ஊழலை சட்டப்பூர்வமாக்கும் ராஜஸ்தான் பாஜக அரசு !
தனது அடிமைகளின் வாழ்வோ! சாவோ! அது தனது கையால் தான் இருக்க வேண்டும் என்பதுதான் கோமளவல்லி ஜெயாவின் விதந்தோதப்பட்ட நிர்வாகத்திறன். ஆனால் இராஜஸ்தானின் ‘மகாராணி’ வசுந்தரா ராஜே சிந்தியா, கோமளவல்லியை விட ஒரு படி மேலே போயிருக்கிறார்.
சாதி மட்டுமே ஒரே தகுதி – அர்ச்சகர் வழக்கில் உச்சநீதி மன்றத் தீர்ப்பு !
தங்களுக்கு கிடைத்திருக்கும் தகுதி என்பது மன்னன் அருளியது மட்டுமல்ல, அது இறைவன் அருளியது என்று நம்பவைக்கத்தான் ஆகமம், மரபு, சம்பிரதாயம் என்ற மதப்பூச்சாண்டிகள் காட்டப்படுகின்றன.
பாண்டேவின் குரு அர்னாப் கோஸ்வாமி ஒரு அண்டப்புளுகன் !
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எதிர் கருத்துக்கொண்டவரை தொடர்ந்து “மன்னிப்பு கேள்” என்று குதறும் அர்னாப்பின் ரிபப்ளிக் தொலைகாட்சி சில மணி நேரங்களிலேயே அந்த ‘போலிச்செய்தியை’ டுவிட்டரில் இருந்து வெறுமனே அழித்துவிட்டது.
சட்டவிரோதமாக மரபீனி உணவுப் பொருட்களை அனுமதிக்கும் இந்திய அரசு !
மரபீனி மாற்ற உணவுப்பொருட்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும் அல்லது முறையான ஆய்வுக்குட்படுத்தி லேபிள் ஓட்ட வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் அருணா ரோட்ரிகஸ் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருந்தார்.
நோபல் பரிசு அறிஞர் ரிச்சர்ட் தாலெர் பாஜக-வை ஆதரித்தாரா ?
பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக பொருளாதாரத்திற்கு நோபல் பரிசு பெற்றவரான ரிச்சர்ட் தாலெரின் வார்த்தைகளை முன்யோசனையின்றி பயன்படுத்திய பா.ஜ.க கும்பல் பின்னர் பதில் சொல்ல முடியாமல் புறமுதுகிட்டு ஓடியது.
நெல்லை : இசக்கிமுத்துக்களின் மரணத்திற்கு எப்போது பழி தீர்ப்போம் ?
தான் வளர்த்த பயிர்கள் கருகியதைக் கண்டு நெஞ்சு வெடித்து செத்த தஞ்சை விவசாயிகளாலும், பொறியியல் படித்த மகனுக்கு வேலை கிடைக்காத நிலையில் அவனது கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த வழியின்றி தூக்கில் தொங்கிய தாய்மார்களாலும் தான் இசக்கிமுத்துவின் முடிவைப் புரிந்து கொள்ள முடியும்.
குஜராத் தேர்தல் : கட்சி மாறுவோர்க்கு கோடியில் கொடுக்கும் பாஜக !
சொந்த மாநிலத்தில் மண்ணைக் கவ்வினால் அது பாராளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பது மோடிக்கும் – அமித்ஷாவிற்கும் தெரியும். ஆகவே வெற்றியை எப்படியாவது வாங்கத் துடிக்கிறார்கள்.
கொசுக்களை ஏவும் இலுமினாட்டிகள் – நக்கலைட்ஸ் வீடியோ !
ஒரு சிறு இடைவெளிக்குப் பின் “முன்னோர்கள் முட்டாளில்லை” எனும் நையாண்டி வீடியோவுடன் வந்துள்ளனர் நக்கலைட்ஸ் குழுவினர். நமது வாசகர்கள் இந்த வீடியோவைக் காண்பதுடன் தமது நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கருப்புப்பணக் கும்பலின் பினாமியாக டாஸ்மாக் நிறுவனம் !
டாஸ்மாக் நிறுவனத்தின் தினசரி மது விற்பனை வருமானம் ரூ.67 கோடி முதல் ரூ.70 கோடி வரை மட்டும்தான். ஆனால், ஒரு நாளைக்கு பழைய தாள்களாக மட்டும் ரூ.115 கோடி வங்கியில் செலுத்தப் பட்டிருக்கிறது.
ஜார்கண்ட் : ஆதாரை இணைக்கவில்லை என்றால் மரணம் !
பள்ளியில் கொடுக்கப்படும் ஒரு நேர மதிய உணவு, சிறுமி சந்தோஷிகுமாரியின் பசியை ஆற்றி வந்தது. தசராவை ஒட்டி, பள்ளியும் விடுமுறை விடப்பட்டதால் சுமார் 7 நாட்களுக்கு ஒருவேளை உணவும் கிடைக்காமல் பசியால் சுருண்ட சிறுமி சந்தோஷிகுமாரி, கடந்த செப்டம்பர் 28, 2017 அன்று பட்டினியால் இறந்து போனாள்.
தண்டவாளத்தை புதுப்பித்து விட்டு ரயில்களை தனியாருக்கு அளிக்கும் மோடி அரசு
நமது வரிப்பணத்தில் அரசு தண்டவாளம் போட, தனியார் முதலாளிகள் அதில் இரயிலை விட்டு நம்மிடமே கொள்ளை இலாபம் வைத்துச் சுரண்டுவார்கள். அதுதான் இந்த தண்டவாளப் புதுப்பிப்புத் திட்டம்.
தில்லியின் மாசுபாட்டிற்கு காரணம் சிவகாசி பட்டாசா ? அமெரிக்க தார் கரியா ?
அமெரிக்காவின் கடுமையான சட்டங்கள் காரணமாக பெட்கொக்கை எரிபொருளாக அங்கே பயன்படுத்த முடியாது. அதே நேரத்தில் இந்தியா போன்ற மூன்றாம் உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் கொள்ளை இலாபம் பார்க்கிறார்கள் அமெரிக்க நிறுவனங்கள்.
அந்த மருத்துவமனை அறையின் ஒரு நாள் வாடகை 3,50,000 ரூபாய் !
இந்தியாவின் அதி உயர் மருத்துவமனைகள் அதிகரிக்கும் காலத்தில் இந்தியாவின் ஏழைக மக்கள் அதி உயர் எண்ணிக்கையில் மரணமடைந்து வருவதையும் காண்கிறோம்.
அம்பானிக்கும் நூறு – பட்டினிக்கும் நூறு !
உணவு உற்பத்தியில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் 5 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு ஐந்து குழந்தைகளிலும் உயரத்திற்கு குறைவான எடையில் ஒரு குழந்தை இருக்கிறது.
இஷ்ரத் ஜஹான்: நீதிபதி ஜெயந்த் படேல் – வழக்கறிஞர் துஷ்யந்த் தவே-வைப் பழி வாங்கும் மோடி அரசு !
பல்கலைக் கழகங்கள், வரலாற்று ஆய்வு நிறுவனங்களில் தொடங்கி நீதிமன்றங்கள் வரை எல்லா அமைப்புகளிலும் காவிப்படையினரை நிரப்புவதன்மூலம் மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் நடைமுறையில் இல்லாமல் ஆக்கும் திசையில்தான் மோடி அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் அமைந்திருக்கிறது.