தென்னை விவசாயிகளும் திரளுங்கள் ! உடுமலை பொதுக்கூட்டம் !
இந்தியா முழுவதும் விவசாயிகள் இறந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு வறட்சிதான் காரணம் என்கிறார்கள். 98% நீர் பாசனம் உள்ள பஞ்சாப்பில்ஆயிரக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
சிறப்புக் கட்டுரை : வளர்ச்சியின் பெயரால் பின்னப்படும் சதிவலை !
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்ற மோடி அரசின் கவர்ச்சிகரமான முழக்கத்தின் பின்னே இந்திய விவசாயத்தையும், விவசாயிகளையும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குப் பலிகடாவாக்கும் சூழ்ச்சிகள் மறைந்துள்ளன.
வல்லரசு இந்தியாவின் சாதனை : உலகளவில் புதிய தொழு நோயாளிகளில் 60% இந்தியர்கள் !
தொழுநோய், மலேரியா, அம்மை போன்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டு குணப்படுத்த வாய்ப்புள்ள நோய்களையே கூட கட்டுப்படுத்த வக்கற்ற அரசு தான் வல்லரசு கனவில் திளைத்துக் கொண்டிருக்கிறது.
மாட்டிறைச்சி தடையால் காலாண்டில் இறைச்சி விலை 45% உயர்வு !
ஏற்கனவே பணமதிப்பழிப்பு காலத்தில் விற்பனை பாதிக்கப்பட்டது, தற்போது மாட்டிறைச்சி ரூபத்தில் வர்த்தகம் அடி வாங்கியது. இறுதியில் ஜி.எஸ்.டி ரூபத்தில் மூன்றாவது அடி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.
எடப்பாடி ஆட்சியில் கொசுக்களின் ராஜ்ஜியம் ! தமிழகத்தில் பரவும் டெங்கு !
தமிழகத்தில் கடந்த ஆண்டு 2,531 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். நடப்பாண்டில் மே 31-ம் தேதி வரை 3,251 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரியரக மிளகாய் : கம்பெனிக்குப் பணமழை ! விவசாயிக்கு கடன் சுமை !!
வளர்ந்த செடியில் பூவும் காயுமாக நிறைந்து நின்றதைப் பார்த்தபோது, இந்தக் கவலை எல்லாம் பறந்துவிட்டது! இந்த முறை கடனை எல்லாம் அடைத்து விடலாம் என்ற நம்பிக்கை மனதில் தோன்றியது!
மோடி புகழ் பாடும் தில்லியில் நான்கு துப்புரவு தொழிலாளிகள் பலி !
மேட்டுக்குடியினரின் வசதிக்காகவும், முதலாளிகளின் லாபத்துக்காகவும் திறன் நகரங்களையும், புல்லட் இரயில்களையும் கனவில் கண்டு கொண்டிருக்கும் மோடி அரசு எளிய மக்களை எந்தளவுக்கு கிள்ளுக்கீரையாக நினைக்கிறது என்பதற்கு இந்தச் சாவுகளே சான்று
விலை வீழ்ச்சி : துவரம் பருப்பு துயரம் பருப்பானது !
எந்தவொரு உற்பத்தியாளனும் தனது உற்பத்திப் பொருளை நட்டத்தில் விற்க முன்வருவதில்லை. ஆனால், விவசாயிகள் தமது விளைபொருட்களை நட்டத்தில் விற்கும்படியான புதைகுழிக்குள் அரசாலேயே தள்ளிவிடப்படுகிறார்கள்.
உருளைக் கிழங்கு விவசாயிகளை அழிக்கும் சுதந்திரச் சந்தை !
உருளைக் கிழங்கின் உற்பத்திச் செலவு 9 ரூபாய். சந்தை விலை 11 பைசா! இதன் பெயர் சுதந்திரச் சந்தையா, சுதந்திரக் கொள்ளையா?
மோடியின் டீக்கடை சுற்றுலாத் தலம் ! வாடிய பயிருடன் உழவரின் சவம் !
பயிர், பச்சை இன்றி உயிர் பிச்சை கேட்கும் கால்நடைகள். கழுநீர் நனைய வழியின்றி உலர்ந்த மோவாயை நாவால் வருடி காம்பு காயும் பசுக்கள். இலை தழை தேடி ஏமாந்து தன்நிழல் மேயும் ஆடுகள். இறுகி, இறுகி ஈரப்பசையற்றுப் போன நிலம் இறுதியில் விவசாயியின் நெஞ்சில் வெடிக்கிறது.
மத்திய பிரதேசம் – உழைக்கும் மாடாய் பெண்கள் !
இரண்டு வருடங்களாக எட்டிக் கூடப் பார்க்காத அதிகார வர்க்கம், இணையத்தில் இது குறித்த வீடியோ வைரலாகப் பரவிய நிலையில் தாசில்தாரே அவருடைய ஊருக்கு விரைந்து சென்று உதவிகள் அளிப்போம் என்று உறுதியளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆசாத் நகரின் கொத்தடிமைகள் – படக் கட்டுரை
“குழந்தைகள் உருவாக்கிய செங்கற்களால் கட்டப்பட்ட இந்த பள்ளியிலும் கூட இந்த ஏழை மக்களுக்கு கல்வி கிடைக்கவில்லை.
சேமிப்பு கிடங்குகள் விவசாயிகளுக்கு பயனளிக்குமா ?
நமது பொருளாதார மேதைகளோ, ‘‘இந்தியாவில் போதிய அளவிற்குச் சேமிப்புக் கிடங்குகள் இருந்திருந்தால், விவசாயிகளுக்கு இந்தத் துன்பம் ஏற்பட்டிருக்காது’’ என நீட்டி முழங்கி வருகிறார்கள்.
விவசாயியை வாழவிடு – தஞ்சை மாநாடு நிகழ்ச்சி நிரல் – அழைப்பிதழ்
விவசாயியை வாழவிடு… விவசாயத்தின் அழிவு சமூகத்தின் பேரழிவு ! 05.08.2017 சனிக்கிழமை காலை 10:00 மணி முதல் மாநாடு கருத்தரங்கம் – கலைநிகழ்ச்சி – நேருரைகள்...
இனிமே தக்காளிய மறந்துரு மக்கா !
ஆறுமாதத்திற்கு முன்னால் கடுமையான விலை வீழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து கடுமையான விலை உயர்வும் என தக்காளியின் விலை கடுமையான ஏற்ற இறக்கங்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது.

























