கல்வி – வேலை வாய்ப்பு : விவாதத்தை திசைதிருப்பும் ஊடகங்கள் !
நாம் அரசிடம் கேட்க வேண்டியது இட ஒதுக்கீடு மட்டுமல்ல. இருக்கும் வேலை வாய்ப்புகளை சரியாக நிரப்ப வேண்டும், அரசு அலுவலகங்களில் இருக்கும் வேலைகளை நிரந்தர வேலைகளாக்க வேண்டும்...
2018-ம் ஆண்டுத் தொகுப்பு : அவசியம் படிக்க வேண்டிய விருந்தினர் பக்க கட்டுரைகள்
வினவு தளத்தில் புதிய முயற்சியாக தொடங்கப்பட்ட கருத்தாடல் பக்கத்தில் 2018-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.
என் ஆதித்தாயை கண்டுபிடித்தேன் | அ.முத்துலிங்கம்
எனக்கு Genographic Project அனுப்பிய வரைபடம் ஆதித்தாயில் ஆரம்பித்து என் முன்னோர்கள் எங்கே எங்கேயெல்லாம் புலம்பெயர்ந்து பரவினார்கள் என்பதை துல்லியமாகக் காட்டுகிறது.
திருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம் : பரிமேலழகர் முதல் நாகசாமி வரை | வி.இ. குகநாதன்
பார்ப்பன - ஆரிய எதிர்ப்பாக அமைந்த திருக்குறளை `ஆரிய சாத்திரங்களின் சாரம்` என நூல் எழுதுபவர்களை என்ன சொல்லுவது !
மஞ்சள் சீருடை – புதியதோர் பிரெஞ்சுப் புரட்சிக்கான அறிகுறி
"மக்ரோன் பதவி விலகு!" என்ற ஒற்றைக் கோஷத்துடன் தொடங்கிய மஞ்சள் சட்டைப் போராட்டத்தில் தற்போது முதலாளித்துவ எதிர்ப்பு முழக்கங்கள் கேட்கின்றன.
எங்களை கவர்மெண்ட் பெருசா கண்டுக்கவே மாட்டாங்க | சத்துணவு டீச்சருடன் உரையாடல்
எனக்கு முன்னாடி ஒரு அக்கா இங்க வேலை செஞ்சாங்க. அவங்க புரமோஷன் வாங்கும்போது அவங்களுக்கு சர்வீஸ் 33 வருசம். அப்படின்னா பார்த்துக்கங்க எங்களை எந்த நிலைமையில் நடத்துறாங்கன்னு.
மாற்று ஊடகம் இல்லையே என்று கவலைப்படும் நண்பர்களுக்கு….. | மு.வி. நந்தினி
மாற்று ஊடகம் இல்லையே என்கிற பெருங்கனவைப் பற்றி பெருமூச்சோடு பேசிவிட்டுச் செல்கிற நாம், வினவு தொடர்ந்து இயங்க உதவ வேண்டும்.
அங்கன்வாடி பணியாளர்களை வதைக்கும் சதிகார அரசு !
அங்கன்வாடி பணியாளர்களைச் சுரண்டி அந்தக் கட்டமைப்பையே சீர்குலைக்கும் அரசின் சதித்தனத்தை அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை
கொழுப்பு என்றாலே அது ஆபத்தானதா ! – மருத்துவர் BRJ கண்ணன்
கொழுப்புக்கும் கொலஸ்ட்ராலுக்கும் உள்ள தொடர்பு என்ன ? உண்மையில் கொழுப்பு உணவுகள் தீமையானதா விளக்குகிறார் மருத்துவர் BRJ கண்ணன்...
திருடித் தின்னும் மிருகம் | அ.முத்துலிங்கம்
அவள் எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறாள். சிறுத்தை பாடுபட்டு ஒரு விலங்கை கொன்றால் அதை கழுதைப்புலி திருடித் தின்றுவிடும். இவளும் அதுபோலவே இருக்கிறாள்.
ஊடக உலகில் வினவு தளம் – வாசகர் கருத்து
வினவு தளத்தின் வளர்ச்சி, செய்யப்பட வேண்டிய மாற்றம் குறித்து சர்வேயில் பங்கேற்ற வாசகர்கள் முன் வைத்திருக்கும் கருத்துக்கள் - விமர்சனங்களின் தொகுப்பு.
மனநலம் – மக்களிடம் செல்வோம் | வில்லவன்
ஒரு குடிசைப்பகுதியின் வாயிலில் இரண்டு பிரபல மனநல மருத்துவர்கள் கலந்துரையாடுவார்கள் என்பதை என் மனம் எதிர்பார்த்திருக்கவில்லை.
சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா ? மருத்துவர் BRJ கண்ணன்
அதிகப்படியான மாவுப் பொருட்கள்தான் உடல் பருமன், சர்க்கரை, இரத்தத்தில் கொழுப்பு சேர்வது உள்ளிட்ட பல நோய்களுக்கு அடிப்படை என்பதையும் இதற்கு மாற்று என்ன என்பதையும் விளக்குகிறார், மருத்துவர் கண்ணன்.
உலகின் மிகப்பெரிய தண்டனை | அ.முத்துலிங்கம்
என்ன நடக்கிறது இங்கே? சிறைக்கூடத்தை தயார் செய்கிறார்களா அல்லது பிளேன் டிக்கட் ஏற்பாடு செய்கிறார்களா? என்னை முதலில் அனுப்பிவிட்டு பின்னர் மனைவியையும் பிள்ளைகளையும் அனுப்புவார்களா?
காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம் | வில்லவன்
டெல்டா இப்போது ஒரு மரண முற்றுகையில் இருக்கிறது. அதன் எதிர்பாரா தாக்குதல்களில் ஒன்றுதான் இந்தப்புயல்...