நாங்குநேரி-பெரும்பத்து சாதிவெறியாட்டம்: உண்மை அறியும் குழு அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி

தோழர் தாளமுத்து செல்வா நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றார். தோழர் கின்ஷன் உரையாற்றினார். உண்மை அறியும் குழுவின் இந்த அறிக்கையானது ஜனநாயக சக்திகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே…

கடந்த 02.03.2026 அன்று திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா பெரும்பத்து பகுதியில் நடத்தப்பட்ட சாதிவெறி, கொலைவெறி தாக்குதலில் ஜான் மார்க், திரிநாத் கட்டா ஆகிய இருவரும் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் நெல்சன், கணேசன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பிரபாகரன், இராமசாமி, சசிகுமார் ஆகியோர் காயமடைந்தனர்.

இத்தாக்குதலில் ஈடுபட்ட 18-21 வயது நிரம்பிய 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பகுதி மக்கள் மத்தியிலான பதற்றம் குறையவில்லை. ஏன் இத்தாக்குதல் நடைபெற்றது என்கிற மக்களின் கேள்விக்கும் அரசு தரப்பிலிருந்து விடை கிடைக்கவில்லை. ஆகவே இப்பிரச்சினையின் பரிமாணத்தை மக்களுக்கு விளக்கவும், இது போன்ற சாதிவெறி தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்கும் கடமை நமக்குள்ளது என்பதை உணர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதை முன்னிட்டு மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. மக்கள் அதிகாரக் கழக வழக்கறிஞர் அணி தோழர் கின்ஷன், தூத்துக்குடி & நெல்லை மாவட்டச் செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா, பொருளாளர் சந்துரு ஆகியோர் அடங்கிய இக்குழு 12.03.2026, 13.03.2026, 14.03.2026 ஆகிய தேதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மருத்துவமனையில் ஆய்வு நடத்தியது.

இதன் அடிப்படையில் உண்மை அறியும் குழு அறிக்கை நெல்லை சந்திப்பு அம்பேத்கர் சிலை முன்பு 30.03.2026 அன்று காலை 11:30 மணி அளவில் வெளியிடப்பட்டது. இந்த வெளியீட்டு நிகழ்வில் மக்கள் அதிகாரக் கழக மதுரை மேற்கு மாவட்டச் செயலாளர் தோழர் சிவகாமு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் வி.சி.க நெல்லை மண்டல துணைச் செயலாளர் (பொது நிர்வாகம்), தோழர் முத்துவளவன், வி.சி.க வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் பிரியா மனோகரன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த தோழர் திருகுமரன், திராவிட தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் களக்குடி சுந்தர், தி.த.க மாநில மகளிரணி செயலாளர் தோழர் மீனா, தி.த.க மாவட்ட தலைவர், தோழர் ரமேஷ், தி.த.க மாவட்ட இளைஞரணி செயலாளர் தோழர் முத்துராஜ், தமிழ்ப் புலிகள் கட்சி தோழர் உலகம்மாள், ஷகீது, Dr பழனிபாபா பாசறை தோழர் அப்துல் ஹமீது, சமூக நல ஆர்வலர் கூட்டமைப்பு தோழர் பாளை செய்யது, எஸ்.டி.பி.ஐ மாவட்ட பொதுச் செயலாளர் தோழர் அன்வர்ஷா, எஸ்.டி.பி.ஐ சமூக ஊடக அணி மாவட்டச் செயலாளர் தோழர் அசாரூதீன், எஸ்.டி.பி.ஐ தச்சநல்லூர் கிளைச் செயலாளர் தோழர் லத்திப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தோழர் தாளமுத்து செல்வா நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றார். தோழர் கின்ஷன் உரையாற்றினார். உண்மை அறியும் குழுவின் இந்த அறிக்கையானது ஜனநாயக சக்திகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. தோழர்கள் இதை தங்களது ஒருங்கிணைந்த நடவடிக்கையின் வாயிலாகவும், உணர்ச்சிப் பெருக்கான சொற்களின் வழியாகவும் நமக்குக் கடத்தினர்.

அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆய்வு மற்றும் பரிந்துரைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த வெளியீட்டு நிகழ்வு அடித்தளமாக அமைந்தது.

பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை – தூத்துக்குடி மாவட்டங்கள்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க