கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாகம் ஓர் குற்ற கும்பல் | தோழர் அமிர்தா வீடியோ

ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை தமிழ்மிண்ட் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்...

கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி என்பது ஓர் குற்றகும்பல்! அதாவது ஆட்சியாளர்கள் மத்தியிலும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி மத்தியிலும் செல்வாக்கு கொண்ட நபர்கள் இவர்கள். அந்த பள்ளியில் சாக நடக்கிறது; அந்த பள்ளி தாளாளர் நேரடியாக எடப்பாடி பழனிச்சாமி கிட்ட பேசக்கூடிய நபர்; எப்படி பட்ட ஒரு செல்வாக்கு உடைய குற்றக்கும்பலாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். இப்படி பட்ட நபர்கள் வெளியே வந்தால் என்ன செய்வார்கள் என்பது நமக்கு தெரியும்.

போராடிய மக்களை தேடி தேடி கைது செய்கிறார்கள். ஸ்ரீமதியின் தாய் பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்தவர்களை எல்லாம் கைது செய்கிறார்கள். ஆக,, பள்ளியின் தாளாளர் யார் யாரிடம் பேசியுள்ளார் என்பதை பட்டியலிட்டு அவர்களையெல்லாம் போலீசு கைதுசெய்திருக்கவேண்டுமல்லவா? ராஜசேகர் போன்ற ஆதிக்க சாதி கும்பல்களை ஏன் இன்னும் கைது பன்னவில்லை என்று நாங்கள் கேட்கிறோம்!

ஸ்ரீமதி மரண வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்களை தமிழ்மிண்ட் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க