிக்கொண்டு உள்ளீர்கள் மணிகண்டன்… மீண்டும் சொல்கின்றேன் குற்றசாட்டுகள் உண்மை என்றால் கம்யுனிஸ்டு கட்சி கண்டிப்பாக இந்திய அரசால் தடை செய்யபட்டு இருக்கவேண்டுமே? அப்படி எல்லாம் நடைபெறாமல் இருக்க இங்கே என்ன புது கதையை கட்டிகொண்டு உள்ளீர்கள்…! உண்மையில் நடந்தது என்னவென்றால்…

       During the war with China, a faction of the Indian Communists (CPI )backed the position of the Indian government, while other sections of the party claimed that it was a conflict between a socialist and a capitalist state. The basis of difference in opinion between the two factions in CPI was ideological – about the assessment of Indian scenario and the development of a party programme. This difference in opinion was also a reflection of a similar difference at international level on ideology between the Soviet and Chinese parties. The alleged ‘right wing’ inside the party followed the Soviet path and put forward the idea of joining hands with the then ruling party – Indian National Congress. Whereas the faction of CPI which later became CPI(M) referred to this as a revisionist approach of class collaboration. It was this ideological difference which later intensified, coupled with the Soviet-Chinese split at the international level and ultimately gave birth to CPI(M).

       Hundreds of CPI leaders, accused of being pro-Chinese, were imprisoned. Thousands of Communists were detained without trial. Those targeted by the state accused the pro-Soviet leadership of the CPI of conspiring with the Congress government to ensure their own hegemony over the control of the party.

       எங்கே இதில் தேச துரோகம் என்று நீர் தான் விளக்கனும் இனி…!

    • மணிகண்டன்,

     எம் விவசாயிகள் ,தொழிலாளர்கள் உழைப்பை GSTபெயரில் பிடிங்கி தின்னும் மோடியின் அரசும் அதன் ஊது குழல் நீரும் தானே நயவஞ்சகர்கள், அடுத்தவர் உழைப்பை திருடி தின்னும் திருடர்கள்,கொள்ளைகாரர்கள்……..எங்களை பார்த்து நீர் பைத்தியக்காரன் மாதிரி குற்ற சாட்டு வைத்து பேசினால் அதற்கு முடிந்தால் ஆதாரம் கொடுக்கவேண்டுமே நீர் ? ஆதாரம் எங்கே?

     • நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் திசை திருப்பல்கள் இல்லாமல் என் பதில் சொல்ல வேண்டும் என்று… நான் எதிர்பார்த்தது போல் என் கேள்விகளுக்கு நேர்மையாக பதில் சொல்ல முடியாமல் திசை திருப்புகிறீர்

      • உங்கள் மீதும் , மோடியின் மீதும் நான் வைக்கும் குற்றசாட்டுகளை கண்டும் காணாமலும் சென்று திசை திருப்பல்கள் ,முட்டாள் தனத்தின் உச்சம் என்று பயணிப்பது நீங்கள் தானே மணிகண்டன்..!
       இந்தியாவின் உப்பை கூட உங்களை போனற பணக்கார சீமான்கள் செய்வது கிடையாது மணிகண்டன்… எம் தொழிலாளர் தோழர்கள் தான் செய்கின்றார்கள் என்ற உண்மையாவது தெரியுமா உமக்கு?

       //இந்தியாவின் உப்பை தின்று கொண்டு சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்ட(செயல்படும்) உங்களை போன்ற கம்யூனிஸ்ட்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருக்கிறதா ? //

   • சீனாவோடு பூட்டானுக்காக 24 முறை பேச்சுவார்த்தை நடத்தி இப்போது இருக்கும் பகுதியில் எந்த மாற்றமும் செய்ய கூடாது என்று 2003 ஒப்பந்தம் கையெழுத்து போட்டு இருக்கிறார்கள்.ஆனால் எந்த சட்டங்களுக்கும் ஒப்பந்தங்களும் கட்டுப்படாத ரியல் எஸ்டேட் மாபியாவை போல் செயல்படும் சீனா தொடர்ந்து இந்தியாவிற்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள், அதன் எதிரொலி தான் இந்தியாவின் செயல். முடிந்தால் உங்கள் சீனாவை எங்கள் ராணுவத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள் பார்ப்போம்.

    • சும்மா உளறிகிட்டு இருக்க கூடாது மணிகண்டன்….சீனர்கள் அவர்களின் எல்லைக்குள் சாலை போடுகின்றார்கள்… நாம் இங்கு இருந்து வேடிகைபார்த்துகொண்டு உறுமிகிட்டு இருக்கின்றோம்… சீனர்கள் அவர்களின் எல்லைக்குள் ரோடு போட எதற்கு அவர்கள் இந்தியாவுடன் சண்டையிட வேண்டும் அவர்கள்……சீனர்கள் அவர்களின் எல்லைக்குள் சாலை போடுவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் தானே அவர்களுடன் சண்ணடை போடவேண்டும்…ஒரு வேலை சீனர்கள் எல்லை தாண்டி வந்து சாலை போட்டாலும் இந்தியர்களாகிய நாம் தானே சீனர்களை விரட்டி அடிக்கவேண்டும்… எப்படி பார்த்தாலும் உங்கள் வாதம் முட்டாள் தனமானது தானே மணிகண்டன்…!

     //முடிந்தால் உங்கள் சீனாவை எங்கள் ராணுவத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள் பார்ப்போம்.//

   • அப்ப உங்கள் மீதும் மோடியின் மீதும் நான் வைக்கும் என்னுடைய குற்றசாட்டுகளை ஏற்றுகொண்டு அவற்றுக்கு பதில் அளிக்காமல் மவுனமாக இருகிண்றீகள் அப்படி தானே மணிகண்டன்?

    • நான் பிஜேபி ஆதரவாளன் என்பதை விட கம்யூனிஸ்ட் எதிர்பாளன் கம்யூனிஸ்ட்களை வெறுப்பவன் என்று சொல்வதே சரியாக இருக்கும்.

     • இது தான் நேரடியான பதிலா மணிகண்டன்? வெக்கமாக இல்லையா உங்களுக்கு?திசை திருப்பல்கள் இல்லாமல் உண்மையாக உங்கள் மீது வைக்கபடும் குற்றசாட்டுகளுக்கு பதில் அளியுங்கள்..

 8. அந்த அரை சதவீதம் என்பது உங்களை போன்ற மனசாட்சியற்ற இந்திய விரோதிகளை குறிக்கிறது

 9. உங்களுக்கு “இரண்டரை” முனைகளில் அடங்கும் என்பதற்கு பொருள் என்னவென்று தெரியவில்லை என்றால் யோசித்து பார்க்கவும் அல்லது உமது சமுக வளைய தளத்தின் ஊடக எசமானனிடம் கேட்டு சொல்லவும்….இந்தியாவின் பாதுகாப்பை பற்றி மயிரளவுக்கு கூட கவலை படாத பிஜேபி அரசும் ஊர் சுற்றி பிரதமர் மோடியும் தான் குற்றவாளியே தவிர மக்கள் குற்றவாளி அல்ல…

 10. கம்யூனிஸ்ட்கள் பற்றி நேரு சொன்ன வார்த்தைகள் இது

  Nehru observed, The way communism functions is devoid completely of any moral standard or even any thought for India’s good.’

  *****

  இப்போதும் கூட பூட்டான் பகுதியில் இந்திய சீனா ஒப்பந்தத்தை மீறி சீனா சாலை அமைப்பதை பற்றி கூட உங்களை போன்ற கம்யூனிஸ்ட்கள் அந்த பகுதி சீனாவின் இடம் என்று பொய்களை பரப்பி கொண்டு இருக்கிறீர்கள்,

  அது பூட்டானின் பகுதி அதற்கான ஆதாரம் இதோ http://indianexpress.com/article/opinion/columns/keep-your-patience-doklam-india-china-4756880/ பேச்சுவார்த்தை முடியும் வரையில் யாரும் இந்த பகுதியில் எந்த மாற்றமும் செய்ய கூடாது என்று சீனா ஒப்பு கொண்டு இருக்கிறது, ஆனால் அந்த ஒப்பந்தத்தை மீறி இன்று பூட்டான் போன்ற ஒரு சிறிய நாட்டை மிரட்டி அதை ஆக்கிரமிக்க பார்ப்பதை உங்களை போன்ற ஆட்கள் மறைத்து இந்தியாவின் மீது பழி போட்டு கொண்டு இருக்கிறீர்கள்.

  ********

  • உலகிலேயே ஜனநாயக பூர்வமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கேரள கம்ம்யுநிடு அரசை இந்த கொள்கையின் அடிப்டையில் தானே அந்த முரட்டு மனிதர் நேரு கலைத்தார்…?

   //Nehru observed, The way communism functions is devoid completely of any moral standard or even any thought for India’s good.’//

   சரி விசயத்துக்கு வரேன்.,…சீனா காரன் இந்திய எல்லைக்குள் அல்லது பூட்டான் எல்லைக்குள் சாலை போட்டால் அவனை அடித்து விரட்டவேண்டியது யார் கடமை? மோடியின் பிஜேபி யின் அரசின் கடமை தானே? அதனை செய்யாமல் லாலிபாப் நக்கிகொண்டு இருபதால் என்ன பயன் மணிகண்டன்?

   • அப்படியே பேச்சை மாற்றுகிறீர்களே செந்தில் நேற்று வரையில் சீனாவின் பகுதியில் இந்தியாவிற்கு என்ன வேலை என்று கேட்டிர்கள் இன்று சீனாவை விரட்ட வேண்டியது மோடியின் கடமை தானே என்கிறீர்கள் உங்கள் நிலையை பார்த்து பரிதாபப்படுகிறேன்.

    இந்திய ராணுவம் அதை தான் இப்போது செய்து இருக்கிறது… சீனா ராணுவத்தை விரட்டி விட்டு அந்த பகுதியில் இந்திய ராணுவம் நிலை கொண்டு இருக்கிறது, அதனால் தான் உங்களை போன்றவர்களும் உங்கள் சீனா அரசும் இந்தியாவை மிரட்டி கொண்டு இருக்கிறீர்கள்.

    இப்போது ஏற்றுக்கொள்கிறீர்களா உங்கள் சீனாவின் செயல்கள் எல்லாம் நியாயமற்றது என்று . என் கேள்வி எல்லாம் ஏன் இந்திய கம்யூனிஸ்ட்கள் யாருமே சீனாவின் இந்த செயலை கண்டிக்கவில்லை என்பதே.

    பதில் வேண்டும்.

    • எல்லை பிரச்சனையை புரிந்து கொள்ள கூட இயலாத உங்கள் அறிவற்ற நிலை தான் மேலும் மேலும் உங்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றதா அல்லது மோடியின் மீது உள்ள மோகம் தான் காரணமா என்று தெரியவில்லை……

     கீழ் உள்ள கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு மேலும் உங்கள் விவாதத்தை தொடருங்கள்..

     1. இப்போதைய எல்லை பிரச்சனையில் சீனா எங்கே சாலை அமைக்க முயலுகின்றது? அவர்கள் எல்லைகுல்லாகவா? அல்லது இந்திய/பூட்டான் எல்லைகுல்லாகவா?

     2. ஒருவேளை சீனர்கள் அவர்களின் எல்லைக்குள் சாலை அமைக்க முயன்றால் அதில் இந்தியா மற்றும் பூட்டான் எப்படி தடை விதிக்க முடியும்?

     3. அல்லது சீனர்கள் அவர்கள் எல்லையை தாண்டி இந்திய/பூட்டான் எல்லைக்குள் சாலை அமைக்க முயன்றால் அதனை தடுக்க பேச்சுவார்த்தை அல்லது போர் தொடுக்கவேண்டியது தானே?

     இந்த கேள்விகளை கவனமாக படித்துவிட்டு பதில் சொல்ல முயலுங்கள்!

    • என்னத்த பேச்சை மாத்தறோம்….உங்களை போன்று சீன தயாரிப்பு ஐபோன் விசயத்தில் கமக்க்கமாக இருக்கீங்களே அது போன்றும் நாங்கள் இல்லையே… அனைத்து விதமான சாத்தியங்களையும் ஆராய்ந்து தானே நான் இந்த எல்லை பிரச்சனையை பற்றி எழுதி யுள்ளேன்… விசயத்தை தெளிவாகத்தானே கூறியுள்ளேன் என் பின்னுட்டத்தில்….மீண்டும் படித்து விட்டு கடிதாசி போடுங்க மணிகண்டன்…

     “””””””””””சீனர்கள் அவர்களின் எல்லைக்குள் சாலை போடுகின்றார்கள்… நாம் இங்கு இருந்து வேடிகைபார்த்துகொண்டு உறுமிகிட்டு இருக்கின்றோம்… சீனர்கள் அவர்களின் எல்லைக்குள் ரோடு போட எதற்கு அவர்கள் இந்தியாவுடன் சண்டையிட வேண்டும் அவர்கள்……சீனர்கள் அவர்களின் எல்லைக்குள் சாலை போடுவது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் தானே அவர்களுடன் சண்ணடை போடவேண்டும்…

     ஒரு வேலை சீனர்கள் எல்லை தாண்டி வந்து சாலை போட்டாலும் இந்தியர்களாகிய நாம் தானே சீனர்களை விரட்டி அடிக்கவேண்டும்… “””””””””””

     அது சரி சப்பை மூக்கர்கள் தான் இந்தியாவின் இரண்டு பதுங்கும் குழிகளை அழித்ததாக நம்ம நாட்டு ஊடகங்கள் எழுதிக்கொண்டு உள்ளன…. சீனாகாரனை எப்ப நாம விரட்டி அடித்தோம் என்பது பற்றி ஏதும் ஊடகங்கள் எழுதவிலையே… ஒரு வேலை நீங்கள் மந்திரம் ஊதி யாராவது மயக்கம் போட்டு விழுந்துட்டாங்களே?

     //அப்படியே பேச்சை மாற்றுகிறீர்களே செந்தில் நேற்று வரையில் சீனாவின் பகுதியில் இந்தியாவிற்கு என்ன வேலை என்று கேட்டிர்கள் இன்று சீனாவை விரட்ட வேண்டியது மோடியின் கடமை தானே என்கிறீர்கள் உங்கள் நிலையை பார்த்து பரிதாபப்படுகிறேன். //

 11. நேருவும் சரி ,மோடியும் சரி இந்தியாவுடன் எல்லை பிரச்சனை உள்ள சீனாவுடன் எப்போதுமே யுத்த தயாரிப்பு நிலையில் இருந்து இல்லை…. நேருவுக்கு உலக ஸ்டேட்ஸ் மேன் ஆகிவிட்டோம் என்ற இருமார்ப்பில் 1962 போரில் யுத்த தளவாட தயார் நிலையில் இல்லாமலேயே கூட சீனாவுடன் யுத்தத்தை தொடங்கி பல லச்சம் சதுர கிலோ மீட்டர் இந்திய நிலபரப்பை அருணாசல பிரதேசத்தில்சீனாவிடம் விட்டுக்கொடுத்தார்…

  இன்று மோடி அவர்கள் தம்மை உலக ஸ்டேட்ஸ் மென் என்ற பட்டத்தை பெற உலகம் சுற்றும் வலிபனாக சுற்றிகொண்டு உள்ளார்..இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் அவசியமான மத்திய பாதுகாப்பு அமைச்சரை கூட அந்த துறைக்கு என்று தனியாக நியமிக்க கூட நேரமில்லை இந்த உலகம் சுற்றும் வாலிபருக்கு! மேலும் நேரு செய்த அதே தவற்றை இன்று மோடியும் செய்து கொண்டு உள்ளார்… யுத்த தளவாடங்கள் பத்து நாட்களில் தீர்த்து விடும் என்ற CAG யின் அறிக்கை நம்மை பயமுறுத்துகிறது…இதுவரையில் மத்திய அரசின் தலைமை பொறுப்பில் கூட அமராத கம்யுனிஸ்டு கட்சிகளை குற்றம் சொல்லி தப்பிக்க பார்கின்றார் இங்கே விவாதிக்கும் மணிகண்டன்!

  எதிரி நாடான சீனாவுடனான ஏற்றுமதி 10 பில்லியன். இறக்குமதியோ 60 பில்லியன் டாலர். இந்த ஏற்றத்தாழ்வு தான் சீனாவின் வலிமைக்கான மூல காரணம். ஒட்டுமொத்த இந்திய இறக்குமதி ஏற்றுமதியை விட 6 மடங்கு அதிகமாக இருக்கிறது. அப்படி என்றால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் உள்ள ஏற்றத்தாழ்வு என்பதே இந்தியா மீது சீனா செய்துகொண்டு உள்ள பொருளாதார யுத்தம் தான்.. சீனத்து பொருட்ட்கள் குப்பைகள் என்று தெரிந்தும் கூட அவற்றை தடை செய்ய துப்பற்ற மோடி சீனத்து உதிரி பாகங்களால் தயாரிக்கபட்ட ஐபோனை ஆசையாக வைத்துகொண்டு உள்ளார்… மணிகண்டனும் அதே ஐ போனை தான் வைத்து இருகின்றேன் என்று வாக்கு மூலம் கொடுகின்றார்…

  மோடியும் மணிகண்டனும் ஒருபக்கம் தேசபக்தி என்று பேசிக்கொண்டே அதே சீனத்து தயாரிப்புகளை பயன் படுத்தி இரட்டை வேடம் போட்டுக்கொண்டு உள்ளார்கள் பச்சோந்தியாக!

  • இந்தியா லடாக்கை இழந்ததற்கு இந்தியா கம்யூனிஸ்ட்களின் துரோகமும் ஒரு காரணம், இந்தியா ராணுவத்தை காட்டி கொடுத்த கம்யூனிஸ்ட்கள் செய்தது சரியா ?

 12. மணிகண்டன் போன்றவர்கள் எப்படி இந்த எல்லை பிரச்சனையை பெரியதாகி அதில் குளிர் காயலாம் என்று பார்கின்றார்கள் ஆனால் கைகளில் ஆயுதம் இருந்தும் கட்டுப்பாட்டுடன் கைகலப்பில் ஈடுபடும் இரு நாட்டு இராணுவங்களின் விடியோ இங்கே :

  • Chinese know they can’t blackmail India like they did in south China sea countries

   People like you and your Chinese masters will bark at India like dogs that’s the maximum you can do.

   • வினவில் நாயாகவே குரைத்துக்கொண்டு இருக்கும் இந்த நபர் மணிகண்டன் தான் சீனத்து தயாரிப்பான ஐபோனில் பேசிக்கொண்டே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சண்டையை தூண்ட ஆசைப்படுகின்றார்… இந்த நபர் தான் அவர் மாட்டை அவர் அம்மாவுடன் ஒப்புமை செய்து அதே அம்மாவை-மாட்டை வெட்டி கூறுபோட்டு பதபடுத்தி முஸ்லிம் மற்றும் கிருஸ்துவ நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஹ்ந்துதுவா குருப்பை சேர்ந்தவர்.

    //People like you and your Chinese masters will bark at India like dogs that’s the maximum you can do.//

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க