ஓசூர் : “விவசாயியை வாழவிடு !” மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
நான் விவசாயி என்பதால் விவசாயத்தால் நான் மட்டும் பயன் அடைவதில்லை, மனித இனங்களோடு சேர்த்து மற்ற உயிரினங்களும் பயனடைகின்றன.
ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும் காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பளம் உயர்த்த வேண்டும். அந்த அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் 31 தேதியுடன் முடிவடைந்து புதிய ஊதிய உயர்வு அறிவித்திருக்க வேண்டும். ஆனால் பத்து மாதமாகியும் இதுவரை சம்பளம் உயர்த்தாமல் எங்களை வஞ்சிக்கிறது நிர்வாகம்.
அண்ணாமலைப் பல்கலை: ஊழலை சமூகமயமாக்கும் அரசு !
‘இலஞ்சம் கொடுக்காமல் தகுதியடிப்படையில் தான் வேலைக்குப் போவேன்’ என யாராவது கூறினால் அவரை ‘பைத்தியக்காரன்’ என முகத்துக்கு நேராகவே பேசும் நிலையுள்ளது. முத்துக்குமரசாமி தற்கொலையும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கின் இன்றைய நிலையும் மிகச் சிறந்த சமீபத்திய உதாரணங்கள்.
நோயாளிகளை காக்க வைத்து ’ரெப்’களோடு குலாவும் அரசு மருத்துவர்கள் !
எங்களால் அதிக பணம் கொடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாது என்பதால்தான் நாங்கள் அரசு மருத்துவமனையை நாடி வருகிறோம். ஆனால், இங்கு எங்களுக்கு சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிக்கின்றனர். மருத்துவர்களை நாங்கள் தெய்வமாக மதிக்கிறோம். ஆனால், அவர்கள் எங்களை மதிப்பதில்லை
கூடலையாத்தூர் – மணல் கொள்ளையை நிறுத்து ! – பொதுக்கூட்டம்
இந்த அரசிடமே நம்பிக்கை வைத்து மன்றாடுவதால்தான் போராட்டம் மாதக்கணக்கில், நீடிக்கிறது. பெரும் திரள் மக்கள் போராட்டம், எழுச்சி இந்த அரசின் அதிகாரத்தை, அதன் கொள்கைகளை, கேள்வி கேட்க வேண்டும். தனித்தனி போராட்டம் தனிதனி தீர்வு இனி சாத்தியம் இல்லை.
நீட் : இன்றைய பலி அனிதா ! நாளைய குறி அரசு மருத்துவமனை !
அனிதாவின் மரணத்திற்குக் கண்ணீர் சிந்தி விட்டு, வேறு வழியில்லை என்று நீட் திணிப்பை ஒப்புக்கொள்பவர்கள், அன்று தூக்குமேடையைச் சுற்றி நின்ற அடிமை பாளையக்காரர்களை நினைவு படுத்துகிறார்கள். அனிதாவின் பார்வை நமக்கு கட்டபொம்மனின் பார்வையை நினைவு படுத்துகிறது.
திருப்பூர் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் மோடி கும்பல் !
மோடி வாயால் சுட்ட வடையை வைத்து தங்களிடம் போணியாகாத நிலங்களை அப்பாவி மக்களின் தலையில் கட்டிவிடுவதோடு பதிவுக்கான கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் இருந்து பணம் பறிக்கிறது பாஜக கும்பல்.
மோடி : கருப்புப் பணக் கும்பலின் கூட்டாளி !
கருப்புப் பண பேர்வழிகளை வருமான வரித் துறை புகைபோட்டு பிடிக்கப் போவதாக, பிலிம் காட்டிய மோடி கும்பல், பணமதிப்பழிப்பிற்குப் பிறகு பிடிபட்ட தமிழகப் பிரமுகர்களின் தலையைத் துண்டித்து விட்டதா என்ன ?
போக்குவரத்து தொழிலாளர்களை வஞ்சிக்கும் அரசு !
தொழிலாளர்கள் மக்களையும் இணைத்துக்கொண்டு மக்களின் பிரச்சினைக்காகவும், தங்களின் உரிமைக்காகவும் போராடுவது ஒன்றே வெற்றிக்கு வழிவகுக்கும்.
சிறு குறு தொழில்களை அழிக்கப்போகும் ஜி.எஸ்.டி !
நெல் கொள்முதலுக்கு வரி இல்லை. ஆனால், அதை அரிசியாக்கிப் பையில் அடைத்து விற்றால் வரி. கோதுமை கொள்முதலுக்கு வரி இல்லை. ஆனால், அதை மாவாக்கி விற்றால் வரி. மிளகாயைப் பவுடராக்கி பையில் அடைத்தால் வரி. எலுமிச்சை பழத்திற்கு வரி இல்லை. ஆனால், ஊறுகாய்க்கு வரி.
மலேரியாவில் இருந்து மக்களை காப்பாற்றிய ரொனால்ட் ரோஸ்
மலேரியா ஒழிப்பை தன் வாழ்நாள் லட்சியமாக ஏற்றுக் கொண்ட ரோஸ் பல நாடுகளுக்கும் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார். வெள்ளைக்காரர்களின் சுடுகாடு என்று பெயர் பெற்ற “சீய்ராவியோன்” என்ற நகரத்திற்கு சென்று மலேரியாவால் ஏற்படும் மரணத்தை தடுத்தார்.
கௌரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து பெங்களூரில் மாபெரும் பேரணி – கண்டனக் கூட்டம் !
கௌரி லங்கேஷைக் கொன்றதன் மூலம் பார்ப்பன எதிர்ப்புணர்வை மழுங்கடித்துவிடலாம் எனக் கனவு கண்டிருந்த இந்து மதவெறியர்களின் கனவைக் கலைத்திருக்கிறது அவரது இறுதி ஊர்வலம்.
அப்பல்லோ மருத்துவமனையின் கொடூர முகம் ! வீடியோ
நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்காக பணம் செலவழிக்க முடியும் என்ற நிலையில், மருத்துவ அறிவு குறித்து அதிகம் அறியாத அப்பாவி என்றால் அப்பல்லோ மருத்துவமனை என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு ஹேமநாதனின் கதை ஒரு சான்று!
விவசாயிகளுக்கு 50 காசு தள்ளுபடி ! கேடி ஆதித்யநாத்தின் மோசடி !
எகத்தாளமாக விவசாயிகளை நோக்கி சில்லறைக் காசுகளை வீசுவதற்கு பதில், அவர்களது விளைச்சலுக்கான முறையான விலை நிர்ணயத்தைச் செய்தாலே தாங்கள் வாங்கிய கடனை முறையாக கட்ட முடியும்.
லாட்டரி மாஃபியா மார்ட்டினுக்கு தமிழக பா.ஜ.க. பாதுகாப்பு !
மோடி போன்ற உயர் மட்ட அளவில் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகள் ஸ்பான்சர் செய்கிறார்கள் என்றால் இங்கே உள்ளூர், மாநில அளவில் மார்ட்டின் போன்றோர் ஸ்பான்சர் செய்கிறார்கள்.

























