privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்தூத்துக்குடி : மக்களுக்கு உதவ மறுக்கும் அரசு சட்ட உதவி மையம் !

தூத்துக்குடி : மக்களுக்கு உதவ மறுக்கும் அரசு சட்ட உதவி மையம் !

கடந்த 16.07.2018 அன்று மடத்தூர் கிராம மக்கள் இலவச சட்ட உதவி மையத்தில் மனு அளித்தனர். ஆனால் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என திருப்பி அனுப்பியுள்ளது சட்ட உதவி மையம்.

-

தூத்துக்குடி மடத்தூர் கிராம மக்கள் சார்பில் கடந்த 16.07.2018 அன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள இலவச சட்ட உதவி மையத்தின் மூலம், தமிழக முதல்வர் மற்றும் தலைமைச் செயலருக்கு மனு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது.

16.07.2018 அன்று அளிக்கப்பட்ட மனுவின் நகல்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அம்மனுவில் ;

  • ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வலிமையாக வழக்கு நடத்த வேண்டும்.
  • ஸ்டெர்லைட்டுக்கு தமிழக அரசு வழங்கிய அனைத்து உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும்.
  • பொய் வழக்குகள் பதிவு செய்து மக்களை அச்சுறுத்துவதையும், கைது செய்யும் நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். மேலும் மக்கள்’மூளைச்சலவை’ செய்யப்பட்டு போராட தூண்டப்பட்டனர் என்ற வதந்தி தொடர்சியாக பரப்பட்டு வருவதையும் கண்டித்து அம்மனுவில் தங்களது விளக்கங்களை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 20.7.2018 அன்று அம்மனுவின் மீதான விசாரனை தூத்துகுடி மாவட்ட நீதிமன்றதில் அமைந்துள்ள இலவச சட்ட உதவி மையத்தில் நடைபெற்றது. அவ்விசாரணையில் மனுவில் உள்ள கோரிக்கைகள் குறித்து உதவி செய்ய தங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், அனைத்து கோரிக்கையையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர்தான் முடிவு செய்ய முடியும் என்று கூறி, மாவட்ட ஆட்சி தலைவருக்கு இலவச சட்ட உதவி மையத்தில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டது.

மக்கள் அளித்த மனுவின் மீது இலவச சட்ட உதவி மையம் வழங்கியுள்ள பரிந்துரை :

இலவச சட்ட உதவி மையத்தில் 20.07.2018 மனுவின் மீதான விசாரனை அன்று வந்திருந்த மடத்தூர் கிராம மக்கள்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க