PP Letter head09.11.2020

கஞ்சா வியாபாரிகளால் தமிழன் தொலைக்காட்சி
நிருபர் மோசஸ் படுகொலை!

துணை போன போலீசு மீது நடவடிக்கை எடு!
மக்கள் அதிகாரம் கண்டனம்!

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியில் நடைபெறும் கஞ்சா வியாபாரம் குறித்து செய்தி வெளியிட்ட தமிழன் தொலைக்காட்சியின் நிருபர் மோசஸ் கஞ்சா வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

கஞ்சா பற்றிய செய்தி வெளியிட்ட பின்னர் பல கஞ்சா வியாபாரிகளும் ரவுடிகளும் நிருபர் மோசஸ்க்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள். இதுபற்றி போலீசில் புகார் அளித்த போதும் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்திருக்கிறது. இதன் விளைவாக நேற்று அவர் கொல்லப்பட்டிருக்கிறார். நிருபர் மோசஸ் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்காததன்மூலம் கொலையாளிகளுக்கு போலீசு துணை போயிருக்கிறது.

படுகொலை செய்யப்பட்ட மோசஸ்

உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர்கள் மீது உடனே நடவடிக்கை எடுத்து அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்.

மோசஸ் அவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நட்ட ஈடு வழங்க வேண்டும்.

மக்கள் நலன் கொண்டு தன்னலம் பாராமல் செய்திகளை அச்சமின்றி வெளியிடும் பத்திரிக்கையாளர்கள் ரவுடிகளாலும் போலீசாலும் தொடர்ச்சியாக பல இடங்களில் தாக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதற்கு எதிராக அனைத்து கட்சிகளும் பொதுமக்களும் ஒன்றிணைந்துப் போராட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய சமூக விரோதிகளையும் ரவுடிகளையும் மக்கள் ஒன்றிணைந்து விரட்டியடிக்க வேண்டும்.


தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
தொடர்புக்கு : 9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க