privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாவாக்களிக்கும் எந்திரங்களால் எதையும் செய்ய முடியும் : பாஜக சொல்கிறது

வாக்களிக்கும் எந்திரங்களால் எதையும் செய்ய முடியும் : பாஜக சொல்கிறது

பாஜக-வைச் சேர்ந்த மேற்கு வங்க பிரதிநிதிகள், ‘வாக்களிக்கும் எந்திரங்களால் எதையும் செய்ய முடியும்’ என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

-

லெக்ட்ரானிக் வாக்களிக்கும் எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்படும் போதெல்லாம் பாஜகவினர் முந்திக்கொண்டு நற்சான்றிதழ் கொடுத்து வந்தனர். ஆனால், இப்போது அதே பாஜக-வைச் சேர்ந்த மேற்கு வங்க பிரதிநிதிகள், ‘வாக்களிக்கும் எந்திரங்களால் எதையும் செய்ய முடியும்’ என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சமீபத்தில் மேற்கு வங்கத்தில் மூன்று தொகுதிகளில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடந்தது. இதில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அரசு தில்லுமுல்லுகளை செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது அம்மாநில பாஜக தலைமை.

பாஜக தேசிய செயலாளரும் மேற்கு வங்க பாஜக தலைவருமான ராகுல் சின்ஹா, “தேர்தல் ஆணையம் தேர்தல்களை கண்காணித்தாலும், இடைத்தேர்தலை நடத்துவது மாநில அரசுதான். திரிணாமூல் காங்கிரஸ் தேர்தலில் வெல்ல என்ன வேண்டுமானாலும் செய்யும்” எனக் கூறியுள்ளதோடு, “ஈவிஎம் -களை வைத்து எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆளும் அரசு வாக்கு எண்ணிக்கையின்போது மோசடி செய்யக்கூடும் என்பதை மறுக்க முடியாது” என்றார்.

“மக்களவை தேர்தலின்போது வென்ற தொகுதிகளில் பாஜகவுக்கு அதிக வாக்குகள் உள்ளன. அங்கே வெல்வோம் என கருத்து கணிப்புகள் கூறிய நிலையில், மூன்று தொகுதிகளிலும் திரிணாமூல் வென்றுள்ளது சந்தேகத்தைக் கிளப்புகிறது” என்றும் பேசினார்.

படிக்க:
திரைமறைவு தரகு வேலை செய்யும் துக்ளக் குருமூர்த்தியைக் கைது செய் ! வழக்கறிஞர்கள் புகார்
ஆர்.எஸ்.எஸ் : இந்திய ஆன்மாவின் மீதான ஒரு அச்சுறுத்தல் ! – ஏ.ஜி. நூரனி

திருடனின் பாதை திருடனுக்குத்தான் தெரியும் என்பதைப் போல, எல்க்ட்ரானிக் வாக்கு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதை ஒப்புக்கொண்டுள்ளது பாஜக. ஜனநாயக தேர்தலை கேலிக்கூத்தாக்கியவர்கள், ஜனநாயகம் போய்விட்டதே என கூச்சலிடுவது வேடிக்கையாக உள்ளது.


அனிதா
நன்றி: பிஸினஸ் ஸ்டாண்டர்டு.