மக்கள் நலன் என்ற பெயரில் போக்குவரத்து துறையில் தனியார்மயத்தை நுழைக்கும் திமுக அரசு!
மக்களின் பயண நெருக்கடியைத் தீர்ப்பதற்கு போதுமான அளவில் தமிழ்நாடு அரசின் பேருந்துகள் இல்லை என்ற உண்மையைப் பற்றிப் பேசுவதற்கு வக்கற்ற தமிழ்நாடு அரசு, எதையோ பேசி தான் செய்யும் தொழிலாளர் விரோத - மக்கள் விரோத செயல்பாடுகளுக்கு ஆதரவு கேட்கிறது.
தூய்மையற்ற, வாழத் தகுதியற்ற இடத்தில் ஆவாரம்பாளையம் பகுதி மக்கள்!
தண்ணீர் தேங்காதவாறு வடிகால் பணியை மேற்கொள்ள அதிகாரிகளிடம் கூறினாலும் இது இரயில்வேக்கு சொந்தமான இடம் என்றும், இங்கு தூர்வாரவே கூடாது எனவும், மத்திய அரசின் இடத்தில் எந்தவித பணிகளும் மேற்கொள்ள முடியாது என்றும் கூறுகின்றனர்.
மதுரை, செல்லூர் வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணி | களச்செய்தி
சிறுகுறு சில்வர் பட்டரையிலும் வெள்ளம் புகுந்து உற்பத்தி செய்த பாத்திரங்கள் பாலீஸ் செய்யப் பயன்படும் மோட்டார் உபகரணங்கள் போன்றவை வெள்ளத்தில் மூழ்கிப் பழுதடைந்துள்ளன.
பாலியல் வன்கொடுமை குற்றவாளியுடன் கூட்டாளியாக செயல்பட்ட விருத்தாச்சலம் போலீசு இன்ஸ்பெக்டர் முருகேசனை கைது செய்!
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் போலீசுத்துறையின் செயல்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராகச் செயல்படும் போலீசுத் துறையினரையும் அதே வழக்கில் குற்றவாளியாகச் சேர்த்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம் || தெருமுனைக்கூட்டம் – சென்னை
"பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம்" என்ற தலைப்பில் தமிழ்நாடு தழுவிய பரப்புரை இயக்கம் ம.க.இ.க., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு., மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளால் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 06.10.2024 மாலை 5:30 மணி அளவில் சென்னை ஓட்டேரி பகுதியில் தெருமுனைக்கூட்டம் எழுச்சிகரமாக நடைபெற்று முடிந்தது.
மனவளர்ச்சி குறைபாடுடைய பெண் மீதான பாலியல் வன்கொடுமையும் விருதாச்சலம் போலீசின் செயல்பாடும் | உண்மை அறியும் குழு அறிக்கை
தூய்மைப்பணியாளரான தாய், புற்று நோய் பாதிக்கப்பட்ட தந்தை, பாதிக்கப்பட்ட பெண் ஆகியோரை கடந்த ஐந்து மாதங்களாக விருத்தாச்சலம் காவல் நிலைய அதிகாரிகள், மாவட்ட துணைக் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் அலைக்கழித்து மனரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர்.
இராமநாதபுரம்: “பாசிச இஸ்ரேல் அரசே பாலஸ்தீனம்-லெபனான் மீதான தாக்குதலை உடனே நிறுத்து” || கண்டன ஆர்ப்பாட்டம்!
"பாசிச இஸ்ரேல் அரசே பாலஸ்தீனம்-லெபனான் மீதான தாக்குதலை உடனே நிறுத்து" என்ற முழக்கங்களின் அடிப்படையில் பெரியாரிய உணர்வாளகள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம் அரண்மனை வாசல் முன்பு 10.10.2024 காலை 10:30 மணியிலிருந்து 12.30 மணி வரை நடைபெற்றது.
சாம்சங் தொழிலாளர்கள் மீதான திமுக அரசின் அடக்குமுறையை தகர்த்தெறிவோம்!
சமூகநீதி, சமத்துவம் என்று பேசிய திமுக அரசு, சங்கம் வைக்கும் அடிப்படை உரிமையை மறுப்பது உழைக்கும் மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் ஆகும்.
லெபனான் மக்களை கொன்றொழிக்கும் இஸ்ரேலின் பாசிச பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம்!
பாலஸ்தீனம் இல்லாமல் ஆக்கப்பட்டு கொண்டிருக்கிறது, லெபனான் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக ஈரானையும் அழிப்பதற்கு அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் முனைந்து கொண்டிருக்கிறது.
சென்னை: போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்கள் 600 பேர் கைது!
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதாக அச்சுறுத்தியுள்ளது சாம்சங் நிர்வாகம். இருப்பினும் அவர்களுடன் ஒருமித்த தீர்வுக்கு பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பித்தலாட்டம் செய்து வருகிறது.
லெபனான் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாசிச இஸ்ரேல் | மக்கள் அதிகாரம் கண்டனம்
தங்கள் உயிர் இழந்தாலும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று போராடும் லெபனான், ஏமன் உள்ளிட்ட நாட்டு மக்களின் போராட்டங்களை ஆதரிப்போம்! பாசிச இஸ்ரேல் மற்றும் பாசிச அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்களை உலகம் முழுவதும் கட்டி எழுப்புவோம்!
லெபனான் மீதான இஸ்ரேலின் பயங்கரவாதம் – மக்கள் அதிகாரம் கண்டனம்
பாலஸ்தீனத்துக்கு ஆதரவான மக்கள் இயக்கங்களை குலைக்கவும் திசை திருப்பவும் பாலஸ்தீனத்துக்கு எதிரான போரை உலகப்போராக மாற்றுவதற்கான சதி வேலைகளிலும் இஸ்ரேல் ஈடுபட்டிருக்கிறது.
பொட்டலூரணி மக்கள் போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் தொடர்ந்து துணை நிற்கும்
கழிவுமீன் நிறுவனங்களை மூடும் வரை மக்களின் போராட்டத்திற்குத் தொடர்ந்து துணை நிற்பதாக மக்கள் அதிகாரம் ஆதரவு தெரிவித்துள்ளது.
பாசிச மோடி அரசே, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு! | அரங்கக் கூட்டம் 2 | கோவை
தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம் - அரங்கக் கூட்டம் | தேதி : 22.09.2024 | நேரம் : காலை 10 மணி | இடம் : சேரன் மஹால் (ஈஸ்வரியம்மாள் பேலஸ்) பங்களா மேடு, மேட்டுப்பாளையம், கோவை.
காலாவதியான-சட்டவிரோத சுங்கச் சாவடிகளை உடனே மூடு! | மக்கள் அதிகாரம் பத்திரிகைச் செய்தி
காலாவதியான மற்றும் சட்டவிரோத சுங்கச்சாவடிகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை போலீசுத்துறை மூலம் தமிழ்நாடு அரசு ஒடுக்கக்கூடாது என்றும் இப்படிப்பட்ட சுங்கச்சாவடிகளின் உரிமையாளர்கள் மீதும் அதற்கு உதவி செய்த அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
























