Tuesday, May 30, 2023
முகப்புசெய்திஇந்தியாஹரியாணாவில் கூட்டு வன்புணர்வு - காசியில் பிறந்த நாள் கொண்டாட்டம் !

ஹரியாணாவில் கூட்டு வன்புணர்வு – காசியில் பிறந்த நாள் கொண்டாட்டம் !

இந்துத்துவ சோதனைச் சாலையாக இருக்கும் ஹரியாணாவில் 19வயது மாணவி கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். மோடியோ தனது 68-வது பிறந்த நாளுக்கு காசி செல்கிறார்!

-

லகில் மத அடிப்படைவாதம் மேலோங்கும் போதெல்லாம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிக அதிகம் நடக்கும். இந்தியாவிலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாவது நாள்தோறும் முக்கிய செய்தியாகிவிட்டது. இதில் குழந்தைகள், மாணவர்கள், இதர வயதினர் என்ற வேறுபாடில்லை!

பார்ப்பனிய இந்துத்துவ பாஜக கும்பல் ஆண்டுகொண்டிருக்கும் ஹரியாணா, மாட்டுக்கறியை முன்வைத்து நடக்கும் கும்பல் கொலைகளுக்கு பெயர் போனது.  இம்முறை வேறொரு கும்பல் கொடூரத்தை செய்திருக்கிறது.

ஒரு கல்லூரி மாணவியை 10 –க்கும் மேற்பட்ட வெறியர்கள் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். கல்லூரி மாணவி, சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர். மாணவியை வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்களில் ஒருவர், முன்னாள் இராணுவ வீரர்.

கடந்த வாரம் பயிற்சி வகுப்புக்கு சென்றுகொண்டிருந்த கல்லூரி மாணவியை காரில் வந்த மூவர் கடத்திச் சென்றுள்ளனர்.  கிராமத்தின் ஒதுக்குப்புறமாக இருந்த இடத்தில் அந்த மாணவியை மூவரும் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, ஏற்கனவே வரவைக்கப்பட்டிருந்த இன்னும் சிலரும் அந்தப் பெண்ணை வன்புணர்ந்துள்ளனர். மாணவி மயக்கமடைந்த நிலையில், அவரை பேருந்து நிறுத்தத்தில் தூக்கிப் போட்டு விட்டு சென்றுள்ளனர்.

ஹரியாணா போலீசு வெளியிட்டுள்ள கூட்டு வன்புணர்வு குற்றவாளிகளின் புகைப்படம் ( வலது பக்கம் முக்கிய குற்றவாளியான இராணுவ வீரர் )

இந்த சம்பவத்தின் போது ஒரு மருத்துவரும் அங்கு இருந்திருக்கிறார். அவரும் சம்பவம் நடந்த இடத்துக்கு சொந்தக்காரரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்கொடுமையை திட்டமிட்டு செய்த முதன்மை குற்றவாளியான நிஷு பொகாட் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு நேர்ந்த இந்தக் கொடூரம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகே ஹரியாணா மாநில போலீசு வழக்குப் பதிந்து விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது. இராணுவ வீரன் உள்ளிட்ட இன்னும் சில குற்றவாளிகள் ஓடி மறைய போலீசு அவகாசம் கொடுத்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் குற்றவாளிகள் அனைவரும் தங்களுடைய கிராமத்தைச் சேர்ந்தவர்களே என்கிறார்கள். இப்படியான ஒரு குற்றச் சம்பவத்தை வழக்குப் பதிவு செய்து விசாரிக்க தாமதித்த அரசு  வழங்கிய ரூ. 3 லட்சத்தை வாங்க மறுத்திருக்கும் அந்தக் குடும்பம் தங்களுக்கு நீதி மட்டுமே வேண்டும் என கேட்கிறது.

பசுவின் பெயரால் இந்துத்துவ கும்பல் வன்முறைகளையாளர்கள், மோடி ஆட்சியை தங்கள் சோதனைகளை செய்துபார்க்கும் ‘பொற்காலமாக’ப் பார்க்கிறார்கள். பிள்ளை பிடிக்க வருகிறார்கள் என வாட்சப் வதந்திகளை பரப்பி அப்பாவிகளை  அடித்துக் கொல்ல கும்பலை தயார்படுத்தினார்கள். இப்போது பெண்களை குறிவைத்து கும்பல் வன்முறையின் அடுத்த கட்டம் நகர்ந்துள்ளது. மாநில முதல்மதிப்பெண் பெற்ற மாணவியை திட்டமிட்டு வன்கொடுமைக்கு ஆளாக்க அளவற்ற கொடூரமான மனம் வேண்டும்.

இந்த நெஞ்சுரத்தை காவி கும்பலுக்கு கிடைத்த வரவேற்பிலிருந்தே அவர்கள் பெற்றிருக்கக்கூடும். துரதிருஷ்டமாக காவி கும்பலுக்கு வரவேற்பு கொடுக்கும் கட்சியே அம்மாநிலத்தையும் நாட்டையும் ஆள்கிறது.

கும்பல் வன்முறைகள் குறித்து கள்ளமவுனம் சாதிப்பதன்  உள்ளர்த்தமாக, அக்கும்பலை தட்டிக்கொடுக்கிறார் பாரத பிரதமர். அதனால் தானோ என்னவோ தனது பாவங்களைக் கழுவ கங்கைக் கரையின் வாரணாசிக்கு தன் பிறந்த நாளன்று சென்றிருக்கிறார் மோடி.

ஆம். இன்று பிரதமர் மோடியின் 68-ஆவது பிறந்த நாளாம். அவரது தொகுதி வாரணாசி, அதாவது  காசி என்பதால் அங்கு சென்று இருநாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாராம். ஆரம்பப் பள்ளி மாணவர்களோடு உரையாடுதல், பின்பு அவர்களோடு சேரந்து மோடியின் துதி பாடும் ஒரு செய்திப்படத்தையும் பிரதமர் பார்க்கிறாராம். இந்தப் படத்தை பல சேனல்கள் ஒளிபரப்புகின்றன. பிறகு பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கும் விழாவில் பங்கேற்பவர் இறுதியல் காசி விசுவநாதர் கோவிலில் பிரார்த்தனை செய்கிறாராம்.

பாரதமாதா, கங்கை மாதா என்று மூச்சுக்கு முன்னூறு முறை பெண்களை மாதா என்று விளிப்பது ‘இந்துப் பண்பாட்டிற்கே’ உரியது என புகழ்பாடுவது ஆர்.எஸ்.எஸ். வழக்கம். இந்தப் புகழின் பின்னே உள்ளதுதான் பார்ப்பனியம் கடைபிடிக்கும் பெண்ணடிமைத்தனம். அதில் மனு ஸ்மிருதியாக இருக்கும் வழக்கம்தான் இத்தகைய வன்புணர்ச்சி. வட இந்தியாவில் இருக்கும் இந்துமதவெறியின் அடிப்படையான பண்புகளில் ஒன்று பெண்களை நாயை விட இழிவாக நடத்துவது. அனேக வன்புணர்ச்சிக் குற்றங்கள், தமக்கு ’அடங்க மறுக்கும்’ பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையாக அங்கே கருதப்படுகிறது.

இப்படி இந்துத்துவத்தின் செல்வாக்கால் வட இந்தியாவில் பெண்கள் இனி வெளியே பத்திரமாகவோ சுதந்திரமாகவோ நடமாட முடியாத சூழ்நிலை. இந்நிலையில்தான் பிரதமர் மோடி தனது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சுதந்திரமாக காசி செல்கிறார்.

காசியில் மூழ்கினால் பாவம் கழுவப்படும் என்பது அவாளது நம்பிக்கை. பார்ப்பனியத்தை கல்லறைக்கு அனுப்பாமல் இங்கே மக்களுக்கு நிம்மதியில்லை என்பது நமது கடமை!

கலைமதி

 1. அட பைத்தியம் பிடிச்சவனுங்களா. உங்களோட மட்டகரமான சிந்தனைக்கு அளவே இல்லையா? ஒரு கட்சிய எதிர்க்கனும்னா ஒரு நியாமான வழிய பின் பற்றனும். கற்பழிப்புக்கும் ஆளுங்கட்சிக்கும் சம்பந்தப்படுத்தற ஈன புத்திய விட்டுட்டு ஏதாவது அறிவுப்பூர்வமான விசயத்துல எதிர்க்கப் பாருங்க.. அதோடு கம்யூனிச பாசிச சிந்தனையில இருந்துக்கிட்டு இன்னோரு பாசிசத்த எதிர்த்தா ஒருத்தன் மதிக்க மாட்டான். முன்பெல்லாம் வினவு தளத்துல இருந்து பல பதிவுகள நான் ஷேர் செஞ்சிருக்கேன். இப்பொழுது வரும் பதிவுகளெல்லாம் கேவலமா இருக்கு. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இதுல எவன் யோக்கியன்.

 2. என்ன வெறிநாய் கடிச்சிருச்சா? முட்டாபயலே ஒன்ன ரெண்டா எத்தினை அநியாயங்கள் இந்த ஆட்சில, அதுக்கு காரணத்தை சொன்ன உடனே பத்திகிட்டு எரியுதா? நீரு சேர் பன்னனுங்குரதுக்காக இருக்கிற பிரச்சினைய விட்டு என்ன பிக் பாஸ் பத்தியா பதிவு போடமுடியும் பன்னி பயலே.

  • டேய் மட சாம்பிராணி…. ஆளுங்கட்சியா ஆள உட்டு கற்பழிக்க சொன்னுச்சி? வேற ஆட்சி இருக்கும்போது கற்பழிப்பே நடக்கலையா? ஆட்சிய மாத்தனா கற்பழிப்பு நின்றுமா? அடேய் உங்களது கேவலமான புத்திதானடா கற்பழிப்புக்கே காரணம். பொம்பளைய படுக்கறதுக்கு மட்டும்னு நினைக்கற ஈன புத்தியாலதானடா கற்பழிப்பே நடக்குது. பொம்பள கால் மேல கால் போட்டு உட்காற்றத பாத்தே பொறுமுர கூட்டம்தானடா நீங்க.

   • முத பத்திலேயே சொல்லியாச்சே மதவாதத்தை போணியாக்கும் பிஜேபி ஆட்சில பாலியல் குற்றங்கள் அதிகரிச்சது மட்டுமில்ல குற்றவாளிக்காக பேரணி நடத்திய கூத்தும் நடந்தது, கற்பழிப்பு பெண் வன்முறையில் முதலிடம், மோடி மஸ்தானோ கவட்டை கீச்சு யோகா பண்றாரு , ஒரே ஒரு குறை அவனுங்களை இஸ்மாயில்னு பச்சை குத்த சொல்ல மறந்துடீங்கடே. மத்தபடி நீ சொன்ன அத்தனை கிரைடீரியாவும் உன்ன மாறி ஆட்களுக்கு தான் பொருத்தம். கண்ணாடி கூண்டுக்குள்ள நின்னு கல்லெறியாதடா காவிகுரங்கே.

 3. //பொம்பள கால் மேல கால் போட்டு உட்காற்றத பாத்தே பொறுமுர கூட்டம்தானடா நீங்க.//
  என்ன ஷான், கண்ணாடியப் பார்த்து பேசிட்டிருக்கீங்களா?

  சின்னா சொன்னதை ‘படக்’குன்னு நிரூபிக்கிறீங்களே !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க